திங்கள், 18 ஏப்ரல், 2016

காப்(ஃபி)பி ஆலாபனை - 1

Image result for coffee

எங்கள் ப்ளாக், காஃபியின் மணம் மற்றும் சுவையை காலையில் காஃபி... மாலையிலும் காஃபி! என்று சுகமான ஆலாபனை பாடியதிலிருந்தே எனது காஃபி சுவை அரும்புகள், நரம்புகள் ஆலாபனையை மீட்டத் தொடங்கிட, அதன் பின் ஆவியின் அமெரிக்கக் காஃபியின் (அவர் லைட் காஃபிதான் குடிப்பார்!!) சோக கீத ஆலாபனையும் சேர்ந்து கொள்ள இங்கு எனது ஆலாபனைப் பதிவு....

காஃபி!. என் பாட்டி காலை 4.30 மணிக்கு எழுந்தவுடன் வறுத்து வைத்திருக்கும் காஃபி கொட்டைகளை காஃபி மெஷினில் போட்டுத் திரிக்கும் போதே அந்தச் சுகந்தமான மணத்துடன் கூடிய காஃபி ராகத்துடன் தான், சிறு வயது தொட்டே எனது காலைப் பொழுது மலரும். நானும் தினமும் பாட்டியுடன் எழுந்து அரைப்பதற்கு உதவுவேன்! உதவி என்று சொல்லுவதை விட, கமிஷன் என்ற பெயரில்  சற்றுக் கூடுதலாக காஃபி கிடைக்குமே என்பதால்தான் என்று சொல்லலாம். இது அப்பாவின் அம்மா – பாட்டி வீட்டில்.

அந்தப் பழக்கம் வளர்ந்து கல்லூரிக் காலம் வந்த போதும் தொடர்ந்தது. காலை எழுந்தவுடன் காஃபி! பின்பு கனிவு கொடுக்கும் நல்ல காஃபி! மாலையிலும் ஒரு காஃபி! என்று காஃபியை ராகமாய் சுவைப்பவள் நான்.

என் பாட்டி சொல்லுவார், “துரியோதனனுக்குத் தொடையில் உயிர் இருந்ததாம். கீதாவுக்குக் காஃபியில்தான் உயிர் இருக்கு போல” என்று. நான் காஃபி அருந்தும் போதெல்லாம் என் அப்பா தன் தலையில் அடித்துக் கொள்வார். “எப்ப பாரு அம்மைய மாதிரி காப்பி” என்று சொல்லி.

என் அம்மாவும் காஃபி பிரியை. 7 ஆம் வகுப்புலிருந்து கல்லூரி வாழ்க்கை வரை, அம்மாவின் அம்மா – பாட்டி வீட்டில் பெரிய கூட்டுக் குடும்ப வாழ்க்கை. என் பள்ளி, கல்லூரி நாட்களில், நான் முழித்திருந்து படிக்க வேண்டும் என்று ஒரு சாக்குச் சொல்லி, அம்மாவிடம் நைசாய் காஃபி வேண்டும் என்றால், என் அம்மாவும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் காஃபி தருவார், தனக்கும் அந்தச் சாக்கில் கமிஷன் கிடைக்குமே என்றுதான். மறுதினம் பாட்டியின் சிங்கக் குரல் காலையில் 4.30 மணிக்கு எங்களை எழுப்பும்.

“பால் ஏன் இவ்வளவு தண்ணியா இருக்கு? யாரு ராத்திரி திரிசமன் பண்ணினது? உண்மைய சொல்லைலனா இன்னிக்கு யாருக்கும் காஃபி கிடையாது” ஹிஹிஹி. வேறு ஒன்றுமில்லை இரவு காஃபிக்குப் பால் எடுத்ததும் பாலில் கொஞ்சம்?? தண்ணீர் கலந்து வைப்பது...

“பால்கார சுப்பம்மை கள்ளி. எம்புட்டுத் தண்ணியா பால் தந்துருக்கா பாரும்மா. இன்னிக்கு வாங்கப் போகும் போது சுப்பம்மைக்கு நல்ல டோஸ் கொடுக்கறேன்.” – எங்கப்பன் குதுருக்குள்ள இல்லை என்பது போல் என் அம்மா.

“வாடி என் பொண்ணே. சுப்பம்மைக்கு "காஃபி டோஸா"? மாட்டிண்டியா!! சுப்பம்மை கள்ளியா? இங்க வீட்டுலயே ரெண்டு கள்ளிகள் இருக்கேளே.  எனக்குத் தெரியாதா என்ன? ஒங்க திரிசமன். இன்னிக்கு ஒங்க ரெண்டு பேருக்கும் காஃபி கிடையாது” என்று டின் கட்டிவிடுவார்கள்.

பாவம் அம்மா இப்போது மேலே இருந்து நான் காஃபி அருந்தும் போது ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பாராய் இருக்கலாம். “அம்மா! “சியர்ஸ்” நான் காஃபி குடித்துக் கொண்டிருக்கிறேன்.” இப்படித்தான் தினமும்.

கல்லூரிக் காலத்தில் 1985ல் தோழிகளுடன் கன்னியாகுமரிக்குச் சென்றிருந்த போது அங்கு 3 இளம் ஜாப்பானியப் பெண்களைச் சந்திக்க நேர்ந்தது. மொழிப் பிரச்சனையால் தோழிகள் தயங்க, எனக்கு இப்படிச் சந்திப்பவர்களுடன் அளவளாவுவதில் மிகவும் ஆர்வம் உண்டு என்பதால், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும், கன்னியாகுமரியைப் பற்றியும் எங்கள் ஊர் பிரதாபங்களையும் ஆங்கிலத்தில் அளந்துவிட்டேன்.

நாங்கள் கொண்டு சென்றிருந்த புளியோதரை, வெஜிடபிள் பிரியாணி, தயிர்சாதம் எல்லாம் அவர்களுக்கும் கொடுத்தோம். வெரி டேஸ்டி என்று சொல்லி குறிப்புகள் கேட்டுக் கொண்டே சாப்பிட்டார்கள். அவர்கள் ஊர் பற்றியும் சொன்னார்கள். அவர்கள் மூவரும் இன்டெர்நாஷனல் டூரைசம், கல்சர் அண்ட் ரிலேஷன்ஷிப் படிப்பதாகவும் அதன் ஒரு பகுதியாக இந்த ஸ்ட்டி டூர் வந்திருப்பதாகவும் சொன்னார்கள். கொடுத்து வைத்தவர்கள். அவர்களும் நட்பு முறையில் எங்களையும் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர்.

“கோஹி/காஃபி”? என்றதும். (அவர்கள் கோஹி என்பதில் ஒரு சி/ஷி மறைமுகமாய் ஒலிப்பது போல் இருந்தது)

“ஓ காஃபி??!! யெஸ்...ப்ளீஸ்” என்றேன்.

அவசரப்பட்டுவிட்டோமோ?! ஜப்பானியர்கள் டீ தானே அருந்துவார்கள். இவர்கள் காஃபி என்கின்றார்களே! அதெப்படி தங்கும் விடுதி அறையில் அடுப்பு எதுவும் இல்லாமல் காஃபி போட முடியும் என்றும் அவர்கள் எப்படிக் காஃபி போடப் போகின்றார்கள், அவர்கள் ஊர் காஃபி எப்படி இருக்கும் என்று சுவைக்கும் ஆர்வத்திலும் நான் சுற்றும் முற்றும் பார்த்திருக்க.

“அலவலாதி” என்று என்னை என் தோழிகள் செல்லமாகத் திட்டினார்கள். அவர்கள் எல்லோருமே “சாயா” கட்சி. ஹும் அவர்களுக்குத் தெரியுமா காஃபி வாசனை?!

அப்பெண்கள் நல்ல சுவையான காஃபி வழங்கினார்கள்.

“அட! இந்த மெத்தட் கூட நல்லாருக்கே” என்று நினைத்துக் கொண்டேன்.

சரி, அந்த மெத்தட் என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துக் கொண்டே காபி ராகத்தில் சினிமா பாடல்கள் பல அமைந்திருந்தாலும் இதோ இங்கே இரு வெவ்வேறு மன நிலையில் (மூட்) அமைந்திருக்கும் காபி ராகப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே நான் காஃபியைச் சுவைப்பது போல் நீங்களும் என்னுடன் சுவைத்து விட்டு எனது அடுத்த ஆலாபனைக்கு வாருங்கள்! அதுவரை....

A coffee break with Cheers!!! ஆலாபனை தொடரும்...
இது எங்கள் ப்ளாகின் துள்ளல் காஃபி ராகம்...

இது ஆவியின் அமெரிக்கக் காஃபி சோக ராகம் - ஹிஹிஹி



--கீதா

படம் - கூகுள். காணொளிகள் - நன்றி யூட்யூப்

(சகோ மனசு குமாரின் தளத்தில் பதிவு சோக்கா எழுதுங்க... சொக்கா பரிசை வெல்லுங்க...சிறுகதைப் போட்டி. இச்சுட்டியைச் சொடுக்குங்கள். 

இதையும் சொடுக்கலாம்.http://vettibloggerstories.blogspot.in/2016/04/VETTIBLOGGER-SHORT-STORIES-COMPITITION-2016.html)


56 கருத்துகள்:

  1. ஆகா!.. காஃபியை பற்றிய பதிவு - காஃபியைப் போலவே அருமை!..
    எனக்கெல்லாம் இன்றைக்கும் மனம் கவர்ந்தது - தஞ்சாவூர் டிகிரி காஃபி தான்!..

    அதன் சுவைக்கும் நறுமணத்திற்கும் ஈடு இணை இல்லை.. இல்லவே இல்லை!..

    ஆனாலும் - இங்கே குவைத்தில் டிகிரிக் காஃபிக்கு எங்கே போவது?..

    இருக்கட்டும்.. இருக்கட்டும்!..
    அதைப் பற்றி ஒரு பதிவு போட்டால் தான் மனசு ஆறும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா ! தஞ்சாவூர் டிகிரி காஃபி..தொடரும் ராகத்தைப் பாருங்கள்...மிக்க நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  2. காஃபின்னு சொல்லி....படித்து முடிக்கும் முன்னமே காஃபி கலக்க வைத்து விட்டீர்களே...ஹிஹிஹி....

    நானும் காஃபி கட்சி தான்....

    ஒரு கோப்பை குளம்பி அப்படின்னு காஃபி...அப்படின்னு கவிதை எழுதி பதிவிட்டு இருக்கிறேன். http://umayalgayathri.blogspot.com/2014/11/One-cup-coffee-kavithai.html

    ரசித்து ரசித்து நிகழ்வுகளை எழுதி இருக்கீங்க சகோ

    காஃபி ராகம் கேட்டாச்சு...இப்பாடல் எப்போதும் பிடிக்கும். ஆனா காஃபி ராகம்ன்னு தெரியாது....ஹிஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ்ஆமாம் நீங்கள் கவிதை எழுதிய நினைவு இப்போது வருகிறது...குளம்பி...ஐயோ சாரி உங்கள் சுட்டி இங்கு தராமல் விட்டுவிட்டேன்...அடுத்த பதிவுல் போட்டுட்டா போச்சு...நாங்கள் அதற்குப் பதில் கொடுத்த நினைவு...மீசை போல நுரை ஒட்டி...

      சகோ பரவால்ல இப்ப தெரிஞ்சுக்கிட்டீங்கல்ல அது போதும்பா...இனி இதைக் கேக்கும் போதெல்லாம் ஒரு கோப்பை காஃபி கையில் கரெக்டா...

      மிக்க நன்றி உமையாள்...

      நீக்கு
  3. காபி குடிக்கும் பழக்கம் எங்க வம்சத்தில இருந்த்தில்லை என்பதால்..காபியின் சுவை எனக்கு தெரியவில்லை..மன்னிக்கவும் வாக்கு 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதப் பிறவியும் வேண்டுவதேன் ?
      என்ற வினாவுக்கு
      உங்களால் விடை அளிக்க இயலாதே!!

      சு. தா.

      நீக்கு
    2. அப்படியா! வியப்பாக இருந்தாலும் நல்ல விஷயமே வலிப்போக்கன்...மிக்க நன்றி கருத்திற்கு...

      நீக்கு
  4. www.youtube.com/watch?v=oKhqaETQ7Icரசித்துக்குடி.
    ருசித்துக்குடி.
    சுவைத்துக்குடி.
    அது தஞ்சாவூர் டிகிரி காபி.

    இதோ ஒரு கிழம் காபி குடிப்பதைப் பாருங்கள்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தாத்தா ஹஹஹ் காபி குடிப்பதைப் பார்த்தேனே...வ்ருஷப் பிறப்பன்று மெதுவடை, பீட் ரூட் கத்தரிக்காய் ம்ம்ம்ம்ம்...நாக்கில் நீர் ஊறுகின்றது...

      பைரவி கேட்டுக் கொண்டே காஃபியா...சரி சரி நோட் பண்ணிக் கொண்டுவிட்டேன்....தாத்தா...காஃபிக்கு வருது பைரவி...சியர்ஸ் தாத்தா

      மிக்க நன்றி

      நீக்கு
    2. யம்மாடியோவ் காஃபிய இப்படிச் ருசிச்சு சாப்பிட்டு அதுவும் பரமானந்தம் ப்ரம்மானந்த்ம்னு யோக நிலைக்கே போய்டுவீங்க போல...காஃபிக்கு நல்ல விளம்பரம் இல்லையா தாத்தா...100 வயசு வாழலாம் ஆஹா அடுத்த விளம்பரம் ஹஹஹஹஹ்...ஆண்டவன் நிச்சயம் உங்களுக்கு அருள பிரார்த்திக்கின்றோம் தாத்தா..அதுவும் இப்படியே நீங்கள் இளமையாக இருக்க!!

      நீக்கு
  5. "அலவலாதி"?? புதிய வார்த்தை!

    காபி ராகத்தை ரசித்தேன். 'எங்களை' யும் இழுத்திருப்பதற்கு நன்றிகள்!

    இப்பல்லாம் காபி ஒரே மாதிரியான ருசியில் கிடைப்பதில்லை!

    சமீபத்தில் மதுரை சென்றபோது விசாலம் காபி சென்று காபி குடித்து மகிழ்ந்தேன். ஃபேஸ்புக்கிலும் ஷேர் செய்து குதூகலித்தேன்.

    தம வாக்கு, அப்புறம் ஸிஸ்டத்துக்கு வந்தபின்னர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அலவலாதி என்பது மலையாள வார்த்தை. தமிழ்ல பிச்சைக்காரன், பறக்காவட்டி மாதிரி அலையறா பாரு என்போம் இல்லையா அது போல...நாங்கள் பெரும்பாலும் மலையாளம்/தமிழலையாளம் தான் பேசுவோமா ...அதான்.....என் தோழிகள் எல்லோரும் தமிழ் பேசும் மலையாளிகள். ஒரு சிலருக்குத் தமிழே தெரியாது. என்னுடன் எம் ஏ பொருளாதாரம் பயின்றவர்கள். வீட்டில் மலையாளம்தான் பேசுவார்கள். நாகர்கோவிலில் வளர்ந்தாலும். நான் இரண்டும் கலந்த கலவை ஹிஹிஹி..அதாவது ரெண்டுமே உருப்படியாகத் தெரியாத...

      ரொம்ப நன்றி ஸ்ரீராம் காபி ராகத்தை ரசித்ததற்கு. அடுத்து வரும் ராகத்டின் தொடர்ச்சியையும் பாருங்கள்...என்னை வைத்து எப்படி எல்லாம் காமெடி பண்ணினார்கள் என்பது...

      நீக்கு
  6. ஆர்வம், ஆசை என்பதைச் சில பேர் 'ஆவலாதி' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அதுதான் அலவலாதியோ...

    சிஸ்டத்துக்கு வந்து தம வாக்குப் போட வரும்போது சும்மா இருக்க வேண்டாம் , ஒரு கமெண்ட்டும் போட்டுடலாமே என்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் ம்ம்ம் பாருங்க காபி ராக ஆலாபனை உங்களை ரெண்டு கமென்ட் போட வைச்சுருச்சு....அர்த்தம் கிட்டத்தட்ட என்று சொல்லலாம் ஆனால் இது அதற்கும் கீழே ஹிஹிஹி..மேலே பாருங்க...

      நீக்கு
  7. காப்பியை விட்டு 30 வருஷம் ஆச்சு. இருந்தாலும் காப்பியின் சுவையும், மணமும் நினைவுகளில் தங்கி விட்டது.
    பாடல் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி சகோ..நல்ல விஷயம்தான் சகோ...ஆனா எப்படி விட்டீங்க. சூப்பர்..

      நீக்கு
    2. மிக்க நன்றி கோமதி சகோ..நல்ல விஷயம்தான் சகோ...ஆனா எப்படி விட்டீங்க. சூப்பர்..

      நீக்கு
  8. காஃபி பற்றிய இந்தப்பதிவும் மேலேயுள்ள படமும் சூப்பர்.

    நானும் ஒரு காஃபி பிரியர் மட்டுமே. என் உடம்பில் இரத்தம் ஓடுகிறதா அல்லது இரத்தத்திற்கு பதில் காஃபி மட்டுமே ஓடுகிறதா என்றோர் சந்தேகமும் எனக்கு அடிக்கடி வருவது உண்டு.

    மாதாமாதம் BLOOD TEST செய்துகொள்ளும் போது, இரத்தம்தான் எனத் தெரிந்துகொள்ளும் போது, கொஞ்சம் ஆறுதலாக இருந்து வருகிறது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வைகோ சார். ஓ நீங்களும் காஃபி கட்சியா! சூப்பர். ஹஹஹ ப்ளட் டெஸ்ட்....சுவையான பின்னூட்டம் சார்.

      நீக்கு
  9. காஃபிக்கு இவ்வளவு விபரமா.... அதுவும் தொடரும்.... ம்ம்ம்ம்.... ஆனாலும் ரசித்தேன்

    காணொளி இரண்டாவது ரசித்தேன் நான் தினமும் கேட்கும் பாடல்களில் ஒன்று...
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி என்ன அப்புடிக் கேட்டுபுட்டீங்க. காஃபி சாப்பிட்டதில்லையோ ஜி?! ம்ம்..ஆமாம் அந்த ரெண்டாவது பாடல் அருமையா இருக்கும்...

      நீக்கு
  10. நான் தமிழகட்தில் இருக்கும் வரை டீக்குதான் அடிமை ஆனால் அமெரிக்கா வந்த பின் பொண்டாடிக்குதான் அடிமை அதனால் நான் குடிக்கும் டீயை விட்டுவிட்டு இப்போது காபிக்கு அடிமை ஆகிவிட்டேன். நானும் ரெளடிதான் ரெளடிதான் என்று சொல்லுவது போல நானும் சரக்கு அடிப்பவன் அடிபவன் என்று பல முறை சொன்னாலும் நான் உண்மையில் அடிக்ட் ஆகி இருப்பதது காபிக்கு மட்டும்தான் காலை ஆறு மணிக்கும் காபியோட ஆரம்பிக்கும் எனது நாள் இரவு 1 மணி அல்லது 2 மணிக்கு காபியோடதான் முடியும். நான் தண்ணிர் குடிப்பது என்பது மாத்திரைகள் சாப்பிடுவதற்கு மட்டும்தான், மீதி நேரமெல்லாம் காபி என்னோட உலா வரும். தமிழகத்திற்கு வரும் போது எனக்கு ஏற்படும் பிரச்சனை காபிதான் என் மாமனார் வீட்டை தவிர வேறு எங்கு போனாலும் அவர்கள் தரும் காபி அது ஹோட்டாலாக இருந்தாலும் அது நாக்கில் தடவி விடுவது போலத்தான் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றால் முதலிலேயே 2 கப் காபி எனக்கு மட்டும் ஆர்டர் செய்துவிடுவேன்...

    நான் குடிக்கும் ஒரு பெரிய கப் காபியில் 2 ஸ்பூன் அளவுதான் அதுவும்Fat Free மில்க் கலந்து இருக்க வேண்டும் பால் திக்காக இருந்தால் காபி எனக்கு பிடிக்காது. ஆமால் இதெல்லாம் எதுக்கு இவன் சொல்லுகிறான் என்று நீங்கள் நினைக்கலாம் . எல்லாம் காரணமாகத்தான் உங்கள் வீட்டிற்கு வந்தால் இப்படிதான் நீங்கள் எனக்கு காபி போட்டு தர வேண்டும் என்பதற்காகத்தான்......சரி காப்பி குடித்திட்டு வந்து நிறைய பேசலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் ஐயோ தமிழா எப்படி உங்களுக்கு எனது காஃபி ராகம் தொடரும் 2 வது தெரிந்தது...இல்ல அதுல இந்த பெக் சமாச்சாரம் எல்லாம் வருது ஹிஹிஹி அதான்...

      வாருங்கள் தமிழா எங்கள் வீட்டிற்கு அருமையான நீங்கள் சொல்லுவது போலான காஃபி கிடைக்கும்...போட்டுத் தருகின்றேன்...

      காஃபி குடிச்சுக்கிட்டுருக்கீங்களா...ஹஹ இங்கயும் தான் மகன் இப்போதான் வந்தான்..அவன் டீ நான் காஃபி...சியர்ஸ்!! தமிழா!! க்ளிங்க் சத்தம் கேட்டுச்சா...

      நீக்கு
    2. உங்க க்ளிங்க் சத்தம் இங்கே விழும் டாமால் டாமால் சத்தத்தில் கேட்காமலேயே போயிடுச்சு...

      நீக்கு
    3. அஹ்ஹாஹஹ் சரி சரி அங்க என்ன நடக்குதுனு தெரியுது...காலையிலேயேவா.....அப்படி என்ன சேட்டை பண்ணீங்க...

      நீக்கு
    4. காஃபி மட்டுமா தமிழா விருந்துச் சாப்பாடே போட்டுருவோம்ல....ஆனா ஃபேட் ஃப்ரீ, சுகர் ஃப்ரீ விருந்துதான் சொல்லிப்புட்டேன்..ஹிஹிஹீ...

      இந்த கமென்ட நேத்து போட முயற்சி செய்து ப்ளாகர் போடமாட்டேன் என இதோ இப்பதான் போடுது...

      நீக்கு
  11. கா ஃ பி எனக்கு சுத்தமாகப் பிடிக்காது ஆனால் உங்கள் பதிவு பிடித்தது.. என் அப்பா உங்களை மாதிரி .அப்பாவின் உடம்பில் கா ஃ பி தான் ஓடும் அப்படி எந்த நேரம் கா ஃ பி கொடுத்தாலும் சாப்பிடுவார்.உங்கள் பதிவைப் பார்த்த பின் என் அப்பாவுடன் relate பண்ணிக் கொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் உங்களுக்கு காஃபி பிடிககது என்று தெரியும் உங்கள் பதிவில் சொல்லியிருக்கீங்களே!! உங்கள் இரண்டாவது லைன் கருத்திற்கு எனது அடுத்த 2 வது ஆலாபனையில் வருது....நன்றி அபயா அருணா...

      நீக்கு
  12. வணக்கம்
    அண்ணா
    காஃபி பற்றியும் போட்டி பற்றியும் சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் அண்ணா.த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் தம்பி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  14. குடிக்கும் போது பாலாடையும் சேர்ந்து வரணும் ,அந்த காப்பிதான் எனக்கு பிடிக்கும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான்ஜி பாலாடையா??!!! ம்ம் விசுவிற்குக் கூட அப்படித்தான் பிடிக்கும் என்று எழுதியிருந்தார் பதிவில்....இரண்டுபேர் பாலாடையுடன் ஆன காஃபி கட்சி...எனக்கு நுரை மட்டுமே...மிக்க நன்றி பகவான் ஜி

      நீக்கு
  15. ஒரு காலத்தில் 5 கப் காபி குடிக்காத நாளே இல்லை ..கொளுத்தும் வெயிலிலும் குடிப்போம் கருப்பட்டி காப்பி ஸ்கூல் படிக்கும் நாளில் ...திருமணதுக்குபிறகு ஊரிலிருந்து பார்சலில் காபித்தூள் வரவழைச்சி குடிச்சி அடிக்ட் ஆனேன் ...அப்புறம் நானே குறைச்சிக்கிட்டேன் ..இப்போ ஒன்லி இரண்டு கோப்பை மட்டுமே அதுவும் திபெத் புல்லட் proof காப்பி :) .காபி ஆலாபனை அருமை !..பனை வெல்ல காப்பி நாகர்கோயில் ஸ்பெஷலாச்சே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல் உங்கள் முதல் கருத்திற்கு வருது அடுத்த பதிவில்...திபெத் புல்லட் ப்ரூஃப் காஃபி தெரியுமே டாக்சின் குறைவான அப்க்ரேடெட் காஃபி, புல் தின்னும் பசுக்களின் வெண்னை உப்பில்லாதது, ப்ரெயின் அக்டெவ் எண்ணை என்று கலந்து கட்டி வெயிட் குறைக்கும் காஃபி.. சரியா...

      ஆம் பனைவெல்லம்/கருப்பட்டி காஃபி ஃபேமஸ்...எங்கள் வீட்டிலும் உண்டு. வருகிறது அடுத்த பதிவில்...மிக்க நன்றி ஏஞ்சல்

      நீக்கு
    2. //வெயிட் குறைக்கும் காஃபி.. சரியா..// yesssss :) சில நேரம் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்ப்பேன் நான்

      நீக்கு
    3. தேங்காய் எண்ணெய்??!!!! ஓ புதிதாய் இருக்கே. நான் இந்தக் காஃபியைச் சுவைத்ததில்லை...இன்னும் நிறைய இருக்கு ஏஞ்சல் சுவைத்துப் பார்க்க...

      நீக்கு
  16. ஆஹா..! பேஷ் பேஷ் இத இதத்தான் எதிர்பார்த்தோம். காபியைப் பற்றி இத்தனை விவரங்களா அசந்துபோனோம். மிக்க நன்றி!
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் வாங்க காஃபி சாப்பிடலாம் செந்தில் சகோ...அடுத்த ஆலாபனையிலும் வரும் சில அனுபவங்கள்...மிக்க நன்றி சகோ

      நீக்கு
  17. என்றும் காப்பித்தான் என் தேர்வு இப்ப கொஞ்சம் காப்பியை குறைக்கச்சொல்லி ஆலோசனைகள் அதிகம் டென்ஷனுக்கு காரணியும் காப்பித்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம்..ம்ம்ம் வயசாயிடுச்சா உங்களுக்கு அப்ப...காஃபி டென்ஷனைக் குறைக்கும் என்று ஒரு கருத்தும் அதிகமானால் பித்தம் கூடும் ஆதலால் டென்ஷன் கூடும் என்ற கருத்தும் உண்டு. எதுவும் அளவுக்கு மிஞ்சினால் நல்லது இல்லைதானே இல்லையா...

      நீக்கு
  18. காஃபி பதிவு அருமை சகோ....
    அதென்ன அலவலாதி...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அஜய். அது சரி நீங்க நம்மூர் நாகர்கோவிலாச்சே! அலவலாதி தெரியலையா? ஆச்சரியம்! உங்கள் நண்பர்கள் மத்தியில் கூட இந்த வார்த்தை இல்லையா...ஒரு கேரளத்தவர் கூட இல்லையா உங்கள் கல்லூரியில்? ஆச்சரியம்! நாகர்கோவில் தமிழே மலையாளம் வாசம் வீசும் தமிழாச்சே!! மேலே ஸ்ரீராமுக்குக் கொடுத்த பதிலில் இருக்கிறது பாருங்கள்..

      நீக்கு
  19. அதானே பார்த்தேன் கீதாவின் பதிவு!. பொதுவாக மலையாளிகள் காஃபியை விட சாயையே விரும்புகிறார்கள் காஃபியைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம் நானும் ஒரு காஃபிப்பிரியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் மிக்க நன்றி சார்...ஆமாம் ஆனால் துளசி எங்கள் வீட்டிற்கு வந்தால் காப்பி குடிப்பார். குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு வந்தால். அவர் மனைவி, குழந்தைகளும் கூட விரும்பிக் குடிப்பார்கள். இங்கு வந்தால்...

      அட நீங்களும் என் கட்சியா...சியர்ஸ் சார்!!! மிக்க நன்றி சார்...

      நீக்கு
  20. உங்களது காபி புராணம் மன்னிக்கவும் காப்(ஃபி)பி ஆலாபனை எனது நாசியைத் தொட்டு விட்டது. நானும் ஒரு காபி பிரியன்தான். என்னைப் போல் நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள். இந்த பதிவை தொடர் பதிவாக்கி வலையுலக பதிவர்களை ஒரு ரவுண்டு வரச் செய்து இருக்கலாம். திரிசமன் சமாச்சாரம் பழைய பத்திரிகைகளில் படித்தது. அஃகேனத்திற்கு உதாரணம் சொல்ல இப்போது காஃபி வந்து விட்டது போலிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ்ஹஹ தெரியும் ஐயா நீங்களும் காஃபி பிரியர் என்று. உங்கள் பதிவொன்றில் குறிப்பிட்டிருந்த நினைவு. ஆமாம், ஐயா இன்னும் ஒரு பகுதி இருக்கிறதே அது இன்று வெளியாகும். யார் வேண்டுமானாலும் தொடரலாம்...ஏன் நீங்களே கூட தொடரலாம் ஐயா...

      அந்தத் திரிசமன் சமாச்சாரம் எங்கள் வீட்டில் அடிக்கடி நடக்கும் ஒன்று ஐயா. மற்றபடி பத்திரிகையில் வந்தது பற்றித் தெரியவில்லை..

      மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  21. ஆஹா...காபி பற்றி எழுதி அசத்தியுள்ளிர்கள்...எனக்கும் அப்படி எழுத இல்லையம்மா...100 மில்லி பாலில் போட்ட காபி பற்றி எழுத என்ன இருக்கு....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செல்வா....தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...சுவை என்பது அவரவர் வட்டம் இல்லையா...

      நீக்கு
  22. சுவையான காஃபி பதிவு. வீட்டில் மற்றவர்களுக்கு இன்ஸ்டன்ட் காஃபி. ஆனால் நான் மட்டும் எப்போதுமே டிகாக்‌ஷன் கட்சி.. ஃபில்டரை இதற்கென்றே இங்கு எடுத்துவந்திருக்கிறேன். சில வருடங்களாக சர்க்கரை இல்லாமல் குடித்துப்பழகி சர்க்கரையோடு குடிக்க நேரிட்டால் குமட்டுகிறது. காஃபியின் உண்மையான ருசியே சர்க்கரை இல்லாமல் அதன் கசப்பை ருசிப்பதுதான் என்று எங்கோ எதிலோ படித்த நினைவு. இப்போது இந்தப் பதிவை வாசித்தவுடன் காஃபி குடிக்கவேண்டும்போல் உள்ளது. இதோ போகிறேன் குடிக்க... :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழி கீதா மதி மிக்க நன்றி....நானும் டிக்காக்ஷன் கட்சியாகத்தான் இருந்தேன்...இப்போது எல்லாமும் பழகிவிட்டது! அதுவும் நீங்கள் சொல்லியிருப்பது போல் சர்க்கரை சேர்க்காமல்...உண்மைதான் அது இன்னும் மணம் கூடுதலாகவே இருக்கும்...அடுத்த பகுதியில் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன் சிறிதாய்...

      வாங்க காஃபி அருந்த! சியர்ஸ்!!

      நீக்கு
  23. காஃபிக்காக ஒரு கச்சேரியே செய்ய தயார். என் அம்மாவழிப்பாட்டி அறிமுகம் செய்த காப்பிக்கொட்டை வறுத்து அரைத்த காஃபியே தனி. ஒரு டம்ப்ளரில் கால் பாகம் ஒண்ணாம் டிகாக்ஷன்,. அதன் மேல் யனுரைக்கும் அப்போ கலந்த பால். எனக்கு காலை நான் கு மணிக்குக் கொடுக்கும் மகராசி. இப்போதும் அவளை நினைத்தே காஃபி குடிக்கிறேன். அருமையான பதிவு. கீதா மேம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா மிக்க நன்றி! ஆஹா நான் ஆலாபனை என்றால் நீங்கள் கச்சேரியேவா...அருமை...சுவாரஸ்யமான பின்னூட்டம்....அப்புறம் கீதா மேம் வேண்டாமே...நான் உங்களை விட மிகச்(!!!?) சிறியவள்...

      நீக்கு
  24. காப்பி ஆலாபனை மணக்க மணக்க அருமை!
    இரண்டாவது பாட்டு மனதை நிறைத்தது. நான் எப்போதுமே மோகன்லால் விசிறி. அவரும் நெடுமுடி வேணுவும் நல்ல ஜோடி!

    நான் சொல்ல நினைத்ததை ஏஞ்சலின் சொல்லிவிட்டார். நானும் இப்போதெல்லாம் பட்டர் காபி தான் குடிக்கிறேன் - சர்க்கரை இல்லாமல். அடுத்த பகுதியில் நீங்கள் எழுதப் போவதைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
    எங்கள் வீட்டில் நானும் ரங்கஸ் -ம் காபி. என் மகள், மகன் இருவரும் டீ. அதனால் இரண்டும் செய்யவேண்டும் காலையில்!

    நான்கூட ஸ்ரீரங்கம் பதிவில் என் பாட்டி போடும் காப்பி பற்றி எழுதியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ரஞ்சனி அக்கா எனக்கும் கூட லாலேட்டனின் நடிப்பு பிடிக்கும். அடுத்த பகுதி வந்துவிட்டது அக்கா.

      எங்கள் வீட்டிலும் நான் தான் காஃபி. மற்றவர்கள் எல்லோரும் சாயா கட்சி. எனவே இரண்டுமெ எங்கள் வீட்டிலும்...

      ரங்க்ஸ்?!!! ரங்க்ஸ் என்றவுடன் கீதா சாம்பசிவம் அக்காவோ என்று சந்தேகம் வந்துவிட்டது. மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டேன்.

      மிக்க நன்றி ரஞ்சனி அக்கா தங்களின் கருத்திற்கு.

      நீக்கு