வெள்ளி, 22 டிசம்பர், 2017

நல்ல பாம்பு ஏன் மெலிந்தது?--------.கே ஏ அப்பாஸின் பதில்-------ஒரு வரியில் ராஜினாமா

மாமனாரின் மறைவிற்குப் பிறகு அவர் வைத்திருந்த சமயம் சார்ந்த புத்தகங்கள் பலவற்றை அதில் ஆர்வமுள்ளவர் ஒருவர் (குடும்ப உறுப்பினர்எடுத்துச் சென்றார்சில புத்தகங்கள் யாரும் தொடாமல் இருந்தன. குறிப்பாக ஜனரஞ்சகப் புத்தகங்கள். அக்கலெக்ஷனில் பல கல்கி, கலைமகள், துக்ளக் இவற்றில் வந்த தொடர்கதைகள், சிறுகதைகள் இவற்றை பைண்ட் செய்து வைத்திருந்தார். தவிர ஓரிரு புத்தகங்கள் குடும்பத்தில் யாருடைய கல்யாணத்திற்கோ பரிசாகவும் வந்திருந்தன. புத்தகங்களில் சிலவற்றை நான் எடுத்து வந்தேன். மற்றதையும் எடுத்து வர வேண்டும்.

பரிசாக வந்தவற்றுள் மனதைக் கவர்ந்ததுதமிழக நாட்டுப் பாடல்கள்என்ற தலைப்பில் கவிஞர் மா. வரதராஜன் அவர்களால் தொகுக்கப்பட்டப் புத்தகம். மிக மிக அருமையான தொகுப்பு!

ஓடுகிற தண்ணியிலே
உரச்சுவிட்டேன் சந்தனத்தை!
சேந்துச்சோ சேரலையோ
செவத்தமச்சான் நெத்தியிலே!
கலங்காத தண்ணியிலே
கலக்கிவிட்டேன் சந்தனத்தை!
ஒட்டிச்சோ ஒட்டலையோ
உம்முடைய நெத்தியிலே!

இந்தப் பாடலில் முதல் வரியைப் பார்த்ததுமே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் வரும் பாடல் என்று. இணையத்தில் இப்பாடலை எழுதியவர் யார் என்று தேடினால் கவிஞர் வைரமுத்து என்று தான் சில வலைத்தளங்களில் வருகிறது. கவிஞர் வைரமுத்து தான் எழுதியதாகச் சொல்லியிருக்கிறாரா என்று தெரியவில்லை.

ஏனென்றால் அப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய திரு பெ.தூரன் அவர்கள், "இதோ ஒரு நெஞ்சைக் கவரும் அழகான பாடல்" என்று இப்பாடலைச் சொல்லித்தான் தனது முன்னுரையைத் தொடங்கியுள்ளார். “இந்தப் பாடலை யார் பாடினார்கள்? தெரியாது. தமிழர் வாழும் எந்த ஊரிலே இது முதலில் உருவாயிற்ரு? தெரியாது? இது தமிழ் மண்ணிலே, தமிழருடைய உள்ளத் துடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அவ்வளவுதான் சொல்லலாம்.

எந்த ஊரிலும் இது இதே வடிவத்திலும், சற்று மாறிய வடிவத்திலும், கூட்டியும் குறைத்தும் பாடப்படலாம்…………இப்படித்தான் தமிழக நாட்டுப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் தோன்றியிருக்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார். என்றாலும் அதில் முழுப்பாடலும் இல்லை என்றே தோன்றுகிறது.

இப்புத்தகம் வெளிவந்த வருடம் 1978. அச்சமில்லை அச்சமில்லை திரைப்படம் வெளிவந்த வருடம் 1984. ஒரு வேளை திரைப்படப் பாடலில், இந்த நாட்டுப்புறப் பாடலின் முதல் நான்கு வரிகளுடன் மற்ற வரிகள் அவர் எழுதியவையோ?

Image result for art pictures like a girl thinking

_________________________________________________________________________________


பிரபல எழுத்தாளர் கே. . அப்பாஸ் கல்லூரியில் படிக்கும் போதே தேச விடுகலைப் போரில் பங்கு கொண்டவர். இவரும் மற்றும் மாணவர்களும் சேர்ந்து பொதுத் தொண்டு ஒன்றுக்காக நிதி திரட்டினர். பல பிரமுகர்களிடம் நிதி வசூலித்துவிட்டுக் கடைசியாக ஐக்கிய மாகாண கவர்னராகிய மால்கம் ஹெய்லியிடம் சென்றார்கள். தாங்கள் நிதி வசூலிக்க வந்த விவரத்தை எடுத்துச் சொன்னார்கள்.

கவர்னர் சற்று நேரம் சோசித்துவிட்டு, “உங்களுக்கு ஆங்கிலேயர்களைக் கண்டால் பிடிக்கவில்லை. அடுத்து விரட்டப் பார்க்கிறீர்களே? நிதி வசூலிக்க மட்டும் வரலாமா?” என்றார். உடனே கே.. அப்பாஸ், கம்பீரமாக, “நாங்கள் உங்களிடம் இனாம் வாங்க  வரவில்லை. நீங்கள் எங்களிடமிருந்து பெறும் பணத்தில் ஒரு பகுதியைத் திரும்பப் பெறத்தான் வந்தோம்என்றார். கவர்னர் மறு வார்த்தை பேசாமல் நூறு ரூபாய்க்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார்.

ஆதாரம்: “வாழ்க்கை நிகழ்ச்சிகள்” தகவல்: பா ஜெயராஜா, கல்கி
__________________________________________________________________________________________________

Image result for art pictures cobra snake
அதான் விரியாமக் கொள்ளாம சின்ன பட்ஜெட்ல படம் எடுக்கறியோ?!?!

“அந்த நல்ல பாம்பு ஏன் மெலிஞ்சு போச்சு?”

“ஒரு படம் எடுத்தது, பாவம்”

------சாமி, கல்கி

மனைவி: ராணுவத்துல வேலை செய்யற அதிகாரியைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒரேயடியா அடம் புடிக்கிறாளே  நம்ம பொண்ணு.

கணவன்: ஏன்?

மனைவி: அவ போடற கட்டளைகளுக்கு உடனடியா அவந்தான் பணிவானானாம்!

-------அமுதன் மைந்தன், தினமணிக்கதிர்

ஆசிரியர்: நீங்கள் தரும் கதையுடன் அதென்ன கூடையில் கடிதங்கள்?

எழுத்தாளர்: கதை பிரசுரமானால் கதையைப் பாராட்டி வர வேண்டியக் கடிதங்கள்!

-------தினமணிக்கதிர்
__________________________________________________________________________________________________
Image result for art pictures ring a ring O roses

விளையாட்டுக்குப் பின்னால் ஒரு வேதனைக் கதை!

Ring-a-ring o’ roses,
A pocket full of posies,
A-tishoo! A-tishoo!
We all fall down
Ring-a-ring o’ roses,
A pocket full of posies,
Ash-a Ash-a All stand Still.

இந்த வரிகளுக்குப் பின்னால் ஒரு சோக சரித்திரமே உள்ளது. வேடிக்கைக்காக எழுதப்பட்ட அரிகள் இல்லை இவை. கொள்ளை நோயான ப்ளேக் லண்டன் மாநகரில் ஆயிரக்கணக்கானவரை கொள்ளை கொண்டு போன போது மனத் தெம்புக்காக எழுந்த பாடல் இது. தி க்ரேட் ப்ளேக் ஆஃப் லண்டன் (Great Plague of London) என்ற பெயர் பெற்ற அந்தக் கொள்ளை நோயால் லண்டன் தெருக்களிலே பிணங்கள் குவிந்தன. Ring’O Roses – ரோஜாக்கள் என்று குறிக்கப்பட்டது ரோஜா போல் சிவந்த ப்ளேக் கட்டிகளை. Pocket full of Poises என்பது ப்ளேக் தொத்தாதிருக்க மக்கள் தங்கள் பாக்கெட்டுகளில் எடுத்துச் சென்ற வாசனைப் பொருள்கள். A-tishoo! A-tishoo! என்ற வரிகள் “தும்மல் தொடங்கியவுடன் தொலைந்தோம்” என்ற ஆற்றாமையைக் குறிக்க எழுந்தது. கொள்ளை நோயின் கொடுமையிலிருந்து தப்ப வழியறியாது தவித்த நேரத்தில் பயத்தைப் போக்கிக் கொள்ள எழுந்த வரிகள் இவை.

----------திருமாவளவன், கல்கி
__________________________________________________________________________________________________
Image result for watergate scandal

வாட்டர்கேட் விவகாரம் அனுமார் வால்போல் நீண்டது. ஆனால் அதன் விளைவான ராஜினாமா மிகச் சுருக்கமானது. பெரிய அரசியல் தலைவர்கள், பெரும் பதவி வகிப்பவர்களில் மிகச் சுருக்கமான ராஜினாமா கடிதம் எழுதியவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்ஸனாகத்தான் இருக்கும் என்கிறார்கள். “ஐ ஹியர்பை ரிசைன் தி ஆஃபீஸ் ஆஃப் தி பிரஸிடென்ட் ஆஃப் யுனைட்டெட் ஸ்டேட்ஸ்” என்று எழுதித் தம் காரியதரிசி கிஸிங்கருக்கு விலாசமிட்டிருந்தார் நிக்ஸன்.

------ந்யூஸ்வீக், முத்து
__________________________________________________________________________________________________



பாரு கீதா நிக்ஸன் எவ்வளவு சுருக்கமாக ஒரு வரியில் ரிசைன் பண்ணிட்டார்.  ஒரு கதை கூட சுருக்கமாக உனக்கு எழுதத் தெரியலையே!! ஹும்…..சரி சரி மேல உள்ள அந்த ஆயில் இப்போதும் கிடைக்குமா? எங்கு கிடைக்கும்? இங்க கேளு யாராவது சொல்லுவாங்க!!! வேற ஒன்னுமில்லை..... கிடைச்சா உன் மூளைய செர்வீஸ் பண்ணலாமேனுதான்!!!! ஹிஹிஹிஹிஹி......

Image result for oiling the brain


த்ரீ இன் ஒன் ஆயில் படத்தைத் தவிர மற்ற படங்கள் இணையத்திலிருந்து

-----------கீதா






75 கருத்துகள்:

  1. ஹாஹாஹா, ரிங்கா ரிங்கா பத்தி மட்டுமில்லை, ஹம்ப்டி டம்ப்டி, ஈனா மீனாமைனா எல்லாப் பாடல்களுக்கும் ஓர் கதை உண்டு. :) உண்மை தெரிந்ததும் அவற்றைச் சொல்லுவதில்லை. அருமையான வாசனைக் கதம்பம். புத்தம்புதுசா இருக்கிறச்சேயே வந்து எடுத்துக் கொண்டு விட்டேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை! வாங்க கீதாக்கா!! முதல்ல வந்து எடுத்துக் கொண்டதுக்கு மிக்க மகிழ்ச்சி!!! நன்றி!!!

      ஆமாம் அக்கா ஒவ்வொரு ரைமுக்கும் சோகக் கதை உண்டு. தெரிந்ததும் என் பையனுக்கும் நான் சொல்லிக் கொடுக்கலை...ஆனா அதன் பின்னாடி இருக்கற கதைகள் சொன்னேன். ஹாப்பியா, பாஸிட்டிவா இருக்கற ரைம்ஸ், வாழ்க்கையைச் சொல்லுற ரைம்ஸ் நு தான்...

      மிக்க நன்றி அக்கா

      கீதா

      நீக்கு
  2. ஒவ்வொரு செய்தியினையும் ரசித்தேன் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. அந்தப்பாடலை பாடியது மலேசியா வாசுதேவன் & பி. சுசிலா.

    மீண்டும் வருவேன்....

    பதிலளிநீக்கு
  4. பாடல் வரிகளை சத்தமில்லாமல் திருடுவது இன்று நேற்றா நடக்கிறது ?

    எனது தளத்தில் உள்ளவைகளை அப்படியே காப்பி எடுத்து புதிதாக வேறு புகைப்படங்களுடன் ஜெயக்குமார் என்பவன் வெகுகாலமாக வெளியிட்டு வந்தான். நான் அறிந்து அவனை பப்ளிக்காக புகைப்படத்துடன் வெளியிட்டு கிழிக்கவும் நிறுத்தி விட்டான்.

    வைரமுத்துவின் வரிகளில் மயங்கியவன், இன்னும் மயங்கி கொண்டு இருப்பவன் நான். அதேநேரம் வைரமுத்துவை யோக்கியன் என்று சொல்லி விடமுடியாது

    தன்னை தமிழன் என்று பொதுவில் சொல்லிக்கொள்ளும் பிரபலமானவர்கள் பலரும் தமிழுக்கு துரோகம் செய்பவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

    உதாரணம் தமிழைக், தமிழ்க் கலாச்சாரத்தை கொலை செய்து வரும் சன் டி.வி, விஜய் டி.வி.

    விஜய் டி.வி. செய்யட்டும் அவன் தெலுங்குதானே...

    திருவிளையாடல் படத்தில் வரும் "பாட்டும் நானே பாவமும் நானே" பாடல் எழுதியது கவிஞர் கா.மு.ஷெரீஃப் அவர்கள் ஆனால் டைட்டிலில் கண்ணதாசன் பெயர் போடப்பட்டது.

    எழுதியவரின் மனம் எவ்வளவு வேதனைப்படும் கண்ணதாசன் இவ்வளவு பெரிய கவிஞராக இருந்தும் இந்த தவறை செய்யலாமா ?

    இதை அறிந்த பிறகு எனக்கு கண்ணதாசன் மீது மதிப்பு குறைந்து, ஷெரீஃப் அவர்கள் மீது மதிப்பு உயர்ந்தது.

    இந்த அவலநிலை இன்றுவரை பல இடங்களில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

    பிறருடைய வரிகளை உபயோகப்படுத்தும் பொழுது இது அவருடையது என்று சொன்னாரானால் அவர்தான் மனதால் உயர்ந்த மாமனிதர்.

    இதே வலையுலகில் எனது பஞ்ச் டயலாக்கை தனது போலவே சொல்லிக்கொண்ட பெரிய பதிவர் ஒருவரையும் நான் அறிவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டும் நானே பாடலைப் பற்றியது புதிய செய்தி.

      ஆனால் கில்லர்ஜி சில பாடல்களை இவர் எழுதினார் என்று எழுதுவது மக்கள் தானே அல்லாமல் அவர்கள் சொல்லியிருக்கிறார்களா என்று தெரியாது. மட்டுமல்ல படம் வெளி வந்த போது பேசப்பட்டிருக்கலாம் நமக்குத் தெரியாதே. அப்புறம் காலப்போக்கில் அது மறைந்திருக்கலாம்...

      உங்கள் பதிவுகள் அது தெரியும் அப்போது நீங்கள் போட்டிருந்தீர்கள் அப்படித்தான் உங்கள் வலைப்பக்கத்திற்கு வரத் தொடங்கினோம்...அதுதான் ஆரம்பம் என்று நினைவு...

      கீதா

      நீக்கு
  5. ஆஹா.... அந்தப் புத்தகங்கள் இருக்குமிடம் சொல்லுங்க.. அள்ளிக்கிட்டு வந்துடுவோம். நல்ல பொக்கிஷங்களா இருக்கும்போலிருக்கே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் அள்ளிட்டு வந்துருவொம்...பாருங்க ஏற்கனவே கொஞ்சமெடுத்துவந்துட்டேன் முன்னாடியே. ஏனென்றால் அப்பா/மாமனார் என்னிடம் அடிக்கடி சொல்லுவார் எனக்கு வாசிக்கப்பிடிக்கும் என்பதால் புத்தகத்தைக் காட்டி இந்தக் க்தை நல்லாருக்கும் அது நல்லாருக்கும் என்று சொல்லுவார்...துக்ளக் கேள்வி பதில் ரசித்ததைக் காட்டி வாசிக்கச் சொல்வார். அப்போது கேரளம் கோயம்புத்தூர் என்று இருந்ததால் நானும் இங்கு வரும் போது தமிழ்ப்பேப்பர், ஹிந்து என்று வாசிப்பதை அவருக்குச் சொல்வேன். சென்னையில் அதுவும் தனியாக வந்து மாமனார் மாமியாருடன் இருந்தால் மட்டுமே வாசித்தல் ஷேரிங்க் என்று எல்லாம் இருக்கும்...அப்படி எடுத்து வந்ததில்தான் கல்கி மறைந்த பின் முடிக்காமல் விட்டிருந்த அரும்பு அம்புகள் எனும் நாவலை அவர் மகன் ராஜேந்திரன் எழுதி முடித்தார் இல்லையா தொடராக வந்ததை மாமனார் எடுத்து வைத்திருந்தார். நான் வாசித்து முடித்துவிட்டேன்.

      இன்றும் அங்குதான் போயிருந்தேன் ஸ்ரீராம். நெருங்கிய உறவினர் எல்லாம் வந்திருக்காங்க. புக்ஸ் பார்த்தேன்...ரொம்பத் தீவிரமாகப் பார்க்க முடியலை..உறவினர் வ்னதிருப்பதால்.நாளை குடும்ப ட்ரிப் கோயிலுக்கு....இரண்டு நாட்கள் வலைத்தளம் லீவு சொல்லிடறேன்.. இனி திங்க தான் வருவேன் ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
    2. இந்த மாதிரி பழைய புத்தகங்கள் எல்லாம் பொக்கிஷங்கள் விட்டுவிடாதீர்கள் எல்லாவற்ரையும் அள்ளிவிடுங்கள்

      நீக்கு
    3. கண்டிப்பா மதுரை சகோ...விட மாட்டேன்...எடுத்துக் கொண்டு வந்துவிடுவேன்...

      கீதா

      நீக்கு
    4. அள்ளிட்டு வந்திடுங்கோ.. விட்டிடாதீங்கோ என உசுப்பேத்தீனம் கீதா:) கர்ர்ர்ர்:) நீங்க இதை நம்பி ஓடிப்போய் அள்ளிடாதீங்க... எதுக்கும் பொறுமையா எடுத்து வாங்கோ:))

      நீக்கு
  6. கவிஞர் மா. வ எங்கள் குடும்ப நண்பர். அப்பாவின் சிநேகிதர். அந்தப் பாடலில் வரிகளை மட்டும் முதல் வரிகளாக சேர்த்திருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் இதை நீங்கள் சொல்லியிருந்த நினைவு வருது. இப்ப. எழுதும் போதும் நினைவு வந்தது. ஆனால் கொஞ்சம் குழப்பம் இருந்ததால் சொல்லவில்லை.

      அந்தப் பாடலில் வரிகளை மட்டும் முதல் வரிகளாக சேர்த்திருப்பார்கள்.// ஆமாம் ஸ்ரீராம் எனக்கும் அப்படித்தான் தோன்றியது...

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  7. கே ஏ அப்பாஸ் நல்லா ஒரு போடு போட்டார்! அவர் கதைதானே பாபி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்...நானும் ரசித்தேன் அதை....அதனால்தான் இங்குப் பகிர்ந்தேன்...இதெல்லாம் நான் எடுத்துக் கொண்டு வந்த பைண்டுகளிலிருந்துதான்...

      ஆம் அவர் கதை தான் பாபி....நான் அவர் படம் தேடும் போது அறிந்தேன்....
      கீதா

      நீக்கு
    2. கே.ஏ. அப்பாஸின் "சங்கம்" மற்றும் "பாபி" இரண்டுமே புத்தகமாக வந்தது தான். நான் ஹிந்தி, ஆங்கிலம் இரண்டிலும் படிச்சிருக்கேன். தமிழ் மொழிபெயர்ப்பு இருப்பதாகவும் சொல்கின்றனர். சங்கம் நாவல் நாவலின் முடிவு வேறே. சினிமாவில் வேறே.

      நீக்கு
  8. மூன்று ஜோக்சில் மூன்றாவது முத்து!! வேதனைக்கதை மனதைப் பிசைகிறது. கதம்பம் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சில ரைம்ஸின் பின்னால் இப்படிக் கதைகள் உண்டு....மிக்க நன்றி ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  9. @ கீதா:

    நல்ல பாம்பு ஏன் மெலிந்தது என்று காலையில் கவலையை எழுப்பிவிட்டீர்கள்..மேலே வந்து படித்தால் பாம்போடு பல சங்கதிகள்…

    நிக்ஸன் ராஜினாமா பற்றிய ’நியூஸ்வீக்’ செய்தியை, துணுக்காக முத்து மொழிபெயர்த்து-ஏதோ பெயர்த்து-போட்டிருக்கிறார். நமது பத்திரிக்கைகள்தான் ஞானசூனியம் ஆச்சே..அப்படியே போட்டுவிட்டார்கள். தன் ராஜினாமா கடிதத்தை ’தம் காரியதரிசி கிஸிங்கருக்கு
    விலாசமிட்டிருந்தார் நிக்ஸன்’ என்றிருக்கிறது முத்துவின் பெயர்ப்பு!

    இங்கே ஒரு கரெக்ஷன் கொடுக்கிறேன் (இந்தமாதிரி விஷயங்களில் ’டீல்’ பண்ணியே பணியாற்றியிருப்பதால்.) டாக்டர் ஹென்ரி கிஸ்ஸிங்கர், அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸனின் ’காரியதரிசி’ அல்ல. அவர் நிக்ஸனின் அமைச்சரவையில் அமெரிக்க ’வெளியுறவு மந்திரி’யாக இருந்தவர். அதில் புகழும் பெற்றவர். அமெரிக்க ஜனநாயக அரசியல்முறையில் வெளியுறவு மந்திரியை அதாவது Foreign Minister or External Affairs Minister-ஐ, ‘Secretary of State’ என்று அழைப்பது வழக்கம். (American Foreign Minister or US External Affairs Minister என்று சொல்வது அவர்களது அரசியலமைப்புப்படி தவறு). எனவே, The US ‘Secretary of State’ –என்று மீடியாவில், ராஜீய வட்டாரத்தில் சொல்லப்பட்டால், அது அமெரிக்க வெளியுறவு மந்திரியைக் குறிக்கிறது.

    நம்ப துணுக்கெழுத்தாளர் முத்துக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாவம், அவரு அதில் உள்ள ’செக்ரட்டரி’யைப் பாத்துட்டாரு..நம்ப மந்திரி/அதிகாரிகளுக்குள்ள செக்ரட்டரிபோலன்னு நெனச்சு அடிச்சுவிட்டுட்டாரு துணுக்கை. சரி, விடுங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் சகோ இது உங்களின் முதல் வரிக் கவலைக்கு!!!!!

      நிக்ஸன் ராஜினாமா பற்றி நெட்டில் தேடினேன்...எனக்கு இந்தக் கடிதம் பற்றி கிடைக்கவில்லை அதாவது ஒரு வரி பற்றி அதை யாரிடம் கொடுத்தார் என்பது கிடைக்கவில்லை. ஒரு வேளை நான் அவசரத்தில் சரியாகத் தேடவில்லை என்று தோன்றுகிறது.

      நான் இத்தகவலை எழுதும் போது உங்களை நினைத்துக் கொண்டேன் நீங்கள் மேலதிகத் தகவல் தருவீர்கள் என்று...அதே போல சரியான தகவல் கொடுத்தீர்கள். ஆமாம்...இப்படி மொழி பெயர்ப்பில் தவறுகள் ஏற்படுவதுண்டு மொழிப்புலமை மற்றும் கொஞ்சம் வரலாறும், நாட்டின் ஆட்சி அமைப்பு, அரசியலமைப்பு பற்றியும் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும்....மிக்க நன்றி ஏகாந்தன் சகோ தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு...

      பத்திரிகைகளும் அதாவது சப் எடிட்டர் தானே இதை எல்லாம் பார்க்க வேண்டும்? சரி பார்க்கமாட்டார்களோ??!!! நான் ஊடகங்களின் நிலை தெரிகிறது இல்லையா? அதில் வரும் செய்திகள் பல பாஸிங்க் ஆன் த ஸீக்ரெட் விளையாட்டைப் போலத்தான் என்பதும்....

      மிக்க நன்றி சகோ கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  10. நிறைந்த செய்திகள்..

    எனது பள்ளி நாட்களில் -

    பாடறியேன் படிப்பறியேன்..
    பள்ளிக்கூடம் தானறியேன்..
    ஏடறியேன் எழுத்தறியேன்..
    எழுதும்வகை நானறியேன்..

    என்றபடிக்கு -
    வயற்காட்டில் நாற்று நடும் பெண்கள் பாடும் பாடலைக் கேட்டிருக்கின்றேன்..

    எனது பள்ளி நாட்களில் என்றால் 45 வருடங்களுக்கு முன்பு...

    இந்த மாதிரியான சொல்லடுக்குகள் எல்லாம் மிகப் பழைமையானவை..
    அவற்றுக்கு வயது வரம்புகள் எல்லாம் இல்லை...

    இந்த வரிகளை முதலில் பாடிய பெண் பாவை யார்!..
    யாருக்கும் தெரியாது...

    இந்த வரிகள் திரைப்படத்தில் இடம் பெற்றபோது வைரமுத்து அவர்களுடைய பெயரில்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை சகோ....அப்புத்தகத்தில் நிறைய அழகான பாடல்கள் இருக்கின்றன...இப்பாடலுமா?!! மிக்க நன்றி சகோ...

      கீதா

      நீக்கு
  11. திரைப்படப் பாடலின் சிக்கலைப்பற்றி பிறகு எழுதுகிறேன். மற்ற அனைத்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுங்க நெல்லை...அறிய ஆவல்...ரசித்தமைக்கு மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  12. பழைய புத்தகங்களைநான் பாதுகாக்காமல் விட்டது தவறு என்று தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை சார்...இருந்திருந்தா இப்படிப் பழையதை வாசித்து ரசிக்க முடியும்...

      உங்கள் கால நினைவுகளுக்குப் போய் வர முடியும்...அதானே சார்...ஸ்ரீராமும் அவர் கலெக்ஷனைப் பகிர்கிறாரே...அது போலத்தான் இதுவும்...

      கீதா

      நீக்கு
  13. கீதா, துளசி அண்ணன் தப்பா நினைச்சிடாதீங்க.. வோட் போட்டிட்டுப் போகிறேன், லேட்டாத்தான் வந்து படிச்சூஊஊஊஊஊஊஊஉ... :)..

    http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1480680

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெவர் அதிரா....அதனால என்ன....வாங்க மெதுவா வந்து படியுங்க....நோ ப்ராப்ளம் அதிரா...

      தமிழ்மணம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி அதிரா...எங்களுக்குத் தெரியவே தெரிவதில்லை...இருந்தாலும் மிஞ்சி மிஞ்சிப் போனா 6 விழுந்தா பெரிய விஷயம்...ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. ஆறு எப்பூடி விழும் கீதா?:) ஓ மலையிலிருந்து விழுவதைச் சொல்றீங்களோ?:)) ஹா ஹா ஹா:))

      நீக்கு
  14. சுவாரஸ்யமான செய்திகள் நிறைந்த கதம்பமாலை. கருத்துரை தந்த அன்பர்களும் நன்றாகவே ரசிக்கும்படி நிறையவே எழுதி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  15. தலைப்பை பார்த்து என்ன விஷயம் இது என்று ஓடி வந்தால் கதம்பம் இங்கே களை கட்டியுள்ளது
    ஹா ஹா த்ரீ இன் ஒன் ஆயில் பற்றித்தான் கொக்கி வச்சிட்டீங்க
    நானும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன் யாரவது சொல்லட்டும் அதை பற்றி
    Ring’O Roses பாடலில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா....ஸ்ரீராம் ஸ்டைல் தலைப்பு!!! அவர் வழி!!! ஹிஹிஹிஹி..

      ஆமாம் பூவிழி இன்னும் சில ரைம்ஸ் சோகக் கதைகள் உண்டு...பின்னர் பகிர்கிறேன்...மிக்க நன்றி பூவிழி

      கீதா

      நீக்கு
  16. உங்களுடைய பதிவில் தமிழ்மணம் காண்பிக்கவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க பதிவுல எங்களுக்கே தமிழ்மணம் தெரியாது!! ஹா ஹா ஹா ஹா...ஒரு சிலருக்கு மட்டும் தெரியும் போல....அதிரா கொடுத்துருக்காங்க பாருங்க லிங்க். ...

      அப்படியே இருந்தாலும் எங்க தமிழ்மணப் பெட்டி கல்லா கட்டாது பூவிழி....மிஞ்சி மிஞ்சிப் போனா 6??!! போனா போகுது...நாங்க கவலைப் படவில்லை...ஆனால் திரட்டியில் தானாவே இணையுது போல அதான் அதிராவுக்கு எப்படியோ பெட்டி தெரிஞ்சுருக்கு லிங்க் கொடுத்துருக்காங்க...

      கீதா

      நீக்கு
    2. 6வது நான் போட்டுட்டேன் ஹீஹீ

      நீக்கு
    3. இந்த் பதிவில் நீங்கள் படங்கள் சேர்க்கவில்லை என்றால் இதுதான் நீங்கள் இட்ட சிறிய பதிவாக இருக்கும் என நினைக்கிறேன்.. எனக்கு இந்த பதிவு மிகவும் பிடித்து இருந்ததது

      நீக்கு
    4. மதுரை 6? ஹ அஹா ஹா அஹ ஹா....பரவால்ல சகோ அதெல்லாம் கண்டுக்கறதே இல்லை..அவங்க கேட்டதுக்குப் பதில் அவ்வளவே.....எனிவே நன்றி...

      கீதா

      நீக்கு
  17. ஹலோ மதுரை உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சில பதிவுகள் குறிப்பாகக் கதைகள் உணர்வுகள் அடங்கியவை சிறிதாக்க நினைத்தால் அதன் ஜீவனே போய்விடும் மதுரை...அதனால்தான்...

    சரி சரி பாத்துக்கறேன் இனி...சின்னதா போட...

    மிக்க நன்றி மதுரை சகோ

    கீதா

    பதிலளிநீக்கு
  18. சுவாரஸ்யமான செய்திகள் நிறைந்த கதம்பமாலை. கருத்துரை தந்த அன்பர்களும் நன்றாகவே ரசிக்கும்படி நிறையவே எழுதி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தமிழ் இளங்கோ சகோ! தங்களின் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  19. ஆஹா பொக்கிஷங்கள்... அள்ளிடுங்க கீதா ஜி!

    த.ம. ஏழாம் வாக்கு - ஆறு கிடைத்தால் பெரிது என நினைத்ததை ஏழாம் வாக்கிட்டு பொய்யாக்கி விட்டேன்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பா வெங்கட்ஜி அள்ளிடுவோம்...!!!

      ஹையோ ஜி தம வாக்கு எல்லாம் சொல்ல வேண்டாம்...ஐ ஆம் நாட் அட் ஆல் பாதார்ட்!!! சும்மா தமாஷுக்காகச்சொன்னது...நெவர் கேர் தம...

      மிக்க நன்றி வெங்கட்ஜி !!

      நீக்கு
    2. எனி வே 7 ஆக்கினதுக்கு நன்றி ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  20. ஓடுகிற தண்ணியில மாதிரி நிறைய கிராமிய பாடல்களை பின்னாளில் நமது திரை இசை காவலர்கள் எடுத்துக்கிட்டிருப்பாங்க ..
    மாங்குயிலே பாட்டு கூட எதோ கிராமிய பாடல் னு கேள்விப்பட்டேன் .
    சில பாடல்களின் இசை ஒரே மாதிரி இருக்கும்னு சொல்லி சமாளிப்பாங்க .
    நிறைய ரைம்ஸ் க்கு இப்படி பின் கதை இருக்கு கீதா ..லண்டன் ப்ரிட்ஜ் ,கூசி கூஸி கேண்டர் ,மல்பரி புஷ் ,பாபா பிளாக் ஷீப் எல்லாம் இப்படிப்பட்டவைதான்.

    Most of these rhymes have a dark origin

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சல் ஆனா நெல்லையும் ஸ்ரீராமும் சொல்லும் கருத்து சரினு படுது...பாருங்க...

      ரைம்ஸ் எஸ்...ஆமாம் நிறைய இருக்கு...

      மிக்க நன்றி ஏஞ்சல்..

      நீக்கு
  21. பாம்புக்கே இந்த நிலைமைன்னா :) நம்ம ப்ரொட்யூசர்ங்க பாவம்தான் :)
    அந்த பழைய புக்ஸ் எல்லாம் ஆசையா இருக்கு .எல்லாத்தையும் சேவ் பண்ணிக்கோங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாம்பைச் சொல்லுவது போல் ப்ரொட்யூசரைத்தான் சொல்லியிருக்காங்க...

      கண்டிப்பா ஏஞ்சல் பழைய புக்ஸ் எல்லாம் சேவ் பண்ணிக்கறேன்...

      கீதா

      நீக்கு
  22. தலைப்புப் பார்த்து ஏதோ பாம்புக் கதையாக்கும்.. அச்சச்சோ நல்லபாம்புக்கு பாலும் முட்டையும் குடுத்தது காணாதுபோல, அதுதான் மெலிஞ்சுபோச்ச்ச்ச்ச்சாக்கும் என ஓடி வந்தேன்:)) கர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா..பாவம் தான் இல்லையா...

      இன்று மகனுடன் பேசிக் கொண்டிருந்த போது அவன் இன்டெர்ன்ஷிப் செய்யும் கல்லூரியில் ரெசிடென்டாடஇருப்பவர் வீட்டில் இரு பூனைகள், ஒரு நாயார், ஒரு மலைப்பாம்பு வளர்க்கிறாராம். அவர் ஊருக்குப் போயிருக்கும் சமயத்தில் மகன் தான் பார்த்துக் கொள்வாராம். அவற்றிற்குச் சாப்பாடு எல்லாம் வைட்து ஒரு சிலர் வீட்டில் தங்கவே சொல்லுவார்களாம்...அந்த ஊரில் மக்கள் எல்லாம் வளர்ப்பார்கள்தான்...

      கீதா

      நீக்கு
  23. ///ஓடுகிற தண்ணியிலே
    உரச்சுவிட்டேன் சந்தனத்தை!//

    இது ஒரு வெள்ளி வீடியோவிலும் ஸ்ரீராம் போட்டுக் கேட்டோமே ..

    //இணையத்தில் இப்பாடலை எழுதியவர் யார் என்று தேடினால் கவிஞர் வைரமுத்து என்று தான் சில வலைத்தளங்களில் வருகிறது. //

    ஓ இப்படியும் மாறுதல்கள் இருக்கோ?:).. வருங்காலத்தில் கவிஞர் அதிரா என வந்தாலும் வரலாம்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஆமாம் அதிரானு வந்தாலும் வரலாம் தான்!!!

      இப்படி வருவதற்கு நெல்லையும் ஸ்ரீராம் அழகாகச் சொல்லிருக்காங்க பாருங்க அதிரா...அப்படித்தான் நடந்திருக்கும்...

      கீதா

      நீக்கு
  24. ////இந்த வரிகளுக்குப் பின்னால் ஒரு சோக சரித்திரமே உள்ளது. வேடிக்கைக்காக எழுதப்பட்ட அரிகள் இல்லை இவை. கொள்ளை நோயான ப்ளேக் லண்டன் மாநகரில் ஆயிரக்கணக்கானவரை கொள்ளை கொண்டு போன போது மனத் தெம்புக்காக எழுந்த பாடல் இது.///

    உண்மைதான் கீதா நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்... அதன் உண்மையான வரி.. ring a ring a rashes என்றுதான் வருமாமே... பாருங்கள் அதை எடுத்து குழந்தைப் பாடலாக்கி விட்டார்கள்..:(..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! அதே அதே!!! இப்படி இன்னும் உண்டு அதிரா ஐ திங்க் கீதாக்காவும், ஏஞ்சலும் சொல்லிருக்காங்க...

      கீதா

      நீக்கு
  25. /// வேற ஒன்னுமில்லை..... கிடைச்சா உன் மூளைய செர்வீஸ் பண்ணலாமேனுதான்!!//

    ஓ கீதாவின் கிட்னி இப்போ கராஜ் க்குப் போயிருக்கோ?:))..

    ஹா ஹா ஹா சோட் அண்ட் சுவீட்டான ஒரு கதம்பப் பதிவு கீதா.. அருமை...அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்க்யு!! அதிரா ஆமாம்!! அது கராஜ்க்குப் போய் ரொம்ப நாளாகுது!! அதை வைச்சே ஒரு பதிவும் கூடப் போட்டேன் ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  26. வாலி என்ன சொல்றார்னா, சில சமயம், இசையமைப்பாளர் முதல் இரண்டு வரிகளைக் கொடுப்பாராம், இல்லை ஆர்வக்கோளாறு காரணமாக கொஞ்சம் பாடலின் வடிவம் கொடுப்பாராம், அதைத் தட்டிக்கொட்டி வாலி எழுதியிருக்கிறாராம். டைரக்டரே, குறிப்பிட்ட பாடலை (கிராமீயப் பாடலை) சொல்லி, அதில் உள்ள வரிகளைக் கொஞ்சம் மாற்றி எழுதச் சொல்வார்களாம். கண்ணதாசன் சொல்லியிருப்பது, நிறைய இலக்கியங்களும் புத்தகங்களும் படிக்கும்போது, புலவர்கள் எழுதியுள்ள உவமைகளை எடுத்தாள்வது சகஜம், அதேபோல், கதைகளையும் சம்பவங்களையும் எடுத்தாள்வோம். சில இடங்களில் அதேவரிகளும் வந்துவிடும். இதற்கு காப்பி அடிப்பது என்று அர்த்தமில்லை. வெகு வேகமாக இயங்கும் திரையுலகத்தில் இந்த மாதிரிச் செயல்கள் சகஜம். இசையமைப்பாளருக்கும் இந்தமாதிரி சந்தர்ப்பங்கள் அமைந்துவிடும். அதனால்தான் சில பாடல்களை, அந்தப் பாடல் மாதிரி இருக்கிறது, மேற்கத்தைய பாடலைக் காப்பி அடித்தது என்று சொல்ல நேர்கிறது. ஆனால் இது இன்டென்ஷனலாக நடப்பதில்லை.

    பல்சுவைத் தொகுப்பு நன்றாக இருந்தது. ஹென்றி கிஸ்ஸிங்கரைப் பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிகிறது நெல்லை..விரிவான கருத்திற்கு நன்றி. நீங்க இதை எ பியிலும் கூட வெள்ளிக்கிழமை பாடல் ஒன்றிற்கு எழுதிய நினைவு...இப்ப.இதை வாசித்ததும் வந்தது...இல்லைனா நீங்க சொன்னதா கில்லர்ஜிக்குக் கூடப் பதில் கொடுத்திருப்பேன்...

      கீதா

      நீக்கு
  27. ஒவ்வொரு பதிவிற்கும் நீங்கள் பின்புலத்தில் உழைக்கும் உழைப்பு எண்ணெய் பிரமிக்க வைக்கிறது. ரொம்பவே மெனக்கெடுகிறீர்கள் .சுவையான கதம்ப சாதம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ அ அ!!! அப்படி எல்லாம் ஒன்னுமில்லை...நீங்க ரொம்பவே பெரிய வார்த்தை எல்லாம் போடறீங்கப்பா...மிக்க நன்றி கருத்திற்கு...

      கீதா

      நீக்கு
  28. படம் எடுத்தால் இப்படி பொருளாதார நஸ்டம் வரும் போலும் ))))செய்தித்தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நேசன்!! ஹா ஹா ஹா....உண்மையிலேயே படம் எடுத்துக் கையைச் சுட்டுக் கொண்டவர்கள்தான் அதிகம்...மிக்க நன்றி நேசன்...

      கீதா

      நீக்கு
  29. பல்சுவைப் பதிவு மிக அருமை. வாழ்த்துகள்.
    கில்லர்ஜி அவர்களுடைய கருத்தை நான் வழிமொழிகிறேன். சிலர் திரட்டு என்று போடாமல் "திருட்டு" வேலையில் ஈடுபடுகிறார்கள். நான் எழுதிய உப்பு என்ற சிறுகதை என் பெயர் நீக்கப்பட்டு கொஞ்சம் மாற்றத்தோடு வாட்ஸப்பில் எனக்கே வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிந்தராஜு முனைவர் ஐயா, வாட்சப்பில் கேட்கவே வேண்டாம் நிறைய திருட்டுப் பதிவுகள் வருகின்றன....நான் கல்லூரியில் படிக்கும் போது தமிழ்நாட்டுச் சட்டசபையில் ஒரு அடிதடி நடந்தது.மிக மிக மோசமான ஒரு நிகழ்வு அதைப் பற்றி ஒரு கவிதைப் போட்டி ஒன்று மிகப் பெரிய புகழ்வாய்ந்த பத்திரிகை நடத்தியது. நானும் எழுதி அனுப்பினேன். இறுதியில் எனது கவிதை ஒரே ஒரு வார்த்தை மட்டும் மாற்றப்பட்டு வேறு பெயரில் வெளியாகி பரிசு வென்றது. அதிலிருந்து நான் பத்திரைகைக்கு அனுப்பணுமா என்று யோசித்தேன். அனுப்பியதும் இல்லை..

      மிக்க நன்றி ஐயா

      கீதா

      நீக்கு
  30. "ஓடுகிற தண்ணியிலே
    உரச்சுவிட்டேன் சந்தனத்தை!
    சேந்துச்சோ சேரலையோ
    செவத்தமச்சான் நெத்தியிலே!" போன்ற
    அருமையான பாடல்கள் இன்றில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கு. ஆம் இப்படியான நல்ல பாடல்கள் அவ்வப்போது தான் வருகின்றன...இப்படி இல்லை என்றாலும் ஒரு சில நல்ல பாடல்களும் வருகின்றனதான்....

      கீதா

      நீக்கு
  31. படிக்க மிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது. எங்கம்மாவும் அப்பாவின் புத்தகங்களை யார்யாருக்கு வேண்டுமோஎடுத்துப்போங்கள் என்று கொடுத்து விட்டார். நானெல்லாம் வீடு வாசல் என்று ஸெட்டிலாகாத நேரம். கல்கத்தா வாஸம். மலரும் நினைவுகள் எனக்கும். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி காமாட்சி அம்மா...ஆமாம் வீடு வீடாக மாறி கொண்டே இருக்கும் போது இவற்றைப் பாதுகாப்பது என்பது மிகவும் கடினம்....எல்லோருக்குமே இப்படி மலரும் நினைவுகள் இருக்கும் தான் இல்லையா அம்மா...

      கீதா

      நீக்கு
  32. அட! கீதா சகோ கூடத் துணுக்குப் பதிவு எழுதத் தொடங்கி விட்டாரா? ஏன், என்னாயிற்று?

    "ஓடுகிற தண்ணியிலே" பாடலைப் பொறுத்த வரை உங்கள் இறுதி முடிவுதான் சரி என நினைக்கிறேன். பாடலை நீங்கள் முழுமையாக வெளியிட்டிருந்தால் ஒரு முடிவுக்கு வரலாம். இருக்கும் வரை பார்த்ததில் அந்த நாட்டுப்புறப் பாடலின் தொடக்க வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் பின் மிச்ச வரிகளைக் கவிப்பேரரசு எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

    இப்படித் துணுக்குத் தகவல்கள் படித்து ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. பழைய காலப் படிப்பனுபவத்தை அளித்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இபுஞா சகோ துணுக்குப் பதிவு...ஆம் பதிவுகள் எழுத ஒரு சுணக்கம்....ரொம்ப நாட்களாக...அதான் படித்ததில் ரசித்தவற்றைப் பகிர்ந்து கொண்டேன். முன்பும் இப்படிச் செய்ததுண்டு...

      ஓடுகிற தண்ணியிலே முதல் வரிகள் மட்டும் தான் எடுத்துக் கொண்டுள்ளார்....மற்றவை அவரது வரிகளே...

      மிக்க நன்றி சகோ...

      கீதா

      நீக்கு
  33. "அப்படி எடுத்து வந்ததில்தான் கல்கி மறைந்த பின் முடிக்காமல் விட்டிருந்த அரும்பு அம்புகள் எனும் நாவலை அவர் மகன் ராஜேந்திரன் எழுதி முடித்தார் இல்லையா தொடராக வந்ததை மாமனார் எடுத்து வைத்திருந்தார். நான் வாசித்து முடித்துவிட்டேன்."

    - என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்தப் புத்தகத்தை நான் வாசிக்க வேண்டாமா? எப்போது கொடுப்பீர்கள்?

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க செல்லப்பா சார்!! கண்டிப்பாகத் தருகிறேன். எப்போது வேண்டுமானாலும் தருகிறேன் சார். கோவி எழுதிய ஒரு கதையும் இருக்கிறது. அப்புறம் சிறு கதைகள் தொகுப்பு ஒன்றும் இருக்கிறது....அதையும் வாசிக்க உள்ளேன்...வாசித்ததும் அதையும் தருகிறேன் சார்...

      மிக்க நன்றி சார்...

      கீதா

      நீக்கு
  34. சுவாரஸ்யமான தகவல்கள், ரசித்தேன்!
    ஓடுகிற தண்ணியில... பாடலின் முதல் வரியை மட்டும் வைரமுத்து எடுத்தாண்டிருக்கலாம். கண்ணதாசன் கூட இப்பட பா சங்கத் பாடல்களின் வரிகளை பயன்படுத்தி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு