செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 3

மதிய உணவு சாப்பிட்டுவிட்டுப் புறப்படுவோம் என்று சொல்லி முடித்திருந்தேன் சென்ற பதிவை. சாப்பிட்டாச்சு. சாப்பிட்டதும் அந்தத் தெருவில் கொஞ்சம் நடந்துவிட்டு அங்கேயே டீ, காஃபி என்று குடித்துவிட்டுக் கிளம்பினோம் 4.30 மணி அளவில்.

சூளூர்பேட்டை சந்திப்பிலிருந்து நேர் சாலையில் சென்றால் அந்தச் சாலை முடிவதே ஷார் அதாவது ஸ்ரீஹரிகோட்டாவுக்குச் சென்றுவிடலாம். சதிஷ் தவான் ஸ்பேஸ் சென்டரில் தான் போய் முட்டும். 21 கிமீ தூரம்.

சூளூர்ப்பேட்டையிலிருந்து ஷார் சாலையில் கொஞ்சம் தூரம் சென்றதுமே புலிகட் ஏரி தான். முதலில் வலது பக்கம் நீர்ப்பரப்பு. பின்னர் இரு பக்கமும் நீர்ப்பரப்புதான். இரு புறமும் பறவைகளைக் காணலாம் என்றாலும் வலப்புறம் தான் அதிகம் பறவைகள் இருந்தன.


இதுதான் ஷார் செல்லும் சாலை. 

ஏரி தொடங்கும் இடத்தில் சில பறவைகளைக் கண்டதும் உடனே வண்டியை நிறுத்தி கரையில் இறங்கிச் சென்றோம். நான் முடிந்த அளவு படங்களை எடுத்துக் கொண்டுவிட்டேன். ஏரியில் நீர் கரையை விட்டுக் கொஞ்சம் தள்ளித்தான் இருந்தது. சமீபத்தில்தான் தண்ணீர் குறைந்திருப்பது தெரிந்தது. கரையில் காலை கவனமாக வைக்க வேண்டியதாக இருந்தது. இல்லை என்றால் கால்கள் புதைந்துவிடும். அதுவும் நான் ஷூ அணிந்திருந்ததால் ரொம்பவே கவனமாகச் சென்றேன்.

இதோ இந்த இடத்தில் எடுத்த புகைப்படங்கள்.


ஷார் வரை செல்லும் இந்த ஏரி அப்படியே கடலுடன் ஐக்கியமாகிவிடும்.



 சுற்றிலும் உள்ள நீர்ப்பரப்பைக் கிளிக்கினேன். தூரத்தில் பறவைகள். ஜூம் செய்து முடிந்த வரை எடுத்தேன். என் கேமராவின் சக்தி அவ்வளவுதான்.


தூரத்தில் பறவைகள் இருந்தன ஜூம் செய்தாலும் என் கேமராவின் சக்தி என்று முன்னாடி சொன்னதற்கு அத்தாட்சி பாருங்க அங்கிருந்த பறவைகள் பறக்குது…!!!!!!!






பறவைகளைக் கூட்டமாகக் கண்ட போது மனதில் அப்படி ஒரு ஆனந்தம். அதுவும் அவை அவ்வப்போது கூட்டமாகப் பறந்து கொண்டே இருந்ததைக் காணக் கண்கொள்ளாக் காட்சி. ஒரு கூட்டம் எழுந்து பறந்தால் ஏற்கனவே பறந்த கூட்டம் வந்து அமரும். அடுத்து ஒரு கூட்டம் எழும். அப்படிச் சிறகை விரித்து தண்ணீரைத் தேய்த்துக் கொண்டு தண்ணீர்த் துளிகள் தெளித்திடப் பறக்கும் அழகை என்னவென்று வர்ணிக்க! வார்த்தைகளே இல்லை.

மெய்மறந்து பார்த்துக் குதூகலித்தேன். ஒவ்வொரு முறை அவை பறக்கும் போதும் நான் துள்ளி துள்ளிக் குதித்து மகிழ்ந்தேன். வியப்புடம், இயற்கையை நினைத்து சிலிர்த்து இன்னும் என்ன வார்த்தைகள் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். காணக் கண் கோடி வேண்டும்! அதுவும் நிறைய வகை வகையான நாரைகள், நீர்க்காகங்கள், நீர்ப்பறவைகள். அருகே சென்று பார்க்க இயலவில்லை.

இதைப் படமெடுக்க ஆகச் சிறந்த கேமரா வேண்டும். என் கேமராவில் இவ்வளவுதான் முடிந்தது. வெங்கட்ஜி இன்னும் வெகு சிறப்பாக எடுத்திருந்திருப்பார் அவரது கேமராவில். 

ஒரு பக்கம் இருப்பவற்றை எடுத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கம் இருப்பவை பறக்கத் தொடங்கும். ஹையோ அதை மிஸ் செய்துவிட்டோமே என்று அதைப் பார்த்துப் படம் எடுக்கத் தொடங்கும் போது வேறொரு புறம் இருப்பவை உயரே பறக்காமல் நீரின் மேற்பரப்பிலேயே பறக்கும். இப்படி எல்லாவற்றையும் கேமராவுக்குள் சிறைப்பிடிக்க அதுவும் என் கேமரா ஒவ்வொரு படத்தையும் சேமிக்க மிகுந்த நேரம் எடுக்கும். – நிக்கான் கேமரா. இடையில் தகராறு லென்ஸ் எரர் என்று. எப்படியோ முடிந்தவரை ஃபோட்டோ ஷூட் எடுத்துத் தள்ளிவிட்டேன்!! 

 


மீண்டும் ஷார் சாலையில் பயணம். அப்போது எங்கள் வண்டியின் முன்னால் சென்ற ஷேர்ட் ஆட்டோ. (சூளூர்ப்பேட்டையிலிருந்து ஷார் செல்ல ஷேர் ஆட்டோவில் 10ரூ தான். வட்லமுடியில் இருந்தப்பவும் அப்படித்தான் வட்லமுடிலருந்து தெனாலி டவுன் செல்ல ஷேர் ஆட்டோ 10ரூ தான்.)



இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன. அடுத்த மூன்று நிமிடத்தில் இதே சாலையில் நாங்கள் அடுத்து இறங்கிய பகுதி மிக அழகான பகுதி. அந்த இடத்திலிருந்து இரு புறமும் நீர்ப்பரப்பு. அங்கிருந்து புறப்படும் போது எங்களில் நாங்கள் நால்வர் என்ன செய்தோம் என்பதையும் சொல்கிறேன் அடுத்த பதிவில். இன்னும் கொஞ்சம் அருகில் இருப்பது போன்ற பறவைகளின் படங்களும் ஒரு சில உண்டு. (ஜூம் செய்து எடுத்தவைதான்!)

--------கீதா



41 கருத்துகள்:

  1. நிகழ்வுகளை கண் முன் விவரித்தவதம் அருமை. புகைப்படங்கள் அனைத்தும் அருமை இருப்பினும் பல படங்கள் ஒரே போலவே இருக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு.

      முதல் படம் தான் ரிப்பீட் ஆகியிருப்பது தெரிகிறது...எடுத்து விடுகிறேன்...மற்றவற்றைக் கூர்ந்து பார்த்தால் சின்ன சின்ன மாற்றங்கள் தெரியும் கில்லர்ஜி...நான் அப்பகுதி முழுவதையும் அதாவது என் வலப்புறம் தொட்டு இடப்புறம் வரை இருந்த காட்சிகளையும், பறவைகளையும் படம் எடுக்க முனைந்ததில் அதுவும் கண்டினுவஸ் மோடில் போட்டு படம் எடுத்தேன் ஏனென்றால் பறவைகள் பறப்பதை அந்த மோடில் போட்டு எடுத்தால் அடுத்தடுத்து வருவது தெரியும்....இந்தக் கண்டினுவஸ் மோடில் போட்டு படம் எடுப்பதற்கு உதாரணமாக ஒரு படம் வரும் விசாகப்பட்டின பயணக் குறிப்பில்....எனக்கு மிகவும் பிடித்த மோட் இது குறிப்பாகப் பறக்கும் பறவைகளை எடுப்பதற்கு...

      கீதா

      நீக்கு
  2. அழகான படங்கள். என்னையும் பதிவில் குறிப்பிட்டது பார்த்து மகிழ்ச்சி. நல்ல Zoom Lens இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 250 mm. இன்னும் அதிகம் இருந்தால் நல்லது. என்னிடம் இருப்பது 250. விதம் விதமாக கேமராக்கள் வர ஆரம்பித்து விட்டது. நஏற்கனவே என் நண்பர் இன்னும் அடுத்த கேமரா வாங்க வில்லையா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி!!! நல்ல ஜூம் லென்ஸ் வேண்டும்....நீங்கள் குறிப்பிட்டது போல...அதிகம் இருந்தால் செமையா இருக்கும்...நான் உங்கள் படங்களை, பயணத்தை வெகுவாக ரசிப்பவள். நானும் பயணத்தின் காதலி!! மிக மிகப் பிடிக்கும் பயணம் செய்வது அதுவும் மூன்றாவது விழியுடன். இப்போது அது கொஞ்சம் ரிப்பேர் சரி செய்ய வேண்டும்.

      என் நண்பர் இன்னும் அடுத்த கேமரா வாங்க வில்லையா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்! :)//

      சரிதான் என்றாலும் யதார்த்தத்தில் யோசிக்கனும் நிறைய இல்லையா ஜி...

      கீதா

      நீக்கு
  3. பறவைகள், விலங்குகள் போன்றவற்றை படம் எடுக்க நிறைய பொறுமையுடன் இருக்க வேண்டும். காத்திருக்கும் பொறுமையும் வேண்டும். இந்தப் பகுதிகளுக்குச் செல்ல எப்போது வாய்ப்பு அமையுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி நிறைய பொறுமை வேண்டும். காத்திருக்கவும் வேண்டும் பொறுமையுடன். குழுவாகச் செல்லும் போது பலதையும் யோசிக்கனுமே நாம...இவ்வளவு கிடைத்ததே பெரிய விஷயம்தான்..

      வெங்கட்ஜி வாய்ப்பு கிடைத்தால் அக்டோபர் முதல் மார்ச்சிற்குள் பயணத்தை வைத்துக் கொள்ளுங்கள்....நாங்கள் சென்றது ஆந்திரா பகுது. தமிழ்நாட்டுப் பகுதியும் சென்று வாருங்கள் இரண்டிற்கும் அதிக தூரம் இல்லை இந்தக் காயல் ஸ்ரீஹரிகோட்டா, பழவேற்காடு இரண்டிற்கும் பொதுவாகத்தான் இருக்கும். ஸ்ரீஹரி கோட்டா தீவாகத்தான் இருக்கும்.. பழவேற்காட்டுப் புலிகட் ஏரியில் போட்டில் செல்லலாம். இரு வழிகளிலுமே நீங்கள் ஷார் தீவிற்குள் செல்ல முடியும்...முடிந்தால் அங்கும் சென்று வாருங்கள். புலிகட் மட்டுமே ஒரு நாள் பயணமாக வைத்துக் கொண்டால் நல்லது என்பேன்...

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  4. ஒருமுறையேனும் பார்க்கவேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது தங்களின் படங்களும் பகிர்வும்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகச் சென்று வாருங்கள்

      மிக்க நன்றி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  5. நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி நன்றாக இருக்கிறது.
    பறவைகள் நிறைய பறப்பது பார்க்க அழகுதான்.
    எங்கும் பசுமையாக காட்சி அளிப்பது அருமை.
    கடைசி படத்தில் வானத்தின் கலர் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா மிக்க நன்றி கருத்திற்கு...அழகான இடம்...ஷார் சாலையில் பயணிப்பது அழகா இருக்கும். இன்னும் ஷாருக்குள் சென்று தீவிற்குள் சென்றால் அதுவும் நன்றாக இருக்கும். பழவேற்காட்டில் போட்டில் செல்லலாம்...வாய்ப்பு கிடைத்தால் அதற்கும் போக ஆசை யுண்டு பார்ப்போம்

      அக்கா நெலப்பட்டும் அப்படியே பார்த்துட்டு வாங்க....ஹிஹிஹி இதற்கு முந்தைய ரெண்டு பகுதி...

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  6. உங்க இடுகைல படங்கள்லாம் பார்த்துட்டு எனக்கு கடைசி படத்தில் உள்ள மைல் கல்லும் ஒரு பறவை மாதிரியே தெரியுது.

    படங்கள் நல்லாத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...நெல்லை மிக்க நன்றி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  7. எல்லாப் படங்களுமே அழகோ அழகு. எனக்குஎன்னமோ எல்லாம் ஒரே மாதிரிப் படங்களாய்த் தான் தெரிந்தன. நீங்க சொன்னப்புறமாத் தான் மறுபடி பார்த்தேன். சாலைகள் எல்லாம் சுத்தமாயும் நன்றாயும் இருக்கும் போல் தெரிகிறது. இந்தப் பக்கமெல்லாம் போனதில்லை. இனிப் போக வாய்ப்பும் இருக்காதுனு நினைக்கிறேன். அடுத்த பகுதிக்கு சஸ்பென்ஸ் வைச்சிருக்கீங்க. காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாக்கா...ரோடு ரொம்பவே சுத்தமாகத்தான் இருந்தது. ஷார்/ஸ்ரீஹரிகோட்டா செல்லும் ரோடு என்பதாலோ என்னவோ!

      ஆமாம் அக்கா படங்கள் பற்றி கில்லர்ஜியின் கருத்தில் சொல்லிருக்கேன்...பறவைகள் பறந்துகிட்டே இருந்தனவா...ஸோ கண்டினுவஸ் மோடில் போட்டு எடுத்தேன்...

      அடுத்த பகுதி ஒன்றும் பெரிய சஸ்பென்ஸ் எல்லாம் இல்லை அக்கா....

      மிக்க நன்றி கீதாக்கா...

      கீதா

      நீக்கு
  8. படங்கள்லாம் வெகு துல்லியம்..

    எங்க வீட்டுக்கு எதிரில் ஒரு பறவை வரும். அழகான கொண்டை அதுக்கு இருக்கும். மயில்தோகை மாதிரி விரிச்சு மடக்கும். அதை படமெடுக்க நானும் முயற்சிக்குறேன். ஆனா முடியல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜி வாங்க. காக்டெயில் பறவையா கொண்டை புஸ் புஸ்னு இருக்குமா? புல் புல் சின்ன பறவைதான்...படம் எடுத்துப் போடுங்களேன்...

      மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    மிகவும் அழகான படங்கள். அந்த ஷார் செல்லும் பாதையே (ரோடு) மிக அழகாக உள்ளது. ஒவ்வொரு படங்களிலும் பறவைகள் பறந்தபடி, சிறகை விரித்துப் பறக்க தயாராகியபடி மிகவும் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. நேரிலே பார்த்த தங்களுக்கு மிகவும் ஆனந்தமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எனக்கும் பறவைகள், இயற்கை காட்சிகள் என்றால் மனதுக்குள் உற்சாகம் தப்பாது வரும். இதற்காகவே பேருந்து, ரயிலில் செல்லும் சமயம் கண்ணுக்கு விருந்தாக இயற்கையை ரசிக்க இப்போதும் ஜன்னலோர இருக்கைக்கு ஆசைப்படுவேன்.

    படங்களும், அதற்கு தங்களுடைய விளக்கங்களும் என்னையும் உடன் பயணிக்க வைத்தன. இங்கெல்லாம் செல்லும் சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ? ஆனாலும் தங்களைப் போன்றோரின் பதிவுகளை படிக்கும் போது கிடைக்கும் திருப்தியே பயணித்த சந்தோஷத்தை தந்து மனதை நிறைய வைக்கிறது. சகோ வெங்கட் நாகராஜன் அவர்களின் பயணக் கட்டுரைகளையும் இதற்காகவே விரும்பி படிப்பேன்.

    அடுத்த பதிவுகளையும் ஆவலோடு எதிர் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. வாங்க கமலா அக்கா...

    ஆமாம் அக்கா எனக்கும் ரொம்பப் பிடிக்கும்...ஆமாம் ஆனந்தமே..

    //ரயிலில் செல்லும் சமயம் கண்ணுக்கு விருந்தாக இயற்கையை ரசிக்க இப்போதும் ஜன்னலோர இருக்கைக்கு ஆசைப்படுவேன்.//

    ஹைஃபைவ்...நானும் அதே அதே கமலா அக்கா...புக் செய்யும் போது கேட்டுப் பெறுவேன்...

    வெங்கட்ஜியின் பயணக் கட்டுரைகள் பற்றி சொல்லவே வேண்டாம்...அவர் நிறைய இடங்களுக்கு ஊசி கேப்பில் வாய்பு கிடைத்தாலும் உடனே சென்றிடுவார்.

    மிக்க நன்றி கமலா அக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பதிவு காலையிலேயே வெளியாகி இருக்கிறது! நான்தான் கவனிக்கவில்லை போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவால்ல ஸ்ரீராம்....சில சமயம் அப்படி ஆவதுண்டு..அதுவும் இங்கு பதிவுகள் ரெகுலர் இல்லையே...அதனால...

      கீதா

      நீக்கு
  12. தூரத்தில் பெரும் புள்ளிகளாய்த் தெரியும் பறவைகள் படங்கள் பார்த்தேன். பொங்கல் வாழ்த்து படம் போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா அஹ ஹா ஹா...ஆமாம் அப்புறம் ஜூம் செய்து எடுக்க முயற்சி செய்து கொஞ்சம் கீழ வந்த படங்கள் அப்படி வந்தவை...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  13. பறக்கும் பறவைகளைக் கண்டபோது 'அதோ.. அந்தப் பறவை போல வாழவேண்டும்..." என்று பாடவில்லையா?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க அங்க பாடினோமே!! அதுவும் எப்படித் தெரியுமா.........சரி சரி அது வரும் அடுத்த பதிவில்!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  14. உங்கள் கேமிராவில் படங்கள் அழகாகவே வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்...இப்பத்தான் அந்த கேமரா வொர்க் பண்ணலை...கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு மொபைலில் எடுப்பது என்னவோ திருப்தி தருவதில்லை...

      கீதா

      நீக்கு
  15. ஷார் போகும் வழித்தார் சாலை க்ளீனா இருக்கே !
    எக்சலன்ட் போட்டோகிராஃபி !! மிகவும் ரசிச்சி எடுத்த படங்கள் உங்கள் மனதின் ஆனந்தம் படங்களில் வெளிப்படுத்து கீதா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சல் அந்தச் சாலை ரொம்ப நீட்டா அழகா இருக்கும் பின்ன இந்தியாவின் மிக மிக முக்கியமான ராக்கெட் தளம் இருக்கும் பகுதியாச்சே....விஐபிக்கள் வரும் பகுதியாச்சே!!!

      ரொம்பவே ரசித்து எடுத்தேன் ஏஞ்சல்...படம் எடுப்பது மிக மிகப் பிடிக்கும் பல ஆங்கிள், பல மோட் எல்லாம் முயற்சி செய்வதுண்டு. இப்ப அது வொர்க் பண்ணலை ஸோ படங்கள் அவ்வளவா எடுக்க முடியலை...

      மிக்க நன்றி ஏஞ்சல்

      கீதா

      நீக்கு
  16. அருமையாக இருக்கு எல்லாப் படங்களும்.
    நீல வானம், பச்சைப் புல்வெளியிடையே தன்னீர். தூரத்தே தெரியும் பறவைகள். இது ஒரு இசைக் கச்சேரி போல ஒன்றாகப் பறப்பதும், ஒன்றாக இறங்குவதும், காச் மூச் சத்தமும்.
    அப்படியே கண் முன் விரிகின்றன.
    மிக நன்றி கீதா மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா...மிக அருமையான இடம் அம்மா. ஆமாம் ஒன்றாகப் பறப்பது அத்தனை அழகு...ஒன்றாகக் கூட்டமாக நிற்பது என்பதும் அத்தனை அழகு...அடுத்த பகுதியில் இன்னும் வரும்...இவற்றின் சத்தம் ஹையோ செமையா இருக்கும்...

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  17. ஆவ்வ்வ்வ் நாரை இனங்கள் தான் அதிகம் போலும், எவ்ளோ நாரைகள்.. மனதுக்கு திருப்தியாக இருந்திருக்கும்.. பறவைகளைக் கண்டாச்சு என. போக்குவரத்துப் பாதை ரொம்ப அழகு.. கேரளா என்றாலே பசுமைதானே இல்லையா.. இது கேரளா இல்லை எனினும்.. அருகாமை தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது? கேரளாவா? புலிக்காட் ஏரி கேரளாப்பக்கம் போயிடுச்சா? ஙே!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    2. நாரை இனங்கள்...ஆமாஅம் நீர்க்காகம், ஸ்டார்க், கொஞ்சம் பெலிக்கன்ஸ்....ஸ்டார்க்கில் நிறைய வெரைட்டிஸ்...என்று ரொம்ப நல்லா இருந்துச்சு..

      இது கேரளா பக்கம் இல்லை அதிரா...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது ஆந்திரா பக்கம்...பதிவுல சொல்லியிருக்கேனே....

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  18. ஆஹா ரொம்ப அழகா இருக்கு கீதா க்கா...

    இந்த பறவைகளை பார்த்தால் கை பர பரக்கும் படம் எடுக்க ..இங்க ஏரியில் இப்படி தான் இருக்கும் கா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனு வாங்க வாங்க!!! ஆமாம்...நீங்களும் பிரியராச்சே!!! அதனால ரசிச்சிருப்பீங்க தெரியும்....மிக்க நன்றிமா.

      நீங்களும் உங்க ஏரியில் வருவதை எடுத்துப் போடுங்களேன்...பெலந்தூர் ஏரியா? உங்க ஏரியா பக்கம்...பார்த்தேன் அந்த வழியாத்தான் நாங்க மெட்ரோ ஸ்டேஷன் போனோம்....

      கீதா

      நீக்கு
  19. புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

    எனக்கொரு சந்தேகம்...
    டீ குடிப்பவர்கள் பார்த்திருக்கிறேன் . காஃபி குடிப்பவர்கள் பார்த்திருக்கிறேன்.
    அதென்ன டீ, காஃபி குடித்துவிட்டு, அப்படியென்றால் டீயும் காப்பியும் கலந்து குடிப்பதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா சொக்கன் சகோ, குழுவுல சிலர் டீ, சிலர் காபி என்று குடித்ததை சொன்னேன். பிரிச்சு சொல்லிருக்கனும். சோம்பேறித்தனம்...

      மிக்க நன்றி சகோ

      கீதா

      நீக்கு
  20. பறவைகள் குரங்கு இவைகளை ஃ போட்டோ எடுப்பதற்க்கென்றே தனி திறமை + மெனக்கெடல் +பொறுமைⁿ வேண்டும் . அது உங்களுக்கு ரொம்பவே இருக்கிறதுⁿ(அப்பாடா ஒரு வழியாக to the power of n எப்படிப் போடுவது என்று தெரிந்து விட்டது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய பொறுமை வேண்டும்தான் அருணா ஆனால் எனக்கு அது இருக்கானு தெரியலை...ஹா ஹ ஹா பவர் ஆஃப் போடத் தெரிந்து விட்டதா ஹா ஹா

      மிக்க நன்றி அருணா

      கீதா

      நீக்கு