புதன், 11 ஜூலை, 2018

மாயத்திரையுலகின் மறுபுறம்


திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ்ந்து கைதட்ட ஆளில்லாத நாட்களில் தனிமையில், வறுமையில் வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு மரணத்தின் பிடியில் அகப்பட்டுப் போவார்கள். ஆனால், இறந்த பின்னும் அவர்களில் பெரும்பான்மையோர் மக்கள் மனதில் வாழ்வார்கள். அறிஞர்கள், மேதைகள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் போல் ஓரிடம் மக்கள் மனதில் ஏற்படும் என்பது உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய ஒன்றுதான். எல்லோரையும் பாதிக்கும் மண், பெண், பொன் ஆசைகள் அவர்களையும் பாதிப்பதுண்டு.



தியாகராஜ பாகவதர் காலம் முதல் பல பல பிரச்சனைகளில் திரையுலகப் பிரமுகங்கள் சிக்கித் திக்குமுக்காடி இருக்கிறார்கள். எம் ஆர் ராதா, எம்ஜிஆரை சுட்டே இருக்கிறார். அவர்களில் தானுண்டு தன் வேலையுண்டு என்று நம்பியார், சிவகுமார் போல் வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் உண்டுதான். தமிழகத்திலும், ஆந்திராவிலும் அரசியலில் இறங்கி வெற்றி பெற்று நாடாண்ட எம்ஜிஆரும், என்டிஆரும் திரையுலகில் உள்ளவர்கள் எதுவரை போகலாம் என்று உணரச் செய்தவர்கள். அவர்களை போல் அரசியலில் இறங்கி, வேண்டாம் இந்த வம்பு என்று திரும்பிய சிவாஜியும், நஸீரும்(கேரளா) அரசியல் எல்லோருக்கும் ஏற்றதல்ல என்பதை உணரச் செய்தவர்கள். இப்படி திரையுலகு ஒரு கனவுலகு மட்டுமல்ல ஒரு அற்புத உலகும் கூடத்தான். அதில் தொட்டதெல்லாம் பொன்னாக்கி வாழ்வாங்கு வாழ்ந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையினர் குறிப்பாகப் பெண்களின் நிலை சிறிது பரிதாபகரமே. திரையுலகும், வெளியுலகும் ஒரு சேர அவர்களை எப்போதும் வேட்டையாடிச் சித்திரவதை செய்து கொண்டே இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் கொச்சியில் விமானத்திலிருந்து இறங்கிய ஒரு நடிகை கடத்தப்பட்டு, ஆபாச புகைப்படங்களும், வீடியோவும் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் வழக்கில் மலையாளத் திரையுலகில் மூன்றாமிடம் எனக்குத்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு நடிகரின் பங்கு இப்போதும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் 85 நாட்கள் அவர் சிறைச்சாலையில் அடைபட்டுக் கிடக்க வேண்டியிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அந்த நடிகர் உள்ளிட்ட சில நடிகர்கள் மலையாள திரையுலகில் நடத்திவரும் திரையுலக ரவுடி ராஜ்யம் சாதாரண மக்களுக்கு முழுமையாகத் தெரியவந்தது.

கார் விபத்துக்குள்ளான நடிகர் ஜகதி ஸ்ரீகுமார் சில வருடங்களுக்கு முன் மலையாள சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்க முடியாத சூழல் இருந்தது. ஆனால் நடிப்பாற்றல் மிக்க ஜகதியை அந்த விலக்கல் பாதிக்கவே இல்லை. மட்டுமல்ல எப்படியோ ஒருவழியாக அவருக்கும் சூப்பர்ஸ்டார்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் தீர்ந்தும் விட்டது.
மலயாளத் திரையுலகில் எண்பது காலகட்டங்கள் வரை இது போன்ற பிரச்சனைகள் இல்லை. 500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் ரெக்கார்ட் சாதனை படைத்த பிரேம் நசீரும், கல்லூரி பேராசிரியரான மதுவும், சப் இன்ஸ்பெக்டரான சத்யனும், அதன் பின் வந்த சோமன், சுகுமாரன் போன்றவர்களும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுத்துவந்தவர்கள். மட்டுமல்ல பரதன், பத்மராஜன், ஸ்ரீகுமாரன்தம்பி போன்ற இயக்குனர்கள் புதுமுகங்களை வைத்துப் படமெடுத்தவர்கள். பரதனும், பத்மராஜனும் மறைந்த பின், நாயகர்களின் ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று மலையாளத் திரையுலகையே விழுங்கிவிட்டது.

மம்முட்டி, மோகன்லால் போன்ற பிரபல நடிகர்களுக்கு ஏற்றபடி கதைகள் உருவானது. காட்சிகளும், வசனங்களும் மாற்றப்பட்டன. தங்களுடன் நடிக்க வேண்டிய நடிகைகள், நடிகர்கள், ஏன்? பாடகர்கள் வரை சில நேரங்களில் அவர்களே தீர்மானிக்கும் நிலை வந்தது. இயக்குநர்கள் உள்ளிட்ட எல்லோரும் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலை. இதனிடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்களை விட நான்தான் மூன்றாம் சூப்பர் ஸ்டார் என்று வந்த நடிகரைப் பற்றித்தான் ஏராளமான குற்றட்சாட்டு. நினைத்ததை முடிக்கும் அந்த நடிகர் வளர்ந்து கேரளத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்கள் எனும் நிலை வந்ததோடு, அவர் வைத்தது சட்டமாகிவிட்டது. நடிகர்கள் சங்கத்திலும், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், டிஸ்ட்ரிப்யூட்டர்கள் சங்கத்திலும், ஏன் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திலும் அவர் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிட்டது. அவரை எதிர்த்தவர்களை எல்லாம் வேறோடு சாய்க்கும் அளவுக்கு வளர்ந்த அவரைக் கண்டு சூப்பர் ஸ்டார்களே பயந்து அவருக்கு எதிராக ஒன்றும் செய்யவோ, பேசவோ முடியாத நிலைதான் இன்று.

Malayalam film producers' body plans TV channel
இயக்குநர்/தயாரிப்பாளர் வினையன்

2007 ல் இயக்குநர்கள் உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்களுக்கான “மாக்டா” எனும் இயக்கம் இயக்குநர் வினையன் தலைமையில் உருவானது. அதற்கு முன்பே நடிகர் நடிகைகளுக்கான “அம்மா” எனும் இயக்கம் உருவாகி இருந்தது. 2008 ல் மூன்றாம் சூப்பர் ஸ்டாருக்கும், இயக்குநர் துளசிதாசுக்கும் இடையில் ஒரு பிரச்சனை. அது “மாக்டா”வுக்கு வந்தது. அவர் தீர்மானிக்கும் ஆட்களை உட்படுத்தாத இயக்குனரையே மாற்ற வேண்டும் என்ற சூப்பர் ஸ்டாரின் பிடிவாதத்திற்கு துணை போகாமல் இயக்குநருக்குச் சாதகமாகப் பேசினாராம் வினையன். விளைவோ, அந்த சூப்பர் ஸ்டாரின் தலையீட்டால் “மாக்டா” பிளந்தது. ஃபெஃப்கா (Fefka) எனும் புதிய சங்கம் உருவானது. அச்சங்கம், இயக்குநர் துளசிதாசுடன் வினையனையும் திரையுலகிலிருந்தே விலக்கிவிட்டது. இதனிடையே திலகன், வினையன் விலக்கப்பட்டதை பொருட்படுத்தாமல் அவரது படத்தில் நடித்தார். உடனே திலகனுக்கும் “அம்மா” விலிருந்து விலக்கு வந்துவிட்டது. மிகச் சிறந்த நடிகரான திலகனை எல்லோரும் ஒதுக்கிவிட்டார்கள். இதற்கிடையில் 16 படங்கள் இயக்கிய, 1988ல் தன் முதல் படத்திற்கு மாநில விருது வாங்கிய அலி அக்பர், 2009 ல் திலகனை நாயகனாக்கி “அச்சன்” (அப்பா) எனும் படம் எடுத்தார். விளைவோ அந்தப்படத்திற்கு தியேட்டர் கிடைக்காமல், அரசு திரையரங்கான கோழிக்கோடு ஸ்ரீ யில் மூன்றே நாட்கள் மட்டும்தான்  அப்படம் ஓடியது. அலிஅக்பர் விடவில்லை. மீண்டும் 2011 ல் திலகனை வைத்து “ஐடியல் கப்பில்” எனும் படம் எடுத்தார். ஃபெஃப்கா, திலகனை வைத்து படம் எடுத்த குற்றத்திற்காக அலிஅக்பரையும் விலக்கிவிட்டது.

Image result for actor thilakan
நடிகர் திலகன்

ஆனால் இப்படி “அம்மாவும்” “ஃபெஃப்காவும்” திலகனை வைத்து படமெடுத்த ரஞ்சித்தை மட்டும் ஏனோ விலக்கவில்லை. “இண்டியன் ருப்பி” எனும் அவரது படத்தில் திலகன் நடித்திருந்தார். ரஞ்சித் போல் சிறந்த ஒரு இயக்குனரை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்திருக்காலாம் அல்லது இதன் வாயிலாக திலகனுக்கு விலக்கு ஒன்றுமில்லை அவர் தன் வாய்க்கு வந்தபடி பேசி வாய்க்கொழுப்பால் வாய்ப்பிழந்தவர் என்று ரஞ்சித்தை சொல்லவைத்து தங்களை வெள்ளை பூசிக் கொள்ள “அம்மா:வும் “ஃபெஃப்கா”வும் நினைத்திருக்கலாம். மட்டுமல்ல திலகன் கடைசியாக நடித்த மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானின் “உஸ்தாத் ஹோட்டல்” படத்திற்கும் பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. அப்படி ஆளறிந்து, முகமறிந்துதான் மலையாளத் திரையுலகில் விலக்குகள் ஏற்படுத்தப்படுகின்றன. நகைச்சுவை நடிகர் மாள அரவிந்தனும் வினையன் படத்தில் நடித்தற்காக வாய்ப்பிழந்து  மரணம் வரை வருந்தியவர்தான். நவ்யா நாயர் மூன்றாம் சூப்பர் ஸ்டாருடன் நடித்துக் கொண்டிருந்த போது பிருத்விராஜின் நாயகியானதால் வாய்ப்பிழந்து இப்போது வீட்டிலிருப்பவர். பிருத்விராஜுக்கும் மூன்றாம் சூப்பர் ஸ்டாருக்கும் முன்விரோதமுண்டு. பிருத்விராஜ் தாக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக  அன்றும் இன்றும் அறிக்கை விடுபவர். சமீப காலத்தில் மிமிக்ரி நடிகர்களைப் பற்றி பொது மேடையில் பேசிய அனூப்சந்திரன் எனும் நடிகரையும் மூன்றாம் சூப்பர் ஸ்டார் மிரட்டியதாக அனூப் அறிவித்திருக்கிறார்.

இப்படி விஸ்வரூபமெடுத்து மலையாளத் திரையுலகை ஆட்டிப்படைப்பதாகச் சொல்லப்படும் மூன்றாம் சூப்பர் ஸ்டாருக்கும் அவரது இப்போதையை மனைவியான பிரபல நடிகைக்கும் உள்ள தொடர்பு கிசுகிசுப்பாக இருந்த போது ஒரு நாள் தாக்கப்பட்ட நடிகை நேரடியாக ஒரு ஹோட்டலில் அவர்கள் இருவரையும் பார்க்க நேர்ந்ததாகவும், உடனே அவர் தன் உயிர்த் தோழியான, மூன்றாம் சூப்பர் ஸ்டாரின் அப்போதைய மனைவியை அழைத்துச் சொல்லிவிட்டாராம். அது பெருமளவு பிரச்சனையாகி அவரது அப்போதைய மனைவி விவாகரத்து வாங்கி மூன்றாம் சூப்பர் ஸ்டாரிடமிருந்து நிரந்தரமாக விலகவே வைத்துவிட்டது.

மூன்றாம் சூப்பர் ஸ்டார் அதன் பின் தன் மகளின் சம்மதத்துடன் தன்னுடன் தொடர்பிலிருந்த நடிகையை இரண்டாம் கல்யாணம் செய்தும் கொண்டார். முதல் மனைவி தன் சொத்துக்களில் நல்ல ஒரு பங்கை மகளுக்காக விட்டுக் கொடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அதனிடையே மூன்றாம் சூப்பர் ஸ்டார் மற்றும் முதல் மனைவியின் பினாமியாக தாக்குதலுக்கு உள்ளான நடிகையின் பேரில் உள்ள சொத்தை அவர் மூன்றாம் சூபர்ஸ்டாருக்குக் கொடுக்க மாட்டேன் என் தோழிக்குத்தான் கொடுப்பேன் என்று சொன்னதுதான் அவர் தாக்குதலுக்குள்ளாக நேர்ந்ததற்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது.

எப்படியோ தாக்குதலுக்கு உட்பட்ட போது, மூன்றாம் சூப்பர் ஸ்டார்தான் அதன் பின்னணியில் என்று தாக்கியவர்கள் சொல்லிட, நடிகை துணிச்சலாக எல்லாவற்றையும் போலீசாரிடமும், மறைமுகமாக மீடியாவிலும் சொல்லிவிட்டார். அவருக்கும் மலையாளத் திரையுலகில் வாய்ப்பில்லாமல் செய்ததோடு மட்டுமின்றி இப்படி வேட்டையாடி அவரது மண வாழ்க்கையையே கெடுத்திட முயலும் ஒருவரிடம் இப்படிச் செய்வதில் தவறில்லை என்று அவரது கணவரான கன்னட திரையுலத்தைச் சேர்ந்தவரும் சொல்லி அந்த நடிகைக்குத் உறுதுணையாய் நின்றிருக்கிறார். வழக்கு நடக்கிறது.

சௌம்யா கொலைவழக்கில் கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய காஸ்ட்லி வக்கீல் ஆலூர்தான் மூன்றாம் சூப்பர்ஸ்டாருக்காக வாதிக்க இருப்பவர். பிரதிபலனாக மூன்றாம் சூப்பர்ஸ்டார் ஆலூர் எடுக்கவிருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆலூருக்கு இது போன்ற வழக்குகள் அல்வா சாப்பிடுவது போல்தான் என்றும் சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த தினம், “அம்மா” இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட மூன்றாம் சூப்பர் ஸ்டாரை மீண்டும் இயக்கத்தில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது. அதை எதிர்த்து ரம்யா நம்பீசனும், ரீமா கல்லிங்கலும் “அம்மா” இயக்கத்திலிருந்து ராஜினாமாவே செய்துவிட்டார்கள். “அம்மா” உறுப்பினர்களான ரேவதி, பார்வதி மேனோன், பத்மபிரியா போன்றவர்கள் அதை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

திரையுலகப் பெண்களின் இயக்கமான “W.C.C” யும் நடிகைக்காக வாதிட்டு வருகிறது. அத்துடன் “W.C.C.” (விமன் இன் சினிமா கலெக்டிவ்) இயக்கத்தினர் திரையுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல பிரச்சனைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். வாய்ப்பிற்காகப் பெண்கள் அவர்களையே திரையுலக பிரமுகர்களுக்குக் காணிக்கையாக்கும் நிலை புதிதல்ல, முன்பும் உண்டுதான். முன்பெல்லாம் ஒரு சிலர்தான் அப்படிச் செய்பவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போதோ ஒரு சிலர்தான் அப்படிச் செய்யாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களையும், அப்படிச் செய்பவர்கள் இல்லாமல் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும் இந்நிலையில் அரசும் நீதிமன்றமும் சமூகமும் இதை வெறும் பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது. அவற்றை முகம் பாராமல், அரசியல் பாராமல், வலுப்பெறச் செய்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அத்துடன் பெண்களும் ஒன்று கூடிப் போராட வேண்டும்.

செவிலியர்களின் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறதே. எல்லா கடைகளிலும் பெண்கள் நின்றே வேலை செய்ய வேண்டும் என்பது தற்போது ஆடையகம் போன்ற கடைகளில் பெண்களுக்கு இப்போது உட்கார ஓர் இருப்பிடம் கிடைத்திருக்கிறதே. இது போல பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட மற்றவர்கள் மனமுவந்து நம் தேவைகளை நிறைவேற்றட்டும் என்று நினையாமல், பிரச்சனைகளைத் தயங்காமல் சொல்லி வாதிட்டு அதற்கான தீர்வு காண முயல வேண்டும். ஆண்கள் உள்ளிட்ட எல்லோரும், பெண்களைத் “தாய்” “தெய்வம்” என்றெல்லாம் வாயளவில் சொல்லித் தப்பாமல் தங்களால் இயன்ற மட்டும் வாக்காலும் செயலாலும் தங்களது ஒத்துழைப்பை உறுதிப்படுத்தி ஆவன செய்ய வேண்டும்.

படங்களுக்கு நன்றி கூகுள்/இணையம்

----------துளசிதரன்

34 கருத்துகள்:

  1. மலையாளத் திரையுலகம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. சுரேஷ் கோபி பற்றி செய்திகளை செய்தித் தாளில் படித்தேன். ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்ஜி தெரியாவிட்டாலும் ஒன்றுமில்லை. எல்லாம் எல்லா சினிமாத் துறையிலும் நடப்பதுதான். கீழே நெல்லை, கில்லர்ஜி இருவரும் கொடுத்திருப்பவரைப் பற்றித்தான்

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி



      நீக்கு
  2. கடைசிவரை மூன்றாம் ஸூப்பர் ஸ்டார்
    ദിലീപിൻ பெயரை சொல்லவே இல்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ഞാൻ ഇസ്ടപ്പട്ട നടനാനു ദിലീപ്

      நீக்கு
    2. )(*&^%$#@!!@#$%^&*(_)(*&^%$#@!~!@#$%^&*()(*&^%$#@!@#$%^&&*()

      நீக்கு
    3. கடைசிவரை மூன்றாம் ஸூப்பர் ஸ்டார்
      ദിലീപിൻ பெயரை சொல்லவே இல்லையே...//

      ஹா ஹா ஹா. ம்ம்ம் சொல்லவில்லை. இப்ப நீங்கள் சொல்லிவிட்டீர்களே! மிக்க நன்றி கில்லர்ஜி

      நீக்கு
    4. ഞാൻ ഇസ്ടപ്പട്ട നടനാനു ദിലീപ്

      இஷ்டப்பட்டவராணோ?!!!! கில்லர்ஜி?!

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஆமாம் டிடி மலையாளத் திரையுலகமும் விதிவிலக்கல்ல என்று நிரூபித்திருக்கிறது. மிக்க நன்றி டிடி

      நீக்கு
  4. அரசியல் இல்லாத துறையே இல்லை போலுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜம்புலிங்கம் ஐயா. கருத்திற்கு மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  5. மலையாள திரை உலகம் பற்றி விரிவான கட்டுரை.
    எல்லா இடங்களிலும் எல்லாம் சீர் செய்யப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு கருத்திற்கு. ஆமாம். ஆனால் அரசியல் கலந்துவிட்டதால் ரொம்பவே கடினம் என்று தோன்றுகிறது.

      நீக்கு
  6. மலயாள நடிகர் கோபாலகிருஷ்ணனைப் பற்றி எழுதியிருக்கீங்க. பேசாம அவங்க பெயரைப் போட்டு எழுதியிருக்கலாமே. கிசுகிசு மாதிரியும் இல்லாம பத்திரிகைகளில் வந்த செய்தியையே நீங்கள் பெயரைப் போட்டு எழுதுவதில் என்ன தயக்கம்? திலிப், மஞ்சுவாரியர், காவ்யா மாதவன், பாவனா --- எல்லாவற்றையும் பெயரிட்டே எழுதியிருக்கலாம். பாவம் ம.வாரியாரின் மகள் மீனாட்சி.

    இந்த 'அம்மா'தானே, கேரள அரசாங்கம் கமலஹாசனுக்கு விருது வழங்கியதால் (அதை ஏற்றுக்கொள்ள வந்தபோது) அதனைப் புறக்கணித்தது?

    அரசியலில் இறங்கி, வேண்டாம் இந்த வம்பு என்றதில், 'அமிதாப்பச்சனை' விட்டுவிட்டீர்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நெல்லைதமிழன். ஏனோ தயக்கம் இருந்ததால் எழுதவில்லை. டைப் செய்யும் போது கீதா கூடக் கேட்டார்.
      அமிதாப் நினைவில் வரவில்லை. இபோது நீங்கள் சொன்ன பிறகுதான் நினைவுக்கு வருகிறது. என்றாலும் எனக்கு ஹிந்தி திரைப்படத் துறை பற்றி அத்தனை தெரியவில்லை

      மிக்க நன்றி நெல்லை தமிழன்

      நீக்கு
  7. மலையாளத் திரை உலகம் மட்டும் என்ன! திரை உலகமே இத்தகைய மோசடிகளால் தான் நிறைந்து உள்ளது! :( மும்பையிலும் ஶ்ரீதேவி இறந்தது மர்மம் எனச் சொல்கின்றனர். என்ன சம்பாதித்து என்ன! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கீதா சாம்பசிவம் சகோதரி. அரசியல் நிறையவே கலந்துவிட்டது. மிக்க நன்றி கருத்திற்கு.

      நீக்கு
  8. கிசு கிசு போல் செய்திகள் மலையாள் திரைஉலகுபற்றித்தெரிந்திருந்தால் யூகிக்கலாம் மூன்றாம் சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபியா அல்லதுஅய்யப்பன் கோவிலுக்குச்செல்லும்நடிகரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, கில்லர்ஜி இருவரும் சொல்லியிருக்கிறார்களே ஜிஎம்பி ஸார்.

      மிக்க நன்றி ஸார் கருத்திற்கு

      நீக்கு
  9. திரை உலகமே மோசடிதான். அதில் மலையாள கரை மட்டும் விதிவிலக்கா என்ன?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரி ராஜி. மாயத்திரையுலகம்தான். அதில் ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக இருந்து வந்திருக்கின்றனர். மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  10. மலையாளக்கரை ஓரம் நடக்கும் சங்கதிகளை நான் கவனித்துத்தான் வருகிறேன். மலையாளப்படங்கள் பார்த்து நாளாகிவிட்டதெனினும், சர்ச்சைக்குள்ளான பேர்வழிகளை நன்கறிவேன். நீங்கள் பேர் குறிப்பிடாமல் ’மூன்றாவது’ என்றது சிரிக்கவைத்தது.

    ஒருகாலத்தில் கண்ணியர்கள் வாழ்ந்த காலம்போய், இப்போது மலையாளத் திரையுலகம் நேரடியாகக் குண்டர்படையின் கீழ் வந்துவிட்டதுபோலும். அதன் நம்பர் மூன்றோ, நான்கோ - பொருட்டில்லை.

    மலையாளத் திரை உலகை விமரிசிப்பதால், இந்தியாவின் மற்றமொழிப் படவுலகங்கள் சுத்தம் என்று அர்த்தமில்லை. அதிலும் ஹிந்தித் திரையுலகம் மகா கேவலமானது. மஃபியாக்களின் அடிமைகளே பெரும்பாலான கான்கள், கபூர்க்கள். வருஷாந்திர மாமூல் கொடுத்துப் பிழைக்கும் மாகோழைகள்! கொடுக்காதவர்கள் மிரட்டப்பட்டதோடு, அழிக்கப்பட்டதுமுண்டு. தடயம் தெரியாது கேஸ் மாற்றப்பட்டதுண்டு. ஆளைக் கவிழ்த்தல், ஆள்வைத்துக் காலிசெய்தல் எல்லாம் அங்கே அத்துப்படி.

    மொத்தத்தில், திரையில் வெற்றிக்கதைகளைப் பார்த்துப் புளகாங்கித்துப்போகிறோம் நாம். நசித்த, நாசமான திரைமனிதரின் வாழ்க்கைகளைப்பற்றி எவரும் கவலைப்படுவதில்லை. அதிலும் பெண்கள் மிகவும் துர்பாக்கியவதிகள் இந்தத் துறையில் என்பதில் வேதனை மிகுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏகாந்தன் ஸார் ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகம் நன்றாகவே இருந்தது. இப்போது மிகவும் கீழ்த்தரமாகிவிட்டது. நீங்கள் சொல்லியிருப்பது போல் எல்லாத் திரையுலகமுமே கேவலம்தான். மும்பை பற்றி செய்திகளில் வருவதைப் பார்த்திருக்கிறேன் அதிகம் அந்த நடிகர்கள் நடிகைகள் பற்றித் தெரியாது என்றாலும். அங்கு தாதா உலகம் என்பது தெரியும்.

      ஆமாம் ஸார் பெண்கள் இத்துறையில் மிகவும் துர்பாக்கியய்வதிகள் தான். அதனால்தான் சமீபத்தில் மலையாளத் திரையுலகத்தில் திரையுலகப் பெண்கள் ஒரு இயக்கம் தொடங்கியுள்ளார்கள்.

      மிக்க நன்றி ஸார் விரிவான கருத்திற்கு

      நீக்கு
  11. திரையுலகம் கேவலமானதுதான். சமரசம் செய்து கொள்ளாமல் இதில் பிழைக்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன். ரொம்பவே சமரசம் செய்து கொள்ள வேண்டும். இப்போது பெண்களுக்கென்று தனியாக இயக்கம் தொடங்கியுள்ளார்கள். அவர்களின் பாதுகாப்பு இன்ன பிற தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ள.

      மிக்க நன்றி சகோதரி

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    மலையாள திரையுலகினரைப பற்றிய கட்டுரை. தங்கள் பாணியில் அழகாக விமர்சித்துள்ளீர்கள். எனக்கு திரையுலகினர் பற்றி அவ்வளவாக தெரியாது. ஆயினும் தங்கள் பதிவின் மூலம் புரிந்து கொண்டேன். எங்கும் அராஜகம் ஒன்றுதான் தலை விரித்து ஆடுகிறது. இதற்கு மூல காரணம் பணம், செல்வாக்கு, இதை வைத்துதான் மனிதர்கள் மற்றொருவரை மனித நேயமின்றி அழிக்க பார்க்கிறார்கள். மொத்தத்தில் மனிதாபிமானம் அழிந்து வருகிறது. வேறு என்ன சொல்ல...

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. அதிகம் மலையாள சினிமாச்செய்தி அறியவில்லை உங்களின் நீண்ட பகிர்வு ஒரு சினிமா ஆய்வுக்கட்டுரை போல இருக்கு. தாதாக்களின் கையில் சினிமா போனால் மீள முடியாது! இலங்கைச்சினிமாவிலும் இன்நிலை இருக்கு அது பற்றி ஓய்வான பொழுதில் நிச்சயம் எழுதும் ஆர்வத்தை தூண்டுகின்றது இப்பகிர்வு.

    பதிலளிநீக்கு
  14. திலகன் போன்ற நடிகர்களையே சினிமா சீரழித்துவிட்டு என்னத்தை சாதிக்கப்போகின்றது புகழ்போதையில்?

    பதிலளிநீக்கு
  15. இத்தனை ஊழல்களையும் மீறி நல்ல படங்களும் வருகிறது என்பதைப் பாராட்ட வேண்டும்.
    எவ்வளவோ இருந்த காலத்தில் நான் கேரளப் படங்களைப் பார்த்திருக்கிறேன்.

    சமரசம் என்பதே ஸமாளிப்பாக மாறியதை அறிய வேதனை.
    நல்லதொரு ஆய்வுப் பதிவு. மனம் நிறை பாராட்டுகள் துளசி.

    பதிலளிநீக்கு
  16. திரை உலகம் மட்டுமல்ல வேலைக்காரர்கள் உலகம் விளையாட்டு வீரர்கள் உலகம்
    என ஒவ்வொரு உலகமும் அப்படித்தான் , என்ன திரை உலகம் வெகுவாக
    மீடியாவால் மற்றும் பொது ஜனங்களால் பேசப் படுகிறது

    பதிலளிநீக்கு
  17. எல்லா மட்டங்களிலும் இருக்கிற விஷயம்,
    அங்கு கூடுதலாக இருக்கும் போலிருக்கிறது,

    பதிலளிநீக்கு
  18. சினிமாவிலும் ஒரே அரசியலா. !

    ஆமா யார் அந்த மூன்றாம் சூப்பர் ஸ்டார். பயங்கர கிசு கிசுவா இருக்கே. அந்த நடிகைகள் அண்ட்சோ ஆன். :)

    பதிலளிநீக்கு
  19. இக்கரைக்கு அக்கரைப்பச்சை...போல...

    பதிலளிநீக்கு