வியாழன், 31 மே, 2018

ஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா? என்ன விலையானாலும் பரவாயில்லை


யாருக்காகப் பாடுகிறார்

தான்ஸேனின் இசைத்திறன் பற்ரி அக்பருக்கு எப்போதுமே பெருமை. அவரை விடச் சிறப்பாக வேறு யாராலும் பாட முடியுமா என்று கேட்பார். தான்ஸேன் ஒரு முறை இதற்குப் பதில் சொன்னார். “இருக்கிறார். அவர்தான் என் குரு – சுவாமி ஹரிதாஸ். ஆனால் அவர் உங்கள் தர்பாருக்கு வந்து பாடமாட்டார். யார் சொல்லுக்காகப் பாடக் கூடியவருமல்ல.”

மாறு வேடமணிந்து சுவாமி ஹரிதாஸ் இருக்குமிடம் சென்று அவர் பாடலைக் கேட்க விரும்பினார் அக்பர். அவருடைய குடிலுக்கு அக்பரும், தான்ஸேனும் போனார்கள். ஆயினும் ஹரிதாஸ் பாடவில்லை.

தான்ஸேன் வேண்டுமென்றே ஒரு பாடலைத் தவறாகப் பாடினார். உடனே ஹரிதாஸ் அவருடைய தவறைத் திருத்தி, அதே பாடலைச் சரியான முறையில் அற்புதமாக பாடினார். அக்பருக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

அரண்மனைக்குத் திரும்புகையில் தான்ஸேனைக் கேட்டார், “உங்கள் குருவைப் போல் அத்தனை இனிமையாக ஏன் உங்களால் பாட முடியவில்லை!” என்று.

தான்ஸேன் சாந்தமாய் பதிலளித்தார், “நான் உங்கள் கட்டளைப்படி உங்களை மகிழ்விக்கப் பாடுகிறேன். என் குருவோ இறைவனுக்காகவே பாடுகிறார். அதுதான் வித்தியாசம்”

---தினமணி கதிர் – பழைய இதழிலிருந்து 
                               
Image result for monkey singing gifImage result for cat singing with microphone gif
                        குரு                           சிஷ்யை              

*********************************************************

மேசை உப்பு

கடல் நீரில் எடுக்கப்படும் உப்பில் அயோடின், மெக்னீஷியம், லிதியம், செலினியம், துத்தநாக, வெள்ளீயம் போன்ற பொருட்கள் ஏராளமாகக் கலந்திருக்கின்றன. உப்பை நயப்படுத்தி, மேசை உப்பாக மாற்றும் பொழுது இத்தகைய அபூர்வமான பொருட்கள் அனைத்தும் அழிந்து போய் வெறும் சோடியம் குளோரைடு மட்டும் மிஞ்சுகிறது. மேசை உப்பைத் தவிர்ப்பது உடல் நலத்துக்கு வளம் தரும் என்பது டாக்டர்கள் கருத்து.

 – ஹெரால்டு ஆஃப் ஹெல்த்

எங்கள் குடும்ப ஆயுர்வேத மருத்துவர் இதைத்தான் சொல்லுவார். கல்லுப்பும் கூட நயப்படுத்தப்படாத உப்பைப் பயன்படுத்தச் சொல்லுவார். ஆனால் கடைகளில் கிடைப்பதில்லை.

Image result for cat giving lecture
இதத்தானே நான் பல ஆண்டுகளாகக் கூவிக் கொண்டு கிடக்கிறன். ஆரு நான் சொல்லுறதை கேட்கினம்.
************************************************

நான் மிகவும் ரசித்த கதை. அதிலிருந்து சில பகுதிகள். யாராக இருக்கும் என்று நீங்கள் சொல்லுங்களேன். உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும் இதை எழுதியிருப்பது யாராக இருக்கும் என்று.

-------- - - -- - -- - -- - -- -- ---- ---- - - --
“அல்சூர் ஏரி. நீங்கள் இங்கே வந்து இன்னும் பெங்களூர் சுற்றிப் பார்க்கவில்லையே?”
--------------------  - -------  ---

அம்மா, அல்சூர் ஏரின்னு அடிக்கடி சொல்வாள். அதுதான் தெரியும். ஒரே வார இடைவெளியில், ப்ளேக்கில் தன் இரண்டு தம்பிகளையும் பறி கொடுத்ததே காரணம், எனக்கு ஆறுவயசில் குடும்பம் பட்டணம் வந்துவிட்டது. அப்புறம் இப்பத்தான் வரேன்.------------------அம்மாவுக்கு எத்தனையோ ஷாக்குகள் நேர்ந்திருக்கின்றன. ஆனால் இதுதான் அம்மாவுக்கு முதல் ஷாக்.

முதல் ஷாக்; முதல் காதல், ஆனால் எல்லாவற்றிற்கும் Common denominator துயரம். அவர் அவனை ஓரக்கண்ணால் பார்த்தார். அவனுக்குப் பார்வை உள்ளுக்கு வாங்கியிருந்தது ஏன் என்று தெரிகிறது. நான் என்ன செய்ய முடியும்? அவரவர் துயரம், அவரவர் ‘ஷாக்’ எவருக்குமே எதுவுமே முதல் தடவை என்று நேர்ந்துதானே ஆகணும். இந்து அக்கினிஸ்னானம் தேவைதான். அக்கினி ஸ்னானம்……

“அப்பா இந்த ஏரியில் மாதம் ஒரு த்ப்போத்ஸவம் நடக்கும்,”

“அப்படியா? என்ன ஸ்வாமியோ?”

சிரித்தான், “மல்லாந்த ஸ்வாமி!”

‘சுருக்’. அருவருப்பு தட்டிற்று. இவர்களுக்கு எல்லாமே வேடிக்கைதானா? ஆனால் ஒண்ணு; எழுபதை எட்டிப் பிடிக்கப் போறேன். ஆனால் சாவுக்கு ஏன் மனம் இன்னும் சமாதானம் ஆகவில்லை? அப்படி என்ன இங்கே இன்னும் கொட்டி வெச்சிருக்கு? இருக்கவும் பிடிக்கல்லே. போகவும் பிடிக்கல்லே. இந்த சங்கடத்துக்கு என் செய்ய?

……………………………………………………………

என்ன ரவா இட்லியோ? உளுந்து இட்லி சாம்பாருக்கு ஈடாகுமா? ஹோட்டலுக்குள் நுழைஞ்சே வருடக் கணக்காறது. வீட்டில், கிடைச்ச அன்னிக்கே கிடைச்சதுதான். ஓட்டம் ஏது? 

“என்னடா அனந்து, பாதிக்குமேல் எறிஞ்சுட்டே"

“எல்லாம் கொள்றவரைக்கும் தான்.”

“சாமான் விக்கிற விலையிலே, இதென்ன பெரிய மனுஷத்தனம்?”

'இந்தப் பெரியவாள் இருக்காளே’ முணுமுணுத்தான்….

"இப்போ என்னடா பண்ணிட்டேன்?”

“என்ன பண்ணனும்? காசுக்குப் பயந்துண்டு வாங்கமாட்டா. வாங்கவும் விட மாட்டா. வாங்கினால் காசுக்கு கவலைப்பட்டே ருசியைக் கெடுத்துடுவா. வாங்கினது பிடிக்கல்லேனா, காசு வீணா போறதேன்னு தின்னு வயத்தைக் கெடுத்துப்பா. மொத்தத்தில் வாங்கற சந்தோஷத்தைக் கெடுத்துடுவா, நீங்கள் கடிச்சு முழுங்கறது தெரியறதே, பிடிக்காட்டா எறிஞ்சுட வேண்டியதுதானே?”

அவர் தன் தட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மெதுவாக சின்னக் குரலில், 

“இங்கே ஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா? என்ன விலையானாலும் பரவாயில்லை”…..........................

………….


“அப்பா”

திரும்பினார். ஒரு சிவப்பு ஸ்வெட்டரை …………

“அப்பா அப்படியே நில்லுங்கோ ஏக் மினிட்”……………………………………………..அங்கேயே அவர் கழுத்தில்மாட்டி, இந்தக் கையை இப்படி, அந்தக் கையை அப்படி இழுத்து, நிமிஷமாய்ப் போட்டுவிட்டான். “அட கர்ரெக்டாயிருக்கே! ஒரு நம்பர் ஓவர் சைஸாயிருக்குமோன்னு உள்ளூரப் பயந்தேன்……………………

“……….உன்னை எவண்டா இதைக் கேட்டான்? உன் டம்பாச்சாரிப் பிழைப்புக்கு என்னை உடந்தை ஆக்கறையா?”

“என்னப்பா, ஏதாவது புரியும்படிச் சொல்லுங்களேன்!”

“இதென்ன கோமாளி வேஷம் எனக்கு மாட்டிவிட்டால் என்னடா அர்த்தம்? ஏண்டா இந்த அனாவசியச் செலவுன்னு கேட்டால், “நான் சம்பாதிக்கிறேன், நான் செலவழிக்கிறேன்” வெளிப்படையா சொல்லமாட்டே. ஆனால் அதானே அர்த்தம்! அதானே உங்கள் போக்கு!”

“சரிப்பா!”

“நீங்கள் எல்லோருமே நாணயமற்றவர்கள்டா!”

“சரிப்பா!”

“என் காசு. என் இஷ்டம்னு உன் மாதிரி உன் வயதில் நானும் இருந்திருந்தேன்னா, உன் மேல் இப்போ புல் முளைச்சிருக்கும், ஞாபகம் வெச்சுக்கோ.”

“சரிப்பா!”

“என்னடா சரி சரி? கேலி பண்றையா?”…..

“இல்லேப்பா உங்களை சமாதானப்படுத்துவதுதான் எனக்கு முக்கியம். நாம் ஒருவரையொருவர் புரிஞ்சுக்காததால் தவறு எப்படியோ நேர்ந்துடறது. இல்லாட்டி, இப்படி நான் வாங்கிக் கொடுத்து வாங்கிக் கட்டிப்பேனா?”

“ஆமாம் நாம் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்க இன்னும் நாலு வருஷம் போகட்டும். என்னை நாலு பேர் மேலே தூக்கிண்டு போயிடுவா. அப்பவாது புரிஞ்சிப்பியா?”

காதைப் பொத்திக் கொண்டான். 

“ஆனால் நான் உங்களைப் புரிஞ்சிண்டிருக்கேன். நீங்கள் எல்லோரும் பாட்டுகள். நிசமா என்னை ரேழியில் இழுத்துப் போட்டிருக்கும் போது, உன் தேனிலவில் இருப்பாய்.”

“ராமா! ராமா! ஏம்பா இத்தனை கொடுமையாப் பேசறேள்? தேனிலவாம்! இன்னும் இரண்டு வருஷத்துக்கு என் கலியாணத்தைப் பற்றியே பேச வேண்டாம். வேணும்னா இதுவே ஒரு வேண்டுதலையா திருப்பதிக்குப் போய் முடி கொடுத்துட்டு வந்துடறேன்.”

வெடுக்கென இருவரும் சேர்ந்த சிரிப்பு திகிறியடித்தது. .............................

"அப்பா ஏ

“அப்பா ஏதேனும் வேணுமா” ……………………………………………..

………………………………….”உன் அம்மா நினைப்பு. எங்களுக்குக் கலியாணம் ஆன புதிதில், மெரினாவில் இப்ப்டியெல்லாம் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறோம்.”

“ஊங்!...”அப்படியும் ஒரு நாள் இருந்ததா என்ன?"

“ஏன் அப்படிக் கேக்கறே?”

“நீங்களும் அம்மாவும் சுமுகமாக இருந்த நாளைப் பார்த்ததாவே எனக்கு ஞாபகமில்லை” ………………………………………………………………………………………………………”நீங்களும் அம்மாவும் வாக்குவாதம் பண்ணும் போது எத்தனை இரவுகள் என் தலையணை நனைஞ்சிருக்கும் தெரியுமா? ஏம்பா, அப்படி ஆகணும்? முக்யமா இப்பத்தானே நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையா, தோழமையா இருக்கணும்? அப்பா, அம்மா வெகுளியாயிருக்கலாம். ஆனால் ரொம்ப நல்லவள் அப்பா.”

“சரி நான் தான் பொல்லாதவன் போயேன். இனி யாரிடத்தில் நல்ல பெயர் வாங்கி எனக்கு என்ன ஆகணும்?” அந்தக் குரலில் கோபமில்லை. ஆனால் ஏதோ ஒரு விரக்தி.

“அப்பா அப்படி அர்த்தமில்லை. அனுபவிக்க எல்லாமிருந்தும் ஏன் நம்மால் சந்தோஷமாயிருக்க முடியவில்லை.”

அவர் கை விரித்தார். “கொடுப்பினை என்று ஒன்றிருக்கிறது. நம் தேவைகளுக்கு மீறிய ஆசைகள் ஆதிக்கம் கொண்டு விட்டன. தவிர உன் தாயார் பிள்ளைகளுடன் கட்சி ஹ்கேர்ந்துவிட்டாள். முன் வாழ்ந்த நாட்களைப் பெண்டிர் எப்படியோ சுருக்க மறந்துவிடுகிறார்கள்”

“அப்போ, அப்பா நாங்கள் உங்கள் கட்சியில்லையா?”

“கொள்ளி போடத்தான் பிள்ளைகள். பந்தம் பிடிக்கப் பேரன்மார். சாஸ்திரமே அப்படி நியமிச்சுடுத்தே! ஆனால் யார் பற்ற வைத்தாலும் வேகும். நெருப்பின் தூய்மை அதில்தான். ஸர்வம் பஸ்ம மயம் ஜகத்…..”

……………………………………………………………………………………………….


“தோ பார் அனந்த். நியாயம் யார் பங்கில், என் மேல் தப்பில்லை என்றெல்லாம் நான் சாதிக்கப் போவதில்லை. ஒரு குடும்பத்தில் இதெல்லாம் சாதிக்க முடியாது. சாதிக்கக் கூடாது. அனுசரணை என்பது இரண்டு பக்கமும் இருக்கணும். சுயநலம் ஓங்கிவிடால் சிரமம்தான். போகப் போக ஆணுக்குத் தனிமையொன்று வயது மூலையில் காத்திருக்கிறது. ஆத்மாவின் தனிமை. உன் முறை வரும் போது நீயும் உணர்வாய்……………………………………………………………………………இங்கிதம் தெரிந்து நன்றி அறிந்து, முட்டுக் கொடுக்கும் அகமுடையாள் வாய்பதற்குப் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இல்லையேல் நீயும் நானுமடி, எதிரும் புதிருமடி இழுபறிதான். ஆனால், ஸ்த்ரீகள் என்றுமே யதார்த்தவாதிகள். ஆண்கள் லஷியவாதிகள்….

அனந்து அப்பாவை தர்மபுரியில் நடக்கவிருக்கும் தன் நண்பனின் கல்யாணத்திற்கு அழைத்துச் செல்கிறான். ஹோசூர், தர்மபுரி, ஹோகனேக்கல். "நான் எதுக்கடா அழையா வீட்டுக்கு?"

"அப்படி நினைக்காதீர்கள். அவன் அப்படி சந்தோஷப்படுவான். குற்றாலம் பார்த்த உங்கள் கண்ணுக்கு ஹொகனேக்கல் எப்படிப்படுமோ தெரியாது. ஆனால் அங்கு சினிமா ஷூட்டிங்க் உண்டு.”.....................................................................

காவேரிப்பாட்டி காலங்கடந்த வயதில். எக்கச்சக்கமாகப் பருத்து போய், அகன்று, அவிழ்ந்து, பரவி, அவளுடைய வயதில் அந்தஸ்துக்கேற்ப, ரவிக்கையைக் கழற்றிவிட்டு வெள்ளை மேனியில் திண்டு மேல் சாய்ந்த விதமாய், சரிந்து தனக்குள் ஏதோ ரஹஸ்யச் சிரிப்பில் உடல் பூரா குலுக்கிக் கொண்டிருக்கிறாள். சிற்றலைகள்; குட்டிப் பேத்திகள், பேரன்மார்கள் அவளைச் சுற்றித் தவழ்கின்றனர்……அமைதி………………………………………………………அலைகள் அத்தனையும் அத்தனை கைகள் நீட்டி தம்முள் அழைக்கின்றன……………………………………தேவி, இந்த சமயத்தில் என் மனவாசற்படியில் நின்று என்னத்தையே கேட்கும் விதத்தில் கை நீட்டி நிற்கிறாளே! என் செய்வேன்? என்ன செய்யலாம்?

அவளுடைய புன்னகையின் ஜாஜ்வல்யத்திற்கு என்னையே காணிக்கையாகக் கொடுத்தாலும் போதுமோ? உள்ளே போய்விட்டால்தான் எனக்கென்ன? ஒரு தாவல், ஒரே தாவல். அப்புறம் எனக்கென்ன தெரியப் போகிறது?........................................

ஒரு சில பகுதிகள் தான் இவை. மிக மிக அருமையான கதை. வரிகள் மிக மிக ஆழமான அர்த்தமுள்ளைவை. சிந்திக்க வைக்கும். யூகித்துப் பாருங்களேன் எழுதியது யாராக இருக்குமென்று.

Image result for elephant thinking gifImage result for elephant thinking gifImage result for elephant thinking gif
  யாராக இருக்கும்?  சரியா சொல்பவர்களுக்கு……ஆஹா! நிறையப் பேர் சொல்லிடுவாங்களோ!!


--------கீதா

82 கருத்துகள்:

  1. எங்கள் வீட்டில் கல் உப்பு தான்.. தஞ்சாவூரில் கிடைக்கிறது...

    மற்றபடி அழகான கதை..
    எழுதியது யாராக இருக்கும் என்றெல்லாம் சிந்திக்கவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு அண்ணா. ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

      நானும் கல் உப்புதான் பயன்படுத்துகிறேன். ஆனா அந்தக் கல் உப்பு ப்ராஸஸ் செய்து கிடைக்கிறது. அயோடைஸ்ட் என்று. அப்படி இல்லாமல் ப்ராஸஸ் செய்யாமல் கொஞ்சம் கலர் கம்மியாக இருக்கும். அது முன்பு கிடைத்துக்கொண்டிருந்தது. இப்போது கிடைப்பதில்லை. ப்ராஸஸ்ட் தான் கிடைக்கிறது.

      அழகான கதை அண்ணா அது. சில பகுதிகள் தான் கொடுத்திருக்கிறேன்.

      மிக்க நன்றி அண்ணா

      நீக்கு
    2. //துரை செல்வராஜு அண்ணா. ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது அலாப்பி வெளாட்டூஊஊஊஊஊஊஊ:)) விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:))

      நீக்கு
  2. துரை அண்ணா ப்ளாகர் உங்கள் பதிவைக் காட்டவே இல்லை. இப்ப நானாகத்தான் போய்ப் பார்த்தேன். வந்திருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான், படித்துப் புரிந்து கருத்திடுவதற்குள் அங்கு முந்திவிட்டீர்கள் அக்கா ( :-) ).

      நீக்கு
    2. அக்கா ,ஆன்ட்டி இப்படிலாம் கூப்பிடறதில் எவ்ளோ சந்தோஷம் இல்லை :))

      நீக்கு
    3. வாங்க தம்பி நெத....ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏஞ்சல்.,, யு டூ!!!! ஹா ஹஹா ஹா ஹா டூ பேட் டூ பேட்...ஹா ஹா ஹா ஹா ..நாம கூப்பிடலாம்....ஆனா நம்மை யாரும் அப்படிக் கூப்பிடக் கூடாது....நெ த உங்களை நீடில் கேப்ல ஆண்டினு சொல்லு பூஸாரை குதிக்க வைச்சுட்டார் மறந்துறாதீங்க....ஹா ஹா ஹா

      நீக்கு
    4. //வாங்க தம்பி நெத....ஹா ஹா ஹா ஹா ஹா ஹா///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ என்னை இனிமேல்.. “வாங்கோ குட்டித்தங்கை அதிரா” எனவும், அஞ்சுவை “ வாங்கோ ஏஞ்சல் ஆன்ரி/அக்கா” எனவும் அழைக்கோணும் இல்லையெனில் மீ டீக்குளிப்பேன்ன்ன் அஞ்சுவைக் கையில பிடிச்சுக்கொண்டு:))

      நீக்கு
  3. தலைப்பை பார்த்ததும் அரசியல் பதிவுன்னு எஸ் ஆக பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா வாங்க ராஜி...தலைப்பைப் பார்த்து ஓடக் கூடாது இங்கிட்டு அரசியல் பதிவுகள் வராது....

      நீக்கு
  4. கதம்பம் (முதலிரண்டு) நன்றாக இருந்தது. (ஹறிதாஸ் என்று தட்டச்சு வந்துள்ளது).

    அந்தக் காலத்தில் கல்லுப்பு வீதியில் கொண்டுவருவார்கள். அது உப்பளத்திலிருந்து வருவது. இப்போ கல்லுப்பு (டாட்டா) கிடைக்கிறது. எனக்குப் பிடித்திருக்கிறது. ப்ராசஸ் செய்யாமல் இந்தக் காலத்தில் எதுதான் கிடைக்கிறது? யோசித்துப்பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹரிதாஸ் திருத்திவிட்டேன் நெல்லை மிக்க நன்றி சுட்டிக்காட்டியமைக்கு.

      ஆமாம் பெரிய சாக்கில் வைத்து சைக்கிளில்கொண்டு வருவார்கள். நேரா உப்பளத்திலிருந்து வரும். எங்கள் ஆயுர்வேத டாக்டர் தான் அறிவுறுத்தினார். நீங்கள் சொல்லுவது போல் எதுவுமே ப்ராஸஸ் செய்யாமல் கிடைப்பதில்லைதான்...

      கதை யில் சில பகுதிகள் மட்டுமே கொடுத்துள்ளேன் நெல்லை. நீங்கள் சொல்லுவீங்கனு நினைச்சேன்...சரி வேற யாராவது சொல்லுறாங்களானு பார்க்கறேன்...

      மிக்க நன்றி நெல்லை

      நீக்கு
  5. எங்க வீட்டுலயும் கல் உப்புதான்ண்ணே. பதார்த்தங்களில் உப்பு பத்தலைன்னா சாப்பிடும்போது மேசை உப்பை பயன்படுவத்துவதோடு சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜி உப்புதாண்ணே? இது உப்புத்தாங்கா!!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

      ஆமா மேசை உப்புல்ல மேசை மேலதானே பயன்படுத்தணும் இல்ல...ஹா ஹா ஹா ஹா ஹா

      நானும் கல்லுப்புதான்...பயன்படுத்தறேன் ராஜி

      மிக்க நன்றி ராஜி

      நீக்கு
  6. கல் உப்பு நானும் அவ்வப்போது யூஸ் செய்வேன் ..டேபிள் சால்ட் சட்டுனு அளவு தெரியும் கல்லுப்பு கொஞ்சம் என்னை கவிழ்த்திடும்
    கதை எழுதினவங்க பெங்களூர் இல் வசிப்பவர்கள் .ரெண்டு பேர் கண்ணெதிரே வராங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் எனக்கு கல் உப்பு கரெக்டா வரும். டேபிள் ஸால்ட் வரும்னாலும் சில சமயம் ஏமாத்தும்..ஹா ஹா

      ம்ம்ம்ம்ம் பெங்களூர் வாசிகள் ரெண்டு பேர்....ம்ம்ம்ம் இல்லை ஏஞ்சல்....ஜிஎம்பி ஸார், கௌ அண்ணா சொல்றீங்களா..இல்லை ..யாராவது சொல்றாங்களா நு பார்க்கணும். கோமதிக்கா, கீதாக்கா, வல்லிம்மா, காமாட்சிமா, ஸ்ரீராம் சொல்ல வாய்ப்புண்டு. நெல்லை எதிர்பார்த்தேன்...

      மிக்க நன்றி ஏஞ்சல் கை ஓகேயா....பார்த்துக்கங்க...

      நீக்கு
    2. ஏகாந்தன் சார் ? இல்லைன்னா யாரா இருக்கும் சரி வெயிட் பண்றேன்

      நீக்கு
    3. ///கல் உப்பு நானும் அவ்வப்போது யூஸ் செய்வேன் ..டேபிள் சால்ட் சட்டுனு அளவு தெரியும் கல்லுப்பு கொஞ்சம் என்னை கவிழ்த்திடும் //

      ஆவ்வ்வ்வ் என் செக் இப்போதான் கர்க்ட்டாச் சொல்லியிருக்கிறா:))

      நீக்கு
    4. ஹா ஹா ஹா அதிரா..உங்கள் செக் ஊறுகாய் நன்றாகப் போட்டிருக்கிறார்கள்!!

      கீதா

      நீக்கு
  7. இது கதை என்பதைவிட சில உண்மை நிலைபோல் உணர வைக்கிறது.

    கதம்பம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி. அது நீங்கள் சொல்லியிருப்பது போல பல வரிகள் அக்கதையில் அப்படித்தான் இருக்கும். அருமையான கதை. முழுவதும் இங்கு தரவில்லை...

      நீக்கு
  8. கதம்பத்தின் ருசி தனி ருசிதான் நம் டெல்லிப்பதிவரும் இதை அருமையாகச் செய்வார்.தொடர வாழ்த்துக்களுன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சகோ...

      தில்லி பதிவரும், எங்கள் ப்ளாகும், ராஜியும், ஏஞ்சலும் இதில் அடக்கம். மிக நன்றாக இருக்கும் கதம்பம்...

      நீக்கு
  9. அருமையான எண்ணங்கள்
    அப்படியே தொகுத்துவிட்டீர்கள்
    ஆனால் - அந்த
    கல் உப்பு நன்று
    மெல்லச் சிந்திக்க வைக்கிறியள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ ! ஆமாம் கல் உப்பு நல்லது என்றுதான் சொல்லப்படுவதுண்டு. ஆனால் இப்போ அந்தக் கல் உப்பும் ப்ராஸஸ்ட்தான்

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    கதம்பம் அருமை. ஹரிதாஸ் கதை கேட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இப்போது தங்கள் மூலமும் கதையை உள் வாங்கினேன். தான்சேனிடம் என்ன ஒரு பணிவு இல்லையா?

    கல் உப்புத்தான் தற்சமயம் பயன்பாடு. சமயத்தில் பொடி உப்பும் நுழைந்து விடும். தாங்கள் சொல்வது போல் நயம்படுத்தபடாத உப்பு நல்லது. அம்மா வீட்டில் இருக்கும் போது தெருவில் தள்ளு வண்டியில் வைத்து விற்கபடும் கல் உப்பைதான் (கொஞ்சம் பழுப்பு நிறத்தில் இருக்கும்.) வாங்கி பயன்படுத்தினோம். அப்போதெல்லாம் பாக்கெட் உப்புக்கள் வரவில்லை இப்போது தேடினாலும் கிடைப்பதில்லை. முதலில் யார் தேடுவது? மாலுக்குப் போனால், பிடித்ததை அள்ளிப் போட்டால், வீட்டில் டோர் டெலிவரி பண்ணி விடுவார்கள். அவ்வளவுதான்.... பொதுவாக உப்பை குறைத்தால் நல்லது.

    தாங்கள் படித்து பிடித்த கதை, ஆங்காங்கே சில பகுதிகள்.. மிகவும் நன்றாக இருக்கிறது. எழுதியது
    சுஜாதாவா? யார் என சரியாய் தெரியவில்லை..இந்த கதையையும் படித்த மாதிரி உணர்கிறேன். சரியாகவும் நினைவில்லை.

    படங்கள் மிக அருமை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தான்சேன் நிஜமாகவே பணிவு!!! பணிவு!!

      ஆமாம் கமலா சகோ பழுப்பு நிறத்தில் இருக்கும் உப்பு தெருவில் வரும். பாக்கெட் கிடையாது. இப்போது மேசை உப்பும் சரி நயம்படுத்தப்பட்ட கல் உப்பும் சரி பயன்படுத்தாமல் இருக்க முடிவதில்லையே. எல்லாமே நயம்படுத்தப்பட்டவை எனும் போது?!!

      இருங்கள் பார்ப்போம் கதை யாரேனும் சொல்கிறார்களா என்று...இல்லையேல் இறுதியில் சொல்கிறேன்...

      மிக்க நன்றி கமலா சகோ

      நீக்கு
  11. அருமை
    ஒரு சிறு கால இடைவெளிக்குப் பிறகு இன்றுதான் வலையுலகிற்குத் திரும்பியுள்ளேன்.
    இனி தொடர்வேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் கரந்தை சகோ...தொடருங்கள்

      மிக்க நன்றி

      நீக்கு
  12. யார் என்று அடுத்த பதிவில் சொல்லி விடுவீர்களா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா டிடி வாங்க இந்தப் பதிவிலேயே சொல்லி விடுகிறேன். அடுத்த பதிவா?!! ஹா ஹா ஹா ஹா ஹா இப்பல்லாம் பதிவு எழுதறது விஷயம் நிறைய இருந்தாலும் எழுதும் ஒரு மூட் இல்லை...

      பார்ப்போம் வருபவர்கள் எல்லாரும் வந்த பின் சொல்லுகிறேன் அவர்கள் சொல்ல வில்லை என்றால்..

      மிக்க நன்றி டிடி

      நீக்கு
  13. கல் உப்பு பயன்படுத்தி பல நாட்களாகின்றன. அம்மா காலத்திலும், கல்யாணமான புதிதிலும் உபயோகப்படுத்தியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ!! நான் இப்பவும் பயன்படுத்துகிறேன். குழம்பு ரசம் கூட்டு க்ரேவி போன்றவற்றிற்கு காய் வதக்கல் சாலட் போன்றவற்றிற்கு மட்டும் டேபிள் சால்ட். இப்ப எல்லாமே ஒன்றுதான் ஸ்ரீராம் அதனால எதைவேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  14. தான்ஸேன் கதை சுவாரஸ்யம். தவப்புதல்வன் படத்தில் ஒரு காட்சியில் சிவாஜி கணேசன் தான்ஸேன் ஆக நடித்திருப்பார். (இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடல் காட்சி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அந்தக் காட்சி பார்த்திருக்கிறேன். அருமையான பாடல்! அருமையான கல்யாணி ராகம்...

      தான்சேன் நல்ல கதை இல்லையா ஸ்ரீராம்...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  15. கதை எழுதியவர் ரிஷபன்ஜியோ?

    பதிலளிநீக்கு
  16. ///தான்ஸேன் சாந்தமாய் பதிலளித்தார், “நான் உங்கள் கட்டளைப்படி உங்களை மகிழ்விக்கப் பாடுகிறேன். என் குருவோ இறைவனுக்காகவே பாடுகிறார். அதுதான் வித்தியாசம்”///

    ஆஹா ஆனா என் குருவுக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லையாக்கும்:)).. நாங்க இருவருமே அடுத்தவர்களை மகிழ்விக்கவே ஷேஸ்டை பண்ணுவோம்ம்:))..

    பாருங்கோ அந்தப் பிளாஸ்டிக்கைக் கடிப்பதை.. குரு கோபிக்காமல், என்னா அழகா ரசிச்சுச் சிரிக்கிறார்:)).. அஞ்சுவுக்கு இப்பூடிச் சிரிச்சு மகிழ்விக்கத் தெரியுமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. http://25.media.tumblr.com/tumblr_m0bmaktReq1rqlgkgo1_500.gif

      நீக்கு
    2. ஆஹா ஆனா என் குருவுக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லையாக்கும்:)).. நாங்க இருவருமே அடுத்தவர்களை மகிழ்விக்கவே ஷேஸ்டை பண்ணுவோம்ம்:)).. //

      ஹா ஹா ஹா ஹா ஹா....

      பாருங்கோ அந்தப் பிளாஸ்டிக்கைக் கடிப்பதை.. குரு கோபிக்காமல், என்னா அழகா ரசிச்சுச் சிரிக்கிறார்:)).. அஞ்சுவுக்கு இப்பூடிச் சிரிச்சு மகிழ்விக்கத் தெரியுமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//

      ஹா ஹா ஹா இதுக்கு எதுக்கு ஏஞ்சலை இழுக்கறீங்க...உக குரு உங்களைப் பார்த்து ஹையோ இதுக்க இப்பூடி பாட்டு சொல்லிக் கொடுத்தோம்னு என் மானத்தை பப்ளிக்கா வாங்குதுனு அந்த சைனை பார்த்தால் அப்படித்தான் தெரியுது...ஹா ஹா ஹாஹா ஹா

      அப்படிச் சொன்னதும் தான் பூஸாருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து ஆஷா போன்ஸ்லே அவதாரம் எடுத்து வந்து எல்லோரையும்.....ஹிஹிஹிஹிஹி

      மிக்க நன்றி அதிரா எல்லோரையும் மகிழ்விப்பதற்கு. அது ஒரு ஆர்ட்!!!

      நீக்கு
  17. ///இதத்தானே நான் பல ஆண்டுகளாகக் கூவிக் கொண்டு கிடக்கிறன். ஆரு நான் சொல்லுறதை கேட்கினம்.//

    ஹா ஹா ஹா ரை கட்டிக்கொண்டு சொன்னால்கூட ஆருமே நம்மள மதிக்கிறேல்லை கர்ர்ர்ர்ர்:))...

    விதம் விதமா உப்புக் கிடைக்குது கீதா இங்கு, கல்லுப்பும் கிடைக்குது ஆனா அது போட்டால் நிறையப் போட வேண்டி வருது.... உப்புத்தன்மை குறைவாக இருக்கு... .. தீங்கு எனத் தெரிஞ்சும் அதைப் போடாமல் சமைக்க முடியுதில்லை என்னால் மேசை உப்பை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இப்போல்லாம் நிறைய கிடைக்குது. இந்துப்புனு சொல்லற ப்ளாக் ஸால்ட் நல்லதுன்றாங்க...ராக் சால்ட்...நல்லது ந்றாங்க..அப்படித்தான் கிடைக்கும் போது நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்க...

      மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  18. 2 வது கதை மனதைக் கொஞ்சம் கலங்கடிச்சிட்டுது.. கதையிலே அம்மா இப்போ இல்லையோ?..

    யானைப்படம் போட்டிருப்பது ஏதும் கதாசிரியருக்கான குளூவாக இருக்குமோ????

    இது கந்தர்வன் அவர்களின் கதையாக இருக்குமோ? அவரின் எழுத்துச் சாயல் தெரிகிறதுபோல ஒரு ஃபீலிங்கூ எனக்குள் ஹா ஹா ஹா.... சரி சரி பரிசைக் கெதியாத் தாங்கோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவும் மகனும் தானே கதையில்...அம்மா இருக்கிறார் என்றுதான் தெரிகிறது ஆனால் அம்மாவைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை ஆனால் அப்பா தன் அம்மா பற்றி நினைத்துக் கொள்கிறார் அவ்வப்போது...

      யானைப்படம் கதாசிரியர் க்ளூ எல்லாம் இல்லை....யாரு சரியா சொல்லுறாங்களோ அவங்களுக்கான பரிசு...

      சுஜாதா இல்லை அதிரா..கந்தர்வன் கதையும் இல்லை...பரிசு ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியில் நீங்கள் ஒளித்துவைத்துவிட்டு அந்த் மதில் மேல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்ததை ஸ்ரீராம் முருங்கிமரத்தில் ஏறி இளிந்து கொண்டு பார்ப்பதை நானும் பார்த்தேன் என்று சொன்னேனே...ஹா ஹா ஹா

      நீக்கு
  19. படிச்சேன். சுஜாதாவாகத் தெரியலை. அநேகமா பாலகுமாரன் என நினைக்கிறேன். சில இடங்களில் லா.ச.ரா. நினைவில் வந்தாலும் அவர் கதை இல்லை இது! பாலகுமாரனை நான் படித்து 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதால் சரியாகச் சொல்ல முடியலை! என்றாலும் சில இடங்கள் அவருடைய எழுத்தை நினைவூட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ கீதாக்கா கிட்ட வந்துட்டு தூர போய்ட்டீங்க!!! கீதாவுக்குப் பிடித்த யானையின் கட்டிப் பிடி வைத்தியமும், ஊற் சுற்றலும் இப்படி ஊசி கேப்ல கோட்டை விட்டுட்டீங்களே!!!

      மிக்க நன்றி கீதாக்கா...

      நீக்கு
    2. அப்போ பாலகுமாரன் தான்! :))))))))) அவர் தான் இப்படி எல்லாம் எழுதுவார். அந்த வரைக்கும் நிச்சயம். சுஜாதா நடையே தனி! லா.ச.ரா. அப்படியே இருதயத்திலிருந்து குமுறீக் கொண்டு வரும் வார்த்தைகளாகப் போடுவார். அதோடு அவர் எழுத்தில் வரும் பெண்கள் அனைவரும் அம்பிகையின் ரூபம்!

      நீக்கு
    3. கீதாக்கா நான் சொன்னது நீங்க கிட்ட வரை வந்ததுனு லா ச ரா சொல்லிட்டு இல்லைனு போய்ட்டீங்க...கீதாக்காவுக்குப் பிடித்த யானைக்குட்டி ஹக் மிஸ் ஆகிப் போச்சேனு....பானுக்கா சொல்லிட்டாங்க..நீங்க சொன்னா மாதிரி...

      கீதா

      நீக்கு
  20. பானுமதி தான் வந்து சொல்லணும். நிச்சயமா ரிஷபன் இல்லை. அவர் எழுத்தில் முதல் பத்தியில் (அல்சூர் ஏரி) குறிப்பிட்டிருக்கும் மாதிரியான உரையாடல்கள் வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதிக்காவைக் காணலை....ரிஷபன் அண்ணா இல்லை.....

      மிக்க நன்றி கீதாக்கா

      நீக்கு
  21. அன்பு துளசி, தான்ஸென் ஹரிதாஸ் கதை அற்புதம்.

    கதை சுஜாதா சாயல் தான்.
    அவரால் தான் இப்படி சர் சர்ரென்று சுருக்குனு குத்த முடியும்.

    பாகு எழுத்துகள் அவ்வளவு பரிச்சயமில்லை.
    வாழ்க வளமுடன் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா....ஆமாம் தான்ஸேன் கதை செமை...

      இல்லை வல்லிம்மா சுஜாதா கதை இல்லை....பாகு இல்லை

      மிக்க நன்றி வல்லிம்மா

      நீக்கு
  22. சிஷ்யைக்கும் பாடத் தெரியும்னுதான் தோணுது. ஓட்டை மைக்கை அவர் கையில் கொடுத்ததோடல்லாமல், வீடியோ வேறு எடுத்துப்போட்டிருக்கிறீர்கள். இதை ஹரிதாஸேகூட மன்னிக்கமாட்டார்!



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா வாங்க ஏகாந்தன் அண்ணா...சிஷ்யை மைக்கை போட்டு உடைப்பது தெரியலையா...ஹா ஹா ஹா ஆமாம் இப்படிப் பாடினால் ஹரிதாஸ் மன்னிக்க மாட்டார் தான்.

      அண்ணா உங்களால் கண்டுபிடிக்க முடியலையா அந்தக் கதையை எழுதியிருப்பது யாராக இருக்கும் என்று...

      மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

      நீக்கு
  23. நானும் கல் உப்பு தான் கீதா க்கா...

    என்னால எல்லாம் கண்டு பிடிக்க முடியாது க்கா...நானெல்லாம் அதில் கொஞ்சம் வீக்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹைஃபைவ் கல் உப்பிற்கு அனு

      ஹையோ அனு இதே போல வேற ப்ளாக்ல குறிப்பா எபி ல கீதாக்கா எல்லாம் கொடுப்பாங்களே அங்க நான் ஜீரோ!!!

      இது நான் அபூர்வமா வாசித்ததில் ஒன்று அதான் இப்படி பெரிய தம்பட்டம்!! ஹா ஹா ஹா ஹா ஹா

      மிக்க நன்றி அனு...

      நீக்கு
  24. நிச்சயமாக நான் எழுதிய கதைகளில் இவ்வரிகள் இல்லை கதம்பம் நன்றாக இருண்டது

    பதிலளிநீக்கு
  25. சுஜாதா, பாலகுமாரனெல்லாம் இல்லை. அவர்கள் பாணி வேறு. கொஞ்சம் சங்கர நாராயணன் தெரிந்தாலும் மணிக்கொடி காலத்து எழுத்துதான். மௌனி போலவும் தோன்றுகிறது. ஆனால் லா.ச.ரா.தான்.

    //அவர் கை விரித்தார். “கொடுப்பினை என்று ஒன்றிருக்கிறது. நம் தேவைகளுக்கு மீறிய ஆசைகள் ஆதிக்கம் கொண்டு விட்டன. தவிர உன் தாயார் பிள்ளைகளுடன் கட்சி ஹ்கேர்ந்துவிட்டாள். முன் வாழ்ந்த நாட்களைப் பெண்டிர் எப்படியோ சுருக்க மறந்துவிடுகிறார்கள்”//

    //“கொள்ளி போடத்தான் பிள்ளைகள். பந்தம் பிடிக்கப் பேரன்மார். சாஸ்திரமே அப்படி நியமிச்சுடுத்தே! ஆனால் யார் பற்ற வைத்தாலும் வேகும். நெருப்பின் தூய்மை அதில்தான். ஸர்வம் பஸ்ம மயம் ஜகத்…..”//

    இவையெல்லாம் அக்மார்க் லா.ச.ரா. பாணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்காஆஆஆஅ வாங்க யானைக்குட்டி உங்களை ஹக் பண்ணி தன் மேல் ஏற்றிக் கொண்டு ஊர் சுற்றப்போகிறது...ஓடி வாங்க!!!

      சூப்பர் அக்கா!!! யெஸ் நீங்க கோட் பண்ணின வரிகளை ஸ்பெசிஃபிக்காகக் கொடுத்திருந்தேன். யெஸ் சுஜாதா, பாலகுமாரன் பாணி வேறு...மௌனி, சங்கரநாராயணன் தெரியாது...நான் இன்னும் நிறைய வாசிக்கணும்னு பார்க்கிறேன்.

      பானுக்கா கல்கி கதைப் போட்டிக்குக் கலந்துக்கலாமே கலந்துக்கோங்க...

      பாராட்டுகள் வாழ்த்துகள் அக்கா!! உங்க ரீடிங்க் ரொம்பவே நிறைய....குடோஸ்!!!

      கீதா

      நீக்கு
    2. காலை வேளையில் சந்தோஷப்படுத்தி விட்டீர்கள். நன்றி! கீதா அக்காவும் கணித்திருந்தார், ஏனோ குழம்பி விட்டார் போலிருக்கிறது. கல்கி சிறுகதை போட்டியா? இப்போதுதான் கதை எழுத பழகிக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    3. இப்போதுதான் கதை எழுத பழகிக் கொண்டிருக்கிறேன்.//

      அக்கக்காஆஆஆஆஆஆஅவ் திஸ் இஸ் டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ மச்....அண்ட் தன்னடக்கம்....

      கீதா

      நீக்கு
  26. ஜீ.வீ. அண்ணா சொல்லி விடுவாரே, அவர் பார்க்கவில்லையா உங்கள் பதிவை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி அண்ணா வெரி ரேர் இந்தப் பக்கம் வருவது....வருவதில்லை.....

      நீக்கு
  27. ஸோ பானுக்கா விடை சொல்லிட்ட்டாங்க யாரு எழுதியிருப்பது என்று. லா ச ரா

    இது தினமணிக்கதிர் 1984 வருடத்தில் வந்த ஒர் இதழில் லா ச ரா அவர்கள் எழுதிய கதை ..பெயர் "சுழிப்புக்குள்"

    அருமையான கதை.

    பதிலளிநீக்கு
  28. //..உங்களால் கண்டுபிடிக்க முடியலையா அந்தக் கதையை எழுதியிருப்பது யாராக இருக்கும் என்று..//

    சீரியஸ் இலக்கியம்பற்றிக் கேள்விகேட்டு, பூஸார், மைக் என்று படம்போட்டது யார் தவறு! இரண்டாவது கமெண்ட்டைப் பிறகு போடுவோம் என நினைத்தேன். எபி-யில் போய்ச் சிக்கிக்கொண்டேன் நேற்று. இன்று இங்கே வந்தால், பூனை வெளியே வந்துவிட்டது-இது பூஸார் அல்ல-the cat is out of the bag already!
    கதைப்பகுதிகளை தொடர்ச்சியாகப் படிக்கவில்லை. படித்திருந்தாலும் சொல்லியிருப்பேனா என்பது சந்தேகமே. (லாசரா - ஒரே கதைதான் படித்துள்ளேன்.) ஆனால் சுஜாதா,பாலகுமாரன் எனச் சொல்லியிருக்கமாட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் அண்ணா...//சீரியஸ் இலக்கியம்பற்றிக் கேள்விகேட்டு, பூஸார், மைக் என்று படம்போட்டது யார் தவறு//

      ஹா ஹா ஹா ஹா ஹா,,அண்ணா அது வந்து மேல உள்ள ரெண்டு துணுக்குகளுக்கு...கீழ பாருங்க யானைக்குட்டி ஹக் பண்ண வெயிட் பண்ணிட்டுருக்கு...அப்புறம் ஊர் சுற்றிக் காட்ட என்று...

      எபியில் சிக்கிக் கொண்டீர்களா...ஹா ஹா ஹா பூஸார் பிடித்து இழுத்துவிட்டாரோ..சரி சரி தப்பிச்சுட்டீங்க போல...

      நீக்கு
  29. அருமையான பதிவு. தொகுப்பு அருமை. உங்கள் வலைத்தள வடிவமைப்பை இன்னும் மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

    சிகரம் வலைத்தளம் சிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018 #SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS
    #சிகரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சிகரம் பாரதி முதல் வருகைக்கும் கருத்திற்கும்....

      நீக்கு
  30. இந்த மாதிரியெல்லாம் கதை எழுத நம்ம துளசிதரனை விட்டால் யார் இருக்கிறார்கள்! வாழ்த்துக்கள்!

    -இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் அது லா ச ரா கதை சார்...

      ஹா ஹா ஹா

      மிக்க நன்றி செல்லப்பா சார்

      நீக்கு
  31. அரசியலாக இருக்குமோ என ஒதுங்க நினைத்தபோதுதான் உங்களின் நடையின் உத்தியை அறிந்தேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. கருத்திற்கு.

      அரசியல் பதிவுகள் வராது ஐயா..

      நீக்கு
  32. கதம்பம் அருமை..
    கல் உப்பும், பொடி உப்பும் பயன் படுத்துகிறேன்....
    கதை யாரிதுன்னு அடுத்த பதிவில் வந்து பார்த்துக் கொள்கிறேன் ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  33. //அவளுடைய புன்னகையின் ஜாஜ்வல்யத்திற்கு என்னையே காணிக்கையாகக் கொடுத்தாலும் போதுமோ? உள்ளே போய்விட்டால்தான் எனக்கென்ன? ஒரு தாவல், ஒரே தாவல். அப்புறம் எனக்கென்ன தெரியப் போகிறது?....//

    இந்த மாதிரி தனுக்குள் பேசுவது அதில் லயிப்பது எல்லாம் லா.சரா தான்.

    பதிலளிநீக்கு
  34. எனக்கு ஏன் டேஸ்போர்டில் காட்டவில்லை தாமத வரவுக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  35. கல் உப்பும், பொடி உப்பு டாட்டாவும் பயன்படுத்துகிறேன். இப்போது கொஞ்சம் இந்துப்பு பொடியும் வாங்க்கி வைத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  37. தான்ஸேன் கதை மிகுந்த சுவாரஸ்யம்! தான்ஸேன் தர்பாரி கானடா ராகத்தை உண்டாக்கியவர் என்றும் ' மேஹ மல்ஹர் ராகம் மூலம் மழை பொழிய வைத்தார் என்றும் அறிந்திருக்கிறேன். ' ஜோதா அக்பர்' சீரியலில் தான்ஸேன் பாடும் ஸ்வரங்கள் அத்தனை அற்புதமாக இருக்கும்!

    நான் கொஞ்ச நாட்கள் முன்பு வரை கல் உப்பு தான் பயன்படுத்தினேன். இப்போதெல்லாம் பொடி செய்த இந்துப்பு தான் [ rock salt] சமையலுக்கும்!!

    பதிலளிநீக்கு