திங்கள், 24 டிசம்பர், 2018

சந்தைக்குப் போனேன் நானும்...

சண்டே சந்தை  -- தினசரிச் சந்தை


எந்த ஊருக்கு மாறிச் சென்றாலும் அங்கு இருக்கும் வீட்டின் அருகில் சந்தை இருக்கிறதா என்று பார்ப்பது என் வழக்கம். அப்படித்தான் பங்களூர் மாறிச் செல்லப் போகிறோம் என்று தெரிந்ததும் இருக்கப் போகும் வீட்டருகில் சந்தை இருக்கிறதா என்று கூகுளாரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சந்தை அருகில் இருந்தால் கண்டிப்பாகச் சந்தையில்தான் காய்கறி வாங்குவதும் வழக்கமாகிவிட்டது.

அதென்னவோ தெரியவில்லை எனக்கு இப்பழக்கம் சிறு வயது அனுபவத்தினால் தொற்றிக் கொண்டது என்றும் சொல்லலாம். அவ்வப்போது மேல் உலகத்துக்கு ஒரு அழைப்பு விடுத்து அம்மாவழிப் பாட்டிக்கு நன்றி சொல்வது வழக்கம். என் அப்பாவும் சந்தைக்குப் போய் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அது போல பார்த்து பார்த்து எங்கு பொருட்களின் விலை குறைவு என்று வாங்குவார் அந்தப் பழக்கமும் எனக்கு உண்டு. 

7 ஆம் வகுப்பிலிருந்து அம்மா வழிப்பாட்டி வீட்டில். கூட்டுக் குடும்பம்.  ஞாயிறன்று பாட்டி சந்தைக்குப் போக வேண்டும் என்று அறிவித்துவிடுவார். என் மாமாக்களின் குழந்தைகள் நான் என்று எல்லோரும் கிளம்ப வேண்டும். எல்லோரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள்வோம். தப்பிக்க வழி உண்டா என்றும் பார்ப்பதுண்டு. பின்னே படிப்பதற்கும், எழுதுவதற்கும், வீட்டுப் பாடமும் நிறைய இருக்குமே. அது தவிர வீட்டு வேலைகளும் இருக்கும். ஆனால், சந்தைக்குப் பாட்டியுடன் நாங்களும் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். காய்கள் ஒரு வாரத்திற்குத் தேவையானவற்றை வாங்கி வர வேண்டும். நிறைய இருக்கும்.

ஊரிலிருந்து, வரும் வராது அல்லது தாமதமாக வரும் பேருந்தில், வடசேரிக்குச் சென்று காய்கள் வாங்கிக் கொண்டு ஒழுகினசேரி வரை 1.5 கிமீ நடக்க வேண்டும். வடசேரியில் வரும் வழியில் பே நா கிருஷ்ணண் கடையில் சில சமயம் மளிகை சாமான்கள் சிலதும் வாங்கிக் கொண்டு ஆளுக்கொரு பையாகத் தூக்க முடியாமல் இடுப்பில் குழந்தையை வைத்துக் கொள்வது போல் வைத்துக் கொண்டு நடப்போம். அதுவும் கண்டிப்பாக மத்தன், தடியன் எல்லாம் உண்டு. பாட்டி முழு தடியன்தான் வாங்குவார். பெரிய மிருதங்கம் போல் நீளமாக இருக்கும். இடுப்பில் வைத்துக் கொண்டால் வழுகி வழுகிப் போகும் என்றாலும் அதை கீழே விழாமல் பிடித்துக் கொண்டு தோளும், முழங்கையும் வலிக்க நடப்போம். தூக்குவதில் எங்களுக்குள் பேரம், லஞ்சம் எல்லாம் நடக்கும். அது தனிக்கதை. அப்புறம் சொல்லுகிறேன்.

ஒழுகினசேரியில் பேருந்து நிறுத்தத்தில் எங்கள் ஊர் செல்லும் பேருந்து வருமா வராதா என்று கால்கடுக்க நின்ற நாட்களும் உண்டு. அதுவும் வெயில் காலம் என்றால் கேட்கவே வேண்டாம். கோயிலில் கோலம், வீட்டு எடுபிடி வேலைகள் எல்லாம் முடித்து சந்தைக்குச் சென்று வர அரை நாள் போய்விடும். பேருந்துகள் அடிக்கடி கிடையாதே அப்போது. சில சமயம் ஊருக்குள் செல்லும் பேருந்து வராமல் டிமிக்கி கொடுத்துவிடும். அப்போது திருநெல்வேலி போகும் முக்கியச் சாலையில் ஓட்டாஃபீஸ் என்று சொல்லப்படும் நிறுத்தத்தில் இறங்கி பைகளையும் காய்களையும் சுமந்து கொண்டு முக்கால் மைல் என்று சொல்லப்படும் அந்தச் சாலையில் ஊருக்கு நடப்போம். (முக்கால் மைல் தூரம்)

சாலையின் ஒரு புறம் பெரிய, அகலமான வாய்க்கால். அதை அடுத்து வயல்கள். சாலையின் மறுபுறம் பரந்த வெளியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று வயல்கள். நடுவில் ஓரிரு தென்னந்தோப்புகள். தூரத்தில் பழையாறும், புத்தேரியும் அச்சாலையும் தெரியும். முக்கால்மைல் சாலைக்கும் வயல்களுக்கும் இடைப்பட்ட ஓரத்தில் பூவரசு, வேம்பு, காட்டுச் செடிகள் மரங்கள் என்று பசுமையாக இருக்கும். வழியின் நடுவில் அரசமரத்தின் அடியில் மேடையில் எல்லை தெய்வம் மேலங்கோட்டு அம்மன். இந்த முக்கால்மைல் சாலையில் மேலங்கோட்டு அம்மனைக் கடந்ததும் வண்ணாக்குடி என்ற இடம். அங்கு வயல்களுக்கான சிறிய வாய்க்கால் இப்புறம் உள்ள பெரிய வாய்க்காலில் இருந்து சாலையின் அடி வழியாக ஓடும். பார்க்கவே ரம்மியமாக இருக்கும். பாட்டி சில சமயம் ஒழுகினசேரி பேருந்து நிறுத்தத்தின் எதிரிலேயே இருக்கும் திரையரங்கில் படம் பார்க்கப் போய்விடுவார். அதுவும் (கீதாக்காவுக்கு மிகவும் பிடித்த) ஜிவாஜி படம் என்றால் கண்டிப்பாகப் போய்விடுவார்! அப்படியான நேரங்களில் நான் இந்த வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் அளைந்துவிட்டுச் செல்வது வழக்கம். 

அப்படி சந்தை மிகவும் பிடித்துப் போன ஒன்றாகிய எனக்கு இங்கு பங்களூரில் இரு சந்தைகள் வீட்டருகில் என்றால் கேட்கவா வேண்டும்? 20 நிமிட நடையில் இருக்கும் கோகிலு க்ராஸில் ஞாயிறு தோறும் காலை முதல் இரவு வரை சந்தை. சண்டே சந்தை. மற்றொன்று தினசரிச் சந்தை.

 சண்டே சந்தை

இந்தச் சாலை முழுவதும் ஞாயிறு சந்தை காலையிலிருந்து, இரவு வரை. படத்தில் காலை வேளை என்பதால் கூட்டம் அதிகமாகத் தெரியா விட்டாலும் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகும் அதுவும் மாலையில் ரொம்பவே கூட்டம் இருக்கும். எனவே காலையில் 7.30மணி – 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுவதுண்டுமசாலா சாமான்கள் மற்றும் சமையலுக்குத் தேவையான மற்ற வெஞ்சன சாமான்களும் கிடைக்கிறது. எல்லா ஊர்களில் உள்ள சந்தை போலத்தான்


இது என்னவென்று தெரிகிறதா?!! சொல்லுங்கள். நான் என்னவென்று பதிலில் சொல்லுகிறேன்.

முந்தைய படத்தைக் க்ளிக்கிய போது உரிமையாளர் இந்தத் தாத்தாவை படம் எடுக்கச் சொன்னார். பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன் ஆனால் தொடரமுடியவில்லை. எனவே க்ளிக்கிக் கொண்டு வந்துவிட்டேன். (தாத்தாந்னு சொல்லிருக்கேன் பாருங்க! எதுக்குன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன!!!!!!!!! ஏஞ்சல் வந்தால் புரிந்து கொண்டுவிடுவார் சொல்லி கொஞ்சம் ஓட்டுவார்!!!ஹிஹிஹி இப்ப உங்களுக்கும் புரிஞ்சுருக்குமே!!!!!)

இந்த சைஸ் தேங்காய்களில் ஒன்றின் விலை ரூ 10

இந்த சைஸ் தேங்காய்களில் ஒன்றின் விலை ரூ 15.


 இந்த சைஸ் தேங்காய்களில் ஒன்றின் விலை ரூ 20.

கொத்தமல்லி கட்டுகள் அடுக்கி வைச்சுருக்காங்க பாருங்க. பார்த்ததுமே மனம் வாங்கிடத் துடிக்கும்!

வீட்டிற்கு வந்த மைத்துனர், மற்றொரு மைத்துனர் குடும்பத்தார் எல்லோரும் இரு சந்தைகளையும் பார்த்து காய்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. விலையும் குறைவாக இருக்கிறது அப்படியே அள்ளி வாங்கிக் கொண்டு போய்விடலாம் போல இருக்கு என்று சொல்லிக் கொண்டார்கள்!!!


தினசரிச் சந்தை


இங்கு வந்த புதிதில் சண்டே சந்தைக்குத்தான் முதலில் அறிமுகமானது. அப்புறம் இந்த தினசரிச்சந்தையைப் பார்த்து இங்கு செல்லத் தொடங்கியதும், இங்கு வீட்டில் குளிர்சாதனப்பெட்டி இன்னும் வைத்துக் கொள்ளாததால் இந்த தினசரிச் சந்தைக்கு வாரத்தில் இரு நாட்கள் செல்லத் தொடங்கிவிட்டேன் நடைப்பயிற்சிக்கு நடைப் பயிற்சி. சந்தையில் காய்களும், பழங்களும் வாங்கும் மகிழ்ச்சி. சந்தையின் அருகில் கூட்டமே இல்லாத இரு மிகவும் சிறிய கோயில்கள். வாசலில் இருந்தே சல்யூட் வைக்கலாம்!

வீட்டிலிருந்து 25 நிமிட நடையில் தினசரிச் சந்தை. ஞாயிறு சந்தையிலேயே விலை குறைவாக இருக்கும் என்றால் இந்த தினசரிச் சந்தையில் விலை அதையும் விடக் கொஞ்சம் குறைவுதான். ஒரு கிலோ கோஸ் 10 ரூபாய்தான். எல்லா காய்களுமே கிலோ 10லிருந்து 30க்குள்தான். பீன்ஸ் கிலோ ரூ 30. 25க்குக் கூடத் தருவார்கள். ஆனால் அரைக்கிலோ, கால்கிலோ வாங்கினால் கிலோ 30. இரண்டு பங்களூர் கத்தரிக்காய் ரூ 10 

சொல்ல மறந்துவிட்டேனே. மயங்கிடாதீங்க! விதையில்லா கறுப்பு திராட்சை 4 கிலோ ரூ50 தான்!!!!!! மீதி விஷயங்களை அடுத்த பதிவில் மாத்தலாடுறேன்! 

--------கீதா

112 கருத்துகள்:

 1. மத்தன், தடியன் என்றால் என்ன? அபுரி! சின்ன வயது என்றால் அலுப்பாக இருந்த இடம் இப்போது சுவாரஸ்யமாகி விடுகிறது... வயதாகிறது அல்லவே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை வாங்க ஸ்ரீராம் காலை வணக்கம்...

   மத்தங்காய் - மஞ்சள் பூஷணி

   தடியன் காய் - வெள்ளி பூஷணி தான் அது நீளமாக மிருதங்கம் போல் இருக்கும் மற்றொரு சைசை இளவன் என்று சொல்லுவதும் உண்டு

   ஆமாம் அப்போது அலுப்பாக இருந்தது ஆனால் அப்புறம் ஸ்வாரஸ்யமாகிவிட்டது...பொறுப்பு??!! ஹிஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  2. கீதா ரங்கன் பதிவை வாசிக்கும்போது ஸ்ரீராம், அவங்க மலையாள கல்சர் உள்ள இடத்தில் இருந்தவங்கன்னு புரிஞ்சுக்கணும். மத்தன் - பறங்கிக்காய். தடியன் காய்-பூசணி-வெண் பூசணி. கும்பளம்னும் சொல்வாங்க.

   நீக்கு
  3. //கல்சர் //
   ஆவ்வ்வ்வ் அது கல்சர் இல்ல கல்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா விடமாட்டேன் டமிலைப் பிழையா எழுத.. நாம ஆரு டமில்ல டி ஆக்கும் நேக்கு:))

   நீக்கு
  4. அதிரா... உங்கள் தகவலுக்காக

   ரொம்ப வருடங்களுக்கு முன்னால் ஒரு சர்ச்சை வந்தது. இந்தி, மற்ற மாநில மொழிகள் வளர்ச்சியுற்றவை, தமிழ் மிகவும் வளர்ச்சிபெறாத தேங்கிய மொழி என்று. காரணம், மற்ற இந்திய மொழிகளில் KA, KHA, GA, GHA என்பதுபோன்று உச்சரிப்புக்கு ஒவ்வொரு முக்கிய எழுத்துக்கும் நான்கு எழுத்துக்கள் இருக்கின்றன என்று.

   அப்போது அறிஞர்கள் எழுதியது,
   ஒரு மொழி வளர்ச்சி பெற்றது என்பதற்கு அடையாளம், எழுதுவதை வைத்து படிப்பவர்கள் சரியான உச்சரிப்புடன் சொல்வது. கடல், கடம் என்று வார்த்தைகளைப் பொறுத்து நாம் உச்சரிப்பது மாறும். அந்த தொன்மையான தமிழ் படிச்சவங்க, கல்சர் என்று எழுதையும் அல்சர் என்று எழுதுவதையும் ஒரே மாதிரிப் படிக்கமாட்டாங்க. 'ல்'க்கு அப்புறம் 'ச்' போடலாம், ஆனால் இலக்கணப்படி சரியா என்று சந்தேகம் வந்தது.

   நீக்கு
  5. ஹா ஹா ஹா தமிழ்ச்சொல் எனில்தான் நாங்க ல் க்கு அப்புறம் ச் போடக்கூடாது எனும் இலக்கணத்தைப் பேசோணும்:) இது ஆங்கிலீசில எழுதிப்போட்டு அதை ஜாமாளிக்க ல் க்குப் பிறகு ச் ஆம்ம்.. இப்பூடி ஓவரா இலக்கணத்தை எடுத்து விட்டால் அதிரா டக்கென ஓஃப் ஆகிடுவா எனும் தெக்கினிக்கு தானே கர்ர்ர்ர்:)) நேக்கு டமில்ல டி ஆக்கும்:) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊஊ:))

   நீக்கு
 2. முக்கால் மைல் நடக்கும் பாதை பற்றிய வர்ணனை அருமையாக இருக்கிறதே... சுகமாய் இருக்கும் அங்கு நடக்க... இப்பவும் அங்கு அப்படியே இருக்குமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம் முக்கா மைல் ரொம்ப அழகான பாதை. ஆனால் இப்போது பெரிய வாய்க்காலின் அப்புறம் இருந்த வயல்கள் எல்லாம் போய் வீடுகள் வந்துவிட்டன. அதற்கு ஏதோ ஒரு நகர் என்ற பெயரும் கூட வந்துவிட்டது...இப்புறம் இருந்த வயல்களும் அழிந்து வருகின்றன...வண்ணாக்குடி வழியாக நாலு வழிச் சாலை திருவனந்தபுரம் செல்லும் சாலையுடன் இணைந்து இன்னும் பல இணைப்புகள் என்று வருவதாக வேலைகள் நடப்பதாக அப்பா சொன்னார். மனம் ரொம்ப வேதனைப்பட்டுவிட்டது ஸ்ரீராம்...அனு சென்றிருந்த போதே இது வந்திருந்ததா என்று அனுவிடம் தான் கேட்கனும்...

   எங்கள் ஊர் பசுமை என்றால் பசுமை நீர் வயல்கள் தோப்புகள் சுற்றி இருக்கும் ஊர் ஸ்ரீராம். நான் இருந்தவரை அதன் பின்னும் கூட மிக மிக நன்றாக இருந்தது. இப்ப சமீபகாலமாகத்தான் மிகவும் மாறிவிட்டது...இன்னும் குளம் அழகாகவே இருக்கு.

   முக்கால் மைல் சாலையில் மரங்கள் எல்லாம் போய்விட்டது என்பதை அறிந்த என் மாமா இப்போது எங்கள் குடும்பத்திலும், ஊர் நண்பர்களிடமும் ரூபாய் கலெக்ட் செய்து எல்லோரும் சேர்ந்து மீண்டும் அங்கு சாலையின் இரு மருங்கிலும் மரம் நடலாம் என்று யோசனை செய்துவருகிறார். அப்பாவுக்கு பணத்தை அனுப்பி அப்பாவை பஞ்சாயத்து ப்ரெசிடெண்டியம் பேசச் சொல்லியிருக்கிறார்.

   என் யோசனை என்னவென்றால் இந்த நாலுவழிச் சாலை வருது என்றால் கண்டிப்பாக முக்கா மைல் சாலையில் சிமெண்டும் கற்களும் குவியும்...மரம் நட்டால் வராது. அடுத்து ப்ரெசிடென்ட் ஒத்துழைக்கனும். கட்சி பெயர் கூடாது....நாலு வழிச் சாலை வேலைகளை நாம் தடுக்க இயலாது இங்கிருந்து கொண்டு...ஆனால் ஊர் மக்களுமே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத போது நாம் இங்கிருந்து என்ன செய்ய முடியும்? ஸோ நான் மாமாவிடம் சொன்னது இந்த வேலைகள் முடிந்ததும் நடலாம் என்று...பார்ப்போம் என்ன ஆகிறது என்று...

   கீதா

   நீக்கு
 3. சண்டே சந்தைப் படங்கள் நன்றாயிருக்கின்றன. பசுபசு காய்கறிகள்! வியாபாலாரிகளிடம் பேச என்ன மொழி? திராட்சை விலை அவ்வளவு மலிந்ததேன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம் இங்கு சந்தை ரொம்ப நன்றாகவே இருக்கிறது. மக்களும் ஃப்ரென்ட்லியாக இருக்காங்க. மொழி தமிழ் புரிகிறது அவர்களுக்குக் கொஞ்சம். அப்புறம் காயைக் காட்டி விலை கேட்கிறேன். விலை கன்னடவில் கொஞ்சம் வித்தியாசப்படுத்திச் சொல்லுகிறார்கள் அவ்வளவுதான். நாம் இரண்டு என்று சொல்லுவது இரடு..பத்து - ஹட்டு (ப இங்கு ஹ..)..இருபது என்பதை டுவென்டி என்றுதான்சொல்லுகிறார்கள் முப்பதை மூவட்டு, நாற்பது - நாலவட்டு..இப்படி...

   திராட்சை விலை மலிந்தது ஏன் என்று தெரியலை...ஆனால் ரொம்ப நன்றாக இருந்தது.

   10 ருப்பாய்கு கறிவேப்பிலை, கொத்தமல்லி எல்லாம் நிறைய தருகிறார்கள். விசேஷமே நடத்திடலாம் அந்த அளவு...

   கீதா

   நீக்கு
 4. அடடே... சொல்ல மறந்துட்டேன்... குட்மார்னிங்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா எபில தான் சொல்லிடறோமே...இப்ப லேட்டாகிப் போச்சு ஸோ லேட் மார்னிங்க்!!! ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. ஆவ்வ்வ்வ்வ் மீயும் மீயும் டொல்ல மறந்துட்டேன்ன்ன் குட்டு மொன்னிங் கீத்ஸ்ஸ்:)..

   நீக்கு
 5. சந்தைக்குச் சென்றதெல்லாம் மதுரையோடு போச்சு. கும்பகோணத்தில் சில சமயம் கருவிலி செல்லும்போது காய்கள் வாங்கிச் சென்றதுண்டு. நம்ம ரங்க்ஸுக்குத் தான் இம்மாதிரியான இடங்களில் வாங்கும் ஆசை இன்னும் போகவில்லை. இப்போவும் இங்கே சாத்தாரத் தெரு சந்தையில் இருந்து தான் வாங்கி வரார். அதான் சொன்னேனே ஒரு காய் வாங்கினால் 3 நாளைக்கு வைச்சுக்கலாம் என! கொத்துமல்லிக் கட்டு இங்கேயே எங்க தெருவிலேயே அம்பாரமாகக் குவிச்சு வைப்பார்கள். இப்போக் கொஞ்சம் காய்கள் விலை மலிந்திருந்தாலும் சில காய்கள் 30 ரூ, 40 ரூ என விற்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதாக்கா நீங்க சொல்லுவீங்கனு தெரியும்...அதுவும் பதிவில் மாமா சந்தைக்குப் போவார்ன்னு சொல்லி ப்ராக்கெட்டில் எழுதியது வேர்டில் இருந்து காப்பி பண்ணி ப்ளாகரில் போடும் போது கட் பண்ணி எடிட் பண்ணி சேர்த்து வெட்டி எழுதியதில் விடுபட்டுருச்சு...

   ஆமாம் மாமா....காய் பத்தி பதிவுல சொல்லிருந்தீங்களே...

   இப்ப கொத்தமல்லி சீசனாச்சே...5 ரூபாய்க்கும் தராங்க ஆனா அதுவே நிறைய இருக்கு..

   ஆமாம் சில காய்கள் 30 போகுது...குறிப்பா வெண்டைக்காய்...40 போகுது..

   மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
 6. சென்னையில் அம்பத்தூரில் இருக்கும்போது ஒரு தரம் ரொம்ப ஆசைப்பட்டேன் எனக் கொத்தவால் சாவடி அழைத்துப் போனார். ஏன் போனோம் என்று ஆகி விட்டது. அதே போல் கொத்தவால் சாவடியை மூடிவிட்டுக் கோயம்பேடு ஆரம்பிச்சதும் அங்கேயும் ஒரு முறை போய் வந்தோம். காய்களைச் செலவு செய்ய முடியலை. மதுரையில் மேலாவணி மூல வீதியில் இருந்து வடக்காவணி மூல வீதி திரும்பினால் தெருக்கடைசியில் சென்ட்ரல் மார்க்கெட் இருந்தது. மல்லிகைப்பூ, முல்லைப்பூ வகைகளில் இருந்து எல்லாமும் அங்கே வாங்கிடலாம். அங்கே தான் உருளைக்கிழங்கு சாயபுவும் இருந்தார். குழந்தைகளுக்கு வைத்தியம் பார்ப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோயம்பேடு நானும் போயிருக்கிறேன் ஓரிருதடவைதான். மாமியார் வீட்டிற்காக. அப்புறம் தரமணியில் வந்தப்புறம் திருவான்மியூர் மார்க்கெட்...அங்கு 10 ரூபாய்க்குப் பாக்கெட்டில் போட்டு தருவாங்க. அதுவே கணிசமாக இருக்கும் அப்புறம் தாம்பரத்திலிருந்து ரொம்பவே மலிவாக வாங்கிவந்து ஃப்ரிட்ஜ் இருந்ததால் ஈசியாக இருந்தது.

   இப்ப பார்த்துதான் வாங்குகிறேன்..

   கீதா

   நீக்கு
 7. திராக்ஷை பெட்டியோடு பத்து ரூ, இருபது ரூபாய்க்கு வாங்கிய காலம் உண்டு. இப்போ இங்கே திராக்ஷையே அவ்வளவாக் கண்களில் படறது இல்லை. கொட்டையில்லாப் பச்சை திராக்ஷை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திராட்சை பெட்டியோடு 10ரூ ஆஹா ரொம்பக் காலம் முன்னரோ?!..

   சென்னையில் கொட்டையில்லா பச்சை திராட்சை , கறுப்பு திராட்சை வாங்கியதுண்டு.

   நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
  2. கீசாக்கா சீட்லெஸ் திராட்சை நல்லதில்லையாம், சீட்டுடன் வரும் குட்டிக் குட்டி ஊர்த்டிராட்சை வாங்கி சீட்டையும் இடைக்கிடை கட்சிச்சுச் சாப்பிடட்டாம்ம் அதில எவ்வளவோ மருத்துவக் குணங்கள் இருக்காம்.

   நீக்கு
  3. //சீட்டுடன் வரும்// - வாங்க டமில் 'டி' அதிரா. இது என்ன ப்ளேயிங் கார்டா?

   நீக்கு
  4. ஹா ஹா ஹா கர்ர்ர்:) அது நான் சீற்.. இப்பூடித்தான் எழுதுவேன்.. இப்போ சென்னை செந்தமிழும் கலந்துவிட்டமையால அது ட் ஆகுது பல சமயம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
 8. வணக்கம் சகோதரி

  காய்கறிகள் புதிதாக வாங்கி சமையல் செய்தால் அதன் சிறப்பே தனிதான். சென்னையில் இருக்கும் போது "தண்ணீர் துறை மார்கெட்" என்றொரு சந்தையில்தான் அவ்வப்போது காய்கள் வாங்கினோம். திருமங்கலத்தில் சந்தை இருந்தது. இங்கும் மாலையில் தள்ளு வண்டிகளில் ஓரம் கட்டி காய்கறிகள் விற்பனை நடக்கிறது. நீங்கள் எழுதியவைகளை மேலோட்டமாக படித்தேன். சந்தையை பற்றி மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள். கொஞ்ச நேரத்தில், (நேரம் கிடைக்கும் ஒரு அவகாசத்தில்) விரிவாக படித்து விட்டு பின் வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலாக்கா....தண்ணீர் துறை மார்க்கெட்...அட பெயரே வித்தியாசமாக இருக்கே சென்னையில் இது எங்கு?

   ஆமாம் அக்கா இங்கும் தள்ளுவண்டியில் ஓரம் கட்டி அல்லது மாலையில் கோணி விரித்து அதில் போட்டு தெருவிலேயே விற்கிறார்கள்...

   மெதுவா வாங்கக்கா...அவசரமே இல்லை..

   மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
 9. சிறுவயதில் சிரமப்பட்டாலும், இன்றும் என்றும் இனிய நினைவுகளை வாரி வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறதல்லவா?

  பதிலளிநீக்கு
 10. 20 ₹ தேங்காய் தேவகோட்டையில் 30 ₹ விற்கிறது. படங்கள் ஸூப்பர்

  தேவகோட்டையில் ஞாயிறு சந்தை, மற்றும் வேறு இடத்தில் தினசரி சந்தையும் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதென்ன செல்லில் இட்ட கருத்துரையில் கணினியில் பாதி மட்டுமே தெரிகிறது ?

   நீக்கு
  2. 20 ₹ தேங்காய் தேவகோட்டையில் 30 ₹ விற்கிறது. படங்கள் ஸூப்பர்

   நீக்கு
  3. 20 ரூ தேங்காய் தேவகோட்டையில் 30 ரூ விற்கிறது. படங்கள் ஸூப்பர்

   நீக்கு
  4. அதாவது ரூபாயில் சிம்பிளை செல்வழி கொடுத்த காரணத்தால் அந்தப்பகுதி முழுவதும் தெரியவில்லை ஆனால் எழுத்து இருக்கிறது மௌஸ் வைத்து ப்பார்த்தால் தெரிகிறது.

   நீக்கு
  5. கில்லர்ஜி... இப்போவாவது ஒத்துக்கொள்ளுங்கள். தேவகோட்டையை விட நல்ல ஊர்கள், மக்களின் கஷ்டம் தெரிந்த ஊர்கள், மற்றவர்களுக்கு முடிந்த வரையில் குறைந்த விலையில் பொருட்களை விற்கணும் என்ற நல்ல மனம் படைத்தவர்கள், மற்ற ஊர்களில் உண்டு. ஒரு பாயிண்ட் பிடித்துவிட்டேனா? ஹா ஹா ஹா.

   நீக்கு
  6. கில்லர்ஜி இந்த ரெண்டு வரிகள் தானே திரும்பத் திரும்ப வந்துள்ள்து...கணினியில்தான் பார்க்கிறேன்...கருத்தும் கொடுக்கிறேன்.

   ஜி எல்லா ஊர்களிலும் சந்தைகள் உண்டு...இருக்கும்....

   இங்கு 25, 30 ரூ தேங்காய் நல்ல பெரிதாக இருக்கிறது. பூ அடர்த்தியாகவும் இருக்கு

   மிக்க நன்றி கில்லர்ஜி.

   கீதா

   நீக்கு
  7. நெல்லை ஹா ஹா ஹா ஹா ஹா...சரியா பாயின்ட் பிடிச்சீங்க ஹா ஹா..அதானே குறைந்த விலையில் பொருட்கள் விக்கனுனு மக்கள் இருக்காங்க...இங்க எங்க பகுதில இருக்கற மக்களும் சாதாரண மக்கள்...கொஞ்சம் பணக்காரர்களும் இருந்தாலும்....மக்கள் சாதாரண மக்கள். கிராமத்து மக்கள்...அதனாலேயே இங்கு விலையும் அந்த எக்கானமிக்கு ஏற்றாற்போல இருக்கு...

   எனக்கு இந்த ஏரியா ரொம்பவே பிடித்திருக்கிறது. டவுனுக்கு நடந்தே போய்விடலாம். அழகான ஆஞ்சு கோயில் டவுனில் இருக்கு...அப்புறம் 5 னிமிட நடையில் பிள்ளையார் கோயில் அழகான கோயில் கூட்டமே இல்லாத கோயில் இருக்கு...நம்ம பொருளாதாரத்துக்கும் ஏற்றாற்போல இருக்கு...

   கீதா

   நீக்கு
  8. நெல்லைத்தமிழருக்கு...

   தேவகோட்டை வியாபாரிகளை வாழவைக்கின்ற ஊர் என்று அர்த்தம்

   நீக்கு
  9. தேவகோட்டை தான் நியூயோர்க் ஆச்சே.. அப்போ விலை அதிகமாகத்தானே இருக்கும்ங்...றேன்ன்ன்ன்ன்ன்ன்:)..

   நீக்கு
 11. இவ்வாறாக சந்தைக்குச் செல்வது வித்தியாசமான அனுபவம். நமக்குத் தேவையான பொருள்களை, குறைவான விலையில் தேர்ந்தெடுக்க இது போன்ற சந்தைகள் உதவுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. மிக்க நன்றி கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 12. நான் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டும் தேடிப்பாத்துட்டேன். படங்களில் வாழைக்காய், செளசெள, பூசனி படங்கள் இல்லை.

  நம்ம ஊர் வயலெட் வரி கத்திரிக்காயைவிட, பசுமையா இருக்கற வரி கத்தரிக்காய் இங்கு (பெங்களூரில்) நல்லா இருக்கு.

  எனக்கும் நானே போய் காய்கறி வாங்கிவருவதுதான் ஆதி காலத்திலிருந்தே பிடிக்கும். பசங்களுக்கும் சின்ன வயசுல எந்தக் காய் எப்படிப் பார்த்து வாங்கணும், பேரம் பேசுறது எப்படி என்றெல்லாம் கத்துக்கொடுத்தேன் (எந்தக் கடைக்குப் போனாலும், எந்தப் பொருள் வாங்கப் போறோமோ அந்தப் பொருளுக்கு விலை கேட்கக்கூடாது, அதை வாங்கும் இண்டெரெஸ் இருக்குன்னும் காமிக்கக்கூடாது. மற்றப் பொருட்களைப் பார்த்து கேட்டுவிட்டு அப்புறம் இதைக் கேட்கும்போது சரியான அல்லது குறைவான விலை சொல்லுவான் என்றெல்லாம்). இங்கு நேற்று நான் கடையில்போய் காய் வாங்கிவந்தேன். எல்லாம் கிலோ 40 ரூபாய் (பீட்ரூட், கத்தரி, பூசணி). வாழைக்காய் கிலோ 60 மோர் சூப்பர் மார்கெட்டில், ஆனால் கடைகளில் 1 வாழை 10 ரூபாய். ஒரு பில்டிங் தள்ளி இருக்கும் மோர் சூப்பர் மார்கெட்டில், கருவேப்பிலை, கொத்தமல்லி ஒரு கட்டு 1 ரூபாய்தான். அதை மட்டும் அங்கே வாங்கிவிடுவேன்.

  சந்தையைப் பார்க்கும்போது எனக்கும் அந்த மாதிரி இடங்களுக்குச் சென்றுதான் வாங்கணும்னு ஆசையா இருக்கு. பஹ்ரைன்ல அந்த மாதிரி சந்தைலதான் அனேகமா காய்கறிகள் பழங்கள் வாங்குவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///நான் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டும் தேடிப்பாத்துட்டேன். படங்களில் வாழைக்காய், சௌ சௌ, பூசணி படங்கள் இல்லை///

   கண்ணில் விளக்கெண்ணை விட்டால் அப்புறம் எப்படி தெளிவாக தெரியும் ?

   நீக்கு
  2. கில்லர்ஜி... சொல்ல விட்டுப்போய்விட்டது. துபாயில் 94களில் ஹமாரியா காய்கறிச் சந்தை (அப்போ 1/2 மணி நடை தூரத்தில் இருந்தது) போய்த்தான் காய்கறி வாங்கிவருவேன். திருமணமான புதிதில் என் மனைவியை அப்படி அழைத்துக்கொண்டுபோனேன். வரும்போது டாக்சில போலாம்னா. பேசிக்கிட்டே நடத்திக் கூட்டிக்கிட்டு வந்துட்டேன்.3-5 திர்ஹாம் இருந்திருக்கும் டாக்சி காசு.

   நீக்கு
  3. நான் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டும் தேடிப்பாத்துட்டேன். படங்களில் வாழைக்காய், செளசெள, பூசனி படங்கள் இல்லை.//

   நெல்லை எல்லாமே இருக்கு. அதுவும் சௌ சௌ 2 10 ரூபாய். பூசணி இரு வகைகளும் நிறைய வாங்கியாச்சு இங்கு வந்து அதுவும் கிட்டத்தட்ட 1/2 கிலோ வரும் பெரிய துண்டு 10 ரூபாய்தான். வாழைக்காய் இருவர் சாப்பிடும் அளவு பெரியது 5 ரூபாய்...நான் எல்லாம் படம் எடுக்க முடியவில்லை நெல்லை. இதுவே ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் எடுத்தேன்.

   ஆமாம் பசுமை வரிக் கத்தரிக்காய் நன்றாகவே இருக்கு. ஆனால் வயலெட் வரிக்கத்தரிக்காய் வாங்குவதில்லை. பயோடெக் காய் என்று சொல்லப்படுவதால். இங்கு சின்ன கத்தரி, நீளக்கத்தரி, பச்சை நீளம் எல்லாம் கிடைக்கிறது.

   கீதா

   நீக்கு
  4. எனக்கும் நானே போய் காய்கறி வாங்கிவருவதுதான் ஆதி காலத்திலிருந்தே பிடிக்கும். பசங்களுக்கும் சின்ன வயசுல எந்தக் காய் எப்படிப் பார்த்து வாங்கணும்,//

   ஹைஃபைவ் நெல்லை. இரு வரிகளுக்கும்...நானும் மகனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கேன்.

   பேரம் மட்டும் சந்தையில் பேசுவதில்லை. மோர், பழமுதிர் நிலையம் போன்றவற்றில் நாம் பேச முடியுமா? இங்குசந்தையில் உள்ளவர்கள் மிகவும் சாதாரண நிலை மக்கள் இல்லையா...அதுவும் அவங்க சொல்லுற விலையே ரொம்ப கம்மிதான். அதுவும் பசுமைஅய ஃப்ரிட்ஜ் எல்லாம் வைக்காத காய்கள்....பாவம் இவங்க...கூடியவரை நான் பெரிய கடைகளைத் தவிர்த்து இப்படியான மக்களிடம் வாங்கினால் அவங்க பொருளாதாரத்துக்கு நாம் உதவியது போல இருக்குமே. நம்மால் இப்ப வேறுவகையில் உதவ முடியாதே...அதனால்...கூடியவரை இப்படியான மக்களிடம் நான் வாங்குவதுதுண்டு...

   வாழைத்தண்டு இரண்டு நாட்களுக்கு வரும் அளவு பெரிதாக 4, 5 பேர் சாப்பிடலாம்...ரூ 10

   மிக்க நன்றி நெல்லை...

   கீதா

   நீக்கு
  5. கண்ணில் விளக்கெண்ணை விட்டால் அப்புறம் எப்படி தெளிவாக தெரியும் ?//

   அதானே அப்பூடிச் சொல்லுங்க கில்லர்ஜி!!!

   கீதா

   நீக்கு
  6. நெல்லை அடுத்த முறைபோகும் போது பூஷணி, சௌ சௌ, வாழைக்காய் எல்லாம் முடிந்தால் படம் எடுத்து வருகிறேன்.

   வித்தியாசமான சைசில் சுரைக்காய் கிடைத்தது ஒரு முறை வாங்கினேன். அதன் படம் எல்லாம் அடுத்த பதிவில் போடுகிறேன்...

   அப்புறம் மொச்சை, அவரை, துவரை, பட்டாணி எல்லாம் கிடைக்கிறது. பட்டாணி கிலோ 20. மற்றவை இன்னும் இந்த தினசரிச் சந்தையில் கேட்கலை.

   சண்டே சந்தையில் மொச்சை அவரை துவரை எல்லாம் வாங்கினேன்..உரிக்காதது கிலோ 40 என்று...இப்போது இன்னும் விலை குறைந்திருக்கும்....தினசரிச்சந்தையில் கேட்கனும்

   கீதா

   நீக்கு
  7. //
   நெல்லைத் தமிழன்24 டிசம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 10:17
   நான் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டும் தேடிப்பாத்துட்டேன்.//

   அல்லோஒ நெ.தமிழன்.. நீங்க பிறக்கும்போதே உங்களுக்கு கண்ணில விளக்கெண்ணெய் இருக்குது:)) பிறகெதுக்கு எக்ஸ்டாவா ஊத்துறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:).

   நீக்கு
  8. பரவால்ல அதிரா....நெல்லை ஊத்தட்டும் அப்படியாவது கருப்பு திராட்சை கண்ணுல படுதான்னு பார்ப்போம் ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  9. வெள்ளையைத்தேடித்தான் மக்கள் போவாங்க.. இது கருப்புக்கு இவ்ளோ மவுசா.. ஹையோ மீ திராட்சையைத்தான் ஜொன்னேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

   நீக்கு
  10. //வெள்ளையைத்தேடித்தான் மக்கள் போவாங்க.// - ஆனா அதிராவுக்கு மட்டும் எம்ஜியார் பிடிக்காது. (நான் அவரை நான் +2 படிக்கும்போது அதவாது 12ம் வகுப்பு, பார்த்திருக்கிறேன். என்ன நிறம்... அது வெண்மை இல்லை. வெண்மைல வந்த சிகப்பு.

   நீக்கு
 13. கறுப்பு திராட்சையா? எனக்கு இங்க கண்ணுல படலையே.

  நான் நிறைய பழங்கள் வாங்குவேன். நீங்க சொன்னப்பறம் இப்போ கருப்பு திராட்சை வேட்டைல இறங்கணும். இவ்வளவு விலை மலிவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருப்பு திராட்சை இங்கு சந்தையிலும் இருக்கு....மற்றொரு பெரிய கடையின் வாசலிலும் இருக்கும் கடையிலும் இருக்கு. சீட்லெஸ் பச்சையும் இருக்கு....இந்தக் கடையில் விலை ரொம்பவே கூடுதல். எனவே சந்தையில்தான்...

   திரும்பத் திரும்பக் கேட்டோம் நாங்கள் சரி நம்ம மொழி அவர் மொழி புரியாமல் நாம் தான் தப்பா புரிஞ்சுக்கறமோ என்று கை விரல் 4 காமித்து அவ்வளவுதானா என்றும் கேட்டோம்....இந்த வாரம் போகும் போது மீண்டும் கேட்டு வரேன்...அந்த விலை அன்றைய ஒரு நாள் விலையோ என்னவோ தெரியலை...

   கீதா

   நீக்கு
  2. //நெல்லைத் தமிழன்24 டிசம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 10:18
   கறுப்பு திராட்சையா? எனக்கு இங்க கண்ணுல படலையே.//

   இதென்ன புதுக்கதை.. கறுப்புத்திராட்சைதானே எங்கள் நாடுகளில் அதிகம்..

   நீக்கு
  3. அதிரா... நான் ஃப்ரான்ஸில் சாப்பிட்ட கறுப்பு திராட்சை, தாய்வான்ல சாப்பிட்ட பெரிய பன்னீர் திராட்சை - இதுக்கு இணையா எங்கயுமே சாப்பிட்டதில்லை. லண்டன்ல ஆப்பிள் நல்லாருக்கும். மற்றபடி அங்கெல்லாம் 'கறுப்பு திராட்சை' விளைவிக்கிறாங்க?

   நீக்கு
  4. அதிரா ஒன்னு நோட் பண்ணலியோ?!!! நெல்லை கண்ணுல விளக்கெண்ணை போட்டு பார்த்தும்/நீங்க சொன்னது பிறவியிலேயேன்னு ஆனால் பாருங்க அப்படி இருந்தும் கருப்பு திராட்சை கண்ணிலேயே படலைனு சொல்லிருக்கார் பாருங்கோ...ஹா ஹா ஹா ஹ ஹா

   கீதா

   நீக்கு
 14. எழுத்து என் கிராம வாழ்க்கையை நினைவுபடுத்தியது. நான் 3வது படிக்கும்போது, ஒரு வாழைக்காய் 3 பைசா. ஒரு கூறு (300 கிராம் இருக்குமா?) வெண்டை, கத்தரிலாம் 7 பைசா (எங்க அப்பா கணக்கு நோட்டுல எழுதிவச்சிருந்தார்). ஒரு பெரிய பலாபழம் (1 1/2 அடி நீளம், 1 அடி உயரம்) 3 ரூபாய் (73ல).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ!! அப்ப விலை அவ்வளவுதானே நெல்லை...எங்கள் ஊர் பஸ் டிக்கெட் விலை 10 பைசா...ஆனா அதுக்கே வீட்டில தரமாட்டாங்க...ஆனாலும் அந்தப் பொருளாதாரம் கொடுத்த செழிப்பு இப்ப இல்லைன்னே தோனுது....

   கீதா

   நீக்கு
  2. அந்நாளில் வருமானமும் அப்படித்தானே இருந்திருக்கும்.. இப்போ போல லட்சக்கணக்கிலயா இருந்திருக்கும்.. ச்ச்ச்சும்மாஆஆஆஆஅ எப்ப பார்த்தாலும் அந்த நாள்ல அந்த நாள்ல என புராணம் பாடிக்கொண்டு கர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  3. ஆமாம் ஆனால் அதிரா ஒன்னு சொல்லுறேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த நாள் நு சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா சொல்லலை...உண்மையிலேயே அந்த அனுபவங்கள் செமையா இருக்கும்...எனக்கு இப்போதைய லைஃப் பிடித்திருக்கு என்றே சொல்லுவேன்.

   ஆனால் பாருங்க பொருளாதாரத்தில் ஒன்னு எப்பவும் சொல்லுவதுண்டு....கையில் சொற்ப பணம் ஆனால் கூடை நிறைய பொருட்கள். கையில் நிறைய பணம் ஆனால் கூடையில் கொஞ்சமே கொஞ்சம் தான் பொருட்கள் அப்படித்தான்...இப்போது பண வீக்கம் மிக அதிகம் அதிரா...

   கீதா

   நீக்கு
 15. தேங்காயைப் பார்த்து அதன் சைஸை புரிஞ்சிக்க முடியாது. பக்கத்துல ஏதாவது கம்பேர் பண்ண ஒன்றை வைக்கணும். நான் மோர் சூப்பர் மார்கெட்டில் 26 ரூபாய்க்கு வாங்கினேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ படத்தைப் பார்த்தா தெரியாதுன்னு சொல்லறீங்க இல்லையா...ம்ம்ம் 10 ரூபாய் தேங்காயே நல்ல அடர்த்தியா இருந்துது நெல்லை...ஒரு மூடி பூ ரெண்டு பில்ஸ்பரி டம்ப்ளர் (பில்ஸ்பரிபேக்கட் எப்பவோ வாங்கினப்ப அதுக்கு ஒரு டம்ப்ளர் கொடுத்தாங்க..அந்த டம்ப்ளர்) வந்துச்சு...இங்கயும் டவுன்ல மோர் சூப்பர் மார்க்கெட் இருக்கு...ஆனா அங்க போல...

   கீதா

   நீக்கு
  2. //நான் மோர் சூப்பர் மார்கெட்டில்//
   இது டெல்லியில் எல்லோ இருக்கு.. மோடி அங்கிள் வீட்டுக்குப் பக்கத்தில:))

   நீக்கு
 16. மத்தன், தடியன் என்று படித்ததும், ‘ஓ.. அந்தக்கால நம்பூதிரிபாடு கேரள மக்கள்நல அரசு, பெண்கள் தனியாக காய்கறிவாங்கப்போகும்போது, பாதுகாப்புக்காக அரசு செலவில் அனுப்பிய பாதுகாவலர்களின் பெயர்களாக இருக்குமோ என்று நினைத்தேன்.. பிரமித்தேன்..இதைப்பற்றியே சிந்தித்து நின்றுவிட்டதால், சந்தைக்குள் இன்னும் நுழையவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா....மத்தங்காய், தடியங்காய் என்று எழுதி அப்புறம் வீட்டில் சொல்லுவது போலவே மத்தன், தடியன் என்று வேண்டுமென்றே தான் எழுதினேன்...

   மெதுவா சந்தைக்குள்ள நுழைஞ்சுக்கோங்க....

   மிக்க நன்றி அண்ணா...

   கீதா

   நீக்கு
 17. பின்னூட்டம் எழுதியவர்கள் யாருமே "இது என்ன" என்ற கேள்விக்கு பதில் எழுத வில்லை. அது பாக்கு தானே?
  Jayakumar​​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கஓ ஜேகே அண்ணா....ஆமாம் இது வரை...யாருமே இது என்ன என்ற கேள்விக்கு சொல்லவே இல்லை...நானே யாருமே சொல்லைலையேன்னுசொல்லனுன்னு நினைச்சிருந்தேன்...

   ஆமாம் நீங்க சொன்னதேதான்!! பாக்குதான்

   மிக்க நன்றி அண்ணா வந்து கருத்திட்டமைக்கு..

   அண்ணா நான் இன்னும் நீங்க கேட்ட ஒன்றை பதிவா போடவே இல்லை...வழுதலைஞ்ஞா தொக்கு....அது ஒரு ஆந்திரா ரெசிப்பி...நான் பல முறை செய்தும் புகைப்படம் எடுக்க முடியலை...அதான் எபி க்கும் திங்க பதிவுக்கு அனுப்ப முடியலை. நினைவில் வைச்சுருக்கேன் வாய்ப்பு கிடைக்கும் போது ஃபோட்டோவும் எடுத்து எபி க்கு அனுப்பிடறேன்....ஒவ்வொரு முறை இதைச் செய்யும் போதும் ஓ ஜேகே அண்ணா கூட கேட்டிருந்தாரேன்னு நினைச்சுக்குவேன்...கண்டிப்பா எபி திங்கல வரும்...அண்ணா

   மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
  2. அதுதான் இன்று பைங்கண் பர்தா ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.
   Jayakumar

   நீக்கு
  3. ஹாஅ ஹா ஹா ஹா ஜேகே அண்ணா...இருக்கலாம் எபி கிச்சன்ல நுழஞ்சு அங்க கத்தரிக்காய் பார்த்ததும் பானுக்கா செஞ்சுட்டாங்க..ஆனா பானுக்கா செஞ்சது பெரிய குண்டுக்கத்த்ரிக்காய் நான் சொன்ன ரெசிப்பி வழுதலைஞ்ஞா...

   கீதா

   நீக்கு
 18. எனக்கு இந்த காய்கறி விலை எல்லாம்தெரியாது எல்லாமே மனவி பொறுப்பு திருச்சியில் உழவர் சந்தை கேட்டதுண்டுமிடில் மென் இல்லாமலேயெ விற்பனை என்று சொல்வார்கள் நானிருக்கும் இடத்தில் சந்தை ஏதும் இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார் உங்கள் ஏரியாவில் சந்தை இல்லை...பாண்டியிலும் கூட உழவர் சந்தை உண்டு....சென்னையில் கூடக் கேள்விப்பட்டதுண்டு...

   மிக்க நன்றி சார் கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 19. எங்க ஊரில் இப்படி சந்தை கிடையாது. ஆனா, என் அப்பாவின் பூர்வீக ஊரில் சின்ன வயசில் சந்தை பார்த்திருக்கேன். மிகப்பெரிய மாட்டுசந்தை அங்க நடக்கும். கூடவே தாவர விதைகள்ல இருந்து கருவாடு வரை எல்லாமே கிடைக்கும். சென்னை பல்லாவரம்ல இப்படி ஒரு சந்தை வெள்ளிக்கிழமைகளில் நடக்குதாம். ஃப்ரிட்ஜ் முதற்கொண்டு மண்பானை வரை எல்லாமே கிடைக்குதுன்னு கேள்வி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவாக ஊர்களில் சந்தை இருக்குமே...

   ஆமாம் சந்தையில் கருவாடு முதல் எல்லாமே கிடைக்கும்....பூ, வெத்தலை....முறம் அறுவாள்மனை, கத்தி, வெட்டுக்கத்தி பேக்ஸ், மண் பானை சட்டிகள் விசிறி, எல்லாமே கிடைக்கும் தான்..

   கீதா

   நீக்கு
 20. வணக்கம் சகோதரி

  நீங்கள் சந்தைக்கு சென்றுவிட்டு பசுமை படர்ந்த இடங்களை ரசித்தபடி வந்த நினைவுகள் படிக்க மிக நன்றாக உள்ளது. உண்மையிலேயே, செல்லும் போது "ஏண்டாப்பா"என்று போரடித்தாலும், சுமைகளை சுமந்து கொண்டு இருபக்கமும் பச்சை பசேலென இருக்கும் வயல்கள், மரங்களின் நிழல்கள் என ரசித்தபடி கூட வரும் உறவுகளுடன் அளவளாவியபடியும் வருவது மிகவும் ரம்மியமாக இருக்கும். அப்போது சுமைகள் கூட சுகமானதாக தெரியும். பிறந்த வீட்டில் தி. லி யில் இருக்கும் போது எப்பவாவது கிடைத்த மலரும் நினைவுகளை கிளறி விட்டது.

  சென்னையில், மயிலாப்பூர் லஸ்ஸில் நாங்கள் குடியிருந்த இடத்துக்கு அருகில்தான் அந்த தண்ணி துறை மார்கெட் இருந்தது. இப்போ இருக்கான்னு தெரியவில்லை.

  தற்சமயம் தாங்கள் இருக்கும் இடத்தில் சந்தையில் காய்கறிகளின் விலை குறைவாக உள்ளது. பச்சை பசேலெனவும் உள்ளது. தேங்காய்கள் மிகவும் மலிவாக இருக்கிறது. படங்களை பார்க்கும் போதே காய்கறிகள் வாங்கும் ஆசை வருகிறது. பகிர்வுக்கு நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மயிலாப்பூர் லஸ்ஸில் இப்போது அப்படிச் சந்தை இருப்பதாகத் தெரியலை கமலாக்கா...ஓ அதுதான் தண்ணி துறை மார்க்கெட்டா...வல்லிம்மாவுக்குத் தெரிஞ்சுருக்கலாம்...

   நீங்களும் தி லியில் கிடைத்த அனுபவங்களை எழுதுங்க அக்கா...

   ஆமாம் அக்கா இங்கு பொருட்களின் விலை குறைவாகத்தான் இருக்கு...மிக்க நன்றி அக்கா...

   கீதா

   நீக்கு
 21. //சண்டே சந்தை -- தினசரிச் சந்தை//

  சண்டே சந்தை - சந்தைச் சண்டை... இப்பூடித்தான் தலைப்புப் போட்டிருக்கோணுமாக்கும்:).. எதுகை-மோனை:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஹா....எனக்கும் சண்டே சந்தை சண்டை என்று தலைப்பு தோணிச்சு...அது ஒரு பதிவுக்கு வைச்சுட்டேன் அதனால இங்கு இப்படிப் போட்டுவிட்டேன்...அதிரா...மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
 22. //சந்தை அருகில் இருந்தால் கண்டிப்பாகச் சந்தையில்தான் காய்கறி வாங்குவதும் வழக்கமாகிவிட்டது.//

  ஆவ்வ்வ்வ் கீதா உண்மையைச் சொன்னல்.. எனக்கும் இதுதான் ரொம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும் ஆனா ஒரு காலத்ஹிலும் அப்படி அமையவில்லை:).. இனியாவது அமையுதோ பார்க்கலாம்.. எனக்க்கு மோல்களுக்கு சிட்டிக்குள் சுற்றித்திரிவது பெரிசா பிடிக்காது, ஆனா இப்படி மார்க்கட்டுக்குள் சுற்றுவது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும்... நான் யூ ரியூப்பில் இப்படி மார்கட்டுகள் தேடிப் பார்ப்பேன்ன்.. தாய்வான் சைனா அஃப்றிக்கா எல்லாம்.. பார்க்கவே ஆசையா இருக்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்க்கு மோல்களுக்கு சிட்டிக்குள் சுற்றித்திரிவது பெரிசா பிடிக்காது, ஆனா இப்படி மார்க்கட்டுக்குள் சுற்றுவது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும்... //

   ஹைஃபைவ் ஹைஃபைவ் அதிரா!! எனக்கும் அப்பூடித்தான்...சந்தை என்றால் பல ஸ்வாரஸ்யங்கள் இல்லையா. இலங்கையில் இருந்தப்ப இருந்திருக்குமே இல்லையா அதிரா?

   இப்ப அங்கு ஸ்காட்டில் ஃபார்மர்ஸ் மார்க்கெட் இருக்குமே!!! அம்பேரிக்காவில் ஃபார்மர்ஸ் மார்க்கெட் உண்டு அப்புறம் கார்ன் வயல் அல்லது காய்/பழத் தோட்டங்களில் இறங்கிப் போய் 5 டாலர் கொடுத்துவிட்டு ஒரு பை கொண்டு சென்று எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் உண்டு....சிலர் குடும்பம் குடும்பமாகச்சேர்ந்து போய் வாங்கிக் கொண்டு வந்து பழம் என்றால் ப்ரிசெர்வ் எல்லாம் போட்டு வைத்துக் கொள்வார்கள்.

   ஆமாம் தாய்வான், சைனா,,,,ஒரு வகை என்றால் ஆஃபிரிக்கா ரொம்ப நன்றாகவே இருக்கும் எத்தியோப்பியாவில் ரொம்ப நன்றாக இருக்கும் அங்கு மண் வளம் வெகு அருமையாக இருக்குமாம். பொருட்களும் நல்ல தரமாக இருக்குமாம்...நிலக்கடலை பீன்ச் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கும்.....அதிரா....சரி சீக்கிரம் பேக் பண்ணுங்க..ஃப்ளைட் ரெடியா காத்திட்டுருக்கு பாருங்கோ....சீக்கிரம் வாங்க போய் வரலாம்...

   கீதா

   நீக்கு
  2. மார்கட் எனும் சுப்பமார்கட் இருக்குதுதானே கீதா, நான் சொல்வது அங்கிருப்பதைப்போல பரந்த வெளியில் குமிச்சு குமிச்சு வைத்திருப்பது... இங்கு எல்லாம் பக்கட்டிலதான் அதிகம் இருக்கும்.

   நான் ரெடீஈஈஈஈஈ பைலட் எங்கேஏஏஏஏஏஏ?:)

   நீக்கு
  3. நான் சொன்னதும் பரந்த வெளி மார்க்கெட் பத்தித்தான்...

   நாமதான் பைலட் பூஸார்!! வாங்க பறப்போம்....ட்ராஃபிக்ல கார் ஓட்டும் போது வெத்து வெளில ப்ளேனா ஓட்ட முடியாது ஹிஹிஹிஹிஹி...

   கீதா

   நீக்கு
 23. //அதுவும் கண்டிப்பாக மத்தன், தடியன் எல்லாம் உண்டு. பாட்டி முழு தடியன்தான் வாங்குவார்.//

  தடியன் என்றால் முருங்கக்காயோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை அதிரா ஸ்ரீராமுக்குச் சொல்லிருக்கேன் பாருங்க தடியன் - தடியங்காய்/வெள்ளைப் பூஷணிக்காய் ஒரு வெரைட்டி. மத்தன் மஞ்ச பூஷணிக்காய்...

   மிக்க நன்றி அதிரா..

   கீதா

   நீக்கு
 24. பாட்டி உங்களை ரொம்பவும்ம்ம்ம்தான் கஸ்டப்படுத்தி இருக்கிறா:)).. ஆனா அதனாலதான் நீங்க பதப்படுத்தப்/பண்படுத்தப் பட்டிருக்கிறீங்க ஹா ஹா ஹா.. அனுபவம்தானே வாழ்க்கை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹ ஹா ஹா ஆமாம் அதிரா ரெண்டு பாட்டிகளிடமும் நிறைய கற்றுக் கொண்டேன். அதுவும் அம்மா வழிப் பாட்டி இந்திராகாந்திப் பாட்டி. ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்டிரிக்ட். ஆனால் அதே சமயம் பல விஷயங்கள் எப்படி இருக்கக் கூடாது என்பதையும் கற்றுக் கொண்டேன். ..கண்டிப்பாக அனுபவம் தான் வாழ்க்கை. இன்னமும் புடம் போட்டுக் கொண்டிருக்கிறது ஹா ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 25. ஆவ்வ்வ்வ் எனக்கு அந்த ஃபிரெஸ் கீரைகளைப்பார்க்க ஆசையா இருக்கு.. அது என்ன மசாலாப் பொருட்களோடு நாவற்பழம்போல ஒன்றும் இருக்கே...

  //இது என்னவென்று தெரிகிறதா?!! சொல்லுங்கள். நான் என்னவென்று பதிலில் சொல்லுகிறேன்.
  //

  ஓ நான் பப்பாப்பழம் அல்லது இழநி என நினைச்சேன் அப்போ பாக்கு என ஜே கே ஐயா சொல்லிட்டார்ர்.. கரீட்டூ ஆனா படத்தில பென்னம்பெரிசா தெரியுது.

  எனக்கு இந்த நொங்குப் பாக்கு ரோஓஓஓம்பப் பிடிக்கும் கீதா, ஏன் தெரியுமோ.. அப்படியே நசுக்கு நசுக்கு என இருக்கும் சாப்பிட, சாப்பிட்டு முடிச்சதும் அப்படியே டொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங் என தலை சுத்தி மயக்கம் வரும் ஹா ஹா ஹா:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆவ்வ்வ்வ் எனக்கு அந்த ஃபிரெஸ் கீரைகளைப்பார்க்க ஆசையா இருக்கு.. அது என்ன மசாலாப் பொருட்களோடு நாவற்பழம்போல ஒன்றும் இருக்கே...//

   ஆமாம் அதிரா கீரை காலையிலும் சரி மாலையிலும் இந்த தினசரி சந்தையில் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

   அது நாவற் பழம் இல்லை....மிளகு ..நிழல் பட்டு கொஞ்சம் வெயிலும் அடிக்கிறது....அதில் உ ப கொஞ்சம் சிதறி யிருந்தது. நான் நடந்து கொண்டே எடுத்தேன் அதிரா அதனால் அத்தனை சரியாக வரவில்லை...

   ஆமாம் பாக்குதான் படத்தில் பெரிசா தெரியுது...ஆனா நேர்ல பார்க்கவும் கொஞ்சம் பெரிசாதான் இருந்தது. தென்னங்குரும்பை போல...

   நொங்குப்பாக்கு ஆஆஆஆ...பச்சையாக....பொதுவாகப் பாக்கு போட்டாலே கொஞ்சம் தூக்கம் வரும் என்று சொல்லுவாங்க அதனாலேயே எங்க வீட்டுல நாங்க சின்னப் பிள்ளைகளாக இருக்கறப்ப பாக்கு தடா...வெத்திலை எல்லாம் தடா. அதனால நான் பாக்கு கூடப் போட்டதில்லை. வெத்திலை பாக்கும் போட்டதில்லை.அதிரா..இப்பவரை

   கீதா

   நீக்கு
  2. கீதா வெத்தலை பாக்கு உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமோ.. பாக்கு உணவை செமிக்கப் பண்ணும், வெற்றலை சளித்தொல்லை மற்றும் உடம்புக்கு சுண்ணாம்புச் சத்தைக்கூடக் கொடுக்கிறதாம்.. நிறையவே நன்மை இருக்கு.... இவற்றோடு புகையிலை சுண்ணாம்பு சேர்ப்பதுதான் தப்பு..

   நீக்கு
  3. பாக்கு நல்லதுன்னு யாரு சொல்வாங்க? பாக்கு உடலுக்கு மந்தத் தன்மையைக் கொடுக்கும். நரம்பு எடுத்த வெற்றிலை மட்டும்தான் நல்லது.

   ஹோட்டல்ல, அன் லிமிடட் மீல்ஸ் என்று போட்டிருக்கறவங்க சிலர், சாதத்தோடு ஒரு துணில பாக்கைக் கட்டி வேகவைப்பாங்க. அப்போ, சாப்பிடறவங்களுக்கு கொஞ்சம் சாதத்தோடே வயிறு நிரம்பினமாதிரி ஆயிடுமாம். (அப்புறம் உணவு வயிற்றில் கொஞ்சம் படுத்துமாம்).

   இந்த விஷயங்களெல்லாம் 16 வயசுக் குழந்தைக்கு எங்க தெரியும். சும்மா தெரிஞ்சமாதிரி பின்னூட்டம் போடவேண்டியது. பெரியவங்கள்ட கேட்டுப்பாருங்க....

   நீக்கு
  4. நெல்லை எனக்கு ஹோட்டல்ல சாதம் சாப்பிட்ட வயிறு ரொம்ப ஹெவி யாகி உப்பிடும்...நான் இதுவரை நினைச்சது சோடா உப்பு போடுவாங்கனு கேள்விப்பட்டதுனால அதனால இருக்குமோன்னு...இப்ப நீங்க சொல்றத பார்த்தா பாக்குதான் காரணமோன்னு தோனுது...எனக்குப் பிடிக்காது என்று அதாவது - வெஜ்- சாப்பாட்டு விஷயத்தில் பிடிக்காது என்பது எதுவுமே இல்லை. ஆனால் இந்த வெத்தலை பாக்கு விஷயம் மட்டும் ஒவ்வாத விஷயம். என் பிறந்த வீட்டில் யாருக்குமே போடும் பழக்கம் இல்லை பெரியவர்களுக்கும் இரு சைடும் கூட பாட்டி தாத்தா எல்லாருமே அதனால் எங்களுக்கும் அந்தப் பழக்கம் இல்லை போடவும் சம்மதிக்க மாட்டாங்க. அப்ப பிரசவத்துக்கு அப்புறம் என் மாமியார் ரொம்ப வற்புறுத்துவாங்க ஜீரணம் ஆகும். அப்பத்தான் குழந்தை கக்க மாட்டான்...அவனுக்கும் ஜீரணம் ஆகும் ...பாரு அவன் ரொம்ப கக்கறான் நீ வெ பா போட மாட்டேங்கற என்ன பிடிவாதம் இதுன்னு கேப்பாங்க...ஆனா நான் இந்த ஒரு விஷயம் மட்டும் ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மான்னு மறுத்து எப்படியோ சமாளித்து வந்தாச்சு. கணவரும் அதற்கு எகைன்ஸ்ட் என்பதால்...மகனுக்கும் பழக்கம் கிடையாது.

   ஆனால் என்னோடு வளர்ந்த என் தங்கைகள் (கஸின்ஸ்) திருமணம் ஆனபிறகு பழகிட்டாங்க போல...கல்யாணங்களில் பீடா எடுத்துப்பாங்க..சுவையா ஃபேளவர்டா இருக்கும்னு...ஆனா .எனக்கு இது வரை அந்த பீடா கூடப் போடும் பழக்கம் வரலை...எப்படி இருக்கும்னு பார்க்கும் ஆசையும் இல்லை...

   கீதா

   நீக்கு
 26. பார்க்கப் பாசை ஆசையா இருக்கு, அழகிய படங்கள். ஆனா ஒரு கவலை, வெய்யிலிலே ஃபிரெஸ்சாப் போட்டு விக்கினமே.. விற்பனை ஆகாதுவிட்டால் வாடி விடுமே என்ன பண்ணுவார்களோ.. அதை நினைக்க விவசாயிகள் பாவமாக இருக்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா காலை வெயில் அத்தனை கடுமை இல்லை. இப்போது குளிர் காலம் இல்லையா...அப்புறம் அவர்கள் நேரம் செல்லச் செல்ல மூடி வைத்துக் கொண்டு விடுகின்றனர். இல்லை என்றால் கூடாரம் போல் போட்டு விடுகின்றனர். தினசரிச் சந்தையில் அந்தப் பிரச்சனையும் இல்லை எல்லாமே கூடத்துக்குள்தான்....காய்கள் நன்றாக இருக்கு.

   மிக்க நன்றி அதிரா கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 27. மால்கள் வருகையால் சந்தைகள் பல ஊர்களில் காணாமல் போய்விட்டன. உழவர் சந்தைகள் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. கனடாவில் உழவர்களே ஓர் இடத்தில் கூடி தம் உற்பத்திப் பொருள்களை விற்கிறார்கள். Farm to Home என்னும் முழக்கத்துடன் அந்நாட்டு அரசு முன்னின்று உதவுகிறது.
  பதிவும் படங்களும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் கோவிந்தராஜு ஐயா. ரொம்ப நாளாகிடுச்சே பார்த்து...

   ஆமாம் ஐயா கானடாவில் ரொம்ப நன்றாக இருக்கும் ஃபார்ம் டு ஹோம் நு அப்புறம் வயல்களில் நாமே இறங்கி எடுக்கவும் செய்யலாம்னு மகன் சொல்லிருக்கான்...

   மால்கள் வந்ததில் சிறு வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் உண்மை. அது போலத்தான் பெரிய கடைகள் வந்திருப்பது இப்படியான சாதாரண மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது அதிலும் இப்போது விவசாயப் பொருட்கள் ஆன்லைன் வர்த்தகம் வேறு வந்துவிட்டதே.

   கீதா

   நீக்கு
  2. கீதா ரங்கன், உங்கள் புரிதல்ல, ஆன்லைன் வர்த்தகம், ஆர்டர் டு ஹோம், இதெல்லாம் எப்படி சிறு வணிகர்களை பாதிக்குது (அல்லது இத்தனை நாட்கள் ஏமாத்தினவங்களை எப்படி அலெர்ட் ஆக வைக்குது) என்று எழுதுங்க.

   நீக்கு
  3. நெல்லை ம்ம்ம் என் புரிதல்ல....அது எவ்வளவுதூரம் வொர்க்கவுட் ஆகுன்னு தெரியலை...ஏன்னா நான் பெரிய பொருளாதார விற்பன்னர் கிடையாது நெல்லை...என் சின்ன அறிவுக்கு எட்டியதைத்தான் சொன்னேன்...அதுவும் வால்மார்ட் வரலாம்னு ஒரு பேச்சு அடிபட்டப்ப சென்னைஅல் என் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற கடைக்காரங்க ஏற்கனவே கொஞ்சம் புலம்பிக்கிட்டுருந்தாங்க.. .ரெண்டாவது உங்க அளவுக்கு எல்லாம் எனக்கு வாசிப்பும் கிடையாது நெல்லை. ஆதாரப்பூர்வமா புள்ளிவிவரம் கொடுத்துச் சொல்லுற அளவுக்குச் செய்யனுன்னா நான் அதுக்கு நிறைய தகவல் திரட்டனும்.

   இப்ப இங்கயே பாத்தீங்கனா சந்தைல சண்டே சந்தைல தமிழ் தெரிஞ்சவங்க சிலர் இருக்காங்க. அவங்ககிட்ட சும்மானாலும் பேச்சுக் கொடுத்தேன்... அவங்க சொன்னது முன்னாடி இருந்த அளவுக்கு வியாபாரம் இல்லைன்னு. கார்ல எல்லாம் வந்து வாங்குவாங்க இப்ப அவங்க யாரும் வரதுல்ல....பெரிய பெரிய கடைகளும் காய் விற்க ஆரம்பிச்சுட்டாங்க..அப்புறம் நிறைய தோட்டம் எல்லாம் போயிருச்சு வீடு ஆஃபீஸு வந்துருச்சு விளைச்சல் கம்மியாயிடுச்சுன்னு.

   அவங்கள ஒரு ஆள் வந்து ஒரு எஞ்சினீயர் வந்து அதாவது கொஞ்ச வருஷம் முன்னாடி ஐட்டி ஜாப்ஸ் போச்சுல்ல அப்ப வந்து ஒருத்தர் இவங்க கிட்ட காய் எல்லாம் கம்ப்யூட்டர் (ஆன்லைன்ல) வழியா வித்து தரோன்னு சொல்லி பேசினாங்களாம். அவங்க சொன்ன கமிஷன் இவங்களுக்குக் கட்டுபடியாகலையாம்..அதனால இவங்க அந்த க்ரூப்ல சேரலையாம். ஆனா ஒரு சிலர் சேர்ந்து அவங்களுக்கு சரியா கிடைக்காம அப்புறம் என்னாச்சுன்னு தெரியலைன்னு சொன்னாங்க..இன்னும் அதை இந்தப்பதிவுல எழுத நினைச்சுத் தவிர்த்தேன். ஏன்னா ஒவ்வொருத்தரது அனுபவமும் ஒவ்வொரு விதம். அதுவும் இப்ப எல்லாமே டெக், ஆப் நு போற சமயம் இந்தப் பொருளாதாரம் பத்திப் பேசறதுல அர்த்தம் இல்லைனு தோனுச்சு.

   சென்னைல எங்க ஃப்ளாட்டுல ஒரு ஃபேமிலி நார்த் குடும்பம் அவங்க பிக் பாஸ்கெட்லதான் எல்லாமே வாங்குவாங்க..பழம், காய் மளிகை எல்லாமே...வண்டி வந்து கொடுத்துட்டுப் போகும்...

   எனக்கு இப்படியானதுல ஈடுபாடு இல்ல. நானே நேரில் சென்று பார்த்து வாங்குவது விலை பார்த்து தரம் பார்த்து வாங்குவது அது ஒரு தனி அனுபவம். ரசனை...வெளியில் சென்று வாங்குவது மக்களுடன் பழகுவது எல்லாமே ரசனையான அனுபவம்..ப்ளஸ் நாம் மறைமுகமாக ஒரு சாதாரண குடும்பத்துக்கு உதவுகிறோன்னு ஒரு சந்தோஷம்..

   கீதா

   நீக்கு
 28. சந்தை படங்கள் அனைத்தும் அருமை...

  Refrigerator தேவையில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க டிடி...ஆமாம் டிடி தினசரிச்சந்தை இருந்தா குளிர்சாதனப்பெட்டி இல்லாமலேயே ஓட்டிடலாம்...

   மிக்க நன்றி டிடி கருத்திற்கு..

   கீதா

   நீக்கு
 29. இளநீர் குழைகள் அந்த பச்சைப்படம் சொல்வது. சந்தை பற்றிய பகிர்வு அருமை. இப்போது பெங்களூர் வாசியாகிவிட்டீர்கள் போல?))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க தனிமரம்...எத்தனை மாசமாச்சு..

   இந்த முறையும் சபரிமலை ட்ரிப் உண்டா?

   ஆமாம் இப்ப பங்களூர் வாசியாகி ஆயாச்சு..

   நேசன் அது இளநீர் குலைகள் அல்ல பாக்கு!!

   மிக்க நன்றி நேசன்

   கீதா

   நீக்கு
 30. தேங்காய் விலை மிகவும் குறைவாக இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 31. தினசரி சந்தையில் கருவேற்ப்பிள்ளை இல்லைப்போல குஸ்பூ தக்காளிதான் இருக்கு.))) மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம் ஆன்மீகம் முடிந்து!)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருவேற்பில நிறைய உண்டு நேசன். நான் எடுத்த புகைப்படத்தில் அது இல்லை

   இங்கு பங்களூர் தக்காளிதான் நிறைய இருக்கு. நாட்டுத் தக்காளி எல்லா கடைகளிலும் இல்லை. தக்காளிக் காய் கிடைக்கிறது.

   ஓ ஆன்மீகம் சுற்றுலாவுல இருக்கீங்களா இல்லை சபரிமலைக்கு இந்த ஆண்டும் போறீங்களோ?!!! அதான்...

   புத்தாண்டு வாழ்த்துகள் நேசன். உங்க ஆன்மீகம் முடித்து வாருங்கள்

   மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
 32. சந்தை என் சிந்தைக்குப் பிடித்த விந்தை :)
  எனக்கும் மிகவும் பிடிக்கம் கீதா. சிறுமியாக இருக்கும்பொழுது கொடைக்கானலில் ஞாயிறு சந்தைக்குச் செல்வேன், தாத்தாவுடனோ, அப்பாவுடனோ.
  பெங்களூருவிலும் மல்லேஸ்வரத்தில் ஒரு சந்தை, திருமணமான புதிதில் அங்குதான் செல்வோம்..பிறகு வீடு மாறியவுடன் HAL சந்தை. பெங்களூருவில் குளிர்சாதனப்பெட்டி இருந்தாலும் காய்கறி வாங்கி வைத்ததில்லை.. ஹ்ம்ம் அவற்றையெல்லாம் எண்ணி ஏங்குகிறேன்.
  பெங்களூர் சென்று விட்டீர்களா?

  படங்கள் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க க்ரேஸ்! வாங்க

   ஆமாம் பங்களூரில்தான் இப்ப.

   ஓ நீங்க இருந்தது மல்லேஸ்வரம் அப்புறம் எச் ஏ எல்!!!

   ஆமாம் மல்லேஸ்வரத்துலயும் சந்தை உண்டு....இங்கு தினசரி சந்தை இருப்பதால் குளிர்சாதனப்பெட்டி அதற்கு அவசியம் இல்லை ஆனால் சில பொருட்களுக்கு வேண்டித்தான் இருக்கு...சம்மர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்...

   உங்களுக்கும் சந்தை பிடிக்கும் என்பது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கு. அது ஒரு தனி அனுபவம் தான் இல்லையா...

   மிக்க நன்றி க்ரேஸ்..

   புத்தாண்டு வாழ்த்துகள்!

   கீதா

   நீக்கு
 33. வாவ் !!! என்னே அழகு எத்தனை பசுமையான வெஜிடபிள்ஸ் !!! கீரைகள் எல்லாம் பார்க்க அப்படியே அள்ளிக்கணும் போலிருக்கு ..இப்படி இங்கேயும் farmers மார்க்கெட் உண்டு நம்மூர் காய்கறி குறைவே .வெண்டை பாகல் மட்டும் எங்கிருந்தோ கொண்டு வராங்க .
  நீங்க லக்கி கீதா பசுமையான காய்களை வாங்க சமைக்க இப்படி வேடிக்கை பாக்க கொடுத்து வச்சிருக்கணும் ..


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்ல அங்க ஃபார்மர்ஸ் மார்க்கெட் உண்டு என்றாலும் நம்மூர் காய்கறி குறைவுதான். ஆனா உங்க ஊர்லயும் கேல் கீரை கிடைக்கும்ல..? ரொம்ப நல்லதாச்சே எனக்கு ரொம்பப் பிடிக்கும்..ஆனா இங்க கிடைக்கறதும் அரிது....விலையும் ரொம்பவே அதிகம்...ஏஞ்சல்

   நீங்க லக்கி கீதா பசுமையான காய்களை வாங்க சமைக்க இப்படி வேடிக்கை பாக்க கொடுத்து வச்சிருக்கணும் ..//
   நிஜம்மா நான் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டுருக்கேன்

   ஏஞ்சல் இங்கு காய்கள் ரொம்ப நல்லாருக்கு. இப்ப கொஞ்சம் குளிர் அப்படின்றதாலயான்னு தெரியலை...பார்ப்போம் சம்மர் வருமே அப்போது எப்படி இருக்குன்னு...கீரை நல்லாருக்கு.

   மிக்க நன்றி ஏஞ்சல் கருத்துக்கு

   கீதா

   நீக்கு
 34. அஆவ் சொக்கா !!இத்தென்னா 10 ,15 ரூபாய்க்கெல்லாம் தேங்காயா ?? இங்கே ஒண்ணு 89 பென்ஸ் அதாவது ஒரு தேங்காய் 79 இந்திய ரூபாய்க்கு வாங்குறேன் :)))))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஆமாம் ஏஞ்சல்....உங்க ஊர் விலை ஆம்மாடியோவ் நு சொல்ல வைக்குது...ஏஞ்சல்

   கீதா

   நீக்கு
 35. சூப்பர் பதிவு!. இளம் வயதில் பாட்டியோடு சந்தைக்கு சென்ற அனுபவத்தை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் உங்கள் கிராமத்துக்கு செல்லும் பாதை வர்ணனை என்னை அங்கேயே அழைத்துச்சென்று விட்டது. நானும் என் சந்தை அனுபவங்களை(சண்டை அனுபவங்கள் அல்ல) எழுத பிள்ளையார் சுழி போட்டு விட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி பானுக்கா...எழுதுங்க எழுதுங்க உங்க சந்தை அனுபவங்கள் ...

   //(சண்டை அனுபவங்கள் அல்ல) // ஹா ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. எழுதிவிட்டேன், படித்துப் பாருங்கள்.

   நீக்கு