திங்கள், 3 டிசம்பர், 2018

சொல்முகூர்த்தம் - 2


நட்சத்திரக் குழந்தைகளுக்கு நாம் “நோ” என்று சொல்லக் கூடாது என்று பயிற்சியில் சொல்லப்படுவதுண்டு. உ.ம். அம்மாவை தொந்தரவு பண்ணக் கூடாது. பண்ணாதே என்று சொல்வதை விட அம்மா முக்கியமான வேலையில் இருக்கிறார். வந்துவிடுவார். கொஞ்சம் பொறு என்று அவர்களுக்குப் புரியும்படி சொல்ல வெண்டும்.

அவர்கள் அதீதமாகச் சாப்பிட்டால், நோ தரமாட்டேன் என்று சொல்வதை விட, இப்ப இதை எடுத்துக் கொள். கொஞ்சம் நேரம் கழித்து – நேரம் சொல்லி விட வேண்டும் – தரேன் மீதியை. ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவர்களுக்குப் புரியும் வகையில் விளக்கிவிடவும் வேண்டும். இப்படி நிறைய பயிற்சிகள் உண்டு.  சிறிய வயதிலேயே இதை எல்லாம் சொல்லி இவர்களைக் கையாள அன்பு, பொறுமை, பொறுமை, பொறுமை அதிகம் வேண்டும் என்றால் அவர்களது பதின்ம வயதில் பெற்றோர் ஞானியாக இருந்தால் மட்டுமே கையாள முடியும். இதைப் பற்றி நான் விரிவாகச் சொல்லவில்லை இங்கு.

இது சாதாரண குழந்தைகளுக்கும் பொருந்துமா என்றால் பெரும்பான்மையான சதவிகிதத்திற்குப் பொருந்தும். சொன்னதைக் கேட்கவில்லை என்றால் சிறிய தண்டனைகள் கொடுக்கலாம். அதை விட்டு பெல்டால் விளாசுவது, கம்பால் அடிப்பது, கைவிரல்கள் பதியும்படி அடிப்பது என்பது குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறத் தூண்டும் செயலாக மாறிவிடும்.

அதே போன்று கோபத்தில் திட்டும் போதும் வார்த்தைகள் நீ லாயக்கில்லை, ஒன்றிற்கும் உதவாக்கரை என்று சொல்வது. குறிப்பாகப் பதின்மவயதுக் குழந்தைகளின் கீறிப்பார்க்கும் சொற்கள். கொல்லும் சொற்கள். ஒரு சிலர் இதை வீம்பாகக் கொண்டு வாழ்வில் முன்னேறிச் செல்வர் ஆனால் எல்லோரும் அப்படி அல்ல. 

இங்கு நான் இருக்கும் தெருவில் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். பல மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆனால் கன்னடம் பேசும் குழந்தைகள், கன்னடம் மட்டுமே பேசும் குழந்தைகள் என்று கலந்து கட்டி. எல்லோரும் எனது நட்புகள். வீடு சில சமயங்களில் ஜே ஜே என்றிருக்கும்.


படிப்பைப் பற்றி மட்டும் பேசாமல் பல கதைகள் சொல்லி, விளையாட்டுகளும் விளையாடி, விளையாட்டுடனேயே சில நல்ல விஷயங்களையும், கதைகளும் சொல்லி அவர்கள் லெவலுக்கு இறங்கி தோழமையுடன் பழகினால் குழந்தைகள் நம்மிடம் கற்க வருவார்கள் என்பது இங்கு கொஞ்சமேனும் நிரூபணம் ஆகிறது. பாடத்தில் சந்தேகம் கேட்கவும், ஆங்கிலம் கற்கவும் வருகிறார்கள்.


என்னிடம் இருக்கும் “எப்படி நினைவுத் திறனை வளர்த்தல்” எனும் ஆங்கிலப் புத்தகத்தில் உள்ள விளையாட்டுகளையும் அவர்களுக்கு விளக்கி விளையாட வைப்பதால் ஆண் குழந்தைகள் நான் சொன்னபடி கேட்கிறார்கள் என்று பெண் குழந்தைகள் (சிலர் ஆண் குழந்தைகளின் சகோதரிகள்) வந்து சொல்கின்றார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. அப்பெண் குழந்தைகள் சொன்னது சும்மா டுபாக்கூர்.

வேறு ஒன்றுமில்லை. தீபாவளிக்கு எல்லாரும் வெடி வெடிக்க வேண்டும் என்றார்கள். பக்கத்து வீட்டு வாசல்களில் வெடிக்கக் கூடாது என்று சொல்லி விரட்டி விட்டனர் போலும். நான் சொன்னது “வெடித்துக் கொள்ளுங்கள். எஞ்சாய் செய்யுங்கள். ஆனால் யார் மீதும் பட்டாசு படாம பார்த்துக்கணும். வீடுகளில் தீப்பொறி படாமல் பார்த்துக்கணும். தெருவில் மற்றும் வீடுகளில் விழும் பட்டாசுக் குப்பைகளை எல்லோரும் பெருக்கி எடுத்துப் போடணும். நான் உங்களுடன் சேர்ந்து வெடிக்கவரமாட்டேன். ஆனால், குப்பைகளைப் பெருக்குவதில் நானும் உதவுகிறேன் என்று சொன்னதும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆளுக்கொரு பொறுப்பையும் கொடுத்தேன். அவ்வளவுதான்.

இரவு வெடித்தார்கள். மறு நாள் காலை எல்லாரும் சேர்ந்து தெருவைப் பெருக்கினோம், வீடுகளில் விழுந்த குப்பையையும் பெருக்கி கவரில் போட்டு வைத்தோம். குப்பை வண்டி வந்ததும் குழந்தைகள் ஓடி வந்து என்னிடம் சொன்னார்கள். இரண்டாவது நாள் வெடித்த குப்பைகளை எல்லாம் அவர்களே பெருக்கி கவரில் போட்டு வைத்து விட்டார்கள். அதே போன்று கரும்புச் சக்கையைத் தெருவில் துப்பக் கூடாது, கடலை சாப்பிட்டு ஓடுகளைத் தெருவில் போடக் கூடாத்து என்பது முதல் பிஸ்கட் கவர்கள், ப்ளாஸ்டிக் எதுவும் தெருவில் போடாமல் குப்பைக் கவரில் போட வேண்டும் என்று சொன்னதையும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். முதலில் நாம் பெரியவர்கள் அதனை அவர்கள் முன் பின்பற்ற வேண்டும் என்பது மிக முக்கியமாச்சே!

இவர்களில் மூன்று சிறு பெண் குழந்தைகளைத் தவிர பதின்ம வயதுக் குழந்தைகள் யாரும் இந்த வருடம் பள்ளிக்குச் செல்லவில்லை. வறுமை ஒரு புறம். என் தொட்டடுத்த வீட்டுப் பையனை அவன் அப்பா அதீதமாக அடித்ததால் பள்ளிக்குச் செல்லாமல் எங்கோ நம் ஊரில் வேலை செய்துவிட்டு இங்கு வந்து ரோட்டில் படுத்துறங்கி என்று இருந்தவன் தற்போது அவன் தங்கைகள் மற்றும் பிற குழந்தைகளுடன் என்னிடம் வந்தான். அவன் புத்திசாலி என்பது தெரிந்தது அவனோடு விளையாடிய போது.

அவன் அம்மாவிடம் சென்று பேசினேன். அவர் இவன் மோசம் அது இது என்று சொன்னதும் நான் இவன் மிக மிக புத்தி சாலி. நல்ல பையன் என்று அவனை வைத்துக் கொண்டே பேசியதும் அவனுக்கு மகிழ்ச்சி. அவன் பள்ளி செல்ல வேண்டும் என்று சொன்னதும் அடுத்த வருடம் பள்ளி செல்லத் துவங்குகிறேன் என்று சொல்லி உறுதி மொழி அளித்துள்ளான். பார்ப்போம். இந்தச் சொல்முகூர்த்தம் பலிக்கிறதா என்று.

அதே போன்று இரு பெண் குழந்தைகள் மற்றும் அவர்கள் சகோதரனை பெற்றோரே இந்த வருடம் பள்ளிக்கு அனுப்பவில்லை. சிறு வயதிலிருந்தே தனியார்ப்பள்ளியில் சேர்த்திருந்ததால் இந்த வருடம் கட்டணம் கட்ட இயலவில்லை என்று அனுப்பவில்லை என்பதை அறிந்ததும் மனம் மிகவும் வருந்தியது. ஏன் அரசுப் பள்ளி இருக்கிறதே சேரலாமே என்றால் அவர்கள் அப்பா அதை விரும்பவில்லையாம். சிறிய வயதிலிருந்தே தனியார்ப்பள்ளியில் படித்ததால். ஐசிஎஸ்ஸி சிலபஸ்ஸாம். கடினமான சிலபஸ். அவர்களின் அப்பா தேநீர்க்கடை வைத்திருக்கிறார்.

நான் வந்து உங்கள் தந்தையிடம் பேசவா என்றேன். தயங்கினார்கள். இப்போதுதான் சரி என்று சொல்லியிருக்கிறார்கள். சொல்முகூர்த்தம் வேண்டி என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வருகிறேன் அவரிடம் எப்படிப் பேசினால் குழந்தைகள் மீண்டும் பள்ளி செல்ல முடியும் என்று. அதற்கு முதலில் இங்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகள் குறித்து ஒரு சிறிய ஆய்வும் நடத்திக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளின் பெற்றோர் மீதும் எனக்கு வருத்தம் இருக்கிறது. இரு பெண் குழந்தைகளுக்கும் நடுவிலான ஆண் குழந்தையின் வளர்ப்பு சரியில்லை. 

நம் காலம் கண்டிப்பு நிறைந்த காலம். யாரும் விளக்கம் சொன்னதும் இல்லை. ஆனால் இப்போதைய குழந்தைகள் அப்படி இல்லை. குழந்தைகளுக்கு நாம் செய்யக் கூடாது என்று சொல்வதை விட இப்படிச் செய்வது நல்லது என்றோ அல்லது எப்படிச் செய்ய வேண்டும் என்றோ நாமும் அவர்களுடன் சேர்ந்து தோழமையுடன் இடையிடையே நல்லொழுக்கக் கதைகள் சொல்லி என்று சொல்லிக் கொடுத்தால் அவர்கள் அதை கொஞ்சம் ஏற்கிறார்கள். அவர்கள் லெவலுக்கு நாமும் இறங்க வேண்டும் என்பது மிக முக்கியம். எனக்கு என் தாத்தா பாட்டியும், என் மகனுக்கு என் அம்மா இருந்தவரை என் அம்மாவும் - என் நினைவுக்கு வருகிறார்கள்.

என் மகனுக்கு சிறு வயதில் பிடிவாதம் உண்டு. “இப்போ” என்று அழுவான் காலை தரையில் உதைத்துக் கொண்டு. கண்ணில் ஒரு சொட்டு தண்ணீர் வராது. அவன் பிடிவாதத்திற்கோ அல்லது தேவையற்ற போருள் கேட்டு அழுதாலோ அதற்கு இடம் கொடுத்தது இல்லை. நோ என்றால் நோ தான். உதாரணமாக அப்போது நாங்கள் இருந்தது திருவனந்தபுரம். எங்கள் வீட்டில் டிவி பெட்டி கிடையாது. ஆனால், எதிர்த்த வீட்டில் டிவியில் தூர்தர்ஷன் தவிர கார்ட்டூன் சானல்கள் எல்லாம் வரும். இவன் டாம் அண்ட் ஜெர்ரி அங்கு சென்று பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பான்.

நான் சொல்வேன் "ஹிப்போ" தானே வா ஜூவுக்கு  போகலாம் என்று சொல்லி அவனை சிரிக்க வைக்க முயல்வேன். அவனுக்கு ஜூ மிகவும் பிடிக்கும். உடனே தன் பிடிவாதத்தை மாற்றிக் கொண்டு விடுவான். அவனை அழைத்துச் சென்று வருவேன். அதையும் மீறி அவன் அழுதால் அவன் பிடிவாதம் சரியல்ல என்று அவன் புரியும்படி சொல்லி விளக்குவேன் கூடியவரை அவனை டைவேர்ட் செய்வேன். இல்லையா நான் கண்டு கொள்ளவே மாட்டேன். 

உடனே கொஞ்ச நேரமானதும் அவனுக்குப் பொறுக்காது. அம்மா சிரி ப்ளீஸ் அம்மா என்னைப் பாத்து சிரி ப்ளீஸ் என்பான். அதை நான் சாதகமாக்கிக் கொண்டுவிடுவேன். இப்படி அவன் 3, 4 வயதில். அதன் பின் நான் சொல்வதை புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டான். கிட்டத்தக்க வேதவாக்கு போல. ஆஹா இதுவும் சரியல்லவே எனது பொறுப்பு இன்னும் கூடியது. என் வார்த்தைகளிலும் செயல்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு. 

மகனுக்குக் கற்றல் குறைபாடு இருந்ததால் பள்ளியில் அவன் பின் பெஞ்சுப் பையன் என்பதால் நண்பர்களும் கிடையாது. ஆசிரியர்களும் கண்டு கொண்டதில்லை. அவனுக்குத் தாழ்வுமனப்பான்மை வந்துவிடக் கூடாது என்றும், அவன் நடத்தை நல்லதாக இருக்க வேண்டும் என்பதிலும், கற்றலில் ஆர்வம் இல்லாது போய்விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்தோம். அதற்கு உதவியது வெல்லும் சொற்கள். அதன் பின் அவன் சுயமாகச் சிந்திக்கத் தொடங்கிய பிறகு எனக்கும் அவன் தன் அனுபவத்தில் கற்பதை சொல்லித் தரத் தொடங்கினான் இப்போதும் தொடர்கிறது.

எந்தக் குழந்தையும் நல்லது செய்யும் போது தட்டிக் கொடுத்து, ஊக்கப்படுத்தி, நல்ல வார்த்தைகள் சொல்லி பாராட்ட வேண்டும். அப்படிச் செய்யும் போதுதான் அவர்கள் தவறு செய்யும் போது நாம் சுட்டிக் காட்டுவதும் புரியத் தொடங்கும். பாராட்டவும் செய்கிறார்கள், தப்பு செய்தால் திருத்தவும் செய்கிறார்கள் என்பது. சும்மானாலும் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக்கும் அது இது என்று ஹிட்லர் போல இருந்தால் குழந்தைகள் நல்லவர்களாக இருந்தாலும், வளர்ந்தாலும் நம்மிடம் இருந்து விலகிப் போக வழிகள் பல. இவை எல்லாம் பொதுவாகச் சொல்லப்படுபவை. யதார்த்தம் மாறுபடலாம்.

கொல்லும் வார்த்தைகள் அவர்களது ஈகோவை அதிகப்படுத்தும். அந்த ஈகோ நல்லவிதமாக, ஓர் எல்லைக்குள் அமைந்துவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அது கெட்ட ஈகோவாக மாறிவிட்டால் எல்லை மீறிவிட்டால் விபரீதம். அதனாலேயே வெல்லும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல் முக்கியம். இது ஒரு பேசும் கலை. கொஞ்சம் கடினமான விஷயம்தான். ஆனால் முயன்று பார்ப்பதில் தவறில்லையே! எனவே, கூடியவரை வெல்லும் வார்த்தைகளப் பயன்படுத்த முயற்சி செய்வோமே. (வெல்லும் வார்த்தைகள், கொல்லும் வார்த்தைகள்– நன்றி ஸ்ரீராம்)

கீதாக்கா குழந்தைகளைக் கையாளுதல் குறித்து அருமையான கருத்துகளைக் கொண்ட பதிவு போட்டிருந்தார்.  http://sivamgss.blogspot.com/2018/11/blog-post_14.html

மேலே சொல்லப்பட்டது ஒரு வகையானது என்றால் மற்றொரு வகை நாம் பேசும் போது நல்ல வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும் – சொல்முகூர்த்தம் - என்று சொல்லப்படுவது எவ்வளவு மகத்துவமானது என்பது நம்மில் பலருக்கும் புரிந்தாலும் பல சமயங்களில் நாம் கொல்லும் வார்த்தைகளை நம்மை அறியாமலேயே பயன்படுத்துகிறோம் நாவில் நரம்பில்லாமல். நெல்லை கூடச் சொல்லியிருந்தார் யாராவது நெகட்டிவாகப் பேசினால் நான் தவிர்ப்பேன் என்று. நானும் நெகட்டிவ் வார்த்தைகள் கேட்க நேரிடும் போது அந்த இடத்தை விட்டு அகன்றிடுவேன். அகல முடியாத சூழல் என்றால் என் மூன்றாவது காதை கழட்டி வைத்துவிடுவேன்!! என்ன தக்கனிக்கி!!! காது கேட்காதது கூட வரம் தான்! சில சமயங்களில். 

இந்த சொல்மூகூர்த்தம் எப்படி எல்லாம் ததாஸ்து சொல்லப்பட்டு பலித்து விளையாடுகிறது என்பதை நான் இரு கதைகளாக எழுத நினைத்துள்ளேன். பார்ப்போம் அதற்கான முகூர்த்தம் எப்படி என்று!


------கீதா


64 கருத்துகள்:

  1. குழந்தை வளர்ப்பு பற்றி அருமையான பதிவு .அந்த பெரிய ஸ்கூலில் பீஸ் கட்ட முடியாததால் ஸ்கூலுக்கு அனுப்பவில்லை என்பதை படிச்சப்போ மனசுக்கு வலிச்சது ..ஒரு வருடம் வேஸ்ட் என்பதை அந்த வேஸ்டேஜ் தகப்பன் உணரவில்லை பாருங்க :( படிக்கிற பிள்ளை எச்சூழ்நிலையிலும் படித்து சாதிக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சல்!

      ஆமாம் தங்களால் முடியாது என்று அவர்களுக்குத் தெரியும்தானே அப்ப முதலில் இருந்தே அரசுப்பள்ளியிலோ அல்லது கொஞ்சம் கட்டணம் குறைவான பள்ளியிலோ சேர்த்திருக்கலாம்.

      இப்படியான தவறை பல பெற்றோர்களும் செய்கிறார்கள் ஏஞ்சல். அளவுக்கு மீறி அகலக்கால் வைப்பது.

      எந்தச் சூழலிலும் சரி எப்பள்ளியில்படித்தாலும் படிக்கும் ஆர்வம் இருந்தால் போதும்...நீங்கள் சொல்லுவது போல்...அப்பெண் குழந்தைகளின் சகோதரன் பார்க்க ரொம்பவே சிறிய பையனாக இருக்கிறான்...13 வயது ஆனால் நாம் சொல்வதைக் கேட்பதில்லை காமெடி என்பது போல் தெனாவெட்டாகப் பேசுகிறான்....

      நீக்கு
  2. பிள்ளைங்க பாடம் படிக்க விளையாட அங்கே கண்ணழகியும் ஜாயின் செஞ்சுட்டா சூப்பர்ப் :)

    நானும் கொஞ்சம் உங்களைபோலதான் ஆனா நிச்சயம் பட்டாசு மட்டும் வீட்டு முன் வெடிக்க விட மாட்டேன் :)

    பொதுவா வெடி பட்டாசு ஓப்பன் /வெட்டவெளியில்தான் வெடிப்பது பாதுகாப்பு ..
    எங்க வீட்டுக்கு முன் ஒரு நாலைந்து சிறுவர் கால்பந்து ரோட்டில் விளையாடி எங்க விண்டூவில் பட்டு முன் போர்டிகோவில் விழுந்துடுச்சி ..நான் ஜன்னல் வழியா பார்த்திட்டிருந்து கதவை திறக்க ஓடி ஒளிஞ்சிட்டாங்க கார் பின்னாடி ..நான் அவங்களையே கூப்பிட்டு பாலை எடுத்து கொடுத்து ..இனிமே கதவை தட்டி என்கிட்டே கேக்க சொன்னேன் ..அவ்ளோ சந்தோசம் அவங்களுக்கு ..
    எங்கே பார்த்தாலும் ஹாய் ப்ரண்டனு கத்துவாங்க :) எல்லாம் 7/8 வயசு பிள்ளைங்க ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஆமாம் ஏஞ்சல் கண்ணழகி தான்....

      உண்மைதான் பட்டாசு ஓபன் வெளியில்தான் வெடிக்க வேண்டும். வெளிநாடுகளில் அப்படி வெடிப்பதாகத் தெரியும். ஆனால் இங்கெல்லாம் அப்படி இல்லையே....வண்டிகள் போவது கஷ்டம்....நடப்பதும் கஷ்டம். இங்க வேறு வழியில்லையே...எங்கள் இரு வீடுகளுக்கும் நடுவில் வெடித்தார்கள் ஆனா இங்க ரோடும் சின்னதுதான்...இரு பக்கமும் ஜாம் பாக்ட் ஆக வீடுகள்..என்ன செய்ய?

      சென்னையில் இருந்தப்ப ஒரு முறை நான் ஆட்டோவில் செல்ல வேண்டியதானது. அப்ப ஒரு தெருவில் வெடித்த பட்டாசு கரெக்ட்டாக என் காலில் வந்து தீப்பொறியுடன் வந்து விழிந்தது. காலில் சுட்டு புண்ணாகியது ஆனால் அதைவிட பயம் ஆட்டோ பெட்றோல் வண்டி..கண்ட இடத்தில் பட்டு விபத்து ஏற்படவும் வாய்ப்பு ஆட்டோக்காரர் பயந்தே போயிட்டார்..னான் காலை வெளியில் உதறினேன் என் உடை எப்பவுமே காட்டன் உடைதான் வேறு எந்த மெட்டீரியலும் போட மாட்டேன். அதுவும் காரணம் உடை தீ பிடிக்காதத்ன் காரணம்...

      உங்கள் தக்கினிக்கு சூப்பர் ஏஞ்சல் அதான் குழந்தைகளுக்கு சந்தோஷம்...ஆமாம் திட்டுவதை விட இப்படிச் செய்தால் அவர்கள் தெரிந்து கொள்ளவும் செய்வார்கள்...ஹாய் ஃப்ரென்ட் ஆஹா!! இப்படித்தான் குழந்தைகள் நட்பூஸ் ஆவது...

      நீக்கு
  3. //பல சமயங்களில் நாம் கொல்லும் வார்த்தைகளை நம்மை அறியாமலேயே பயன்படுத்துகிறோம் //
    நூற்றுக்குநூறு உண்மை ..இந்த ததாஸ்து ரீசண்டா என்கிட்டே பெரிய வேலை காமிச்சிடுச்சு ..உங்க பதிவு வரும்போது சொல்றேன் அதில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லுங்க ஏஞ்சல்..உங்க அனுபவத்தையும்....ஆனால் எனோடது கதை வடிவில் எபிக்குத்தான் அனுப்ப நினைத்துள்ளேன்...இன்னும் எழுதவே தொடங்கலை. இருக்கும் கதைகளை முடிக்கவும் வேண்டும்...

      நம் வார்த்தைகள் ஆமா ஏஞ்சல் என்னதான் கவனமாக இருந்தாலும் வந்துவிடுகிறது...

      மிக்க நன்றி ஏஞ்சல்

      நீக்கு
  4. அழகான அனுபவக் கட்டுரை.
    நானும் சில விடயங்களை அறிந்து கொண்டேன்.

    நானும்கூட சில நேரங்களில் எனது குழந்தைகளிடம் ஹிட்லர் போல நடந்து கொண்டேனோ... என்று தோன்றுகிறது.

    எனக்கு எதிலும் தவறு நிகழக்கூடாது என்பது எனது கொள்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி தவறு நிகழக் கூடாது என்பது எல்லா பெற்றோருக்கும் உண்டுதான் இல்லையா...ஆனால் நம் கொள்கை என்பது அப்செசிவாக மாறிடக் கூடாது. அப்படி நாம் அப்செசசிவாக இருந்தால் கிவ் அன்ட் டேக் பாலிசி வொர்க் அவுட் ஆகாமல் போய்விடும்....குழந்தைகள் நன்றாகவே வளர்ந்தாலும் நமக்கும் குழந்தைகளுக்கும் இடையே பயம் எனும் ஒரு மெல்லிய திரை படியும் வாய்ப்புண்டு. நம்மிடம் நெருந்தி பழகும் தன்மை குறைந்துவிடுமோ என்று தோன்றும். ஒன்று பயத்தில் விலகுவார்கள் அலல்து எதிர்த்துப் பேசும் குணம் வரலாம்...கண்டிப்பும் வேண்டும் அதே சமயம் அரவணைப்பும் வேண்டும்...ஏனென்றாம் நாமும் ஒன்றும் பெர்ஃபெக்ட் கிடையாதே....

      கில்லர்ஜி இனி உங்களுக்குப் பேரக் குழந்தைகள் வந்துவிடுவார்களே அவர்களைத் தோளில் சுமந்து சென்று கதைகள், இயற்கை எல்லாம் சொல்லிக் காட்டி விளக்கி உங்கள் குழந்தைகளிடம் உங்களால் செய்ய முடியாததை (வெளிநாட்டில் இருந்ததால்) செய்து மகிழுங்கள் ஜி!!! இப்பவே வாழ்த்திவிடுகிறேன்!!!!

      மிக்க நன்றி கில்லர்ஜி...

      நீக்கு
  5. மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் கீதா. சாதாரணமாக நான் சொன்ன வார்த்தைகளை வைத்துக்கொண்டு பெரிய விஷயங்கள் பேசி இருக்கிறீர்கள். நடைமுறையில் கஷ்டம்தான். ஆனால் முதலில் இருந்தே பழகி விட்டோம் என்றால் பழக்கம் தானாக வந்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் முதலில் மிக்க நன்றி.

      நீங்கள் சாதாரணமாகச் சொல்லியிருக்கலாம் ஆனால் எனக்கு அது மிக மிக அருமையான வார்த்தைகளாகத் தோன்றியது. நான் சும்மா பாசிட்டிவ், நேர்மறை, நெகட்டிவ் எதிர்மறை என்று தான் சொல்லுவேன் ஆனால் நீங்கள் சொன்ன வார்த்தைகள் மிக மிக அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் ஸ்ரீராம்....அழகான வார்த்தைகள்! நம் வாழ்வில் மிகப் பெரிய பங்கு வகிப்பவை....கொல்லும் வார்த்தைகளுக்கு எனக்குத் தோன்றும் அழகான குறள் தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு....என்று சொல்லலாமா

      நடைமுறையில் மிக மிக மிகக் கஷ்டம் தான் ஸ்ரீராம். உண்மையிலேயே....நான் கற்றுக் கொண்டது எனக்கு அமைந்த சூழலினால் சிறு வயதிலேயே....எனக்கு அமைந்த ஆசிரியர்கள் இப்படி நான் எழுதியதற்கு ஒரு காரணம் எனலா.

      நீக்கு
    2. ஸ்ரீராம் அதிரா சொல்லியிருப்பது போல் இதைப் பற்றி நிறையப் பேசலாம்...நிறைய...முற்றுப் புள்ளி என்பதே இல்லை...ஏனென்றால் காலம், சூழல் மாறிக் கொண்டே போகுது...

      நீக்கு
  6. உங்கள் தெருக் குழந்தைகளை முன்னேற்றுவது மிகவும் சந்தோஷம் தரக்கூடிய செயல். அவர்களுக்கு அருகே அமர்ந்திருப்பது கண்ணழகியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கண்ணழகியேதான்...ஹா ஹா ஹா...

      குழந்தைகள் வந்துவிட்டால் அவர்க்ளுடன் தான் இருப்பாள் ஆனால் என் காலடியில் இருப்பாள்...

      குழந்தைகளை முன்னேற்றுவது ...நன்றி ஸ்ரீராம் ஆனால் மிக மிகச் சிறிய செயல்...எனென்றால் நான் முதலில் கன்னடம் கற்று சரளமாகப் பேச வந்தால்தான் இக்காரியத்தைத் திறம்படச் செய்ய முடியும் ஸ்ரீராம். கன்னடம் கற்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. மலையாளம் எளிதாக வந்தது போல் கன்னடம் எளிதாக வரவில்லை ஸ்ரீராம்...கொஞ்சமே கொஞ்சம் தான் வார்த்தைகள் கற்றுக் கொண்டுள்ளேன்...அதை வாக்கியத்தில் அமைத்துப் பேசணுமே....அது சில வார்த்தைகள் பிடிபடவில்லை...ஹா ஹா ஹா

      நீக்கு
    2. //அவர்களுக்கு அருகே அமர்ந்திருப்பது கண்ணழகியா?//
      ஹா ஹா ஹா இதைத்தான் நானும் நேற்றுக் கேட்க நினைச்சுப் போட்டு, பின்பு கொஞ்சம் டவுட் வரவே பேசாமல் விட்டுவிட்டேன், என்ன டவுட் எனில்.. இப்போ இருப்பது கண்ணழகியா இல்ல பிஔணியா எனும் டவுட்டில்:)) தப்பாகப் பெயர் சொல்லிக் கேட்டுத் தப்பாகிடக்கூடாதெல்லோ:)..

      நீக்கு
  7. உங்கள் ஒய்வு நேரத்தை மற்றவர்களின் - குறிப்பாக குழந்தைகளின் - முன்னேற்றத்துக்காகச் செலவிடுவது பாராட்டப்படவேண்டிய செயல். நீங்கள் சொல்லி இருக்கும் தீபாவளி உதாரணம் ஒரு சோறு பதமாய் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டிற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்...ஆனால் என் செயல்கள் தொடர வேண்டும் என்றால் மொழி மிக மிக முக்கியம். என்னால் சரளமாகக் கன்னடம் பேச முடியவில்லை என்பதால் குழந்தைகளுக்கு இன்னும் பல சொல்ல இயலவில்லை. கைசை பாஷை, ஆங்கிலம், தமிழ் என்று கலந்து கட்டி ஹா ஹா ஹா அ

      வீட்டு வேலைகள், ப்ளாக், அப்புறம் முக்கிய பணிகள் சில, உறவினர் வருகை, பயணங்கள் வேறு இடையில் வருது என்று நகர்கின்றது..இதனிடையில் பாதியில் நிற்கும் கதைகளை முடித்து எழுதவும் முயற்சி...

      குழந்தைகள் முதலில் பள்ளி செல்ல வேண்டும் ஸ்ரீராம்...அதுவும் ஒழுங்காகச் செல்ல வேண்டும். படிக்கும் என்பதை விட கற்கும் ஆர்வம் துளியும் இல்லை அவர்களின் சூழல் அப்படி...

      நீக்கு
  8. என் குழந்தைகள் வளரும் காலத்தில் பாஸும், பாஸின் அம்மாவும் குழந்தைகள் அடம்பிடித்துக் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்துக் கொண்டிருந்தபோது வேண்டாம் என்று சொல்லிப் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவு முயற்சித்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அது பரவாயில்லை ஸ்ரீராம் இப்போது குழந்தைகள் நன்றாக சமர்த்தாக இருக்கிறார்களே ஸ்ரீராம் அது போதும்...

      என் மகனுக்கு முயற்சித்தது காரணம் நான் சிறு வயதில் வளர்ந்த சூழல்...ஸ்ரீராம்...அப்புரம் அதன் பின்னான வாழ்க்கைச் சூழல்...மகனின் பிரச்சினை சூழல் என்பதால் அதற்காக நான் கற்றுக் கொண்டது அவ்வளவே.

      அதில் சொல்லியிருப்பது போல குழந்தைகள் முதலில் அப்படி இருந்தாலும் பின்னாளில் நல்ல புரிதல் வந்துவிட்டால் மாறிவிடுவார்கள் அவர்களும் நிறைய கற்றுக் கொண்டுதானே வராங்க...

      அப்புறம் இங்கு சொல்லப்பட்டது பொதுவானது தான் ....யதார்த்தம் நிறையவே மாறுபடும். நாம் என்னதான் நல்ல முறையில் வளர்த்தாலும் குழந்தைகள் பின்னாளில் மாறுவதும் நடக்கலாம்..முதலில் மோசமாக இருப்பவர்கள் பின்னால் மிக மிக நல்ல குழந்தைகளாகவும் வரலாம்....ஸோ முயற்சி மட்டுமே நமது....மற்றவை எல்லாம் நம் கையில் இல்லை...

      நீக்கு
  9. மொத்தத்தில் அருமையான வழிமுறைகளை சொல்லி இருக்கிறீர்கள். சொல்லி இருப்பதல்ல, நீங்கள் அதைப் பின்பற்றுகிறீர்கள் என்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் நானும் ஒன்றும் பெர்ஃபெக்ட் எல்லாம் கிடையாது. ஹா ஹா ஹா...என்னிடமும் நிறைய மாற வேண்டியவை இருக்கு....என் மகன் இப்போது பல விஷயங்களில் என்னை வழி நடத்துகிறான்....நானும் தவறு செய்ய வாய்ப்புகள் உண்டே. என் வார்த்தைகளைக் கூட அவன் திருத்தித் தருகிறான்..இப்படி பேசினால் நல்லாருக்கும் என்று...

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. இது சீரியஸ் டாபிக். மெதுவா எழுதறேன்.

    குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப கடினமான வேலை. அது முழு உத்தியோகத்துக்குச் சமம்.

    பொதுவா, நாம செய்யாம குழந்தைகளுக்கு அறிவுரை சொன்னா அவங்க நம்மை நம்ப மாட்டார்கள், கேட்க மாட்டார்கள்.

    நீங்க ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை. கொஞ்சம் அல்ல நிறையவே சீரியஸ் டாப்பிக்தான். மெதுவா வாங்க சொல்லுங்க அவசரம் இல்லையே...

      நானும் அடிக்கடி சொல்லுவது ஆய கலைகள் 64 ல் மிக மிக மிகக் கடினமான கலை குழந்தை வளர்ப்பு அதுவும் இப்போதைய காலகட்டத்தில் நியூக்ளியர் ஃபேமிலி செட்டப்பில் மிக மிக மிகக் கடினம்...

      அதே நாம் உதாரணமாகவும் இருக்கணும் சொல்வதை விட அதுதான் சிறந்தது என்றும் தோன்றும்....ஆனால் அதுதான் மிக மிகவும் கஷ்டம்..சொல்வது எளிது செய்வது கடினம் என்பதால்....

      மற்றொன்று நாம் பெற்றோர் சொல்வது செய்வது எல்லாமே சரி என்றும் சொல்வதற்கில்லை....நாம் செய்வது சரி என்று நமக்குப் படும் ஆனால் அது மற்றவர்க்கு சரியில்லை என்று தோன்றலாம்....இது வைஸ் வெர்சா. நம் குழந்தைகள் நாம் செய்யும் தவறை சுட்டிக் காட்டினால் நாம் அதை ஏற்கும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும். அட்லீஸ்ட் அவர்கள் என்ன சொல்ல வராங்கன்றதை காது கொடுத்துக் கேட்கவேனும் செய்யணும். அல்லாமல் நான் சொல்வதுதான் சரி நீ கேட்டே ஆகனும் இது தான் சரி, நான் பெரியவ நீ சின்னவ என்ன சொல்லுறது....எனக்கு மரியாதை கொடுக்காம என்ன பேச்சு என்று முயலுக்கு மூன்று கால் என்று சொன்னால் அதுவும் சரியல்ல. தந்தைக்கு உபதேசம் செய்த முருகன் போல் நம் குழந்தைகள் நமக்கு நல்ல அறிவுரைகள் கொடுத்தால் அதையும் ஏற்க அந்த இடத்தில் நம் ஈகோவை அப்புறப்படுத்திவிட்டு மனம் வைக்க வேண்டும். மிகச் சிறு வ்யதிலேயே இப்படி கிவ் அன்ட் டேக் வந்துவிட்டால் தோழமையும் வந்துவிடும்...டிஸ்கஷன் ஃபார்மில் போகும்...நல்ல உறவும் வளரும்..

      மிக்க நன்றி நெல்லை...

      நீக்கு
    2. சில சமயம் என் பெண், 'சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் செய்தது சரி' என்பாள் (காசை கன்னா பின்னாவென அவங்க செலவழிக்கக் கொடுக்கமாட்டேன்). 'சில நிகழ்ச்சிகளைச் சொல்லி நீங்க செய்தது தவறு' என்பாள். நான் உடனே 'என்னை மன்னிச்சுடு'ன்னு சொல்லிடுவேன். சமீபத்துல நான் ஒரு முடிவு எடுத்தபோது, அவ, 'நீங்க சொல்றது சரி இல்லை. இன்னும் சில வருஷம் போனபிறகு, மன்னிச்சுடுன்னு சொல்லப் போறீங்க அதுனால என்ன உபயோகம்' என்றாள். அப்புறம் யோசித்து அவள் சொன்னமாதிரியே செய்தேன். எதுக்குச் சொல்றேன்னா, பசங்களுக்கு அவங்க செய்யற தவறு சரி எல்லாம் நல்லாத் தெரியும். தவறைக் கண்டித்தால் அப்போ கோபப்பட்டாலும், சமாதானமாயிடுவாங்க. 'சரி'யைக் கண்டித்தால் அவங்க மனசுல அது பிடிக்காமலேயே போயிடும்.

      ஆனா பசங்கள்ட, 'நண்பர்கள்' போல பழகக்கூடாது என்ற தியரியில் வளர்ந்தவன் நான்.

      நீக்கு
    3. //ஆனா பசங்கள்ட, 'நண்பர்கள்' போல பழகக்கூடாது என்ற தியரியில் வளர்ந்தவன் நான்.///

      இது சிலசமயம் சரிபோலவும் தோணும், சிலசமயம் தப்பாகவும் தோணும், ஆனா என்னைப்பொறுத்து கணவன் மனைவிக்குள் நல்ல அந்நியோன்னியம் இருப்பின், பிள்ளைகளோடு அப்பா நண்பனாக இருப்பதே நல்லதென்பேன், ஆனா கணவன் மனைவிக்குள் பூசல் இருப்பின், கணவன் அதிகம் நட்புக் காட்டினால் பிள்ளைகளோடு, அது பிற்காலத்தில் பிள்ளைகள் அப்பாவை மரியாதைக் குறைவாக்கிடவும் இடமுண்டு... சரியாக விளக்கி எழுத முடியவில்லை ரயேட்டா இருக்கு ஹா ஹா ஹா..

      நீக்கு
    4. நெல்லை மிக்க நன்றி கருத்திற்கு....

      முதல்ல சொன்னது அப்படியே ...அதே..

      கடைசி வரி ம்ம்ம்ம்ம் என் கருத்து மாறுபடும் மேபி நான் வளர்ந்த சூழல் அப்படியாக இருந்ததால் இருக்கலாம்...

      கீதா

      நீக்கு
  11. மிகவும் சிக்கலான விஷயங்களை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி.

      ஆமாம் சிக்கலான விஷயம்தான்....

      நீக்கு
  12. போஸ்ட் படிச்சு வியந்து போனேன் கீதா, மிக அழகாக மிக அருமையாக குழந்தைகளைக் கையாளும் விதம் பற்றி எழுதியிருக்கிறீங்க, முதலில் அதுக்கு வாழ்த்துக்கள்.. போஸ்ட் படிக்கவே புரியுது மிக நல்ல ஒரு தாயாக இருந்திருக்கிறீங்க.. இருக்கிறீங்க என்பது.

    நானும் இப்படித்தான், அவர்களோடு ஆடுவேன் பாடுவேன் கேம் விளையாடுவேன் ஆனா கண்டிப்பாகவும் இருப்பேன். இப்பவும் என்னோடு எல்லாம் பேசுவார்கள், அதே சமயம் என் சொல்லுக்குப் பயப்படுவார்கள்.. கட்டுப் படுவார்கள்.. இது அப்பாக்களுக்கு கொஞ்சம் கஸ்டமே:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அதிரா.

      ஆனால் நான் ஒன்றும் பெரிய அளவில் எல்லாம் இல்லை அதிரா. நான் இன்னும் கற்க நிறைய உள்ளது....நம் நட்புகள் குழுக்களிலேயே இருக்காங்க வல்லிமா, காமாட்சிம்மா, கீதாக்கா, கோமதிக்கா, பானுக்கா என்று அம்மாக்களாக இருந்து இப்ப பாட்டிகளானவர்கள்...(ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ உங்களை விட்டுப் போட்டேனே!!! உங்களையும் சேர்த்துத்தான்!!! ஜோக்ஸ் அபார்ட்...நிஜம்மா நீங்க ஏஞ்சல் இருவரிடம் இருந்தும்) எல்லோரிடமும் இருந்தும் கற்றுவருகிறேன். நான் இன்னும் கற்க வேண்டியவை நிறைய இருக்கு அதிரா...என்னை மாற்றிக் கொள்ளவும் இருக்கு...

      குழந்தைகளோடு குழந்தைகளாக மாறும் போதுதான் நீங்கள் சொல்லியிருப்பது போல் கண்டிப்புடன்...இருந்தால்தான் வின் வின் சிச்சுவேஷன் உருவாகும்...

      மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  13. நீங்கள் சொல்லும் தெருவும் குழந்தைகளும், இப்போ புது ஊரில் கிடைத்திருப்பவர்களோ.. இப்படித்தான் இருக்கோணும்.. எனக்கும் இப்படிப் பாடம் சொல்லிக்கொடுப்பது ரொம்ப பிடிக்கும், சின்ன வயசிலேயெ என்னை விடச் சின்னாக்களுக்கு கூப்பிட்டு வச்சு படிப்பிச்சிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா இங்கு கிடைத்தவர்கள்தான். சென்னையிலும் உண்டு. ஆனால் வீட்டிற்கு வர மாட்டார்கள் ஏனென்றால் நாங்கள் இருந்தது ஃப்ளாட்...திருவனந்தபுரத்தில் இருந்தப்ப நிறைய உண்டு. ஆனால் இப்போது அவர்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தைகளும் இருக்கிறார்கள்.

      இங்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு நான் கன்னடம் கற்றுக் கொண்டே ஆகவேண்டும். இக்குழந்தைகளுக்கு ஆங்கிலம் கொஞ்சம் கஷ்டம்...ஐசிஎஸ்ஸி சிலபஸில் படித்து இப்போது பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகள் மட்டுமே ஆங்கிலம் புரிந்து கொள்கின்றார்கள். அவர்கள் தமிழ்க் குழந்தைகள் என்பதால் அவர்களுக்குத் தமிழ்ல சொல்லிடலாம். ஆனா மத்தவங்களுக்கு கண்டிப்பா நான் கன்னடம் கற்றே ஆகனும் அதுதான் கடினமாக இருக்கு...ஹா ஹா ஹா

      நீக்கு
  14. உண்மைதான் குழந்தைகளைத் திருத்தினால் போதாது, நாம் முன்னோடிகளாக இருந்து காட்ட வேண்டும். நானும் ஸ்கூலில் அப்படித்தான் சில வேலைகள் செய்ய வைப்பேன்.. இதைச் செய்தால்.. இதைச் செய்ய விடுவேன் எனச் சொல்லுவேன், உடனே செய்வார்கள்.. செய்திட்டால் நானும் வாக்கை காப்பாற்றிக் குடுப்பேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நாம் உதாரணமாக இருக்கனும் அது பொறுப்பு நிறைய வந்துரும்...ஆனால் நாமும் மனிதர்கள் தானே தவறுவோம் தான். தவறும் போது பிள்ளைகள் கேள்வி கேட்பார்கள் அதை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும் ஈகோ இல்லாமல்....என்னை என் மகன் கேட்பதுண்டு..ஓரிரு தடவை...ஏம்மா நீ எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டு இப்ப நீயே இப்படிச் சொல்லுறியேம்மான்னு.......நான் உடனே .தப்பா சொல்லிட்டேன்ல ..நான் கவனமா இருப்பேன் இனி அப்படினு சொல்லிடுவேன்...

      மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  15. //இவர்களில் மூன்று சிறு பெண் குழந்தைகளைத் தவிர பதின்ம வயதுக் குழந்தைகள் யாரும் இந்த வருடம் பள்ளிக்குச் செல்லவில்லை. வறுமை ஒரு புறம்.//
    இந்தக் காலத்திலும் ஸ்கூல் போகாமல் இருக்கிறார்களோ.. இதைக் கவனிக்க ஊரில் ஏதும் குழு அப்படி இருக்காதோ.? வெளிநாடுகளில் சோசல் செர்வீஸ் என இருப்பதைப்போல... அப்போ இவற்றை எல்லாம் யார்தான் கவனிப்பார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அதெல்லாம் சர்வ சகஜம் இங்கு அதிரா. வெளிநாடுகளில் உண்டு என்று தெரியும்....ஆனால் இங்கு பங்களூரில் அப்ப்டி இருப்பதாகத் தெரியலை.

      ஆனால் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் இப்படியான சிறிய ஊர்களில் அதாவது கிராமப்புறத்தில் பிள்ளைகள் ஸ்கூல் வராமல் நின்றுவிட்டால் லீவு நாட்களில் ஆசிரியர்கள் வீட்டிற்கு சென்று ஏன் வரவில்லை என்று காரணம் அறிந்து பள்ளிக்கு மீண்டும் அனுப்பச் சொல்லி குழந்தைகளிடமும் பேசுவதுண்டு. நம் வலைப்பதிவர் மது/கஸ்தூரி ரங்கன் இதைச் செய்தது பற்றி பதிவுகள் போட்டிருந்தார்.

      நானும் துளசியின் வீட்டிற்குச் சென்றிருந்தப்ப அவர் மனைவி (அவரும் ஆசிரியர்) இப்படிச் சென்ற போது நானும் கூடச் சென்றதுண்டு. மலைகிராமங்கள் இல்லையா அவர்கள் இருக்கும் பகுதி...

      மிக்க நன்றி அதிரா

      நீக்கு
    2. ஓ ... மிக்க நன்றி கீதா பதில்களுக்கு..

      நீக்கு
  16. பொதுவாக 3 வயதுவரை குழந்தைகளுக்குப் பிடிவாதம் அதிகமாகத்தான் இருக்கும், பெற்றோர் தான் அதைக் கவனமாகக் கையாள வேண்டும், சில பெற்றோர் செல்லம் கொடுக்கிறோம் பேர்வழி என வெளிக்கிட்டு ஓவர் பிடிவாதக் குழந்தையாக வளார்த்திடுவினம், அழுதால் கிடைக்கும் எனும் எண்ணம் அவர்களுக்குள் வர விட்டிடக்கூடாது.

    அழகான பதிவு கீதா, நிறையப் பேசலாம்.. ஆனா உண்மையில முடியல்ல ச்சோஓஓஓ ரயேட்டா இருக்கு.. வேர்க் இல்லாத நாட்களில் எனில் மின்னி முழக்கலாம்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா சரிதான். பெற்றோரின் கையில் உள்ளது என்றாலும் சில குழந்தைகள் நல்ல சூழல் அமைந்திருந்தால் புரியும் பக்கும் இருந்தால் மிக நன்றாக ஆகிவிடுவார்கள்.

      ஆமாம் நிறையப்பேசலாம் ....நானும் இப்பதிவோடு நிறுத்திவிட்டேன்....கருத்துகளில் சொல்லிக் கொள்ளலாம் என்று...

      மிக்க நன்றி அதிரா...

      நீக்கு
  17. அனுபமிக்கவரின் அனுபவ பதிவு மிக நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மதுரை கருத்திற்கு...உண்மைதான் என் அனுபவங்களே எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்தது உண்டுதான்...

      நீக்கு
  18. நல்ல அனுபவங்கள். மற்றக் குழந்தைகளோடு உங்கள் செல்லக் கண்ணழகியும் அமர்ந்து பாடம் படிக்கிறாள் போல! குழந்தைகளைச் சின்ன வயசில் இருந்தே ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே நல்லது. ஆனாலும் சிலர் அதைச் செயல்படுத்த அனுமதிப்பதில்லை என்பதோடு விரும்புவதும் இல்லை. அந்தக் குழந்தைகள் புத்திசாலிகளாகவும் மன முதிர்ச்சி அடைந்தவர்களாகவும் இருந்தால் எப்படியோ சமாளித்து முன்னுக்கு வந்துடுவாங்க. இல்லைனா கஷ்டம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஆமாம் அக்கா செல்லமும் அவர்களொடு அமர்ந்து இருக்கா.

      ஆமாம் 5 வயதுக்குள் என்று சொல்வது சரியான ஒன்று அக்கா. ஐந்தி வளையாதது ஐம்பதில் வளையாது என்பது.
      நீங்க சொன்னது போல செயல்படுத்த அனுமதிக்காமல் நம் சுற்றி உள்ளவர்கள் இருப்பார்கள் ரொம்பச் சரி அக்கா...ஆமாம் புத்திசாலிகளாக இருந்து பக்குவமும் இருந்துவிட்டால் நன்றாகிவிடுவார்கள் இல்லை நா விபரீதமாகத்தான் போகும்...

      மிக்க நன்றி கீதாக்கா

      நீக்கு
  19. ஸ்ரீராம் சொன்னமாதிரி எங்க உறவினர்கள் எல்லோருமே எங்க குழந்தைகளிடம் நான் கண்டிப்புக் காட்டி வளர்த்தப்போ எல்லாம் கேலி பேசியதோடு அல்லாமல் குழந்தைகளிடமே அம்மா அடிப்பா என்றே சொல்லிக் கொடுப்பாங்க. எங்க குழந்தைகள் ஓரளவுக்குப் புரிதலோடு இருந்ததால் பிரச்னை இல்லை. இப்போ அவங்களே எங்க குழந்தைகளைத் தான் மத்தவங்களுக்கு முன்மாதிரியாக் காட்டிட்டு இருக்காங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கம் நடந்தது அக்கா. உன் அம்மா ஸ்டிரிட்க்ட் விட மாட்டா...பொஸஸிவ் என்றெல்லாம் கூட....ஆனால் மகனும் என்னிடம் வந்து சொன்னதே இல்லை அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்று...பிறர் மூலம் கேட்டதே...நான் இந்தக் காதில் வாங்கி மறு காது வழி விட்டுடுவேன்....இப்போ நீங்க சொல்லிருக்காப்புல நிலைமையே வேறு...அதே...

      மிக்க நன்றி அக்கா....

      நீக்கு
  20. அனைவருமே அறிய வேண்டிய அருமையானப் பதிவு
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்

      நீக்கு
  21. >>> சொல்முகூர்த்தம் - என்று சொல்லப்படுவது எவ்வளவு மகத்துவமானது..<<<

    சிறப்பான பதிவு...
    பெற்றோர் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக உணர்ந்து நடந்து கொண்டால்
    எந்த ஒரு பிரச்னைகளும் பிள்ளைகள் வாழ்வில் நேராது...

    பிள்ளைச் செல்வங்கள் பிள்ளைச் செல்வங்களாகவே இருப்பர்...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை அண்ணா....உங்களைப் போல என்னால் எழுத வராது அண்ணா. நீங்கள் அழகான கதைகள் எல்லாம் சொல்லி எழுதிடுவீங்க...

      மிகவும் சரி பெற்றோர் உளப்பூர்வமாக உணர்ந்து நடக்கணும் பிரச்சனைகள் வராது...நல்ல வரிகள் அண்ணா...

      மிக்க நன்றி துரை அண்ணா

      நீக்கு
  22. //படிப்பைப் பற்றி மட்டும் பேசாமல் பல கதைகள் சொல்லி, விளையாட்டுகளும் விளையாடி, விளையாட்டுடனேயே சில நல்ல விஷயங்களையும், கதைகளும் சொல்லி அவர்கள் லெவலுக்கு இறங்கி தோழமையுடன் பழகினால் குழந்தைகள் நம்மிடம் கற்க வருவார்கள் என்பது இங்கு கொஞ்சமேனும் நிரூபணம் ஆகிறது. பாடத்தில் சந்தேகம் கேட்கவும், ஆங்கிலம் கற்கவும் வருகிறார்கள். //

    நன்றாக சொன்னீர்கள் கீதா. வீட்டுக்கு அருகில் இருக்கும் குழந்தைகளை நல்வழிபடுத்துவது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா என்னால் முடிந்த அளவு கடுகளவுதான்....முதலில் அவர்களது தாய்மொழி நான் கற்கணுமே....எப்போதுமே அவரவர் தாய்மொழியில் பேசினால்தானே நல்லது...சிறப்பாகவும் செய்ய முடியும் இல்லையா...

      மிக்க நன்றி கோமதிக்கா கருத்திற்கு

      நீக்கு
  23. மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
    என் அம்மவுக்கு ஏதாவது நாம் செய்வது பிடிக்கவில்லை என்றால் இப்படி உங்களை மாதிரிதான் நம்மிடம் பேச மாட்டார்கள், நாங்கள் செய்த தப்பை சொல்லி மன்னிக்க சொன்னபிறகுதான் பேசுவார்கள். அம்மாவை சுற்றி சுற்றி வருவோம். அப்பா எப்போதும் ஒரு சத்தம் கொடுப்பார்கள் உடனே அடங்கி விடுவோம். அப்புறம் ஒரே கொஞ்சல் தான் அப்பா.

    அம்மா சொல்வது என் அம்மா கண்ணை உருட்டி விழித்தால் பயந்து போவோம் நாங்கள், இப்போது உங்களுக்கு நிமிட்டாபழம், பிரம்பபழம் வேண்டி இருக்கு என்று.

    காலம் மாறி கொண்டே இருக்கிறது. வளர்ப்பு முறைகள் மாறி வருகிறது.

    நீங்கள் சொல்வது காலம் முழுவதும் ஏற்றுக் கொள்வது.
    வாழ்த்துக்கள் அருமையான கட்டுரைக்கு.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! கோமதிக்கா உங்க அம்மாவும் அப்படியா...சூப்பர்...

      என் அனுபவத்தில் என்னைச் சுற்றியிருந்த பெரியவர்களைப் பார்த்து நான் ஒரு வேளை திருமணம் என்று ஒன்று செய்து கொண்டால் குழந்தை என்பது பிறந்தால் குழந்தையிடம் எப்படி இருக்கக் கூடாதுஎன்பது நிறைய...

      ஆமாம் அக்கா காலம் மாறிக் கொண்டே வருது. வளர்ப்பு முறைகளும் மாறிவிட்டன.

      மிக்க நன்றி கோமதிக்கா பாராட்டிற்கும் வாழ்த்திற்கும்

      நீக்கு
  24. குழந்தைகள், கண்ணழகி படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா. கண்ணழகி இவர்கள் வந்தால் இவர்களுடன் இருப்பாள் ஆனால் என்னுடனே என் அருகில் காலடியில்தான் இருப்பாள்....நான் உள்ளே எழுந்த் சென்றால் என்னுடன் வந்துவிடுவாள்...

      நீக்கு
  25. மிக அருமை கீதாக்கா..

    உங்கள் எண்ணங்களும் , செயல்களும், எழுத்துக்களும்..

    நிறைய படம் படிக்க வேண்டும் தங்களிடம்..

    என்ன ஒரு அருமையான அனுபவ வரிகள் ...இவற்றில் சில நாங்களும் செய்கிறோம் ..

    அடுத்து அந்த சின்ன சீறார்கள் ..என்ன சொல்ல பல பெற்றோர் தான் பெறாது தன் பிள்ளை பெற வேண்டும் என கடின பாட முறைகளில் சேர்த்து அவர்களும் கஷ்ட பட்டு , குழந்தைகளையும் படுத்துகிறார்கள் ...

    படிப்பு என்பது என்ன என்னும் மிக சாதாரண புரிதலே இப்பொழுதெல்லாம் மாறிவிட்டது அனைத்து மக்களிடமும் ..

    இதில் நம் புரிதல் சரியா , தவறா, என்னும் குழப்பம் வேறு..



    வெல்லும் வார்த்தைகள், கொல்லும் வார்த்தைகள் ஆஹா ..மனதில் நிறுத்திக் கொள்கிறேன்..

    அருமை ...

    பதிலளிநீக்கு
  26. மிக்க நன்றி அனு!.

    நீங்களும் உங்கள் குழந்தைகளை மிக நன்றாக வளர்க்கின்றீர்கள் என்பது உங்கள் எழுத்துகளே சொல்லிவிடும் அனு.

    உண்மைதான் அனுபவங்கள் நமக்கு நிறைய கற்றுத் த்ருகின்றனவே...

    //அடுத்து அந்த சின்ன சீறார்கள் ..என்ன சொல்ல பல பெற்றோர் தான் பெறாது தன் பிள்ளை பெற வேண்டும் என கடின பாட முறைகளில் சேர்த்து அவர்களும் கஷ்ட பட்டு , குழந்தைகளையும் படுத்துகிறார்கள் ...// ஆமாம் அனு இப்படி நிறைஅய்ப் பெற்றோர்கள் இருக்கிறார்கள். பணத்தை விடுங்கள் குழந்தைக்குப் படிக்க முடியுமா அதற்கான சூழல் இருக்கான்னு பார்க்காமவும் சேர்த்திடறாங்க. கல்வி என்பதன் புரிதலே மாறிருக்கு நீங்க சொல்லிருப்பது போல....அதே....

    வெல்லும் வார்த்தைகள், கொல்லும் வார்த்தைகள் ஆஹா ..மனதில் நிறுத்திக் கொள்கிறேன்..// மனசுல வெச்சுக்கோங்க நன்றியை ஸ்ரீராமுக்குச் சொல்லிடுங்க....அவர்கிட்டருந்துதான் நான் கத்துக்கிட்டது....அழகான வார்த்தைகள் இல்லையா....ஸ்ரீராம் இப்படி நிறைய அழகான வார்த்தைப் பிரயோகம் செய்வார். நான் ரசிப்பேன்....

    மிக்க நன்றி அனு....

    பதிலளிநீக்கு
  27. மிக நல்ல பதிவு. உங்கள் நேரத்தை உபயோகமாக செலவழிக்கிறீர்கள் என்று தெரிகிறது. சந்தோஷம். விரைவில் கன்னடம் பேச ஆரம்பித்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன்.
    பட்டாசு வெடிக்கும் விஷயத்தில் கைட் பண்ணிய விதம் அருமை. கீப் இட் அப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பானுக்கா...

      விரைவில் கன்னடம் கற்றுக் கொண்டு விடுவேனா...ஆஆஆ அக்கா கொஞ்சம் கஷ்டமாக இருக்கு....டக்கென்று பதிய மாட்டேங்குது....

      மிக்க நன்றி அக்கா...மீண்டும்

      நீக்கு
  28. சொல்முகூர்த்தம்.. அழகான சொல்லாடல்.. எப்போதுமே நல்ல சொற்களையே பேசனும். தேவதைகள் ஆசீர்வாதம் ஒருபக்கமிருந்தாலும், நம்ம குழந்தைங்க நம்மை பார்த்து கெ(கே)ட்ட வார்த்தைகளை பேச வாய்ப்பிருக்கிறது. இன்றைய அவசரக்கதியான உலகம் பிள்ளை வளர்ப்பை கடினமாக்கிடுச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜி சொல்முகூர்த்தம், வெல்லும் சொற்கள், கொல்லும் சொற்கள் இது எல்லாமே நான் ஸ்ரீராமிடம் இருந்து கற்றுக் கொண்டவை. அங்கு அவர் பதிவு போட அதை வைத்துத்தான் ங்கும்...ஸோ அவருக்குத்தான் நன்றி சொல்லனும்...

      ஆமாம் ராஜி பசங்க நம்மகிட்டருந்து கெட்டதை எளிதாகக் கற்றுக் கொண்டுவிடுவாங்கதான். அது அப்படியே பௌன்ஸ் ஆகவும் கூடும்....

      மிக்க நன்றி ராஜி...

      நீக்கு
  29. நல்ல காரியங்கள் செய்ய முயல்கிறீர்கள். அதற்கான தகுதி உடையவர்தான் நீங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் அண்ணா ஆஹா! மிக்க நன்றி அண்ணா ஊக்கமான வார்த்தைகளுக்கு

      கீதா

      நீக்கு
  30. வணக்கம் சகோதரி

    குழந்தைகளை எப்படி பக்குவமாக வளர்க்க வேண்டுமென சொல்லியிருக்கிறீர்கள்.மிகவும் அழகான சொல்லாடல்கள். நீங்கள் இங்கு செய்யும் சேவை மகத்தானது. குழந்தைகளை கண்டிப்பாக கண்டித்துத் திருத்த முயல கூடாது. எதையுமே அவர்களுக்கு புரிகிற மாதிரி சொல்லித்தான் பழக்கி விடனும். உண்மையான வார்த்தைகள். வெல்லும் வார்த்தைகள். கொல்லும் வார்த்தைகள் வாக்கிய அமைப்பு நன்றாக இருக்கிறது. பதிவு மிகவும் நன்றாக உள்ளது. இதன் முதல் பகுதியையும் படித்து பின் கருத்திடுகிறேன். நீங்கள் பள்ளி ஆசிரியராக பணி செய்கிறீர்களா? பணி மாற்றம் காரணமாகத்தான் பெங்களூரா?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா ஸாரி கமலாக்கா. மிகவும் தாமதமாகத்தான் இன்றுதான் பார்த்தேன். ப்ளாக் ஓபன் செய்வதே இல்லையா அதனால் தெரியாமல் போய்விட்டதுக்கா..ஸாரி..

      மிக்க நன்றி அக்கா கருத்திற்கு. நான் ஆசிரியை எல்லாம் இல்லை அக்கா...வெட்டிதான்..ஹா ஹா ஹா.....

      மிக்க நன்றி அக்கா...

      நீக்கு