வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

எவர்ரெடி (!?) வண்டி

Image result for ever ready vehicle
படம் இணையத்திலிருந்து

என் மகன், மகனின் அத்தை, நான் மூன்று பேரும் ஸ்கைப்பில் கான்ஃபெரன்ஸ் காலில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது மகன்,

“ம்மா! வெளிய போக வேண்டிய வேலை இருக்குனு சொன்னியேம்மா, வண்டி எல்லாம் ஒழுங்கா இருக்கா?”

“நல்லா இருக்குடா.”

“ரெண்டு நாள் முன்னாடி பஞ்சர்னு சொன்னியே நேத்து கூட இன்னும் சரியாகலைனு சொன்னியே.. சரி பண்ணிட்டியா?”

“ஐயே அதெல்லாம் ஒன்னுமில்லடா. ஜுஜூபி பஞ்சர்”

“சரி செர்வீஸ் செக் பண்ணியா? மத்த பார்ட்ஸ் எல்லாம்?”

“எல்லாம் ஓகே!”

“ரெண்டு இண்டிகேட்டர் லைட், ஹெட் லைட்?”

“ஆமாம்டா இண்டிகேட்டர் பிரச்சனை இருந்துச்சு! ஹெட்லைட் பிரச்சனை எதுவும் இல்லை..அது வழக்கமான பிரச்சனைதான் எல்லாம் சரியா இருக்குடா.”

“எஞ்சின்ல ஏதோ பிரச்சனை, சத்தம் வித்தியாசமா போடுதுனு சொன்னியேமா…”

“ஆமாண்டா, காலைல ஸ்டார்ட் ஆகக் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. மெதுவா ஓடிச்சு. ஆனா, ஸ்டார்ட் ஆகி ஓட ஆரம்பிசுச்சுனா வேகம் தான்…”

“அம்மா பாத்துமா பெட்ரோல் எல்லாம் பார்த்து போடுமா… கலப்படம்…”

“எல்லாம் பார்த்துதான் போடறேன். எஞ்சினையும் நல்ல செர்வீஸ் பண்ணியாச்சு”

“ம்மா, நான் ஊர்ல வேற இல்லை. நல்லா கவனமா பாத்துக்கமா”

“டேய் கவலையே படாதடா….நம்ம வண்டி எப்பவுமே இளமை ததும்பும் வண்டிடா!! ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி இல்லைடா…..கட்டை வண்டி கட்டை வண்டி காப்பாத்த வந்த வண்டிடா!!!!

அவன் அத்தைக்குப் புரியவில்லை…

“அம்மாவும் பையனும் என்ன பேசிக்கறீங்கன்னே புரியல…வண்டி எஞ்சின் சத்தம் போடுதுனா என்ன செலவாகும்னு பார்த்து, மாத்திற வேண்டியதுதானே”

“ஐயோ ராதா எஞ்சின மாத்தறது எல்லாம் ரொம்பக் கஷ்டம்! அது மட்டுமில்லை எஞ்சின் இது வரை நல்லாத்தான் இருக்கு.. எப்பவாச்சும் வரக் கூடியப் பிரச்சனைதான்…….பெரிசா ஒன்னும் இல்லை”

“அண்ணி வண்டி இப்பல்லாம் வெயிட் தாங்கறது இல்லைனு, சொல்லுவீங்களே. அப்ப எப்படி சாமான் எல்லாம் கடைல இருந்து வாங்கி மாட்டி எடுத்துட்டு வருவீங்க?”

“அது பரவாயில்லைப்பா முன்னாடி எல்லாம் 12, 15 கிலோ வரைக்கும் தாங்கிச்சு இப்பல்லாம் 8,9 கிலோ வரைக்கும் தாங்கும் அது போதுமே..இப்ப 12, 15 கிலோ தாங்கி என்ன பண்ணப் போறோம்”

“அண்ணி, வண்டி ரொம்ப பழசாயிருச்சுனா வித்துட்டுப் புது வண்டி வாங்கிட வேண்டியதுதானே..இப்படி எவ்வளவு நாள் ஓட்டுவீங்க”

“ஹஹஹ வண்டிய மாத்த முடியாதே! என் வண்டிய என்னனு நினைச்ச? சும்மா அதிரும்ல!!…….. ஓகே ராதா, சரி குட்டிமா நான் கடைக்குப் போயிட்டு வரேன். அப்புறமா பிஞ்ச் பண்ணறேன்…”

“ஓகேம்மா.. நான் அத்தைட்ட பேசிட்டுக் கட் பண்ணிடறேன்….”

“டேக் கேர் அண்ணி”

“அத்தை, வண்டி வருஷம் ஆனாலும் செம ஸ்பீட்!!!! இந்த வண்டி பல வருஷமா ரொம்ப உழைக்கிற வண்டி. எத்தனை விபத்தைச் சந்திச்சாலும் எப்பவுமே ஒன்னும் ஆகாத, ஜாலியா போற வண்டி. எனக்குப் பொக்கிஷமான வண்டி! இத மாதிரி வேற எதுவும் வராது அத்தை! அத்தை உங்க அண்ணாத்தைக் கிட்ட சொல்லிறாத”

“ஹஹஹஹஹ் ஐயையோ! அவ்வளவுதான். அவர் ஆரம்பிச்சாருன்னா….. சாமி…..விடு ஜூட்”

என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, நான் என் கால்களில் செருப்பணிந்து என் எவரெடி வண்டி “நட(டை)ராஜா/ராணி” மோட்டார் செர்வீசை இயக்கினேன்!!!

நாம் பயன்படுத்தும் அரைப்பான், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கணினி, என்று எல்லாவற்றையும் அவ்வப்போது பராமரித்து மிகவும் கருத்தாகக் கவனிக்கிறோம் இல்லையா? ஆனால் இதை எல்லாம் இயக்கவும், இவற்றை விட மிக மிக முக்கியமாக வாழ்க்கையை இயக்கவும் தேவைப்படும் நம் உடலையும், எஞ்சின் போன்ற மூளையையும்/மனதையும் நம்மில் பலரும், கவனித்துப் பராமரிப்பது இல்லை, அது மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். பராமரித்தால் செலவுகளும் குறையலாம்!

அப்பொருட்கள் இல்லை என்றாலும் கூட வாழ்ந்து விட முடியும். விற்று மாற்றியும் வாழ முடியும்! ஆனால் நம் உடலும், மனதும் சோர்ந்து போனால்? என்றேனும் ஒரு நாள் இவ்வுலகத்திற்கு விடை கொடுக்கத்தான் போகிறோம். என்றாலும் வாழும்வரை, எப்படி நாம் பொருட்களை அவ்வப்போது பராமரிக்கின்றோமோ அது போன்று நம் உடலையும், மனதையும் புத்துணர்வோடு இருக்கப் பராமரிப்பதற்கான வழிகளை மேற்கொண்டு "எவர் ரெடி" என்று இயக்குவது இன்றியமையாதது. அப்படி இயக்கினால் முடிந்த அளவிற்குப் பிறரைச் சாராமல், பெரிதாய் ஏதும் நிகழாமல் தவிர்த்திடலாம். அப்போதுதான் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்வுடன் பயணிக்க முடியும்! ஏனென்றால், எதிர்காலத்தில் நம் குழந்தைகளின் சூழல்கள் எப்படி இருக்கும் என்று நம்மால் கணிக்க இயலாது. இதையும் மீறி நடந்தால் நம் கையில் இல்லைதான், ஆனால் நாம் பராமரிக்கவில்லை என்ற குற்றச் சாட்டோ, இல்லை குற்ற உணர்வோ இல்லாமல், நடப்பதுதான் நடக்கும், என்ன செய்ய என்று நினைத்துச் சமாதானம் கொள்ளலாம்! சரிதானே?!

பின் குறிப்பு: நானும், மகனும் இப்படித்தான் பல விசயங்களைப் பேசுவதுண்டு. என் வண்டியைப் பற்றிப் பேசுகிறோம் என்று நினைத்துக் குழம்பிய மகனின் அத்தைக்கு, அது வண்டியைப் பற்றி அல்ல. என்னைப் பற்றித்தான் என்பதை என் மகன் விளக்கியிருப்பான்.

------கீதா


65 கருத்துகள்:

 1. விவரமா நீங்களும் ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள்... ஏதோ ஒரு நினைப்பில் வண்டியை விற்க ஏற்பாடு செய்து விட போகிறார்கள்... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ் அதான் சொல்லிட்டேனே குறிப்பாக!!!!! முதலிலும் பின் குறிப்பிலும்...நன்றி டிடி!!

   நீக்கு
 2. என்னுடைய வண்டி1950 மாடல யாருக்காவது வேணுமா இராயசெல்லப்பாநியூஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹ்ஹஹஹஹ்ஹ்ஹ்ஹ் ஐயோ செல்லப்பா சார்!!! பார்த்து....சிரிச்சு தாங்கல...

   மிக்க நன்றி சார்

   நீக்கு
 3. பதில்கள்
  1. மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 4. மனதுக்கு உற்சாகம் டானிக் என்று தனியாக எதுவுமில்லை ,அந்த 'பெட்ரோல் ' எதுவென்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகவான் ஜி அவன் இங்கு சொல்லும் பெட்ரோல் உணவு பற்றி. தனியாக இல்லைதான் நம் மனம் தான் காரணம் ஜி. அதை நாம் நல்ல நிலையில் வைத்துக் கொண்டாலே எல்லாம் நல்லபடியாக இயங்கும்.

   மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 5. உண்மைதான். வண்டியைப் பராமரிப்பது பற்றிக் கவலைப்படுகிறோம். கணினி சரியில்லை என்றால் உடனே கவனிக்கிறோம். ஆனால் நம் உடல்நிலையைக் கவனிப்பதே இல்லை. நானும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டே.........தான் இருக்கிறேன். இன்னும் ஆரம்பிக்கவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம். அதனால்தான் நானும் என் மகனும் வேறு யாரும் இருக்கும் போது தவிர்க்க முடியாமல் பேச்சு வரும் போது இப்படி ஒரு சங்கேத பாஷையில் பேசிக் கொள்வதுண்டு. இல்லை என்றாலும் வீட்டில் கூட சும்மா உற்சாகப் படுத்திக் கொள்ள இப்படித்தான் என்னை அவன் கலாய்க்க நான் அவனைக் கலாய்க்க என்று போகும்.

   சீக்கிரம் தொடங்குங்கள் நடைப் பயிற்சியை. நம்மால் வயதாகும் போது ஜிம் அல்லது யோகா அல்லது உடற் பயிற்சிகள் செய்ய முடியாமல் போகலாம் ஆனால் முடிந்தவரை நடைப் பயிற்சி மேற்கொள்ள முடியும். செலவில்லாத பயிற்சி.

   மிக்க நன்றி

   நீக்கு
  2. எங்க நட்பா இருந்திட்டு இன்னும் நடை பயிற்சி ஆரம்பிக்கலயா :) ??? pedometer app இன்ஸ்டால் செஞ்சு உடனே ஆரம்பிங்க ..
   நான்லாம் 10000 ஸ்டெப்ஸ் நடந்துருவேன் தினமும் ..ரொம்ப முக்கியம் கண்ணுக்கு குளுமையான காட்சிகளை பார்த்திட்டே நடக்கணும்

   நீக்கு
  3. வாங்க ஏஞ்சல்!!! ஆமாம் ஸ்ரீராம் சரியா கவனிச்சுக்கவே மாட்டேன்றாரு. தன்னோட உடல் நலத்தை கேர்லெஸ்ஸா விட்டுடறாரு. முன்னாடியே கூட ஒரு பதிவு எழுதியிருப்பாரு...டாக்டர்னாலே பயம்...அஹ்ஹஹ

   நல்ல காட்சிகளைப் பார்த்துக்கிட்டே// அஹஹஹஹ் அவர் இருக்கற இடத்துல காட்சிகள் இருக்கா? ஸ்ரீராம் இருக்கா என்ன? உங்க ஏரியால...எங்க ஏரியா அதுக்குப் பெட்டர்..மான் லாம் வரும். குரங்கு வரும். நம்ம அல்லக்கைகள் நிறைய இருக்கு..ஹஹஹ்....ஆனாலும் ஏஞ்சல் நீங்க போர வழி மாதிரி வராது செம பாத் உங்கள் நடைப்பயிற்சி வழி. வாத்து அது இது நு..ஸ்ரீராமும் ஆரம்பிச்சுருவாரு இல்லைனா நாம் ஆரம்பிக்க வைச்சுர மாட்டோம்??!!!!ஹஹஹ்

   நீக்கு
  4. ஏஞ்சல்... கீதா..

   நான் முன்னாடி நடந்திருக்கேனாக்கும்! சந்தேகமா இருந்தா எங்கள் பிளாக்ல 'நடக்கும் நினைவுகள்னு" பதிவே போட்டிருக்கேனாக்கும்! தேடிப்பாருங்க... ஹிஹிஹிஹி

   நீக்கு
  5. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ச்ச்ச்சும்மா இருங்கோ... ஜெமன் பாசத்தோட வந்து கூப்பிடும்போது.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் டெய்லி 10000 காலடி நடக்கிறேன்ன்ன் என்னை விட்டிடு இப்போ வரமாட்டேன் என்றா சொல்ல முடியும்... ஸ்டேசன் வந்தால் இறங்க வேண்டியதுதான்..:) அதுவரை உடம்பை ஓவரா வருத்தாமல் ஜாலியா இருக்கோணும் மீயைப்போல:))... அஞ்சுவுக்கு எதுக்கு வோக்கிங்:) நீந்தச் சொல்லுங்கோ கீதா:)).. மீ எஸ்கேப்பூஊஊஊஊ:)

   நீக்கு
  6. @ ஹா ஹா @ஸ்ரீராம் லிங்க் கண்டுபுடிச்சிட்டேன் இதோ நடந்திட்டு வரேன் :)

   நீக்கு
  7. இந்த குண்டு பூனைங்களுக்கும் எக்ஸர்சைஸ் session வைக்கணும்

   நீக்கு
  8. @sriram ஹா ஆஹா படிச்சு முடிச்சாச்சு நீங்க நடந்த நினைவுகளை .அது 2011 அதனால் மீண்டும் நடங்க 2017 இன்னும் புது அனுபவங்களை தரலாம் :)

   நீக்கு
  9. ஸ்ரீராம் தேடிப் பாத்துடறோம்.. அது சரி ஃபோட்டோ இருக்குமா??ஹிஹிஹிஹி..

   நீக்கு
  10. ஸ்ரீராம் லிங்க் கிடைத்துவிட்டதே!!!

   நீக்கு
  11. ஏஞ்சலின் ஒரு கமெண்ட் போட்டாச்சு! அது ஒரு பாகமல்ல, இரண்டு மூன்று பாகம் எழுதிய நினைவு!

   நீக்கு
  12. ஆமாம் ஸ்ரீராம்! 4 பாகங்கள்! இப்போது 1 வதில் இருக்கிறேன்!!!நாங்க யாரு கண்டு பிடிச்சுருவோம்ல...

   நீக்கு
 6. சொல்ல மறந்துட்டேன்.. தம வாக்குப் போட்டு விட்டேன்...

  ஹா.... ஹா.... ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் உங்களுக்குத் த ம வாக்காவது போட முடிகிறதே! உங்கள் தளத்தில் பெட்டி இருப்பதே எங்களுக்குத் தெரிய மாட்டேங்குதே. எல்லா டெக்னிக்கும் பயன்படுத்திப் பார்த்தாச்சு!!

   வாக்கிற்கு நன்றி

   நீக்கு
  2. மீயும் மீயும் வாக்குப் போட்டுட்டேன்ன்ன்ன்... பரிசைக் கொடுங்கோ கெதியாப் போகோணும் நான்ன்ன்:))

   நீக்கு
  3. ஸ்ரீராம் நன்றி!!! என்ன அதிசயம் உங்கள் தளத்திலும் உங்கள் பெட்டி இன்று தரிசனம் தந்து மொய்யையும் பெற்றுக் கொண்டது...ஆச்சரியம். வெள்ளி தரிசனம்!!!

   அதிரா நன்றி வாக்கிற்கு! சரி என்ன பரிசு வேண்டுமென்று சொல்லிங்கோ!!!

   நீக்கு
 7. நிஜம்மா பதிவின் இறுதியில் தான் கண்டுபுடிச்சேன் கீதா :)
  அதுவரைக்கும் நீங்க டூவீலர் பற்றித்தான் பேசறீங்கன்னு நினைச்சேன் :)
  நான் வருமுன் காப்போம் டைப் :) போன வருஷத்திலருந்து ரொம்ப கேர் எடுக்கறேன் :)
  இங்கே எங்க ஊர்ல 40 ஆனால் உடனேஆணோ பெண்ணோ MOT செக் செய்யணும்
  வாகனங்களுக்கு வருஷாவருஷம் செய்றா மாதிரி ..The MOT test (Ministry of Transport, or simply MOT) is an annual test of vehicle safety, roadworthiness aspects and exhaust emissions required in Great Britain for most vehicle) வீட்டுக்கு லெட்டர் வரும் நமக்கு

  தினமும் நடங்க உங்களுக்கு சந்தோஷத்தை தருவதை மட்டும் செய்யுங்க ....அதிக வருத்தம் தரும் விஷயங்களை மனதில் போட்டு குழப்புவதில்லை நான் இப்போதெல்லாம் ..முந்திலாம் மரத்தை யாராச்சும் வெட்டினாலும் ஒரு வாரத்துக்கு அழுவேன் ..இப்ப எதையும் சீரியஸா எடுப்பதில்லை எல்லாவற்றுக்கும் பிரார்த்தனை கடவுள் பார்த்துப்பார் ..அதோட அவரையே எப்பவும் தொல்லைகொடுக்கவும் கூடாது பாவம் அவரும் எத்தனை பேரைத்தான் கவனிப்பார்னு நானும் உணவு கண்ட்ரோல் போட்டு வச்சிட்டேன் ..
  அடையார் ஏரியா செம அழகாச்சே அழகை ரசிச்சுகிட்டே நடங்க .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஏஞ்சல் நான் எப்பவுமே அப்படித்தான். வீட்டில் கூட எனக்கு எருமைத்தோல் என்பார்கள்!!! நிறைய சிரிப்பேன். மிகவும் பிடித்தது என்றால் நகைச்சுவை! சின்ன விஷயத்துக்குக் கூடச் சிரிப்பேன்...ஆனால் பாதிக்கும் விஷயங்கள் உங்களைப் போல் விலங்குகள் துன்புறுத்தப்படுவது, சிறு குழந்தைகள் துன்புறுத்தப்படுவது, மரங்கள் வெட்டப்படுவது என்று உணர்ச்சிவசப்பட்டக் காலங்கள் உண்டு என்றாலும் அதிக நேரம் நீடிக்காது. என் பையன் சின்ன வயதிலிருந்தே என்னைச் சிரிம்மா சிரிம்மா என்று நான் சிரித்தால்தான் அவனுக்குப் பிடிக்கும். இப்போதும்..அப்படியே. ஆம் நம் உடலைப் பேணுவதில் எனக்கும் அக்கறை உண்டு. அடையார் ஏரியா எங்கள் ஏரியா தரமணி என்றாலும் ஒரு பகுதி க்ளோஸ் டு அடையார் மிக அழகு. ஆனால் இப்போது வார்தாவிற்குப் பிறகு பச்சை குறைந்திருக்கிறது. மான்கள் நிறைய வரும். பன்றிக் கூட்டமெ இருக்கு....வீட்டருகில் நிறைய பூனைகள், குரங்குகள் எல்லாம் இருக்கு. ஐஐடி வளாகம் எங்கள் தெருவை ஒட்டி அதனால் மான்கள், குரங்குகள் வரும்.

   உங்கள் ஊரில் MOT சூப்பர். இங்கும் உண்டு தான் ஆனால் நடைமுறையில் இல்லை. இங்கும் சட்டம் எல்லாம் உண்டு ஆனால் ஊழல் பெருகியிருப்பதால் நடைமுறையில் இல்லை...

   மிக்க நன்றி ஏஞ்சல்

   நீக்கு
  2. நான் வருமுன் காப்போம் டைப் :) போன வருஷத்திலருந்து ரொம்ப கேர் எடுக்கறேன் :)// ரொம்ப நல்லது கீப் இட் அப் ஏஞ்சல்!!

   நீக்கு
 8. எவர் ரெடி???////

  ஹா ஹா ஹா ஆரம்பம் முதலே.. இது உயர்திணை பற்றிய கொன்வெஷேசனோ? இல்ல அஃறிணை பற்றியோ எனக் குழம்பிக் கொண்டே படிச்சு முடிச்சேன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஏன் வர வர வண்டி மக்கர் பண்ணுதோ?:) அடிக்கடி புளொக் பக்கம் எட்டிப் பாருங்கோ சிரிச்சுக்கொண்டே இருங்கோ:)) எதுவும் ஆகாது ஹா ஹா ஹா..

  நல்ல மகன் நல்ல அம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் இரு சக்கர வாகனம் கொஞ்சம் மக்கர் பண்ணத்தான் செய்யுது!!! ஆனால் இந்த எவர் ரெடி எப்போதும் இளமை!!!ஹஹஹ ஆம் அதிரா சிரித்துக் கொண்டே இருப்பது மிகவும் பிடிக்கும். நகைச்சுவை எனது ஃபேவரிட்!!அது சிறந்த மருந்து!!! இப்படி நானும் மகனும் நிறைய பேசுவோம்...

   மிக்க நன்றி அதிரா...

   நீக்கு
 9. ///“அது பரவாயில்லைப்பா முன்னாடி எல்லாம் 12, 15 கிலோ வரைக்கும் தாங்கிச்சு இப்பல்லாம் 8,9 கிலோ வரைக்கும் தாங்கும் அது போதுமே..இப்ப 12, 15 கிலோ தாங்கி என்ன பண்ணப் போறோம்”///
  ஹா ஹா ஹா பாவம் அத்தை:)


  ///“ரெண்டு இண்டிகேட்டர் லைட், ஹெட் லைட்?”///
  ஹா ஹா ஹா இதெல்லாம் என்னவா இருக்கும்...:)) நானும் நல்லா ரசிச்சேன் உரையாடலை... அதுசரி துளசி அண்ணனுக்கு இது புரிஞ்சிருக்குமோ?:) இல்ல எங்களை, அத்தையைப் போலத்தான் அவரும் குளம்பிப்போய் இருக்கிறாரோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:) ரைம் ஆகுது:).. பாய் பாய்.. இது வேற பாய்...:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ அதிரா... வெயிட் தூக்குவது என்பது நாம் பாரம் தூக்குவது!!! முன்பெல்லாம் 2 வயதுக் குழந்தை வரை தூக்க முடிந்தது. இப்போது ஒரு வயதுக் குழந்தையைத் தூக்குவதே சில சமயம் கஷ்டமாக இருக்கிறது!!!! அதைத்தான் அப்படி...ஆனாலும் நான் ஸ்வீட் 16 ஆக்கும்!!

   இண்டிகேட்டர்ஸ், ஹெட்லைட் என்பது என் காது கண்ணு, கைகள் எல்லாம்.

   இங்கு அண்ணாத்தை என்பது என் கணவர். துளசி அல்ல. துளசிக்கு இந்தப் பதிவை அனுப்பி அவருக்குப் புரிந்தது என்பது வேறு விஷயம். அத்தை/ராதா என் கணவரின் தங்கை.

   ஹஹஹஹ் அதிரா வந்தாலே அதிருது ல்லலல!!!! ரசித்துச் சிரிக்கிறேன் அதிரா!!

   நீக்கு
  2. //ஹஹஹஹ் அதிரா வந்தாலே அதிருது ல்லலல!!!! ரசித்துச் சிரிக்கிறேன் அதிரா!! //
   அதுக்கு முக்கியமான காரணம் எடை.. அதிரா குண்டுதானே எங்க நடந்தாலும் அந்த இடத்தில எர்த் கிவேக் வருமாம்

   நீக்கு
  3. அஹஹஹ் ஏஞ்சல் இப்படி ரகசியத்தைப் போட்டு உடைக்கலாமா!!ஹிஹிஹிஹி....அதிரா மீ எஸ்கேப்!! நான் இல்லப்பா...ஹஹஹ

   நீக்கு
 10. நல்ல வண்டி தான். நல்லாவும் செர்வீஸ் செய்து வைச்சிருக்கீங்க! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கீதாக்கா ஆமாம் செர்வீஸ் செய்யலைனா அப்புறம் கஷ்டப்படறது நாமதானே!!

   நீக்கு
 11. @Angelin

  //எங்க நட்பா இருந்திட்டு இன்னும் நடை பயிற்சி ஆரம்பிக்கலயா :) ??? pedometer app இன்ஸ்டால் செஞ்சு உடனே ஆரம்பிங்க ..
  நான்லாம் 10000 ஸ்டெப்ஸ் நடந்துருவேன்//

  வீட்டுல வேலையே செய்யமா இருக்கிறவங்கதான் இப்படி வாக்கிங்க் போவாங்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர் :) உண்மையை இப்படி படார்னு போட்டுடைக்க கூடாது :) "avargal truth :)

   நீக்கு
  2. அவர்கள் ட்ரூத் னா பின்ன சும்மாவா..அந்தப் பெயர்...ஹிஹிஹிஹி

   நீக்கு
 12. வண்டி நல்லா ஒடனும் என்றால் அடிக்கடி ஆயில்(சரக்கு) கொஞ்சம் சேர்த்து கொள்ளணும். இது அமெரிக்க அம்பியின் அட்வைஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரக்குக் கப்பல்லருந்து கசிஞ்சு மிதக்கற ஆயிலத்தானே சொல்றீங்க?!!!!ஹிஹீ...அள்ளி எடுத்துட்டு வந்துருக்கலாமோ? ச்சே அமெரிக்க அம்பி இப்படி லேட்டா அட்வைஸ் தரலாமோ??!!!!

   நீக்கு
 13. நான் தனியாக வாக் என்று செல்லுவதில்லை. காரணம் என் பொழப்பே நாள் முழுவதும் நின்று நடப்பதுமட்டுமே அதுமட்டுமல்லாமல் வீட்டிற்க்கு வந்து நின்று நடந்து கொண்டே சமைப்பதும் ஒரு நாளைக்கு 3 தடவை நாய்குட்டியை வாக்கிங்க் அழைத்து செல்வதும் இரவில் என் பெட்டி இருந்து 10 2ஒ தடவை என் செல்ல நாய்குட்டி கிழே இறங்கி சிறிது நேரம் தரையில் படுத்து மீண்டு என்னை தட்டி எழுப்பி என் பெட்டுக்கு வர முயற்சிக்கும் போது அதை தூக்கிவிடுவதுமாக இருப்பதால் தனிப்பட்ட முறையில் வாக்கிங்க மற்றும் உடற்பயிற்சி செய்வதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் இப்படி எல்லாம் வேலை செய்யலைனா இனியவர்கள் ரொம்பவே இனியவர்களாயிடுவாங்க....

   நீக்கு
 14. சமத்துப் பையன் உழைக்கும் மதுரைத் தமிழன்!!! எவ்வளவு வேலை!!! வீட்டிலும் வெளியிலும்..திருஷ்டிக் கழிச்சுருவோம்!!!

  பதிலளிநீக்கு
 15. என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது முதலிலேயே புரிந்து விட்டது இந்த வண்டியைக் கூட்டிப் போக ஒரு கருப்பு வண்டியும் படமாக இருக்கிறதே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜிஎம்பிசார் ...ஹஹஹ அந்த வண்டியின் படம் பேட்டரி ஃபார் லைஃப் எனர்ஜி!!! என்று வருகிறது அல்லவா வாழ்க்கைக்கும் பேட்டரி அவசியமாயிற்றெ அதான் படம் சார்....ஹப்பா சார் நீங்கள் ஊதித்தது மிக்க மகிழ்ச்சி சார்!!!யாராவது ஒருத்தர் ஊகித்துவிடுவார்கள் என்று நினைத்தேன்!! நீங்கள்!!

   நீக்கு
 16. அருமையான வண்டி
  தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

  பதிலளிநீக்கு
 17. வண்டித்தத்துவம் எல்லாம் அருமையாக இருக்கு ஆனால் காலவேகத்தில் எங்கே சேர்விஸ்பண்ண முடிகின்றது)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் தனிமரம் நேசன் உண்மைதான் அதனால்தான் செர்வீஸ் செய்ய வேண்டும் என்பதை இந்தக் கால ஓட்டத்தில் நினைவுபடுத்தத்தான்!!! மிக்க நன்றி நேசன் தங்களின் கருத்திற்கு

   நீக்கு
 18. கிலோ கணக்கு வந்ததும், உங்க எடையை விட்டுட்டீங்களேன்னு சொல்ல வந்தால் .... :))))

  கொஞ்ச நாளைக்கு வண்டியைத் தொடர்ந்து பராமரிக்க ஆரம்பிச்சிட்டா, அப்புறம் அதுவே பழகிடும், பிறகு நில்'லுன்னாலும் நிக்கமாட்டோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சித்ரா!! பல வருடங்களாக வாக்கிங்க் மற்றும் யோகா மூச்சுப் பயிற்சி செய்து வந்தேன். இப்போது ஒரு சில காரணங்களால் யோகா செய்வதில்லை ஆனால் நடைப்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி...தொடர்கிறேன்.

   ஹிஹி அது என் எடை அல்ல சித்ரா...நான் தூக்கும் பொருட்களின் எடை!! ஹிஹி..என் எடை ...வேண்டாம் பொதுவெளியில் சொல்லக் கூடாத விஷயமப்பா....ஹிஹீஹ்

   நீக்கு
 19. ஹா ஹா ஹா , நிச்சயமாக கார் இல்லை வேறு ஏதோ என்று புரிந்தது. ஆனாலும் நம் உடம்பு என்று யூகிக்க முடியவில்லை. நல்ல டிவிஸ்ட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி பானுமதியக்கா....ரசித்தமைக்கு ம் கருத்திற்கும்

   நீக்கு
 20. நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன்....ஹும்! எப்படியோ நேரத்தை திருடி வாரத்தில் மூன்று முறை சுதர்ஷன் க்ரியா செய்து விடுகிறேன். அதுவும் பராமரிப்புதானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட சுர்சனகிரியா செய்கிறீர்களா ரொமப்வே நல்லது பானுமதிக்கா...நல்லதொரு பராமரிப்புதான்!!! நடைப்பயிற்சியும் மேற்கொள்ளுங்கள். அதுவும் புத்துணர்வு தரும் ஒன்றுதான்...மிக்க நன்றி அக்கா கருத்திற்கு

   நீக்கு
 21. நல்ல வண்டி. அனைவருக்கும் நல்ல சிந்தனை தந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்கள் கருத்திற்கு. உண்மைதானே இல்லையா?

   நீக்கு
 22. சிந்திக்கவேண்டிய பதிவு. "உள்ளமே கோவில் ஊனுடம்பே ஆலயம்". அதை எல்லோரும் பராமரிக்க மறந்துபோய்விடுகிறோம்

  பதிலளிநீக்கு
 23. திருப்பங்கள் நிறைந்த...சுவாரஸ்யமான பதிவு...


  நீங்க பேசும் விதம் ரொம்ப அழகா இருக்கு...  பதிலளிநீக்கு