சனி, 25 ஜூன், 2016

காணவில்லையே அன்றோடு... அதைத் தேடுகின்றேன் இப்போது

Image result for brain

காணவில்லை என்பது அவ்வப்போது செய்தித்தாள்கள், காவல்நிலையங்கள், தொலைக்காட்சிகள், பொது இடங்கள் என்று பார்ப்பதுதானே! ஏன் இந்த அலட்டல்

இந்தக் “காணவில்லை” என்பது அப்படிப்பட்டது அல்ல!

அப்படி என்னத்தைக்  காணவில்லை, எதைத் தேடுகின்றாய்?

ஒன்றுமில்லை...கீதாவின் மூளையைக் காணவில்லை.

என்னது கீதாவின் மூளையைக் காணவில்லையா?  நீ?

ஆம் நம்பித்தான் ஆக வேண்டும். இதைச் சொல்லுவதும் எழுதுவதும் வெர்ச்சுவல் கீதா!

வெர்ச்சுவல் கீதா?

அது ரகசியம். இப்போதைக்கு ஜீன்ஸ் படத்துக் கண்ணோடு காண்பதெல்லாம் ஐஸ்வர்யா ராயின் இடத்தில் கீதாவை நினைத்துக் கொள்ளுங்கள். தற்போதைய என் கவலை கீதாவின் மூளையைக் கண்டு பிடித்துப் பொருத்தி அவளை அமன்னிக்கவும் எழ வைப்பதுதான். இப்போது அவள் “ஹேங்க்” மோடில்.

மூளை எப்படிக் காணாமல் போகும்? அர்த்தம் வேறாகிப் போகிறதே! ஒன்றுமே புரியவில்லை.

ஐயையோ! புரியவில்லை என்று மட்டும் மாந்தர்களிடையே சொல்லிவிடக் கூடாது.  “உன் மூளை எங்கே போச்சு? முட்டாள்” என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

??????????

இப்படிக் கேள்விக் கணைகளும் கூடாது! அப்படித்தான். புரியவில்லை என்று, எப்போதோ சொன்ன அந்த வார்த்தையினால்....கேள்விகள் கேட்டதால் “அறிவு இருக்கா? மூளை கெட்ட ஜென்மம். உனக்கு மூளையே இல்லை. நோ காமன்சென்ஸ். புத்தி கெட்டவள்.  அறிவு வளரவே இல்லை.  மூளை இருந்தாத்தானே வளரும். அறிவே இல்லாத முண்டம். முட்டாள். நீ எல்லாம் என்னத்த எழுதற? அறிவுதான் இல்லை. மெமரியாவது இருக்க வேண்டாம்? அதுவும் இல்லை. இவ எல்லாம் என்னத்தப் படிச்சுக் கிழிச்சாளோ. எம் ஏ வாம்.”

கீதா தன் மெமரியைக் கூட்ட, மூளைத் திறனை வளர்க்க என்ன செய்யலாம் என்று மூளையைத் தேய்த்துக் குழப்பிக் கொண்டாள்.

மெமரி பளஸ் சாப்பிடலாமா? ம்ம்ஹூம். அந்தக் கீரையின் பெயரென்ன? ம்ம்ம் வல்லாரைக் கீரை! சாப்பிட்டால் ஞானியாம். போன பிறப்பு, அடுத்த பிறப்பு எல்லாம் தெரிந்துவிடுமாம். இந்தப் பிறப்புக் கதையே தேறமாட்டேன் என்கிறது. இதில் இது வேறா!  சரி, பேசீச்சம் பழம், தேன்? ஏற்கனவே இனிமையானவள். நோ!

வால்நட்டில் ஒமேகா 3 இருக்கிறது.  மூளைக்கு நல்லது.

ஓகே! ஆனால் விலை மிகவும் அதிகமாயிற்றே!

ஃப்ளெக்ஸ்/ஆளி விதையிலும் இருக்கிறது. சரிதான்.

அதென்னவோ தெரியவில்லை. நகரத்து பணக்கார மாந்தர்களின் கண்களில் படாமல், சீந்தப்படாமல் எங்கோ மூலையில் கிராமங்களில் விலை குறைவாக இருந்தவை எல்லாம் இப்போது இயற்கை, சித்த மருத்துவர்களின் விளம்பரங்களினால் புதிய ட்ரென்ட்! சிறு தானியங்கள் நகரத்தில் பெரிய பெரிய கடைகளில் மினு மினுப்புடனும், ஆர்கானிக் என்ற முத்திரையுடனும் க்ரீடம் சூட்டப் பெற்று, குதிரைக் கொம்பின் விலையில் பணக்காரர்கள் மட்டுமே வாங்கும்படியாக இருக்கின்றன.

ஹூம் பணம் உள்ளவர்கள் மட்டும் ஆரோக்கியமாக வாழ்ந்தால் போதும் என்று பொருளாதார விற்பன்னர்களும் ஆட்சியாளர்களும் நினைத்துவிட்டார்கள் போலும். ஒரு வேளை அவர்கள் மட்டும்தான் மக்களோ?

இப்படி எல்லாம் மூளையைக் கசக்கினால்.....  அப்போ என்னதான் வழி? கூகுள் ஏஞ்சல் ஏதாவது வழி சொல்லும் என்று தட்டினாள். நிறையவே வழிகளைக் கொட்டிக் காட்டியது.  மாஓஜாங்க் டைட்டான்ஸ், சுடோக்கு...

அட! சுடோக்கு! அடுக்கினாள். சொடுக்கினாள். முடுக்கினாள்....

அடுப்புல வைச்சுருக்கறதக் கூட மறந்துட்டு அப்படி என்ன கேடு கெட்ட வேலை. தீயுது.

ஹும் இதுவும் வேலைக்காவாது. என்ன செய்யலாம். எப்படியாவது சரி செய்ய வேண்டும்.

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். மூளையைக் கண்டான் கணினியைப் படைத்தான்! கணினியின் செயல்பாட்டில் கேடு வந்தால் செர்வீஸ் செய்வதில்லையா, மெமரியைக் கூட்ட கூடுதல் மெமரி கார்ட் போட்டு,  அது போல....ஆஹா நல்ல ஐடியா...

நரம்பியல் நிபுணரிடம் சென்றாள்.

வயது 51 ஆகிவிட்டதால் மூளை பழசாகிவிட்டதாம். செர்வீசுக்குப் போக வேண்டுமாம். மருத்துவரிடம் செர்வீஸ் செண்டர் இல்லாததால் மருத்துவர் பரிந்துரைத்த செர்வீஸ் செண்டரில் கொடுத்தாயிற்று.

ப்போது செர்வீஸ் செண்டரில் கொடுத்த மூளையைக் காணவில்லை. இதுதான் கீதாவின் மூளை காணாமல் போன பிரச்சனைக் கதை.

சரி எப்படிக் கண்டு பிடிப்பாய்,  வெர்ச்சுவல் கீதா?

அதற்கென்றுத் தனி எண் எல்லாம் உண்டு. ஒரு வேளை மாறிப் போய்விட்டதோ? மாறிப் போயிருந்தால் எப்படிக் கண்டு பிடிப்பது?

செர்வீஸ் சென்டரில் இப்போதைக்கு இதில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள் என்று சில மூளைகளைக் காட்டினார்கள்.

அடடா அப்படியென்றால் பலருக்கும் பழசாகி, மழுங்கிவிடுகிறது போலும்!

ஐயோடா சாமி! அது பிரதமர், முதல்வர், அரசியல்வாதி இல்லை ஏதேனும் சாமியார்களின் மூளையாக இருந்துவிட்டால்...இல்லை யார் எழுதுவதும் இலக்கியமே இல்லை என்று சொல்பவரின் மூளையாக இருந்துவிட்டால். ஐயகோ கொடுமை!

காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்றால் அவர்களும் அவர்களது மூளையைத் தேடிக் கொண்டிருக்கின்றார்களாம்.

என்னது கீதாவின் மூளையைக் காணவில்லையா? ஹஹஹஹ் அது இருந்தால்தானே காணாமல் போவதற்கு. அப்படியே இருந்திருந்தாலும் இவளது மூளையை எல்லாம் யாரு திருடப் போகிறார்கள் என்ற குரலும் கேட்கிறது அகத்திலிருந்து.

"கிழே கிடந்துச்சு இது உங்க மூளையா பாருங்க" என்று சமூக வலைத்தளங்களில் வலம் வருவதாக தோழி அபயா அருணா நகைச்சுவையுடன் சொல்லியிருந்தார். ஒரு வேளை அது கீதாவின் மூளையோ என்று பார்த்தால்.....அந்த மூளை சத்தியமாக கீதாவின் மூளை இல்லை என்பதையும் இங்குச் சொல்லிக் கொள்கின்றேன். ஹிஹிஹி...

நீங்கள் எல்லோரும் உங்கள் மூளையைப் பத்திரமாகத்தானே வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? செர்வீஸ் செண்டர் எல்லாம் ஃபுல்லாக இருக்கிறதாம். தொலைத்துவிடாதீர்கள். சகோதர சகோதரிகளே, கீதாவின் மூளையைத் தேடிக் கண்டுப்பிடித்துத் தருகிறீர்களா...

(மிக்க நன்றி அபயா அருணா. அங்குப் பின்னூட்டம் இட வந்து இட முடியாமல் இங்கு மொக்கைப் பதிவாய் மாறியதற்கு)

------கீதா

(படம் இணையம்)



43 கருத்துகள்:

  1. இனிமேல் தேடாதீங்க ,நீங்களே காணாம போயிடுவீங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹ் ஓ அப்படியும் இருக்கிறதா? காணாமல் போனாலும் மீண்டும் வருவேன்..வெகீ அல்லவா அதனால்..ஹிஹி

      நீக்கு
  2. அபய அருணாவின் அந்த பதிவை பார்த்ததும் நான் அது மாதிரி என்னுடைய பாணியில் பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன் ஆனால் நேரமின்மையால் தள்ளி போகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் எழுதலாமே. நீங்கள் தாமதம் எல்லாம் இல்லை.. அதில் அவர் கொடுத்திருக்கும் ஒன்று இந்த மூளையை உபயோகித்தால் மனைவியையும் சமாளித்துவிடலாம் என்று அதைப் பார்த்ததும் எனக்கு மதுரைத் தமிழனின் நினைவுதான் வந்தது. மதுரைத் தமிழன் மூளையை எக்சேஞ்ச் செய்து பூரிக் கட்டை அடியிலிருந்து தப்பலாமேன்னுதான்.

      தமிழா நீங்கள் இந்தியா வருவதால் கொஞ்ச நாள் உங்கள் மூளையை கீதாவுக்கு இரவல் தாருங்கள்..போகும் போது தந்துவிடுகிறேன் அதற்குள் அவள் மூளையைக் கண்டு பிடித்து விடுவேன் என்று.

      அதெல்லாம் முடியாது ஊருக்கு வருவதால் பூரிக்கட்டை அடியெல்லாம் இல்லை தப்பித்தேன்..இப்படியெல்லாம் சொல்லி என்னை டபாய்க்க முடியாது.

      மோடிக்கும் ஜெஜெ விற்கும் ஸ்டாலினிற்க்ம் கொஞ்ச நாள் இரவல் கேட்டிருக்க்காங்களாமே கவனமா இருங்க ஆட்டையைப் போட்டுருவாங்க தமிழா...

      க்ந்தாலையில் பார்த்தால் இந்த வரிகள் எல்லாம் மிஸ்ஸிங்க்.

      நீக்கு
  3. நெஜமாவே இங்கே கொழம்பிப் போச்சு கீதா, ஹி ஹி இதுக்கு காணாமலே போயிருக்கலாம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹஹ் செர்வீஸ் செண்டரில் கொடுத்து பக்கத்துல இருந்தே வாங்கிட்டு வந்துருங்க சித்ரா....ஹிஹி

      நீக்கு
  4. ஹச்சச்சோ.. என் மூளை காணாமப் போயி நெம்ப நாளா ஆச்சு.. நான்தான் "நாம் அதை யூஸ் செய்வதே இல்லையே.. எஹுக்குத் துடிக்கிட்டு" ன்னு விட்டுட்டேன். தேடணுமா என்ன? அதுதான் தேடினாலும் கிடைக்காது என்கிறீர்களே.. விட்டுட வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டுடலாம்றீங்க..சரி விட்டுவிடுகின்றேன்.....ஆனா ஒண்ணு அது யார் தலையிலாவது ஏறியிருந்தா விளைவுகளுக்கு கீதா பொறுப்பல்ல ஹிஹிஹி

      நீக்கு
  5. வெர்ச்சுவல்-க்கு தமிழ்ல என்ன?!
    மூளையை கேட்டு சொல்றீங்களா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மலர். வெர்ச்சுவல் குத் தமிழ்ல என்னன்றது எல்லாம் மூளைக்குத் தெரியாதுங்க. அதனால கூகுள் தேவதையைக் கேட்டா சொல்லுது "மெய்நிகர்" அப்படினு. இது சரியானு உங்க மூளையைக் கேட்டுச் சொல்லுங்க மலர்...ஹிஹிஹி

      நீக்கு
    2. அதைத் தானுங்க தொலைச்சிட்டு தேடிட்டு இருக்கேன்...
      எங்கிட்டாச்சும் பாத்தா வந்து சேர சொல்லுங்க...!!

      நீக்கு
    3. ஹ்ஹஹ்ஹ் மலர் சரியாப் போச்சு அப்படின்னா இந்த மூளை உங்க மூளையானு பாருங்கனு ஒரு மூளை வலம் வருதே அதையும் போய் பார்த்துருங்க உங்கள் மூளையானு...ஹிஹிஹி...நான் பார்த்தால் அனுப்பி விடுகிறேன்...

      நீக்கு
  6. மூளையைத் தேடி...
    எங்களைக் குழப்பிட்டீங்க...
    இனி தேடாதீங்க... விட்டுடுங்க... தானா வந்துரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் உங்களையும் குழப்பி விட்டேனா!! சரி சரி விட்டுடறேன். ஆனா பாருங்க இந்த மூளைக்குப் பதிலா வேறு மூளை பொருத்திக் கொள்கிறீர்களா என்று செர்வீஸ் செண்டரில் கேட்டதைப் போல அதை பேஸ் செய்து ஒரு சைஃபை கதை மனதில் ஓடுகின்றது. பார்ப்போம் எழுத முடிகின்றதா என்று...

      நீக்கு
  7. சாதாரணமாக ‘மூளை கழண்டு விட்டதா?” என்று கேட்பார்கள். நீங்கள் சர்வீஸ் செண்டருக்கு மூளையை கொண்டு போகலாம் என்று சொல்கிறீர்கள். நமது மூளையைக் கழட்டிய பிறகு யார் மூளையை தற்காலிகமாகத் தருவார்கள்? விஞ்ஞானத்தில் எதுவும் நடக்கலாம். உங்கள் கற்பனையைத் தட்டி விட்டு ஒரு விஞ்ஞானக் கதையைப் படையுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா! என் மனதிலும் இப்படி மூளை மாறினால் என்ன நடக்கும் என்று ஒரு விஞ்ஞானக் கதை ஓடிக் கொண்டிருக்கின்றது. எழுத முடிகின்றதா என்று பார்க்க வேண்டும்...

      நீக்கு
    2. ஹா ஹா உலகத்தில் எல்லோருமே மூளையைத் தலையில் வைத்துக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு எல்லாச் செயல்களையும் செய்வதாக நம்பப்படுகிறது. இது ஒரு 100%மாயை .. 99% மனிதர்கள் மூளை காணாய் போனது கூட அறியாமல் தான் செயல் படுகிறார்கள்

      நீக்கு
  8. நானும் ஒருமுறை காணாமல் ஊரெல்லாம் தேடினேன் கடையில் நண்பர் ஒருவர் மூலம் கறிக்கடை கரீம்பாயை சந்தித்தேன் அவர்தான் நிவர்த்தி செய்து தந்தார் தற்போது அதன் மூலமே இயங்குகிறேன்.

    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ கில்லர்ஜி நீங்களும் கீதா மாதிரியா..அது சரி அவர் நிவர்த்தி செய்து தந்தார் என்றால் அதுவும் கறி விற்கும் கடை என்று வேறு சொல்கின்றீர்கள்...அப்படியென்றால் உங்கள் மூளை....??!! ஆஹா அப்படியாக இருக்குமோ?!!!!

      நீக்கு
  9. ஹாஹாஹா! ரொம்ப நாளா காணோமேன்னு பாத்தா இப்படி மூளையை தொலைச்சிட்டேன்னு வந்து நிக்கறீங்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுரேஷ்! ம்ம்ம் ஆமாம் சுரேஷ் அந்தச் சோகக் கதையை ஏன் கேட்கின்றீர்கள்... இவ்வளவு நாள் என்ன செய்வது என்று தெரியாமல் கீதா முழித்துக் கொண்டிருந்தால்...இப்போது இந்த வெகீ தான் இப்படி எழுதிக் கொண்டிருப்பது..

      நீக்கு
  10. மூளையைப் பொருத்தியிருந்த மறையாவது இருக்கிறதா கிடைத்தால் மீண்டும் பொருத்த. இல்லாததைத் தேடி அளைவதைப் பார்த்தால் அமாவாசை இருட்டு அறையில் இல்லாத கருப்புப் பூனையைக் குருடன் தேடுவது போல் இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் மறை கழண்ட கேஸ்னு சரியாகச் சொல்லிவிட்டீர்கள்!! மறை எல்லாம் சென்டர் பார்த்துக் கொள்ளும்...சார்..

      நீக்கு
  11. மூளையைக் காணோமா!... நல்லா தேடுங்க... கிடைச்சுடும்!...

    நல்ல வேளை!.. நமக்கு இந்த மாதிரி தொந்தரவெல்லாம் இல்லை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடிக் கொண்டிருக்கின்றேன் துரை செல்வராஜு ஐயா. கிடைத்துவிடும் அதுவும் புத்துணர்வுடன் என்ற நம்பிக்கையில்....நல்ல விசயம் இந்த தொந்தரவு எல்லாம் இல்லாதது.

      நீக்கு
  12. நீண்ட நாட்களுக்கு பிறகு வலைப்பக்கம் வந்தேன் வந்த உடன் தங்களின் மூளையை காணவில்லை என்றதும் குளம்பி படித்தேன்.அபயா அருணா அம்மா அவர்களின் வலையினையும் படித்தேன்.பிறகு தான் புரிந்தது சகோ.நேரம் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைசாலி வாங்க. ஹஹஹஹஹ ..... அங்கு தோழி நல்ல நகைச்சுவையாகவே எழுதியிருப்பார்... நன்றி வைசாலி

      நீக்கு
  13. "சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் மண்டைல - மன்னிக்க - மண்டல ஒளிபரப்பு! காணாமல் போன பொருட்களைப் பற்றிய அறிவிப்பு.

    சென்னையைச் சேர்ந்த கீதா என்பவரின் மூளையைக் காணவில்லை. வயது 51. எடை: சராசரிக்கும் கீழே (நிறைய சிந்திப்பவர் என்பதால் சுருங்கிச் சுருங்கி -அதாவது நிறைய வேலை செய்து செய்து- கொஞ்சம் எடை குறைந்து விட்டது). அடையாளம்: சுருக்கங்கள் நிறைய இருக்கும்; யாருக்காவது பொருத்திப் பார்த்தீர்களானால் அவர் எப்பொழுதும் உலக நன்மையைப் பற்றியும், மக்கள் நலன் பற்றியுமே புலம்புவார். சாதி, அரசியல் போலித்தனம் போன்றவற்றைக் கடுமையாக எதிர்ப்பார். அடையாளம் கண்டெடுப்பவர்கள் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கெல்லாம் கொண்டு வராமல் உடனடியாக கீதா அவர்களிடமே சேர்த்து விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காரணம், மூளை இல்லாததால் அவர் எழுத வேண்டிய பதிவுகளை எதிர்பார்த்துத் தமிழ்ப் பதிவுலகம் காத்துக் கிடக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹஹ் இபுஞா சிரித்துவிட்டேன் இதை வாசித்துவிட்டு. ஆனால் இப்படி கீதாவை ரொம்பவே தூக்கி வைத்துவிட்டீர்கள். நீங்கள் சொல்லும் அளவிற்கெல்லாம் இல்லை சகோ...அது சரி அப்ப கீதாவின் மொக்கைப் பதிவுகளுக்காகத் தமிழ்ப் பதிவுலகம் காத்துக் கிடக்கிறதா...கொஞ்சம் அதிகமாக இல்லை??!!!! ஹஹஹஹஹ் ரசித்துச் சிரித்துவிட்டேன்...

      நீக்கு
  14. ஹாஹா....

    நல்ல வேளை என்னிடம் கேட்காமல் இருந்தீர்கள். என்னிடம் இல்லாததை எப்படி தர முடியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ என்ன வெங்கட்ஜி நீங்களும் இப்படிச் சொல்லிவிட்டீர்கள்!!! உங்களுக்கா இல்லை....அருமையான மூளை!!! அவ்வப்போது கீதாவிற்குக் கொஞ்சமாகக் கொடுத்தால் போதும் ஹஹஹ்...

      நீக்கு
  15. உங்கள் மூளை ஐன்ஸ்ட்டின் மூளைக்குப் பக்கத்தில் இருப்பதாக கூகிளில் போட்டிருக்கிறது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயையோ அப்யா அருணா என்ன இப்படி எல்லாம் பயமுறுத்தறீங்கப்பா...ஹ்ஹஹஹஹஹ அவர் அருகில் எல்லாம் போகக் கூட முடியாதுப்பா.....கீதா தள்ளிதான் இருப்பா.... ரொம்பவே

      நீக்கு
  16. நானும் காணவில்லை உங்களைத்தானோ என்று நினைத்தால் மூளைபற்றி அது இல்லாத மரம் நான் என்ன சொல்ல)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கா இல்லை தனி மரம் நல்ல வளமான மரம் நீங்கள் நேசன்!

      நீக்கு
  17. பதில்கள்
    1. ஐயா இப்போது மீண்டும் இதை வாசித்த போதுதான் இது தவறான பதிலாகி விட்டதோ என்று தோன்றுகிறது. நான் எந்த அர்த்தத்தில் எழுதினேன் என்றால் தாங்கள் "எனக்கு சம்பந்தப்படாத விஷயம் " என்று சொல்லியதை, நீங்கள் எல்லாம் மிகவும் அறிவுப்பூர்வமாக பல கட்டுரைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவதால் மூளையைக் காணவில்லை என்று பேசுவதெல்லாம் தங்களுக்குச் சம்பந்தப்படாத விஷயம் என்ற் அர்த்தத்தில்.

      முதல் கருத்து தவறான அர்த்தத்தைத் தந்திருந்தால் தங்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன் ஐயா. நன்றி ஐயா

      நீக்கு
  18. அப்படியா...!!!! எனக்கு சம்பந்தமே இல்லை.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் வலிப்போக்கன் நீங்கள் எல்லாம் இப்படிச் சொல்லக் கூடாது.

      நீக்கு
  19. நல்லா தேடிப்பாருங்கள் அங்கேதான் எங்கேனும் ஒரு "மூலையில்" இருக்கும்.

    அருமையான மூளை உங்களது, சீக்கிரம் கண்டுபிடியுங்கள் ஒரு நல்ல 007 னிடம் சொல்லி.

    கோ

    பதிலளிநீக்கு
  20. மூளைக்கு வேலை கொடுத்து பத்திரமா வச்சுக்கிறோம்

    பதிலளிநீக்கு
  21. மூளை கிடைத்தாலும் அதான் உங்களோடதுங்கறதுக்கு என்ன அடையாளம் வைச்சிருக்கீங்க?

    பதிலளிநீக்கு