செவ்வாய், 30 ஜனவரி, 2018

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள…..

கடந்த சனியன்று (27-01-18), மாலை 6.45. இடம்: எர்ணாகுளம் பத்மா தியேட்டர் சந்திப்பு. நண்பரின் வீட்டுக் கல்யாண வரவேற்பில் பங்கெடுக்க மகள் விஷ்ணுப்ரியாவுடன் வேகமாக நடந்து கொண்டிருந்தார் ரஞ்சனி. மகளைக் கையில் பிடித்தபடி, வளைந்தும், நெளிந்தும் மனிதர்களுக்கிடையே கிடைத்த இடைவெளிகளில் பாய்ந்து செல்லும் அவரது குறிக்கோள் அடுத்துள்ள மெட்ரோ ஸ்டெஷன்தான். திடீரென ஒரு நல்ல இடைவெளி தென்படவே, “ஹப்பாடா” என்று அதில் நான்கு அடி எடுத்து வைத்ததும், வழியில், தலையிலிருந்து ரத்தம் வழிந்திடக் கிடக்கும் ஒரு மனிதர்!

இந்தக் காணொளியில் அந்த மனிதர் விழுவதிலிருந்து முழு நிகழ்வும் இருக்கிறது!!!

“அய்யோ” என்று பதறி மகளைப் பிடித்திருந்த கையை உதறி இரு புறமும் திரும்பிப் பார்த்த அவருக்குத் தன் கண்களை நம்பவே முடியவில்லை! இருபதுக்கும் மேற்பட்ட மனிதர்கள் சுற்றி நின்று பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டும், அடுத்து நிற்பவர்களிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டும் இருந்தனரே ஒழிய ஒருவரும் அம்மனிதரின் அருகே சென்று அவரைத் தொடவோ, தூக்கவோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவோ முயலவில்லை.

“ரத்தம் கையில் படும்!....ஆடைகளிலும் ரத்தம் படும்! ஏன் வம்பு. யாராவது வந்து தூக்குவார்கள்” என்ற எதிர்பார்ப்பில் எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள். பைக்கில் போகிறவர்கள் பைக்கை நிறுத்தி பைக்கில் உட்கார்ந்தபடி வருத்தத்துடன் பார்த்து, பின்னால் வருவோருக்கும் காண வசதி செய்து கொடுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். கொச்சி உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞரான ரஞ்சனிக்கு ஏனோ அவர்களைப் போல் ஒருவராக மாறி விஷ்ணுப்ரியாவின் கைகளைப் பற்றி மெட்ரோ ரயிலைப் பிடித்து கல்யாண வரவேற்பிற்குப் போகத் தோன்றவில்லை.

Image result for man who fell from third floor in kochi

“யாராவது வாங்களேன்! பிடிங்க, ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போவோம்” என்றபடி உட்கார்ந்து செத்துக் கொண்டிருந்த அந்த மனிதரை தன் கைகளால் பிடித்துத் தூக்கினார். கூடி நின்றவர்களில் செய்தவதறியாது திகைத்து நின்ற சிலருக்கு ரஞ்சனியின் அந்த மனிதநேயத் துணிச்சல் தொற்றிக் கொண்டதாலோ என்னவோ, ஓடி வந்து அம்மனிதரைப் பிடித்து ஒரு ஆட்டோவில் ஏற்ற ரஞ்சனியின் முயற்சிக்கு உதவினார்கள். ஆட்டோவில் வளைந்தபடி ஏறி உட்கார மட்டுமே முடியும் என்பதால், படுகாயமடைந்த அவரை ஏற்ற முடியவில்லை.

எப்படியோ ஒரு காரில் வந்தவர், தன் கார் இருக்கைகளில் ரத்தமானாலும் பரவாயில்லை, இம்மனிதனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், காயமடைந்தவரைத் தன் காரில் ஏற்றி, அங்குக் கூடியிருந்த நூற்றுக்கணக்கானவர்களில் இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் மட்டுமல்ல, நானும் மனிதன் தான் என்று நிரூபித்து அடுத்துள்ள மருத்துவமனைக்குப் பறந்தார்.

காரில் ஏற இடமில்லாததால், ஒரு ஆட்டோ பிடித்து ரஞ்சனியும் விஷ்ணுப்ரியாவும் மருத்துவமனைக்குச் சென்று அவருக்குத் தாமதியாமல் அவசரச் சிகிச்சை கிடைக்கத் தேவையானவற்றை எல்லாம் செய்தார்.

விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து தலை சுற்றி விழுந்த திருச்சூர் ஆவினிச்சேரியைச் சேர்ந்த கல்லுவெட்டுக் குழியில் சஜி மாலை 6.40 முதல் 6.55 வரை 15 நிமிடங்கள், ரஞ்சனியும் விஷ்ணுப்ரியாவும் வந்து உதவும் வரை விழுந்த இடத்திலேயே கிடந்திருக்கிறார். நூற்றுக் கணக்கான மனிதர்கள் போல் வேடமிட்டவர்கள் அங்கிருந்தாலும் அவர்களில் யாரும் சஜிக்கு உதவிக்கரம் நீட்டவே இல்லை.

“..........ஒரு மேதை, பகல் வேளை, கையில் விளக்குடன்
சென்றாராம்……….மனிதனெங்கே காணவில்லை தேடுகிறேன் நான்
என்றாராம்."

Image result for woman who saved the man who fell down from third floor in kochi
Ranjini pleading for help from passers-by to save the life of the man, who fell down from the third floor of a lodge

ஆம்! இப்போதெல்லாம் மனிதர்களை மனிதர்கள் போல் உள்ளவர்களிடையே தேடத்தான் வேண்டியிருக்கிறது. எப்படியோ தாய்மை குடி கொண்டிருக்கும் பெண்மை, இங்கு மனிதர்கள் போல் உள்ளவர்களிடையே நான்குபேரை மனிதர்களாக மாற்றுவதில் வெற்றி கண்டுவிட்டது. “இப்படித்தான் இருக்க வேண்டும் பெண்கள்!” என்று நிரூபித்த ரஞ்சனியையும் விஷ்ணுப்ரியாவையும் வாழ்த்துவோம்! போற்றுவோம்! வணங்குவோம்!

படங்களும், காணொளியும் இணையத்திலிருந்து. நன்றி கூகுள்
------துளசிதரன்



43 கருத்துகள்:

  1. நிச்சயம் இந்த மனித நேயச்செயலை பாராட்ட வேண்டும். பலர் இப்போது வெறும் பார்வையாளர்களாக இருப்பது சுயநலத்தின் கொடுமை எனலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
    2. என்னாச்சு உங்கள் தளத்தில் பதிவுகள் எதுவும் இடவில்லையா நேசன்?

      நீக்கு
    3. அன்பான நலம் விசாரிப்புக்கு நன்றிகள் இருவருக்கும். சில தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளினால் வலைப்பதிவுகள் தாமதாமாகின்றது . சபரிமலைக்கு செல்வதுக்கான இந்தியா விசா இங்கு பலருக்கு முடிவின்றிய நிலையில் இருப்பதால் இன்னும் விரதம் முடிக்கவில்லை நானும். விரைவில் ஐய்யன் அருளினால் விரதம் முடித்த பின் பதிவுகள் தொடரும்.மீண்டும் சந்திப்போம்.

      நீக்கு
  2. ஆஆஆஆவ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ கீசாக்கா இல்ல:)) கர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் இன்னிக்குக் கணினியைத் திறந்ததே லேட்டு! :) இந்த நேரம் முழிச்சிருக்க முடியுமா என்ன?

      நீக்கு
    2. கீதாக்கா நேற்று மாலையே துளசி இந்தப் பதிவைச் சொல்லிவிட்டார். எனக்கு இங்கு இணையம் இல்லாததால் வெளியிட முடியவில்லை. கைக்குழந்தையுடன் இருக்கும் என் தங்கையின் மகள் அம்பேரிக்காவில் இருந்து கூப்பிடுவதற்காகக் காத்திருக்க அப்போது ஒரு 10னிமிடம் நெட் வந்ததும் பதிவைப் போட்டுவிட்டேன். அப்புறம் நெட் போயிடுத்து...ஹா ஹா ஹா

      இப்ப காலையில்தான் வந்தது. துளசிக்கும் இன்னும் சொல்லவில்லை அவரது பதிவை போட்டாச்சுனு...ஹிஹிஹிஹி...கருத்துகளைப் பார்க்கச் சொல்லணும்...

      கீதா

      நீக்கு
    3. அதிரா வாங்க!! முதலில் வந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் ஃபர்ஸ்ட்னு குரல் பல தளங்களிலும் ஒலிக்கிறது போல!!!

      நீக்கு
  3. ஓ படித்ததும் மனம் கனத்தே விட்டது... இப்போ நம்மவர்கள் நிறைய மாறி விட்டார்கள்... எதுக்கும் துடிக்கும் காலம் போய் வேடிக்கை பார்க்கும் காலம் அதிகமாகி விட்டது...

    நான் வீடியோ பார்க்கவில்லை.. எனக்கு பார்க்க விருப்பமில்லாமல் இருக்கிறது... அந்தப் பெண் தெய்வம் போல அங்கு வந்தமையால் காப்பாற்றி விட்டார்ர்??? தப்பி விட்டாரோ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடியோ பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்தப் பெண் வழக்குரைஞராக இருப்பதால் மனித நேயத்துடன் தைரியமாக முடிவுகள் எடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. விழுந்தவர் தப்பிவிட்டது போலத்தான் தெரிகிறது. அவர் பேசுவதும் வீடியோவில் உள்ளது. மிக்க நன்றி அதிரா..

      நீக்கு
  4. வாவ் !! Ranjani and the others who joined with her to help that man are indeed Good Samaritans .
    யாரும் உதவ முன்வராத நேரத்திலும் பெண்ணாக அதுவும் திருமண வரவேற்புக்கு போகும் வழியில் யாரோ முகம் தெரியாத ஒருவருக்கு உதவிட முன்வந்தவரும் அவருக்கு துணையாய் இருந்தவர்களையும் மனதார பாராட்டுகிறேன் .
    ரத்த வெள்ளத்தில் அப்படியே கிடந்தார் ஷாஜி என்பது வாசிக்கும்போது வருத்தமாக இருந்தபோதிலும் ரஞ்சனி போன்றோரால் மனிதம் இன்னும் வாழ்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோதரி ஏஞ்சல்! ரஞ்சனியுடன் கைகோர்த்தவர்கள் அனைவருக்குமே பாராட்டுகள் உரியதுதான். ஒரு பெண் முன்னெடுத்ததுதான் அவருக்கு உதவிய அந்தக் கார்காரருக்கும் பாராட்டுகள்தான்...

      எப்படியோ காப்பாற்றப்பட்டாரே! மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  5. வணக்கம் சகோ!

    பதிவைப் படித்ததும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
    மனிதநேயம் என்பதே மருந்திற்கும் இல்லாமற் போயிற்றோ?.. பக்கத்தில் நின்றோர் இதனை எப்படித்தான் பார்த்துக் கொண்டு ஏதும் செய்யாமல் நின்றனரோ?.. வருத்தமாக இருக்கிறது சகோ!

    உதவிய தன்னலம் இல்லா அந்தத் தேவதைக்கு இறைவன் நல்லன எல்லாம் தரட்டும்! அவருக்கு என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனித நேயம் இன்னும் இருக்கிறது என்பதே மகிழ்வாக இருக்கிறது இல்லையா...மிக்க நன்றி சகோதரி இளமதி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  6. அருமையான மனுஷி. போற்றப்படவேண்டியவர். இது போன்ற பல சம்பவங்களை படித்திருக்கிறோம். பெரும்பாலான நிகழ்வுகளில் கேமிராவில் போட்டோ எடுத்தபடி நகரும் மக்களே அதிகம். நெகிழ்ச்சி. பாஸிட்டிவ் செய்திக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். அந்தப் பெண் தைரியமாக முன்வந்ததுதான்...இங்கு சொல்லப்பட வேண்டியது இல்லையா. நேற்று இதை எழுதும் போதே நான் நினைத்தேன் ஸ்ரீராமின் பாஸிட்டிவ் ந்யூஸ்க்குப் போக வேண்டியது என்று. மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கு

      நீக்கு
  7. நல்ல மனிதர்கள். மனிதம் இன்னமும் வாழ்கிறது. ரஞ்சனிக்கும் கூட உதவி செய்து ஷாஜியைக் காப்பாற்றிய நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். ஶ்ரீராமின் பாசிடிவ் செய்திகளுக்கு ஏற்றதாகவும் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கீதாசாம்பசிவம் த்ங்கள் கருத்திற்கு. ஆமாம் ஸ்ரீராமின் பாசிட்டிவ் செய்திக்கு ஏற்றது என்று எழுதும் போதே நினைத்தேன்.

      நீக்கு
  8. ரஞ்சனி, விஷ்ணுப்ரியா போன்றோரால் மனிதம் இன்னும் கொஞ்சம் வாழ்கிறதே... சந்தோஷம்.

    இவைகளை காணொளி எடுக்க எப்படி மனம் வருகிறது ?

    கேமராதானே இயந்திரம் மனிதனுமா ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எனக்கும் தோன்றியது எப்படி காணொளி எடுத்தார்கள் எடுக்க மனம் வந்தது என்று. என்றாலும் எப்படியோ மனிதம் கொஞ்சமேனும் இருக்கிறது காப்பாற்றப்பட்டாரே என்றும் தோன்றியது..

      மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு

      நீக்கு
  9. மனிதநேயம் என்பதே இல்லாமல் போகின்றது..
    யாரைக் குற்றம் சொல்வதென்றே தெரிய வில்லை..

    தாம் எதற்காகப் பிறந்திருக்கின்றோம் என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை..

    அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கல்விமுறையோ நல்லனவற்றைப் பயிற்றுவித்திருக்க வேண்டும்...

    இரண்டுமே பயனற்றுப் போயின..

    ரஞ்சனி, விஷ்ணுப்ரியா போன்ற நல்லோர் என்றென்றும் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாம் எதற்காகப் பிறந்திருக்கின்றோம் என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை..

      அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கல்விமுறையோ நல்லனவற்றைப் பயிற்றுவித்திருக்க வேண்டும்...

      இரண்டுமே பயனற்றுப் போயின..//

      ஆம் உண்மைதான். துரை செல்வராஜு ஐயா. கொஞ்சமேனும் நல்லுள்ளங்கள் இருக்கின்றார்கள் என்ற ஒரு மகிழ்ச்சி. மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு

  10. மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கே பயப்படும்படியாக ஒரு சமுதாயம் இருக்கும் போது ஒரு பெண் துணிச்சலாக உதவி செய்திருக்கிறார் என்பதை அறியும் போது மனம் நெகிழத்தான் செய்கிறது உதவிய அவ்ருக்கும் அந்த செய்தியை பகிர்ந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மதுரைத் தமிழன் ஒரு பெண் முன்னெடுத்து உதவியதுதான் இங்கு நெகிழ்ச்சி.

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  11. ரஞ்சனி அவர்கள் பாராட்டுக்குரியவர். ஆனா, நீங்க ஒண்ணு தெரிஞ்சுக்கணும். 95% பேர், நிகழ்ச்சியைக் கடந்து சென்றுவிடுவார்கள் (நான் உள்பட). இதுக்குக் காரணம், நிகழ்ச்சிக்குப் பிறகு வரும் பிரச்சனைகளை face பண்ண, அதனால் ஏற்படும் inconvenience, செலவுகளைச் சமாளிக்க, வேறு புதிதான பிரச்சனை வருமோ என்ற பயம், யார்/எவர் எதுனால நடந்தது என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் நல்லது நினைத்துப்போக அதனால் நாம் எந்த விதத்தில் பாதிக்கப்படுவோம் என்ற எண்ணம்... இதுலாம்தான் நமக்கு சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடாமல் இருக்கக் காரணம்.

    இந்த நிகழ்ச்சியை விட்டுடுங்க.
    1. யாரோ அடிபட்ட மாதிரி நடிக்கிறான் என்று வைத்துக்கோங்க. அவனுக்கு உதவற சாக்கில் நாம் உள்ளே புக, நடிக்கறவனோட நண்பன் வந்து scene create பண்ணினால்?
    2. குடிகாரனாக இருந்து அதனால் நமக்கு வேற பிரச்சனைகள் வந்தால்?
    கிராமம் என்றால், ஒவ்வொருவனைப் பற்றியும், அவன் background பற்றியும் ஊர்ல உள்ள எல்லோருக்கும் தெரியும். அதனால் தைரியமாக உதவ முடியும் (அதுவே ரத்தம் கித்தம் என்றால், உனக்கென்னடா வேண்டாத வேலை, போலீஸ் கூப்பிடும்போதெல்லாம் போகணுமே என்ற கேள்வி வரும்).

    இதுவே வெளிநாடு என்றால், அதனைத் தம் கடமையாக மக்களும் நினைப்பார்கள். அதற்கேற்றபடி அங்குள்ள அதிகார வர்க்கங்களும் நடந்துகொள்ளும். (போலீஸ், ஆஸ்பத்திரி போன்றவை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் ஏற்கக் கூடிய ஒன்றே. அது போன்ற நடைமுறைப் பிரச்சனைகள், பயம் எல்லாம் வராமல் இருக்கத்தான் இப்போது கேரள முதல்வர் இதனைக் குறித்துச் சொல்லியிருக்கிறார் சமூக வலைத்தளங்களில். அதாவது எந்தவிதச் சிக்கலும் வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் மக்கள் தைரியமாக உதவலாம் உதவ முன்வரவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். நடிகர் ஜெயசூரியாவும் முகநூலில் பகிர்ந்துள்ளாரென்றும் விழிப்புணர்வு கொண்டுவரவேண்டி என்றும் சொல்லப்படுகிறது. நான் முகநூலில் இருந்தாலும் ஆக்டிவாக இல்லை. நடைமுறைச் சிக்கல்கள் வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் சொல்லபப்டுகிறது. அட்லீஸ்ட் அங்கிருந்தவர்கள் உடனே போலீஸிற்காவது சொல்லி வரவழைத்திருக்கலாம்.

      முதல் 48 மணிநேர சிகிச்சை முழுவதும் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வருகிறது.

      வெளிநாட்டு விவகாரங்களே வேறதானே. நம்மூரிலும் அதை நடைமுறைப்படுத்து கேரள அரசு முயற்சி செய்வதாகத் தெரிகிறது. பார்ப்போம்...

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  12. மனிதம்நேய பதிவு.
    மனிதம் போற்றுவோம்.
    ரஞ்சனி, விஷ்ணுபிரியாவை போற்றி வணங்குவோம்.
    நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு தங்களின் கருத்திற்கு.

      நீக்கு
  13. மனம் கலங்கி விட்டது. இருந்தாலும் இன்னும் மனிதமும் மனித நேயமும் வாழ்கிறது என்பது மனசுக்கு ஆறுதல்.
    ரஞ்சனியும் கார் கொடுத்த அன்பருமும் இனிதே வாழ வாழ்த்துகிறேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! மிக்க நன்றி சகோதரி மனோசாமிநாதன் தங்களின் கருத்திற்கு.

      நீக்கு
  14. சில நாட்களுக்கு முன் காவலர்கள் இருவர் காயமடைந்தவரை வண்டியில் ஏற்றிப்போனால் ரத்தம்தோய்ந்து கார் கெட்டு விடும் என்பதால் உதவ வில்லையாம் செய்தியாக வந்தது பெரும்பாலோனோர் நெத மாதிரியே நினைக்கிறார்கள் இவர் சொல்லி விட்டார் பலரும் சொல்வதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார். உண்மைதான் சார். பலரும் நடைமுறைப் பிரச்சனைகளால் தான் எதற்கு வம்பு என்று கடந்து சென்று விடுகிறார்கள். அதற்குத்தான் இப்போது அப்பிரச்சனைகள் வராமல் இருக்க கேரளத்தில் விழிப்புணர்வைப் பரப்பும் விதமாக இந்த வீடியோ பகிரப்படுகிறது. கேரள முதல்வரும் பிரச்சனைகள் வராது என்று சொல்லி ஊக்க்ப்படுத்தியுள்ளார்.

      மிக்க நன்றி ஜிஎம்பி சார் கருத்திற்கு

      நீக்கு
  15. காணொளியில் ஒரு துவக்கத் தயகத்த்க்குப் பின் பலரும் உதவுவது தெரிகிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பெண் ரஞ்சனி அவர்கள் வந்ததும் தான் முடுக்கிவிடப்பட்டு உதவினார்கள்.

      மிக்க நன்றி ஜி எம் பி ஸார் கருத்திற்கு

      நீக்கு
  16. அந்தச் சகோதரிக்குப் பாராட்டுகள்.
    இப்போது வேடிக்கை பார்ப்பதும்... செல்போனில் வீடியோ எடுப்பது மட்டுமே வழக்கமாகிவிட்டது.
    மனித நேயம் செத்துப் போய் நாளாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  17. திகிலூட்டும் நிலைமையில் கண்ணை மூடிக் கொண்டு கடப்பவர்களே அதிகம்.
    எங்கள் மகனின் தாய், ஆழ்வார்பேட் சிக்னலில் அடிபட்டு இறந்திருப்பது தன் கண்வன் என்று தெரியாமலேயே,

    தன் காரில் கடந்து சென்றுவிட்டார்.
    மகனுக்கு உணவு கொண்டு போகும் அவசரம்.

    இந்தக் காட்சி மனதை அதிரவைக்கிறது,.
    வக்கீல் ரஞ்சனிக்கும், அவர் மகளுக்கும் மனம் நிறை வாழ்த்துகள்/.

    கேரள அரசின் நடவடிக்கைகள் இதமூட்டுவதாக இருக்கின்ற.
    கீதாவுக்கும்,துளசி தரனுக்கும் மிக நன்றி.
    மனிதம் வாழட்டும்.

    பதிலளிநீக்கு
  18. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
  19. ஆங்காங்கே மனிதம் உள்ளது என்பதை நிரூபித்தவர்களுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  20. இன்னும் மனிதம் வாழ்கிறது...

    அதற்கு நாமும் கை கொடுப்போம்....கீதாக்கா...

    பதிலளிநீக்கு
  21. ரஞ்சனியின் செயல் பாராட்டுக்குரியது. நிறைய பேர் உதவ தயங்கியதற்கு பின் விளைவுகளை நினைத்து அச்சம் மட்டும் அல்ல. எமெர்ஜெசியில் எப்படி செயல்பட வேண்டும் என்று பலருக்கு தெரியாது. "எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல" என்பார்களே. எல்லாமே பயிற்சிதான் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. பாரதி குறிப்பிடும் வேடிக்கை மனிதர்கள் பலராக உள்ளனர். என் செய்ய?
    முன் வந்து உதவிய இந்தப் பெண்ணை வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  23. நல்ல மனம் வாழ்க..... வெகு சிலரே இப்படி உதவி செய்கிறார்கள். மற்றவர்களுக்குத் தயக்கம், அக்கறையின்மை என பல. நல்ல மனம் கொண்ட ரஞ்சனி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. உள்ளத்தில் நல்ல உள்ளம். உதவும் கரங்கள். ரஞ்சனி போன்ற பெண்கள் இருக்கிறார்கள் என்பதே நல்ல செய்தி. அவரை வாழ்த்துவோம். அன்புடன்

    பதிலளிநீக்கு