செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

மன்னிப்பு என்ற உயரிய சொல்லின் நிலை!

அவர் உன்னை மன்னித்தாரா?” என்று ஒரு பெண்ணிடம் கேட்டால் அதன் அர்த்தமே மாறிவிடுமோ என்ற பயம் வந்து விட்டது.

“என்ன சொல்ல வருகிறாய் புரியவில்லையே” என்று கேட்கிறீர்களா?

நேற்று என் தோழி ஒருவரைச் சந்தித்த போது, அவர் வேறு ஜாதிப் பெண் என்று அவளைத் தங்கள் குடும்பத்தில் சேர்க்காமல் இருந்த அவளது மாமானார், இப்போது தன் மகன் மற்றும் மருமகளான என் தோழியின் குடும்பத்துடன் இருப்பது  தெரிந்ததும் மகிழ்ச்சியுடன், “என்னப்பா உன் மாமனார் உன்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டாரா? சூப்பர்! நல்லதே நடக்கட்டும்” என்று மகிழ்வுடன் சொன்னதும்,

“ஐயோ! மன்னிச்சுட்டாரானு சத்தமா கேட்காத! அப்புறம் அது தப்பாகிடும்” என்று சொல்லிச் சிரித்தாள். நான் புரியாமல் விழிக்க…

“ஹாஹாஹா. இப்படித்தான் நீ முழிக்கற மாதிரி, அந்த பஞ்சாப் போலி சாமிக்கிட்ட மாட்டின அந்த ரெண்டு பெண்களும். முதல்ல, மத்த பெண்கள், “ஸ்வாமிஜி உனக்கு மன்னிப்பு கொடுத்துட்டாரா?” னு கேட்டதும் புரியாமல் விழிக்க, இவங்க ரெண்டு பேரும் கற்பழிக்கப்பட்டதும்தான் அதன் அர்த்தம் புரிஞ்சுச்சாம். அதுதான் கோட் வேர்ட். அந்த பஞ்சாப் சாமியாருக்கு எதிரா சாட்சி சொன்ன ரெண்டு பெண்களும் சொன்னதைத்தான் இவங்க சொல்லறாங்க.” என்று அருகிலிருந்த என் உறவினர் பேசியதிலிருந்து தோன்றியதே இது.

“அப்ப இனி இந்த வார்த்தையையும் இப்படியான அர்த்தத்தில் பயன்படுத்தத் தொடங்கிடுவாங்களா? ஏற்கனவே பல நல்ல தமிழ் வார்த்தைகள் காமெடி என்ற பெயரில் பேசப்பட்டு வழக்கில் பேச முடியாதபடி அர்த்தம் மாறி நிற்கிறதே!

ஆன்மீகம் என்ற பெயரில் கூத்தடித்த அந்த பஞ்சாப் கிராதகனைப் பற்றிய செய்திதான் அது. அவனைச் சொல்லிக் குற்றமில்லை. மக்கள் இருக்கிறார்களே! எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இப்படியானவர்களிடம் சிக்கித் தொலைகிறார்களே! அவர்களைத்தான் சொல்ல வேண்டும். அறிவிலிகள்! இவனையும் பின்பற்றி அந்தப் போலிக்காகப் பொதுச் சொத்துக்களை அழித்து, வன்முறையில் ஈடுபட்டு ஒட்டுமொத்தமாகச் சமூகத்தையே சீரழித்து அமைதியையும் கெடுக்கின்றனரே அவர்களைத்தான் சொல்ல வேண்டும். 

மஹாபாரதத்தில் தருமர் சொல்லுவதாக வரும் ‘ஷமா ஹி ஸத்ய ஹை’ – மன்னித்தல் அதுவே உண்மை! எவ்வளவு உயரிய வாக்கியம்! மறப்போம் மன்னிப்போம்! எல்லா மதங்களிலுமே இந்த வார்த்தை மிக மிக உயர்வாகச் சொல்லப்படும் ஒன்று! கிறித்தவ மதத்தில் பாவ மன்னிப்பு என்ற நிகழ்வே உண்டு! அதாவது தன் தவற்றை உணர்ந்து, திருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டால் இறைவன் மன்னிப்பார் என்று பாதிரியாரிடம் சொல்லி மன்னிப்பு கேட்பது!

தன் சக மனிதன் ஒருவனுக்குத் தான் செய்த தவற்றை உணர்ந்து திருந்தி ஒருவன் மன்னிப்பு கேட்டால் அதுவே மிக உயர்வு என்றும், அதை பாதிக்கப்பட்டவர் கருணையுடன் மன்னித்தால் அவன் இன்னும் பல படிகள் உயர்ந்து உன்னத நிலைக்குப் போய்விட்டான்; மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிப்பவன் மாமனிதன் என்றுதானே நந்நூல்கள் சொல்லுகின்றன!

“எனக்குத் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு!” என்று கேப்டன் பஞ்ச் டயலாக் பேசினாலும் அது கூட நல்ல விதமான அர்த்தத்தில்தான் வெளிவந்தது.

மனதில் வன்மம் குடியெறி விளையாடும் மனித இனத்தில் இந்த மன்னிப்பு எனும் வார்த்தை ஒரு மனிதனை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும், உண்மைப் பொருளுக்கு மிக அருகில் கொண்டு செல்லும் மிக மிக உன்னதமான சொல்லாக, செயலாகத்தான் கருதப்படுகிறது. அப்படியான சொல்லை…..

அந்தக் கொடும்பாவி அந்தச் சொல்லின் அர்த்தத்தையே மாற்றிக் கெடுத்துவிட்டானே! அவனுக்கு ஆதரவு நல்கும் அந்தக் குருட்டுக் கூட்டம் உருப்படப் போவதில்லை! ஆன்மீகம் என்ற பெயரில் ஆட்டம் ஆடிய அவன் ஆட்டம் அடங்க, எந்த உன்னதமான வார்த்தையை அவன் கெடுத்தானோ அதே வார்த்தையாலேயே அவனுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது என்று மனித கோர்ட்டில் தீர்ப்பெழுதப்பட வேண்டும்!

இந்தக் கிராதகன் 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே கற்பழிப்பில் ஈடுபட்டிருக்கிறான் என்றால் நம் சட்டம் அப்போது என்ன செய்து கொண்டிருந்தது? இத்தனை வருடங்கள் பல பெண்கள் பலியான பிறகா தண்டனை? முதலில் அரசு இப்படியான ஆன்மீக ஆஸ்ரமங்கள் தொடங்க அனுமதிக்கலாமா என்பதைப் பற்றிய எனது தனிப்பட்டக் கருத்து வேறு விதமாக இருக்கும். எனவே அதற்குள் நான் நுழையவில்லை.

நம் நாட்டில் ஆன்மீக ஆஸ்ரமங்கள் தொடங்குவதற்கு என்று விதிகள் இருக்கின்றனதான். வியாபார நோக்கில் தொடங்கப்டுகிறதா அல்லது வியாபார நோக்கற்ற சேவை ரீதியில் தொடங்கப்படுகிறதா என்ற விதிகளுக்குள்தான் தொடங்கப்படுகின்றன என்றுதான் சொல்லப்படுகிறது. வியாபார ரீதி என்றால் கம்பெனி ஆக்ட் என்பதன் அடிப்படையில்தான் வரும். அப்படித்தான் நம் நாட்டில் உள்ள ஆன்மீக ஆஸ்ரமங்கள் செயல்படுகின்றனவா என்று தெரியவில்லை. ஏனென்றால் என் அறிவிற்கு எட்டிய வரை எல்லா புகழ்பெற்ற ஆன்மீகவாதிகளும் தங்கள் ஆஸ்ரமத்தின் மூலம் வழங்கும் சேவைகளுக்குத் தொகை வாங்கத்தான் செய்கிறார்கள். அது தவிர தங்கள் ஆஸ்ரமத்தின் பெயரில் ஒலிநாடாக்கள், வகுப்புகள், விழுமியங்கள், புத்தகங்கள், மருந்துத் தயாரிப்புகள் என்று பலவகையில் பொருள் ஈட்டவும் செய்கிறார்கள்தான்.

எனவே உரிமை என்று சொல்லி இப்படியான ஆஸ்ரமங்கள் தொடங்க அனுமதி அளித்தால், எப்படி ஒவ்வொரு வேலைக்கும் அதற்குண்டான தேர்வுகள், நேர்காணல் என்று பல படிகள், கடந்து வேலை அளிக்கப்படுகிறதோ, சட்டதிட்டங்கள் இருக்கிறதோ அது போன்று, ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்பவருக்கு அந்தத் தகுதி இருக்கிறதா என்று அவர் பல தேர்வுகள், சோதனைகளைக் கடந்த பிறகே, கட்டுப்பாட்டு விதிகள், சட்டங்களுக்குட்படுத்தப்பட்டுத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும். இவர்களுக்கான சட்டங்களும் கடுமையாக இருக்க வேண்டும்.

எல்லா வரிகளையும் ஒழுங்காகக் கட்டுகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். நன்கொடைகளும் கடுமையான சட்டத்திட்டங்களுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். மக்களுக்கு அறிவு இல்லையேல், மக்களுக்காக என்று சொல்லப்படும் அரசுதான் சட்டங்களைக் கடுமையாக்கிக் கையிலெடுக்க வேண்டும். உணர்வுகளுக்கு இதில் இடமில்லை. இல்லையேல் இப்படியான போலிச் சாமியார்கள் சட்டங்களின் ஓட்டைகளைப் பயன்படுத்தி சுகபோகமாக, சுதந்திரமாகத் திரிந்து மக்களை முட்டாளாக்குவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இரண்டு பெண்கள்தானே சாட்சியாக வந்தார்கள். ஒரு பெண்ணிற்கு 10 வருடம் 2 பெண்கள் என்பதால் 20 வருட தண்டனைதான் போலும் இந்தப் போலிச் சாமியாருக்கு! அப்படி என்றால் அவனால் பாதிக்கப்பட்ட எல்லா பெண்களும் வந்திருந்தால்?! மன்னிக்க முடியாத குற்றத்தைப் புரிந்துவந்த அந்தப் போலிக்கு 20 வருடம்தான் தண்டனை! ஹும் நல்ல நீதி!\

-------கீதா


68 கருத்துகள்:

  1. கணக்கு வழக்கு இல்லாமல் இப்படிப்பட்ட சாமியார்களிடம் பணம் இருப்பதால் ,சிறையிலும் கூட இவனை போன்றவர்கள் ராஜ வாழ்க்கை வாழக் கூடும் ,என்கௌன்டரில் போட்டுத் தள்ளுவதே நல்லது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான் ஜி எனக்கும் அப்படித்தான் தோன்றியது. போட்டுத் தள்ள வேண்டும் என்று. நம்மூரில் யாரையேனும் என்கௌண்டர் என்று போட்டுத் தள்ளுவார்கள் ஆனால் இவர்களை எல்லாம் அல்ல...

      மிக்க நன்றி பகவான் ஜி கருத்திற்கு

      நீக்கு
  2. வந்ததும் மை வச்சிட்டேன்... நிறைய ஒன்று முடிய ஒன்று இப்படி சாமிமார்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்... ஒன்றைத் திருத்தி விட்டால் மக்கள் அடுத்த சாமியில் போய் விழுந்துவிடுகிறார்கள்.. சாமிமாரை குற்றம் சொல்வதா.. மக்களைக் குற்றம் சொல்வதா?.. சனத்தொகை அதிகம்.. பஞ்சம் அதிகம் இதன் காரணங்களாலேயே அதிக மக்கள் சாமியை.. சாத்திரத்தை நாடுகிறார்கள்... என்ன சொல்வது இதற்கு...மக்கள் முதலில் திருந்தோணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா மைக்கு நன்றி. மக்கள் விழுவது தவறுதான். ஆனால் அந்த மக்கள் அறிவிலிகளாக இருப்பதால்தான் அரசே கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று சொல்லுகிறேன். மிக்க நன்றி அதிரா...

      நீக்கு
  3. இந்தியாவிற்கு பிடித்த தரித்திரமே இந்த சாமியார்களை நம்புவதுதான் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்று தெரிந்தும் அப்பாவி மக்கள் பலியாவதுதான் வருந்தக்கூடிய விஷயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் விமல்....மக்கள் அறிவிலிகள்...எனவே அரசுதான் இதற்குக் கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்பதே நம் எல்லோரது அவாவும்...மிக்க நன்றி விமல் எங்கள் தளத்திற்கு முதல் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  4. TM 2 என்னது அந்த நல்ல சாமியாரை அவன் இவன் என்று எழுதி இருக்கிறீங்க.....பாருங்க அந்த சாமியாருக்கு சுப்ரீம் கோர்ட்ல அவர் பண்ணியது தப்பே இல்லை அந்த பெண்கள்தான் அவரிடம் தவறாக பழகி இருக்கிறார்கள் என்று தீர்ப்பு சொல்லிட்டு அதுமட்டுமல்லாமல் அந்த சாமியாரை அவன் இவன் என்று நீங்கள் எழுதியதால் உங்கள் மீது அவமரியாதை கேஸ் போட்டாலும் போடுவார்கள் இதை ஏன் சொல்லுறேன்னா நீங்கள் வசிப்பது இந்தியாவில அதனால ஜாக்கிரதையாக் இருங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா... வாங்க மதுரை....அப்படிக் கேஸ் போட்டா என் சகோக்கள் நீங்கள் எல்லோரும் இருக்க எனக்குத் தோள் கொடுக்கும் சகோக்களாக வரமாட்டீர்களா என்ன?!!! எல்லாம் அந்த தகிரியம்ட் தான் ஹிஹிஹி..

      மிக்க நன்றி மதுரை சகோ கருத்திற்கு

      நீக்கு
    2. ஆமாமா நம்ம மதுரையார் தான் உங்களுக்கு எதிரா வழக்கு போட போகின்றார். நான் அதற்கு ஆதரவாக்கும், அதெப்படிங்க எங்க சாமியை நீங்க அவன் என சொல்லலாம். அதுன்னு சொல்லணுமாக்கும் மனுச ஜாதிக்கே அருகதைஇல்லாதததுகளுக்கு எதுக்கு இத்தனை மரியாதை

      நீக்கு
  5. பதில்கள்
    1. வாங்க அப்பா துரை சார். கொடுமைதான் சார்.

      மிக்க நன்றி சார் கருத்திற்கு

      நீக்கு
  6. //மன்னிப்புக் கேட்டால் இறைவன் மன்னிப்பார் என்று பாதிரியாரிடம் சொல்லி மன்னிப்பு கேட்பது!//

    அவசரத்தில் பாரதியாரிடம் என்று படித்து விட்டேன்!!!! :P

    தம மூன்றாம் வாக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹா வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
    2. மன்னிப்புக்கேட்டால் ஏழேழுபது தடவை மன்னிக்க சொன்னதெல்லாம் இந்த மாதிரி துஷ்டங்களுக்கு இல்லை. அந்தக்காலத்திலும் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் தான் தணடனையா இருந்தது. பைபிள் சொல்லும் மன்னிப்பு இரத்தப்பழிக்கும் அதனோடினைந்ததுக்கும் இல்லை அறியாமல் செய்யும் தவறுகளுக்கு தான் மன்னிப்பு,

      நீக்கு
  7. ஆஸ்ரமங்கள் தொடங்க அனுமதி பெற வேண்டுமா என்ன? நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை. அப்படி எனில் அந்தந்தப் பெயர்களின் கீழ் பதிவெண் இருக்க வேண்டுமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! ஸ்ரீராம் எனக்கும் அப்படி ஒரு சட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எந்த ரெஹிஸ்ட்ரேஷன் நம்பரும் இல்லை. ஆனால் அவ்வப்போது சில அனாதை விடுதிகளின் ஆட்கள், துணிகள், ரூபாய் பெற வீடு வீடாக வருவதுண்டு. அப்போது அவர்கள் ஒரு பில் தருவதுண்டு. தங்களின் இல்லம் சட்டப் பூர்வமாக ரெஜிஸ்டர் செய்யபட்டுள்ளது என்று அதற்கான ஆதாரங்களைக் காட்டுவார்கள். அதில் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் எல்லாம் இருக்கும். அத்னால் இந்தப் பதிவை எழுதும் போது. அனாதை இல்லங்களுக்கே சட்ட ரீதியாக பதிவு செய்யப்படணும் என்றால் வளம் கொழிக்கும் அதுவும் பன்னாட்டு கரன்சிகள் கூட விளையாடும் இந்த ஆன்மீக ஆஸ்ரமங்களுக்குச் சட்டம் இருக்கணுமே என்று தோன்றியதால் அரசின் சட்டத்தில் இதற்கு இடம் இல்லையா? அனுமதி வாங்க வேண்டாமா அப்படி என்றால் யார் வேண்டுமானாலும் நன்றாக சம்பாதிக்கலாமே என்றெல்லாம் தோன்றவே நெட்டில் பார்த்த போது ஒரு சில தகவல்கள் கிடைத்தன. அதற்குள் நான் முழுமையாக நுழையவில்லை. அதனால்தான் அரசு இதனைக் கையிலெடுக்க வேண்டும் சட்டம் கடுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். சட்டத்தின் கீழ் வரவில்லை எனில் கண்டிப்பாக மேலும் மேலும் இப்படியானவர்கள் கிளம்ப்க் கொண்டுதான் இருப்பார்கள். என் மனதில் இதற்குச் சட்டம் இல்லையா என்று தோன்றிய போதுதான் னெட்டில் தேடிய போது கிடைத்ததை வைத்து எழுதினேன். சட்ட வல்லுநர்கள் இதற்குப் பதில் அளித்தால் மிகவும் நல்லதுதான்...

      மிக்க நன்றி ஸ்ரீராம். நீங்கள் எழுப்பிய இந்தக் கேள்விக்கு!!! அதான் இதற்கு இப்போது பதில் அளித்துவிட்டு மற்ற பின்னூட்டங்களுக்குப் பிறகு வருகிறேன்...

      நீக்கு
    2. நல்ல கேள்வியும் பதிலும். இந்திய சட்டங்கள் இதைக்குறித்து என்ன சொல்கின்றதென அறிய நானும் ஆவலாக இருக்கின்றேன். இங்கே எதை செய்தாலும் அதை பதிவு செய்தே ஆக வேண்டும்,

      நீக்கு
    3. ஆமாம் உங்கள் நாடு மற்றும் வளர்ந்த நாடுகளின் சட்டங்கள் வேறுதான்....உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. நானும் தகவல் அறிய முனைந்து கொண்டுதான் இருக்கிறேன் நிஷா...மிக்க நன்றி

      நீக்கு
  8. இந்த அவசர யுகத்தின் மன அழுத்தங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் சிலர். இந்தக் குறிப்பிட்ட சாமியார் சினிமா உட்பட அனைத்துத் துறைகளிலும் நுழைந்து மக்களைத் தவணை முறையில் மயக்கி வைத்திருக்கிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வாசித்த போது ரொம்பவே பிரமிப்பைத் தந்தது. அசிங்கமாகவும் இருந்தது நம் அறிவு கெட்ட மக்களை நினைத்த போது...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  9. மக்களுக்கு பக்திக்கும் ஆன்மிகத்துக்கும் உள்ள வித்தியாசம் புரியலை! முட்டாள் தனமான மூட பக்தியால் மக்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்த மறுக்கின்றனர். இந்த மாதிரி சாமியார்கள் பின்னால் போவதை அதுவும் படித்தவர்கள் பலரும் போவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்ததே இல்லை! பக்தி வேறு, இத்தகைய மூட நம்பிக்கை வேறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கீதாக்கா. பக்தி, ஆன்மீகம் ஆத்திகம், மூடநம்பிக்கைகள் எல்லாவற்றிற்கும் வித்தியாசம் உண்டுதான். அக்க நம்ம அரசியல்வாதிகளில் பலர் நெற்றியில் குங்குமம், விபூதி தரித்துத்தான் உலவுகிறார்கள். கோயிலுக்கும் சென்று வழிபட்டு வழிபாடுகளும் செய்கிறார்கள். பரிகாரங்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு பெரிய ஊழலும் செய்கிறார்கள் பணக் கொள்ளை...இதை பக்தி என சொல்லவெ முடியாது...அது போல ஆன்மீகம் பேசுபவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதும் தெரியும்...சிலர் எந்த ரிச்சுவல்ஸும் செய்ய மாட்டார்கள் அதில் நம்பிக்கை இருக்காது. மிகவும் நல்லவரளாக நேர்மையுடன் இருப்பார்கள்... ஆனால் இறை உணர்வும், ஆன்மீகமும் அவர்கள் மனதில் நிறையவே இருக்கும்...

      வெகு சிலரே போலித்தனம் இல்லாமல் வாழ்பவர்கள்...ஆன்மீகத்தை உணர்ந்து வாழ்பவர்கள். மிக்க நன்றி அக்கா கருத்திற்கு

      நீக்கு
  10. /மன்னிப்புக் கேட்டால் இறைவன் மன்னிப்பார் என்று பாதிரியாரிடம் சொல்லி மன்னிப்பு கேட்பது!/ கிறிஸ்துவத்தில் பாதிரியாரிடம் பாவமன்னிப்புக் கேட்பது என்றொரு கோட்பாடு உண்டு. அந்தச் சமயம் அவரை இறைவனாகவே நினைப்பார்கள். பல சினிமாக்கள், தொலைக்காட்சித் தொடர்களில் பார்த்திருக்கலாம். ஜிவாஜி நடிச்ச ஞானஒளி படத்தில் கூட ஒரு காட்சி வந்ததாக நினைப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கீதா அக்கா இதைத்தான் பதிவில் சொல்லியிருக்கேன். ஆம் படங்களிலும் வந்ததுண்டு. நான் நேரிலும் பார்த்திருக்கிறேன். மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்கு

      நீக்கு
    2. உண்மையில் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் மன்னிப்புக்குரிய முழுமையான அர்த்தமே வேறு. அறியாமல் உணராமல் செய்யும் தவறுகளை மன்னிக்க வேண்டும், ஏழெழுபது தடவை மன்னிக்கலாம், ஆனால் எல்லா தப்புக்கும் அப்படி அல்ல. இதைச்சொன்ன இயேசு நாதரே அவர் கோயிலை வியாபார ஸ்தலாமாக்கியவர்களை சாட்டையால் அடித்து துரத்தியதாக வும் கோபம் கொண்டதாகவும் தான் வசனம் சொல்கின்றது. அத்துடன் இரத்தப்பழிகளுக்கு தகுந்த தண்டனையும், அரச சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிய வேண்டியதும் கட்டாயம் எனவும் சொல்லப்படுகின்றது. தவறுகளை தவறென அறிந்தும் செய்வதும் சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்துவதும் அதற்கான மன்னிப்பை கேட்டால் அவை மன்னிக்க பட வேண்டியதில்லை. தண்டனைக்குரியதே.

      பைபிள் வசனங்கள் சொல்லப்பட்ட கால கட்டங்கள் சூழல்களை வைத்து மட்டுமல்ல் அதன் மூலப்பிரதியிலிருந்து மொழி பெயர்க்கப்ப்டும் போது அந்தந்த நாடு, காலாச்சாரசூழலுக்கு தகுந்தது போலவுமே மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது.

      நீக்கு
    3. வாங்க நிஷா ஆம் தெரியும். நான் படித்தது கிறித்தவ பள்ளி, கல்லூரி. இங்கு மன்னிப்பு என்ற அந்தச் சொல் எவ்வளவு உயரிய சொல் அதனை இப்படி ஆக்கிவிட்டார்களே என்பதைச் சொல்லவே பயன்படுத்தினேன். என்னிடம் பைபிள் விசுவும் அம்மா கொடுத்திருந்தவை இருக்கின்றன. ஆம் நீங்கள் சொல்லும் வசனத்தையும் வாசித்திருக்கிறேன். இங்கு ஜஸ்ட் அந்தச் சொல்லின் புனிதத்தை மட்டும்தான் எடுத்துக் கொண்டேன். விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி நிஷா...

      நீக்கு
  11. கொடுமை .கடுமையான தண்டனை அவசியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நாகேந்திர பாரதி சகோ! கருத்திற்கு மிக்க நன்றி

      நீக்கு
  12. பதில்கள்
    1. உங்கள் கருத்தைப் பார்த்துவிட்டேன் இதோ ஒவ்வொன்றாகப் போகிறேன் கில்லர்ஜி

      நீக்கு
  13. இந்த மாதிரி செய்திகளையே படிப்பதில்லை. அதனால், '“அவர் உன்னை மன்னித்தாரா?” இதற்கு முதலில் அர்த்தம் புரியவில்லை. அடக் கடவுளே.

    முதலில், சாமியார் மடங்களில், காசு அதிகமாகச் சேரும்போது, அவர்களுக்கும் உலகியல் இன்பங்கள் வேண்டியிருக்கின்றன. ஏசி, குளிர்சாதனப் பெட்டி, அப்புறம் 'புட்டி' அப்புறம் '...' இதுக்கு ஆரம்ப காரணம், என்ன செய்கிறோம் என்று அறிந்து செய்யாமல், யார் ஆசிரமம் திறந்து, 'சாமியார்' என்று சொன்னால் உடனே அவரை நோக்கிச் சென்றுவிடுவதுதான். ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளிலேயே இவை அதிகம் எனும்போது, நம்ம ஊரைப் பற்றிக் கேட்கவேண்டுமா?

    முதலில், இந்தியாவில், எல்லா அறக்கட்டளைகளையும் ஒழிக்கவேண்டும். அறக்கட்டளைகளுக்கு 5 ரூபாய் டொனேஷன் வந்தாலும் அதற்கும் கணக்கு காண்பிக்கவேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தாலொழிய நம்ம ஊரில் ஏமாற்றுவதைத் தடுக்கமுடியாது. இந்த அறக்கட்டளை என்ற விஷயத்தை, அரசியல்வாதிகள், கட்சிகள், நடிகர்கள், போலி சாமியார்கள் என்று ஊரை ஏய்த்து உலையில் போடும் எல்லோரும் வைத்திருக்கிறார்கள்.

    பாவம் சாமியார் சேர்த்த சொத்து. கூட இருக்கும் அல்லக்கைகள் இப்போது நன்றாக அனுபவிக்கப்போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நெல்லை நானும் இந்தச் செய்தியைப் படிக்கவில்லை அதாவது செய்தி தெரியும் ஆனால் அதைப் பற்றி வாசிக்கவில்லை. அதனால்தான் எனக்கு என் தோழி சொன்ன போது புரியவில்லை. அதன் பின் தான் என் உறவினர் சொன்ன பிறகுதான் வாசித்தேன். நொந்து போனேன். மன்னித்தல் என்பது எவ்வளவு பெரிய செயல் அதைப் போய் இப்படிக் கேவல்ப்படுத்திவிட்டார்களே நு தோன்றியதால்தான் இந்தப் பதிவு.

      உங்கள் கருத்துகள் அனைத்தையும் அப்படியே ஏற்கிறேன். அதுவும் அறக்கட்டளைகளை ஒழிக்க வேண்டும் என்பதும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்குக் காட்ட வேண்டும் என்பதும்...அதனால்தான் அதைப் பதிவில் சொல்லியிருந்தேன். அதே போல் இந்தச் சாமியார் மடங்கள்/ஆஸ்ரமங்கள் எல்லாம் தொடங்கப்படக் கூடாது தொடங்கினாலும் சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும். சாமியார் மடங்களில் காசு சேரும் போது இப்படித்தான் நீங்கள் சொல்லும் எல்லா உலகியல் இன்பங்களும் புகுந்துவிடுகின்றன. மக்களும் இவர்களை நாடிச் சென்றுவிடுகிறார்கள்.
      //பாவம் சாமியார் சேர்த்த சொத்து. கூட இருக்கும் அல்லக்கைகள் இப்போது நன்றாக அனுபவிக்கப்போகிறார்கள்.// ஹாஹாஹா ஆமாம்! அதேதான்....

      மிக்க நன்ன்றி நெல்லை கருத்திற்கு

      நீக்கு
  14. முதல் கருத்துரை தந்த பகவான்ஜி அவர்களின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்.

    காரணம் இதுதான் நிரந்தர தீர்வைத்தரும். ஆனால் அப்படி சட்டங்கள் இந்தியாவில் வராது காரணம் சட்டம் இயற்றும் நிலைக்கு வைத்தவர்கள் அனைவருமே என்கௌண்டரில் போடப்பட வேண்டியவர்கள்.

    கொம்பை விட்டு வாலைப்பிடித்த கதைபோல மக்களில் பெரும்பாலானவர்கள் வாழ்கிறார்கள்.

    அரசியல் தொண்டர்கள் ஒழியும்வரை,
    சீரியல் அடிமைகளாய் பெண்கள் வாழும்வரை,
    நடிகனின் ரசிகனாய் மாணவர்கள் இருக்கும்வரை,
    கிரிக்கெட் பைத்தியங்கள் இறக்கும்வரை,
    அதீத ஆன்மீகத்தால் போலிச்சாமியார்களை நம்பும் மூடர்கள் திருந்தும்வரை,
    இவர்களின் வாழ்க்கை ராஜயோகம்தான்...

    ஏமாற்றுவதற்கு அறிவு வேண்டும் அவர்களை குறை சொன்னால் எனக்கு கோபம் வரும்....

    வாழ்க! மோ(ச)டி சாமியார்கள்.

    ஜெயம் நமதே...
    சமயமலையிலிருந்து...
    கில்ஜியானந்தா ஸ்வாமிகள்.

    இதை செல்லில் எழுதி வைத்தது காலை எட்டு மணி வெளியீடு மாலை இப்பொழுது இந்த நொடி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா வாங்க கில்ஜியானந்தா சாமிஜி! செல்லில் கருத்திடும் பணக்கார சாமிஜி!!ஹிஹிஹிஹிஹி சரி உங்க மடத்துல இடம் இருந்தா எங்க எல்லாருக்கும் கொஞ்சம் புக் பண்ணி வைச்சுக்கங்க...
      சரி சரி நீங்க சொல்லுற பாயின்ட் எலலம் சரி...நம்ம அன்பே சிவம் இருக்கார்ல அவரு இதப் படிச்சுட்டு ஒரு அழகான கருத்து சொன்னாரு. விஐபி நு இந்த சாமியாருங்க மட்டுமில்ல பலரையும் விஐபினு முன் சீட்டுல உக்கார வைக்கிறாங்க. சாமானியர்கள் எல்லோரும் பின்னாலே. ஆனால் பனிஷ்மென்ட்னு வரும் போது பின்னாடி இருக்கற சாமானியர்களுக்குத்தான் த்ண்டனை...இந்த முன்னாடி இருக்கறதுங்க தப்பு செஞ்சுட்டு தப்பிச்சுடுதுங்க என்று தண்டனை மட்டும் அவங்களுக்கு இல்ல. என்று சிவம் கருத்து சொன்னார்...

      மிக்க நன்றி கில்லர்ஜி ஸாரி கில்ஜியானந்தா ஸாமி...

      நீக்கு
  15. மன்னிப்பது என்பதற்கு இப்படி ஒரு விபரீத அர்த்தமா? கடவுளே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பானுக்கா.. அதை என் கேக்கறீங்க அதனாலதான் இந்தப் பதிவே இல்லைனா இவனை பத்தி எல்லாம் எதுக்குப் பதிவு எழுதப் போறேன்...மிக்க நன்றி பானுக்கா...

      நீக்கு
  16. பதில்கள்
    1. ஆம் வெங்கட்ஜி கொடுமைதான்..

      மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு

      நீக்கு
  17. மன்னிப்புக்கு இப்படி ஒரு மீனிங்கா !! கடவுளே
    எனக்கு முதலில் புரியலை ..இந்த போலி சாமியார் பற்றி இங்கே ஸ்கை நியூஸிலும் காட்டினாங்க நானும் பத்தோடு பதினொன்று என்று ஏமாறும் மக்களை திட்டிகிட்டே சானல் மாற்றினேன் இங்கே படிச்சதும்தானே விவரமே தெரியுது ..இனிமே யாரும் மன்னிச்சி விட்ருங்கன்னு சொன்ன கூட தப்பாகிடுமே அவ்வ்வ் ..

    எனக்கு அந்த கேடிக்கு வக்காலத்து வாங்கி பலரை ரயட்ஸில் சாகடிச்சாங்களே அந்த ஏலியனின் சிஷ்யக்கூட்டம் அதுங்களை என்ன ஜென்மம்னு சொல்றது என்ன வார்த்தையில் திட்டன்னு புரியலை இப்படியும் முட்டாள்கள் இருக்காங்களே அட சே :(


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல் வாங்க!! நல்வரவு! ரொம்ப மகிழ்க்சியா இருக்கு!! பூஸாரை கலாய்க்க ஒரு கை இல்லாம கொஞ்சம் கஷ்டமா இருக்க பூஸரைக் கலாய்க்கவே இல்ல..இப்ப நீங்க வந்தாச்சு ஹிஹிஹிஹி...

      எனக்கும் முதலில் புரியலை ஏஞ்சல். நானும் இத ஆமாம் இதானே நம்ம நாட்டுல நடக்கும் என்று வழக்கமான ஒன்னுனு விட்டுட்டேன். அப்புறம் என் தோழி சிரிச்சப்பதான் புரிந்து வாசிச்சேன் ச்சே நு ஆகிப் போச்சு. இல்லைனா இவனைப் பத்தில் எல்லாம் எழுதியிருக்கவே மாட்டேன். மன்னிப்பு என்ற வார்த்தை எப்படிக் கேவலமாக்கிட்டாங்க முட்டாள்கள்னு தான் இந்தப் பதிவு. ஆமாம் மன்னிச்சுவிட்ருங்கனு சொன்னா தப்பாகிடுமே நு அந்த வார்த்தை உபயோகம் கலக்கமு வந்துச்சு எவ்வளவு உயரிய வார்த்தை.

      இந்த மன்னித்தல் என்பது இல்லை என்றால் இவ்வுலகமே நாறிப் போயிருக்கும். மனித உறவுகளே இல்லாமால் மனதில் வன்மம் எதற்கெடுத்தாலும் கத்தியைத் தூக்குதல், துப்பாக்கியைத் தூக்குதல்னு ஆகியிருக்கும் ஏற்கனவெ இந்த மன்னிப்பு, கருணை என்ற ஒன்றுக்கொன்று பிணைந்தவை குறைந்ததால்தான் வன்முறைகளும் மனித உறவுகள் பிரிதலும் என்று...

      //எனக்கு அந்த கேடிக்கு வக்காலத்து வாங்கி பலரை ரயட்ஸில் சாகடிச்சாங்களே அந்த ஏலியனின் சிஷ்யக்கூட்டம் அதுங்களை என்ன ஜென்மம்னு சொல்றது என்ன வார்த்தையில் திட்டன்னு புரியலை இப்படியும் முட்டாள்கள் இருக்காங்களே அட சே :(// யெஸ் யெஸ் மீ டூ...

      மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு

      நீக்கு
  18. கத்தோலிக்க மதத்தில் CONFESSION இருக்கு அதுவே எனக்கு உடன்பாடில்லை ..ஒரு மனிதனை மன்னிக்க கடவுளுக்கு மட்டுமே தகுதி இருக்கு ..கடவுளுக்கும் மனிதனுக்கும் அதாவது பக்தனுக்கு நடுவில் மீடியேட்டர் எதற்கு ?? இதை இந்த மக்கள் புரிந்தால் இப்படிப்பட்ட வியாபாரிகள் போலி சாமியார்கள் உருவாக வாய்ப்பில்லை நான் அனைத்து சாமியார்களையும் சேர்த்தே சொல்றேன் .
    நானெல்லாம் அறிந்தோ அறியாமலோ தவறு செஞ்சா நேரடியா சம்பந்தப்பட்டவரிடமே மன்னிப்பை கேட்டுடுவேன் ..
    அப்படி இல்லைனாலும் கண்ணை மூடி அந்த நொடி டைரக்டா கடவுளிடம் கேட்டுடுவேன் ..இதே போதுமில்லையா ..
    எனக்கென்னமோ இப்போல்லாம் மக்கள் ரொம்ப மன அழுத்தத்தில் இருப்பதால் ஏதாவது ஒரு ஆறுதல் சாய ஒரு தோள் கொடுக்க தேற்றரவாளன் கிடைப்பாரா என ஏங்கி தவித்தே இந்த குழியில் விழறாங்கன்னு தோணுது
    இந்த கணினி யுகத்திலும் மனிதனை கடவுளாக்கும் முட்டாள் மக்கள் இருக்கும் வரைக்கும் ........ :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கத்தோலிக்க மதத்தில் CONFESSION இருக்கு அதுவே எனக்கு உடன்பாடில்லை ..ஒரு மனிதனை மன்னிக்க கடவுளுக்கு மட்டுமே தகுதி இருக்கு ..கடவுளுக்கும் மனிதனுக்கும் அதாவது பக்தனுக்கு நடுவில் மீடியேட்டர் எதற்கு ?? இதை இந்த மக்கள் புரிந்தால் இப்படிப்பட்ட வியாபாரிகள் போலி சாமியார்கள் உருவாக வாய்ப்பில்லை நான் அனைத்து சாமியார்களையும் சேர்த்தே சொல்றேன் .// யெஸ் உண்மைதான். நடுவில் மீடியேட்டர் எதற்கு என்பதுதான் என் தனிப்பட்டக் கருத்து அதைத்தான் பதிவில் அதைத் தவிர்த்து என் கருத்தில் நுழையவில்லை என்று சொல்லியிருந்தேன். கன்ஃபெஷன் நல்ல விஷயம் ஆனால் அதிலும் சில கெட்டவை நடக்கிறது என்பதும் தெரியும்...

      ஆனால் இந்த மக்கள் அறிவிலிகளாக இருக்கும் பட்சத்தில் அரசுதான் கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.

      யெஸ் மீ டூ நானே போய் மன்னிப்பு கேட்டுவிடுவேன் இறைவனிடமும் உடனே கேட்டுவிடுவேன். மீண்டும் செய்யாமல் இருக்கவும் முனைவேன். ஆனால் ஹிஹிஹி...மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பேன்...

      யெஸ் மக்கள் ரொம்ப மன அழுத்தத்தில் இருப்பதால் எத்தைத் தின்றால் பித்தம்தெளியும் என்று இப்படி அலைகிறார்கள் என்ன சொல்ல...

      நீக்கு
    2. இல்லை ஏஞ்சலின், கீதா ரங்கன் - பையன் கிட்ட கோபப்படுறீங்க. ஒரு அடி கொடுத்துடுறீங்க. அப்புறம் உங்க மனசுக்குள்ளேயே 'சே தவறு செய்துவிட்டோம்' என்று நினைப்பது, அல்லது கடவுள் படத்துக்கு முன்னால் சென்று, 'சாரி கடவுளே இந்தத் தவறு செய்துவிட்டேன்' என்று சொல்வது அல்லது நேரே பையனிடம் சென்று 'மன்னிச்சுக்கடா. எனக்கு வேற மூடுல இருந்ததுனால நடந்துடுத்து' போன்று (யார் முன்னால் அந்தத் தவறு செய்தீர்களோ, அவர்கள் முன்னிலையில்) சாரி சொல்வது - எது ரொம்ப அப்பீலிங்காக இருக்கு? மனிதன் இன்னொருவர் முன்னிலையில் சாரி சொல்லும்போதுதான் அவன் நிஜமாகவே தன் வெட்கத்தை விட்டு நடந்ததை நினைத்து வருத்தப்படும் உணர்வு அவனுக்கு ஏற்படும், மனதும் லேசாகிவிடும். அதாவது இன்னொரு மனிதனை சாட்சியாக வைத்து மன்னிப்புக் கேட்பது effective.

      இன்னொன்று... கிறித்துவ மதத்தில் பாவ மன்னிப்பு கேட்கும் பாதிரியார், இறைவனின் பிரதினிதி. அவரிடம் முறையிடும்போது அவர், 'கடவுள் மன்னிப்பார்' என்று சொல்வதோடு அவனுக்கு ஆறுதலும் சொல்கிறார். இது ஒரு நல்ல கான்செப்ட் தான்.

      பொதுவா, 'காசு கொடு' என்ற வியாபாரம் நடக்கும் இடத்தில் (அதாவது, 'பாவ மன்னிப்பா', கொடு 1000 ரூ, அப்புறம் பாதிரியார் வருவார் என்பதுபோல் இருந்தால்-எனக்குத் தெரிந்து இல்லை), அது எந்த மதத்தில் இருந்தாலும், அங்கு நடப்பது 'புனிதமான மன்னிப்பு' கிடையாது, வியாபாரம். (இந்த வருடம், சாராய பிசினெசில் 2 லட்சம் லாபம் கிடைத்தான் உன் கோவிலுக்கு 20,000 கொடுக்கிறேன் என்பதெல்லாம் இதில்தான் சேர்த்தி).

      'ஆலயம் கட்டுவதிலும் பெரியது ஆங்கோர் ஏழைக்கு, அதுவும் படிப்புக்கு உதவுவது'

      நீக்கு
    3. நெல்லை வெரி பாஸிட்டிவ் கருத்து. எனக்கும் கன்ஃபெஷன் நல்ல கான்செப்ட் என்றே படும். கூடவே நான் ஒரு சில கன்ஃபெஷன்ஸ் - இது கிறித்தவ கத்தோலிக்க மதத்தில் இருக்கும் கான்செப்ட் - என் தோழிகள் சிலர் சொல்லியும் ஆசிரியர்கள் சொல்லியும் கேட்டுள்ளேன். இதில் சில எதிர்மறையாக நடந்ததும் உண்டு. இங்கு அதை வெளிப்படையாகப் பகிர வேண்டாமே என்பதால் பகிரவில்லை...என்னைப் பொறுத்தவரை நீங்கள் சொல்லியிருப்பது போல் மற்றொருவர் முன்னிலையில் சாரி சொல்லும் போதுதான் சாட்சியாக வைத்து மன்னிப்புக் கேட்பது என்பது மிகவும் பெரிய விஷயம்.

      /'ஆலயம் கட்டுவதிலும் பெரியது ஆங்கோர் ஏழைக்கு, அதுவும் படிப்புக்கு உதவுவது'// யெஸ் இதனை நான் அப்படியே டிட்டோ....நான் சிறு வயதிலிருந்தே இதை மனதில் இறுத்தியவள் தாங்க்ஸ் டு ஆசிரியராக இருந்து நல்லாசிரியர் விருது வாங்கிய எனது பெரிய மாமா!!

      நீக்கு
    4. //கன்ஃபெஷன் நல்ல விஷயம் ஆனால் அதிலும் சில கெட்டவை நடக்கிறது என்பதும் தெரியும்...//
      @கீதா அதேதான் சரியா பாயிண்டை பிடிச்சீங்க ..விவரமா எழுதினா எனக்கும் கல்லு நாலாதிசையில் இருந்தும் விழும் ஹாஹா அதை வேறொரு பதிவில் அலசி துவைச்சு காயப்போடுவோம் ..

      நம்ம நெல்லைத்தமிழன் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சி இப்படி விவரமா டாபிக்ஸ் போட்டார்னா அங்கேயும் கும்மி அடிச்சி கலக்கலாம் :)
      கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க நெல்லை தமிழன் ..

      நீக்கு
    5. @நெல்லைத்தமிழன் அதேதான் :) முந்தி சின்ன வயதில்மகளை திட்டிட்டு உடனே கட்டி பிடிச்சி மன்னிப்பு கேட்டுடுவேன்.. சில சந்தர்ப்பங்களும் சூழலும் அமையாத நேரத்தில் பட்சத்தில் கடவுளிடம் சொல்லி ஆறுதல் பட்டுக்கொள்ளலாம் ..மீடியேட்டர்ஸ் தொல்லை கொஞ்சம் அதிகமே ..இன்னும் அதிகமா எழுத ஆசை ஆனா கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெரிகிற தோணும் ..

      நீக்கு
  19. அப்புறம் ஜெஸி paws :) மை வைச்சாச்சு 6த் வாக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெசி !! paws!!!! மைவைச்சதுக்கு நன்றி அதிரா பூசாருடன் இனி அதகளம் தான்...! மிக்க மகிழ்ச்சி!!

      நீக்கு
  20. உண்மையில் மக்களுக்கான தொண்டு என்பது இம்மாதிரி கோடிக்காணக்கான பணமும் சொகுசு வாழ்க்கையும் இல்லை.இவர்களை வளர்த்து விடுவதும், நம்புவதும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும் யாரோ அவர்கள் தான் முதல் குற்றவாளிகள். ஆரமப் காலம் தொட்டு பிரேமானந்தா, நித்தியானந்தா என தமிழகத்திலும் கூட... ஒன்றுமே தெரியாத ஞான சூனியங்களை தூக்கி தலையில் தூக்கி வைத்தாடி கதவைத்திற காத்து வரட்டும் எனபது போலெல்லாம் பப்ளிசிட்டு கொடுத்து வளர்த்து விடும் மீடியாக்களையும் புறக்கணிக்கணும்.

    ரெண்டு கற்பழிப்புக்கு இருபது வருடம் தண்டனையா என கேட்கும் மனிதாபிமானிகளையெல்லாம் ஒட்டுப்போட்டு தெரிந்தெடுத்து ஆட்சியை கொடுத்தவர்களை வரிசையில் நிறுத்தி வைச்சு சுடணும். அப்புறம்சுட்டவனையெல்லாம் மன்னிக்காமல் எங்கேனும் சுனாமி வரும் வாய்ப்புள்ள கடல் நடுவில் இருக்கும் தீவில் கொண்டு போய் விடணும். இந்த சாமியார்களையும் அரசியல் வாதிகளையும் மட்டும் மன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னிச்சூஊஉ விட்டிரணும். பாவம்பா அவங்க ரெம்ப திட்டாதிங்க. மதம் எனும் பெயரில் மதம் பிடித்தலையும் எவனையும் நம்பக்கூடாது எனும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் நம்ம மக்கள் இருகிகும் போது நாம் என்ன பொங்கினாலும் சுண்டல் செய்தாலும் பயன் பூஜ்ஜியம் தான்.


    சரி சரி மன்ன்ன்ன்ன்ன்னீச்ச்ச்ச்ச்ச்ச்சூ விட்டிருங்க. வரிசைல நாலு லேடிஸ் வாங்க மன்னீச்சு விட்டிரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ நிஷா கடைசில மன்ன்ன்ன்ன்னீச்சூ பயமுறுத்துதே!!! ஹாஹாஹாஹா...மக்களைக் குற்றம் சொன்னாலும் அவர்கள் அறிவிலிகளாக இருக்கிறார்களே நிஷா அதான் இதற்குச்சட்டம் கடுமாயாக வேண்டும் இது போன்ற மடங்கள் எதுவும் தொடங்க அனுமதிக்கப்படக் கூடாது. எல்லாம் கணக்கில் வர வேண்டும். உங்கள் கருத்துகளையும் ஏற்கிறேன் நிஷா மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  21. /மக்களுக்கு அறிவு இல்லையேல், மக்களுக்காக என்று சொல்லப்படும் அரசுதான் சட்டங்களைக் கடுமையாக்கிக் கையிலெடுக்க வேண்டும்./ இக் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன். "கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனொடு நேர்" என்று வள்ளுவர் அன்றே சொல்லிவிட்டாரே. சிந்தனையைத் தூண்டிய பதிவு; பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கோவிந்தராஜு ஐயா அழகான ஐயனின் குறளை இங்குச் சொல்லியமைக்கும் மிக்க நன்றி ஐயா. மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  22. ஆன்மிகத்தைத் தவறான வகையில் கையில் எடுத்துக்கொண்டு இதுபோல் அலைபவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. மக்களிடம் விழிப்புணர்வு வந்தால்தான் இதுபோன்ற நிகழ்வினை ஒழிக்கமுடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஜம்புலிங்கம் ஐயா இப்படியானவர்கள் அதிகமாகின்றார்களதான். மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  23. மன்னிப்பு என்னும் வார்த்தைக்கு இம்மாதிரி அர்த்தமுண்டு என்று இப்போதுதான் தெரிகிறது அதை நீங்கள் இப்போதுபிரபலப் படுத்தி இருக்கிறீர்கள் சாமியார்கள் ஆசிரமம் ஆன்மீகம் என்று எல்லாம் பேசியே மக்கள் சுய புத்தி இல்லாமல் திண்டாடுகிறார்களிவை எல்லாமே மதங்கள் பற்றிய தெளிவு இல்லாததன் manifestation என்றே தோன்றுகிறது பலரதுபுரிதலும் செயல்களும் வேறு வேறாகத்தான் இருக்கிறது இந்த சாமியார் நல்லவர் இந்த சாமியார் கெட்டவர் என்று எப்போது தெரிகிறது அவர்களது குடுமி சும்மா ஆடுவதில்லை. எத்தனை செய்திகள் படித்திருந்தாலும் உரக்கச் சொன்னாலும் திருந்துபவர் எண்ணிக்கை மிகக் குறைவே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பிரபலப்படுத்தவில்லை சார். இது அந்த இரு பெண்கள் அளித்த சாட்சியில் சொல்லப்பட்டதாக பிரபல நாளிதழில் வந்திருந்ததைத்தான் சொல்லியிருக்கிறேன். எனக்குமே இது முதலில் தெரியவில்லை சார். என்னுடன் பேசியவர்கள் சொல்லியதிலிருந்துதான்...உங்கள் கருத்து சரியே. மிக்க நன்றி சார் கருத்திற்கு

      நீக்கு
  24. மக்களையும் சும்மா சொல்லக்கூடாது..

    இந்த மாதிரி பன்னாடைப் பயல்களிடம் அடிமையாய்க் கிடக்கிறேன் என்று சொல்வதில் பெருமைப்பட்டவர்கள்..
    நான் இந்தக் கட்சியின் தொண்டன்.. நான் இந்த நடிகை (!) யின் ரசிகன் என்பது மாதிரி..

    இந்தக் கழிசடைகளுக்கெல்லாம் வளர்ப்பு சரியில்லை.. அது மட்டும் சரியாக இருந்திருந்தால் இந்தத் தாடிக்காரனுக்கோ அந்தப் பெண்களுக்கோ இத்தனை சிறுமை ஏற்பட்டிருக்காது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இதையும் சேர்த்துக் கொள்ளலாம் துரை செல்வராஜு சகோ! அதனால்தான் இதில் அரசு கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று சொல்லியிருப்பது...

      மிக்க நன்றி சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  25. மக்களின் அறியாமையால் இது போன்ற சாமியார்கள் வருகிறார்கள்.
    மக்களை மாக்கள் ஆக்கி சாமியார்கள் வாழ்கிறார்கள் சுகபோக வாழ்வு.
    எல்லோருக்கும் தப்பு செய்தவன் தண்டனை அடைந்தே ஆகவேண்டும் என்பதை மறந்து விட்டார்கள்.
    உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்.
    கடவுள் நம்பிக்கை இருந்தால் இது போன்ற சாமியார்களிடம் மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.
    கேட்டது எல்லாம் கிடைக்கும் இந்த சாமியாரை கும்பிட்டால் , மனநிம்மதி கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்படுகிறது.
    மன்னித்தல் என்ற வார்த்தை கேவலபட்டு இருப்பது வருத்தமாய் இருக்கிறது.

    இது போன்றவர்களுக்கு இந்த
    தண்டனை போதாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறியாமைதான் கோமதிக்கா. ஆனால் அரசு சட்டங்களைக் கடுமையாக்கினால், தண்டனையையும் கடுமையாக்கினால் இப்படிப்பட்டச் சாமியார்கள் எழ மாட்டார்கள் இல்லையா....ஆம் அந்தச் சொல் கேவலபப்டுத்தப்பட்டுவிட்டதே என்றுதான் இந்தப் பதிவு...இந்தத் தண்டனை போதாது என்பதில் நானும் ஏற்றுக் கொள்கிறேன் அக்கா. மிக்க நன்றி கோமதிக்கா

      நீக்கு
  26. இதுவரை நீங்கள் இவ்வளவு சீற்றமாக எழுதி நான் பார்த்ததில்லை சகோ! சொந்த வாழ்க்கைப் பாதிப்புகளைப் பற்றி எழுதும்பொழுது கூட இரக்கத்தைத் தூண்டும் வகையில்தான் எழுதுவீர்கள். இந்த இராம் இரகீம் விவகாரத்தில்தான் முதன் முறையாக உங்கள் சீற்றத்தைப் பார்க்கிறேன். நன்று! வாழ்த்துக்கள்!

    ஆனால், இதற்கு நீங்கள் அளிக்கும் தீர்வு எந்த அளவுக்கு நடைமுறைக்கு உவப்பானது என்பது கேள்விக்குறிதான். மடம் அமைக்கவும் துறவி ஆகவும் தேர்வு வைக்க வேண்டும் என்பது கொஞ்சம் மிகையாகத் தெரிகிறது. அரசுக்கு வேறு இல்லையா? இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும்? கொஞ்சம் செலவுதான் ஆகும் என்பதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால் அந்தக் கொஞ்சம் பணமும் மக்கள் பணம்தானே? மக்களுக்குத் தேவையான விதயங்களுக்குத்தான் அரசுப் பணம் பயன்பட வேண்டும். நல்ல துறவிகளை உருவாக்குவது என்பது எந்தளவுக்கு மக்களுக்குத் தேவையானது எனும் கேள்வி எழுகிறது. இவையெல்லாம் அரசின் வேலைகள் அல்ல. மாறாக, நீங்களே கூறியிருப்பது போல மக்களுக்கு அறிவு வர வேண்டும். அதற்கான வேலைகளை அரசு செய்ய வேண்டும். தமிழ்நாட்டிலும்தான் புகழ் பெற்ற துறவியான சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டார். அதற்காக இங்கு யார் கலவரத்தில் ஈடுபட்டார்கள்? ஒரு சிறு குண்டூசி கூடக் குருதி பார்க்கவில்லையே! காரணம், இது பெரியார் மண்! அது மட்டுமில்லை, எந்தக் குறிப்பிட்ட மக்கள் சங்கராச்சாரியரைத் தங்கள் சமயத் தலைவராகக் கருதினார்களோ, அவர்கள் மிகவும் நாகரிக மனிதர்களாகவும் சட்டத்தை மதிக்கத் தெரிந்தவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள்தாம் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்!

    ஆக, பெரியார் போன்ற ஒருவர் வடநாட்டில் இல்லாததும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களைப் போல் நாகரிகமுள்ளவர்களாக வடநாட்டினர் இல்லாததும்தாம் நடந்த கலவரங்களுக்குக் காரணம். எனவே, நாடு முழுக்கப் பகுத்தறிவும் விழிப்புணர்வும் நாகரிகமும் ஊட்டும் கல்வி முறையைக் கொண்டு வந்தாலே எல்லா அட்டூழியங்களும் குறையும்.

    கடைசியாக ஒன்று சொல்லியிருந்தீர்கள், "மன்னிக்க முடியாத குற்றத்தைப் புரிந்து வந்த அந்தப் போலிக்கு 20 வருடம்தான் தண்டனை! ஹும் நல்ல நீதி!" என்று. இதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. இந்த வரியை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்! நாட்டின் சட்டம் தெரியாமல் எழுதியிருக்கிறீர்கள்! பாலியல் வன்கொடுமை போன்ற சிறிய குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு இதை விடப் பெரிதாக என்ன தண்டனையைத் தர வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? ஒருவேளை அவர் உலர் மின்கலம் (battery) வாங்குவது போன்ற மாபெரும் குற்றங்களைப் புரிந்திருந்தால் இறுதி மூச்சு உள்ள வரை சிறையிலேயே அடைத்து வைக்கலாம் - பேரறிவாளனைப் போல. அப்பேர்ப்பட்ட பெருங்கொடுமைகளையா அவர் செய்து விட்டார்? இனிமேலாவது சட்டம் தெரிந்து எழுதுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இபு சகோ....முதலில் நன்றி. எனக்கு வந்தக் கோபம், வருத்தம், ஆதங்கம் எல்லாம் அந்தப் புனிதமான சொல்லைக் கேவலப்படுத்திவிட்டனரே என்பதுதான் முதலில்....அப்புறம்தான் அந்தக் கிராதகன். ஏனென்றால் நம் நாட்டில் இவன் மட்டுமில்லை இன்னும் இருக்கிறார்களே...சிறைக்குச் சென்றும் மீண்டு வந்து....

      //ஆக, பெரியார் போன்ற ஒருவர் வடநாட்டில் இல்லாததும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களைப் போல் நாகரிகமுள்ளவர்களாக வடநாட்டினர் இல்லாததும்தாம் நடந்த கலவரங்களுக்குக் காரணம். எனவே, நாடு முழுக்கப் பகுத்தறிவும் விழிப்புணர்வும் நாகரிகமும் ஊட்டும் கல்வி முறையைக் கொண்டு வந்தாலே எல்லா அட்டூழியங்களும் குறையும்.// 100% ஏற்கிறேன்! இறை உணர்வை நான் பழி சொல்ல மாட்டேன். அதிலும் பகுத்தறிவு உண்டு. இறையுணர்வு என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அது எப்போது அடுத்தவரைப் பாதிக்கிறதோ அப்போது அது கண்டிப்பட வேண்டும். இதோ இதைப் போன்று மீறினால் தண்டிக்கபப்ட வேண்டும். சாதாரணமாக அல்ல...கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அந்தத் தண்டனை மேலும் இது போன்றோர் எழாத வண்ணம் இருக்க வேண்டும். பயம் வேண்டும். ஏனென்றால் அறிவிலிகள் வடக்கில் அதிகம்...அதுவும் குருட்டுத்தனமான மூட நம்பிக்கைகள் பொதுச் சொத்துக்களையும், அமைதியையும் சமூகத்தையும் கெடுக்கும் வன்முறைச் செயல்கள்! எனவே தான் சொன்னேன் சட்டம் கடுமையாக இருக்க வேண்டும்...எதற்கு இப்படியான மடங்களோ, சபைகளோ நிறுவப்படக் கூடாது என்பதில்..மக்களை அவ்வளவு எளிதாகத் திருத்திவிட முடியுமா அதுவும் இபப்டியான அறிவிலிகளை...அதான் சகோ சொன்னேன்..

      உங்களின் இறுதிப் பத்தி ஹாஹாஹாஹாஹாஹா நல்ல நையாண்டி!!! சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்...சகோ...

      மிக்க நன்றி விரிவான விளக்கமான நல்ல கருத்திற்கு...


      நீக்கு
  27. "மன்னிப்பு சித்தரான" இவரை கையெடுத்து கும்பிடுவதைவிட்டு கிராதகன் கொடும்பாவி என்று கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்களுக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா வாங்க கோ!கோ என்பவர் கருணை மிக்கவர்.. மன்னிப்பவர் மாமனிதர்.கோ என்ற பெயரை வைத்துக் கொண்டு ...மன்னிப்பே கிடையாதுனு மிரட்டறீங்களே இந்தச் சின்னப் புள்ளைய...ஹும்.....நல்லது சொன்னா காலமில்ல!! ஹாஹாஹாஹா...கோ நையாண்டியை ரசித்தோம்

      நீக்கு
  28. எத்தனை மன்னிப்புகள் கதைகள் பார்த்துவிட்டோம்.
    மன்னிப்பு மனிதத்தை வளர்க்கிறதா. அரக்கனை விடுவிக்கிறதா.
    இரண்டும் இல்லை.
    தானாகத் திருந்தாவிட்டால் யாருக்கும் பயனில்லை.
    ஏமாற்றுவது கயவர். ஏமாறுவர் அசடர்கள்.
    சுயபுத்தி இல்லாமல் நான் படுகுழியில் விழுவேன் என்று விழுந்தால்
    எழுப்ப இங்கே ஆளில்லை.
    கொலையும் செய்துவிட்டு நியாயமும் சொல்வான்.
    முழுவதும் கசப்பு தான்.
    விழித்துக் கொள்வோம். அருமையான உரையாடல் கொடுத்திருக்கிறீர்கள். கீதா.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா மிக்க நன்றி அம்மா விரிவான கருத்திற்கு. இங்கு மன்னிப்பு என்ற வார்த்தையையே அதன் புனிதத்தையே மாற்றிவிட்டார்க்ளே என்ற ஆதங்கத்தில் விளைந்த பதிவு..அம்மா...ஆம் சுயபுத்தி இல்லாமல் விழுகிறார்கள்...அறிவிலிகள். கசப்புதான்..விழித்துக் கொள்ள வேண்டும்...

      நீக்கு
  29. இவர்கள் ஆசிரமங்கள் சென்று எதை எக்ஸ்பெக்ட் செய்கிறார்கள்? மன நிம்மதியையா? இறை இல்லங்களை விடவா ஆஸ்ரமங்கள் உயர்ந்தவை? ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் இந்த இடங்களுக்குச் செல்கிறார்கள். சமீபத்தில் ஒரு சாமியார் விளக்குமாறால் பக்தர்களை அடிக்கும் காட்சி பார்த்தேன். அக்கிரமம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வான்மதி மதிவாணன்!மிகவும் சரியே! மிக்க நன்றி உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்...

      நீக்கு