வியாழன், 2 ஜூன், 2016

நாங்களும் சந்திப்போம்!!! சந்திப்பு - 2

இது அவர்களது ஐடென்டிட்டி ஸ்கானிங்க் சம்பிரதாய பரிசோதனைகள். அது முடிந்ததும்... அடுத்தது என்ன என்று முந்தைய பதிவில் முடித்திருந்தேன். இதோ தொடர்கின்றது...

ஜூலி எங்கே? என்று ஸன்னி வினவ

இதப் பார்டா வந்தவுடனே ஆர்வத்தோடு ஜூலி எங்கே என்று கேட்பதை...-

ஹேய் சும்மாதான் கேட்டேன்...உடனே கதை கட்டிவிடாதே....சரி ஜெஸ்ஸிடைகர், ரஜ்ஜு எங்கே? 

இதோ நீ கேட்ட ஜூலி.
                                                                   கரந்தை சகோவின் செல்லம் ஜீலி

இவன் தான் டைகர். 
   எங்கள்/துளசியின் செல்லம் டைகர்
கண்ணழகி : ஜெஸ்ஸி ஒரு பட்டாளத்தையே அழைத்து வந்திருக்கிறாள், அவர்கள் ஊர்  சுற்றிப் பார்க்கவாம். இங்குதான் இருக்கிறாங்க்.....அடடா இந்த ஜெஸ்ஸியை காணவில்லையே..  இந்த ஜெஸ்ஸி, கருவாண்டியுடன் போயிருப்பாள். ஐயையோ! ரஜ்ஜுவையும் காணவில்லை அவனும் அவர்களுடன் போய்விட்டானோ. பூனையர்களாச்சே. ஒரு வேளை ரஜ்ஜுவின் அம்மா துளசி ஆண்டி இங்கு ஊர் சுற்றிக் கொண்டிருக்காங்களோ!! வாங்க,  தேடிக் கொண்டே நடப்போம்..

ஸன்னி கருவாண்டியா? அவன் யார்ஜெசியின் ஆண் தோழனா

கண்ணழகிஅது தெரியாது. வீட்டைவிட்டு ஒரு முறை அவளை ஏமாற்றிக் கூட்டிக் கொண்டுப் போய்விட்டான். இந்த ஜெஸ்சியும் வீட்டுக்கு எப்படி வருவது என்று தெரியாமல் கருவாண்டியைத் திட்டிக் கொண்டே வந்து கதவைத் தட்டவும்... ஜெசியோட அம்மா ஏஞ்சலின் பாவம் பயந்து போய் திருடன் என்று நினைக்க...

டைகர் : ஹ்ஹாஹ்ஹ....அப்ப ஜெஸ்ஸி செம ஆட்டம் போடுவாள் போல. சுவாரஸ்யமாக இருக்கிறதே!

கண்ணழகி : டைகர்! வாய் விடாதே....உன் ஆட்டத்தை அப்புறம் சொல்கிறேன். இப்பவும் எங்கேயாவது போயிருப்பார்கள்..
ஸன்னி : ஓ! அப்போ ஜோடியா...அதான் இருவரும் பிரியாமல் சேர்ந்து வந்திருக்கிறார்கள் போல...--

ரஜ்ஜு - நியூசிலாந்து துளசி அக்காவின் செல்லப் பிள்ளை 

கண்ணழகி : ஏஞ்சல் அம்மாவைக் கேட்டால்தான் தெரியும்.....ஹேய் அங்கே பார் ஓரு பெரிய பொம்மை மேல் ரஜ்ஜு ஏறி உக்காந்திருப்பதை....டேய் ரஜ்ஜு வாடா...

Jessie :)
ரஜ்ஜு : ஜெஸ்ஸிய தேடுகின்றீர்களா? ஏஞ்சலின் அம்மா அவங்க தளத்துல... "வான்டட்" அப்படினு ஜெஸ்ஸியோட ஃபோட்டோ போட்டுருக்காங்களா.....நானும் தேடிக் கொண்டே வந்தேன்.

டைகர், ஜூலி : இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? ரஜ்ஜு?

ரஜ்ஜு ப்ளாக் எல்லாம் வாசிக்கின்றான்

ரஜ்ஜு : நான் எங்க துளசி அம்மா ப்ளாக் எழுதும் போது நானும் கம்ப்யூட்டரில் ஏறி உட்கார்ந்து வாசிப்பேன் தெரியுமா? ஹிஹிஹி

கருவாண்டியும், தோழி ஏஞ்சலினின் செல்லம் ஜெஸ்ஸியும்
ரஜ்ஜுவுடன் பேசிக் கொண்டே போக, அங்கு ஒரு கடையில் சுண்டெலி பொம்மை தொங்கிக் கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெஸ்ஸியையும், கருவாண்டியையும், அவர்களது தோழர்களான பிரபு, சிம்பு, அசா (அரவிந்த்சாமி) எல்லோரையும் பார்த்து, ஸன்னி, ஜூலி, டைகர் சிரிக்க....,

ஜெஸ்ஸியின் தோழர்கள்
சிம்பு
chimpu :)
அசா-அரவிந்த் சாமி                                                                                           பிரபு









ஜூலி : அது உண்மையான எலினு நினைச்சு டாம் அண்ட் ஜெர்ரி விளையாடலாமானு வேடிக்கை பாக்கறீங்களா..ஹ்ஹ்ஹ் அது பொம்மை

ரஜ்ஜு : எனக்கு அது முன்னாடியே தெரியுமே அதான் நான் அந்த யானை பொம்மை மேல் உட்கார்ந்துவிட்டேன் 

ஜெஸ்ஸி :  என்ன நக்கலாஎங்களுக்கும் தெரியும்.  எப்படி இப்படி உண்மை எலி போல இந்த மனிதர்கள் செய்திருக்கிறார்கள் என்றுதான் வேடிக்கை பார்த்தோம்.  

டைகர் : பாரு! மீசையில் மண் ஒட்டாது !!

எல்லோரையும் இழுத்து வண்டியில் ஏற்றிக் கொள்வது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஜெஸ்ஸியின் தோழர்கள்  ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய போது...கண்ணழகி ஸன்னியை அறிமுகப்படுத்துகிறாள்

கண்ணழகி : சிம்பு, பிரபு, அசா!! இவன் தான் ஸன்னி. நியூஜெர்சியிலிருந்து வந்திருக்கிறான். நீங்களும் எங்களுடன் எங்கள் அகத்திற்கு வந்துவிட்டு அப்புறம் ஊர் சுற்றிப் பார்க்கச் செல்லுங்கள். ஒரு முக்கியமான நிகழ்வு இருக்கிறது. 
எனவும் அவர்களும் வந்தார்கள்.

ஸன்னி :  கண்ணழகி! உன் சகோதரி ப்ரௌனி இப்போது எங்கிருக்கிறாள்? அவளும் வருவாள்தானே? 

கண்ணழகி : ஸன்னி அவளைப் பற்றிப் பேசாதே. எனக்கும் அவளுக்கும் ஆகாது. பங்காளிச் சண்டை. 

ஸன்னி : பங்காளிச் சண்டையா அப்படின்னா

ஜூலி : ஓ! நீ குட்டிக் குழந்தை அதுவும் அமெரிக்கா இல்லையா! உனக்கு இதெல்லாம் தெரியாது 

ஸன்னி : பரவாயில்லை நான் அவளையும் பார்க்க வேண்டும்...

கண்ணழகி : (மைன்ட் வாய்ஸ்: ம்ம்ம் இந்த ஸன்னிக் குட்டி ரொம்ப நல்லவனா, சமத்துப் பையானா இருக்கானே!) நீ சொல்லுவதால் சரி. ஆனால் அவள் நாம் பேசும் இடத்திற்கு வரக் கூடாது.   அறையில்தான் இருக்க வேண்டும்.

ஜெஸ்ஸி : ஓ! அந்த அளவிற்குப் பகையா? உன்னுடன் கூடப் பிறந்தவள் அல்லவா?  

கண்ணழகி : அந்தக் கதையை அவளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்......அகம் வந்துவிட்டது.... 
வீட்டிற்குள் நுழைந்ததும் அந்தச் சமயம் பார்த்து, வென்ற கட்சியும், எதிர்க்கட்சியும் சரவெடிகள் வெடிக்க அவ்வளவுதான்  எல்லோரும் பயந்து, உடம்பு நடுங்க ஓடி ஒளிந்து கொண்டார்கள்

சரி அவர்கள் எல்லோரும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வரட்டும். அதுவரை நீங்களும் காத்திருங்கள். அடுத்து ஒரு விழா. மறக்காமல் வந்துவிடுங்கள்!

தொடரும் விழாவில் சந்திப்போம்....

நிழற் படங்களுக்கு நன்றி : ஏஞ்சலின், துளசி டீச்சர்/அக்கா, சகோ கரந்தையார், சகோ மதுரைத் தமிழன் 

-----கீதா


(பெரும்பாலும் இரவிலும் பகலிலும் கூட வோல்டேஜ் பிரச்சனையால் நெட் போய்விடுவதால் நெட் வரும் போது பதிவிட வேண்டிய நிலைமை. உடன் உடன் பதிவிடுவதற்குப் பொறுத்துக் கொள்ளவும்.)

37 கருத்துகள்:

  1. அடடே பெயர்கள் எல்லாமே சினிமா நடிகர்கள் பெயராக இருக்கின்றதே... விழா சிறக்கட்டும் வாழ்க வளமுடன்.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ அதெல்லாம் தோழி ஏஞ்சலின் வைத்தது கில்லர்ஜி அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்

      நீக்கு
    2. ஹா ஹா :) இந்த பேர் வைக்கிறது எங்களுக்கு கைவந்த கலை ..முந்தி எங்க வீட்ல சண்டை கோழி வளர்த்தோம் ..ஒரு சேவல் ரைட்லயும் லெப்ட்லயும் இரண்டு பெண் கோழிங்க எப்பவும் கழுத்துகிட்ட பேன் பார்க்கிறேன் பேர்வழின்னு முடியெல்லாம் உருவி மொட்டை கழுத்தாக்குங்க ) அவங்களுக்கும் அரசியல் நடிக நடிகை பேர் தான் வச்சோம் ..அதை சொன்னா மீனம்பாகம் ஏர்போர்ட்ல நான் கால் வைக்க முடியாது :) உங்க கற்பனைக்கே விட்டுடறேன் @thulasi annaa @ geetha and @killergee anna :)

      நீக்கு
    3. ஹஹஹஹ் ஏஞ்சலின் பரவால்ல நாங்க எல்லாரும் பாதுகாப்பு வளையமா வந்துவிடுகிறோம்...சொல்லுங்க இல்லைனாலும் பரவால்ல கொஞ்சம் யூகிக்க முடியுது...கற்பனை பண்ணிட்டா போச்சு ஹிஹி

      நல்ல அனுபவம் ஏஞ்சல் உங்களுக்கு கோழி, ஆடு பூனை நாய் என்று...கேட்கவே சந்தோஷமாக இருக்கு. இப்போ துளசி வீட்டுல கூட கோழி, சேவல் எல்லாம் இருக்கு. முயல் வளர்க்கறாங்க இப்பவும். லவ் பேர்ட்ஸ் வைச்சுருந்தாங்க. இப்போ போயிடுச்சு எல்லாம். மீன் இருந்துச்சு அதுவும் போச்சு.

      நீக்கு
  2. நானும் ஏஞ்சலும் மட்டும்தான் செல்லப்பிராணிகள் வளர்க்கிறோம் என்று நினைத்து இருந்தால் இங்கே பதிவர் பட்டாளமே செல்லப்பிராணிகளை வளர்க்கிறதே.... சன்னி எங்களை பொருத்தவரையில் நாங்கள் பெற்று எடுக்காத மகன் தான் அவனும் நானும் உறங்குவது ஒரே பெட்டில்தான்


    செல்லப் பிராணிகளின் அறிமுகத்திற்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் நிறைய பேர் இருக்கின்றார்கள் தமிழா. எனக்கு நன்றாகத் தெரியவந்தது நீங்கள், ஏஞ்சலின், துளசி கோபால், கரந்தையார், எங்கள் அகத்து துளசி...

      இளமதி அவர்கள் மீரா எனும் பூனை வளர்ப்பதாக இப்போது இணையத்தில் தேடிய போது தெரிந்தது. மூங்கில்காற்று முரளிதரன் , ஜிஎம்பி சார், கீதா சாம்பசிவம் அவர்கள் எல்லோரும் முன்னால் வைத்திருந்திருக்கின்றார்கள். இப்போது இல்லை. எங்கள் ப்ளாக் ஸ்ரீராமும் வைத்திருந்திருக்கிறார். ஏஞ்சலின் வலைச்சரத்தில் எழுதியதில் சிலர் கிடைத்தனர். ஆனால் அவ்வளவு பரிச்சயம் இல்லாததால் குறிப்பிடமுடியவில்லை.

      நீக்கு
    2. தமிழ் இளங்கோ ஐயா வீட்டிலும் செல்லங்கள் இருக்கின்றன. படங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்...

      நீக்கு
    3. எங்கள் வீட்டிலும் என் இரு செல்லங்களும் என் மகள்கள். எல்லோரிடமும் அப்படித்தான் சொல்லுவேன். என் நண்பர்கள் கேட்பதும் அப்படித்தான்...உன் செல்லப் பெண்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று.

      இருவரும் சண்டை போடுவதால் தனி தனி அறைகளில். இதைப் பற்றிஉஅ தகவல் அடுத்த பதிவில் வரும். கண்ணழகி என்னுடன் என் அருகில்தான்/இல்லை மகனின் அருகில் படுப்பாள். அவள் ஒரு வாரம் என்றால் அடுத்த வாரம் ப்ரௌனி என்னுடன் என் அருகில்/ இல்லை என்றால் மகனுடன். சில சமயம் மகனின் சித்தப்பா ப்ரௌனியை அழைத்துச் சென்று விடுவார் தன்னுடன் வைத்துக் கொள்ள. அப்போது கண்ணழகி இங்கு ஃப்ரீயாக உலா வருவாள் அவளது ராஜ்ஜியம்தான்! இருவருமே மிகவும் சமர்த்து. மிகவும் அன்பு.

      ஸன்னியின் விளையாட்டு மனதை மிகவும் மகிழ்விப்பதால் கொஞ்சம் டல் ஆகும் போதெல்லாம் அதைப் பார்த்துச் சிரிக்கின்றேன்
      மிக்க நன்றி தமிழா

      நீக்கு
    4. தமிழன் சகோ எங்க வீட்லயும் ஜெஸி இரண்டாவது மகள் :)

      நீக்கு
    5. ஆம் ஏஞ்சல் அது உங்கள் பதிவுகளிலிருந்தே அறிய முடியுமே! அவள் மட்டுமா உங்கள் வீட்டைச் சுற்றி உள்ள அனைத்துச் செல்லங்களுமே உங்கள் மகன்கள் மகள்கள்தானே!!!!

      நீக்கு
  3. நெட் இருக்கும் நேரம் பதிவு வெளியிடுகின்றீர்கள் சரி அப்படியானால் நாள் முழுவதும் நெட் இருந்தால் நாலு பதிவு வருமோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ அப்படி எல்ல்லாம் இல்லை ஜி....எப்ப வரும் வராதுனு தெரியாததால்...போட்டுருவமேனுதான்...

      நீக்கு
    2. ஹலோ ஜி எங்கள் வீட்டு நெட் ப்ராட்பேன்ட் அன்லிமிட்டெட் ஹோம்ப்ளான் பி எஸ் என் எல். எனவே எப்போதும் இருக்கும் தான். ஆனால் சமீபகாலமாக வரும் வராது என்ற நிலையில்...அதனால்தான் சொல்லியது ஹிஹிஹி

      நீக்கு
  4. ரசித்தேன். என் பழைய செல்லம் இரண்டின் (இப்போது அவை நோ மோர்!) புகைப்படம் வேண்டும் என்றல் மெயில் ஐடி தரவும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியும் ஸ்ரீராம். உங்கள் செல்லங்களின் புகைப்படங்கள் கண்டிப்பாகத் தேவை. thulasithillaiakathu@gmail.com

      எனது மெயில் ஐடி இருக்கிறது இல்லையோ? ப்ளாகர் ஐடிக்கே அனுப்புங்கள் எளிதாக இருக்கும்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  5. எல்லாம் சினிமா நடிகர்கள் பெயர் என்றாலும் கருவாண்டிதான் பிடித்திருக்கு))) தொடர்ந்து சந்திக்கட்டும் .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தனிமரம் எனக்கும் கருவாண்டிதான் பிடித்திருக்கு. மிக்க நன்றி தனிமரம்

      நீக்கு
  6. ஹா ஹா :) பிரபு..பெயர்க்காரணம் ..அவன் மியாவ்னு சொல்லும்போது பிரபு பேசறமாதிரி கர கரன்னு இருக்கும் ..அசா பேரை இன்னிக்குதான் ஜம்புன்னு மாத்த யோசிச்சேன் சரியான தனியொருவன் ஸ்டைல் ரவுடி :)
    சிம்புவை பக்கத்துவீட்டுக்காரங்க வளர்த்தாங்க அது vtv வந்த நேரம் சிம்பு பேரை வச்சிட்டேன் பொருத்தமா என் பொன்னுக்கும் ஜெஸி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் அசா வைப் பற்றி வாசித்தேன். உங்கள் வீட்டுக்குள் யாரும் வாராமல் காவல் செய்பவனாயிற்றே...சிம்பு, ஜெஸி ஹஹஹஹஹ்

      ரசிக்கின்றோம்...

      நீக்கு
  7. சந்தோஷமா இருக்கு எல்லா பிரண்ட்சையும் பார்த்ததில் :) எல்லார் பெட்சும் குழந்தைகள் போலவே இருக்காங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சல் எனக்கும் பதிவிற்காகச் சேகரித்த போது இத்தனைச் செல்லங்களையும் பார்க்கும் போது மனது மிகவும் குதூகலித்தது.

      நீக்கு
  8. செல்லங்களின் பெயரும்...புகைப்படங்களும் அழகு...

    பதிலளிநீக்கு
  9. செல்லங்கள் எல்லாம் அழகு. அவற்றைப்பற்றி படிப்பது நல்லா இருக்கிறது.
    குழந்தைகளின் குறும்புகள் எல்லாம் எல்லோருக்கும் பிடிக்கும் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி சகோ தாங்களும் ரசித்தமைக்கு. நீங்கள் பறவைகளை உங்கள் வீட்டில் வரவேற்று உபசரிப்பவராயிற்றே...

      நீக்கு
  10. பதிவர் மாதங்கி மாலி வீட்டில் பூனைச் செல்லங்கள் இருக்கின்றனவே .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! குறித்துக் கொண்டுள்ளேன் சார். ஆனால் வலைத்தளம் எங்களுக்குத் தெரியாததால் எடுக்க முடியவில்லை. மிக்க நன்றி சார்

      நீக்கு
  11. அடுத்த திருவிழாவில் ,செல்லங்களின் வீடியோ இருக்குமென எதிர்பார்க்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  12. //அந்தச் சமயம் பார்த்து, வென்ற கட்சியும், எதிர்க்கட்சியும் சரவெடிகள் வெடிக்க// - செல்லங்கள் சந்திக்கப் போன சந்திலே அரசியல் சிந்து பாடி விட்டீர்களே! எதிர்பாராத வரி! பெரிய ஆள் நீங்கள்! பொம்மைப்படம் பார்ப்பது போல் அழகாக இருக்கிறது தொடர். முந்தைய பகுதியை விட இது சுவை. தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹாஹ்ஹ மிக்க நன்றி இபுஞா! ரசிப்பதற்கு. இன்னும் இரு பகுதிகள்தான் இன்றும் நாளையும். முடிந்துவிடும்.

      நீக்கு
  13. எங்கள் வீட்டிலும் சில பூனைக்குட்டிகள், நாய்க்குட்டிகள் வளர்த்தோம்! இப்போது இல்லை! சுவாரஸ்யமான சந்திப்பு! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியா சுரேஷ்! தெரிந்திருந்தால் உங்களிடமும் படங்கள் கேட்டிருப்பேன் இணைத்திருப்பேனே. சரி இருந்தால் அனுப்புங்கள். பின்னர் உபயோகப்படுத்திக் கொள்கின்றேன். நன்றி சுரேஷ்

      நீக்கு
  14. சூப்பர் ஜி.இரசித்தேன் தொடர்கிறேன் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  15. எல்லாம் லூட்டி அடிக்கின்றன!

    பதிலளிநீக்கு