ஞாயிறு, 6 அக்டோபர், 2019

கோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 1 - பாப்பா சினிமா - துணுக்குகள் பகிர்வு


இப்படிப் போட்டால் கூட்டம் சேருமா!!!!


அனைவருக்கும் இனிய வணக்கம் + மகிழ்வான காலை வணக்கம்! ஒரு மாதம் கழித்து தளம் பக்கம் வந்தாலும், பதிவுகள் எழுதி பல மாசம் ஆகிவிட்டதே, தளத்தை எல்லோரும் மறந்தே போயிடுவாங்களே என்ற பயம் பிடித்துக் கொண்டதால் சும்மாவேனும் ஒரு பதிவு போட்டு வைப்போம். அப்புறம் தொடர்வதைப் பற்றி யோசிக்கலாம் என்று எங்க வீட்டைத் திறந்து தூசி தட்டி கழுவி, தொடங்கி இனியும் தொடர வேண்டும் என்று இப்பபடத்துடன் தொடக்கம். 

எனக்குப் பயணம் செய்வது புகைப்படங்கள் எடுப்பது மிகவும் பிடிக்கும் என்று அடிக்கடிச் செல்லுவேன். கோபுரங்களை எங்கு கண்டாலும் படம் எடுப்பதும் வழக்கம். அப்படித்தான் ஜூலையில் நெருங்கிய உறவின் திருமணத்திற்காக ஸ்ரீரங்கம் சென்றிருந்த போது (கீதாக்கா வீட்டருகில்தான் திருமணமண்டபம்) திருமணம் முடிந்த பிறகு 21 கோபுரங்களையும் ஒரு சேரக் காணலாம் என்று சென்றோம். (கீதாக்கா வீட்டிற்கு முதல் நாளும், ரோஷினிக்குட்டி பள்ளி செல்லும் முன் பார்க்க வேண்டும் என்றதும் கீதாக்கா நேரம் சொன்னார் அதை அட்ஜஸ்ட் செய்து மறுநாள் சீக்கிரம் முகூர்த்தம் என்பதால் முடிந்ததும் ஆதிவெங்கட்டையும், ரோஷினியையும் பார்த்துவிட்டு வந்தேன்.)

ராஜகோபுரம்

இந்தக் கோபுரம் எந்தக் கோயில் கோபுரம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திருச்சி/ஸ்ரீரங்கத்துக்காரர்களுக்கு ஒரே குஷியாக இருக்கும். அதுவும் ஹூஸ்டனில் தற்போது இருக்கும் கீதாக்காவுக்கு (அவங்ககிட்ட இதைப் போடுகிறேன் என்று சொல்லி ரொம்ப நாளாகிவிட்டது!!) அரங்கனின் கோபுர தரிசனம்! எல்லோருக்கும் தான்.

ராஜகோபுரத்திற்கு அடுத்தாற் போல் உள்ள உள்ள கோபுரம்

மதியம் 1 மணிக்கு சென்னைக்குக் கிளம்ப வேண்டும். மணி 11.15 ஆகியிருந்த சமயம் திடீரென்று மைத்துனர் 21 கோபுரமும் சேர்ந்தாற்போல் பார்க்கப் போகலாம் என்று சொல்ல, பார்த்துவிட்டு மண்டபம் வந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டுக் கிளம்பணும். அதுவும் சில உறவினர்களுக்குச் சில உதவிகள் செய்து ஒவ்வொருவரையும் தேடி தேடிச் சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டும். வருபவர்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு கிளம்ப இன்னும் நேரம் குறைவானது.


ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா கோபுரம் வழி கடந்து உள்ளே சென்றதும் இடதுபுறம் இருக்கும் டிக்கெட் கவுண்டரில் கோபுரம் காணவும் கேமராவுக்கும் டிக்கெட் வாங்கிக் கொண்டு இடது புறம் சென்றால் படி ஏறியதும் கதவைத் திறந்துவிடுவார்கள். நிறைய படங்கள் எடுத்திருக்கிறேன். அதில் சிலதை பகுதி பகுதியாகப் போடுகிறேன். இன்று தொடக்கம் என்பதால் வெளியிலிருந்து எடுத்த ராஜகோபுரம் அதை அடுத்துள்ள கோபுரம் படங்கள் மட்டும் இங்கு கொடுத்துள்ளேன். மற்ற படங்கள் அவ்வப்போது தொடர்ந்து வரும்.

இருந்த குறைவான நேரத்தில் வேக வேகமாக குழுவினர் நடக்க, நான் கிடைத்த நேரத்தில் க்ளிக்கிக் கொண்டே நடந்தேன். நான் சில இடங்களில் ரசித்து நின்று படம் எடுத்துக் கொண்டு திரும்பினால் அவர்கள் முன்னே சென்றிட யாரையும் காணவில்லை. அவர்கள் எங்கே நான் எப்படிச் செல்ல வேண்டும் என்று திகைக்க நல்லகாலம் முன்னே சென்றவர்களில் ஒருவர் கண்ணில் படும்படி வந்தார். சீக்கிரம் நேரமில்லை விரைவாகப் போகணும் போட்டோ எடுத்தது போதும் என்றதும் நானும் கிடைத்தவரை அவசர அவசரமாகப் படம் எடுத்துக் கொண்டேன். அதனால் முழுமையாக எல்லாம் எடுத்தேன் என்று சொல்ல முடியாது.


நாங்கள் உள்ளே எல்லாம் செல்லாமல் எந்த சன்னதியிலும் நிற்கவில்லை. ஆண்டாள் இருவரையும் பார்த்துவிட்டு சன்னதி அருகில் இருக்கும் மண்டபம் வழியே நடந்து சுற்றி, பிரசாதம் ஸ்டால் அருகே வந்து அப்படியே வாசல் வந்துவிட்டோம். செல்ல ஆண்டாள் குட்டியும் வருவாள்! மீதி படங்கள் எல்லாம் அடுத்தடுத்த பகுதிகளில் வரும் என்று......என்று...நம்பிக்கையுடன்...சரி விடுங்க வரும் போது பார்த்துக்கலாம்.

*********************


கல்கியில் அமரர் கல்கி அவர்களின் நாவல் “கள்வனின் காதலி தொடர் 1983ல் இதே அக்டோபர் மாதத்தில்தான் தொடராக வந்திருக்கிறது. என் மாமனார் அதைச் சேர்த்து வைத்து தொடரை மட்டும் எடுத்து தைத்து வைத்திருந்தார். எனக்கு இந்த ஒரு சொத்து போதும் என்று அவர் அப்படித் திரட்டி வைத்திருந்த புத்தகங்களை எடுத்து வந்துவிட்டேன். இந்தக் கள்வனின் காதலி தொடரை ஒவ்வொரு இதழிலிருந்தும் அவர் சேகரித்ததில் அதனுடன் கூடவே வந்த பக்கங்களில் சில ஸ்வாரஸ்யமான துணுக்குகள், விளம்பரங்களை எடுத்து அவ்வப்போது இங்கு பகிரலாம் என்றிருக்கிறேன். இப்போது சில.

 இதைப் பார்க்கும் போது ஒருவர் அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பவர் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!!!!!

*******************************

                  திரு சர்மா 


“இந்தப் படம் வெளி வந்ததா? தெரியுமா?

மகாகவி பாரதியார்” என்ற பாரதியின் வரலாற்றைப் பற்றிய திரைப்படம், முழுவதும் சிறுவர்-சிறுமியராலேயே நடிக்கப்படுகிறது! தயாரிபவர் திரு சர்மா. ஒரு தேசத்தலைவரைப் பற்றிய படம் குழந்தைகளே நடித்து உருவாவது இந்தியாவிலேயே இதுதான் முதல். டி.வி.எஸ் சர்மா குழந்தைகளை வைத்துப் பாரதியார் நாடகத்தைப் பலமுறை அரங்கேற்றியுள்ளார்.

ஏன் பிரபல நடிக நடிகையரைப் போட்டுப் படம் எடுக்கக் கூடாது? என்ற கேள்விக்கு “நான் அவரைப் பற்றிக் கொண்டிருக்கிற கருத்துப்படி நடிக்கப் பிரபல நடிகர்க்ளின் அமனம் இணங்காது. ஏனெனில் அவர்கள், தங்கள் மனத்தில் பாரதியைப் பற்றிய வேறு ஒரு விதமான வடிவு கொடுத்து வைத்திருப்பார்கள் ஆனால் குழந்தைகள் நான் சொல்வது போல் நடிக்கும்” என்பது அவர் பதில்.


விஜய்-சித்தர் (ஸ்ரீராம் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?) என்ற புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகமாகவிருக்கும் இவ்வண்ணப் படத்தில் மொத்தம் பாரதியின் நாற்பது பாட்டுக்கள் இடம் பெறுகின்றனவாம். - வி தியாகு 

பாரதியின் படம் என்று மேலே செய்தி. இது பாரதியைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் துணுக்கு. நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றையும் அடுத்து வரும் பகுதிகளில் பகிர்கிறேன். ஜீவி அண்ணா பாரதியைப் பற்றி தொடரே எழுதியிருந்தார்.


*************************************


என்னை நினைவிருக்கிறதா??!!


 
இதையும் கீழ் உள்ளதையும் பார்க்கும் போது....!!!!!!!!! எனக்கு டக்கென்று நினைவுக்கு வந்தவர் உங்களுக்கும் நினைவுக்கு வருகிறாரா??!!!!!
அன்றைய க்ரான்ட் ஸ்வீட்ஸ் விளம்பரம்...


**********************************
  

-----கீதா

66 கருத்துகள்:

  1. முதல் படம் மிக மிக அழகோவியம்.

    //பாரதியைப் பற்றிய வேறு ஒரு விதமான வடிவு கொடுத்து வைத்திருப்பார்கள் ஆனால் குழந்தைகள் நான் சொல்வது போல் நடிக்கும்//
    ஸூப்பர் பதில்

    பல்கேரியா பழமொழி பல வகைகளை உணர வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க கில்லர்ஜி!!!

      ஆமாம் ஜி எனக்கும் அவரின் பதில் பிடித்திருந்தது. அதனால்தான் பகிர்ந்தேன்

      அதே போல பல்கேரியா பழமொழி என் எண்ணத்தை ஒருத்துஇருந்ததால் அதையும் பகிர்ந்தேன்...உங்களுக்கும் அது பிடிக்கும் என்று அதை வாசித்ததும் நினைத்துக் கொண்டேன் கில்லர்ஜி..

      மிக்க நன்றி கருத்துகளுக்கு

      கீதா

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆஆ மீ 1ஸ்ட்டூ இல்லை.. மீ 1ஸ்ட்டூ இல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கில்லர்ஜி எங்கிருந்து இவ்ளோ ஸ்பீட்டா ஜம்ப் ஆனார்ர்ர்:))

      நீக்கு
  2. //டிக்கெட் கவுண்டரில் கோபுரம் காணவும்// - இப்படி ஒண்ணு இருக்குன்னு எனக்குத் தெரியவே தெரியாது. இந்த ஸ்ரீரங்கத்து கீசா மேடமும் எங்கயும் எழுதின மாதிரித் தெரியலை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா கீதாக்கா மாட்டிக்கிட்டாங்க!! மாட்டிக்கிட்டாங்க!!!

      அடுத்து வரும் நெல்லை மேலே ஏறி எடுத்தவை எல்லாம்...ஆண்டாள் சன்னதி இருக்கும் பகுதியில் படங்கள் வரும் போது தெரியும் உங்களுக்கு...

      மிக்க நன்றி நெல்லை...

      கீதா

      நீக்கு
    2. எப்படி கோபுரத்தில் ஏறுவது? அதுக்கு தனி டிக்கெட்டா? அப்படி இருந்தால் அடுத்த முறை (அனேகமா வாய்ப்பு இருந்தால் டிசம்பர்) சென்று பார்க்கணும்.

      நீக்கு
    3. நெல்லை கோபுரத்துக்குள் இல்லை...ராஜகோபுரம் கடந்து உள்ளே செல்லும் போது அந்த ஸ்ரீராங்க ஸ்ரீரங்கா நு எழுதியிருக்கும் கோபுரம் இருக்கில்லையா...அதை நோக்கி நிற்கும் போது இடதுபுறம் செருப்பு வைக்கும் இடம்...வைத்துவிட்டு கோபுரம் கடந்து போனா அங்கு வேண்டுதல் செய்து நிறைய ஒரு கம்பத்தில் தொங்கும் பாருங்க அந்த இடத்தில் இடப்புறம் டிக்கட் கவுண்டர் இருக்கு. கோபுரம் பார்க்கும் தளம் (21 கோபுரமும் பார்க்கலாம். அந்த டெரஸ் லிருந்து) போகனும் என்றால் ஒரு நபருக்கு ரூ20 டிக்கெட். கேமராவுக்கு ரூ 50. (செல்ஃபோனுக்கு அவங்க வாங்கலை. செல்ஃபோன் இப்ப வருவது எல்லாமே கேமராவுடன் தான் வருது எங்க எல்லார்க்கிட்டட்யும் இருந்தது ஆனா அதை கவுண்டர் ஆள் கேட்கவில்லை. ஆனால் நான் கேமராவும் வைத்திருந்ததால் அதைச் சொல்லியவுடன் டிக்கெட் 50ரூ (அங்கு போர்டும் இருக்கு கேமராவுக்கு 50 என்று) வாங்கிக் கொண்டபின் ஆண்டாள் சன்னதிக்குச் செல்ல இடப்புறம் போகும் வழியில் மீண்டும் இடப்புறம் திரும்பி அங்கு கொஞ்சம் படிகள் தான் இருக்கு ஏறியதும் ஒரு கேட் இருக்கும் அதைத் திறந்துவிட நம்முடன் ஆள் வருவார். திறந்துவிட்டுப் போய்விடுவார். நீங்கள் ஆசை தீர அனைத்து கோபுரங்களையும் பார்க்கலாம். காத்து செமையா இருக்கும். அங்கிருந்தே ஆண்டாள் சன்னதியும் வெகு அருகில் பார்க்கலாம்...மற்றொரு சன்னதியின் கோபுரமும் இருக்கும்...அங்கிருந்து ஊரும் தெரியும்....அடுத்த பதிவில் படங்கள் வரும் அதோடும் சொல்கிறேன்...வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க

      கீதா

      நீக்கு
  3. ஸ்மித் மிக்ஸி - எனக்கு ரொம்ப வருத்தம். அவங்க பிஸினெஸ்ல இல்லை என்பதில். எவ்வளவு வருஷங்கள் அது வேலை செய்திருக்கிறது... 25 வருடங்களுக்கு மேல். இப்போ வருவதெல்லாம் வாரண்டி பீரியட் முடிந்தால் படுத்துக்கொள்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ்ஸு அதே அதே நெல்லை ஸ்மித் மிக்ஸி எனக்கும் ரொம்ப ரொம்ப வருத்தம் அவங்க பிசினஸ் ஏன் படுத்தது என்று தெரியவில்லை,. அதை போன்று உழைத்த மிக்ஸி எதுவும் கிடையாது. ஆமாம் இப்ப வருவதெல்லாம் ஷார்ட் பீரியட். சுமித் மிக்ஸி செர்வீஸும் அப்போது மிக மிக நன்றாக இருந்தது. நல்ல மோட்டார். ஏன் இப்படி அது காணாமல் போனது என்று வருத்தம்...எனக்கும். அதான் இதை அந்தத் தொகுப்பில் பார்த்ததும் எடுத்துப் போட்டேன்...

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. நான் பெங்களூர் வந்தப்பறம் ப்ரெஸ்டீஜ் 750 வாங்கலாம்னு இருக்கேன். வேற சஜஷன் இருந்தாச் சொல்லுங்க.

      இன்று காலை செளசெள தோல் எடுக்கும்போது, தவறுதலா (தோல் எடுக்கும் கருவி கொஞ்சம் உடைந்திருந்ததுன்னு நினைக்கறேன்..பிளேடு டைரக்‌ஷன்) விரலை அறுத்துக்கொண்டேன் (நுனி விரல்). ரொம்ப ரத்தம் வந்தது. விரலில் கட்டுப் போட்டிருப்பதால் நிறைய எழுத முடியலை.

      நீக்கு
    3. நெல்லை உண்ணாவிரதம் ஆள் யாருனு தெரியலையா...கண்டுக்காம போயிட்டீங்க!! ஹா ஹா ஹ

      அதே போல அடுத்தது நான் வாசிச்சு எடுத்துப் போடும் போதும் உங்களை நினைச்சுத்தான் பொட்டேன் ஹிஹிஹிஹி...பூசார் வந்தால் மாட்டிக்குவீங்கனு...

      கண்டுக்காம போயிட்டீங்க..!!!!!

      கீதா

      நீக்கு
    4. ஆ நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னது இது கீதாவைப் போலவே இருக்கீங்களே!!!! நானும் இப்படிப் பட்டுக் கொள்வதுண்டு. டேக் கேர் நெல்லை அதிகம் அடிக்க வேண்டாம். ரத்தம் மீண்டும் மீண்டும் வரும்...பார்த்துக்கோங்க...

      கீதா

      நீக்கு
    5. //இப்போ வருவதெல்லாம் வாரண்டி பீரியட் முடிந்தால் படுத்துக்கொள்கிறது.//

      அப்படிச் சொல்ல முடியாது நெ.தமிழன்.. எங்களிடம் இருக்கும் மிக்ஸி இப்போ கிட்டத்தட்ட 16 வருடங்களாகிவிட்டது, இன்னமும் வேர்க் பண்ணுகிறது ஆனா நான் தான் அதை தூக்கி வைத்துப்போட்டு, பிரீத்தி வாங்கிப் பாவிக்கிறென்.. அது பழுதாகாதா எனக் காவல் இருந்தேன் தெரியுமோ கர்:))

      நீக்கு
    6. நெல்லை என்ன மிக்சினு கேட்டிருந்தீங்க அப்ப சொல்ல விட்டுப் போச்சு அப்புறம் அது மறந்தே போச்சு..

      நான் முதல்ல சுமீத் தான் அம்மா கொடுத்தது. (புதுசு இல்லை. அம்மா யூஸ் செஞ்சதுதான். அதுவும் அப்புறமாத்தான்...திருவனந்தபுரத்திலதானே இருந்தது அப்ப அதனால அம்மி, உரல் எல்லாம் அங்கு எல்லா வீட்டிலயும் இருக்கும். நாங்க இருந்த வீட்டுலயும் இருந்தது.

      அந்த மிக்ஸி 25 வருடத்திற்கும் மேல் உழைத்தது. அப்புறம் அதன் மோட்டார் போய் வேறு கிடைக்கலை அப்ப சுமீத் இல்லாம போக...

      இப்ப ப்ரீத்தி மிக்ஸி தான் நெல்லை. நல்லாருக்கு. இப்போதைக்கு இது ஓடிக் கொண்டிருக்கிறது. 10 வருடம் ஆகிறது என்று நினைவு...ப்ரீத்தி ப்ளூலீஃப்

      கீதா

      நீக்கு
    7. சுமித்தை தொடர்ந்து, மீனு மிக்சி என்று ஒன்று கோயம்புத்தூரிலிருந்து வந்தது. அதிக நாட்கள் ஓடவில்லை. இப்போது ப்ரீத்தி காலம். 

      நீக்கு
    8. மீனு வந்தது பானுக்கா...ஆனால் நீங்க சொன்னது போல் நிலைக்கவில்லை.

      இப்ப ப்ரீத்திதான் இப்போதைக்கு அதுதான்னு தோன்றுகிறது

      கீதா

      நீக்கு
  4. பல்கேரியப் பழமொழி எனக்கு ஒரு சம்பவத்தை நினைவில் கொண்டுவந்தது.

    நான் ஒரு பெரிய கம்பெனியில் 89ல் வேலை செய்தேன். 11 மாதத்தில் இளமை வேகத்தில் ரிசைன் செய்தேன். அப்புறம் 2 வருஷம் இன்னொரு கம்பெனியில் வேலை செய்தாலும் ரொம்பவும் கஷ்டப்பட்டேன்.பழைய கம்பெனியின் என்னை மீண்டும் நேர்முகத்தேர்வுக்குக் கூப்பிட்டாங்க. செலெக்ட் செய்தாங்க. ஹெச்.ஆர். தலைவர், என்னை வேலைக்கு செலெக்ட் செய்த ஐ.டி. ஜெனெரல் மேனேஜரிடம், எதுக்கு இரண்டாவது முறை எடுக்கறீங்க. நம்ம கம்பெனில அந்த வழக்கம் கிடையாது, ஒரே ஒரு "xxxxxxxx" தான் இந்த உலகத்தில் உண்டா? வேறு ஆளைப் பாருங்க என்று சொன்னதற்கு, அவர், நேராக கம்பெனி எம்.டியிடம் போய் என்னைத்தான் செலெக்ட் பண்ணணும், கம்ப்யூட்டர்ல ரொம்ப திறமைசாலின்னு சொல்லி எடுக்க வச்சார். அப்போ நேர்முகத்தேர்வுல அவர் சொன்னது,

    நீ ஐந்து வருடமாவது இந்த கம்பெனில தொடர்ந்து இருப்பயா? நான் ரிஸ்க் எடுத்து உன்னை செலெக்ட் பண்ணறேன் என்று சொல்லிட்டு, If I trust you, I should not ask you this question. If I dont trust you, there is no point in asking this question என்றார்.

    அதுதான் நினைவில் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் அதே கம்பெனியில் உங்களை செலக்ட் செஞ்சாங்கனா அது உங்க திறமைதான். அதுவும் செலக்ட் செய்தவர் வைத்த நம்பிக்கை. இல்லைனா இரண்டாம் முற ைஎல்லாம் எடுக்கரது அபூர்வம்.

      If I trust you, I should not ask you this question. If I dont trust you, there is no point in asking this question //

      இப்படிச் சொல்லுவது நானும் கேட்டதுண்டு ஆனால் கடைசியில் தோன்றும் எனக்கு...என்ன சொல்ல வராங்க நம்மளை நம்பறேன்னு சொல்றாங்களா இல்லை இது ஒரு மறைமுகமான எச்சரிக்கையா நு!!!!!!!!!!!!!1!!!!

      ஆனால் பல்கேரிய பழமொழி நான் அடிக்கடி மனதில் தோன்றும் எண்ணம்.....

      நன்றி நெல்லை. கையைப் பார்த்துக்கோங்க

      கீதா

      நீக்கு
  5. கோபுரத்தின் படங்கள் அழகாக, அற்புதமாக எடுத்திருக்கிறீர்கள்.   கோபுரங்கள் எப்போதுமே அழகுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். ஆமாம் கோபுrரனங்க்ள் அழகுதான்..எப்போதுமே.

      கீதா

      நீக்கு
  6. குழுவினருடன் செல்லும்போது படம் எடுக்க நேரம் கிடைக்காமல் அவதியுறுவது சிரமம்தான்!  அவர்கள் பார்த்துவிட்டுச் சென்றுகொண்டே இருப்பார்கள்.   அதற்காக தனியாகவும் செல்ல முடியாதே...   ரசிக்காதே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே ஸ்ரீராம். தனியா போறது போர்..குழுவாகப் போகும் போது இப்படி ஆகும்தான்.அதே சமயம் நம் எண்ண அலைகளுடன் ஒத்துப் போகும் குழு என்றால் பிரச்சனை இல்லை. இவர்களும் அப்படியான ரசிக்கும் குழு தான். மைத்துனர், சித்தப்பா பெண், நண்பர்கள் குடும்பம்....ஜாலி குழு. .ஆனால் அன்று நேரம் மிகவும் குறைவு என்பதால் எங்களை எல்லாம் கட்டி இழுத்துச் சென்று நாங்கள் வந்த வேனில் ஏற்றி ஊருக்குப் போய்ச்சேரணுமே...மைத்துனர் சிஸ்டமாட்டிக்காக வழிநடத்திச் செல்வார்...நேரம் எல்லாம்.....மறு நாள் நான் பெங்களூர் திரும்ப வேண்டும். அதுவும் பிருந்தாவ்னில்....ஸோ அவசரம் அவசரமாகச் சென்று...வந்தோம்.

      இன்னும் கோபுரம் படங்கள் இருக்கு வரும்..ஸ்ரீராம்

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  7. 1983 இல் கள்வனின் காதலி இரண்டாம் முறையாக கல்கியில்வந்திருக்கும்!  கதை முதல்முறை முன்னரே வெளிவந்திருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ! ஓகே ஓகே மிக்க நன்றி ஸ்ரீராம். இனி இரவு வந்து தருகிறேன் பதில்கள் மற்ற கருத்துக்கு...

      கீதா

      நீக்கு
    2. கள்வனின் காதலி - கல்கி எழுதிய முதல் தொடர்கதை எனக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனந்த விகடனில் கல்கி ஆசிரியராக இருந்தப்போ எழுதியது. சித்தப்பாவிடம் பைன்டிங் இருந்தது. அதிலே படிச்சிருக்கேன். நீங்க சொல்லும் எண்பதுகளிலே இதை 2, அல்லது 3 ஆம் முறையாகப்போட்டிருக்கலாம். கல்கி அநேகாமாக இதை 1930 - 40க்குள் எழுதி இருக்கலாம்

      நீக்கு
  8. உண்ணாவிரதங்கள்! நம்மூர் உண்ணாவிரதங்களே எப்போதும் ஸ்பெஷல்தான்!    'அது' நினைவுக்கு வருவதும் எனக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹ ஹா ஸ்ரீராம் அது நினைவுக்கு வந்திருச்சா!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  9. பாரதியார் - இந்தப்படம் வெளிவந்த மாதிரியும் தெரியவில்லை.  விஜய் சித்தர் ?  கேள்விப்பட்டதில்லை.   பாடல் ஒன்றாவது பதிவாகி இருந்தால் எங்காவது வெளிவந்திருக்கும்.  நோ ஐடியா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் உங்களூக்குமே தெரியலையா....கீதாக்காவும் சொல்லலை...பானுக்கா இன்னும் பார்க்கலை போல. ஆமால்ல பாட்டு எங்காவது வந்திருக்கணும்...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  10. துணுக்குகளும், விளம்பரமும் ரசிக்க வைத்தன.  பொன்மொழியும் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  11. மனைவியை மகிழ்விப்பது எப்படி - இதுக்கு எந்த ஃபார்முலாவும் கிடையாது. பெண்கள் எதிலும் எப்போதும் திருப்தி அடைய மாட்டார்கள்.

    இது நான் சொல்லலை. பழங்கால இந்தியப் பழமொழி. அவங்க திருப்திலாம் குறைந்த ஆயுள் கொண்டது.

    (இதுக்கு யார் யார் கிட்ட நான் வாங்கிக் கட்டிக்கப் போறேனோ?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///இதுக்கு எந்த ஃபார்முலாவும் கிடையாது. பெண்கள் எதிலும் எப்போதும் திருப்தி அடைய மாட்டார்கள்.///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      அவர் சொன்னார்,, இவர் சொன்னார்ர்.. அக்க்காலத்தில் சொன்னார்கள் எண்டு சொல்லிச் சொல்லியே எதையாவது போகிறபோக்கில் தூக்கிப் போட்டுவிட்டுப் போவதே வேலையாகிப்போச்ச்சு:)).. நீங்க இப்போ பெண்கள் பற்றி என்ன சொல்றீங்க? என்பதே முக்கியம்?:))..

      பெண்களின் எதிர்பார்ப்பு/திருப்திப்படுதல்.. வைர அட்டியலோ.. ஒரு லட்சத்துகு பட்டுப் புடவையோ அல்ல:))..

      நம்மோடு அன்பாக பேசிக்கொண்டிருக்கோணும்:),
      நான் சொல்வதை அப்படியே கேட்கோணும்:) மணித்தியாலக்கணக்கானாலும் சலிப்புக் காட்டாமல் கண் தூங்காமல், அப்படியே உற்காகத்தோடு கேட்கோணும்:)
      நம்மை எதிர்க்கக்கூடாது:)),
      நமக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது:),
      தெரியாமல் செய்தாலும் வந்து உண்மை சொல்லி மன்னிப்புக் கேட்டிடோணும்:)),
      நம்மிடம் வந்து மற்றப் பெண்களைப் புகழக்கூடாது:))[வயசானோர், சின்னப்பிள்ளைகள் பற்றி எதுவும் சொல்லலாம்:)) ஹா ஹா ஹா:))
      நீதான் அழகு நீதான் கெட்டிக்காரி என்பதுபோல சொல்லிக்கொண்டிருக்கோணும்:)..
      எங்கு போனாலும் சொல்லோணும்:)..

      இவ்வளவும் குடுத்தீங்களெண்டால்ல்.. நாம் திருப்திப்படாமல் போயிடுவமோ:))

      ஹா ஹா ஹா... நாங்கள் ஹப்பியானாலே வீடே ஹப்பியானதைப்போலத்தான்:))

      நீக்கு
    2. //(இதுக்கு யார் யார் கிட்ட நான் வாங்கிக் கட்டிக்கப் போறேனோ?)//

      ஹா ஹா ஹா இப்பூடிச் சொன்னால் மட்டும் விட்டிடுவமோ:))

      நீக்கு
    3. நம்மோடு அன்பாக பேசிக்கொண்டிருக்கோணும்:) - கஷ்டம்தான்,
      நான் சொல்வதை அப்படியே கேட்கோணும்:) மணித்தியாலக்கணக்கானாலும் சலிப்புக் காட்டாமல் கண் தூங்காமல், அப்படியே உற்காகத்தோடு கேட்கோணம்:) - ஐயோ.. இது ஆகவே ஆகாது சாமி
      நம்மை எதிர்க்கக்கூடாது:)), - ஐயோ... இது எப்படி சாத்தியம்?
      நமக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது:) - இது பிரச்சனை இல்லை. நாம எதுக்கு மறைக்கப்போகிறோம்?
      தெரியாமல் செய்தாலும் வந்து உண்மை சொல்லி மன்னிப்புக் கேட்டிடோணும்:)) - இது நியாயமான பேச்சு... சுலபம்தான்,
      நம்மிடம் வந்து மற்றப் பெண்களைப் புகழக்கூடாது:)) - இதுவும் நியாயமான எதிர்பார்ப்பு. நிறைவேற்றக்கூடியது
      நீதான் அழகு நீதான் கெட்டிக்காரி என்பதுபோல சொல்லிக்கொண்டிருக்கோணும்:).ஜால்ரா அடிக்கணுமா? இந்த தெக்கினிக்கு தெரியாம போச்சே.. இனி அடுத்த ஜென்மத்தில்தான் சாத்தியம்
      எங்கு போனாலும் சொல்லோணும்:) - இது நியாயமான எதிர்பார்ப்பு. பிரச்சனையில்லை.

      நீக்கு
    4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை டபுள்செக்கிங்க், முன்ஜாக்கிரதை கரெக்ட்டா இருக்கானு பார்த்துக்குவாங்கனு சொல்ல வராதே...ஹா ஹா ஹா

      மணித்தியாலக்கணக்கானாலும் சலிப்புக் காட்டாமல் கண் தூங்காமல், அப்படியே உற்காகத்தோடு கேட்கோணம்:) //

      நெல்லை இது ரொம்ப ஈசி தெக்கினிக்கி உங்களுக்குத் தெரியலை...ஹிஹிஹிஹி

      //நம்மை எதிர்க்கக்கூடாது:)), - ஐயோ... இது எப்படி சாத்தியம்?//

      நெல்லை இந்த தெக்கினிக்கும் உங்களுக்குத் தெரியலை...எல்லாம் சொல்லியா கொடுக்க முடியும் ஹிஹிஹிஹி

      //நீதான் அழகு நீதான் கெட்டிக்காரி என்பதுபோல சொல்லிக்கொண்டிருக்கோணும்:).ஜால்ரா //

      இதுவும் உங்களுக்குத் தெரியலை.. ஹா ஹா ஹா..

      சரி விடுங்க...நாங்க வேணா க்ளாஸ் எடுக்கறோம் உங்களுக்கு...ஃபீஸ் என்னானா நாங்க வரும் போது வாய்க்கு ருசியா சமைச்சு தரணும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    5. //(இதுக்கு யார் யார் கிட்ட நான் வாங்கிக் கட்டிக்கப் போறேனோ?)//

      ஹா ஹா ஹா இப்பூடிச் சொன்னால் மட்டும் விட்டிடுவமோ:))//

      ஹா ஹா ஹா அதே...அதிரா பலரும் இந்த பட்டு, நகை இதை வெச்சுத்தான் பெண்களைத் திருப்திபடுத்த முடியாதுன்னு சொல்லிடுறாங்க....(நெல்லை எல்லாம் அப்படி இல்லையக்கும் அதிரா!!!!!)

      கீதா

      நீக்கு
    6. ஸ்ஸ்ஸ்ஸ் ஓவரா பேச ரைம் இல்லாமல் இருக்கே வைரவா:)

      நீக்கு
  12. அந்த ராஜ கோபுரத்தை ஒருநாள் முழுக்கப் பார்த்தாலும் ரசிச்சு முடியாது, அவ்ளோ அழகு.. நீங்கள் எடுத்த விதமும் அழகு கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதிரா....எல்லா கோபுரங்களும் அத்தனை அழகு. நான் எல்லாவற்றையும் மிக மிக ரசிக்கும் ஆள். கோபுரங்கள் முதல் இயற்கை அனைத்தும் ...அதுவும் நின்று நிதானமாக....எத்தனை ரசித்தாலும் சில இடங்களில் இருந்து திரும்ப மனவே வராது திருப்தியே ஏற்படாது. (ஹையோ நெல்லை இந்த வரியைப் பிடித்துக் கொண்டுவிடக் கூடாதே!!!!!!!!!!!)

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  13. நாங்க ஸ்ரீரங்கத்தில் மேலே ஏறி எல்லாம் பார்த்தது இல்லை. படிகள் ஏறுவது முடியலை என்பதால்! உங்கள் பார்வையில் இனி வரும் நாட்களில் பார்க்கலாம். குறைந்த நேரத்துக்குள்ளாக இத்தனை படங்களை எடுத்திருப்பது உங்கள் திறமைக்கு ஒரு சான்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா உங்கள் கால் வலிக்கு இப்ப சிரமம் தான்....ஆனால் படிகள் அத்தனை இல்லை கீதாக்கா...நம்ம வீட்டு (தனி வீடுகளில் ) மாடி ஏற படிகள் ஒரு 8-10 இருக்குமே அம்புட்டுத்தான் ஏறி அடுத்து திரும்பி ஒரு 2 படி ஏறினா பெரிய மொட்டை மாடி போல இருக்கு....செம காத்து வருது....அத்தனை கோபுரங்களும் பார்க்கக் கிடைக்கிறது ரொம்ப அழகா இருக்கு அக்கா. ஊரும் கொஞ்சம் தெரியும்...படங்கள் வரும் போது நீங்களே சொல்லுவீங்க அதெல்லாம் என்ன மண்டபம், எந்த திருச்சுற்று நு...

      எனக்கு விவரங்கள் ரொம்பத் தெரியலை. இத்தனைக்கும் பல முறை முன்பு கோயில் சென்றிருக்கிறேன். அங்கு உறவினர் இருந்ததால். என்றாலும் எல்லாமே உள்ளே சென்று பெருமாளைப் பார்த்துவிட்டு, தாயார், ஆண்டாள் என்று சில சன்னதிகளோடு சரி.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  14. நல்ல நாளும் அதுவுமா மீண்டும் வலைத்தளம் வந்து பதிவு போட ஆரம்பித்தற்கு பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்


    http://avargal-unmaigal.blogspot.com/2015/01/blog-post.html மனைவியை மகிழ்விப்பது எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மதுரை....நான் தொடரனுமே என்றும் தோன்றுகிறது பார்ப்போம்...மனதில் எத்தனையோ தோன்றுகிறது ஆனால் பதிவாக எழுத பல இடையூறுகள். நான் வேற கொஞ்சம் ஸ்லோ கோச் குறிப்பாக எழுதுவதில்....அதான்..

      உங்க லிங்க் பார்த்திருப்பேனே நகைச்சுவை என்றால்..கண்டிப்பாகப் பார்த்திருப்பேன்....போயிப் பார்க்கிறேன்....

      நன்றி மதுரை

      கீதா

      நீக்கு
    2. மதுரை தமிழா இப்பவும் சொல்லறேன் நீங்க அடி வாங்கினதுல தப்பே இல்ல!!!ஹா ஹா ஹா ஹா...

      அப்ப அந்த எழுத்தாளர் பாவம் ந்றீங்க!!ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    ஸ்ரீ ரங்கம் ராஜகோபுர தரிசனம் மிக அருமை. கண்குளிர தரிசித்துக் கொண்டேன்
    கோபுரங்கள் மிகவும் அழகாக படம் எடுத்துள்ளீர்கள். இன்னமும் வரும் அழகான படங்களுக்கு காத்திருக்கிறேன்.

    பழைய கால செய்திகளும், பாரதிரார், எழுத்தாளர் விளம்பரங்களும் மிக அருமையாக இருக்கிறது. நானும் கிட்டத்தட்ட 89 ல் வாங்கிய ஸ்மித் மிக்ஸி இவ்வளவு வருடங்கள் நல்லபடியாக உழைத்தது. இன்னமும் உழைக்க தயார் என்றுதான் அது சொல்கிறது. நாங்கள்தான் வேறு மிக்ஸிக்கு மாறியுள்ளோம்.

    எல்லா விபரங்களும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலாக்கா...மிக்க நன்றி விரிவான கருத்துக்கு

      இன்னும் மாமனாரின் கலெக்ஷனில் நிறைய ஸ்வாரஸ்யமான துணுக்குகள் செய்திகள் இருக்கின்றன. முன்பும் கொஞ்சம் எடுத்து பகிர்ந்திருக்கிறேன். ஒரு வருடம் இருக்கும் என்று நினைவு. ஸோ மீண்டும் எடுத்து பகிரலாம்னு..பார்ப்போம்..

      //இன்னமும் உழைக்க தயார் என்றுதான் அது சொல்கிறது. நாங்கள்தான் வேறு மிக்ஸிக்கு மாறியுள்ளோம். //

      புது மிக்ஸி நன்றாக இருக்கிறதா? என்ன மிக்ஸி அக்கா

      மிக்க நன்றி கமலாக்கா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  16. பாதியில் விட்டிட்டுப் போயிட்டேன் அப்போது:)..

    ///இதைப் பார்க்கும் போது ஒருவர் அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பவர் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!!!!!///
    ஆமா ஆமா மீயும் பொறுப்பில்லையாக்கும்:)... ஆனாலும் எனக்கும் அந்த உண்ணாவிரத நோட்டீஸ் ரொம்பப் பிடிச்சுப் போச்ச்ச்ச்ச்ச்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா...என்னடா இது யாருமே பூஸாரைப் பிடிக்கலையேன்னு நினைச்சேன்...ஏஞ்சல் வந்திருந்தாங்கனா கண்டிப்பா கண்டுபிடிச்சு உங்க வாலை பிடிச்சிருப்பாங்க!! ஹா ஹா ஹா

      இந்த உ வி நோட்டிஸ் உங்களுக்குப் பிடிக்காம எப்படிப் போகும்...அப்படித்தானே நாம தேம்ஸ்ல உ வி போ செய்யறதே !!!!!!!!!!!!!

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  17. பாரதியார் எழுத்து நன்று... கடசிப் பழமொழி சூப்பர்...

    பதிலளிநீக்கு
  18. நிறைய வருடங்கள் ஸ்ரீரங்கத்தில் வசித்தும் எல்லா கோபுரங்களையும் ஒரே இடத்திலிருந்து டிக்கெட் எடுத்து தரிசிக்க முடியும் என்பது தெரியாது. என் சினேகிதி ஒருத்தி ரெங்கநாதர் மூலஸ்தான கோபுரத்தின் மேல் ஏறி, பரவாசுதேவருக்கு அருகில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தாள். அவளுக்கு கோவில் முக்கியஸ்த்தர்கள் சிலரைத் தெரியும். முக்கியமானது சொல்ல மறந்து விட்டேனே? படங்கள் அருமை. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா வாங்க வாங்க அப்படியே கை கொடுங்க ஒரு தட்டு தட்டிக்கலாம்..பின்ன நான் உங்களுக்கு கமென்ட் போட்டுட்டு இங்க வந்து தளத்துல ஏதாவது கமென்ட் வந்திருக்கானு பார்த்தா அட உங்க கமென்ட். கொஞ்சம் முன்னாடிதான் பார்த்துட்டுப் போய் உங்களுக்குக் கமென்ட் கொடுத்தேன்...அப்ப வந்திருக்கலை...சைமுல்டேனியஸா...!!!!!

      ஓ ரெங்கநாதர் மூலஸ்தான கோபுரத்தின் மேல் ஏறி? ம்ம்ம்ம்

      இருங்க அப்ப அடுத்த படம் போடும் போது அதுதானா நு சொல்லுங்க..பானுக்கா...

      மிக்க நன்றி பானுக்கா படங்களையும் பாராட்டியமைக்கு

      கீதா

      நீக்கு
  19. //அந்த ராஜ கோபுரத்தை ஒருநாள் முழுக்கப் பார்த்தாலும் ரசிச்சு முடியாது,// இந்த கோபுரத்திற்கே இப்படி சொல்லி விட்டீர்களே? மதுரை கோவில் தெற்கு கோபுரத்தை பார்த்தால் என்ன சொல்வீர்கள்?  பிரும்மாண்டம், அழகு, தெய்வீகம் இப்படி எல்லாம் ஒருங்கே சேர்ந்து அமைந்தது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா மதுரை மீனாட்சி கோயில் பார்த்திருக்கிறேன் ஆனா இன்னும் நிதானமாகப் பார்த்ததில்லை. பார்க்கணும் அக்கா. மிக மிக அழகான கோயில்...அதுவும் கேமராவுடன் போக வேண்டும். சில பொக்கிஷங்கள் சேமித்து வைக்க வேண்டும்...

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  20. அன்பு கீதா,
    இது ஒரு பொக்கிஷமான பதிவு தான். நீங்கள் ஸ்ரீரங்கம் சென்றது
    எங்களுக்கு எத்தனை அதிர்ஷ்டம் பாருங்கள். அருமையான படங்கள்.

    மாமனாரின் புத்தகங்கள் உங்களிடம் வந்தது அதிர்ஷ்டமே. என்னிடம் 1954
    ஆம் வருட விகடன் பைண்டிங்க் இருக்கு. கொஞ்ச நாட்கள் ஆனால்

    உதிர்ந்து விடும்.
    முன்பே பகிர்ந்திருக்கிறேன் முக நூலில்.என் பதிவுகளிலும் அப்போதுவந்த கதைகளைப் பதிவு செய்தேன் நல்ல வேளை.
    உங்கள் உத்சாகம் தொற்றிக் கொள்ளும் உத்சாகம்.
    இன்னும் வரும் பதிவுகளைப் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க் நன்றி வல்லிம்மா கருத்திற்கு

      நான் கோயில் போனதே அந்தத் திருமணத்துக்குப் போனதால்தான் இல்லைனா போகும் வாய்ப்பே இல்லைமா...எனவே அவர்களுக்குத்தான் சேரும்...ஹா ஹா

      என் மாமனாரின் புத்தகங்களும் உதிரும் நிலையை எட்டிக் கொண்டிருக்கின்றன. சிலதையேனும் பகிர எண்ணியுள்ளேன். தொகுப்புகளில் சில நல்ல சிறுகதைகளும் ஆங்கானே இருக்கின்றன. அது தவிர மாமனாரே அப்போது வந்த சிறுகதைகள் மட்டும் எடுத்து (எந்தப் பத்திரிகை என்று தெரியவில்லை..) தொகுத்து வைத்திருக்கிறார். அதையும் பகிர நினைத்துள்ளேன் பார்ப்போம் அம்மா.

      நீங்கள் பகிர்ந்தது நல்ல விஷயம். இல்லைனா பொடியாகிப் போயிருக்கும்

      //உங்கள் உத்சாகம் தொற்றிக் கொள்ளும் உத்சாகம்.//

      நிஜமாமாவா அம்மா!!!!? மிக்க நன்றி மிக்க நன்றி. உத்வேக்ம் கொடுக்கும் ஊக்கம் கொடுக்கம் வரி!

      மிக்க நன்றி வல்லிம்மா. கருத்திற்கும் ஊக்கம் கொடுக்கும் வரிகளுக்கு..இனியும் வரும் பதிவுகள்...முடிந்த போது பாருங்கம்மா

      கீதா

      நீக்கு
  21. வாவ் !! கீதா ஸ்ரீரங்கத்து ராஜ கோபுரம் செம கலக்கல் அட்டகாசமா புகைப்படம் .கொள்ளை அழகு .ஆண்டாள் குட்டியை பார்க்க வெயிட்டிங் .
    சுமித் இப்போ வியாபாரத்தில் இல்லையா ??? எங்க வீட்ல ஊரில் 87 இல் வாங்கினது இன்னும் வேலை செய்யுதே .இங்கே இப்போ வைத்திருப்பது ப்ரீத்தி சின்ஸ் 2004 .இதுவரை தொல்லையில்லை .க்ராண்ட் ஸ்வீட்சில் சந்திரகலா சூர்யகலா வரும் முன் வந்த விளம்பரம்னு நினைக்கிறன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சல் பாராட்டிற்கு.

      சுமித் இல்லைப்பா இப்ப. சில வருடங்கள் ஆகிப் போச்சே. 87 ல இருந்தது. 10 வருடங்களுக்கும் மேலாகி இருக்கும் என்று நினைக்கிறேன்...ஏனோ மூடிக் கொண்டுவிட்டது...நானும் ப்ரீத்தி தான் ப்ளூலீஃப்..

      ஆமாம் எனக்கும் இதுவரை தொல்லை இல்லை.

      //க்ராண்ட் ஸ்வீட்சில் சந்திரகலா சூர்யகலா வரும் முன் வந்த விளம்பரம்னு நினைக்கிறன் :)//

      ஓஹோ!!

      ஆண்டாள் செல்லம் வருவாளே!! துதிக்கையைத் தூக்கிக் கொண்டு டான்ச் ஆடிக் காட்டுவாளே!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதாக்காவுக்கும் மகிழ்ச்சியா இருக்கும் அவளைப் பார்க்கும் போது..

      நெட் பிரச்சனையாகவே இருக்கு ஒரு கமென்ட் போடும் போது நெட் போயிடுது. மீண்டும் ரெஃப்ரெஷ் செய்து நெட் வருவதற்குள் ஹப்பாடா என்று ஆகிவிடுகிறது அதான் அந்தப் படமெல்லாம் அப்லோட் செய்ய நெட் ஒழுங்கா வரணும்னு காத்திருக்கிறேன்..

      மிக்க நன்றி ஏஞ்சல்

      கீதா

      நீக்கு
  22. அருமையான பதிவு கீதாரெங்கன்.
    மீண்டும் உங்கள் தளம் சிறப்பாக இயங்க வாழ்த்துக்கள்.
    ஸ்ரீ ரங்கத்து கோபுர தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் மிக அழகு.
    நானும் மேலே போய் படங்கள் எடுத்தது இல்லை அடுத்த முறை போனால் பார்க்க வேண்டும்.

    பாரதியார், கல்கி பற்றிய செய்திகள் அனைத்தும் அருமை.
    நானும் ஸ்மித் வைத்து இருந்தேன் பல வருடம். அது கெட்டு போன பின் அதன் உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. அவர்கள் மாடலை மாற்றி விட்டார்கள். அப்புறம் ப்ரீத்தி வைத்து இருக்கிறேன். பல வருடமாய்.

    ஸ்வீட்ஸ் விளம்பரம்., பல்கேரிய பழமொழி எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பதிவு கீதாரெங்கன்.
      மீண்டும் உங்கள் தளம் சிறப்பாக இயங்க வாழ்த்துக்கள்.//

      மிக்க மிக்க நன்றி கோமதிக்கா வாழ்த்திற்கு. தொடர வேண்டும் என்று எனக்கும் இருக்கிறது.

      அடுத்த முறை போனால் போய் பாருங்க அக்கா..

      ஆமாம் அக்கா சுமித் மிக்சி உதிரிபாகங்கள் கிடைக்கவில்லை. அதனால் தான் நானும் இப்போது ப்ரீத்திதான் வைத்திருக்கிறேன். எனக்கு 7,8 வருடங்கள் ஆகிறது நல்லாவே ஓடுகிறது.

      நெல்லை நோட் திஸ் அதிரா, ஏஞ்சல், கோமதிக்கா நான் எல்லாரும் இப்ப ப்ரீத்திக்கு மாறிட்டோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஸோ நீங்களும் யோசிக்கலாம்...ஹா ஹா ஹா

      மிக்க நன்றி அக்கா ரசித்தமைக்கும் கருத்துகளுக்கும்

      கீதா

      நீக்கு
    2. நானும் தமன்னாவிலிருந்து... சே சே... ஸுமீத்திலிருந்து பிரீத்திக்கு மாறிடறேன் விரைவில்

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா நெல்லை நான் அந்தக் கருத்தைப் போடும் போது இந்த தமன்னாக்காவை நினைத்து நெல்லை இப்படித்தான் போடுவார் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டே போட்டேன்..அதுவும் அதிராவுக்கு சொல்ல நினைத்து விட்டுப் போன ஒன்று...நெட் பிரச்சனையால்...என்ன தெரியுமா..."அதிரா! நெல்லை எப்போ தமன்னாக்காவிலிருந்து ஹையோ டங்கு ஸ்லிப்பாயி...சுமித்லிருந்து ப்ரீத்திக்கு மாறிட்டேன்னு சொல்லப் போறாரோ??!!" என்று...அப்புறம் நெட் வரும் போதெல்லாம் ஆங்காங்கே கடமை முடிக்க வேண்டியதானதால் போயிட்டேன்...இப்ப உங்க கமென்ட்!!!!!!!

      சரி சரி ப்ரீத்தி என்ன சொல்றான்னு அப்புறம் சொல்லுங்க..

      கீதா

      நீக்கு
  23. முதல் படம் அழகு.... கோபுர தரிசனம் கோடி புண்ணியம்... அந்த இடத்திற்கு சென்று சி முறை பார்த்தது உண்டு. படம் எடுத்தேனா என நினைவில்லை.

    துணுக்குகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  24. பல செய்திகள் கொண்டு அருமையான தொடக்கம் ....மீண்டும் பல பதிவுகள் தொடர்ந்து வரட்டும் கீதா அக்கா ...


    கோபுர தரிசனம் மிக அழகு ...

    இது போல மேலே சென்று பார்த்தது இல்லை ..அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டும் ...

    பதிலளிநீக்கு
  25. மிக அழகிய கோபுரம் நானும் மூன்றுதடவை சென்று ரசித்திருக்கிறேன் என்பதில் மகிழ்சி.

    பதிலளிநீக்கு