வெள்ளி, 6 ஜனவரி, 2017

நாலுகால் செல்லங்களுக்கும் சனி தசையா??!!!

"ஹேப்பி நியூ இயர் கீத்!!!"

"ஹேய் ஹேப்பி நியூ இயர் மாலு…"

"சனிப்பெயர்ச்சி புதுவருஷப் பலன் எல்லாம் பார்த்தியா நீ?"

இது என் மாமா + அத்தை மகள் (இருவழி உறவு), “சோசியப் பித்து”வின் அலைபேசி அழைப்பு. இதென்னடா இது?! புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லிவிட்டுக் கூடவே புத்தாண்டு இனாமாக ஒரு வெடிகுண்டாக இருக்குமோ?

நான் இந்த சோசியம் பக்கம் பொழுது போக்காகக் கூடப் போகும் பழக்கம் இல்லாதவள். ஆனால், என் தங்கையோ,

“இங்கப் பாரு உனக்கு நம்பிக்கை இல்லாம இருக்கலாம், ஆனா ப்ளீஸ் நான் சொல்லறத கொஞ்சம் கேக்கறியா. ஆதித்(என் மகன்) இப்போ ரெசிடென்சி ட்ரெயினிங்க் அப்ளை பண்ணறான் இல்லையா? அவனுக்கு ஏழரை சனி கடைசிக் கட்டத்துல இருக்கு. இப்போலருந்து 2017 முழுசும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கெட்ட காலம் (ரொம்ப அவள் இழுத்த விதம்!)”

Image result for சனி தசை
படம் இணையத்திலிருந்து

அட! இதென்ன பெரிய விசயமா? எப்போதும் இப்படித்தானே! என் பையன் ரெசிடண்ட்ஸி ட்ரெயினிங்க் அப்ளிக்கேஷன் போடுகிறான், சனி எங்கள் வீட்டில் பெர்மனென்ட் ரெசிடென்ட் ஆகப் போகிறார் என்று சொல்லுகிறாளோ!!!

இப்படித்தான் அவள் என்னை அடிக்கடிக் கூப்பிட்டு எங்கள் மூவருக்கும் அடுத்தடுத்துக் கெட்ட காலம் என்று பல வருடங்களாகச் சொல்லி வருகிறாள். இடையில் எப்போதேனும் நல்ல காலம் பிறக்கிறது என்பாள். இப்போது மீண்டும் கெட்ட காலம் என்கிறாள். இவ்வளவு வருஷம் வாடகை கொடுத்தும், கொடுக்காமலும் பேயிங்க் கெஸ்டாக எங்கள் வீட்டில் குடியிருந்த சனி, இப்போது நிரந்தரமாகக் குடியிருக்கப் போகிறார் போல! இருந்துவிட்டுப் போகட்டுமே!

“அதெல்லாம் ஒன்னும் அவரு பெர்மனெண்டா யார் வீட்டுலயும் இருக்க மாட்டார்…….கீதா ப்ளீஸ்டி சனிக்கிழமை எள்ளுக் கிழி விளக்கு ஏத்துடி…”

ஓ! அதுவும் சரிதான் எங்கள் வீட்டில் பொழுது போகாத போது, அவ்வப்போது சிறிது நாட்கள் வேறு வீட்டிற்குப் போய் வருவது வழக்கம்தான். அப்படியே வேறு வீட்டிற்குப் போனாலும் அவர்கள் பூசைகள் செய்து வேப்பிலை அடித்து துரத்திவிடுவார்கள் போலும். மீண்டும் எங்கள் வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுவார்.

ஏனென்றால், எங்கள் வீட்டில் அடி நாளில் இருந்து இப்போது வரை, ஒரு அடி மேலே முன்னேறினால் 4 அடி இல்லை, 10 அடிக்கும் கீழே அதலபாதாளத்தில் நாங்கள் சறுக்கி விழுகிறோம். பழகிவிட்டது!

நாங்கள் எதுவும் சொல்லாமல், அலுத்துக் கொள்ளாமல், அவரைக் கண்டும்கொள்ளாததால், அவர் பாட்டுக்கு ஹாயாக விளையாடிக் கொண்டிருப்பார்! பாவம் இருந்துவிட்டுப் போகட்டுமே! அவரையும் ரேஷன் கார்டில் சேர்த்து அவருக்கும் ஒரு ஆதார் அட்டை வாங்கிவிட்டால் ஆயிற்று!

என் தங்கையோ என்னிடம், சனி தசை, ஆட்டிப் படைக்கும் அஷ்டமத்துச் சனியா, கண்டகச் சனியா, அர்தாஷ்டமச் சனியா என்று பார்க்க வேண்டும் என்றும், பரிகாரம் செய் என்றும் கட்டளை இட்டாள். என் மகன் ஆதித் கால்நடை மருத்துவன் அல்லவா, அதனால், நாய், பூனை, இப்படி நாலுகால்களுக்கும் கூட ஏழரை சனி, சனி தசை எல்லாம் உண்டு என்று புதியதாக மேலதிகத் தகவல் சொல்லி வியப்படைய வைத்தாள். மிகவும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி, காலபைரவரை வேண்டிக் கொள்ளச் சொன்னாள்.

அட! சனி இப்படி எல்லாம் கூட ஆள்மாறாட்டம் வேற செய்வார் என்பது தெரியாமல் போயிற்று. இல்லை என்றால், அவருக்குக் கண்டுபிடிக்க முடியாதபடி நாங்களும் மாறு வேஷம் போட்டிருப்போமே! அது சரி நாலுகால்களுக்குமா சனி தசை? இதென்ன புதுக்கதையாக இருக்கிறதே!! என் செல்லங்கள் கண்ணழகிக்கும், ப்ரௌனிக்கும் உடனே ஜாதகம் குறிக்க வேண்டும்! நாலுகால் பிரியர் ஸ்ரீராமிற்கும், சன்னி என்னும் அழகான பிள்ளையை வளர்க்கும் மதுரைத் தமிழனுக்கும், பல நாலுகால் செல்லங்களையும் வளர்த்து உதவும் ஏஞ்சலுக்கும், கோழி வளர்க்கும் அன்பே சிவத்திற்கும் தகவல் சொல்லி அவர்கள் செல்லங்களுக்கு என்ன தசை என்று கேட்க வேண்டும்!! கில்லர்ஜி அவரது சோதிடர் சோனைமுத்துவைப் பார்க்கச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அவருக்கு ஒரு பதிவு தேறிவிடும்!

என் தங்கை பல கோயில்களுக்கு வேண்டச் சொல்லி, பரிகாரங்கள் பட்டியல் சொன்னாள். பரிகாரம் என்பதை விட பெரிய செலவுப் பட்டியல்! எனக்குக் கடவுள் நம்பிக்கை அற்றுப் போயிருப்பதாகச் சொன்னாள். பலரும் இப்படித்தான், சோசியத்தை நம்பவில்லை என்றால் கடவுள் நம்பிக்கை இல்லை என்று முடிவு செய்துவிடுகிறார்கள்!

நம்மை மீறிய சக்தி, இறையுணர்வு எனக்கு எப்போதுமே உண்டு. வியாபார உலகில்தான் இந்த இடைத்தரகர்களுக்குக் கமிஷன் அழ வேண்டியிருக்கிறது என்றால், இறைவனைத் தொழுவதற்குமா என்ன? இறைவனை மிஞ்சிவிடுமா என்ன இந்தக் கோள்கள் எல்லாம்?! எனக்குச் சுப்ரீம் கோர்ட்டிற்குப் போய்த்தான் பழக்கம்!

வேதனைகள் பழகிவிட்டன. நன்றாகவே புடம் போட்டு மனதைப் பக்குவப்படுத்திவிட்டன. யாருக்குத்தான் இல்லை வேதனைகள், இடையூறுகள், இன்னல்கள்! உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!

சனி தசையோ இல்லை வேறு ஏதேனுமோ இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். இத்தனை வருடங்களாக அவற்றைக் கண்டு கொள்ளாதது போல் இப்போதும் அப்படியேதான். நான் இறைவனை நேசிக்கிறேன். இறைவனை இறைவனுக்காக அன்பு செய்கிறேன். தனிப்பட்ட வேண்டுதல்கள் கிடையாது. ஒரு தோழமை உணர்வுடன் அவரை வழிபடுகிறேன். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எப்போதுமே உண்டு!

புதுவருடத்தில் நல்லதே நடக்கட்டும். நல்லதே நடக்கும் என்ற நேர்மறை எண்ணத்துடன் தெளிவாக இருக்கும் மனமெனும் நீர்நிலையில் ஓர் எதிர்மறைக் கல்லை விட்டெறிந்து அதனால் ஏற்படும் சலனத்தைக் கண்டு பயந்து அந்தக் கல்லை எடுத்தெறிய வேண்டி அதனைத் தேட மூழ்கினால் சேற்றில் மாட்டிக் கொண்டு மீண்டும் குட்டையைக் குழப்புவது போன்றுதான்! ஒரு சிறு கல் போதுமே! அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்! குழப்ப, குழம்ப வேண்டாம். பொதுவாக, உளவியல் படி பார்த்தால், மனித மனம் எதிர்மறையை வெகு எளிதாகப் பற்றிக் கொள்ளும்!

சோசியம் அறிவியல் அடிப்படையில் ஒரு பாடமாக இருக்கிறதுதான். நான் அதைக் குறை சொல்ல மாட்டேன். அதில் நாட்டம் உள்ளவர்கள் கற்பதோ, அதை நம்புவதோ அவர்களது உரிமை. ஆனால், தனிப்பட்ட முறையில் நான் சோதிடம் பக்கம் செல்வதில்லை. மனதைக் குழப்பிக் கொள்வதும் இல்லை. நடப்பதை அப்படியே எற்றுக் கொண்டு செல்கிறேன். நேர்மறை எண்ணமும், நம்பிக்கையுமே வாழ்க்கை!

எல்லோரையும் நேசிப்போம். இயற்கையை நேசிப்போம்! புத்துணர்வுடன் வாழ்வோம். எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களுடன் இந்தப் புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்று இவ்வாண்டையும் கடந்து செல்வோம்!  
(கீதா சாம்பசிவம் அக்காவின் சோசியம் பார்க்கலையோ சோசியம் என்ற பதிவினால் இந்த கீதாவிற்குத் தேறிய ஒரு பதிவு!!! நன்றி கீதாக்கா!!)

-----கீதா 
46 கருத்துகள்:

 1. "புதுவருடத்தில் நல்லதே நடக்கட்டும்.
  எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களுடன் இந்தப் புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்று இவ்வாண்டையும் கடந்து செல்வோம்!" என்பதே எனது எண்ணமாகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ ஜீவலிங்கம் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்!

   நீக்கு
 2. நான் சோழந்தூர் சோசியர் சோனைமுத்து வீட்டில்தான் இருக்கிறேன் - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைச்சேன்.....நீங்க அங்கதான் இருப்பீங்கனு தெரியும்!! அங்க உக்காந்து பதிவுதானே எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள்!!

   எப்படி நம்ம சோசியம்!

   நன்றி கில்லர்ஜி கருத்திற்கு!

   நீக்கு
 3. என்ன இப்படி சிம்பிளாச் சொல்லிட்டீங்க... நானே, ஏழரை நாட்டுச் சனி, இந்த வருஷம் சுத்தமா நேரம் சரியில்லை என்பதெல்லாம் கேள்விப்பட்டு என்ன செய்யறது என்று யோசிச்சுக்கிட்டிருக்கேன்... பரிகாரம் என்ன பண்ணறதுன்னு தெரியாமல், சரி பலகாரமாவது பண்ணுவோம்னு, பலகாரம் பண்ணிக்கிட்டிருக்கேன். ஏதாவது வழி சொல்லுவீங்கன்னு பார்த்தால்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! சனிக்கும் சேர்த்துதானே பலகாரம் செய்கிறீர்கள்!!! என்ன பலகாரமோ??!!!! உங்கள் பலகாரத்தைப் பொருத்து அவர் உங்களுடன் கண்டினியூ பண்ணுவாரா இல்லையானு...பரிகாரம் சொல்லியிருக்கேனே...கண்டு கொள்ளாமல் இருங்கள், அவரும் கண்டு கொள்ள மாட்டார்!! அது சரி நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அவருக்கும் விசா வாங்கிவிடுங்கள்! பார்த்து பல பெயர்களில் இருக்கிறார்!!!

   மிக்க நன்றி நெல்லைத் தமிழன் கருத்திற்கு!

   நீக்கு
 4. மனிதர்களில் பாதி பேர்களுக்கு நாலுகால்களைப் பார்த்தால் ஆவதில்லை. கல்லை உடனே கையில் எடுத்து விடுவார்கள். அப்படிப் பார்த்தால் அவற்றுக்கு எப்பவுமே சனி தசைதானே! ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம்! அவற்றிற்கு எப்போதுமே ....பாவம் அவை! ஆனால் காக்கையை பைரவர்கள் நன்றாகத் துரத்துவார்கள்!!!

   மிக்க நன்றி ஸ்ரீராம்!!

   நீக்கு
 5. பரிகாரம்னு ஏதாவது புதுசா காரம் வந்திருக்கா என்ன! ஹிஹிஹி எப்பவும் தீனி ஞாபகம் எனக்கு! நாலுமுழ நாக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் என்னையும் அந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்! நானும் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் எல்லாம் சுவைத்திட ஆர்வம் உள்ளவள் நல்ல தீனிப்பண்டாரம்தான்....

   நீக்கு
 6. எனக்குத் தெரிந்த நிச்சயம் பலனளிக்கக்கூடிய பரிகாரம் ஒன்று செய்யுங்கள் .
  கை மேல் பலன் கிடைக்கும் .
  இது நான் சொல்லி நிறைய பேர் பயனடைந்துள்ளனர்.
  அது என்னவென்றால் .........
  அ வில் ஆரம்பித்து யா வில் முடியும் பெயர் கொண்ட சக பெண் பதிவர் அவர்களுக்கு ஒரு பவுனில் நகை வாங்கிக் கொடுத்தால் ஒரே வாரத்தில் உங்கள் அனைத்துப் பிரச்னைகளும் தீரும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அஹ்ஹஹ்ஹஹஹ் அது சரி...அப்படியென்றால் இன்னும் மோடியின் டீம் ஐ டி பீப்பிள் உங்கள் வீட்டிற்கு எப்படிப் படையெடுக்காமல் இருந்தார்கள் என்று தெரியலையே....இப்போ வேற பகிரங்கமாகச் சொல்லிவிட்டீர்களே!!!

   அ வில் ஆரம்பித்து ணா அல்லவா ஸோ அது நீங்க இல்லை!! பரிகாரம் கான்சல்ட் ஹிஹிஹிஹி

   நீக்கு
 7. ஹிஹிஹி, என்னால் உங்களுக்கு ஒரு பதிவு தேறி இருக்கிறது. அதுக்கு என்ன கொடுக்கணுமோ கொடுத்துடுங்க! ஏன்னா எனக்குச் சுக்கிரன் கூரையைப் பொத்துக்கொண்டு கொடுப்பான்னு ஜோசியத்தில் சொல்லி இருக்காங்க! :P

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அஹ்ஹஹ அக்கா!! சுக்கிரன் கூரையைப் பொத்துக் கொண்டு கொடுப்பான்னு பகிரங்கமா சொல்லி ஏன் மாட்டிக்கறீங்க..கேஷ் லெஸ் சுக்கிரன் உங்களுக்கு இப்ப கூரையைப் பிச்சுக்கிட்டுத் தரமாட்டார்...ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன்தான்!!! சரி நானும் அதே சுக்கிரன் கிட்டயே சொல்லி உங்களுக்கு கொடுக்கச் சொல்லிடறேன்....ஹஹஹ்ஹ் இப்ப சுக்கிரன் தான் பே டிம்!!!!

   நன்றி கீதாக்கா

   நீக்கு
 8. பதில்கள்
  1. ஆம் சகோ சோதிட நம்பிக்கை இல்லை! மிக்க நன்றி கரந்தை சகோ!

   நீக்கு
 9. நேர்மறை எண்ணமே நலம் பயக்கும். மற்றவற்றை விடுப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா! உண்மையே! மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் கருத்திற்கு!

   நீக்கு
 10. மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
  நடப்பது நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நடப்போம்...

  பதிலளிநீக்கு
 11. நல்லதொரு பகிர்வு.....

  பயமுறுத்துவதற்கென்றே சிலர் உண்டு. என்னுடைய உறவினர் ஒருவர் வரும்போதே நான் அலறுவேன் - வந்த உடன் அவர் சொல்வது ”உனக்கு நேரம் சரியில்ல!” மனதுக்குள் சொல்லிக் கொள்வேன் - “நீங்க வந்தாச்சு... அப்புறம் எங்கே நேரம் சரியா இருக்கும்னு”

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ்ஹ்ஹ் வெங்கட்ஜி தங்களின் கருத்தை வாசித்தவுடன் சிரித்து விட்டோம்.....ஆம் உண்மைதான் இப்படி ஒரு சிலர் இருக்கிறார்கள்...பயமுறுத்த அதுவும் எதிர்மறையாகச் சொல்லி....நானும் கூடியவரை இதுபோன்றவர்களைத் தவிர்த்துவிடுவேன்...

   மிக்க நன்றி வெங்கட்ஜி வருகைக்கும் கருத்திற்கும்...

   நீக்கு
 12. தன்னம்பிக்கை இல்லாதவர்களும் என்னதான் சொல்கிறார்கள் என்று பார்ப் போமே என்னும் ஆர்வக்கோளாறு உள்ளவர்களுமே சோசியம் பார்க்கிறார்கள் பலருக்கு வருமானத்துக்கும் அது ஒரு வழிஉங்களுக்குத் தெரியுமா ஒரு கால கட்டத்தில் நானும் கைரேகை ஜோசியம் கற்றுக் கொள்ள முயற்சித்து பலருக்கும் அவர்கள் நம்பும்படி ஜோசியம் கூறி இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 13. some people are really silly
  but some others are not like this
  I have an uncle who is very popular for he will be given apt spiritual solutions
  he never threatens people
  this gives him more clients

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கஸ்தூரி தங்களின் கருத்திற்கு..ம்ம் அப்படி ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

   நீக்கு
 14. இருக்கிற ரெண்டு சனில... எந்தச் சனி என்று புரிவதில் கொஞ்சம் சிரமமாக இருந்தது..

  பதிலளிநீக்கு
 15. வாரந்தோறும் சனி வருகிறதே, அது வேற சனியா? - இராய செல்லப்பா நியுஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹ்ஹஹஹ் சிரித்து விட்டேன்...வாரந்தோறும் வரும் சனியில் தானே இந்தச் சனிக்குப் படைக்கச் சொல்லுகிறார்கள்!!

   நீக்கு
 16. நல்லதே நடக்க வேண்டும்.
  முழு இறைநம்பிக்கை இருப்பதால் நான் சோதிடம் எல்லாம் பார்ப்பதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சிவகுமாரன் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். எனக்கும் அப்படியே!!!

   நீக்கு
 17. நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்து விடும். ஜோதிடத்தில் நம்பிக்கையும், பரிகாரமும் என்பது அவரவர் படும் கஷ்டத்திற்கேற்ப மனதினில் தாக்கத்தை உருவாக்கும்.

  பதிலளிநீக்கு
 18. நாலு கால் செல்லங்களுக்கும் தோஷமா :)
  எனக்கு தெரிஞ்ச ஒரே தோஷம் சந்தோஷம்தான் :)

  நான் சொல்றேன் பரி காரம் ஒண்ணு பிரபல ஜோசியர் சொன்னார்னு கிளப்பி விடுவோம் ..

  அதாவது ஒவ்வொருவரும் தினமும் ஒரு நாலுகாலுக்காவது ஒரு வாய் சாப்பாடு போடணும் அப்போ எந்த சனியும் அணுகாது ..இதை கிளப்பி விட்டா போதும் அந்த ஜீவன்க சாப்பாடு போட்டவங்களை மனசார வாழ்த்தும் சனி கண்ணை மூடிக்கிட்டு ஓடிடும் ..
  எல்லாம் அந்த பச்சை புடைவை விக்க ஒரு ட்ரெண்ட் கிளப்பி விட்ட மாதிரி ..தான் :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சலின் அப்படித்தனே எல்லோரும் காக்கைக்கும், பைரவர்களுக்கும் உணவு வைப்பது. அல்லாமல் அவற்றிற்கு நாம் கொடுக்க வேண்டும் என்று பலரும் கொடுப்பதில்லை. பசுவிற்குக் கொடுத்தால் விசேஷம், காக்கைக்குக் கொடுத்தான் சனி காப்பாற்றுவார், பைரவருக்குக் கொடுத்தால் நல்லது நடக்கும் என்றுதானே பலரும் கொடுக்கிறார்கள். அல்லாமல் விலங்குகளிடம் அன்புடன் செய்பவர்கள் சிலரே. கிளப்பிவிட்டாப் போச்சு! அப்படி ஒரு மூட நம்பிக்கையாலும், சோசியத்தாலும் நலல்து நடந்தால் சரிதானே!! நேர்மறையாகவே பார்ப்போம் இல்லையா...கருத்தை ரசித்தேன் ஏஞ்சல்!

   நீக்கு
 19. ஜோதிடம் என்பது அவரவர் நம்பிக்கை எனக்கு கடவுள் நம்பிக்கை சிலருக்கு தான தர்மத்தில் சிலருக்கு புண்ணியஸ்தலங்கள் தரிசித்தால் அதுபோல ..ஆனால் எந்த நம்பிக்கையும் அளவோடு இருக்கணும் ..அதிலேயே மூழ்கிவிடக்கூடாது

  பதிலளிநீக்கு
 20. ஹாஹா ப்லாகர்கள் வளர்க்கும் நாலு கால் செல்லங்களுக்கும் சனி திசை என்று படித்ததும் சிரித்துவிட்டேன். சே பாவம் பத்ரமாயிருக்கட்டும். :)

  நேர்மறை எண்ணங்கள் அவசியம். நன்றி கீத்ஸ் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தேனு தங்களின் கருத்திற்கு நேர்மறை எண்ணங்களே வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்!!

   நீக்கு
 21. சனி கூட பேயிங் கெஸ்டா தானே இருப்பார் பர்மனென்டாலாம் அவரால இருந்துகிட முடியாதே. பதிவு+பின்னூட்டங்கள்+ரிப்ளை பின்னூட்டங்கள் செம தூள்

  முதல்ல இந்த பதிவு பக்கம்வராம உங்க இன்னொரு பதிவுபக்கத்தால போயி கமெண்டு போட்டுகிட்டேன். இன்று சனிபகவானின் பார்வையில் சிக்கிகிட்டேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ் சனியின் பார்வையில் சிக்கினதுனால இந்தப் பக்கம் வந்துட்டீங்களே!! அந்த சனி உங்களைக் காப்பாற்றுவார்!!!

   மிக்க நன்றி ஆல் இஸ் வெல் நண்பரே!!! முதல்வருகைக்கும்!!!

   நீக்கு