வெள்ளி, 30 டிசம்பர், 2016

சமையலறை ஊழலும், புரியாத பெயரும், மோடியும்

ஒரு மாதம் முன், எனது கணவரின் தம்பி மகள் அவள் படிக்கும் நடனத்தில் முதுகலைப் பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக, ஆய்வு ஒன்றிற்காக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள்.

எங்கள் குடும்ப வீட்டில் ஒரு சிறு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் குடும்பத்துடனான விருந்து அது. இதில் சில வயதானவர்களும் இருந்ததால் வட இந்திய உணவு வகைகளுடன் தென்னிந்திய உணவு வகைகளும் செய்திருந்தேன். குழுவில் மற்றொருவரும் சப்பாத்தி கொண்டு வந்துவிட்டதால் சப்பாத்தியும், அதற்குத் தொட்டுக் கொள்ளச் செய்தவையும் மீந்து விட்டது. அன்று இரவும், மறு நாளும் ஏதோ நாள், கிழமை, திதி அது இது என்று சொல்லி யாரும் பகிர்ந்து எடுத்துச் செல்லவில்லை. என்னைப் போன்றவர்கள் “நீங்க ஏதாச்சும் செய்வீங்க” என்று சொல்லி, இந்தச் சமாச்சாரங்கள் எதுவும் பார்க்காத, பின்பற்றாத என் தலையில் கட்டப்பட்டது!

20 சப்பாத்தியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். சப்பாத்திகள் என்னைப் பார்த்து, நீதான் ஏதேதோ உரு மாற்றிப் பெயர் வைத்து காமா சோமானு என்னவோ செய்வியே அப்படி உனக்கு ஒரு சவால் என்று என்னை ஏளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

“ஓ பெரிம்மா…ப்ளீஸ் இப்போ சப்பாத்தி வேணாம் பெரிம்மா”

“அடப்பாவி நானும் அப்பாவும் மட்டுமே இத்தனையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதுவும் நாங்க ரெண்டு பேரும் ச்ச்ச்ச்ச்சோ ச்வீட்”

ஊழல்களின் செல்ல நோட்டுகளான 500ம், 1000மும் செல்லா நோட்டுகளாகியிருக்கும் நேரத்தில்....

ஹும், மோடி இப்படியான செல்லா சப்பாத்திகளுக்கும், உணவுவகைகளுக்கும் அபராதம் ஏதும் விதித்துவிடுவாரோ? உணவு வங்கி என்று ஆரம்பிப்பாரோ? யார் வீட்டிலேனும் உணவு மீந்தால், க்ளீன் இந்தியா அதனால் அதைத் தெருவில் எறியக் கூடாது. குளிர்சாதனப்பெட்டியில் பதுக்கக் கூடாது! தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம், நமக்கு எதிரியான பாக்கிஸ்தானிலேயே ஒன் டிஷ் லா போட்டான். நாம் மட்டும் சளைத்தவர்களா என்ன? அதனால் அதிகமாக மீறும் உணவினை அழகாக பேக் செய்து, காலாவதியாகும் தேதி எழுதி, உடனே உணவு வங்கியில் கொண்டு சேர்க்கவும் என்று திடீரென்று ஓர் ஆணை இட்டால்? சென்னை முழுவதும் பெரிய வரிசை நிற்குமே! என்று அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் முடிச்சுப் போட விபரீதமான எண்ணங்கள் தோன்றியது.

மகனிடம் பேசினேன். உடனே அவன் பேசாம மோடிகிட்ட, மருந்துக்கெல்லாம் காலாவதியாகும் தேதி கொடுக்கறா மாதிரி நோட்டுலயும் காலாவதி தேதி அடிக்கச் சொல்லிடு, நீயும் சப்பாத்தில காலாவதி தேதி போட்டு தப்பிச்சுருலாம்….அதுவும் சப்பாத்திய நீ பதுக்கினா மோடி என்ன வந்து பார்த்துட்டா இருக்கப் போறாரு” என்று என்னைக் கலாய்த்தான்.

டேய் என்னடா இந்தச் சப்பாத்திய என்ன பண்ணுறதுனு ஐடியா கொடுனா இப்படி ஏடாகூடமா சொல்ற..ஏதாவது ஐடியா கொடுடா

ம்மா அந்த 2000 ரூபாய் நோட்டைக் கொஞ்சம் பாரு……நல்லா பாருமா…”

அட பரவாயில்லையே..…முன்னாடில்லாம் மில்க்மெய்ட் டின்னோட ஒரு பேப்பர் வித வித ரெசிப்பியோட வரும். நான் கூட ரெசிப்பி பார்த்துதான் வாங்குவேன். அது மாதிரி….நோட்டுல ஏதாவது ரெசிப்பி வந்துருக்கோ லென்ஸ் வைச்சுப் பார்க்கணுமோ?!

“ஐயோ அம்மா 500, 1000 ஒழிச்சுட்டு, ரெண்டையும் கலக்கி 2000 ஆக்கிருக்கார்ல புதுசா அதச் சொன்னேன்….…….ம்மா…ம்மா வெயிட்….2000…நோட்டுல ரெசிப்பியா நல்ல ஐடியா……நல்ல டிமான்ட் இருக்குமே.. போணியாகுமே..….”

“என்னடா நீ... அது ஜனகராஜ் ஸ்டைல்டா…எல்லா ஸ்னாக்ஸ்லயும் 100 கிராம் போட்டு நல்லா கலக்கி அதுல 100 கிராம் கேப்பாரு..காலாவதியானது! ஹும் அதே மாதிரி சமையல்ல மீந்தத செஞ்சா.. ஏண்டா அது அரதப் பழசு எரிச்சகறிடா…”

“போம்மா எது சொன்னாலும் ஒரு பேரைச் சொல்லிடற.. ஆள விடு…”

முதலில் முந்தைய தினம் கலந்து கொண்ட உறவினரில் என்னைப் போன்று ஜாலியாக, எந்த மீன மேஷமும் பார்க்காமல் ருசித்துச் சாப்பிடுபவர்களுக்கு அழைப்பு விடுத்தேன்.

‘ஹேய் புதுசா ஒன்னு ட்ரை பண்ணறேன்… ஸோ வந்துருங்கப்பா.”

சோதனை எலிகள்?…..ம்ம்ம் அப்படியும் வைத்துக் கொள்ளலாம்!

எப்போதுமே இப்படித்தான். நான் புதிதாக ஏதேனும் செய்வதாக இருந்தால் இவர்களுக்குக் கண்டிப்பாக அழைப்பு உண்டு.

குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தேன். ‘குளிர் தாங்கல….குளிரிலிருந்து எப்போது எங்களை வெளியில் எடுப்பாய்’ என்று என்னை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன சன்னா மசாலா, கோஃப்தா, வெந்த வேர்க்கடலை காய் சாலட், கொத்தமல்லி புதினா சட்னி.

எல்லாவற்றையும் வெளியில் எடுத்தேன். என்னவோ செய்தேன். அது ஊழல் ரகசியம்! வெளியில் சொல்ல முடியுமா? மோடியிடம் நீங்கள் போட்டுக் கொடுத்துவிடுவீர்கள்!

உருவை மாற்றிய பிறகு, அதற்கும் மேலே உரு தெரியாத அளவிற்குப் பச்சைப் போர்வை போல் கொத்தமல்லி தூவினேன். கோ க்ரீன்!! ஆங்காங்கே பொடியான வெங்காயம் தூவினேன். மேலே ஆங்காங்கே ஒரு ஸ்பூன் கெட்டித் தயிர் விட்டேன். வெள்ளைத் தயிரை அப்படியே வைத்தால் அழகாய் இருக்குமோ? அதனால், தயிரின் மேல் தக்காளி சாசை ஒரு பொட்டு போல் வைத்து, நடுவில் ஒரு சப்பாத்தியை கோன் போல சுருட்டி நுனி பாகத்தை நடுவில் செருகி, வைக்க அது அதிசயமாய் நிற்க, அதன் மேல் பாகத்தில் பூ சாடி போல் இருந்த வாயில் கொத்துமல்லித் தழைகளைக் காம்புடன் நிற்க வைத்து…அலங்காரமாக வைத்தேன்.
எப்போதுமே புதிதாய் ஒன்று செய்ததும் அதற்குப் புரியாத மொழியில், புரியாத வகையில் ஒரு பெயர் சூட்டும் நிகழ்வை மனதில் நடத்துவது போல் அன்றும் அவர்கள் வரும் முன் மனதிற்குள் நிகழ்த்தினேன்! சூட்டினேன்!

இந்த மீந்ததற்கு மாறுவேடம் இட்டு இப்படி அலங்காரமாக்கி, புரியாத பெயர் வைத்து சேல் போட முயன்றேன். அப்படியேனும் போணியாகுமா என்ற நப்பாசைதான்!

ஒவ்வொருவராக வந்து எட்டிப் பார்த்தார்கள்.

“ஹும் என்னத்தெல்லாமோ கலந்து காமா சோமானு வைச்சுருக்கா” இது என் அப்பா…

“வாவ்! அண்ணி கலக்கிட்டீங்க போங்க. என்னென்னவோ கலர் கலரா இருக்கே ஸ்பீக்கர் ஷேப்பை பூச்சாடியாக்கி….ம்ம்ம்”

“ஓ! பெரிம்மா யு ரியலி ராக்! ஒல்ட் வைன் இன் ந்யூ பாட்டில்! ஆம் ஐ ரைட்” என்று சில கிளிக்ஸ் எடுக்க முயன்றாள்.

ஐயோ ரகசியம் வெளியாகிடுச்சே! “ஹேய் உன் ஃபேஸ்புக்ல எல்லாம் போட்டுறாத”

“ஓ! அண்ணி அப்ப நேத்து மீந்ததா…..” என்று அவர்கள் முகங்கள் அஷ்ட கோணலாக...

“ஹேய் அப்படில்லாம் இல்லப்பா…….”

பெண்ணின் நண்பன் வந்தான்.  நேரே வந்து இதன் அழகில் மயங்கி(??!!!) ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டான்! ரியலிட்டி ஷோவில் முடிவுகளை வெளியிடத் தாமதிக்கும் அந்தக் கடைசி தருணங்களில் பின்னணியில் ஒரு இசை ஒலிக்குமே, பார்வையாளர்கள் ஒருவித டென்ஷனில் முகத்தை வைத்துக் கொள்வார்களே, அப்படி நானும், என் முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு காதுகளை தீட்டிக் கொண்டு……
அவன் வாயில் ஸ்லோ மோஷனில் போட்டு, ஸ்லோ மோஷனில் மெல்ல….வந்தன வார்த்தைகள், “வாவ் ஆண்டி ஆசெம்! கலக்கிட்டீங்க போங்க”

“ஹே’…..

மெய்யாலுமே “கலக்கல்”தாம்பா!!! என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்! சரி அதன் திருப்பெயரைச் சொல்லவே இல்லையே…….“லெங்லுஓ ஷிப்பின் சாட்” (கில்லர்ஜி, அபயா அருணா சுப்!).

---கீதா


34 கருத்துகள்:

 1. நான் சாப்பிட்டு பார்த்திருந்தால் சரியான பெயர் வைத்து இருப்பேனே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ் நான் சொன்னது உங்களுக்கும் அருணாவிற்கும் மொழி தெரிந்திருக்குமே அதன் அர்த்தம் சொல்லிக் குட்டை உடைத்துவிடுவீர்களே என்றுதான்...ஹஹஹமிக்க நன்றி கில்லர்ஜி வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 2. ஹிஹிஹி, இந்தத் திப்பிச வேலையெல்லாம் நமக்கும் நல்லாவே வரும். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா, ஸ்ரீராம் உங்கள் இருவருக்கும் சேர்த்து இங்கே கருத்து...உங்கள் இருவரிடமிருந்தும் இந்தக் கருத்தை எதிர்பார்த்தேன்!. நீங்களும் என் கட்சி என்பது தெரியுமே!

   மிக்க நன்றி இருவருக்கும்

   நீக்கு
 3. ஆமாமாமாம்.... இந்த ஊழல் வேலைகள் எங்களிடத்திலும் உண்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா, ஸ்ரீராம் உங்கள் இருவருக்கும் சேர்த்து இங்கே கருத்து...உங்கள் இருவரிடமிருந்தும் இந்தக் கருத்தை எதிர்பார்த்தேன்!. நீங்களும் என் கட்சி என்பது தெரியுமே!

   மிக்க நன்றி இருவருக்கும்

   நீக்கு
 4. வெற்றி... வெற்றி... மாபெரும் வெற்றி...

  பலமுறை முயன்றும் "திருப்பெயர்" தான் வாயிலிருந்து சரியாக வரவில்லை... ஹிஹி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ் வாருங்கள் டிடி!! பரவாயில்லை! அதனால் என்ன!யாருக்கும் புரியக் கூடாது என்றுதானே அப்பெயர்!!ஹிஹிஹி

   மிக்க் நன்றி டிடி

   நீக்கு
 5. சமையலறை என்பதற்கு பதிலாக சமயலறை என்று தலைப்பில் உள்ளது. விவாதிக்கப்படும் பொருள் சற்றே குழப்பமாக இருந்ததால் அவ்வாறு ஆகிவிட்டதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! சுட்டிக் காட்டியமைக்கு! நான் அடிக்கும் போது நேர்ந்த பிழை. திருத்தாமல் பதிவை அப்படியே போட்டுவிட்டேன். அதான் அப்படியே வந்துவிட்டது. இப்போது மாற்றிவிட்டேன் ஐயா. பதிவினுள் வரும் வார்த்தையைச் சரியாக எழுதியுள்ளேன்....ஐயா.

   மீண்டும் நன்றியுடன்

   நீக்கு
 6. சாப்பாடு வாயில நுழைஞ்சவங்களுக்கு பேர் வாயில் நுழைந்திருக்காதே...
  நான் கூட எங்க ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் வெங்களூர் ஞாபகத்தில் லெங்லுஓவை வெங்களூருன்னு வாசிச்சேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹ்ஹஹ் அது சைனீஸ் சொல்! பொருத்தமான சொல்.
   மிக்க நன்றி குமார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 7. பழைய பதார்த்தங்களுக்கு அழகு கூட்டிப் புதிதாய் பறிமாறுவதை நகைச்சுவையுடன் எழுதியது ரசிக்க வைக்கிறது இனிய புத்தாண்டு தின நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் ரசித்ததற்கும், கருத்திற்கும் தங்கள் வாழ்த்திற்கும்

   நீக்கு
 8. உருமாறும் பழைய பதார்த்தங்கள்.... :) எல்லா வீடுகளிலும் சோதனை எலிகள் இருக்க பயமே இல்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்ஜி அஹஹஹ ஆமாம் எல்லா வீடுகளிலும் சோதனை எலிகள்!!!!

   நீக்கு
 9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! ஜீவலிங்கம் சகோ! தங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 10. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் . "சுப்" என்ற ஆணைக்குப் பணிந்து காமெண்ட் இல்லை . நல்ல மூளை . மூளை படம் பாஸ்ட் செய்ய வரவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ்ஹ் அருணா சுப் என்று சொன்னதற்குக் காரணம் உங்களுக்குத்தான் சைனீஸ் ஜப்பனீஸ் தெரியுமே!!!எங்கேனும் அந்தப் பெயரின் ரகசியத்தை உடைத்துவிடுவீர்களோ என்றுதான் ஹிஹிஹிஹி..

   மிக்க நன்றி அபயா அருணா கருத்திற்கு

   நீக்கு
 11. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

  எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
  http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சாம் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 12. ஹாஹா :) பண்டங்களை மீந்தவற்றை உருமாற்றுவதில் நானும் ராணிதான் :)கொழுக்கட்டை செய்ய ஆரம்பிச்சு பாயசம் ஆன கதையும் உண்டு :) நான் ஊழல் செய்றேன்றதே தெரியாதமாதிரி ஊழல் செய்திருக்கேன் ...கண்டுபுடிக்கமுடியாது .சப்பாத்தி மட்டும் எங்க வீட்ல எந்த ரூபத்தில் இருந்தாலும் காலியாகிடும் ..என் மகளுக்கு சப்பாத்தி மூணு வேளையும் கொடுத்தாலும் சாப்பிடுவா ..சப்பாத்தி மின்ஸ்ட் சில்லி ரொட்டி ,egg ரொட்டி ,வெங்காய ரொட்டி சின்ன மசால் ரொட்டி என மாத்தி விட்ருக்கேன் :) ..கொத்தமல்லி மேக்கப் போட்டு உங்க ஐடியாவையும் செய்திடறேன் :)btwஅந்த படத்தையும் போட்டிருக்கலாம் ..


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஏஞ்சல் நம்மை போன்றவர்கள் அல்மோஸ்ட் எல்லா பெண்களும் செய்வதுதான் இல்லையா.....ஹஹ இங்கும் அப்படித்தான் பல சமயங்களில் புதிதாய் ஏதோ ஒன்று என்று நினைத்துக் கொண்டுவிடுவார்கள். வெளியில் நான் சொல்வேனா மூச்!! ..அட கலக்குறீங்க போங்கஅ உங்கள் உருமாற்றங்களைத்தான்,....ஊழலை எப்படி வெளியில் தெரியாமல் செய்வது என்பதை பெண்கள் கில்லாடிகள் தான் இல்லையா....ஆனால் இது நல்ல ஊழல்தானே!!!

   மிக்க நன்றி ஏஞ்சல்

   நீக்கு
  2. இனி இப்படி எழுதினால், உருமாற்றியதைப் படம் எடுத்துப் போடுகிறேன்.

   இங்கு செய்தது வேறு ஒன்றுமில்லை. சப்பாத்தியைத் துண்டுகளாக்கி கிரிஸ்பாக்கிக் கொண்டேன். ப்ரெட்டையும் அப்படியே. முதலில் கோஃப்தா உதிர்த்து, பன்னீருடன் கலந்து, வெந்தக் கடலயுடனான காய் சாலட் அதான் பீச் சுண்டல் அதையும் கலந்து அதனுடன் வீட்டிலிருந்து கார்ன்ஃபேளேக்ஸ் கிரிஸ்பியும் மொறு மொறு சப்பாத்தி, ப்ரெட் பீஸசும் கலந்து பொரி மேலே போட்டு அப்புறம் இங்கு சொன்னது....அவ்வளவுதான்....

   நீக்கு
 13. விருந்தினர் வரும்போது - புதியன மறைதலும், பழையன வெளி வருதலும் இயல்பே - என்று நன்நூலோ தொல்காப்பியமோ சொல்கிறதாமே? - இராய செல்லப்பா நியுஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹ்ஹஹ் சார்!!! செல்லப்பா சார் இது நமக்கு வேண்டியய்வர்கள் எனப்தால் செய்தேன்....நீங்கள் எல்லாம் வந்தால் புதிதாய்தான் செய்து தருவேன்....பயப்படாமல் வரலாம்!!! ஹஹஹ்

   மிக்க நன்றி சார்!!

   நீக்கு
 14. படத்தைப் போடாமல் விட்டீர்களே... நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இப்படி ஒன்றை உருமாற்றும்போது, முதலில் சாப்பிடுபவர்களின் முகத்தையும் படம் பிடித்துப்போட்டால், கதை தெரிந்துவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நெல்லை....படம் இனி இப்படி எழுத நேர்ந்தால் போடுகின்றேன். ஹஹஹஹ் நல்ல ஐடியா சாப்பிடுபவர்களின் முகத்தையும் படம் பிடித்துப் போட்டால் ..உண்மைதான் கதை தெரிந்துவிடும்..

   கண்டிப்பாக நெல்லை நீங்கள் இதை வைத்து எங்கள் ப்ளாகின் "திங்க"வில் நீங்கள் செய்த அட்ஜஸ்ட்மென்ட் வைத்து ஒரு பதார்த்தம் போடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்!!!

   மிக்க நன்றி நெல்லைத் தமிழன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 15. எப்படியோ, கடைசியில் வெற்றி உங்களுக்கே இல்லையா? ஆனால், பதிவின் முடிவில், "இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிச்சுக்கர்றது என்னன்னா... உணவை வீண்டிக்காதீர்கள்!" என்று எழுதியிருந்தால், எப்படிப்பட்ட பதிவிலும் கருத்துச் சொல்பவர் எங்கள் கீதா சகோ என்று நாங்கள் பெருமைப்பட்டிருப்போமே!

  பதிலளிநீக்கு
 16. ஹஹ்ஹஹ ஆம்! பதிவின் முடிவில் சொல்லியிருக்கலாம். விட்டுவிட்டேன்...சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி இபுஞா சகோ... நான் ஒவ்வொரு பதிவிலும் ஏதேனும் கருத்து சொல்லிக் கொண்டே இருப்பதால்...அறிவுரைகளாகவே இருக்கும் சில பதிவுகளில்...அப்படி இருந்தால், மொக்கைப் பதிவிலும் கருத்தா என்று கருத்து கந்தசாமி என்பது போல் கருத்து கீதா என்றாகிவிட்டால் ஹிஹீஹிஹிஹி....(என்னா தன்னடக்கம்பா இந்தக் கீதாவுக்கு ஸீன்னு ஸீன்னு போடறா பாரு!!!)

  மிக்க நன்றி சகோ..

  பதிலளிநீக்கு