சனி, 3 பிப்ரவரி, 2018

பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைத்து…

கடந்த தினம் கேரளா நிதியமைச்சர் திரு. தாமஸ் ஐஸக் கேரள மாநில பட்ஜெட்டை வெளியிட்டார். ஜிஎஸ்டி உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பணப்பற்றாக்குறையில் தள்ளாடும் கேரள அரசின் செலவுகளைக் குறைத்து வருமானத்தைக் கூட்ட ஆவன எல்லாம் செய்து, பாராட்டிப் பேச அதிகம் ஒன்றுமில்லாத பட்ஜெட்டை வெளியிட்ட அவர், புத்திசாலித்தனமாகப் பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூவை வைத்து தப்பித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

Image result for sneha's poem, kerala

பட்ஜெட்டை வெளியிடும் வேளையில் பெண் எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் பற்றி இடையிடையே மேற்கோள் காட்டிப் பேசி வந்தவர், சமையலறையில் பெண்கள் செய்யும், கவனிக்கப்படாத, விலையிட முடியாத வேலைகளைப் பற்றிச் சொல்கையில், +1 படிக்கும் சினேஹா எனும் மாணவி எழுதிய ஒரு கவிதையை வாசித்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துவிட்டார்.

பாராட்டுகள்! வாழ்த்துகள்! சினேஹா!!!
என்.பி. சினேஹா இரண்டு வருடங்களுக்கு முன் உயர்நிலைப் பள்ளியில் படித்த போது செர்ப்புளசேரி சப்ஜில்லா கலைவிழாவில் (கலோத்சவத்தில்) எழுதிய அந்தக் கவிதை இதோ…(தமிழாக்கத்தில்)

லேப்(பரிசோதனைக் கூடம்)
கெமிஸ்ட்ரி ஸார் தான் சொன்னார்
சமையலறை ஒரு பரிசோதனைக் கூடம் என்று
கூர்ந்து கவனித்த போதுதான்
தெரிந்து கொண்டேன் நான்
அது உண்மை என்று.
அதிகாலை முதல் புகைந்து புகைந்து
தனியே இயங்கும்
கரி பிடித்துப் பழுதடைந்து கொண்டிருக்கும்
ஓர் எந்திரம்
அங்கிருந்து எல்லா தினமும்
சோடியம் க்ளோரைட் கரைசலை
உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது!

எல்லோரும் “புலாப்பட்டா எம்.என்.கே.எம் ஹையர் செகண்டரி பள்ளி”யில் +1 படிக்கும் ஸ்னேகாவுக்கு கிடைத்த அங்கீகாரத்தையும், சமையலறையில் கவனிக்கப்படாத, கணக்கிலெடுக்கப்படாத பெண்களின் வேலைகளைப் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டதால், பட்ஜெட்டை உண்மையிலேயே மறந்தே போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பேச ஒன்றுமில்லாத பட்ஜெட்டைப் பற்றிப் பேசுவதை விட அந்த மாணவிக்கும் அவரது ஆசிரியருக்கும், பெற்றோருக்கும், பள்ளிக்கும் கிடைத்த பாராட்டைப் பற்றிப் பேசுவதுதானே நல்லது. மாணவ மாணவியர்களுக்கு இத்தகைய பாராட்டுகள் மிக மிக அவசியம். அத்துடன் சமையலறையில் எவரது பாராட்டையும் எதிர்பாராது கடமையாற்றும் பெண்களின் பெருமை பற்றிப் பேசவும் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இத்தகைய நினைவுகூரல்கள் இடையிடையே இல்லற வாழ்வில் நிகழ வேண்டியது மிக மிக அவசியம் தான். இதனிடையே வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை எல்லோருக்கும் மிக எளிதாகத் தனது இச்செயலால் விளங்க வைத்த நிதி அமைச்சரின் சமயோசித புத்தியைப் பாராட்டாவிட்டாலும் புரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். 

படங்கள் : இணையத்திலிருந்து.

--------துளசிதரன்

(பி.கு: கீதா: இணையம் ராத்திரி அகாலத்திலும், காலையிலும் தான் வேலை செய்கிறது. அதாவது அமெரிக்க நேரத்திற்குத்தான் வேலை செய்கிறது. கடந்த மூன்று நாட்களாக இந்தப் பிரச்சனை. எனவே பலரது தளத்திற்கும் எங்களால் வர இயலவில்லை. இன்று மாலை துளசி இப்பதிவைத் தந்திட, வெயிடமுடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் திடீரென்று நெட் ஒளிர்ந்திட பதிவை வெளியிடுகிறேன், நெட் தொடர்ந்து வருமா என்றும் தெரியவில்லை.  நாளை (ஞாயிறு) நான் என் மகனின் நெருங்கிய நண்பரின் கல்யாணத்திற்காகப் பாண்டிச்சேரி செல்வதால், வரும் பின்னூட்டங்களைக் கூடியவரை மொபைலில் பார்த்து வெளியிட முயற்சி செய்கிறோம். துளசியின் பதில் கருத்துகளை திங்கள் இரவு நான் சென்னை வந்ததும், நெட் வேலை செய்தால் வெளியிடுகிறேன். நன்றி)



40 கருத்துகள்:

  1. கவிதை நன்று. பட்ஜெட் பற்றி என்ன சொல்ல.... அதிலும் அரசியல் தான் தலையாய இடம் பெறுகிறது.

    பதிலளிநீக்கு
  2. நல்ல சாமர்த்தியம் தான்...பட்ஜெட் எங்கேனும் பிரச்சனைகளை, விவாதங்களைக் கிளப்புமோ என்று அவையோரின் சிந்தனைகளைத் திசை திருப்பிவிட்டார் என்றே சொல்லலாம். அது தற்காலிகமே என்றாலும்...இடையில் அவர் மேற்கோள் காட்டியிருக்கும் சினேஹாவின் கவிதை அருமை. உண்மைதானே எத்தனையோ பெண்கள் சமையலறையில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுப்பின் கீழும் வீட்டு வேலைகளிலும் உழன்று கொண்டிருக்க எத்தனை கணவன்மார்கள், ஆண்கள் அதைப் பாராட்டுகின்றனர்? சரி பாராட்டல் வேண்டாம் அட்லீஸ்ட் புரிந்து கொள்ளலாம் இல்லையா? அவளது செயல்களை எப்போதேனும் ஒரு நொடியேனும் சிந்திக்கலாம்...அல்லது அவளிடமே அதைச் சொல்லிப் பாராட்டாவிட்டாலும் அதற்கு அங்கீகாரமேனும் கொடுக்கலாம். அதுவே பெண்ணிற்கு மிகப் பெரிய புத்துணர்ச்சி தரும் அவார்ட்! ஆகிவிடும்! ஒரு சின்ன அங்கீகாரம். அதே போன்றுதான் வீட்டு வேலை செய்ய உதவிக்கு வைத்துக் கொள்ளும் பெண்களையும் மதித்து கொஞ்சம் பாராட்டிப் பாருங்கள்!!! விளைவுகள் பிரமாதமாக இருக்கும். இதெல்லாம் தான் வாழ்வினை எப்போதும் மகிழ்வாக வைத்துக் கொள்ளும் டானிக்குகள்! நேர்மறை சக்திகள்.

    என் அனுபவத்தில் இதைச் சொல்லுவது...பெண் அது மனைவியாக, சகோதரியாக, அம்மாவாக, இல்லை உதவி செய்யும் பெண்ணாக இருந்தாலும் சரி வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அதாவது பெருக்கித் துடைத்துக் கொண்டிருக்கும் போது எத்தனை ஆண்கள்...அதாவது வீட்டு ஆண்கள்...ஏன் பெண்களும் தான் வெளியிலிருந்து வரும் போது செருப்புகளை வாசலிலேயே மண்ணைத் தட்டிவிட்டு வீட்டிற்குள் விடுகிறார்கள்?. நான் பார்த்த வரையில் வெகு சிலரே. பெருக்கும் போது, துடைக்கும் போது, நடக்காமல் வீட்டில் காலடிகளைப் பதியாமல் இருத்தல் போன்றவையும் அப்பெண்ணை அப்பெண்ணின் பணியை நாம் மதிப்பதற்குச் சமானம் ஆகும்.

    நல்லதொரு கருத்துள்ள கவிதை.... துளசி....அப்பெண்ணிற்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை . பட்ஜெட்டில் இலவசங்கள் அதிகம் இல்லாத தேசம் கேரளா)))

    பதிலளிநீக்கு
  4. நிச்சயம் இயல்பு வாழ்க்கை மக்களின் உணர்வுகளை மேற்கோள் காட்டும் நிதி அமைச்சரின் செயலை பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! உண்மைதான்! ஒரு கல்லில் இரு மாங்காய் எனக் கொள்ளலாமா நேசன். கருத்திற்கு மிக்க நன்றி

      நீக்கு
  5. >>> சோடியம் குளோரை கரைசலை உற்பத்தி செய்யும் இயந்திரம்!..<<<

    கண்கள் கசிகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மிகவும் சரிதான் இல்லையா துரை செல்வராஜு ஐயா?!! அப்படித்தானே பல வீடுகளில் பெண்களின் நிலைமை. கருத்திற்கு மிக்க நன்றி

      நீக்கு
  6. திரு. தாமஸ் ஐஸக் சாமர்த்தியசாலி அவர் படிக்கும் காலத்திலிருந்தே... இப்படித்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா...கில்லர்ஜி! உங்கள் தோழரை விட்டுக் கொடுக்க மாட்டீங்க போல!!!! மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  7. தனியே இயங்கும்
    கரி பிடித்துப் பழுதடைந்து கொண்டிருக்கும்
    ஓர் எந்திரம்.....

    அருமையான படைப்பு.....எங்களுக்கும் அறிய தந்தமைக்கு மிகவும் நன்றி ...அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைத்தான் அப்பெண் எழுதியுள்ளாள் இல்லையா....மிக்க நன்றி சகோதரி அனு தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  8. கவிதை நல்லா இருக்கு. ஆண்பிள்ளைகளுக்கும் சமையல் மற்றும் பெண்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுக்காமல் விடுவது தவறு. அப்போதுதான் அவர்களுக்கு, பெண்களின் கஷ்டம் எல்லாம் தெரியும். 2-3 வேளை சாப்பாடு செய்வது என்பது சுலபமான வேலையல்ல.

    உண்மையைச் சொல்லப்போனா, வீட்டின் நிர்வாகம்தான் கஷ்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நெல்லை தமிழன். நான் 10 ஆம் வகுப்பிலிருந்தே தனியாக விடப்பட்டதால், அப்போதிருந்தே அடுப்பில் சமைப்பது வழக்கமானது....

      வீட்டு நிர்வாகம் என்பது நீங்கள் சொல்லியிருப்பது போல் மிக மிகக் கடினமான ஒன்று. ஆண்களும் உதவ வேண்டும். நான் பாலக்காட்டில் தனியாகத்தான் சமையல். வீட்டில் அக்கா....மற்றும் மனைவி.

      மிக்க நன்றி நெல்லை தமிழன் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
    2. வீட்டில் ஆண்பிள்ளைகளையும் பழக்க வேண்டும் என்பது சரிதான். பெண் பிள்ளைகளையும் தான். இப்போதெல்லாம் குழந்தைகள் பழக்கபப்டுவதில்லை. என் பிள்ளைகளும் அப்படித்தான். ஆனால் இப்போது மூத்த மகன் வெளியூரில் என்பதால் அவனும் நண்பர்களும் சமைத்துச் சாப்பிடத்தான் வேண்டும். அப்படிப் பழகும் சூழல் நல்லதாகிப் போனது.

      மிக்க நன்றி நெல்லை தமிழன்

      நீக்கு
  9. கவிதை நன்றாக இருக்கிறது. இந்தக் கவிதையைப் படித்து அந்தப் பெண்ணையும் இல்லத்தரசிகளையும் நினைவு கூர்ந்த அவையோர் பட்ஜெட்டின் தாக்கத்தைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கப் போவதில்லை. நல்ல ராஜ தந்திரம் தான்! என்றாலும் தமிழ்நாடு போல் இலவசங்களைக் கவலையே படாமல் அள்ளி வீசும் பட்ஜெட்டைக் கேரளா போடுவதில்லை என்பது வரை சந்தோஷமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம். ஆமாம் நல்ல ராஜதந்திரம் தான்...இங்கு இலவசங்கள் அவ்வளவாகக் கிடையாதுதான்.

      நீக்கு
  10. ///(பி.கு: கீதா: இணையம் ராத்திரி அகாலத்திலும், காலையிலும் தான் வேலை செய்கிறது. அதாவது அமெரிக்க நேரத்திற்குத்தான் வேலை செய்கிறது. ///

    இதையும் கில்லர்ஜி ஜொன்னதையும் ஜொயின் பண்ணிப் பார்த்தால் ஓரளவு கரீட்டுத்தான் போல பொருந்தி வருதே:).. கில்லர்ஜி சொன்னார்.. தேவக்கோட்டை என்பது நியூயோர்க்காம் என:)).. அப்போ நீங்க அமெரிக்கா நேரம் என்கிறீங்க.. இந்தியா அமெரிக்காவா மாறி வருதுபோல:).. ஆனா ட்றம் அங்கிள் அங்கு வருவாரா தெரியல்லியே:) வந்தால் என்னையும் கூப்பிட்டுக்கொண்டேதேஏன்ன்ன்ன்ன் வறு:)வார்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவகோட்டையின் கோப்பிதான் நியூயார்க்.

      நீக்கு
    2. 'நல்லவேளை கில்லர்ஜி... நீங்க எங்க, 'தேவகோட்டையின் காப்பிதான் அபுதாபி, அதனால்தான் திரும்ப தேவகோட்டைக்கே வந்துட்டேன்' என்று சொல்லி, என்னையும் தேவகோட்டைக்கு வரச்சொல்லுவீர்களோ என்று நினைத்துவிட்டேன்.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா..அதிரா பல வகைகளில் உண்மைதான் இந்தியா அமெரிக்கா போல மாறி வருவது என்பது...அதான் பாருங்க கில்லர்ஜி என்ன சொல்லிருக்கார்னு...ரொம்ப ஓவர் இல்லையா?!! ஹா ஹா ஹா ஹா...ட்ரம்ப் அங்கிள் அவ்வளவு க்ளோஸ் ஃப்ரெண்ட்னா அதிரா தேம்ஸில் குதிப்பது போல் ட்ரம்ப் அங்கிள் குதிப்பாரா?!!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    4. ஹா ஹா ஹா.. மீ ட்றம்ப் அங்கிளின் பேசனல் செகரட்டறி எல்லோ கீதா:)..

      அவரவர்க்கு அவரவர் கவலை:) நெல்லைத்தமிழனின் கவலையைப் பாருங்கோ:) ஹா ஹா ஹா:)..

      தேவகோட்டையிலிருந்து போகும் கொஃபி யைத்தான் நியூயோர்க் மக்கள் குடிக்கிறார்கள் எனக் கேட்டு மீ வியக்கேன்ன்:)) ஹா ஹா ஹா:)

      நீக்கு
  11. துளசி அண்னன் கவிதை நன்று.. நீங்கள் எழுதியதோ?...

    இது கீதாவுக்கு ஊசிக்குறிப்பு: சில நாட்களில் வலையுலகமே நித்திரையில் இருக்கும் , இன்று எல்லா இடத்திலும் நியூ போஸ்ட்ட்:) என் குட்டிக் காலால எங்கின எல்லாம் ஓடி ஓடி கொமெண்ட்ஸ் போட்டு முடிக்கப்போகிறேனோ:) அந்த பரலோக பரமசிவனுக்கே வெளிச்சம்ம்ம்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா அந்தக் கவிதை நான் எழுதியதல்ல...பதிவில் சொல்லியிருக்கேனே. அது ஒரு மாணவி எழுதியிருப்பது. அது மலையாளத்தில் எனவே நான் அதைத் தமிழில் தந்திருக்கிறேன் அவ்வளவே!

      மிக்க நன்றி

      நீக்கு
  12. பேச்சென்றால் பேச்சு - அது
    கேட்போரை மயக்க வேண்டும் - அதற்கு
    புத்திசாலித்தனம் வேண்டும் - அதனை
    தங்கள் பதிவில் படித்தேன்!
    கேரளா நிதியமைச்சரைப் பாராட்டலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  13. வாவ் ! கவிதை நல்ல இருக்கு .உண்மைதானே நம்மூர் அம்மாங்களுக்கு நாளெல்லாம் ஓய்வில்லா பணிதான் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! சகோதரி ஏஞ்சல். பெண்கள் பலருக்கும் வீட்டுப் பணிகள் செய்வதற்கு ஓய்வில்லைதான்..

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  14. அதை அழகாய் உணர்ந்து எழுதிய ஸ்னேகாவுக்கும் சட்டசபையில் எடுத்துக்காட்டிய அமைச்சருக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அவர் எதற்காக அப்ப்டிச் செய்திருந்தாலும் அம்மாணவியின் கவிதையை மேற்கோள் காட்டிப் பேசியதற்காகப் பாராட்டலாம்

      மிக்க நன்றி

      நீக்கு
  15. புத்திசாலித்தனமான சொல்லாடல்! அதுவும் பெண்களை கவர்ந்திழுக்கும் பேச்சு!

    விசு ஒரு படத்தில் சொவார்,
    " ஆண்களுக்காவது பதவி ஓய்வு இருக்கிறது. பெண்களுக்கு கடைசி வரை ஓய்வென்பதே இல்லை!' என்று!

    இப்படி அல்லல்படுகிற பெண்களை பாராட்ட வேண்டாம். அவர்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ளக்கூட வேண்டாம். எரிந்து விழாமல் இருந்தால் போதுமே! அவர்களை ஒரு மனுஷியாக, எத்தனை பேர் நினைக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கவர்ந்திழுக்கும் பேச்சுதான் சகோதரி மனோ சாமிநாதன்.

      பெண்களுக்கு ஓய்வு என்பதே இல்லைதான்...உங்களின் கருத்தை எல்லோருமே பின்பற்றினால் பிரச்சனைகளே இல்லாமல் இருக்கும் இல்லையா..

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  16. //கவிதை நல்லா இருக்கு. ஆண்பிள்ளைகளுக்கும் சமையல் மற்றும் பெண்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுக்காமல் விடுவது தவறு. அப்போதுதான் அவர்களுக்கு, பெண்களின் கஷ்டம் எல்லாம் தெரியும். 2-3 வேளை சாப்பாடு செய்வது என்பது சுலபமான வேலையல்ல.

    உண்மையைச் சொல்லப்போனா, வீட்டின் நிர்வாகம்தான் கஷ்டம்.//

    நெல்லத்தமிழன் அவர்கள் பதிலை வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி கோமதி, ஆம் நெல்லை தமிழனின் கருத்து நல்ல கருத்து. மிக்க நன்றி தாங்கள் அதே கருத்தைச் சொன்னதற்கு...

      நீக்கு
  17. கருத்திற்கு மிக்க நன்றி நண்பர் கரந்தையார்..

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஆசானே, நலமா ?

    உண்மையான அக்கறையோ அல்லது திசை திருப்பல் அரசியலோ... நிதியமைச்சரின் நோக்கம் எதுவாக இருந்தாலும் இதன் மூலம் ஒரு பெண்ணின் திறமையும் பல பெண்களின் பிரச்சனையும் வெளிச்சத்துக்கு வந்தது நன்மையான விசயம்தான் !


    ஒன்றுக்கும் உதவாத சம்பவங்களை தங்களின் சுயநல அரசியலுக்காக ஆர்ப்பாட்டமாக்கி திசைதிருப்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கவணிக்க வேண்டிய சம்பவம் இது !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
    http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சாமானியன் சாம்...

      //உண்மையான அக்கறையோ அல்லது திசை திருப்பல் அரசியலோ... நிதியமைச்சரின் நோக்கம் எதுவாக இருந்தாலும் இதன் மூலம் ஒரு பெண்ணின் திறமையும் பல பெண்களின் பிரச்சனையும் வெளிச்சத்துக்கு வந்தது நன்மையான விசயம்தான் !//

      ஆம்!


      மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  19. மிகச்சிறந்த புத்திசாலித்தனமான கவன திசைதிருப்பல் (தமிழ்நாட்டிலிருந்து கற்றிருப்பார்களோ!!) என்றாலும் சிநேஹமான கவிதையை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் நிச்சயமாக இது கவன திசைதிருப்பல்தான். //தமிழ்நாட்டிலிருந்து கற்றிருப்பார்களோ// ஹா ஹா இருக்கலாம். பக்கத்து மாநிலக் காற்று வீசியிருக்கலாம். பொதுவாகவே இது அரசியல் குணம் தான் என்றும் சொல்லலாம் இல்லையா.

      ஆமாம் ஸ்ரீராம் கவிதை நன்றாக இருக்கும் மலையாளத்தில். அப்பெண் கலைவிழா போட்டியில் எழுதிய கவிதை. அதைக் கூட மந்திரி வாசித்தது கொஞ்சம் வியப்புதான்.

      மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கு

      நீக்கு