வியாழன், 23 மார்ச், 2017

பெண் அன்றி நான் அல்ல பொம்மை...3

சென்ற இரு பகுதிகளின் சுட்டி

முரளியும், மாதவியும், "யாக்கரை" விஸ்வேஸ்வரர் கோயிலில், பெற்றோர்கள் அறியாமல், மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டு விட்டு வீட்டுக்கு வந்ததைப் பார்த்ததும் டீச்சரின்  அம்மா  மிகவும் மனம் நொந்து அழுதார்.

செவ்வாய், 21 மார்ச், 2017

பெண் அன்றி நான் அல்ல பொம்மை...2


ஜானகி டீச்சரின் பெற்றோர், எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர்கள்டீச்சரின் அம்மா, பாலக்காடு அருகே உள்ள முண்டூர் என்னும் கிராமத்திலுள்ள L.P. பள்ளியில் (லோயர் ப்ரைமரி பள்ளி) ஆசிரியையாகப் பொறுப்பேற்றதால், அங்கு வருடங்களுக்கு முன்பு குடியேறியவர்கள்.

சனி, 18 மார்ச், 2017

பெண் அன்றி நான் அல்ல பொம்மை...

  சுவர்க்கடிகாரத்தின் குயிலின் இனிய நாதம் மணி 4 என்றது. அயர்ந்து உறங்கியிருக்கிறேன் போலும். ஏனோ இன்று இப்படி ஒரு அசதி. அதற்குள் 4 ஆகிவிட்டதா என்ற உணர்வு. மதியம் வரைதான் இன்று பள்ளி என்பதால், எனது அறைக்கு வந்ததும் உறங்கியே போனேன். அருகில் இருந்த கோயில் திருவிழா என்பதால்  தேய்ந்து போன ரெக்கார்டில் தாசேட்டன் இழுத்து இழுத்துப் பாடிக் கொண்டிருந்தார்தாசேட்டன் இதைக் கேட்டால் என்ன நினைப்பார் என்று நினைத்ததும் சிரிப்பு வந்தது