வியாழன், 13 ஏப்ரல், 2017

அடையாளம் - 4

முதல் மூன்று பகுதிகளின் இணைப்புகள்


“ஐ ஆம் ஸாரி கார்த்தி, யு ஆர் நாட் பார்ட் ஆஃப் மை லைஃப் எனிமோர்”
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கார்த்தி சற்று ஆடிப் போனான். புரியவில்லை.

“என்ன சொல்லற சம்யுக்த்? சீரியஸ்லி?”

மறு முனையில் விசும்பும் சத்தம் கேட்டது. ஓ! சீரியஸ் தான். ஏன் இப்படி ஒரு முடிவு? கார்த்திக்குப் புரியவில்லை. சம்யுக்தா அழுது கொண்டே

“நீ இப்போ வேற லெவல். ஐ ஆம் அட் லோ லெவல்” என்றாள்

“ஹேய் டோன்ட் பி சில்லி. என்ன வேற லெவல் அது இதுனுட்டு? நான் அதே கார்த்திதான். உனக்குக் கிடைக்கலனு எனக்கும் ரொம்ப வருத்தம்தான். ஆனா அதுக்கும், என்னை வேண்டாம்னு சொல்லறதுக்கும் என்ன தொடர்புனு புரியலை சம்யுக்த்”

“நாம பழகத் தொடங்கும் போது ரெண்டுபேரும் ஒரே லெவல். ஆனா, யு ஹேவ் காண் அப். நான் சந்தோஷமா இல்லை ஏன்னா எனக்குக் கிடைக்கலை. என்னைப் பொருத்தவரை இது வொர்கவுட் ஆகாது.”

“லுக் சம்யுக்த்! உனக்கு அடுத்த வருஷம் கிடைக்கும். நம்மள்ல யாராவது ஒருத்தர் முதல்ல செட்டில் ஆகி சம்பாதிக்கத் தொடங்கினா அடுத்தவருக்கு சப்போர்ட்டிவா இருக்கலாம், வாழ்க்கையைத் தொடங்கலாம் இல்லையா? உனக்குக் கிடைச்சுருந்தாலும் நான் இப்படித்தான் பேசியிருப்பேன்.”

“ட்ரை டு அண்டர்ஸ்டான்ட் மீ. உன்னோடு என்னால சேர்ந்து வாழ முடியாது”

“என்னவோ இப்பவே லைஃப் முடிஞ்ச மாதிரி பேசற? உன் முடிவு எனக்குப் புரியவே இல்ல சம்யுக்த். நீ எனக்குக் கிடைச்சுருக்கறத நினைச்சு ஹேப்பினுதானே சொன்ன. ஆனா, நீ பேசறத பார்த்தா இது….இது……. பட், சம்யுக்த்… என்னால உன்னை அப்படி நினைச்சுப் பாக்க முடியல”

“டு யு திங்க் ஆம் ஐ ஜெலஸ்? எப்படி நீ சொல்லுவ? ஐ ஹேவ் லாஸ்ட் மை லைஃப்…..நான் எல்லாத்தையும் இழந்துட்டேன்…டோட்டல் ஃபெயிலுவர்.” என்று அழத் தொடங்கினாள்.

“சம்யுக்த் லிஸன். ஐ டின்ட் மீன் இட்…. கேளு…..சம்…..” சம்யுக்தா தொடர்பைத் துண்டித்தாள். கார்த்தி “உஃப்” என்று பெருமூச்சுவிட்டான். 10 நிமிடங்கள் அப்படியே அமர்ந்தான். இது தன்னுடனான போட்டியா? எதற்குப் போட்டி? அதுவும் தன்னுடன்? இதைப் பொறாமை என்பதா? இல்லை அவளை அப்படி நினைக்க முடியவில்லையே.  ஏன் இப்படி ஒரு தாழ்வுமனப்பான்மை? யோசித்தான். அவளுடன் நிறைய பேச வேண்டும். இன்னும் தன் பெற்றோரிடம் இதைப் பற்றி பேசவில்லை. கொஞ்சம் போகட்டும். பேச வேண்டும். அம்மாவிடம் பேசினால் தெளிவாகும். ஆலோசனைகளும் தருவார். என்று நினைத்துக் கொண்டான்.

மனதிற்குக் கஷ்டமாக இருந்தாலும், அவள் மனது கொஞ்சம் அமைதியாகி, சமாதானம் அடையட்டும் என்று பொறுமையாக இருந்தான். இரு நாட்கள் கழித்து அவளை அழைத்தான். அவளது தந்தை முதலில் எடுத்து விசாரித்து விட்டு சம்யுக்தாவிடம் கொடுத்தார்.

“எப்படி இருக்க சம்யுக்த்?”

“ஐ ஆம் நாட் ஹேப்பி. என் முடிவுல மாற்றம் இல்லை. உங்கம்மாகிட்ட என் முடிவைப் பத்தி விளக்கமா சொல்லியாச்சு”

“ஓ ஐ சீ! வொய் திஸ் காம்ப்ளெக்ஸ்? சத்தியமா எனக்குப் புரியல சம்யுக்த்”

“திஸ் இஸ் நாட் காம்ப்ளெக்ஸ். உனக்குப் புரியாது, பிகாஸ் யு ஆர் எ மேன்”

“நான் அப்படி உன்னை தாழ்வா ட்ரீட் பண்ணிருக்கேனா? கொஞ்சம் மனச அமைதியாக்கிட்டு, கிடைக்காததுக்கு என்ன காரணம் இருக்கலாம்னு யோசி…”

“ஐ ஹேட் தட் சிஸ்டம். ஐ ஹேட் யு, யு ஆர் ஆல்ஸொ ஒன் அமங்க் தெம்” கார்த்திக்கு ஷாக். இது என்ன கற்பனை?

“ஹேய் என்ன சம்யுக்த் இப்படி எல்லாம் பேசற? நான் எப்படிக் காரணமாக முடியும்?”

கல்லூரியில் இருந்த போது கார்த்தி, எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்ற அந்த ஸிஸ்டத்தை அறிய ப்ரோக்ராம் கோஆர்டினேட்டர், பேராசிரியர்கள் எல்லோரிடமும் பேசித் தெரிந்து கொண்டான். டீம் வொர்க், அட்டிட்யூட் முக்கியம் என்றார்கள். அந்தக் கோஆர்டினேட்டர் ஸ்டேட்மென்ட் ஆஃப் பர்ப்பஸ், பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல அதன் படி கார்த்தி தயார் செய்து அதை சம்யுக்தாவிடமும் காட்டி அவளையும் தயார்படுத்த உதவுவதாகச் சொன்னான்.

“சம்யுக்தா அவங்க ஸிஸ்டம் எதிர்பார்க்கற ஸ்டேட்மென்ட் ஆஃப் பர்ப்பஸ், பயோடேட்டா எப்படி எழுதிருக்கோம்ன்றது முதல் இம்ப்ரெஷன் நம்மள கன்சிடர் பண்ண ஒரு க்ரைட்டீரியா. உனக்கு எல்லாத்துக்கும் ஹெல்ப் பண்றேனுதானே சொன்னேன்? நீ தானே ‘எனக்கு யாருடைய ஹெல்பும் தேவை இல்லை. என் உழைப்புலதான் நான் செலக்ட் ஆகணும்னு சொன்ன.”

“யெஸ். நான் எப்படியான ஹார்ட்வொர்க்கர்னு உனக்கே தெரியும். என் அக்கடெமிக்ஸ்ல குறையா? இல்லை எனக்கு லைசன்ஸ் கிடைக்கலையா? இல்லை நான் எதுல குறைஞ்சேன்? ஏன் என்னை செலக்ட் பண்ணலை? ஆம் ஐ நாட் எ குட் கேண்டிடேட் வொர்த் ஃபார் த ட்ரெய்னிங்க்? ஸோ நான் நல்லா எழுதிருக்க மாட்டேன்னு சொல்ல வரியா?”

“லுக் சம்யுக்த். நீயும் உழைப்பாளிதான். தகுதியானவள்தான். தப்பா எடுத்துக்காத சம்யுக்த். வாழ்க்கைல எல்லாருக்குமே தோல்விகள் வரும். நான் இதுவரை தோல்விகள மட்டுமே சந்திச்சவன். என் மனசு அதுக்குப் பண்பட்டுருச்சு. ஒவ்வொரு முறை தோல்வி வரும் போதும், என் பேரன்ட்ஸ் டேக் இட் ஈஸினு சொல்லி யாரையும் ப்ளேம் பண்ணாம அதுக்கு என் சைட்ல என்ன காரணம்னு லிஸ்ட் போடச் சொல்லுவாங்க. அப்படி நான் கத்துக்கிட்டு அதை சரி பண்ண ட்ரை பண்ணுவேன். ஸோ நீயும் என்ன காரணம் இருக்கலாம்னு யோசி…”

“ஸோ நான் தான் காரணம். நான் தகுதியானவள் இல்லைன்ற?”

“ஓ மை காட்! இங்க பாரு, நான் அவங்க ஸிஸ்டம புரிஞ்சுக்க முயற்சி செஞ்சு, செலக்ட் ஆறதுக்கு என்ன க்ரைட்டீரியானு தெரிஞ்சுக்கிட்டுப் புரிஞ்சுக்கிட்டதுனால, உனக்கும் நான் நிறைய சொன்னேன். அவங்க சிஸ்டம்ல அவங்க எதிர்பார்க்கறதுக்கு ஏத்த மாதிரி நாம நம்ம கொஞ்சம் ட்யூன் பண்ணிக்கணும்னு நான் சொன்னத கொஞ்சம் நினைவு படுத்திப் பாரு.”

“என் வொர்க்க பாக்கமாட்டாங்க? என் திறமைய பார்க்க மாட்டாங்க… ஆனா நான் எப்படிப் பழகறேன்னு பார்ப்பாங்க. யார்கிட்டயும் பழகல….மூடி டைப்…..இதுதான் காரணம்? நான் நடிக்கணும் இல்ல? ஸாரி என்னால என்ன மாத்திக்க முடியாது.”

“இதுக்குப் பேர் நடிப்பு இல்ல சம்யுக்த்.  எந்தத் தொழிலுக்குமே டீம் ஸ்பிரிட் முக்கியம்.  நாம எப்படி எல்லார்ட்டயும் மூவ் பண்ணறோம். டிஸ்கஸ் பண்ணறோம், பேசறோம் இதெல்லாம் முக்கியம்….நம்ம கூட இருக்கறவங்க கிட்ட க்ளினிக் வேலை தவிரித்து, பார்க்கும் போது ‘ஹாய்’ நு சொல்லி, காஷுவலா பேசறதுல தப்பு இல்லையே. அது நல்ல ஃப்ரென்ட்ஷிப்பும், புரிதலும் தானே டெவலப் பண்ணும். நம்ம தொழிலுக்கு அது ரொம்ப  முக்கியம். கொஞ்சம் யோசிச்சுப் பாரு…”

“ஸோ நீ நல்லா நடிச்ச. எல்லார்கிட்டயும் சிரிச்சு சிரிச்சுப் பேசின….அதான் உன்னை ரேங்க் பண்ணிருக்காங்க. உனக்குக் கிடைச்சுருக்கு. என்னால நடிக்க முடியாது… நீ எங்கேயோ போய்ட்ட.  ஸாரி! கார்த்தி. நாம ரெண்டு பேரும் இனி சேர முடியாது! ஐ வில் லூஸ் மை ஐடென்டிட்டி. ஐ வான்ட் டு லிவ் வித் மை ஓண் ஐடென்டிட்டி. எனக்கு என்னுடைய அடையாளத்துல வாழணும். ஒரு ஆணோட அடையாளத்துல என்னால வாழ முடியாது. உங்க அம்மாகிட்டயும் சொல்லிட்டேன். கார்த்திக்கு வேற பொண்ணு பார்த்துக்கங்கனு. ஆனா நீங்க எல்லாரும் ஒன்னு மட்டும் குறிச்சுக்கங்க. என்ன மாதிரி ஒரு நேர்மையான, உண்மையான, டெடிக்கேட்டட் பொண்ணு உங்களுக்குக் கிடைக்க மாட்டா”

“ஹாஹஹ்….அப்படிப் போடு. நீ ரொம்ப நல்ல பொண்ணு சம்யுக்த். ஆனா, உன் பிடிவாதத்த கொஞ்சம் தளர்த்திக்க. ஒரு மரத்து உச்சிய அடைய 5, 6 கிளைகள் இருக்கும். நாம எந்தக் கிளை வழியாவும், கஷ்டமா இருந்தாலும் ஏறறதுக்கு முயற்சி பண்ண நம்ம மைன்ட ஓபனா வைச்சுக்கணும். இந்தக் கிளை வழியா மட்டும் தான் நான் ஏறுவேன்னு பிடிவாதமா இருக்கக் கூடாது. வின் வின் சிச்சுவேஷன் ரொம்ப முக்கியம். அட்டிட்யூட்!! அட்டிட்யூட் இஸ் எவ்ரிதிங்க்! நெகட்டிவா இருக்காம பாசிட்டிவா இரு. உன் அட்டிட்யூட மாத்திக்க. இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்கும். இது என் அம்மா சின்ன வயசுல எனக்குப் போதித்தது”

“ஸாரி கார்த்தி! ஃபிலாசஃபி எல்லாம் வேண்டாம். ஐ ஆம் எ பெக்கர் நௌ. நீ இனிமேல் என் லைஃபில் இல்லை”

ஹஹஹஹ் நீ சொன்ன உடனே நான் வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைக்கறியா? ஸாரி. வேற எந்தப் பெண்ணுக்கும் என் மனசுல இடம் இல்லை சம்யுக்த். வில் வெயிட் ஃபார் யுஎத்தனை வயசானாலும்அப்போது பிரிந்ததுதான். 15 வருடங்கள் ஓடி விட்டது. இப்போது மீண்டும் கார்த்தி.

இந்த நினைவுகளுடன் ஸம்யுக்தா மறுநாள் தன் க்ளினிக் வேலைக்காக கணினியை உயிர்ப்பித்து மெய்ல்கள் பார்த்தாள். அதில் கார்த்தியின் மெயிலும் இருந்தது. இவள் தன் மெய்ல் ஐடி மாற்ற வேண்டும் என்றும் நினைத்தும் ஏனோ மாற்றவில்லை.  அப்போதிலிருந்து இப்போது வரை கார்த்தி மெய்ல் அனுப்பிக் கொண்டேதான் இருக்கிறான். ஆனால் இவள்தான் அதைத் திறந்து பார்த்ததே இல்லையே! இப்போதும் அதைத் திறக்கவில்லை. வேலைகளைக் குறித்துக் கொண்டு கணினியை மூடிவிட்டுப் படுக்கச் சென்றாள்.

'கார்த்தி! இப்பவும் அப்படியேதான் இருப்பானா? அதே கார்த்தியாக இருப்பானா இல்லை காலம், அவனது ஸ்டேட்டஸ் அவனை மாற்றியிருக்குமோ? காத்திருப்பேன் என்று சொன்னானே! கல்யாணம் பண்ணியிருப்பானோ என்று நினைத்தாலும் ஏனோ மனம் அதை ஏற்க மறுத்தது. இருந்தாலும் அவனுடன் வாழ்வதைக் குறித்தும் யோசிக்க முடியவில்லை. தன் அடையாளத்தை இழந்துவிட்டதாக நினைத்தாள்.  இந்த நினைவுகளுடன் உறங்கியே போனாள்! மறு நாள் காலை வீட்டின் அழைப்பு மணி அடித்த போதுதான் முழிப்பே வந்தது! ஓ அஞ்சலை வந்துவிட்டாள் போலும்! அவ்வளவு நேரம் தூங்கிவிட்டேனோ என்று நினைத்துக் கொண்டே எழுந்தாள்!

தொடரும்....

----கீதா  

(இன்று இரவு அல்லது நாளை காலை நிறைவுப் பகுதி வெளியாகும்.)





38 கருத்துகள்:

  1. நிறைவுப் பகுதிக்காகக் காத்திருக்கிறேன் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  2. மனசுக்கு சங்கடமாகத் தான் இருக்கு..

    என்ன ஆகுது..ன்னு நாளைக்குப் பார்ப்போம்!..

    பதிலளிநீக்கு
  3. ம்ம்ம்ம்.. என்னதான் நடக்கப்போகுது.... தெரிந்து கொள்ள, காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

    பதிலளிநீக்கு
  5. ஹாய் கீதாக்கா..

    முன்னாடி உள்ள பகுதிகளை இன்னும் படிக்கல...ஆனா இந்த பகுதி ரொம்ப விறுவிறுப்பாக இருந்தது....

    பதிலளிநீக்கு
  6. Samyuktha was too hasty in taking such decision in spur of the moment..she lacks confidance and self esteem. I expected this right from the beginning. ..she was too emotional

    பதிலளிநீக்கு
  7. விழி இழந்த பெண்ணுடன் வாசலில் கார்த்திக் ?

    பதிலளிநீக்கு
  8. கதையில் திருப்பம் வர போகிறதா?
    கார்த்தி வந்து விட்டார் என்று நினைக்கிறேன்.

    உணர்வு போராட்டம் முடிவுக்கு வந்தால் நல்லது. 15 வருடம் என்பது மிக அதிகமே!
    வீடு மாற்ற வேலையால் உங்கள் கதையை படிக்க முடியவில்லை.
    இப்போது சேர்த்து வாசித்தேன். அருமையான எழுத்து.

    பதிலளிநீக்கு
  9. ஆண்கள் பெண்கள் பற்றிய கணிப்புகள் எல்லா உல்டாவாக இருக்கிறதே கடலின் ஆழத்தைக் காணலாம் பெண்ணின் மன ஆழம் காண முடியாதோ

    பதிலளிநீக்கு
  10. ம்ம்ம்ம், என்ன படித்தாலும் இப்படிப்பட்ட தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்கள், எதற்கெடுத்தாலும் ஆணைச் சாடும் பெண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அதிலும் இங்கே இந்த சம்யுக்தா ஒரு மருத்துவர்! இவர் இப்படி இருந்தால் இவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போகும் நோயாளிகளின் கதியை நினைத்தாலே பயமாக இருக்கிறது. தன்னுடைய தவறைச் சரி செய்து கொள்ளாமல் தான் மணக்கப் போகும் ஆணைக் குற்றம் சொல்லும் இந்த சம்யுக்தாவுக்காகக் கார்த்தி காத்திருக்கத் தான் வேண்டுமா என்றும் தோன்றுகிறது. பின்னால் நாளைக்கு ஏதேனும் அறுவை சிகிச்சை அல்லது சிகிச்சையில் சம்யுக்தா தவறிழைத்துவிட்டால் அதற்கும் கார்த்தி தான் பொறுப்பேற்கும்படி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டியது தான் மருத்துவரின் முதல் வேலை. ஆனால் இங்கேயோ தன்னுடைய சொந்த உணர்வுகளை ஒரு சின்னத் தோல்விக்காகக் கட்டுப்படுத்தத் தெரியாத பெண்மணி சம்யுக்தா! என்றாலும் இப்படியும் பெண்கள் இருப்பார்கள், இருக்கிறார்கள், எல்லாவற்றுக்கும் கணவனைக் குற்றம் சொல்லிக் கொண்டு, புலம்பிக் கொண்டு, பிறர் மேல் குற்றம் சொல்லிக் கொண்டு! பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். :(

    பதிலளிநீக்கு
  12. ம்ம்ம்ம்ம் தவறாக நினைக்க வேண்டாம் தில்லையகத்து துளசிதரன்/கீதா! சம்யுக்தாவின் குணச் சித்திரம் என்னை இப்படிச் சொல்ல வைத்து விட்டது. நான் இப்படியான ஒரு பெண்ணைச் சந்தித்திருக்கிறேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா என்னக்க தவறாக நினைக்க வேண்டாம்னு எலலம்...நீங்கள் சொல்லியதில் தவறில்லையே...நானும் சமீபத்தில் இப்படிக் கண்டதினால் மட்டுமல்ல, இது சில வருடங்களாக வெளிவரத் தொடங்கியுள்லது. விளக்கமாகப் பதிவில் சொல்கிறேன்...நன்றி அக்கா...

      நீக்கு
  13. கார்த்தி சம்யுக்தாவுக்காகக் காத்திருந்தால் அவனும் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறானோ என்று தோன்றும். சம்யுக்தாவுக்கு அர்த்தமற்ற பிடிவாதம்! இதுதான் இதுவரைப் படித்த அளவில் எனக்குத் தோன்றியது. நல்லவேளை, கார்த்தி தப்பித்தான் என்றே சொல்லலாமோ!

    தம +1

    பதிலளிநீக்கு
  14. தவிர்க்க முடியாத காரணத்தினால் இதன் நிறைவுப்பகுதி திங்கள் அன்றுதான் பதிவிட முடிகிறது. பயணம் மேற்கொள்வதால்.

    இங்கு கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. கீதாக்கா, ஸ்ரீராம், ஏஞ்சல் உங்கள் எல்லோரது கருத்துகளுக்கும் அடுத்த பகுதியில் கிட்டத்தட்ட பதில் கிடைத்துவிடும். அதன் பின் வரும் எனது பதிவில் இக்கதையின் காரணத்தையும் கருவையும் உளவியல் ரீதியாக, விளக்கமாகப் பதிய நினைத்துள்ளேன். ஏனென்றால் அது பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. குறிப்பாக இக்கால இளம் பெற்றோர்.
    நிறைவுப் பகுதி திங்களன்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. இன்றைய பகுதியை படிக்கும் போது சம்யுக்தாவிடம் நான் வாக்குவாதம் பண்ணியடு போல இருந்தது கோபமாக வந்தது அதன் பிந்தான் புரிந்தது நான் படித்தது கதை என்று ஹும்ம்ம் டென்சானாக ஆகிவிட்டது ஒரு பீர் குடிச்சாதான் கூல் டவுன் ஆக முடியும் காராஜ் ப்ரிஜ்ஜை நோக்கி செல்லுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. garrrrr :) அங்கே மீன் குழம்பும் இருக்கே :)

      நீக்கு
    2. ஹஹஹஹஹ்ஹ மதுரை சகோ....அன்னிக்கு மீன் சமைச்சுட்டு கரேஜ்...அப்புறம் உடனே சம்யுக்தாவினால் கேரஜுக்குப் போறீங்களா...ஆ!!இப்பல்லா புரியுது நீங்க ஏன் எனக்குப் பூரிக்கட்டைய பரிசா அனுப்பறேன்னு சொன்னது...ஹஹஹஹஹ்ஹ புரிஞ்சுருச்சு...

      நீக்கு
  16. நோ.. நோ.. நோஒ.. எனக்கு சம்யுக்தா அக்காவை:) அடியோடு பிடிக்கவில்லை இப்போ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), சும்மா இருந்த கார்த்திக்கை சீண்டி இழுத்து பேச வைத்ததும் இந்த சம்யுக்தாதான், இப்போ தேவையில்லாமல் விளையாடியதும்.. விளையாடுவதும் இவவேதான்.

    கார்திக் பாவம், சம்யுக்தாவை நம்பி இத்தனை வருடங்களை நாசமாக்கிட்டாரோ?.. இல்ல அவர் வேறு திருமணம் முடித்திருந்தாலும் எனக்கு சந்தோசமே.

    சம்யுக்தாவுக்கு ஓவர் ஈகோ... தாழ்வு மனப்பான்மை.. அதென்ன தன் அடையாளத்துடன் வாழ்வது.. திருமணம் நடந்தால் மிஸிஸ் ஆகிடுவாவே... அப்போ தன் அடையாளத்தோடு வாழ்வதெனில் மரி பண்ணக்கூடாது.. இப்படியேதான் இருக்கோணும்.. அது ஓகே ஆனா எதுக்கு கார்த்திக்கின் வாழ்க்கையை நாசமாக்கினா? என் கையில சம்யுக்தாவை ஒப்படையுங்கோ பிளீஸ்ஸ்ச்:).... ஸ்ஸ்ஸ்ஸ் நான் ரொம்பக் கொதிச்சுப் போயிருக்கிறேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அதிரா....இதுல நான் சொல்ல வந்தது ...ஜஸ்ட் தான் விரும்பும் பெண்ணுக்கு ஒரு சிறு பிரச்சனை என்பதால் விட்டுவிட்டுச் செல்லுவது சரியாகுமா என்று நான் யோசித்ததன் விளைவு...மட்டுமல்ல திருமணம் ஆன பிறகு இந்தப் பிரச்சனை தலை தூக்கியிருந்தால்...? இது அவளது ஈகோ என்பதை விட உளவியல் சார்ந்த பிரச்சனை எனலாம் அதனால்தான் அவளால் அதிலிருந்து மீள் முடிகிறது....

      கார்த்தி அவளை மிகவும் நேசிக்கிறான் இது உண்மையான அன்பையும் சொல்லும் ஒரு கதை எனலாம்...கார்த்தி போன்றோரால் ஈசியாகச் சமாளிக்க முடியும்....சரி இருந்தாலும் உங்க கையில சம்யுக்தாவை ஒப்படைச்சாச்சு நல்லா கவுன்சலிங்க் பண்ணி அனுப்புங்க

      மிக்க நன்றி அதிரா.....

      நீக்கு

  17. கார்த்தி! பற்றிய எதிர்பார்ப்பு
    இயல்பாக அமைந்திருக்கிறது...
    கதை வேகமாக
    நகர்ந்து வந்தது போல
    உணர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  18. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! ...

    - இராய செல்லப்பா (மீண்டும்) நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  19. இன்னொன்று, சம்யுக்தாவுக்கு ஏதும் குறைபாடு அல்லது வருத்தம் அதை அறிந்தே வேண்டாம் கார்த்தி என முடிவெடுத்தாவோ தெரியல்ல, எதுவாயினும் சொல்லாமல் இருப்பது தப்புத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா அவளது குறைபாடு என்ன என்பதை இறுதிப் பதிவில் பார்த்திருப்பீர்களோ...இல்லையா....மிக்க நன்றி அதிரா...கும்மி அடிக்க முடியலை...நேரம் இல்லை ஏனென்றால் இணையம் அடிக்கடி கட் ஆகிறது. அதற்குள் கருத்து பதிய வேண்டுமே என்று...

      நீக்கு
  20. #இந்தக் கிளை வழியா மட்டும் தான் நான் ஏறுவேன்னு பிடிவாதமா இருக்கக் கூடாது.#
    இதுவும் நல்லாயிருக்கே !வேலைக்காரிக்கு அஞ்சலைங்கிற பெயர்தான் நல்லாயில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜி! கருத்திற்கு. ஆமாம் ஜி அது வெற்றிப் பாதைக்கான பல கருத்துகளில் ஒன்று...

      அஞ்சலை ன்ற பேர் நல்லாயில்லை ஹஹஹஹ்ஹஹஹ்...

      நீக்கு
  21. பதில்கள்
    1. மிக்க நன்றி மொஹம்மட் சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  22. வணக்கம் சகோ.

    கதையின் இடைவந்து நிற்கிறேன்.

    இலக்கணச் சூத்திரத்தினை விளக்க, சிங்க நோக்கு என்ற ஒரு உத்தியை உரையாசிரியர்கள் கையாள்வர்.

    சிங்கம் ஓரிடத்தமர்ந்து முன்னும் பின்னும் நோக்குவது போல, விளக்கும் சூத்திரம் தனக்கு முன்னும் பின்னும் உள்ள சூத்திரங்களின் பொருளையும் தழுவிக் கொள்வது.

    என் நிலையும் அப்படித்தான்.

    சற்று அவகாசம் தாருங்கள்.

    முந்தைய பகுதிகளையும் அடுத்த பகுதியையும் படித்துவிடுகிறேன்.
    படித்து வருகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் விஜு சகோ! சிங்க நோக்கு புதிய வார்த்தை ஒன்று கற்றுக் கொள்ள முடிந்தது. மிக்க நன்றி சகோ. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாசித்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி!

      நீக்கு
    2. வணக்கம்.

      முதலில் இருந்து இங்கு வந்துள்ளேன்.
      புதிய அவதாரம்.

      கலக்குகிறீர்கள்.

      தொடர்கிறேன்.

      நன்றி.

      நீக்கு
  23. திடீர் என்று சில பெண்கள் இப்படித்தான் ஏதோ நினைச்சு வாழ்க்கையை குழப்பிக்கொள்வார்கள்!

    பதிலளிநீக்கு