ஞாயிறு, 30 டிசம்பர், 2018

மிஸஸ். விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)


புத்தகம் பற்றிய அறிமுகம், விமர்சனம் எழுதி மூன்று வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. அதுவும் குறிப்பாக விமர்சனம் எல்லாம் துளசிதான் எழுதுவார். எனக்கு அவ்வளவாக எழுத வராது. நான் என் கருத்துகளை இடையில் நுழைப்பது வழக்கம். நான் மட்டும் தான் புத்தகம் வாசித்தேன். துளசி இன்னும் வாசிக்கவில்லை. வலையில் பலரும் மிக அழகாக நூல் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் எனக்கு அதை அத்தனைச் சிறப்பாக எழுத வராது. எனவே, மலர் மற்றும் விசு! என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் எழுதியுள்ளேன். பிழையிருப்பின் பொறுக்கவும். இது இங்கு கருத்திடுபவர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது.  மிஸஸ். விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ்
(1983-1920)
மலர்-விசுமலர் (மலர்வண்ணன்)-விசு இருவருமே நம் பதிவர் நண்பர்கள். இருவரும் சேர்ந்து எழுதிய படைப்புதான் மிஸஸ். விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920).

விசுவாசத்தின் சகவாசம் எனும் முதல் புத்தகத்திற்கு அடுத்து விசுவின் இரண்டாவது புத்தகம் இது. (மலர்வண்ணனும் இணைந்து எழுதியிருக்கிறார்)

இந்த இரண்டாவது புத்தகத்தின் கதைக்களம் வேலூரைச் சுற்றியே வருகிறது. குறிப்பாக 80 களில் இருந்த வேலூர் டவுன்ஷிப் மற்றும் அதைச் சுற்றி. வேலூரைச் சுற்றியுள்ள சில இயற்கையான பகுதிகள் சொல்லப்பட்டிருப்பது ரம்மியம்.

கதையில் 1920 துகளில் வரும் பகுதியில் தொடங்கும் விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் பகுதியின் ஒரு அம்சம் கதையின் கடைசி முடிவு வரை தொடர்கிறது. இந்த 1920 பகுதியை மலர்வண்ணன் அழகிய தமிழில் எழுதியிருக்கிறார். மலரின் தமிழ் மிக அழகாகப் பயணிக்கிறது அப்போதைய பாலாறு நதியினைப் போலவே! அபிராமி அந்தாதிப்பாடல், நாட்டுப்புறப்பாடல் என்று அப்பகுதிக் கதையில் இழையோடச் சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது பொருத்தமாகவும். பங்கஜம், கெளுத்தி ட்ராக்கும், அந்தக் கதாபாத்திரங்களைச் சொல்லிய விதமும் அருமை. அதிலும் நிறைய தகவல்கள் ஆன்மீகத் தகவல்கள் + அந்த பீரியட் வரலாற்றை நல்லா கையாண்டிருக்கிறார் மலர். நல்ல தமிழில்!!. மலருக்குப் பாராட்டுகள்!

தந்தையை சிறு வயதில் நாயகன் இழந்திருப்பது போல அவன் வேலூரில் சந்திக்கும் கதையின் நாயகி உமாவும் அம்மாவை இழந்தவள். அம்மாவின் நினைவில் எப்போதும் வாழ்பவள். இவர்களுக்குள் நட்பு மலர்வதில் அப்போதைய ஆனந்தவிகடனில் வெளி வந்த தொடரான சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் ஒரு முக்கிய அம்சம்.

1920 - பங்கஜம் விஸ்வநாதன் ரிச்சர்ட், 83 ல் நாயகன் கிச்சா/விச்சு/ரிச்சி மற்றும் நாயகி உமா, எப்படி லிங்க் ஆகிறது என்பதை கதையை வாசிக்கும் போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். நான் இங்கு அதைப் பற்றிச் சொல்லிவிட்டால் கதையின் ஸ்வாரஸ்யம் போய்விடும் என்பதால் தவிர்க்கிறேன்.

வேலூரில் நாயகனுக்குக் கிடைக்கும் நட்புகள் மூலம், தான் அத்தனை வருடங்கள் ஏங்கிய அன்பு என்பதன் அர்த்தத்தை நாயகன் புரிந்து கொள்ளும் இடங்கள் இடங்கள் நெகிழ்ச்சி என்றால், உமா அண்ட் ரிச்சி/கிச்சா/விச்சு, இவர்களின் நண்பர்கள் ரகு, குரு, விஜய், எலி மாம்ஸ் வரும் பார்ட் எல்லாம் நகைச்சுவை மற்றும் அலப்பறைதான். எழுத்தாளர் விசுவின் ஸ்டைல் பளிச்! நகைச்சுவை கலந்த உரையாடல்கள், வார்த்தைகளை வைத்து விளையாடுவது, குறிப்பிட்ட வசனம்/வரி அவ்வப்போது ரிபீட் ஆவது, அவை எல்லாம் விசுவின் முத்திரை!

துடிப்பான வசனங்கள். ரேஸி ஸ்டைல்! நண்பர்கள் குழு மிக மிக அருமையான குழு. நல்ல புரிதல் உள்ள குழு. வாசிப்பவர்களைக் கண்டிப்பாகப் பொறாமைப்பட வைக்கும் நண்பர் குழு. அது போலவே உமா ப்ளஸ் கிச்சா/விச்சு/ரிச்சி காதல்! ஆனால் கடைசி வரை காதலைச் சொல்லிக்கொள்ளாமலேயே காதலிக்கிறார்கள். அந்தப் புரிதல், அவர்களின் உரையாடல்கள் எல்லாமே நகைச்சுவையுடனும் அதே சமயம் கருத்துடனும், உணர்ச்சிகளுடனும் சொல்லியிருக்கிறார். (இது என்ன கிச்சா.விச்சு/ரிச்சி? இதெல்லாம் நாயகனின் பெயர்கள்தான். அதை வைத்து ஆசிரியர் விசு எப்படி விளையாடியிருப்பார் என்பதைக் கதை வாசிக்கும் போது அறிந்தால்தான் ஸ்வாரஸ்யம்)

நாயகன் கிட்டார் வாசிப்பார் பாடுவார். நண்பர்கள் குழுவும் அப்படியே என்பதால் அருமையான ஆங்கிலப் பாடல்கள் மற்றும் 80களில் கொடிகட்டிப் பறந்த இளையாராஜாவின் பாடல்கள் பல சொல்லப்பட்டு கதையின் இடையில் விரவி வரும்.

காதல், பருவ வயது நட்புகள் அதுவும் ஆண்கள் வட்டம் என்று வரும் போது சில இடங்கள் அந்தப் பருவ வயது ஊர் சுற்றல்கள், கேளிக்கைகள் என்று வருவது யதார்த்தம் தான். இப்படிச் சொல்லும் போது உமா மீண்டும் மனதிற்குள் வருகிறாள்.

பொதுவாகப் பெண்களுக்குத் தன் ஆண் புகைப்பது, எப்போதேனும் குடிப்பது கூடப் பிடிக்காது. அதை ஏற்கும் மனம் கொண்டவர்கள் வெகு வெகு அபூர்வம். அந்த ஆணின் உண்மையான நல்ல மனதை அறிந்து அதில் அப்பட்டமான நம்பிக்கை வைத்திருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அப்படியான உண்மையான அன்பு – இதை நான் இங்கு காதல் என்று சொல்லமாட்டேன் – விச்சுவின் மீது இருந்ததால்தான் அவள் இறுதிவரை அப்படியே அதே வெல்லூர் உமாவாக இருக்கிறாள் என்பது ஒரே ஒரு வரியில் தெரிந்துவிடுகிறது – நம்மை அறியாமல் கண்ணில் நீர் வரவழைக்கும் பகுதி அது. அங்கு நிற்கிறாள் உமா! என்னவோ தெரியவில்லை மனதில் சில வருத்தங்கள் தோன்றாமல் இல்லை. மட்டுமல்ல உமா நாயகனுக்கு அவன் அம்மாவுடனான ஓர் அன்புப் பிணைப்பையும் ஏற்படுத்தும் இடங்கள் எல்லாம் மிக மிக நெகிழ்ச்சியானவை. உமா மனதில் மிக ஆழமாகப் பதிந்து போகிறாள்.

ரகு கேரக்டர் வாவ்! ரியலி எ க்ரேட் பெர்சனாலிட்டி! என்னதான் அவன் பெற்றோர் சீரற்ற பெற்றோர் என்பதால் வாழ்க்கையில் விரக்தியுடன் இருந்தாலும் நட்பிற்காக அவன் செய்வது மிகப் பெரிய தியாகம்! மனதில் உயர்ந்து நிற்கிறான்.

அவன் சட்டத்தில் சிக்கும் போதேனும் கொஞ்சம் அவன் பெற்றோரின் ரியாக்ஷன் ஏதேனும் கொஞ்சமேனும் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றியது. பெற்றோர் சீரற்றவர்கள் என்பதால் வாசகர்களின் யூகத்துக்கு விட்டிருப்பார் கதாசிரியர் என்று நினைக்கிறேன்.

பல இடங்கள் என்னை அறியாமலேயே சிரித்துவிட்டேன். சுகவீனம் கதாபாத்திரம் பேசுபவை, அவரும் மிலிட்டரி கதாபாத்திரமும் பேசுபவை எல்லாம் நகைச்சுவை. விசுவின் ஸ்டைல்!

ரசித்த வர்ணனை: காட்டினுள் கருவறைக்குள் இருக்கும் குழந்தைகள்!!! சூப்பர்ப்!!

பல நல்ல கருத்துகள் ப்ளஸ் தகவல்கள் – பாலாறுதான் ஜீவனே அங்குள்ள மக்களுக்கு, காடுதான் நம்மைக் காக்குது, உமாவின் ஈரமனது ஜெயில் கைதிகளுக்கு சாப்பாடு, விளையாட்டுச்சாமான்கள் கொடுப்பது, சிஎம்சி, நம் ராணுவம் மற்றும் வெல்லூர் புரட்சி பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்.

ஆங்கில உரையாடல்கள் 2013 ல் அமெரிக்க ஆங்கிலம் அதுவும் அமெரிக்காவில் என்று வரும் போது சரியே. அமெரிக்க ஆங்கில உரையாடல்கள் நன்றாக இருந்தாலும், வேலூரில் அந்த பீரியடில் நடக்கும் கதையில் வரும் போது அப்படிப்  பேசப்பட்டிருக்குமா என்று தோன்றியது. 

சில இடங்களில் சுஜாதாவின் வாசம் அடித்தது. அது குறையல்ல.

நாயகன் விச்சுவும் உமாவும் வேலையில் சேர்ந்த பிறகும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை எப்போதும் கசக்கும் என்பதாலோ என்னவோ மனம் அந்த உண்மை கற்பனையாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்தது. லைஃப் இஸ் நாட் ஃபுல் ஆஃப் ரோஸஸ் என்பதில் கூட இடையே முள்ளும் உண்டு என்பதை ஏற்கும் சக்தி மனதிற்குக் கிடையாதே! 

மொத்தத்தில் எழுத்தாளர் மலரின் அழகிய தமிழ் மற்றும் விசுவின் முத்திரையுடனான எழுத்து நடையில் நல்லதொரு கதை. கதையின் ஒவ்வொரு சாப்டருக்குமான தலைப்பும் ஈர்ப்பதோடு அப்பகுதியில் என்ன சொல்லப்பட்டிருக்கு என்பதும் தெரியும்.

காதலர்கள் தங்கள் காதலைச் சொன்னார்களா? இணைந்தார்களா? முடிவு என்ன என்பதை கதையில் தெரிந்து கொள்ளுங்கள். கதைப் பகுதியுள் நான் அதிகம் நுழையவில்லை. நுழைந்தால் கதை முழுவதும் தெரிந்தது போல் ஆகிவிடும் என்பதால் மீதி வெள்ளித்திரையில் என்பது போல் நானும் மீதி புத்தகத்தில் என்று சொல்லிக் கொள்கிறேன்.

புத்தகம் கிடைக்கும் சுட்டி இதோ. அங்கு ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

மிஸஸ். விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ்
(1983-1920)


ஆசிரியர்கள்: மலர்-விசு

பதிப்பகம்: வாசகசாலை பதிப்பகம்

புத்தகத்தின் பக்கங்கள்: 380
விலை: ரூ 380


.........கீதா39 கருத்துகள்:

 1. ஆஹா !! வித்தியாசமான விமரிசனம் .சின்னநூலிழைகூட கதை பற்றி காட்டிக்கொடுக்காம அதே சமயம் இன்டெரெஸ்டிங்கா விமரிசனம் செஞ்சிருக்கீங்க கீதா . 1920 விஷயத்தை கதையில் சொல்லியிருக்கிறார்கள் என்றால் க்ரேட் .கதையெழுதிய விசு அண்ணா மற்றும் மலர் மேலும் அழகான விமரிசனம் தந்த கீதா மூவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா !! வித்தியாசமான விமரிசனம் .சின்னநூலிழைகூட கதை பற்றி காட்டிக்கொடுக்காம அதே சமயம் இன்டெரெஸ்டிங்கா விமரிசனம் செஞ்சிருக்கீங்க//

   நிஜம்மாவா?!!! ஆஆஆஆ... மிக்க நன்றி ஏஞ்சல் .......கருத்திற்கு...

   கீதா

   நீக்கு
 2. அருமையாக விமர்சித்து உள்ளீர்கள் நூலை படிக்கும் ஆவலைத் தூண்டும் வகையில் இருக்கிறது.

  திரு.மலர் மற்றும் நண்பர் திரு. விசு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  பிறகு இணைப்பிற்கு செல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரி

  அருமையான கதையம்சம் நிறைந்த புத்தகமாகத்தான் இருக்கிறது. அதை நீங்கள் தெளிவாக தங்களுக்கே உரித்த நடையில், மிக அழகாக கதையின் முடிவை கூறி விடாமல் கதையின் சாராம்சத்தை மட்டும் விமர்சித்து உள்ளீர்கள். கதை எழுதிய சகோதரர்கள் திரு. மலர், திரு. விசு அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுடன் வாழ்த்துக்கள். தங்கள் விமர்சனம் கதை படிக்கும் ஆவலை தூண்டுகிறது. தங்களுக்கும் மனம் நிறைவான வாழ்த்துகளுடன் நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. மிக அழகான விமர்சனம். படிக்கத் தூண்டும் அளவு மட்டும் வெளிப்படுத்தி ஆர்வத்தைத் தூண்டி இருக்கிறீர்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும் புத்தகப் படைப்பாளிகளுக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜம்மாவா நல்லாருக்குன்றீங்க ஸ்ரீராம்? நீங்கல்லாம் ரொம்ப அழகா எழுதுவீங்க விமர்சனம் எல்லாம்....உங்கள் வாசிப்பு அப்படியானது....அத்தனை வாசிப்பில்லாத எனக்கு எழுத வருமா என்ற ஒரு சந்தேகம் எனக்குள்....மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கு.

   நீக்கு
 5. சுட்டிக் கொடுத்திருப்பது சரிதான். ஆனால் நீங்கள் புத்தகத்தின் பெயர், ஆசிரியரின் பெயர், பதிப்பகம், பக்கங்கள், விலை போன்ற விவரங்களையும் பதிவிலேயே சேர்த்துக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்ப கொடுத்திருக்கேன் ஸ்ரீராம் பாருங்க...நான் நேத்து விசுவிடம் கேட்க நினைச்சு விட்டுப் போயிருச்சு....இப்ப சேர்த்திட்டேன்..

   மிக்க நன்றி ஸ்ரீராம் நினைவுபடுத்தியமைக்கு...

   கீதா

   நீக்கு
 6. சாதாரணமாக காலம் பற்றிக் குறிப்பிடும்போது 1920 -1980 என்று குறிப்பிடுவார்கள். இங்கு 1983-10920 என்று குறிப்பிட்டிருப்பது ஏன் என்கிற ஆவலைத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதை தொடங்குவது அந்த வருடத்தில்...அப்புறம் இடையில் இடை இடையே 1920க்குச் செல்கிறது...அது எப்படி 83 உடன் இணைந்து 13 வரை ஒரு சிறிய அம்சமாகப் பயணிக்கிறது என்பது கதையில் ...ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 7. படிக்கத் தூண்டும் விமர்சனம்
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 8. வாங்கி படியுங்கள் என்று சொல்லுமளவிற்கு இருந்தால் தான் விமர்சனம்... அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹப்பா அப்படி இருக்குதா?!!

   மிக்க நன்றி டிடி! கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 9. அருமையான விமரிசனத்திற்கு ஆயிரம் கோடி நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 10. விசு அண்ணா புத்தகமா?! வேலூரில் சைட் அடிச்சது, கடலை போட்டதுலாம் இருக்குதுன்னு காத்துவாக்கில் ஒரு சேதி வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா ஹா ஹா ஹா ராஜி ஓ ஃபேஸ்புக்ல வந்துருக்கும்...இல்லையா....

   மிக்க நன்றி ராஜி கருத்துக்கு...

   கீதா

   நீக்கு
  2. ஹெலோ.. குனிஞ்ச தலை நிமிராமல் வாழ்ந்தவானுக்கும்.. ம்க்கும்!

   நீக்கு
 11. வாவ்... கீதா
  விமர்சனத்திற்கு நன்றி
  அன்புடன்
  மலர்

  பதிலளிநீக்கு
 12. எனக்கு இவங்கல்லாம் யாருனே தெரியாது! முழுதும் புதியவர்கள்! புத்தகம் ஒன்று இப்படி வெளி வந்திருப்பதும் தெரியாது. உங்கள் விமரிசனம் மிக அருமையாகத் தேவையானவைகளை மட்டுமே சொல்லிச் செல்கிறது. நல்லா எழுதி இருக்கீங்க! நானெல்லாம் வளவளனு எழுதுவதோடு கதையையும் சொல்லி இருப்பேன். இங்கே கதை பற்றிய ஆவல் தூண்டப்பட்டுள்ளது. விமரிசனம் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. பாராட்டுகள், வாழ்த்துகள். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா மிக்க நன்றி அக்கா. உங்களின் ஊக்கம் மிகு வரிகளுக்கு. எடுத்துக்காட்டுனு எல்லாம் சொல்லி ஹையோ என்னை ரொம்பவே ஷையாக வைச்சுட்டீங்க.
   முகநூலில் வந்திருக்கும்...அக்கா..இது

   புத்தாண்டு வாழ்த்துகள்.

   கீதா

   நீக்கு
 13. ஓ இந்தப் புத்தகம் ட்றுத்தும் போட்டிருந்தாரெல்லோ அங்கு பார்த்ததாக நினைவு.. ஆனா அவர் விமர்சனம் எழுதவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா வாங்க....மதுரை போட்டிருந்தது இதன் டீஸர்...சோ விமர்சனம் வந்திருக்க முடியாதே...

   மிக்க நன்றி அதிரா

   கீதா

   நீக்கு
 14. //ஆனந்தவிகடனில் வெளி வந்த தொடரான சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் ஒரு முக்கிய அம்சம்.//

  படம் பார்த்தனே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரிவோம் சந்திப்போம் படத்தின் கதை சுஜாதாவின் கதை அல்ல என்றே நினைக்கிறேன்.சுஜாதாவின் டச் அந்தப் படத்தில் கொஞ்சம் கூட இருக்காதே..நான் பிரிவோம் சந்திப்போம் படம் பார்த்ததில்லை...ஒரு சில சீன்ஸ் மற்றும் ஒரு அருமையான பாடல் உண்டே அதில்..

   மிக்க நன்றி அதிரா

   கீதா

   நீக்கு
  2. ’பிரிவோம் சந்திப்போம்’ என்கிற தலைப்பை மட்டும் எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து தூக்கிவிட்டார்கள் என்பதைத் தவிர, அந்தப் படத்துக்கும் சுஜாதாவுக்கும் சம்பந்தமேதுமில்லை. வாசகர்களை/ரசிகர்களைக் குழப்பிக் கூட்டம் செய்யும் முயற்சியாயிருந்திருக்கலாம் இது!

   நீக்கு
 15. //காதலர்கள் தங்கள் காதலைச் சொன்னார்களா? இணைந்தார்களா? முடிவு என்ன என்பதை கதையில் தெரிந்து கொள்ளுங்கள். //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

  விரிவான அழகிய விமர்சனம் கீதா.. வாழ்த்துக்கள் புத்தக ஆசிரியர்களுக்கும், விமர்சனம் எழுதிய உங்களுக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஹா...அதிரா அதைச் சொல்லிப்பூட்டா அப்புறம் கதை என்னாத்துக்கு!!! ஹிஹிஹி...

   மிக்க நன்றி அதிரா...

   கீதா

   நீக்கு
 16. அழகான விமர்சனம்...
  அதிலும் தங்கள் கைவண்ணம் என்றால் தனித்துவம்..

  வாழ்க நலம்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி துரை அண்ணா தங்களின் கருத்திற்கு..

   ஆஹா அடுத்த வரி ரொம்பவே உற்சாகப் படுத்துகிறதே அண்ணா...மிக்க நன்றி அண்ணா..
   உங்களின் இணையப் பிரச்சனைக்கு இடையிலும் வந்து உற்சாகப்படுத்திக் கருத்திட்டமைக்கு

   கீதா

   நீக்கு
 17. அருமையான விமர்சனம் கீதா. அனைத்துக் கோணங்களையும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். "பொதுவாகப் பெண்களுக்குத் தன் ஆண் புகைப்பது, எப்போதேனும் குடிப்பது கூடப் பிடிக்காது. அதை ஏற்கும் மனம் கொண்டவர்கள் வெகு வெகு அபூர்வம். " உமா என்னையும் ஈர்த்தாள். யதார்த்தமாக இருக்கிறாள்..கண்டிப்பாக என்னால் முடியாதுப்பா. சிகரெட் குடிக்கிறயா? வண்டி பக்கம் தலைவச்சும் படுத்துராத என்றிருப்பேன் ஹாஹஹா
  கதையை வாசிக்கத் தூண்டும் விமர்சனம் கீதா. அழகாக எழுதிவிட்டு அதற்கொரு டிஸ்க்ளைமர் போட்டிருக்கிறீர்களே :)

  பதிலளிநீக்கு