ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்-காத்திருக்கும் பதிவுகள்

அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
வரும் வருடம் 2018ல் மட்டுமின்றி இனி வரும் வருடங்களிலும் எல்லோரும் மகிழ்வுடன் வாழ்ந்திடவும், பல பதிவுகள் எழுதி களிப்புடன் வலம் வரவும் வாழ்த்துகள்!!

இதோ இங்கிருக்கும் காத்திருக்கும் கொக்குகளைப் போல் எனது மூன்று பதிவுகள் இன்னும் எழுதப்படாமல் படங்களுடன் காத்திருக்கின்றன! இந்தப் படங்கள் சென்ற வருடம் 2016ல்  இதே நாளில் 31 ஆம் தேதி சென்ற போது எடுத்தவை. காத்திருக்கும் பதிவு 1
--------------------------------------------------------------------------------------------------------------------------

இதோ இந்தப் படங்கள் இந்த வருடம் 2017ல் ஏப்ரலில் சென்ற போது எடுத்தவை. காத்திருக்கும் பதிவு 2


  


  

--------------------------------------------------------------------------------------------------------------------------

இதோ இந்தப் படங்கள் சென்ற வாரம் சென்ற கடினமான ட்ரெக்கிங்க் அனுபவப் பதிவு. படங்களுடன் காத்திருக்கும் பதிவு 3
முதல் பதிவும், மூன்றாவது பதிவும் வெளிநாட்டிலிருக்கும் நெருங்கிய உறவினர் (புகுந்த வீட்டு உறவினர்) வரும் போது மிக மிக நட்புடன், ஒரே அலைவரிசையில் இருக்கும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்த குழுவுடன் சென்ற இடங்கள். இக்குழுவுடன் பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. என்னை அழைத்துச் செல்ல எப்படியேனும் அனுமதி பெற்றுவிடுவர். 

இரண்டாவது பதிவில் வரும் இடங்களுக்குச் சென்றது கட்டுப்பாடுகள் நிறைந்த நபர்களுடன், அவர்கள் திட்டமிட்ட இடங்களுக்குத் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்களுக்கு உதவியாக என்றாலும், அவர்கள் சென்ற இடங்களுக்கு நானும் மற்றொரு உறவினரும் ரொம்பவும் நல்ல பிள்ளைகளாகச் சென்று அவர்களுக்கு உதவியாக இருந்ததால், என் விருப்பத்தில் இருந்த இடங்களை உறவினரிடம் சும்மா பேச்சுவாக்கில் தெரிவிக்க அவர் உடனே மற்றவர்களிடம் சொல்ல, பரிந்துரையின் பேரில் பல ஆலோசனைகள் நடத்தப்பட்டு இறுதியில் ஏற்கப்பட்டது.  நான் பரிந்துரைத்த இடங்கள் அவர்களுக்குப் பிடித்ததா என்று தெரியவில்லை...அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கவில்லை என்றாலும் பிறிதொரு நேரம் என்று வந்திருப்பேன்...அவர்கள் சரி என்று சொன்னதால்......நான் எனக்குக் கிடைத்த வாய்ப்பை மகிழ்வுடன் ரசித்தேன்..இந்த மூன்றைப் பற்றியும் இந்தப் புது வருடத்திலேனும் எழுத முயற்சி செய்கிறேன். பார்ப்போம்....

மகிழ்வுடன் வரவேற்போம் 2018 ஆம் ஆண்டை!!!

அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

-------கீதா

67 கருத்துகள்:

 1. மூன்று பயணங்கள் பற்றிய கட்டுரைகள் நீங்கள் எழுத, நான் படிக்கக் காத்திருக்கிறேன்.

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வெங்கட்ஜி!!! எழுதுகிறேன் வெங்கட்ஜி!! இரண்டாவது நீங்கள் சென்று வந்து தொடராக எழுதியதுதான்....

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

   நீக்கு
 2. எமது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  புகைப்படங்கள் அட்டகாசமாய் இருக்கிறது.
  பதிவு வருவதற்கு முன் ட்ரெயிலர் விடும் ஐடியா ஸூப்பர் விரைவில் வரட்டும் பதிவு.

  ஆண்டவன் கையில் இருக்கிறது என்று கண்டக்டர் போல பதில் சொல்லாமல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஹா...வாங்க கில்லர்ஜி!!! வரும்போதே அரசியல் வேட்டுடன் வருகின்றீர்களே!!! ட்ரெயிலர் விடும் ஐடியாவை இதற்கு முன்னர் ரொம்ப நாள் முனாடி செய்தது என்றாலும்..... நம்ம வெங்கட்ஜியைத் தான் காப்பி அடித்திருக்கேன்!!!!

   மிக்க நன்றி கில்லர்ஜி வாழ்த்துகளுக்கு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

   நீக்கு
  2. கில்லர்ஜி எதுக்குத் தமந்னாவெல்லாம் அரசியலுக்குக் கொண்டு வரீங்க...ஹா ஹா ஹா

   நீக்கு
 3. மற்றவர்களின் பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுவது போல உங்கள் தளத்திலும் பதிவுகள் அதிகம் வர வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மதுரை சகோ!!!! பதிவுகள் எழுதுவதில் என்னவோ தெரியவில்லை ஒரு சிறு சுணக்கம்..இப்போதெல்லாம்...எழுதுகிறேன் சகோ உங்கள் நல்லெண்ணத்தை வரவேற்று...சென்ற வாரத்தில் பின்னூட்டம் கூடக் குறைந்துவிட்டது மிஸ் ஆன பதிவுகள் நிறைய இருக்கின்றன..ஹா ஹா ஹா..வெளிநாட்டில் இருக்கும் நெருங்கிய உறவினர் வருகை...அவர்களுடன் நேரம் செலவிடல், பாட் லக் கெட்டுகெதர் ஊர் சுற்றல் என்று....

   எழுதுகிறேன்..சகோ..

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

   நீக்கு
 4. கீதா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அது போல துளசிக்கும் அவர் குடும்பதினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...குறும்பட நாயகன் துளசி சாரை அதிகம் காண முடிவத்தில்லையே அவரை கண்டால் சொல்லுங்கள் ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் அதனால் தைரியமாக பெரிய திரைகளிலும் அவர் நடித்து அதன் பின் கட்சி ஆரம்பித்து எனக்கும் ஒரு போஸ்டிங்க் தர சொல்லுங்கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மதுரை சகோ வாழ்த்திற்கு.

   ஹா ஹா ஹா ஹா ஹா... துளசியிடம் சொல்லுகிறேன். கேட்டால் சிரித்திருப்பார்...நானும் கலாய்த்திருப்பேன்... அவர் இப்போது டிசம்பர் லீவில் ஊரில் இருக்கிறார். அவரது ஊர் குடும்பம் எல்லாம் இருப்பது நிலம்பூரில், கிராமத்தில்.... இவர் வேலை செய்வது பாலக்காட்டில். 3.30-4 மனி நேரம் இரு ஊர்களுக்கும் இடையில்....இதை அப்படியே அனுப்பிவிடுகிறேன் அவருக்கு..ஹா ஹா ஹா...அவர் என்ன சொல்லுறது...அவர் கட்சி ஆரம்பித்தால் உங்களுக்கு கொ ப சே போஸ்டிங்க்...அப்பத்தான் நீங்க அரசியல் நையாண்டி எழுதாம இருப்பீங்க ஹிஹிஹிஹி...   நீக்கு
 5. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தில்லையகத்து துளசிதரன், கீதா ரங்கன் இருவருக்கும்.

  பயணக் கட்டுரை எழுதப்போறீங்க. எழுதுங்க. எல்லாவற்றிர்க்கும் நேரக் வரணும்போல் இருக்கிறது.

  படங்களும் (ஒரு சில தவிர) மிக நன்றாக வந்திருக்கின்றன. அதுவும் அந்த ஆபத்தான, பாறையை மோதி உடைக்க நினைக்கும் அலை (சிந்துபைரவி பட சம்பந்தமான நிகழ்வைப் படித்த ஞாபகம் வந்துவிட்டது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நெல்லைத் தமிழன் வாழ்த்துகளுக்கு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!..

   ஆமாம்...அதென்னவோ தெரியலை..பதிவு எழுதவரவில்லை...

   முதல் படம் குழுவில் இருந்த தோழி ஒருவரின் அலைபேசியிலிருந்து....மற்றவை எனது கேமரா...அதுவும் லென்ஸ் எரர் வந்ததிலிருந்து ரொம்பவே கஷ்டப்பட்டு எடுக்க வேண்டியதானது...இடையில் சரியாகி இப்போது மீண்டும் கம்ப்ளீட்டாகப் போய்விட்டது...!!

   எனக்கும் அந்த இடத்தில் சிந்துபைரவி தான் நினைவுக்கு வந்தது....அந்த நிகழ்வு பற்றியும் எங்கோ வாசித்த நினைவு...

   நீக்கு
 6. வணக்கம் துளசி அண்ணன் & கீதா!

  உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
  நலமும் வளமும் மகிழ்வும் பெருகிட வாழ்த்துகிறேன்!

  படங்கள் மிக அழகாக இருக்கின்றன. பதிவுகளும் அருமையாக இடுவீர்கள்.
  காத்திருக்கின்றேன் படிக்க நானும்..:)

  உங்களின் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இளமதி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

   தங்களின் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 7. படங்கள் அனைத்தும் அருமை. ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும் என நினைக்கிறேன். உடனுக்குடன் சூட்டோடு சூடாக எதனையும் செய்து விட வேண்டும். - எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு – 2018 நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் தமிழ் இளங்கோ சகோ!! உடனடியாகச் செய்யாவிட்டால் அப்புறம் ஏதோ ஒன்று தடை செய்கிறது.....மிக்க நன்றி சகோ..

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

   நீக்கு
 8. எதுக்காக காத்திருக்க வைக்கிறீங்க கீதா :) சீக்கிரம் படங்களையும் பதிவுகளையும் ரிலீஸ் பண்ணுங்க :)எல்லா படங்களும் அழகு கடைசி படம் செம அழகு
  துளசி அண்ணா மற்றும் குடும்பத்தாருக்கும் ,உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதறேன் ஏஞ்சல்!!

   மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!

   நீக்கு
 9. நான் வந்துவிடுவேனே இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எம் பி ஸார்!!!!! இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜி எம் பி ஸார்!!!

   நீக்கு
 10. படங்கள் அருமை. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் கீதா அவர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முரளி சகோ...ஹா ஹா ஹா இது என்ன புது அடைமொழி எல்லாம்...

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

   நீக்கு
 11. ஆஹா திரும்பும் பக்கமெல்லாம் புயுப் போஸ்ட்ட்ட்ட்:)) மீயும் போடப்போறேன்ன்ன்ன்ன்ன்:))..

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போடுங்க போடுங்க அதிரா!!!!! வரோம்..

   உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் அதிரா..

   நீக்கு
 12. ஹலோ கீதா.. இங்கின ரெண்டு கொக்குகள்தானே உள்ளன.. ஆனா மூன்று பதிவுகள் எனப் போட்டிருக்கிறீங்க கர்ர்ர்:) நேக்கு கணக்கிலயும் டி ஆக்கும்:)) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாஆஆஆஆஆது!:)..

  கொக்குப் படம் ஜூம் பண்ணி எடுத்திருக்கிறீங்கபோல, சரியாக தெரியவில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா...அதுதான் நடுவுல இருக்கற கொக்கு!! ஹிஹிஹி..

   எந்தக் கொக்கு!! முதல் படமா அது என் தோழியின் மொபைலில் எடுத்தாங்க அதை எனக்கு ஷேர் செய்தாங்க...அந்தி மயங்கும் மாலையில் எடுத்தது...என் கேமராவுக்கு மாலைக்கண் ஹா ஹா ஹா இருட்டானா தெரியாது...இப்ப சுத்தமா கண்ணே போய்டுச்சு!!

   நீக்கு
  2. ஓ நிறைய கொக்குகள் உள்ள படமா ஆமாம் கொஞ்சம் ஜூம் பண்ணாமல் எடுத்ததுதான்..ஜூம் பண்ணி இருந்தால் இன்னும் தெரிந்திருக்குமோ என்னவோ...பதிவில் வரும்...இன்னும் கொஞ்சம் நல்ல படங்கள்...

   நீக்கு
  3. இல்ல நான் சொன்னது உங்க நண்பியின் கமெராவில எடுத்து,:), நண்பி உங்களுக்கு அனுப்பியதை:)... நாந்தான்ன்ன்ன்ன்ன்ன்ன் எடுத்தேன் என நீங்க இங்கு போட்ட ரெண்டு கொக்குகளும் 4 கால்களும் உள்ள படமாக்கும்.. ஹா ஹா ஹா:)

   நீக்கு
  4. ஹா ஹா ஹா அதுவா..நண்பி அதைச் சொல்ல வேண்டாம் என்று சொல்லியதால் நான் இங்கு பதிவில் சொல்லவில்லை....ஆனால் இங்கு பின்னூட்டத்தில் சொல்ல வேண்டியதாப் போச்சு....மேலே நெல்லையின் கமென்ட்டுக்கும் சொல்லிட்டேன் பாருங்க....அதுவும் மொபைல்ல எடுத்தாங்க...எப்படி எடுத்தாங்கனு தெரியலை....ஜூம் பண்ணினால் சரியா வராதோ மொபைலில்...


   நீக்கு
 13. ஆஹா மரத்தில் கொக்குகள்.. அவை ஆர்டிபிசல் தானே? ரொம்ப அழகு... அந்தக் கற்கள்.. மணம் அங்கு ஒரு லைட் ஹவுஸ் போல ஒன்று அனைத்தும் அழகு..

  அது பறவைகள் சரணாலயமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஆர்டிஃபிசியல்தான்....பதிவில் சொல்லுகிறேன்...ஓகேயா...அதுவரை மூச்!!

   நீக்கு
  2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நான் மூச்ச்ச்ச்ச்ச்:) பேச மாட்டேன்ன்ன்ன்:))

   நீக்கு
  3. ஹா ஹா ஹா அது!!! செக்ரட்டரி இதற்கு ஒரே சந்தோஷப்படுவாங்களே !!! ஆஅ எனக்கு என்ன செய்யனு தெரியலையே!! ஹா ஹா ஹா..

   கீதா

   நீக்கு
 14. ///இரண்டாவது பதிவில் வரும் இடங்களுக்குச் சென்றது கட்டுப்பாடுகள் நிறைந்த நபர்களுடன்///

  ஹா ஹா ஹா அவர்கள் இதைப் படிச்சால்ல்.. கீதாவின் நிலைமை அவ்ளோதேன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா.. ஆனாலும் கட்டுப்பாடானவர்களுடன் சென்றாலும் எடுத்த படங்கள் மிக அழகு.

  என்னதான் இருப்பினும் சுற்றுலா என்பது கலகலப்பானவர்களோடு சென்றால் மட்டுமே ஜாலி.. இதனாலேயே நாங்கள் தனியாகவே எங்கும் செல்ல விரும்புவோம்ம்.. ஆடிப்பாடி, விரும்பிய உணவு உண்டு போய் வரலாம்..

  விரைவில் அடுத்த பதிவுகளும் வரட்டும் கீதா.

  உண்மைதான் , படங்கள் எடுப்பது ஈசி, ஆனா அவற்றைச் செட் பண்ணி போஸ்ட் போடுவதென்பது ரைம் எடுக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஹா...ஆமாம் அதிரா..ஆனா பார்க்கமாட்டாங்கனு தெகிரியம் தான்...ஹிஹிஹி...ஆம் கலகலபபனவர்களுடன், ஒரே அலைவரிசை உள்ளவர்களுடன் சென்றால் அது தனிதான்...

   ஆமாம் பதிவு போடுவது சில சமயம் கொஞ்சம் ரைம் எடுப்பது மட்டுமல்ல அதற்கான நல்ல ஃப்ளோ வேண்டும்...

   எழுதுகிறேன்..

   நீக்கு
 15. அன்புச் சகோதரர் துளசிதரனுக்கும் இனிய தோழி கீதாவிற்கும் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  அழகிய புகைப்படங்கள். ஆனால் எந்த இடத்தில் எடுத்தீர்கள் என்று தெரியவில்லை.

  என் வலைத்தளத்தில், சென்ற பதிவில் உங்கள் ஊர் பாலக்காடு அருகில் உள்ல அட்டப்பாடி பற்றி எழுதியிருந்தேன். நீங்கள் வந்து அதைப்பற்றி ஏதேனும் சொல்வீர்கள் என நினைத்திருந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனோ அக்கா தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

   அக்கா துளசி இப்போது அவரதுகுடும்பம் இருக்கும் ஊரான நிலம்பூர் அருகில் உள்ள கிராமத்தில் இருக்கிறார். அவர் வேலை செய்வதுதான் பாலக்காடு. அவர் அரையாண்டு தேர்வு அப்புறம் ஏதோ கேம்ப் லீவு என்று வீட்டிற்குப் போய்விட்டதால் பதிவுகள் பார்க்க இயலவில்லை. அவர் பாலக்காடு வந்ததும் பார்த்து கருத்து சொல்லச் சொல்லுகிறேன்.

   நானும் பதிவை மிஸ் செய்துவிட்டேன் பார்க்கிறேன் அக்கா...மிஸ் செய்ததுக்கு மிகுந்த வருத்தம் அக்கா...

   நீக்கு
 16. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
  http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

  நன்றியுடன்
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சாம்! வெகு நாட்களாயிற்று பார்த்து....தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

   நீக்கு
 17. உங்களுக்கும் சகோதரர் துளசிதரனுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்கள் சென்று வந்த இடங்களைக் குறித்து சஸ்பென்ஸ் வைச்சு எழுதி இருக்கீங்க? ட்ரெக்கிங்க் சென்ற இடங்களைப் பற்றி முடிஞ்சால் முன்னாடி எழுதுங்க! எழுதும் முன்னர் இப்படி ஓர் அறிமுகம் சுவையாகச் செய்து வைத்திருப்பதும் நன்றாகவே இருக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கீதாக்கா உங்கள் வாழ்த்துகளுக்கு...எங்கள் வாழ்த்துகளும்...

   சஸ்பென்ஸ் ஹா ஹா ஹா வெங்கட்ஜி யின் மெத்தட் தான்..இப்படி அறிமுகம் செய்வது ....முன்பு செய்துள்ளேன் ஆனால் அப்புறம் விட்டு மீண்டும் வெங்கட்ஜியின் மெத்தடை இங்கு ஃபாலோ செய்திருக்கேன்...ட்ரெக்கிங்க் எழுதறேன்...ரொம்ப பழசா இருக்கே முதல் அதை எழுதிடறேன்...அது ஒரு நாள் ட்ரிப்தான்...இடையில் வருவது மூன்று நாள் அது வெங்கட்ஜி ஏற்கனவே அவர் சென்று வந்து எழுதியும் இருக்கார்...

   மூன்றாவது இரண்டு நாள்...

   எழுதறேன்...மிக்க நன்றி கீதாக்கா

   நீக்கு
 18. @ கீதா ரெங்கன், துளசி : இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எபி-யிலும் சொல்லியிருக்கிறேன்.

  @ கீதா: பாயட்டும் 18-ல், பதிவுகள் உங்களிடமிருந்து. திக்குமுக்காடட்டும் வாசகர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ எ பியிலும் பார்த்தாச்சு...உங்க தளம் வந்தேன்...வழக்கம் போல தடா சொல்லுது...மீண்டும் வரேன்...

   ஹா ஹா ஹா பாஞ்சு திக்குமுக்காட வைத்து விடணும்னு சொல்லறீங்க...சரி பார்ப்போம்...

   மிக்க நன்றி ஏகாந்தன் சகோ உங்கள் வாழ்த்துகளுக்கு...எங்கள் வாழ்த்துகளையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்...

   நீக்கு
 19. பதில்கள்
  1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் வாழ்த்திற்கு. தங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்!

   நீக்கு
 20. நலமெலாம் பெருகட்டும்..
  நன்மைகளும் சூழட்டும்..

  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி துரை செல்வராஜு சகோ தங்களின் இனிய வாழ்த்திற்கு. தங்களுக்கும் எங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

   நீக்கு
 21. 2018 பல வெற்றிகளைத் தருமென நம்புவோம்.
  எல்லோருக்கும்
  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் வாழ்த்திற்கு. தங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

   நீக்கு
 22. கீதா ரெங்கன்,துளசி இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். கட்டுரைகளைப் படிக்க ஆவலாக உள்ளேன். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க காமாட்சி அம்மா. மிக்க நன்றி தங்களின் வாழ்த்திற்கு! தங்களுக்கும் எங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! கட்டுரைகளை எழுத முயற்சி செய்கிறேன் அம்மா...

   நீக்கு
 23. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் துளசிதரன் சகோவுக்கும்/ கீதா சிஸ்க்கும்
  முன்னோட்டம் ......காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பூவிழி!!! மிக்க நன்றிபா தங்களின் வாழ்த்திற்கு...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

   நீக்கு
 24. முன்னோட்டமே அசத்தல் ......காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 25. புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
  ஃ போட்டோக்கள் அருமை. "ரொம்ப நல்ல பிள்ளைகளாக " ஹா ஹா நெஞ்சைத் தொட்டு விட்டீங்க !

  பதிலளிநீக்கு
 26. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  நேற்று தலைவலி மீண்டும். ப்ளஸ் உறவினர் இல்ல விசேஷம். மற்றும் உறவினர்கள். இன்றுதான் வர முடிகிறது.

  காத்திருக்கும் பதிவுகள் சடசடவென இறக்கை விரித்து வெளிக்கிளம்பட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகள் ஸ்ரீராம்...

   இறக்கை விரிக்குதானு பார்ப்போம்...

   நீக்கு
  2. நன்றி ஸ்ரீராம் வாழ்த்திற்கு...

   இறக்கை விரிச்சு பறந்து போறதுக்குள்ளவாவது போடணும் ஹா ஹா ஹா

   நீக்கு
 27. படங்களே முன்னோட்டமாக உள்ளன காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு
 28. மூன்று பதிவுதான் காத்திருப்பில் இருக்கா?! இங்க்அ அம்பதுக்கும் மேல இருக்கு. படங்கள் அருமை.. சீக்கிரம் பதிவு போடுங்க காத்திருக்கோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ ராஜி இது சும்மா பயணம் பற்றி காத்திருக்கும் பதிவுகள்னு கேட்டீங்கனா அது நிறையவே இருக்கு அதுவும் பாதில கிடக்குது பல...கதைகள் உட்பட..

   மிக்க நன்றி ராஜி..

   நீக்கு
 29. கீதா மற்றும் துளசீதரன் குடும்பத்தினருக்குப் புத்தாண்டு வாழ்த்துகள். வரப்போகும் பதிவுகளுக்கான முன்னோட்டம் அருமை! -முனைவர் அ.கோவிந்தராஜூ.

  பதிலளிநீக்கு
 30. இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...கீதா அக்கா மற்றும் துளசிஅண்ணா..

  படங்கள் எல்லாம் வெகு அழகு...விரைவில் அழகிய வரிகளுடன் பதிவிடுங்கள் அக்கா...படிக்க காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 31. அழகான, ரசனையான படங்கள். பதிவுகளுக்கக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு