சனி, 23 ஜூலை, 2016

கபாலி

உலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில் புதுமுகமாய் தோன்றிய ரஜனி 41 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு சரித்திரம் படைப்பார் என்று அன்று யாருமே எண்ணி இருக்க மாட்டார்கள். கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் பா, ரஞ்சித் எழுதி இயக்கிய “கபாலி” ஒரு வித்தியாசமான ரஜனியைத்தான் நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையாகும் கபாலியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாய் நம் முன் தோன்றச் செய்து, அவர் தன் நிறைமாத கர்ப்பிணியான மனைவியை இழந்து கைது செய்யப்படும் காட்சி வரை படம் விறு விறுப்பாகவே செல்கிறது. விடுதலையாகி வரும் கபாலி தன் வீட்டிற்குள் நுழையும் காட்சியில் ஒளிப்பதிவாளர் முரளியும், எடிட்டர் பிரவீணும், எழுதி இயக்கிய ரஞ்சித்தும் காட்சிக்கு உயிர் கொடுத்த ரஜனியும் தாங்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டி போட்டு அசத்தியிருக்கிறார்கள்.

அது போல் லோகாவை காரேற்றிக் கொல்லும் காட்சியும் கைதட்டல் பெறுகிறது. 150 நிமிடப்படத்தில் கபாலியின் காதலும், கல்யாணமும் எஸ்டேட் தொழிலாளர்களுக்கானப் போராட்டமும் வெற்றியும் மலேஷிய தமிழர் தலைவர் தமிழ்நேசனின் நட்பும், அதனால் நிகழும் இன்ப துன்பங்களும் மிகக் குறைந்த நேரத்தில் சொல்லிப் போன விதத்தைப் பாராட்டியே தீர வேண்டும்.

படம் இணையத்திலிருந்து

விரசேரனாக வரும் கிஷோர் கபாலியால் சுட்டுக் கொல்லப்படும்வரை தன் வில்லன் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார். கபாலியைக் கொல்ல முயலும் யோகி ஒவ்வொருமுறையும் தோல்வியுற்று கபாலியை தாய்லாந்திலுள்ள் வில்லன் வேலுவின் வீட்டில் கண்டதும் கபாலியைச் சுடாமல் தன்னுடன் வந்தவர்களைச் சுட்டு வீழ்த்தும் போது, நாம் வியந்தே போகிறோம். வேலு கபாலியின் மகள் உயிருடன் இருக்கிறாள் என்பதும், உடனே யோகி அப்பா என்றழைத்து கபாலியை வில்லன்களிடமிருந்துக் காப்பாற்றும் இடம் அருமை. 

மகளுடன் திரும்பும் வழியில் எதிர்பாராமல் சுடப்படும் கபாலி, உயிர் பிழைத்தபின் எங்கோ உயிரோடிருப்பதாகச் சொல்லப்படும் தன் மனைவி குமுதவல்லியையைத் தேடித் தன் மகளுடன் சென்னைக்கும், அங்கிருந்து பாண்டிச்சேரிக்கும் செல்லும் போது படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் கபாலி மற்றும் யோகியுடன் அதே பதட்டத்துடன் செல்ல வைக்கும் ரஞ்சித்தைப் பாராட்டியே தீர வேண்டும்.

இரண்டு வருடம், இரண்டு மாதம், 18 நாட்கள் மட்டும் கபாலியுடன் வாழ்ந்து, 25 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தன் கணவனைக் காணும் குமுதவல்லி கதறிக் கண்ணீர் விடும் இடத்தில் ராதிகா அப்தே நம் கண்களிலும் நீரைக் கசிய வைக்கிறார், இழந்த மனைவியையும், மகளையும் திரும்பப் பெற்ற கபாலி தன் நண்பர் அமீருக்கு நிகழ்ந்த விபத்திற்குக் காரணமான டோனி லீ மற்றும் வீரசேகரனைப் பழிவாங்குமிடம் மிகவும் அருமையாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. கபாலி நெருப்பாகி ரஜனி ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்க்கிறார்.

அதோடு படம் முடிந்தது என்று எல்லோரும் எழும் போது, கபாலி நடத்தும் சீர்த்திருத்தப் பள்ளியான ஸ்ரீ லைஃப் ஃபௌண்டேஷனில் படித்த டைகர் எனும் இளைஞனிடம் போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியைக் கொடுத்து கபாலியிடம் அனுப்புகிறார்கள். டைகர் கபாலியைச் சுடும் காட்சி காண்பிக்க வேண்டாம் என்று ரஜனியின் மகள் ஐஸ்வர்யா சொன்னதாலோ என்னவோ வெடிச்சத்தம் மட்டும்தான் கேட்கிறது. கபாலியைச் சுட்டாலும் கபாலி சாகமாட்டார்.  கபாலி 2 வில் கண்டிப்பாக மீண்டும் வருவார்.

தமிழ்நேசனாக வரும் நாசர், யோகியாக வரும் தனிஷ்கா, அமீராக வரும் ஜான் விஜய் போன்றோர் தங்களுடைய கதாபாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள். முக்கியமான வில்லன் டோனி லீயாக வரும் தாய்வான் நடிகர் வின்ஸ்டன் சாவோவின் நடிப்பு சுமார்தான்.
சந்தோஷ் நாராயணனின் இசையில், ஆனந்து, ப்ரதிப் குமார், ஸ்வேதா மோஹன் பாடும் “நெஞ்சமெல்லாம் பலவண்ணம்” பாடல் சற்று இனிமையாக இருக்கிறது.

Image result for kabali
படம் இணையத்திலிருந்து
பாடல் காட்சிகளில் நடிக்க மனம் ஒத்துழைக்க மறுக்கிறது என்று ரஜனி சொன்னதற்கு நாம் அதற்குரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.. காதல் காட்சிகளில் மட்டுமின்றி பல இடங்களில் ரஜனிக்கு நடிப்பின் மீதான ஆர்வம் குறைகிறதோ என்றும் தோன்றுகிறது. (அதனால்தானோ என்னவோ ரஞ்சித் ஏராளமான ரீடேக் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது) 66 வயதான ரஜனி தாடியுள்ள கபாலியாக வரும் போது ஜொலிக்கும் அளவிற்கு தாடியில்லாமல் வரும் போது ஜொலிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

மொத்தத்தில் மிகச் சாதாரணமான, வழக்கமான ஒரு நிழல் உலகக் கதை. அவ்வளவே. ரஜனி அதில் நடித்திருக்கிறார் என்பதால் மட்டுமே இப்படம் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படியாக ஒரு வழியாக கபாலி ஜுரம் குறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

(பின் குறிப்பு: "அப்பா" "சாட்டை" என்ற இரு மிக மிக நல்ல திரைப்படங்களைத் தவறவிட்டிருக்கிறேன். அவற்றைக் காண வேண்டும். )


43 கருத்துகள்:

 1. வாருங்கள் சகோ அபயா அருணா,விட்டிற்கு வார விடுமுறையில் மட்டுமே போவதாலும், எனக்கு இங்கு பாலக்காட்டில் வாரத்தில் பெரும்பாலும் 6 நாட்கள் தனி வாழ்க்கை ஆதலால் இங்கு பொழுது போக்கு என்றால் சினிமா மட்டுமே. சிறிய ஊர் என்பதால் வேறு ஒன்றும் அவ்வளவாக இல்லை. ரூம் என்பதாலும் கிராமம் என்பதாலும் இங்கு கணினியோ இணையமோ இல்லை...கூட நண்பர்களும் வந்ததால் பார்த்தாச்சு...ஆனால் இருந்த ஜுரத்திற்கு ஏற்றாற் போல் ஒன்றும் இல்லை..

  நன்றி சகோ...

  பதிலளிநீக்கு
 2. அங்கு எவ்வளவு டிக்கெட் விலை? பாராட்டியே தீரவேண்டும், பாராட்டியே தீரவேண்டும் என்று கட்டாய படுத்தி இருக்கிறீர்கள்! உடனடி விமர்சனத்துக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் இங்கெல்லாம் 70, 90 ரூபாய்தான். அதில் சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை ஸ்ரீராம். அதாவது படம் ஒன்றும் நன்றாக இல்லை. நெகட்டிவ்தான் நிறைய...அதைச் சொல்லுவதற்குப் பதில் கொஞ்சம் பாசிட்டிவ் சொல்லிவிட்டு ..இறுதியில் வரிகளைப் பார்க்கவில்லையா ...அதுதான் கருத்து....

   ரஜனி அப்பாவ இளம் வயதில் நடித்த படமான நெற்றிக்கண், பொறுப்பான அண்ணனாக நடித்த ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் எல்லாம் மனதில் இருக்கும் போது...இப்போது தாத்தாவாகியும் அப்பா வேடத்தை சிறப்பாகச் செய்யவில்லை என்பதுதான்...அவருக்கு ஓய்வு தேவை இனி என்பதே கருத்து....மாஸ் இனி அவருக்குச் சரிப்படாது.

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
  2. எங்க ஊர்ல இருக்கற 7 தியேட்டர்களில் 4 தியேட்டர்களைக் கபாலிதான் பிடித்துக் கொண்டிருக்கிறார்!!!!

   நீக்கு
 3. அட பார்த்தாச்சா.... முதல் நாள் முதல் ஷோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி வேறு வழி எங்கள் ஊரில் வேறு பொழுது போக்கு.....

   மிக்க நன்றிவெங்கட்ஜி

   நீக்கு
 4. உங்க விமர்சனத்தில நெறய எதிர்பார்த்தேன்...
  முக்கியமான பல விஷயங்களை விட்டுட்டீங்களே!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்லுவது புரிகிறது...ஆனால் படம் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை....நிறைய நெகட்டிவாக த்தான் தோன்றுகிறது என்பதால் சும்மா நாலு வார்த்தை பாசிட்டிவ் மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடலாம் என்று ..ஆனால் இறுதியில் என் மன ஓட்டத்தைச் சொல்லிவிட்டேன். இதொ உங்கள் பதிவிற்குச் செல்கிறோம்..கபாலி என்று பார்த்த நினைவு...

   நீக்கு
 5. கபாலி யாரையும் விடு வைக்கல போலிருக்கு. விமர்சனம் அருமை

  பதிலளிநீக்கு
 6. ஹஹ்ஹஹ ..கபாலி மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை.

  மிக்க நன்றி முரளிதரன்..

  பதிலளிநீக்கு
 7. பதில்கள்
  1. மிக்க நன்றி ந்யூ வேர்ல்ட் ஆர்டர்!!! முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   நீக்கு
 8. கபாலியின் தாக்கம் உங்களையும் பாதித்து இருப்பதை அறிந்து நான் அதிர்ந்து போய் இருக்கின்றேன் சினிமா கண்டுபிடிக்கப்பட்டு 122 ஆண்டுள் கடந்து விட்டது காலம் முழுவதும் அரைத்த மாவையே அரைக்கின்றார்கள் சில நேரங்களில் சிலர் சில புதுமைகளை படைக்கின்றார்கள்.

  எனது கேள்வி எதற்காக இவ்வளவு ஆரப்பாட்டம் இது சினிமாதானே.... ?

  எனது அறையில் அனைவரும் பார்த்து விட்டு திரும்ப நான் மட்டும் அவர்கள் பார்வையில் அரைக்கிறுக்கன்.
  எனது பார்வையில் அவர்கள் எப்படி ? என்பது உங்களுக்கு தெரியும்.

  எல்லாம் சரி சின்ன டவுட்டு ?.

  //கபாலி நெருப்பாகி ரஜினி ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்க்கிறார்//
  அதெப்படி நெருப்பு எப்படி பாலை வார்க்க முடியும் ?

  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியெல்லாம் இல்லை கில்லர்ஜி! நீங்கள் கடைசி வரிகளையும், ஸ்ரீராமுக்கும், மலருக்கும் கொடுத்திருக்கும் பதிலையும் பார்க்கவில்லையா...

   மிக்க நன்றி ஜி

   நீக்கு
 9. பதில்கள்
  1. மிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா! தங்களின் கருத்திற்கு

   நீக்கு
 10. என்னிக்காவது ஒரு நாளைக்கு 2020 வருஷத்திலே
  கபாலி படம்
  டி.வி. லே
  போடுவாங்க. அப்ப தான் பார்க்கமுடியும் போல.
  ரசிக்கமுடியும் போல.

  இந்தக் கூட்டத்திலே இந்த சத்தத்திற்கு நடுவிலே
  டிக்கட் வாங்கவே முடியாது. ஆன் லைனில் கிடைக்குமா அப்படின்னு பார்க்கணும்.


  இப்போதைக்கு விமர்சனங்களை ரசிப்போம்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுப்புத்தாத்தா வாங்க இன்னும் கொஞ்ச நாள் போனால் டிக்கெட் கிடைக்கும் அப்போது நீங்கள் பார்க்கலாமே தாத்தா...ஆன்லைனில் கிடைக்கும் என்ன ஒரு வாரம் கழித்துக் கிடைக்குமாக இருக்கும்.....

   மிக்க நன்றி தாத்தா

   நீக்கு
 11. நானும் சூரி தாத்தா கட்சிதான். தியேட்டரில் படம் பார்த்து வருஷக் கணக்கு ஆயிற்று. தியேட்டரில் உட்கார்ந்து பார்க்க பொறுமை இல்லை. எனினும் உங்கள் பட விமர்சனம் ‘கபாலி’ யைப் பார்க்கத் தூண்டுகிறது. பழைய பாட்சாவை நினைவுபடுத்தியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் இளங்கோ ஐயா மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு.

   நீக்கு
 12. அதிகாலை விமரிசனம் என் பேரனும் பார்த்துவிட்டு வந்தான் பாட்சா அளவு தேறவில்லை என்பது அபிப்பிராயம் பாட்சாவில் ரகுவரன் வில்லனாக வந்து அசத்தி இருந்தார் இனி எத்தனை விமரிசனங்களோ தெரியலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார் பழைய ரஜனி இல்லை போல் இருந்தது எனக்கு அவ்வளவே. மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு

   நீக்கு
 13. ரஜினி தவிர யார் நடித்திருந்தாலும் இது டாக்குமெண்டரிதான்...
  தாதாவுக்கான படமாகவும் இல்லாமல்... மனைவி மகளைத் தேடும் மனிதரின் படமாகவும் இல்லாமல்... இலக்கில்லாமல் பறந்து... இடையில் சாதீயம் பேசி...
  சரி விடுங்க... கபாலி மனம் கவரவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் குமார். ..எனக்கு என்னவோ என் மனதில் இருக்கும் ரஜனியின் எதிர்ப்பார்ப்பில் சென்றதாலோ என்னவோ கபாலி மனதில் ஒட்டிக் கொள்ளவில்லை நன்றி கருத்திற்கு

   நீக்கு
 14. பட விமர்சனத்தை ரசித்தேன், நன்றி. இதுவரை பார்த்திராத அளவு விளம்பரப்படுத்திய காசு பண்ணுவோரின் உத்தி இன்னும் நம் சமூகத்தை எந்த அளவில் கொண்டு செல்லப் போகிறதோ என நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு. உண்மைதான் ஐயா உங்கள் கருத்து...

   நீக்கு
 15. வணக்கம் துளசி சார் அன்ட் கீதா மேடம்!

  துளசிதரன்! நீங்க லிங்காவும் பார்த்து விமர்சிச்சீங்க. உண்மை என்னனா நம்மில் பலரை ரஜினி என்டர்டெய்ன் பண்ணுகிறார். நாம் அவர் படங்களை நம்மை அறியாமல் பார்க்க விரும்புகிறோம். அந்த ட்ரைவ் நம்மிடம் இருக்கிறது. நிசப்தம் மணிகண்டன், அதீதக்கனவுகள் ராதாகிருஷ்ணன், நீங்க போன்ற வித்தியாசமான சிந்தனைஉள்ளவர்களும் உள்ளுக்குள் ரஜினி ரசிகர்கள்தாம். என்ன அதை வெளிப்படையாக சொல்ல ஏனோ ஒரு பெரும் தயக்கம் (நம்மள எல்லாரும் "தப்பா" நெனச்சுடுவாங்களா? :) )

  படம் பார்த்தேன். ரஜினி-ராதிகா ஆப்தே கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருந்தது. இதைப்போல் ஒரு கெமிஸ்ட்ரியை எந்த கேங்ஸ்டர் படங்களிலும் யாரும் பார்க்கவில்லை என்பதே இங்கு கோடிட்டுக் காட்ட வேண்டியது.

  ரஜினினாலே ஹைப் அதிகமாயிடுது. அதை வியாபாரிகள் பயன்படுத்தத்தான் செய்வாங்க. மீடியா அதை வச்சு பணம் பண்ணுவாங்க. இதெல்லாம் யார் குற்றம் ஏன் ரஜினியையே இதெற்கெல்லாம் "வில்லன்"ஆக சித்தரிக்கிறாங்க என்பது மில்லியன் டாலர் கேள்வி.

  இன்னும் கொஞ்சம் நீங்க ரசித்த சில காட்சிகளை சொல்லியிருக்கலாம். நம்ம எல்லாம் ஊர் உலகத்துக்கு பயந்துதானே பேசுறோம்?? அதேபோல்தான் உங்க விமர்சனமும் இருக்கு. :) Take it easy, Sir! :)

  ps: It has been a while since I responded your post. Now you should know how to make me respond or show up here or not? lol

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. First We should say we liked your ps...hahahh..

   வருண் எனக்கு ரஜனியைப் பிடிக்காது அதாவது நடிப்பு..என்று சொல்லவில்லையே. எனக்கு இன்னும் மனதில் இருப்பவர் நெற்றிக் கண், முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை, தில்லுமுல்லு போன்ற படங்களின் நாயகன் மனதில் பதிந்தது போல் இது பதியவில்லை. ஒரு வேளை நான் அதை மனதில் வைத்து எதிர்ப்பார்த்துச் சென்றது காரணமாக இருக்கலாம். அன்று மூன்று முடிச்சு/அபூர்வ ராகங்கள் படத்தில் பாலசந்தர் இவரை இயக்கியய் போது சொன்ன வார்த்தைகள் என்று பத்திரிகையில் வந்தவை இவன் எங்கேயோ போய்டுவான் என்பது நினைவுக்கு வராமல் இல்லை.

   நன்றி வருண்....

   நீக்கு
 16. மாஸ் ஹீரோ படம் என்றாலே வெறும் பில்ட் அப் மட்டுமே இருக்கும் ,கபாலியும் விதிவிலக்கல்ல என்பது உங்கள் விமர்சனம் மூலம் தெரிகிறது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது உண்மைதான் பகவான் ஜி! ஆனால், ரஜனி இனி ஓய்வெடுப்பது நல்லது என்பதுதான். அவர் இதிலும் கூட சில காட்சிகளில் நன்றாகத்தான் செய்திருக்கிறார்...அவர் உடல்நலம் தான் ..

   நீக்கு
 17. நல்லது தங்களின் பதிவு மூலம் படம் பார்த்தாகிவிட்டது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹ் அட!!! மிக்க நன்றி வலிப்போக்கன் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 18. Kabali is fantastic movie. Go and watch more to understand the concept. U guys needs only useless masaala!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Sorry New World Order! We are not interested in masala!!! Didn't you read the replies we have given? Rajani is a very good actor. Just watch all his old movies. You will understand him as a good artist. Rajani needs rest for his health reasons now. That's what our opinion we try to convey.

   Thanks a lot New Wrld Order for visiting again.

   நீக்கு
 19. படத்தில் நான்கில் ஒரு பகுதியில்தான் ரஜினி நடித்திருப்பதாகவும், மீதமுள்ள மூன்று பங்கும் டூப் போட்டு எடுக்கப்பட்டது என்றும் ஒரு செய்தி இருக்கிறதாமே, உண்மையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியெல்லாம் தெரியவில்லை சார்....அவர் பெரும்பாலும் ரொம்ப மெனக்கிடாமல் அவரது உடல் நலத்திற்கேற்ப செய்திருப்பதாகத்தான் தெரிகிறது.

   மிக்க நன்றி சார்.

   நீக்கு
 20. அன்பிற்கினிய நண்பர்களே,

  காலம் பொன்னானது -- வீணாக்க வேண்டாம்.

  பார்ட் டூ என்று சொல்லி நெஞ்சுக்குள் தோட்டாவை பாய்க்க வேண்டாம்.

  இந்த படத்தின் இயக்குனர் யார்?

  விரிவான விமர்சனம் நன்றாக இருந்தது.படம் பார்க்கவேண்டுமென்ற ஆவலை அலட்சியப்படுத்தவைத்துவிட்டது.

  கோ

  பதிலளிநீக்கு


 21. Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. But some extraordinary smart groups in TN has portrayed this movie as a Dalit movie. I strongly say that It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. ***Watch more***

  Makizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.

  After 10-20 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.

  Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!

  Watch more Kabali!

  By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged Kalaignar Karunanithi and MGR in politics. Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. Ranjit.

  பதிலளிநீக்கு
 22. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. நீங்கள் எழுதிய விமர்சனமாயிற்றே என்று படிக்க அமர்ந்தேன். இப்படி, படத்தின் திருப்புமுனைக் காட்சிகள் தொடங்கி முடிவு வரை எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்களே! இது நியாயமா?

  பதிலளிநீக்கு
 23. 99 ஆம் வருடம் வந்ததாமே படையப்பா! அதுவே இன்னும் பார்க்கலை! கபாலிக்கென்ன அவசரம்! :)

  பதிலளிநீக்கு