செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

அமெரிக்காவில் சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் முழு சூரிய கிரகணம் அமெரிக்காவில் நிகழ்வதால், “த க்ரேட் அமெரிக்கன் கிரகணம்” என்று வரலாற்றுப் பதிவாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். 

நேற்று என் மகனுடன் பேசிய போது அவன் பேச்சில் துள்ளல், மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, ஆர்வம், உற்சாகம் என்று பல கலவையான உணர்வுகள். சிறு வயது முதல், இப்படி அவன் பேசும் நேரத்தில் ‘ம்மா, ம்மா, ம்மா’ என்று பேச்சின் இடையே நொடிக்கொரு முறை சொல்லுவது வழக்கம். இப்போது அதன் டோன் சற்று வேறு அவ்வளவே! இந்த ‘ம்மா ம்மா’ என்று அவன் பேசியதும் சிறு வயதில் அவன் உற்சாகமாக என்னுடன் பகிர்பவை எல்லாம் நினைவுக்கு வந்தது என்றாலும் அவை மற்றொரு பதிவில்.

நேற்றைய “ம்மா ம்மா”! எல்லாம் சூரியகிரகணத்தின் தாக்கம்!!! அமெரிக்காவில் மகன் இருக்கும் மாநிலமான ஆரெகனில் தான் சூரிய கிரகணத்தின் தொடக்கம் அப்படியே அமெரிக்காவின் குறுக்காகச் சென்று கிழக்கில் இருக்கும் ஸவுத் கரோலினாவில் 3 மணிக்கு முடிகிறது. ஒவ்வொரு இடத்திலும் நேரம் வித்தியாசப்படும்.

முழு கிரகணம் இரண்டு நிமிடம் என்றும் மொத்த நேரம் 2.30 மணி நேரம் என்றும் சொன்னான். 9.30 அளவில் தொடங்கி 12 அளவில் முடியும், அதாவது இவன் இருக்கும் மேற்குப் பகுதியில், 12 லிருந்து மூன்று மணி நேரம் கூட்டிக் கொண்டால் 3 மணிக்குக் கிழக்கில் இருக்கும் ஸவுத் கரோலினாவில் முடியும். இந்தக் கிரகணப் பாதையில் இருக்கும் இடங்களில் 50 கிமீ சுற்று வட்டாரத்தில் இருக்கும் இடங்களில் மட்டுமே முழு கிரகணம் தெரியும். வானம் மிகவும் தெளிவாக இருக்கும் என்றும் நன்றாகத் தெரிய வாய்ப்புண்டும் என்று சொல்லுவதாகச் சொன்னான். முழு கிரகணம் 10.16க்குத் தொடங்கி 2 நிமிடங்கள் நீடிக்கும் என்று கணித்திருப்பதாகச் சொன்னான்.

மகன் இருக்கும் கார்ன்வேலிஸிலும் முழு கிரகணம் தெரியும் என்றான். அதுவும் 50கிமீ சுற்றுவட்டாரம் மட்டும் தான் முழு கிரகணம் தெரியும். அதே போன்று கிரகணத்தின் பாதை தவிர பிற பகுதியில் எல்லாம் பகுதிதான் தெரியுமாம். இருந்தாலும் எல்லோருமே அதற்கான கண்ணாடி அணிந்துதான் பார்க்க வேண்டும் என்பதால் கல்லூரி கிளினிக்கில் அதற்கான கண்ணாடி எல்லாம் கொடுத்திருக்கிறார்களாம். கிரகணப் பாதையில் ஒவ்வொரு இடத்திலும் காலநிலை வித்தியாசப்படுமாம்.

கிரகணத்தின் போது புதன், வெள்ளி, செவ்வாய், மற்றும் ஜுபிட்டர் கோள்களைப் பார்க்க முடியும் என்றும் அதை எப்படி அடையாளம் காணலாம் என்றும் படங்கள் எல்லாம் கொடுத்திருக்கிறார்களாம். இதற்காகப் பக்கத்து ஊர்களில் இருந்து எல்லாம் இப்பகுதியில் அதாவது முழுமையாகத் தெரியும் பகுதியில் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் போக்குவரத்து முதல், கார் நிறுத்தும் இடம் எல்லாம் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டு, எல்லாம் ஒழுங்கு முறையாக நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறதாம். 

வழக்கமாக அவன் காலை 6.30 மணிக்குள் கிளம்பிவிடுவான். இன்று 8 மணிக்கு கிளினிக்கில் இருந்தால் போதும் என்றும் 12 மணி வரை எந்த நாலுகால் நோயளிகளும் வர மாட்டார்களாம். இந்தக் கிரகணத்தின் போது சூரிய ஒளி மங்கி மாலை மயங்கும் நேரம் போன்றும் முழு கிரகணத்தின் போது இரவு போன்றும் ஆகிவிடுவதால் அந்த நேரத்தில் விலங்குகளின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும் என்றும் சொன்னான். வீட்டில் வளர்க்கப்படும் செல்லங்களை விட இரவு நேரத்தில் சுறு சுறுப்பாக இருப்பவை, வந்த சூரியன் திடீரென்று எங்கு காணாமல் போனான் என்று குழம்புமாம். கிரகணத்தின் போது வழக்கமான வெயில் அளவிலிருந்து 10 டிகிரி குறையுமாம்.

அவர்களுக்குக் கல்லூரியில், கிளினிக்கில் எல்லாம் அரை மணி நேரம் அவர்கள் வகுப்பிலிருந்தும் ட்யூட்டியிலிருந்தும் வெளியில் வந்து பார்க்கலாம் என்றும் சொல்லியிருந்ததால் மகனும் மிகவும் ஆர்வமாக இருந்தான், எனக்குப் படம் அனுப்புவதாகவும் சொன்னான். இது அவன் அவனது இரவு நேரம் 11 மணிக்கு அதாவது நமது காலை நேரம் 11.30 க்குச் சொன்னவை. கிரகணத்திற்கு முன்.  இனி கிரகணத்திற்குப் பின்..

இதோ இப்போது முழு கிரகணத்தின் படம் அனுப்பியுள்ளான்.


கூடவே வாட்சப் மெசேஜும்…”ம்மா சூரியன் உலகிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணரமுடிந்தது. கிரகணம் தொடங்கியதுமே கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் டிகிரி குறையத் தொடங்கியது. முழு கிரகணத்தின் போது சடாரென்று செம குளு குளு என்று இருந்தது. இரண்டு நிமிடத்திற்கே இப்படி என்றால், சூரியன் ஒரு சில மணி நேரம் முழுவதும் மறைக்கப்பட்டு சூரிய ஒளியே உலகிற்கு இல்லை என்றால் பூமியே உறைந்துவிடும் இல்லையா. ‘ம்மா’ நல்ல அனுபவம் ‘ம்மா"

நமது காலை 11.30 மணி அளவில் அதாவது அவனது இரவு 11 மணி அளவில் - பெரும்பாலும் இந்த நேரம் தான் ரூமிற்கு வருகிறான் - பேசினால் ஏதேனும் சுவாரஸ்யமான தகவல் கிடைக்கும் என்பது உறுதி. 

-----கீதா

60 கருத்துகள்:

  1. இங்கு நான் இருக்கும் பகுதியில்
    தெரிய வாய்ப்பில்லையென்றாலும்
    எல்லோரிடமும் ஆர்வமும் அதே பேச்சாகவும்
    இருந்தது சுவாரஸ்யமாக இருந்தது
    படத்துடன் பகிர்ந்த விதம் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ரமணி சகோ அங்கு இதே பேச்சுத்தான் என்று அறிய முடிந்தது. கொஞ்சம் கூடுதலாகவே ஹைப் கொடுப்பதாகவும் பட்டது. மிக்க நன்றி சகோ கருத்திற்கு

      நீக்கு
  2. மேலும் சுவாரஸ்யமின தகவல்கள் வரட்டும் ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைக்கும் என்று நம்புகிறேன்...பார்ப்போம்...குறிப்பாக விலங்குகள் குறித்து...மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு

      நீக்கு
  3. ஆங் ஆதிக்கு சொல்லுங்க
    இங் கன யும் செல கிறுக்கு(சாரி) கிரக
    ணங் கள் சேர்ந்து வந்து ருக்காம். 😥

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி சரி!! நீங்க சொல்லுறது எனக்குப் புரியறதே கஷ்டம்...ஹாஹாஹாஹா அவனுக்குப் புரியவே புரியாதே சிவம் ஹிஹிஹிஹி...

      மிக்க நன்றி அன்பே சிவம்...

      நீக்கு
  4. ஒரு படத்தை வைத்து ஒரு பதிவு தேத்தி விட்டீர்களே... எங்கள் வாட்ஸாப் க்ரூப்பிலும் நிறைய படங்கள் வந்துள்ளன. வல்லிம்மா கூட ஃபேஸ்புக்கில் படம் பகிர்ந்திருந்தார். ஓகே... தம போட்டாச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா...ஆமாம் ஒன்னு தேறிச்சேனு சந்தோஷம்..ஸ்ரீராம். இப்பலாம் கொஞ்சம் புதுசா எழுத....யோசனைகள்... நேத்து காலைல பையன் ரொம்ப உற்சாகத்துல பேசினதும் அதைப் பதிவா எழுத நினைச்சு கிரகணத்தின் முன் அமெரிக்காவில் எப்படி எல்லாம் விளம்பரம் இதனை வைத்து என்று நினைத்து ராத்திரி எழுத நெட் போயிருச்சு. அப்புறம் ராத்திரி மகன் படம் அனுப்பினதும், இதை மட்டுமேனும் போட்டு பதிவ அவன் மெஸேஜோடு கொடுத்து முடித்து டைம் செட் பண்ணிட்டு படுத்துட்டேன்..ஏன்னா உடனே பப்ளிஷ் ஆகலை நெட் இருந்தும்....அதனால... இன்னும் இருக்காம் பையன் ஒன்னே ஒன்னு அனுப்பிட்டுப் பேசாம இருந்துட்டான்...ஹாஹாஹா...

      மிக்க நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  5. மேலும் பல சுவாரசியமானத் தகவல்களுக்காகக் காத்திருக்கிறேன் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைக்க வேண்டும் கிடைத்தால் நிச்சயமாகப் பகிர்வேன் கரந்தை சகோ. மிக்க நன்றி

      நீக்கு
  6. >>> இரண்டு நிமிடத்திற்கே இப்படி என்றால், சூரியன் ஒரு சில மணி நேரம் முழுவதும் மறைக்கப்பட்டு சூரிய ஒளியே உலகிற்கு இல்லை என்றால் பூமியே உறைந்துவிடும் இல்லையா..<<<

    ஞாயிறு போற்றுதும் .. ஞாயிறு போற்றுதும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் துரை செல்வராஜு சகோ!! ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்! அதனால்தானே சூரியக் கடவுள் என்று சொல்லுகிறோம் அவரை வணங்குவதும்....அவர் அதிகமானாலும் சரி குறைந்தாலும் சரி வாழ்வாதாரமே கடினம்தான்!இல்லையா. மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  7. பகிர்வுக்கு நன்றி. நமக்கும் கிரஹணங்கள் ஏற்படும்போது பூமி குளிர்வதை உணரலாம். சூரிய கிரஹணங்கள் ஏற்படுகையில் திடீரென இருட்டுவதையும், சீதோஷ்ணம் மாறுவதையும் பறவைகள் தவிப்பதையும் பார்க்க முடியும். 1980 ஆம் ஆண்டில் இப்படி ஒரு முழு சூரிய கிரஹணம் வந்தது. மதியம் பிடித்தது என நினைக்கிறேன். பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவித்து விட்டார்கள். அந்த கிரஹ்ணத்தையும் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்றும் அதற்கென விற்கும் கண்ணாடி அணிந்து தான் பார்கக்ணும் என்றும் சொல்லி இருந்தார்கள். பெண்கள், ஆண்கள் எவராக இருந்தாலும் வைரம் அணியக் கூடாது எனவும் சொல்லி இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அக்கா! மகனுக்கு இதுதான் நினைவு தெரிந்து முதல் முறை அவன் காண்பது எனவே ஒரு எக்சைட்மென்ட். அவன் என்னைப் போல!!ஹிஹிஹி கொஞ்சம் எல்லாத்தையும் ரொமபவே ரசித்தல் அதைப் பற்றிப் பேசுதல் என்று...

      ஆம் அக்கா 1980 அந்த நூற்றாண்டிலேயே நம் இந்தியாவில் தான் முழு கிரகணம் பாதை முழுவதுமே இந்தியாவில்தான் நிகழ்ந்ததால்... ஃபெப்ருவரி மாதம் என்று நினைவு. அந்த கிரகணம் ரொமப்வே ஸ்பெஷல் இந்தியாவிற்கு. இப்போதைய கிரகணம் ரொம்பவும் ஸ்பெஷன் என்று அமெரிக்காவில் எப்படிச் சொல்லப்படுகிறதோ அப்படி அப்போது.தேதி நினைவில்லை. அப்போது கல்லூரி முதல் வருடம். லீவு கொடுத்திருந்தார்கள். அப்போது வட இந்தியாவில்தான் நன்றாகப் பார்க்க முடியும் என்றும் சொல்லப்பட்டது. நாங்கள் வாளியில் தண்ணீர் வைத்து அதில் பார்க்க முனைந்தோம். அப்புறம் மாவு இடிக்கும் நீளமான மர உலக்கையைத் தண்ணீரில் வைத்து நிற்கிறதா என்று பார்த்தோம்....நாங்கள் சரியாக
      சரியான நேரத்தில் வைக்கவில்லையோ தெரியவில்லை நின்றதாக நினைவிலும் இல்லை..

      அதன் பின் 1995 தீபாவளி சமயத்திலும் வந்தது இல்லையா....அப்போது மகனுக்கு 6 வயதைத் தொடும் சமயம். அவனுக்கு நினைவில்லை. இந்தக் கிரகணத்தின் பாதை பல நாடுகளைக் கடந்தது என்ற நினைவு...அதன் பின்னும் வந்தது ஆனால் முழுமையாக நாட்டிற்குள் நிகழவில்லை...இல்லையோ?!!

      ஆமாம் கண்ணாடி அணிந்துதான் பார்க்கணும் என்று சொல்லியிருந்தார்கள். கர்ப்பிணிப்பெண்கள் வெளியில் வரக் கூடாது என்று சொன்னதும் நினைவு...பறவைகள் நிறைய பறந்த நினைவு....அதாவது மாலை வந்துவிட்டது என்று கூட்டிற்குச் சென்றது நினைவு. குறிப்பாகக் காக்கைகள், புறாக்கள், மற்றும் எங்கள் ஊரில் நாரைகள் கொக்குகள் அதிகம் அதுவும் பறந்த நினைவு...

      மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்கு

      நீக்கு
  8. மேல் அதிகத் தகவல்களுக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா என் பையன் ஏதாவது சுவாரஸ்யமாகச் சொல்லுகிறானா என்று எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் இங்கும் நிகழ்வதுண்டுதான் ஆனால் நாம் அமெரிக்கர்களைப் போஅல் ஹைப் கொடுத்து விளம்பரம் எல்லாம் செய்ய மாட்டோமே!!!

      நீக்கு
  9. அருமையான படம். பாசத்தின் வெளிப்பாட்டையும் சொல்லிய விதம் அருமை.
    உயிர்கள் வாழ சூரியன் அவசியம். ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா....ஆமாம் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்...

      நீக்கு
  10. ஸ்வாரஸ்யம். என்னுடைய நண்பர்கள் சிலரும் இதைப் பற்றி FB CHAT மூலம் தங்களது உற்சாகத்தினை பகிர்ந்து கொண்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ!! ஆம் பலரும் உற்சாகத்துடன் இதனைப் பார்த்தார்கள் என்றுதான் தெரிகிறது...நீங்களும் ஸ்வாரஸ்யமான தகவல்கள் கிடைத்தால் பகிரலாம் வெங்கட்ஜி! மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  11. என்னது சூரியக் கிரகணமா அமெரிக்காவிலா அட அட எனக்கு தெரியாமல் போயிடுச்சே இதற்குதான் இந்திய செய்திகளையும் டிவியையும் மட்டுமே பார்த்து கொண்டு இருக்க கூடாதுங்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹா....வாங்க மதுரை!!! அதானே!!!

      உங்க ஊர்லதான் தெரிஞ்சுருக்காதே!!! வெயிலில் வித்தியாசம் தெரிந்ததா இல்லை தட்பவெப்ப நிலையில்? உங்க பகுதிக்குக் கீ.........ழ தானே அதன் பாதை...அதான்..

      மிக்க நன்றி மதுரை சகோ..

      நீக்கு
  12. மிக விபரமாக சொல்லிச் சென்ற விதம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றிமதுரை சகோ! இங்க ஊர்லதான் இதைப் பத்திப் பக்கம் பக்கமா வந்துட்டே இருக்குமே!!

      நீக்கு
  13. சூரிய கிரகணம் இப்போது Talk of the town அல்ல Talk of the world என்றாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா டாக் ஆஃப் தெ வேர்ல்ட் ஆகிவிட்டது...மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  14. முழு சூரிய கிரஹணம் வீடியோ வாட்சப்பில் வந்திருந்தது பார்த்தேன். உங்கள் பதிவும் அந்த எக்சைட்மைன்டை வெளிக்கொணர்ந்திருந்தது. த ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜமாகவே மகன் பேசும் போது எனக்கும் பார்க்க வேண்டும் போலத்தான் இருந்தது...நானும் எக்சைட்டடாகத்தான் இருந்தேன். வாட்சப்பில் பார்த்துவிட்டேன் நெல்லை. மிக மிக அழகாக இருந்தது. மிக்க நன்றி நெல்லை... கருத்திற்கு

      நீக்கு
  15. பதில்கள்
    1. ஆமாம் டிடி ரொம்பவே உற்சாகமாக இருந்ததுதான்

      மிக்க நன்றி டிடி

      நீக்கு
  16. தண்ணி, அரிசி, பால்ல தர்ப்பை புல்லை போட்டு வச்சீங்களா!? கிரகணம் முடிஞ்சபின் வீடு வாசல் கழுவி விட்டீங்களா?! நீங்க குளிச்சுட்டுதானே சாப்பிட்டீங்க?! கோவில்ல விசேச அர்ச்சனை, அபிசேகம்லாம் செஞ்சீங்களா?! இதுலாம் கிரகணத்தின்போது நம்மூர்ல செய்வாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒரு இயற்கை நிகழ்வு ,இதுக்காக நம்மூரில் செய்வாங்க என்று நீங்கள் கூறுவதெல்லாம் கட்டுக் கதை :)

      நீக்கு
    2. ஆமாம் ராஜி ஆனா இங்கதான் கிரகணம் இல்லையே!!! மிக்க நன்றி ராஜி!!

      நீக்கு
  17. ஒரு படத்தை வைத்து விளக்கமாய் சொல்லிச் சென்ற பகிர்வு அருமை...
    இன்னும் விஷயங்களைப் பெற்று விலாவாரியாக எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார்! மகனைப் பிடிக்க முடியலை மேலதிகத் தகவல் கிடைக்குமா என்று அறிந்திட. கிடைத்தால் பகிர்கிறேன்...

      நீக்கு
  18. அட ..நானும் சுவாரஸ்யமா இந்த செய்திகளை தான் நேற்று பார்த்தேன் ...

    நாசா வோட நேரலையை பார்க்கணும் ஆசை..ஆனால் இரவு முழித்து பார்க்கும் பொறுமை இல்லை..

    இங்க உங்களோட படமும்...தகவலும் அருமை அக்கா...

    இந்த மாதரி இங்கும் பார்க்கவேணும் ஆசை வருது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அனு எனக்கும் பார்க்க ஆசையாக இருந்தது நாசாவின் நேரலையை ஆனால் தூக்கம் கண்ணைக் கட்டியதால் மகனிடம் இருந்து வந்த செய்தியை போட்டுவிட்டுத் தூங்கிட்டேன்...

      மிக்க நன்றி அனு!!!

      நீக்கு
  19. Very informative and interesting article. My daughter who is in Dallas too shared her experience.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோவிந்தராஜு ஐயா மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு... உங்கள் மகளின் அனுபவத்தைப் பதிவாக்குங்கள் ஐயா! அதுவும் நீங்கள் மிகவும் ஸ்வாரஸ்யமாகத் தருவீர்களே!!

      நீக்கு
  20. வருஷத்துல பல நாட்கள் சூரிய பகவானை காணாமல் தவிக்கும் வேறு நாடுகளும் உலகில் உள்ளனவே.

    நல்ல பதிவு, தாய் மகனுக்குள்ள பாச மழை ம்ம்மாஆ....

    விஷயம் தெரியுமில்ல... இது எதிர்க்கட்ச்சிகளின் சதி வேலைதானோனு ஆராய்ச்சி நடக்குதாமே?

    நலம்தானே.?

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் நலம் கோ! நீங்களும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறோம். பதிவுகளைக் காணவில்லையே என்று நினைத்தோம்...சரி பயணம் போலும் என்று நினைத்தால் பயணம் தான் என்று உங்கள் பதிவு சொல்லுகிறது...

      ஆமாம் கோ! அதுவும் வட ரஷ்யா எல்லாம் வட துருவத்தின் அருகில் இருப்பதால் பெரும்பான்மையான மாதங்களில் டல்லாகத்தான் இருக்கும் விட்டமின் டி குறைவு ஏற்பட்ட்டு சிலருக்கு மனத்தளர்ச்சி கூட ஏற்பட வாய்ப்புண்டு என்று அறிவியல் சொல்லுகிறது....அதை நாம் நேரில் சென்றால்தானே பார்க்க முடியும் உணர முடியும் ஆனால் அதை இந்த 2 நிமிடங்களில் அறிய முடிந்தது என்றான் மகன்...

      ஹஹஹ எதிர்க்கட்சியின் சதி வேலை ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்...

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  21. நீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் பழைய பதிவுகள் அனைத்தும் படிக்க இன்று நேரம் அமைந்தது. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜோதிஜி! மிக்க நன்றி தாங்கள் பழைய பதிவுகளையும் வாசித்தமைக்கு! அதுவும் பணிச் சுமையின் இடையில்...

      நீக்கு
  22. கீதா, துளசி அண்ணன் நலம்தானே?.. நலம் நலமறிய ஆவல்ல்ல்...

    வந்த வேகத்தில், மேலே என் கடமையைச் செய்திட்டேன்:).

    மகனால ம்மாவும் குளுகுளுப்பாகி இருப்பது தெரியுது... எப்பவும் நாம் யாரோடு அதிகம் உரையாடுகிறோமோ அவர்களின்.. சந்தோசம் அல்லது துக்கம் அல்லது கோபம் .. ஏதோ ஒன்று அந்த நேரத்து மனநிலை நம்மையும் தொற்றிக்கொண்டுவிடும் என்பது முற்றிலும் உண்மையே.

    கிரகணப் படம் அயகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம் நலம் அதிரா !!! வாங்க!!! வாங்க!!! நீங்களும் நலம் தானே!! பூஸார் இல்லாமல் ...அதுவும் அதிரா நீங்கள் ஸ்ரீராமின் பூஸார் பதிவு பார்த்தீங்களா...இல்லைனா பாருங்க ரொம்ப க்யூட்டா படங்கள்...செமையா இருக்கு...அப்படியே எங்கள் கமென்டுகளையும் பாருங்கள்...ஹிஹிஹிஹீஹி...

      ஆமாம் அதிரா மனதிற்கு நெருக்கமானவர்களுடன் உரையாடும் போது அவர்களின் உணர்வுகளும் நம்மைத் தொற்றிக் கொண்டுவிடும்...உண்மை...மிக்க நன்றி அதிரா...இன்னும் பதிவுகள் போடத் தொடங்கவில்லை போல...ஆமாம் வந்துவிட்டு பணிகள் இருக்கும்...

      நீக்கு
    2. பூனைப்பதிவு பார்த்தனே ஹா ஹா ஹா ச்ச்ச்சோ சுவீட்.

      போஸ்ட் இன்னும் போடவில்லை. நான் எப்பவும் எல்லோர் வீட்டுக்கும் போய் ரீ குடித்த பின்பே போஸ்ட் போடுவது வழக்கம்... எங்கும் போகாமல் என்னிடம் வாங்கோ என அழைப்பது ஒரு மாதிரி இருக்கும்.. அதனால வெயிட் பண்ணுறேன். இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு இடமாக போய் நலம் விசாரித்து வருகிறேன்:).. நன்றி.

      நீக்கு
    3. நான் எப்பவும் எல்லோர் வீட்டுக்கும் போய் ரீ குடித்த பின்பே போஸ்ட் போடுவது வழக்கம்... எங்கும் போகாமல் என்னிடம் வாங்கோ என அழைப்பது ஒரு மாதிரி இருக்கும்.. // யெஸ் யெஸ் அதிரா மீ டூ!! கை கொடுங்க ஹைஃபைவ்!!!! நானும் அப்படித்தான் ...கொஞ்ச நாள் வராமல் இருந்தால் முதலில் எல்லோர் வீட்டுக்கும் போய் வந்தாச்சுனு சொல்லிட்டு அவங்க பதிவுகள் எலலம் பார்த்துட்டு நல்லாருக்கீங்களானு கேட்டுட்டு அப்புறம்தான் போஸ்ட் போடுவது வழக்கம்....போகாமல் நம்ம வீட்டுக்கு வாங்கனு சொல்லறது யெஸ் அப்படியே உங்கள் கருத்தே எனக்கும்...

      னெட் ப்ராப்ளம் இங்கு இருப்பதால் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கேன் கமென்ட் போட்டு உங்கள் கமென்ட்ஸ் பார்த்து உங்களை வம்புக்கு இழுப்பது எல்லாம் தொடங்கணும் ஹிஹிஹிஹீ...

      நீக்கு
  23. நானும் நல்லா பார்த்தேன் சூரிய கிரகணத்தின் போது
    ஆனால் கண்ணு கூசினதால பாக்கல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அஜய்!! இங்க தெரியலையே!! அமெரிக்காவுலதானே கிரகணம்..

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  24. அருமையான ஆய்வு

    நகைச்சுவை எண்ணங்கள் சில...
    http://www.ypvnpubs.com/2017/08/blog-post_22.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன்! கருத்திற்கு

      பார்க்கிறேன் உங்கள் பகிர்வை..

      நீக்கு
  25. அழகான உற்சாகப்பகிர்வு! இரு தடவை நானும் சூரியகிரணம் நம் நாட்டிலும் , கேரளாவிலும் பார்த்து இருக்கின்றேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தனிமரம் நேசன்! ஓ பார்த்திருக்கிங்களா...முழு கிரகணம்?

      மிக்க நன்றி நேசன் கருத்திற்கு

      நீக்கு
  26. என்ன ஒரு உற்சாகம் . ஆமாம் அப்படித்தான் அன்று உணர்ந்தோம். இந்த அமெரிக்கர்களுக்கு எல்லாமே க்ரேட் தான். நம் ஊரில் கிரஹண ஸ்னானம், சூரியனைப் பார்க்காதே
    எல்லாம். சொல்வோம். இங்கேயும் பார்க்க முடிந்தது.
    ஆனால் முடிவில் மேகம் வந்துவிட்டது. தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்தோம்.
    as they say it was AWESOME. Geetha maa.

    பதிலளிநீக்கு
  27. ஆம் சூரியன் உங்கள் மகன் சொல்வது போல் ரொம்ப முக்கியம் இல்லாட்டி நம்ப ஊர் நாறிடும் , தவிர நமக்கு வேணுங்கிற வைட்டமின் டி கிடைக்குது. Pictures are good .

    பதிலளிநீக்கு