வியாழன், 23 மார்ச், 2017

பெண் அன்றி நான் அல்ல பொம்மை...3

சென்ற இரு பகுதிகளின் சுட்டி

முரளியும், மாதவியும், "யாக்கரை" விஸ்வேஸ்வரர் கோயிலில், பெற்றோர்கள் அறியாமல், மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டு விட்டு வீட்டுக்கு வந்ததைப் பார்த்ததும் டீச்சரின்  அம்மா  மிகவும் மனம் நொந்து அழுதார்.

நான் தான் சொல்லியிருந்தேனே! முரளிக்கு ஏதாவது ஒரு சின்ன வேலை கிடைச்சப்புறம் கல்யாணத்தை வைச்சுகலாம்னுஇப்ப இப்படிப் பண்ணிட்டு வந்து, எங்க நிம்மதியையும் கெடுத்து, எங்க எல்லாரோட முகத்துலயும் சேத்தை அள்ளித் தேச்சுட்டீங்களே! இனி நான் எப்படி மத்தவங்க முகத்துல முழிக்கிறது?” இது டீச்சரின் அப்பா. 

     "மாமா! ஒரு கல்யாணம் பண்ணி வைக்கிற செலவு குறைஞ்சுதேனு சந்தோஷப்படுங்க! இனியும் தாமதமானா, கல்யாணமே பண்ணாம நானும், இவளும் அப்பா, அம்மா ஆகவேண்டிய நிலை வரும்என்று முகத்திலடித்தபடி சொல்லிவிட, டீச்சரின் அப்பா, பதில் பேச வார்த்தைகள் இன்றி அதிர்ந்தே போனார். பிறகு, அவர் அதிகம் யாருடனும் பேசவே இல்லை. மாலை வீட்டில் தேநீர் அருந்திய பிறகு பக்கத்திலுள்ள கோயிலுக்குப் போனால், இரவு திரும்ப வீட்டிற்கு வந்ததும் ஏதாவது சாப்பிட்டு விட்டுப் படுத்து விடுவார். அந்த அளவிற்கு, முரளியின் வார்த்தைகள் டீச்சரின் அப்பாவின் மனதை வருத்தியது!   அதற்குப் பிறகு அவர் முரளியை நேரில் பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்த்துவந்தார்.

   இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஜானகியின் அம்மா, ஜானகியையும், மாதவனையும் ஒரே அறையில் அமர்ந்து படிக்கக் கூட விட்டதில்லை. ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையே நட்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை ஜானகி எத்தனை முறை சொல்லியிருந்தும் அம்மாவுக்கு நம்பிக்கையே வரவில்லைவெந்நீரில் விழுந்த பூனை தண்ணீரைக் கண்டாலே விலகிப் போகத்தானே செய்யும்!

வேலை இல்லாத முரளிக்குத் திருமணம் இப்போது வேண்டாம் என்று பெற்றோர் முன்பு நினைத்திருந்தாலும், வேலை இல்லாத அப்பாவுக்கு மகளாய்ப் பிறக்க மாட்டேன் என்றுவீணாகஅடம் பிடிக்காததால், பத்து மாதம் ஆகும் முன்பே அக்குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை புது முகமாய் அவதரித்தது! முரளிக்கும், மாதவிக்கும் இடையில் ஏற்பட்ட காதலையும், வீட்டிற்குத் தெரியாமல் அவர்கள் செய்துகொண்ட கல்யாணத்தையும் எதிர்த்த பெற்றோர்கள், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததும் எதிர்ப்பை எல்லாம் மறந்து இன்ப வெள்ளத்தில் மிதந்தார்கள்ஒரு குழந்தையின் வரவு சூழலையே தலைகீழாக மாற்றிவிடும் போலும்!!

      டீச்சரின் பெற்றோர் குழந்தை பிறந்த 28 ஆம் நாள் அரைஞாண் கட்டும் சடங்கை நன்றாகக் கொண்டாட முடிவு செய்தனர்பந்தல் போட்டு உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு விழாவாகக் கொண்டாடினார்கள். குழந்தைக்கு இந்து என்று பெயரிட்டனர்.  அன்று மாலை முரளி வழக்கத்திற்கு மாறாக மிகவும் உற்சாகத்துடன் எல்லோரிடமும் சிரித்துப் பேசி, டீச்சரின் அம்மா, அப்பா, தன் அம்மா சாரதா அனைவரையும் அழைத்து,

         “இந்த சந்தோஷமான நாள்ல எனக்காக எல்லாரும் ஒரு டம்ப்ளர் பாயாசம் கூடுதலா குடிங்கஎன்று கட்டாயப்படுத்திக் குடிக்க வைத்தான். எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. ஏன் இப்படி என்ற கேள்வி எழாமல் இல்லை.

         அப்படி முரளி அன்புடன் வற்புறுத்தி எல்லோரையும் பாயாசம் அதிகமாகக் குடிக்க வைத்தது, டீச்சரின் அம்மாவும், அப்பாவும் கடன் வாங்கி மிகவும் சிறப்பாகக் குழந்தையின் அரைஞாண் கட்டும் விழாவைக் கொண்டாடியதால் ஏற்பட்ட சந்தோஷமாக இருக்கலாம் என்று எல்லோரும் நினைத்தார்கள். அன்று அவ்வீட்டில் நிலவிய அந்த சந்தோஷம் அக்குடும்பத்தில் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என எல்லோரும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளவும் செய்தனர். குளித்துவிட்டு, வேறு உடை அணிந்து வந்த முரளி எல்லோரிடமும்,

  “நான் இப்படி வேலை இல்லாம இனியும் சுத்தினா சரிவராதுஎர்ணாகுளத்தில ஒரு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்குகொஞ்சநாள் கழிச்சு, ஒரு வாடகை வீடு கிடைக்குமானு பாக்கறேன்கிடைச்சதும் உடனே, மாதவியையும் குழந்தையையும், கூட்டிட்டுப் போறேன்!”  என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

இப்பவாவது உனக்குப் பொறுப்புணர்ச்சி வந்துச்சே! சந்தோஷம்பாஎல்லோரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

           “முரளி! இப்ப இந்த விளக்கு வைக்கிற நேரத்துல போகணுமாகாலைல போயேன்."

    "இல்லை மாமா! ராத்திரி அங்க போய்ட்டா காலைல வேலைக்குப் போகலாமே.”

          “இரு, நான் இதோ இப்ப வரேன்”, என்று சொல்லிவிட்டு டீச்சரின் அப்பா வெளியே போய், ஐந்தே நிமிடத்தில் திரும்ப வந்து, முரளியின் சட்டைப் பாக்கெட்டில் ரூ.100 ஐத் திணித்தார். முரளி, கண் கலங்கி நின்ற மாதவியைக் கட்டி அணைத்து,

   “என்ன இது? முகத்தை இப்படி வைச்சுக்கிட்டு!?  சந்தோஷமா வழியனுப்பு!...எங்க நம்ம செல்லக்குட்டி?” என்று சொல்லியபடியே சென்று, உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் நெற்றியில் மெதுவாக, அவளை எழுப்பாமல் முத்தமிட்டுத் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு நடந்தான்டீச்சரின் அப்பாவும், அம்மாவும், முரளியின் பின்னால் கொஞ்ச தூரம் சென்று திரும்ப வந்துசகுனம் பரவாயில்லைஎன்று சொல்லிச் சமாதானப்பட்டனர்.
அன்று போன முரளி, வாரங்கள் பல கடந்தும் வரவே இல்லைகடிதங்கள் கூட வரவில்லை.  “என்ன இந்த முரளி இப்படி பொறுப்பில்லாம இருக்கான்!” என்று கோபமும் எழுந்தது அவர்களுக்கு

     “சாரதா, முரளிக்கு என்னாச்சு? ஒரு தகவலும் இல்லையே. நான் எர்ணாகுளம் போய் பார்த்துட்டு வரட்டா” என்று டீச்சரின் அப்பா வீட்டில் எல்லோரிடமும் கலந்து பேசிட, சாரதா அத்தை

அண்ணே. நான் முதல்ல எங்க பாலு அண்ணனுக்கு ஒரு லெட்டர் போட்டு பார்க்கறேன்.” என்று சொல்லி தன் பாலு அண்ணனுக்குக் கடிதம் எழுத, அதற்கு வந்த பதிலில், முரளிஓவர்டைம்வேலை பார்ப்பதாகவும், பணம் சேர்த்து துபாய் போக முயல்வதாகவும் எழுதப்பட்டுள்ளதாக சாரதா அத்தை சொன்னார்.

மாதவிக்குக் குழப்பம். தானும் குழந்தையுடன் எர்ணாகுளம் போய் முரளியுடன் இருக்கலாமா? அல்லது தான் மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வரலாமா என்று பல எண்ணங்கள் தோன்றிட வீட்டில் பெரியவர்களிடம் தன் எண்னங்களை வெளியிட்டாள்.

“வேண்டாம். நீ கைக்குழந்தையுடன் அங்கெல்லாம் போக வேண்டாம். அதான் முரளி துபாய் போறதுக்கு முயற்சி செய்கிறான்னு பாலு மாமா சொல்லியிருக்காரில்ல. போனதும் உன்னையும் அங்க கூட்டிப் போவான்” என்று சாரதா அத்தை சொல்லிவிட மாதவியால் அச்சமயம் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. டீச்சரின் அப்பாவிற்கும் உடல்நிலை மோசமாகி வந்ததாலும், அவர் ஏற்கனவே பாலுவிடம் சண்டை போட்டு சாரதாவை அழைத்து வந்திருந்ததாலும் அவர் மனதிலும் அங்கு செல்வதற்கு மனத்தடை இருந்து வந்தது.

 கோபத்தில் “இனி அவர் வரும் போது வரட்டும்என்று மாதவியின் உதடுகள் உச்சரித்தாலும், கண்களில் வரவில்லையே என்ற வருத்தமும், ‘வருவார். தன்னை அழைத்துச் செல்வார்என்ற நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பும் ஒளிந்திருந்தது. அதன் பின், இடையிடையே சாரதா அத்தையும், மாதவனும் எர்ணாகுளம் போய் வந்தார்கள்.

முரளி துபாய் போகும் முன் வருவேன் என்றான்என்றுதான் சொன்னார்களே அன்றி மாதவியையும், குழந்தையையும் அங்கு அழைத்துச் செல்வதைப் பற்றி, அவர்கள் பேசவே இல்லை. எத்தனையோ முறை கேட்டும் அவர்களிடமிருந்து சரியான பதிலும் இல்லை. எல்லோரும் ஒரே வீட்டில் இருந்ததால், வேறு எதிர்மறை எண்ணங்களும் இவர்களுக்கு வரவில்லை. இப்படி இடையிடையே சாரதா அத்தையும், மாதவனும்எர்ணாகுளத்தில் உள்ள அண்ணன் வீட்டிற்குச் செல்கிறோம்என்று சொல்லிப் போனவர்கள் இறுதியாக அங்கேயே நிரந்தரமாகத் தங்கியும்விட்டனர்!

மாதவிக்கும், அவள் பெற்றோருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. பலவிதமான உணர்வுகள் அவர்களிடையே நிலவியது. நேரடியாகச் சென்று கேட்கவோ சண்டை போடவோ மாதவி விரும்பாததால் அதுவும் நடக்கவில்லை.

மாதவியின் குழந்தை வளர்ந்தாள். பள்ளி செல்லத் தொடங்கினாள். 

மாதவியின் வாழ்க்கை என்னாயிற்று?

தொடரும்.....


47 கருத்துகள்:

  1. நன்னாக சென்றது திடீரென மனதில் ஏதோ சோகம் வந்தது போன்ற உணர்வு பார்ப்போம் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க கில்லர்ஜி! முதலில் வந்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி கில்லர்ஜி! தொடருங்கள் எப்படி முடிகிறது என்று தெரிந்து கொள்ள...

    பதிலளிநீக்கு
  3. என்னதான் நடக்கிறது? மர்மம்! மாதவி நேரில் சென்றுபார்க்க வேண்டாமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் மாதவி நேரில் சென்று பார்க்க நினைக்கிறாள்......சரி அடுத்த பகுதியில் தெரிந்துவிடும்...

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  4. என்ன கொடுமை இது? முரளிக்கு ஏதும் ஆகியிருக்குமோ என மனம் பக்குப் பக்கெண்ணுது... இந்து வளர்ந்திட்டாவா... இன்னுமா தேடாமல் இருப்பார்கள் முரளியை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடுவது இனி வேண்டாமே முரளியின் அம்மாவும் அவன் தம்பியும் இப்போது எர்னாகுளத்தில்தானே...அவர்கள் முரளி வருவான் என்று சொல்லிவிட்டுப்போய்ட்டனர். அடுத்த பகுதியில் தெரிந்து விடும் ...

      மிக்க நன்றி அதிரா சகோ

      நீக்கு
  5. இது முரளியின் பெற்றோரின் சூழ்ச்சியாக இருக்குமோ? விரும்பாத கல்யாணம் என்பதால் பிரித்துவிடும் முயற்சியோ.. சே சே அப்படி இருக்காது. முரளியை எல்லோரும் திட்டுவதால் உழைப்பைத் தேடி தலை மறைவாகிட்டார்ர்ர்ர்ர்ர்.... துளசி அண்ணன் தான் முரளியை ஒளிச்சு வச்சிருக்கிறார்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லையே அதிரா சகோ! கொஞ்சம் யூகித்துவிட்டீர்களோ என்று தோன்றுகிரது...

      ஹஹஹ் நான் ஒளிச்சு வைச்சு...ஆமாம் ஆமாம் கதையை எழுதிய நான் தான் முரளியை ஒளிச்சு வைச்சுருக்கேன்...எப்போ ரிலீஸ்? காத்திருங்கள்...

      நீக்கு
  6. ஆனா ஒன்று, இத்தனை வருசம் கழிச்சு, திடீரென முரளி வந்து, உங்களுக்கு உழைச்சுக் கொண்டு வரவே ஒளிச்சிருந்தேன், இப்போ நான் பெரிய பணக்காரன் ஆகி திரும்பி வந்திருக்கிறேன் என சேபிறைஸ் ஆக முரளி வந்தால், கால்ல கல்லுக்கட்டி ப்போட்டு தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன் முரளியை .. சொல்லிட்டேன் ஜாக்க்க்க்க்ர்ர்ர்ர்ர்தை... இது முரளிக்குச் சொன்னேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா சகோ இங்கு உங்களுக்குக் கருத்து சொன்னேன் என்றால் கதை தெரிந்துவிடும்...பாதி சரியாகச் சொல்லிவிட்டீர்கள்!!! மிக்க நன்றி

      நீக்கு
    2. அதிரா இப்படி முரளியை தேம்ஸில் தள்ளி ஒளித்து வைத்துக் கொண்டு ஹஹஹ்..நிறைய சினிமா பாப்பீங்களோ அதிரா...ஹஹஹஹ் கதையை செமையா யூகிக்கிறீர்கள்...பாராட்டறேன்...அதுக்காக மேடைக்கு வாங்கோ உங்களுக்கு மாலை போட்டுனு எல்லாம் சொல்ல மாட்டேன் ஹிஹிஹீ...மதுரைத்தமிழன் வந்து உங்களுக்குப் பரிசு கொடுப்பார்னு நான் உடான்ஸ் விட மாட்டேன் சரியா...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. அதிரா மாதவியிடம் சொல்லுறேன்...முரளி துபாய்க்கு எல்லாம் போகல...இந்த அதிராதான் முரளியை கால்ல கல்லு கட்டு தேம்ஸில் தள்ள கட்டி வைச்சுருக்காங்க....அவங்க ஊர்ல லண்டன்ல...உனக்கு ஆதரவாகனு சொல்ல்றன்...மாதிவிட்ட...ஓகேயா அதிரா,,

      கீதா

      நீக்கு
    4. ஹா ஹா ஹா எனக்கு எப்பவுமே கடமை நேர்மை எருமை:).. வெறி சொறி ஒரு ஃபுலோல வந்திட்டுது:).. தான் முக்கியம், அதிலும் நீதி க்காக பெண்களுக்காக வாதாடுவது பிடிக்கும்:)..

      அந்த விதத்தில மாதவியின் அட்ரஸ் ஐக் கொஞ்சம் அனுப்பி விடுங்கோ துளசி அண்ணன்...:).. பூதம் கிணறு வெட்ட அணில் சேற்றை அள்:ளிப் பூசிய கதையா இருக்கப்போகுது முரளி முடிவில் வந்தால்ல்:).. மாதவி இத்தனை வருடமும் எவ்ளோ கஸ்டப்பட்டு குழந்தையை வளர்த்திருப்பா.. இனி வந்து என்ர மகளே என சொந்தங் கொண்டாடப்போறாரோ.. விடுங்கோ பூஸ் ஒன்று புறப்படுதேஏஏஏஏஏ:).. ஹா ஹா ஹா:)

      நீக்கு
    5. ஓரளவுக்கு ஊகித்து விட்டேன் என்றீங்க துளசி அண்ணன்:), அப்போ பரிசைத் தாங்கோ.. நான் கெதியா போகோணும் நேரமாகுது:).. ஆனா ஒண்ணு:) கீதாவுக்கு மட்டும் காட்டிடாதீங்கோ:).. புடுங்கிடுவா பரிசை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      நீக்கு
    6. //ஹஹஹ்..நிறைய சினிமா பாப்பீங்களோ அதிரா...ஹஹஹஹ்//

      அதே அதே அஃதே :)அதுவும் எல்லாம் 1950- 1980 ரிலீஸ் படங்கள்

      நீக்கு
    7. பரிசெல்லாம் கடைசிலதான்!!! சரியா சகோ அதிரா!?

      நீக்கு
    8. ///Angelin23 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 5:26
      //ஹஹஹ்..நிறைய சினிமா பாப்பீங்களோ அதிரா...ஹஹஹஹ்//

      அதே அதே அஃதே :)அதுவும் எல்லாம் 1950- 1980 ரிலீஸ் படங்கள்///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஓல்ட் இஸ் கோல்ட் தெரியுமோ?:) நான் கோல்ட் பிஸ்ஸை சொல்லல்லே:)... அரசியல் தவிர ஏனைய அனைத்தையும் தொட்டுக்கொண்டே வருவேன்.. தொடர்கள்(சீரியல்கள்) பார்ப்பதில்லை.

      ஓகே ஓகே பொறுமையா இருக்கிறேன் பரிசுக்கு..

      நீக்கு
  7. >>> மாதவியின் குழந்தை வளர்ந்தாள். பள்ளி செல்லத் தொடங்கினாள்.
    மாதவியின் வாழ்க்கை என்னாயிற்று?..<<<

    திடுக்கென்று இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பகுதி வரும் போது முக்கால்வாசி தெரிந்துவிடும் ஐயா மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  8. ஹ்ம்ம் பாவம் மாதவி ..எதற்கு இந்த மாதவி போன்ற பெண்கள் அவசரப்படுகிறாரகளோ தெரியவில்லை :(
    உலகத்தை அறியா வயதில் திருமணம் உடனே ஒரு புது வரவு எதையும் யோசிக்க மாட்டார்களா சில பெண்கள் :(
    கல்வியறிவு என்பதை பல விஷயங்களை ஆராய்ந்து யோசித்து செய்யவைக்கும் ..படித்த பெண்களே பாதஹனர் வலையில் வீழ்கிறார்கள் சின்ன பெண் மாதவி என்ன செய்வா .எனக்கென்னமோ முரளியின் அம்மா 18,000 ரூபாய் விஷயத்தை மனதில் வைத்து விளையாட்டு காட்டுகிறாரோ என தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சோ அவசர ஸ்பெல்லிங் மிஸ்டேக் //பாதஹனர் வலையில்//பாதகர் என்று வாசியுங்க

      நீக்கு
    2. ஆம் ஏஞ்சல் சகோ! பல பெண்கள் இப்படித்தான் ஒரு சில உணர்வுகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டுவிடுவதால்....
      உங்கள் ஊகம் சரியா என்று பாருங்கள்....கிட்டத்தட்ட வந்துவிட்டீர்கள் எனலாம்...

      நீக்கு
    3. ஹை 5 கீதா உங்களுக்கும் எனக்கும் இன்னொரு ஒற்றுமை :) பின்னூட்டங்களுக்கு பின்னாலிருந்து பதில் கொடுக்கும் ரிவெர்ஸ் ஆர்டரில் ரிப்ளை தரும் பழக்கம் எனக்கும் இருக்கே :)

      நீக்கு
    4. ஆமாம் ஏஞ்சல் பல சமயங்களில் அப்படித்தான் கொடுக்கிறேன்!! எப்படியோ அது என்னையும் அறியாமல் வந்துவிடும்!!!ஹைஃபைவ்

      கீதா

      நீக்கு
  9. கதையின் கருத்து ஆசிரியரின் கற்பனை யூகிக்க விரும்பவில்லை ரசிக்கும் படி முடிகிறாதா பார்ப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார். ஆம் என் கற்பனை எப்படி முடிகிறது ரச்க்கும்படி உள்ளதா என்று சொல்லுங்கள் நிறையும் போது ....

      நீக்கு
  10. தொடருங்கள் காத்திருக்கிறோம்
    தமிழ் மணம்

    பதிலளிநீக்கு
  11. அடிக்கிற வெய்யிலுக்கு மணுசன் மூளயெல்லாம் உருகி ஓடுறப்ப இப்படி செய்யுறது. நியாயமா?!. ஞாயமாரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் என்னாயிற்று அன்பே சிவம்?!!..கோபம் வருகிறதா??!!!

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
    2. சஸ்பென்ஸ் பற்றி கொ'ல்'லுதே...!

      நீக்கு
  12. மாதவியின் நிலை தான் என்ன ? தொடர்கின்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடருங்கள் தனிமரம்...

      உங்கள் பதிவுகள் எங்கள் பெட்டிக்கு வருவதே இல்லை அங்கு பதிந்தும்...

      மிக்க நன்றி தனிமரம் நேசன் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  13. "மாதவியின் குழந்தை வளர்ந்தாள். பள்ளி செல்லத் தொடங்கினாள்..." என்கிறீர்கள். இது கதையின்மூ ன்றாவது பகுதியில்.

    கதை முடிவதற்குள் அவளுக்கே குழந்தை பிறந்துவிடுமோ? எவ்வளவு தலைமுறைக் கதை இது? அம்மம்மா!

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் மூன்று தலைமுறை வந்தாலும் கதை என்னவோ இரண்டாம் தலைமுறை அதாவது எங்கள் தலைமுறை பற்றியதுதான்....

      மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  14. பாவம் மாதவி, முரளி உயிருடன் இருக்கிறானா இல்லையா? எதை மறைக்கின்றனர்? அடுத்த பகுதிக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பகுதியைப் பார்த்தால் தெரிந்துவிடும் கீதா சாம்பசிவம் சகோ...

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  15. இம்பூட்டு சஸ்பென்ஸ் வச்சா என்ன பன்னுறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது சஸ்பென்ஸ் இல்லையே அன்பே சிவம்...அடுத்த பகுதியில் உங்களுக்குத் தெரிந்துவிடும்

      மிக்க நன்றி மீண்டும் வந்து கருத்திட்டமைக்கு

      நீக்கு
  16. இப்படி 'தவி'க்க விடலாமா மாதவியை ?சீக்கிரம் சேர்த்து வைங்க ஜி :)

    பதிலளிநீக்கு
  17. மாதவியைத் தான் தவிக்க விட்டிங்க! எங்களையுமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அசோகன் குப்புசாமி தங்களின் கருத்திற்கு. மாதவியைத் தவிக்க விட்டேனா இல்லையா என்று 5 ஆம் பகுதியைப் பார்த்தால் தெரிந்துவிடும் தங்களின் முதல் வருகைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  18. "மாமா! ஒரு கல்யாணம் பண்ணி வைக்கிற செலவு குறைஞ்சுதேனு சந்தோஷப்படுங்க! இனியும் தாமதமானா, கல்யாணமே பண்ணாம நானும், இவளும் அப்பா, அம்மா ஆகவேண்டிய நிலை வரும்” என்று முகத்திலடித்தபடி சொல்லிவிட, டீச்சரின் அப்பா, பதில் பேச வார்த்தைகள் இன்றி அதிர்ந்தே போனார்." என விழித்த போது கதையை மென்மேலும் வாசிக்கத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  19. சுவராஸ்யாமாக செல்கிறது லேட்டகாக வந்ததினால் கும்மி அடிக்காமல் கதையை தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் மதுரைத் தமிழன்....வாங்க லேட்டா வந்தால் என்ன....தொடருங்கள்..பகுதி.5ல் முடிந்து விட்டது...

      மிக்க நன்றி தமிழன்

      நீக்கு