ஞாயிறு, 17 ஜூலை, 2016

பூமித்தாயின் கண்ணீர்பூமியில் தான் குழப்பங்கள், பிரச்சினைகள் என்றால் அண்ட விண்வெளியில் உள்ள சூரிய குடும்பத்திலும் ஒரு பிரச்சினை என்று தெரிந்த பொழுது வியப்பாக இருந்தது. என்ன பிரச்சினையாக இருக்கும் என்று எட்டிப் பார்த்தபோதுகுடும்பத்தின் தலைவனாகிய சூரியனிடம் பூமித்தாய் புலம்புவது கேட்டது.

தலைவனே! இது என்ன கொடுமைஇந்தக் குடும்பத்தில் இத்தனைக் கோள்கள் இருக்கும் போது நான் மட்டும்தான் இவ்வளவு பாரம் சுமக்க வேண்டுமாஎன் குழந்தைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறார்கள்நீங்கள் தான் இதற்கு ஒரு தீர்வு கொண்டுவர முடியும்.”

உன் வேதனை எனக்குப் புரிகிறதுஆனால் மற்ற கோள்களில் உனக்கிருப்பது போல் வளமும, செழிப்பும், நீரும், காற்றும், இல்லையேஏன், ஒளி கூட உனக்குத்தானே உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு சரியான அளவில் நான் கொடுத்திருக்கிறேன்அப்படி இருக்கும் போது மற்ற கோள்களிடம் எப்படி நான் கேட்க முடியும்?” என்றான் சூரியன்.

    .  அதற்குள் அங்கு செவ்வாய் கோளின் குரல்.  “பூமியே! உன் குழந்தைகள் என்று அடிக்கடிக் கூறிக் கொள்வாயே அதே குழந்தைகள் தான், என்னிடம் உன் குழந்தைகளை அனுப்ப முடியுமா என்று என் மீது அடிக்கடி, ராக்கெட் ஏவி என்னை வேவு பார்க்கிறார்கள். என்னிடம் காற்றில்லை, சூரிய ஒளி இல்லை என்பதை நம்பாமல் பொய் சொல்கிறேன் என்று நினைக்கிறார்கள் போலும்.”


புதன் அதற்குள், “உன்னை மட்டுமல்ல என்னையும்தான் வேவு பார்க்கிறார்கள்ஏன் சந்திரன் பூமிக்கு அருகில் இருப்பதால் அங்கு ராக்கெட் அடிக்கடி விட்டுப் பார்ப்பது அவர்களுக்கு வழக்கமாகிவிட்டதுஅதிலும் சந்திரனைப் பார்த்து பூமியின் பிள்ளைகள் சிலர் நிலா நிலா என்று கவிதைகள் கூட நிறைய எழுதுகிறார்கள்சந்திரனுக்குப் பூமியில் நல்ல மவுசுஎன்றது.


  “நீங்கள் எல்லோரும் இப்படி என்னைப் புரிந்து கொள்ளாமல் பேசுகின்றீர்களே. வருத்தமாக இருக்கிறதுஎன் வருத்தத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல்தான், சூரியன் தலைவனிடம் வந்தேன்நான் என் குழந்தைகள் நன்றாக, செழிப்பாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று, பசுமையையும், நல்லக் காற்றையும், சூரியனிடமிருந்து ஒளியையும், நல்ல மழையையும் கொடுத்து, நதிகள், மரங்கள், கனிமங்கள், மலைகள், ஆறுகள், நிலத்தடித் தண்ணீர், பயிரிடுவதற்கான நல்ல மண் வளம் என்று பல சொத்துக்களை என் பல சந்ததியினர் அனுபவிக்க சேர்த்து வைத்தேன்.
ஆனால், என்ன பயன்என் குழந்தைகள் எல்லாவற்றையும் உபயோகித்தால் அதைத் திரும்ப சேமிப்பதற்கும், என்னைப் பராமரித்துப் பாதுகாக்கவும், முயற்சி செய்ய வேண்டுமில்லையா? சொத்தைப் பராமரிக்காமல், பாதுகாக்காமல் அழித்து விட்டால் அடுத்து வரும் சந்ததியினர் என்ன செய்வர்என் குழந்தைகள், வளமாகிய என் சொத்தை எல்லாம் அழித்துத்தான் வருகின்றனர்என் மீது எல்லா இடங்களிலும் கழிவையும், குப்பையையும் எறிகின்றனர்துப்புகின்றனர்சிறுநீரும், மலமும் கழித்து என்னைக் கேவலப்படுத்துகின்றனர். என் நீர் நிலைகளாகிய நதி நீரையும், கடல் நீரையும், ஏரிகளையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி, நீர் நிலைகள் குறைந்து நல்ல சுத்தமான தண்ணீர் இல்லாமல் தட்டுப்பாடு வந்து இன்று என் சொத்தாகிய நீரைக் குடைந்தெடுத்து, சுத்தாமாக்கி, புட்டிகளில் அடைத்து விற்கிறார்கள், கொழிக்கிறார்கள்.

 நல்ல காற்று கிடைக்க நான் வைத்திருந்த மரங்களை எல்லாம் வெட்டிக், காடுகளும், சோலைகளும் இல்லாமல் செய்து, சுத்தமான காற்று இல்லாமல் செய்து வருகின்றனர்என் குழந்தைகள் பண வெறி பிடித்து நல்ல பயிர் விளையும் நிலங்களை எல்லாம் கட்டிடங்களாக்கி, அடுக்கு மாடி வீடுகளாகவும், பல்பொருள் அங்காடிகளாகவும் மாற்றி வருகின்றனர்விளை நிலங்களே இல்லாமல் போவதால் விளைச்சல் குறந்து உணவுப் பற்றாக் குறையும் ஏற்பட ஆரம்பித்து விட்டதுஇன்னும் சொல்லப் போனால் நான்கு சக்கர வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும், ஆலைகளும் பெருகி புகையைப் பெருக்கி, என்னைச் சுற்றிப் புகை மண்டலத்தை எழுப்பி அடைத்து விட்டனர்

அவர்களுக்குள் எனது சொத்தாகிய நிலத்தையும், நீரையும் பிரிப்பதற்குச் சண்டைஇவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாதுஇவற்றை அவர்கள் உயிர் உள்ளவரை அனுபவித்து, பராமரித்துக் கட்டிப் பாதுகாக்க மட்டும்தானே அல்லாது சுய நலத்திற்காக உபயோகித்து அழிப்பதற்கல்ல என்பது என் குழந்தைகளுக்குப் புரிய வில்லை.

பேராசையும், கொலைகளும், கொள்ளைகளும், ஊழல்களும் தலை விரித்தாடுகிறதுஎனக்கு மனிதர்கள் மட்டும்தான் குழந்தைகளாஐந்தறிவுடைய விலங்கினங்களிலிருந்து, ஒர் அறிவு கொண்ட உயிரனங்களூம், நுண்ணுயிரினங்களும்மரம் செடி கொடிகளும் என் குழந்தைகள் தான்எல்லா உயிரினங்களுக்கும் வெளித் தோற்றம், உருவம்தான் வேறுஉள்ளிருக்கும் உயிர் ஒன்றுதானே.  ஆறறிவு கொண்ட என் குழந்தைகள் மற்ற என் குழந்தைகளையும் கொன்று அழிப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்க முடிகிறதே தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை
னக்கு சுவாசிக்க நல்ல காற்று இல்லாமல் மூச்சுத் திணறுகிறது. ஓசோன் படலம் குறைந்து கிரீன் ஹவுஸ் விளைவினால் வெப்பம் கூடி என்னை தகிக்க வைக்கிறதுஎன்னுடைய நீரே எனக்குக் குடிப்பதற்கு மாசற்று, சுத்தமாகக் கிடைப்பதில்லை. எனக்கு அமைதியாக வாழக் கூட வழி இல்லாமல் போய் விட்டது. எனக்கும் வயதாகி வருகிறதுஅன்னை, அன்புடன் கொடுத்த சொத்தை எல்லாம் அனுபவித்து அழிப்பவர்கள் அன்னைக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம் என்று நினைத்துப் பார்க்கிறார்களா? இல்லைநானும் பொறுமையோடுதான் இருக்கிறேன்என்று வருந்தினாள்.  

ஆம், பூமித்தாய் பொறுமையானவள்தான். மனிதர்களாகிய நாம், நம் பூமித்தாய்க்கு இழைக்கும் கொடுமைகளைக் கண்டு அவளுக்குக் கோபமே வராதோ?  
சூரியன், “பூமியே! நீயும் சில சமயம் கோபப்படுகிறாயே! அப்பொழுதும் உன் குழந்தைகள் உணரவில்லையா?” என்றதற்கு

ஆம்நான் சில சமயம் கோபப்படத்தான் செய்கிறேன். என் பொறுமைக்கும் எல்லை உண்டு. இல்லையாபூகம்பமாக, சுனாமியாக, மழையாக, வெள்ளமாக, கடல் கொந்தளிப்பாக, எரிமலைப் பிழம்பாக, நிலச்சரிவாக, புயலாக, சூறாவளிக் காற்றாக, வறட்சியாக என்று பல வகைகளில் என் சீற்றத்தைச் சிறிதாக வெளிப்படுத்தி என் குழந்தைகளை மிரட்டத்தான் செய்கிறேன்

இது போன்று நான் மிரட்டும் போது, என்னைப் பராமரிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு சிலர் சிறிது நாட்கள்பூமித்தாயைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.” என்று குரல் கொடுப்பார்கள்ஆனால் அதற்கெல்லாம் என் குழந்தைகள் பயப்படுவதாகவோதாங்கள் செய்யும் தவறை உணருவதாகவோ தெரியவில்லைஎன் குழந்தைகளில் நல்ல மனதுடனும், அறிவுடனும் இருப்பவர்கள் என்னைப் பாதுகாக்கவேண்டும் என்றும், என் வளங்களை அழித்தால் அவர்களுக்கு அழிவு நிச்சயம் என்றும் அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் செய்கிறார்கள்என்ன செய்வதுஎன் குழந்தைகளை நினைத்து வருந்தத்தான் முடிகிறது.”

மற்ற கோள்கள் எல்லாம், “இப்படிப்பட்டவர்களை நாங்கள் எப்படி வைத்துக் கொள்ள முடியும்எதற்காக வைத்துக் கொள்ள வேண்டும்? நல்லவேளை எங்களுக்கெல்லாம் உன்னைப் போன்று நல்ல வளங்கள் இல்லாமல் போயிற்றுஇல்லையென்றால் நாங்களும் உன்னைப் போல் இப்படிப் புலம்ப வேண்டி வந்திருக்கும்.” என்றன.
ரொம்ப சொல்லிக் கொள்ளாதீர்கள்சமீபத்தில் என் குழந்தைகள் சிலர், செவ்வாய் கோளிற்குச் சென்று தங்குவதற்கு விருப்பம் உள்ளவர்களை 2022-23 ல் அழைத்துச் செல்வதற்கான வழிகளைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக அறிகிறேன். அவர்களுக்குப் பயணத்திற்கான பயிற்சி அளிக்கவும் போகிறார்களாம்அதற்கு இப்போதே முன் பதிவு செய்ய வேண்டுமாம்போவதற்கான பயணச் சீட்டு பின்னர் தரப்படுமாம்அதற்கு எவ்வளவோ மில்லியன் டாலராம்ஆனால் போவதற்கான சீட்டு மட்டும்தான்வருவதற்கு அங்கு சென்ற பிறகுதான் திரும்பவும் பதிவு செய்ய வேண்டுமாம்அதற்கு தனி கட்டணம் செலுத்தி பயணச் சீட்டு பெற வேண்டுமாம்அதனால், செவ்வாய் கோளே உன்னிடமும் என் மனிதக் குழந்தைகள் வரப் போகிறார்கள்அதனால் உன் வாயை கொஞ்சம் அடக்கி வைத்துக் கொள்.”  என்றாள் பூமித்தாய்.

செவ்வாய், “ஐயோஇது என்ன கொடுமைஉன் மக்கள் என்னிடமும் வரப் போகிறார்களாஅப்படியென்றால் இன்னும் சில வருடங்களில் நானும் உன்னைப் போல் புலம்பி கண்ணீர் விட வேண்டியதுதான்தலைவா சூரியனே நீங்கள் இதற்கு என்ன சொல்கிறீர்கள்?”  என்று புலம்ப ஆரம்பித்து விட்டது.

"நானும் இதைக் கேள்விப் பட்டேன்.  MARS ONE என்று அதற்குப் பெயர்போவதற்கே ஏழு மாதங்கள் ஆகுமாம்அதெல்லாம் சரி, எனக்கு ஒரு சந்தேகம்போனால் முதலில் உயிருடன் போவார்களோஅப்படியே போனாலும் உயிருடன் திரும்பி வர முடியுமா அவர்களால்? வர உத்தரவாதம் உண்டா?" என்றது வியாழன். 

  "அதை ஏன் கேட்கிறீர்கள். இதற்கும் அங்கு கிறுக்குப் பிடித்தவர்கள் இருக்கிறார்கள்நிறைய மக்கள் பதிவு செய்திருக்கிறார்களேஅவர்களை என்னவென்று சொல்வதாம்?" - நெப்டியூன், ப்ளூட்டோ

சந்திரனில் கூட நிலத்தைக் கூறு போட்டு விற்க உன் குழந்தைகள் முயல்வதாக கேள்விப்பட்டோம்.” என்று எள்ளி நகையாடியது வெள்ளிக் கோள்
எனக்கு மூச்சுத் திணறுகிறதுஎன்ன செய்வது என்று தெரியவில்லை..”  என்றது பூமி.

நிச்சயமாக நீ ரொம்பப் பொறுமைசாலிதான்நம்மை எல்லாம் படைத்த அந்த அண்டவெளி சக்தியிடம் முறையிட்டுப் பார்என்றான் தலைவன் சூரியன்.

ஆம் பூமித்தாய் ரொம்பப்  பொறுமையானவள்தான்! அவள் ஒரு நல்ல தாய்!.  நாம் செய்யும் தவறுகளை எல்லாம் பொறுத்து எந்தக் கைமாறும் எதிர்பார்க்காமல் நமக்குத் தன் வளங்களை எல்லாம் தந்து கொண்டுதான் இருக்கிறாள்நாம்தான் அழிவை நோக்கி நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருக்கிறோம்பூமித்தாய் பொறுமைசாலிதான்.!!! அவள் கண்ணீரும் வற்றி வருகிறது!

---கீதா

படங்கள் : இணையத்திலிருந்து

வலைப்பூ ஆரம்பித்த பொழுது எழுதிய பதிவு. எங்கள் வலைப்பூ அப்போது அறிமுகமாகியிராத காலம் ஆதலால் இப்போது மீள் பதிவு.
30 கருத்துகள்:

 1. //வலைப்பூ ஆரம்பித்த பொழுது எழுதிய பதிவு. எங்கள் வலைப்பூ அப்போது அறிமுகமாகியிராத காலம் ஆதலால் இப்போது மீள் பதிவு.///

  மதுரைத்தமிழன் :இதை முதலிலேயே சொல்லி இருந்தால் இவ்வளவு பெரிய பதிவை படித்திருக்க மாட்டேனே

  கீதா : அப்படியானால் இந்த பதிவை முன்னமே படித்து இருக்கிறீர்களா?

  மதுரைத்தமிழன் : இல்லை இல்லை

  கீதா : அப்படியென்றால் இப்பதானே இந்த பதிவை படித்து இருக்கிறீர்கள்.

  மதுரைத்தமிழன் : இல்லை இல்லை

  கீதா : என்னை மிகவும் குழப்புகிறீர்கள் இந்த பதிவை படித்தீர்களா இல்லையா?

  மதுரைத்தமிழன் : ஆமாம் இல்லை?


  கீதா : என்ன சொல்லுறீங்க மதுரைத்தமிழா உங்க மனைவி பூரிக்கட்டையால் அடித்ததால் உங்கள் மூளை குழம்பிவிட்டதா என்ன?


  மதுரைத்தமிழன் : இல்லை இல்லை

  கீதா : உங்களுக்கு மூளை இல்லைன்னு சொல்லுறீங்களா அல்லது குழம்பவில்லை என்று சொல்லுறீங்களா?

  மதுரைத்தமிழன் : இல்லை இல்லை எனக்கு மூளை இருந்துச்சா இல்லியான்னு கூட தெரியவில்லை என்று சொல்ல வந்தேன்.

  கீதா : ஒரு பெரிய நல்ல பதிவை படித்ததினால் உங்கள் மூளை சுளுக்கி இருக்குன்னு நினைக்கிறேன்... எனிவே நீங்க என் பதிவை படித்து மூளை சுளுக்கினாலும் கருத்து சொல்ல வந்தற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ்ஹ் உங்களுக்கு மூளை சுளுக்கிருச்சு...எனக்கு என் வாய், வயிறு விலா எல்லாம் சுளுக்கிருச்சு!!

   ஹும்,,,(என்) மூளையைப் பற்றிய பதிவைப் படித்து உங்களுக்கு என்னவோ ஆயிடுச்சுனு நீங்க ஒரு சேஞ்சுக்குப் பெரிய ட்ரிப் எல்லாம் போயிட்டு வந்தும் மூளை சுளுக்கு, பூரிக்கட்டை அடியெல்லாம் தொடருது போல...ஹிஹிஹ்

   ஹஹஹ் நான் கொடுக்க வேண்டிய அந்த இறுதி டயலாக் நீங்களே சொல்லிட்டீங்க மிக்க நன்றி தமிழா....

   நீக்கு
 2. மற்ற கோள்கள் எல்லாம் மனிதனைப் பார்த்து பயப்படுவது போல எழுதியிருப்பதை ரசித்தேன். உண்மைதான். எத்தனை பேர் பூமியை நாம்தான் செத்தபி படுத்துகிறோம் என்று உணர்கிறார்கள்? இன்றைய உலகின் மிகப் பெரிய ஆபத்து ஈ வேஸ்ட் என்னும் கழிவுகள். ம்ம்.. இதை படித்ததால் சில நாட்களுக்கு அலைபேசி முதல் குளிர்சாதனப்பெட்டி வரை உபயோகிக்கும் போதெல்லாம் மனதில் உறுத்தல் இருந்து கொண்டேயிருக்கும்.... சில நாட்களுக்குத்தான். அப்புறம் மறந்துடுவோம்ல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் இந்தப் பதிவு எனது கல்லூரிக் காலத்தில் கவிதையாக எழுதியது. ஆனால் அந்த வரிகள் எனக்குச் சரியாக நினைவில்லை. ஆனால் கருத்து மட்டும் நினைவிலிருந்தது. அதை வைத்துப் பதிவாக்கினேன்.

   ரசித்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
 3. பூமித்தாயின் கண்ணீர் - ஆதங்கம் தான் எனக்கும். எல்லாவற்றையும் அழித்து ஆனந்தம் கொள்ளும் மாக்களாக மாறி விட்டோம். என்றைக்கு தான் இதற்கு ஒரு தீர்வு?

  நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் வெங்கட்ஜி நீங்கள் அதுவும் பல இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்....தீர்வு தெரிந்தாலும் தெரியாததைப் போல இருக்கிறோம்...

   மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு.

   நீக்கு
 4. அப்போ எழுதினது இப்போதைக்கும் ஒத்துப் போகிறது. நல்ல விழிப்புணர்வுப் பதிவு.
  Old wine in a new bottle என்பதை நீங்கள் சொல்லியிருக்கா விட்டால் யாருக்குமே தெரிந்து இருக்காது.

  ஏன் சொன்னீர்கள் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது நான் எனது கல்லூரிக் காலத்தில் கவிதையாக எழுதியது அபயா அருணா..கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்..அந்த வரிகள் சரியாக நினைவுக்கு வராததால் பதிவாகியது நாங்கள் வலைப்பூ ஆரம்பித்த போது...
   ஒல்ட் வைன் இன் ந்யூ பாட்டில் அது ஓல்ட் ஆக இருந்தாலும் எப்போதுமே இந்தக் கருத்து கோல்டாக இருக்கிறதே....

   மிக்க நன்றி அருணா...

   நீக்கு
  2. ஒல்ட் வைன்னா எங்கே யாரிடம் இருக்கு அபயா அருணாவிடமா அல்லது கீதாவிடம்?

   நீக்கு
  3. ஹஹ்ஹஹ் தமிழா அது என்னிடம்தான் (கீதா) இருக்கிறது ஹிஹிஹிஹி...

   நீக்கு
 5. பூமித்தாய் பொறுமையானவள்தான்..
  ஆனாலும் அவள் ஒரு நல்ல தாய்!..
  நாம்தான் அழிவைத் தேடி
  நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருக்கிறோம்..

  ஆயினும் அவளின்றி ஆகப் போவது எதுவுமில்லை..

  நல்ல பதிவு.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா. ஆமாம் பூமித்தாய் பொறுமையானவள்தான். மிக மிக நல்ல தாய்...நமக்காக எத்தனைச் சொத்துகளைச் சேர்த்து வைத்துள்ளாள்..நாமோ??

   நீக்கு
 6. அருமையான பதிவு. மனிதன் அண்டத்திற்கே வேண்டாத உயிரினமாக மாறிவிட்டதை உணர்த்திய பதிவு. அருமை.
  த ம 3

  பதிலளிநீக்கு
 7. ஒரு பிள்ளைப் பெற்றால் உறியிலே சோறு ,நாலு பிள்ளைப் பெற்றால் தெருவிலே சோறு ...இத்தனைப் பிள்ளைகள் பெற்ற பூமித்தாய் புலம்புவதைத் தவிர வழியில்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹ்ஹஹ உண்மைதான் பகவான் ஜி! பிள்ளைகள் ஒழுங்காக இருந்தால் அவள் ஏன் புலம்பப் போகிறாள்...மிக்க நன்றி ஜி

   நீக்கு
 8. நல்ல கற்பனை.இந்த உயிர்கள். தாவரங்கள் அனைத்தும்,இந்த மண்ணின் மறு வடிவங்களே. பூமியின் எடை கூடுவதும் இல்லை குறைவதும் இல்லை.சுனாமி போன்ற பேரழிவுகள் அனைத்தையும் சமன் செய்து விடுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இளங்கோ ஐயா நான் இங்கு பாரம் என்று சொன்னது எடையை அல்ல. மனிதர்களால் நேரும் அவலத்தைத்தான்.....மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு

   நீக்கு
 9. பூமித்தாயின் நியாயமான ஆதங்கம் சரியாகத்தான் இருக்கின்றது மனிதர்களுக்கு மறதி அதிகம் அந்த நேரத்தில் வீராவேசமிட்டு பிறகு கலைந்து விடுவார்கள்
  த.ம. 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் கில்லர்ஜி அந்தந்த சமயத்தில் பேசுகிறோம் அவ்வளவுதான். இதோ சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தின் போது கூட அப்படித்தான்...இப்போது மீண்டும் தெருவெங்கும் குப்பைக் கூளமே..மிக்க நன்றி ஜி

   நீக்கு
 10. ரொம்ப கஷ்டம், பேசாம கெளம்பி செவ்வாய்க்கு போயிடுவோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ் மலர் சரி போய்ட்டா போச்சு....போய்ட்டு அங்கருந்து ப்ளாக் எழுதுவோம் செவ்வாய் எப்படி இருக்குனு...உட்டான்ஸ் விடுவோம்...என்ன சொல்றீங்க..

   நீக்கு
 11. சுவையான பதிவு! 'கோகுலம்' போன்ற குழந்தைகள் இதழ்களுக்கு அனுப்பியிருந்தீர்களானால் வெளிவந்திருக்கும்.

  ஆனால், ஓர் ஐயம்! (அதானே!) இது நீங்கள் வலைப்பூத் தொடங்கிய காலக்கட்டத்தில் வெளியிட்டது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் வலைப்பூத் தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால், செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் அந்தத் திட்டம் கடந்த ஆண்டுதானே தொடங்கியது? எனில், இது பழைய பதிவின் இற்றைப்படுத்தப்பட்ட (updated) வடிவமா?

  பதிலளிநீக்கு
 12. இபுஞா அவர்களுக்கு முதலில் நன்றி!! தங்களது முதல் வரிக்கு!! இந்தக் கருத்து முதலில் கவிதை வடிவில் நான் கல்லூரிக் காலத்தில் 1985-86ல் எழுதியது. அதாவது பூமி சூரியனிடம் முறையிட, மற்ற கோள்கள் எல்லாம் பூமியை எள்ளி நகையாடி தங்களாலும் முடியாது என்பது போல் சுயநலம் மிக்கவையாகவும், மனிதர்களும் சுயநலம் மிக்கவர்களாக இருப்பதைச் சொல்லி நம் அன்னையைப் பேணாமல் பலரும் இருப்பது போல் பூமித்தாயையும் பேணாமல் இருப்பதைச் சுட்டி இப்படிச் செல்லும் அந்தக் கவிதை. அந்தக் கருத்து மட்டுமே நினைவில் இருந்தது கவிதை வரிகள் சரியாக நினைவுக்கு வரவில்லை.

  எங்கள் வலைப்பூ அதாவது தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் 2013 ஜூலை மாதம்தான் தொடங்கினோம். நீங்கள் தில்லைஅகத்து என்ற வலைப்பூவைப் பார்த்திருப்பீர்கள். அது துளசியும் நானும் சந்திக்கும் முன் பேசி முடிவெடுக்கும் முன் குறும்படங்கள், மற்றும் நாடகவடிவில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தைப் பற்றிய தகவல்கள் வெளியிட தொடங்கப்பட்ட வலைத்தளம்-அவரது மாணவர் ஒருவரின் உதவியுடன். இப்போது எழுதுவதுதான் நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதுவது. மட்டுமல்ல இந்த இரண்டு வலைப்பூக்களையும் நிர்வகித்து வருவது என் பொறுப்பில் ஏனென்றால் இங்குதான் கணினி, தொழில்நுட்ப வசதி, இணைய வசதி இருப்பதால்.

  இந்த வலைப்பூ ஜூன் மாதம் 2013 ல் ஆரம்பித்த மூன்று/நான்கு மாதங்களில் இதை எழுதினேன் என்று நினைக்கின்றேன். அப்போது செவ்வாய்க்குப் போவது அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் மார்ஸ் ஒன் என்று பேசப்பட்டதால் அதையும் கட்டுரையில் சேர்த்துக் கொண்டேன். அப்போது எங்களது வலைப்பூ பரவலாக அறிமுகம் ஆகியிராத காலம்.எனது நினைவு சரியாக இருந்தால் தமிழ்மணத்திலும் இணைந்திராத காலம் அது.

  செவாய்க்கு மனிதர்களை அனுப்புவது பற்றித் தொடங்கிய மார்ஸ் ஒன் என்ற திட்டம் 2011ல் நெதர்லாண்டில் தொடங்கப்பட்டது. அதற்கான முன் பதிவு பற்றி எல்லாம் தான் 2013ல் அமெரிக்காவில் தொலைக்காட்சி விளம்பரமாக வந்ததைப் பற்றி நான் அறிந்தேன்.

  எனவே பதிவு அதேதான், நீளம் கருதி சில வரிகளை மட்டும் நீக்கினேன்.

  மிக்க நன்றி சகா..

  பதிலளிநீக்கு
 13. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை
  சுவாரஸ்யமாகச் சொல்லிப் போனவிதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. செமையான ரைட் அப்
  உண்மையில் பிரிண்ட் செய்து வகுப்பில் கொடுத்துவிடலாம்

  பதிலளிநீக்கு
 15. வேதனையான பதிவு....பூமித்தாயின் கண்ணீரும் வற்றி வருகிறது...


  பதிலளிநீக்கு
 16. மீள்பதிவெனும் இந்த கோள்(மூட்டும்) பதிவும் உங்களின் அக்கறையும் பாராட்டுக்குரியது.

  கோ

  பதிலளிநீக்கு
 17. எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ஆதங்கம் தெரிகிறது... எனக்கும் ஆதங்கமே...

  பதிலளிநீக்கு