வியாழன், 3 மே, 2018

மனதைக் கலங்கடித்த காணொளி


இன்று காலையில் வெங்கட்ஜி அவர்களின் பதிவாகிய மனதை விட்டு அகலாத காட்சி… யை வாசித்துவிட்டு வேதனைப்பட்டு அங்கு நான் கொடுத்திருந்த கருத்து இதுதான். மாமியார் மருமகள் சண்டை, இப்படி அடிப்பது துரத்துவது எல்லா இடங்களிலும் ப்ரவலாகக் காணப்படும் ஒன்று என்றாலும் கூட இங்கு விட வட இந்தியாவில் ரொம்பவே அதிகமாக நடக்கும் போலத் தெரிகிறது....பாவம் அக்குழந்தை. இந்த அனுபவங்கள் அக்குழந்தைக்கு நல்ல பாடங்களைப் புகட்டினால் நல்லது. வேதனைதான். 

அதை வாசித்து வேதனைப்பட்டு கருத்து அனுப்பிய அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு வீடியோ ஒன்று வந்தது. இது எங்கு நடந்த சம்பவம் என்று தெரியவில்லை என்றாலும் எங்கள் ஊரில் செய்திகளில் முதன்மையாகப் பேசப்பட்ட கிட்டத்தட்ட இதே போன்ற சம்பவமும் வேதனை அளித்தது. வெங்கட்ஜி எழுதியிருந்த நிகழ்வே வேதனை என்றால் இது அதைவிடக் கொடுமையானது. மனதை மிகவும் பாதித்த ஒன்று. காணொளியை இணைத்துள்ளேன். உங்களுக்குப் பார்க்கும் மன தைரியம் இருந்தால் பாருங்கள்.  

எனக்கு அந்தக் காணொளியை முழுவதும் பார்க்க இயலவில்லை. கொஞ்சம் பார்த்ததுமே மனம் வேதனை அடைந்திட கண்ணில் நீர் நிறைந்து கோபம் தலைக்கேறியது. இப்படிப்பட்டவர்கள் நாளைக்கு அவர்களின் குழந்தைகளால் அடித்துத் துன்புறுத்தப்படுவார்கள்தானே என்றும் தோன்றியது. எத்தகையக் கொடுமைக்காரியாக இருந்திருக்க வேண்டும் அப்பெண்? மனதில் கொஞ்சம் கூட ஈவு , இரக்கம் இருந்திருக்காதா? இப்படியானவர்களை என்ன செய்யலாம்? 

பாலக்காட்டில், புதுப்பரியாரம் எனும் இடத்தில் 80 வயது மூதாட்டி தன் சொத்தைத் தன் மகனின் பெயரில் மாற்றிய பின் மருமகள் அத்தாய்க்கு உணவு சரியாகக் கொடுக்காமல், அடித்துத் துன்புறுத்துவதை அருகில் இருந்தோர் ரகசியமாக வீடியோ எடுத்து வீடியோவை வைரலாக்கிட, செய்தி பரவியது இந்தக் காணொளி பாலக்காட்டில் நடந்த சம்பவத்தின் வீடியோ இல்லை ஆனால் வேறு எங்கோ நடந்தது என்றாலும் பாலக்காட்டிலும் கிட்டத்தட்ட இதே போன்றுதான் நடந்தது. அதுவும் செய்திகளில் வந்தது.

படுக்கையில் இருக்கும் மாமியார் கழித்த மலத்தை அவர் மகன் எடுத்துச் சுத்தம் செய்யலை என்றும் மாமியார் சொன்னபேச்சு கேட்கவில்லை என்பதற்கும் அடிக்கிறார்களாம் அப்பெண். 

நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்றும். நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும் என்றும் தான் பிரார்த்திப்போம். ஆனால் இந்தக் காணொளியைச் சிறிது கண்டதுமே இறைவனிடம், அந்த ஜீவனுக்கு விடுதலை அளித்துவிடு. இங்கு இப்படித் துன்புறுவதை விட இக்கொடுமையிலிருந்து காப்பாற்றிவிடு என்று பிரார்த்திக்கத் தோன்றியது.  கருணைக் கொலை பற்றி இன்னும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதை மனம் ஏற்க முடியாத நிலையில் இப்படியானவற்றைப் பார்க்க நேரிடும் போது இப்படிப் பாவப்பட்ட ஜீவனாக வாழ்வதை விட மரணம் அடைவதே மேல் என்று தோன்றத்தான் செய்கிறது. நம்மால் ஏதும் செய்ய இயலாத நிலையில் இப்படியான எண்ணங்கள் தோன்றுகிறது.

எங்கள் ஊரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு எப்படியோ தற்போது ஊடகங்கங்களும் அதை வெளியிட இப்போது, அவ்வூர் பஞ்சாயத்து, எம் எல் ஏ, சமூக நலச் சங்கங்கள் எல்லாம் கூடி விட்டதாகத் தெரியவந்தது. நல்லதொரு வழி பிறக்கும் என்று தோன்றுகிறது. அம்மூதாட்டி இக்கொடுமையிலிருந்து விடுதலை அடைந்து நல்ல முறையில் காப்பாற்றப்பட வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.

இப்படி மருமகள் மாமியாரைக் கொடுமைப்படுத்துவதும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறதாம். மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்துவதையும் நாம் அவ்வப்போது கேள்விப்படத்தான் செய்கிறோம். இப்படிக் காலம் காலமாக நடந்து வரும் மாமியார் மருமகள் பிரச்சனை, கொடுமை இவற்றிற்கு முடிவே பிறக்காதா? இல்லையா என்று தோன்றுகிறது. 


பகிரப்பட்ட காணொளி வேறு ஆனால் கிட்டத்தட்ட இதே போன்ற சம்பவம்தான்...பாலக்காட்டிலும்.... மன திடம் இருந்தால் பாருங்கள்

----துளசிதரன்38 கருத்துகள்:

 1. மனிதாபிமானம் என்பது அறவே இல்லாமல் போய்விட்டதா என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மதுரை தமிழன் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 2. ஆம் பார்க்க கொஞ்சம் மனத் தைரியம்
  நிச்சயம் வேண்டும்
  பகிர்ந்த விதம் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரமணி ஸார் கருத்திற்கும் வருகைக்கும். பல நாட்கள் ஆயிற்று தங்களைக் கண்டு

   நீக்கு
 3. வணக்கம்.

  மனதில் ஈவு இரக்கமே இல்லாமல் இப்படி அடிக்கிறார் அந்த பெண்மணி. அவரை பெண் என சொல்வது பாவம். அரக்கி என திட்டலாம் போல் கோபமாக வருகிறது. நீங்கள் சொன்ன மாதிரி பாதிக்கு மேல் பார்க்க இயலவில்லை. அந்த ஜீவனை சீக்கிரமாக எடுத்துக் கொண்டு போய் விடு.. என்று ஆண்டவனிடம் உங்களைப் போல நானும் பிரார்த்தித்தேன். கொடுமை செய்யும் அந்த பெண் நல்ல நிலைமையில் இனி இருக்க மாட்டார்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 4. தொடர்ந்து பார்க்கும் தைரியம் வரவில்லை. எனக்கு என் அலைபேசியில் வந்தபொழுது ஸ்கிப் செய்திருந்தேன். இங்கு பதிவாக வந்திருப்பதால் சற்று பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் தைரியம் இல்லை. மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 5. மனித ஜென்மங்களா இவர்கள்? மனிதத்தை மறந்த ஜென்மங்கள். நாளை நமக்கு என்ன ஆகும், நம் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசிக்காத ஜடங்கள்.

  பதிலளிநீக்கு
 6. வெளித்திண்ணையிலேயே வைத்திருந்த தகப்பனார் காலமானதும் அவருக்கு வைத்திருந்த ஓட்டை அலுமினியத் தட்டைத் தூக்கிப்போடப்போனானாம் அவர் மகன். அப்போது அவரின் மகன் சொன்னானாம் "அப்பா... அதைத் தூக்கிப்போடாதே... உனக்குத் தேவையாய் இருக்கும்"

  நாம் எல்லோரும் கேள்விப் பட்ட கதைதான் இதுவும். அதுதான் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கருத்து. மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 7. வெங்கட்டின் பதிவைப் பார்க்கவில்லை. என்றாலும் மருமகள்கள் மாமியாரைக் கொடுமை செய்யும் காட்சிகளைத் தொலைக்காட்சி சானல்களும் ஒளிபரப்பின. எழுந்து நடக்க முடியாத மாமியாரைக் கட்டிலை விட்டுக் கீழே தள்ளுகிறாள் மருமகள். கட்டிலிலிருந்து தலைகீழாக விழுந்து அப்படியே கிடக்கும் மாமியாரை அப்படியே விட்டு விட்டுப் போகிறாள் மருமகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கெளுக்கெல்லாம் இதயம் இரும்பினால் செஞ்சதா? ஏன் இப்படிப்பட்ட விஷயங்களை எழுதி கலவரப்படுத்துகிறீர்கள்?

   நீக்கு
  2. மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம் கருத்திற்கும் வருகைக்கும். டிவியில் இப்படி எல்லாம் வருகிறதா? பார்த்ததில்லை இதுவரை நல்லக்காலம்.

   நீக்கு
 8. காணொளியைக் காண மனம் ஏற்கவில்லை..
  நோயில்லாத வாழ்விருந்தால் வாழலாம்.
  இல்லை இறைவன் பாதம் ஏகவேண்டும்.
  இதென்ன கொடுமையான வாழ்க்கை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வல்லிம்மா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஆம் காண முடியவில்லை

   நீக்கு
 9. மருமகளுக்கோ, மாமியாருக்கோ இப்பிரச்சனைகள் ஓய்வதற்கு திருமணம் ஆனவுடன் தனிக்குடித்தனம் போவதுதான் தீர்வாகும் என்றால் இதையும் எல்லோரும் மனப்பூர்வமாக ஏற்கலாம்.

  அன்று முதல் இன்றுவரை இப்பிரச்சனை பெண்ணினத்துக்கே என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

  இந்த சமூகத்தின் எல்லா விடயங்களிலும் மாற்றம் தேவை.

  காணொளி காணவிரும்பவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கும் வருகைக்கும். இல்லை ஆண்களுக்கும் உண்டு. கில்லர்ஜி. இது வெளியில் பேசபப்டுவதால் தெரிகிறது அவ்வளவே.

   நீக்கு
 10. உடல் தெம்பு மட்டுமில்லாமல் மனத் தெம்பு, பணத்தெம்பு எல்லாம் இருந்தால் தனியே இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லாதவர்களுக்கு கஷ்டம்தான் மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம் க்ருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 11. பதில்கள்
  1. மிக்க நன்றி கரந்தையார் அவர்களே கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 12. ஒரே சமயத்தில் பத்து நபர்கள் இந்த காணொலியை எனக்கு பகிர்ந்து இருந்தார்கள். அதில் ஐந்து பேர்களின் குடும்பத்தில் மாமனார் மாமியாரை தனியாக தோட்டத்தில் வைத்திருப்பவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக ரசித்த பின்னூட்டம் ஜோதிஜி. 'சொல்வது யார்க்கும் எளிய'

   நீக்கு
  2. மிக்க நன்றி ஜோதிஜி கருத்திற்கும் வருகைக்கும்.

   நீக்கு
 13. துளசிதரன் சார்... காணொளியைக் கண்டுட்டில்லா. வெள்ளிக்கிழமையும் அதுவுமா இதுவேறா?

  நாம் என்ன செய்கிறோமோ அதுவே நமக்கும் வாய்க்கும். இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் புரிந்துகொள்ளும் காலம் வரும்.

  எல்லோரையும் நீண்ட ஆயுளோடு வாழுங்க, 100 வயசு வரை வாழணும் என்று சொல்வதே ஆசி இல்லை, சாபம் என்பது என் கருத்து. மனிதன் செயல்படும் தகுதியை 75லேயே பெரும்பாலும் இழந்துவிடுவார்கள். அப்படி இல்லாமல் தெம்பாக இருப்பவர்கள், ஆரோக்கியமாக இருப்பவர்கள், தேவையான பொருளுடன் இருப்பவர்கள், தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள முடிந்தவர்கள் மட்டும் 100 வயது வாழலாம். மற்றவர்களுக்கு வாழ்வு ஒரு சுமை (அடுத்தவரை டிபெண்ட் பண்ணி இருந்தால்). இதுதான் என் கருத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நெல்லை தமிழன் கருத்திற்கும் வருகைக்கும். இதற்கு விரிவாக பதில் கொடுக்க நினைத்தேன் ஆனால் நேரப்பற்றாக் குறை. மன்னிகக்வும்

   நீக்கு
 14. நான் நெல்லை தமிழன் சொல்வதை தான் சொல்ல நினைத்தேன்.
  யாருக்கும் மற்றவர்களை எல்லாவற்றிற்கும் எதிர்பார்க்கும் நிலை வரக்கூடாது.
  ஆனால் இறைவன் நமக்கு எப்படி வாழ்வை நிறைவு செய்யும் நாளை எழுதி வைத்து இருக்கிறான் என்று தெரியவில்லை.

  காணொளி பார்க்க மனது கனத்து போனது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 15. மனிதத்தை நாம் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை இதுபோன்ற நிகழ்வு உணர்த்துகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 16. எனக்கு ஒரு கதை நினைவுக்குவருகிறது போன பிறவியின் பலன் என்று சமாதானம் அடைய ஒர்ய் சிறுவன் ஒரு கரப்பான் பூச்சியைப் பிடித்துதுன்புறுத்திக் கொண்டு இருந்தானாம் அடுத ஜன்மத்தில் நீ கரப்பான்பூச்சியாய்பிறந்துகஷ்டப் படுவாய் என்றுசொன்னார்களாம் அதற்கு அச்சிறுவன் போன ஜன்மத்திலேயே நான் கரப்பான் பூச்சியாக இருந்துஇந்தக் அரப்பான் பூச்சி சிறுவனாக இருந்து என்னைக் கொடுமைப் படுத்தியதுஅதன்பலனைஇப்போதுது அனுபவிக்கிறது என்றானாம் எல்லாவற்றுக்கும் பூர்வ ஜன்மபலன் சொல்பவர் கவனிக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜி எம் பி ஸார். கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 17. எல்லோருக்கும் விரிவாகப் பதில் கொடுக்க நினைத்தேன் ஆனால் நேரப்பற்றாக்குறை. நாளை வரை. எனவே சுருங்கப் பதில். மிக்க நன்றி அனைவருக்கும் கருத்திட்டமைக்கு

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 18. புடவை கட்டுலாம் பார்த்தால் தமிழ்நாடு மாதிரிதான் இருக்கு, இந்த வீடியோவை நானும் பார்த்தேன். கொடுமைதான்.

  பதிலளிநீக்கு