புதன், 13 ஜனவரி, 2016

மத்தியப்பிரதேசம் அழைக்கின்றது - வெங்கட்நாகராஜ்-மின் நூல் கருத்துரை


இலக்கியங்கள் இனிதாவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று, கவிதை, கதை, கட்டுரை போன்ற இலக்கியப் படைப்புகளிலுள்ள, அதைப் படைத்தவரின் முத்தான வார்த்தைகளைத் தாங்கிய வரிகள், அதை வாசிப்பவரைத் தம் சிறகிலேற்றி, அப்படைப்பாளி கண்ட காட்சிகளைக் காண்பித்து, கொண்ட மகிழ்வினைக் கொள்ளச் செய்து, அவர் மூழ்கிய இன்ப வெள்ளத்தில் வாசிப்பவரையும் மூழ்க வைக்கும் என்பதுதான் உண்மை. அப்படியிருக்கையில், இலக்கியப்படைப்பே ஒரு பயணக் கட்டுரையானால் எப்படி இருக்கும்?!

கண்ணுக்கு விருந்தாகும் காட்சிகள் ஒவ்வொன்றையும் கண்ணால் காணாமலேயே மனக்கண்ணில் காணக்கூடிய வாய்ப்பை அல்லவா நாம் கிடைக்கப் பெறுவோம்!  அத்தகைய பயணங்களை மேற்கொள்பவரும், அதை எழுதுபவரும் நம் வெங்கட்ஜியானால், வாசிப்பவர்கள் எல்லாவிதத்திலும் கொடுத்து வைத்தவர்கள் என்றுதானே சொல்லவேண்டும்! எனவே, இதை வாசிக்கத் தீர்மானித்த நீங்கள் கொடுத்து வைத்தவரே.

     தான் கண்ட காட்சிகளைக் கச்சிதமாக விவரிக்கும் திறனும், காதில் கேட்பவைகளில் எல்லோரும் அறிய வேண்டியதை மட்டும் அளவாக, அழகாகச் சொல்லும் திறனும், இடையிடையே தேவையான இடத்தில், தேவையான அளவில் தன் கருத்துகளையும், எண்ணங்களையும், தன்னகத்தே மலரும் நினைவுகளையும் சேர்த்துத் தன் படைப்புகளை அழகுபடுத்தும் திறனும் வாய்ந்தவர் நம் வெங்கட்ஜி. இயற்கையைப் பூசிக்கும் பூசாரி ஆகிய ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.  “The spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion Recollected in Tranquility”.   “Nature teaches everything to us.  Nature watches us every time”. இயற்கை நமக்கு எல்லாமே கற்றுத் தருகிறது”.

     வெங்கட்ஜி அவர்களின் எழுத்துகள் வசீகரமானவை. மிக எளிதான நடையில் சொல்லிச் செல்வது மிக மிகச் சிறப்பான ஒன்று. பயணக் கட்டுரைகளின் இடையே சிறிது நகைச்சுவையும் விரவி வருவது மேலும் சுவையூட்டுவதாகவே இருக்கின்றது. “ஜன்னல் வழியே கிருஷ்ணர் தெரிகிறாரா என்று பார்த்தேன். அவரைக் காணவில்லை. கோபியர்களுடன் மார்னிங் வாக்சென்று விட்டார் போல.” “ஆக்ரா என்றால் கொஞ்சம் உதறல்.  பல முறை தாஜ்மஹால் சென்றதுண்டு. ஷாஜஹான் கூட இத்தனை முறை பார்க்க வந்ததில்லை என்று சொல்லிக் கொண்டு மும்தாஜ் கூடவே வந்து விட்டால்?!!” என்பன சில உதாரணங்களே.

அவர் சில வருடங்களுக்கு முன், அலுவலகத்தில் இரண்டு மாத பயிற்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, பயிற்சியின் ஒரு பகுதியாகத் தன் அலுவலக நண்பர்களுடன் மத்திய பிரதேச மாநிலத்தில் மேற்கொண்ட 4 நாள் பயணத்தில் கண்ட காட்சிகளைத் தன் வலைத்தளத்தில் 27 இடுகைகளாக வெளியிட்டிருந்தார். இதோ இப்போது அவற்றைத் தொகுத்து ஒரு மின் புத்தகமாக வெளியிட்டும்விட்டார். நேரத்தை வீணாக்காமல், பயணத்தின் அடுத்த பகுதியை வாசிக்க, அடுத்த இடுகை வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே ஒரே மூச்சாக அவரது நான்கு நாள் பயணத்தை நாமும் பயணித்து முடித்து, நம் மனதில் சேமித்து வைக்கக் கிடைத்த அரிய வாய்ப்பிது.

     இப்பயணக் கட்டுரை வாசிக்கையில், “சில சமயங்களில் பயணம் ஆழமான அன்பையும், நேசத்தையும் கூட புரிய வைக்கிறது.  பல புதிய நட்புகளை உருவாக்குகிறது. புதிய மனிதர்களை நேசிக்க வைக்கிறது.  இந்த உலகம் மிகவும் பரந்தது, அதில் எண்ணற்ற ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன” என்பதை உணர வைக்கிறது. அதற்குச் சிறந்த உதாரணமாக, “ரோஷ்ணி”யில் -“REHABILITATION OPPORTUNITIES SERVICE & HEALTH FOR THE NEUROLOGICAL IMPAIRED”- நாமும் வெங்கட்ஜி சந்தித்த அதுலையும், சேதனையும் காண்கிறோம்.

     இந்தக் கட்டுரையில் பல இடங்களைப் பற்றிய குறிப்புகளை மிக அருமையாகச் சொல்லிச் செல்கின்றார். இடங்களின் வரலாறுகளைக் கூட நினைவில் வைத்துக் கொண்டு அவர் அனாயாசமாகச் சொல்லுவது மிக மிக வியப்பாக இருக்கின்றது. நுணுக்கமான தகவல்களைத் தருவதில் வல்லவராகவும் இருக்கின்றார்.

தான்சேனின் சமாதிக்கருகே பூத்துக் குலுங்கும் ரோஜாக்களையும் காண்கிறோம். இலைகள் தினம் தினம் பறி போய்கொண்டிருக்கும் புளியஞ்செடியைக் கண்டு வருந்துகிறோம். ஜெயவிலாஸ் அரண்மனை சாப்பாட்டு மேசையில் இயங்கும் வெள்ளி ரயிலைக் கண்டு நாமும் வியக்கிறோம். 7 டன் எடையுள்ள 248 மெழுகுவர்த்திகளை ஏற்ற முடிகின்ற அலங்கார விளக்கைக் கண்டு அதிசயிக்கிறோம்.

அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும், வேட்டையாடப்பட்டுப் பதப்படுத்திய புலிகளைக் கண்டவர், புலிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது எனப் புலம்பி என்ன பயன்அந்தக் காலத்திலேயே இது போன்ற ராஜாக்களும், வெள்ளைக் காரர்களும் நமது நாட்டின் சொத்தை மட்டும் அடித்துக் கொள்ளவில்லை.  நமது வனங்களின் செல்வத்தினையும் அல்லவா அடித்துக் கொன்றிருக்கிறார்கள். என்று பதிந்த அவரது ஆதங்கம் நம்மையும் தொற்றிக் கொள்கின்றது.
 
குவாலியர் சிறைக் கைதிகள் நெய்த, தர்பார் ஹாலில் விரிக்கப்பட்டிருக்கும், ஆசியக்கண்டத்திலேயே மிகப் பெரிய கம்பளத்தைக் கண்டு வியக்கிறோம். குவாலியர் கோட்டையில் காணும் கல்லாலான திரைச் சீலையைக் கண்டு அதிசயக்கிறோம். குவாலியர் கோட்டையில் காண்பிக்கப்படும் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியைக் கேட்பதோடு மட்டுமல்ல, குவாலியரின் பெயருக்குக் காரணமான குவாலிபா முனிவரின் குரலையும் கேட்கிறோம்.  மாமியார் மருமகள் கோயில் என்பதை வாசித்ததும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.  அதை நீங்களும் வாசித்து வியப்பீர்கள்.

தாஜ்மகால் போல் அங்குள்ள குஜ்ரி மகால் எழுப்பப்படக் காரணமான அந்த மான்விழியாளை நாமும் நம் மனக்கண்ணில் காண்கிறோம். “டிக்ரா” அணையில் படகு சவாரி செய்கிறோம்.  மாதவ் தேசிய பூங்காவில் திறந்த ஜீப்பில் பயணித்து மான் கூட்டங்களையும், மயில்களையும் காண்கிறோம். “பதையா குண்ட்” சிவலிங்க தரிசனம் செய்கிறோம்.

இந்திய அரசாங்கத்தால் மஹாவிருக்ஷ் புரஸ்கார் பெற்ற, “கதம்” மரத்தைப் பார்க்கிறோம். மூலிகைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் குவித்து இடப்பட்டிருக்கும் அஸ்வகந்தா, இஞ்சி, சீயக்காய், மேத்தி போன்றவற்றைக் கண்டு வியக்கிறோம். ஓர்ச்சாவிலுள்ள ராமராஜா மந்திரைத் தரிசிக்கிறோம்.  ஜான்சியில் பெல் யூனிட்டில் தயாரிக்கப்படும் ரயில் இஞ்சின்கள் மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மர்களையும் கண்டபின்  வெங்கட்ஜியுடன் ரயிலேறி அவர் புதுதில்லிக்கும், நாம் நம் வீட்டிற்கும் பயணிக்கிறோம்.

வெங்கட்ஜியின் செலவில் நான்கு நாள் இலவசமாக மத்தியப்பிரதேசத்தில் பயணித்ததற்குக் கண்டிப்பாக திருமிகு வெங்கட்நாகராஜ் (வெங்கட்ஜி) அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தை, இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் நினைப்பார்கள் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

மற்றவர்கள் பார்க்காத பார்வையில் பார்த்து எழுதுவது இவரது தனிச் சிறப்பு. ஒருவேளை அவருக்குப் புகைப்படக் கலையில் ஆர்வம் இருப்பதால் காமெரா கண்கள் வழி பார்ப்பது போல் பார்ப்பதாலும் இருக்கலாம். அதனால்தானோ என்னவோ இவர் தரும் குறிப்புகள் மட்டுமின்றி, பயணம் செய்யும் போது எடுக்கும் புகைப்படங்களும் பல வித்தியாசமாக, மிக மிக அருமையாகக் கண்ணிற்கு விருந்தளிப்பவையாக இருக்கின்றன. இவரது பயணக்குறிப்புகள் நாம் பயணம் மேற்கொள்ள உதவியாகவும் இருக்கின்றன என்பதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

ஒரு நல்ல யாத்ரீகன் தனது பயணத்தைக் குறித்துப் பல அனுபவப் பாடங்களையும், தனது பார்வையையும், கருத்துக்களையும் பயணக் கட்டுரைகளாகப் பதிவு செய்வதில் தவறுவதில்லை என்பதை திருமிகு வெங்கட்நாகராஜ் நிரூபித்துள்ளார். நிரூபித்தும் வருகின்றார் தனது வலைத்தளத்தில். 
http://venkatnagaraj.blogspot.com/2016/01/blog-ost_10.html வாசித்துப் பாருங்கள்.  நீங்களும் எங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வீர்கள்! வெங்கட்ஜியுடன் அவரது கட்டுரை வழி பயணம் செய்யப்போகும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.

வெங்கட்ஜியின் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டிகள் இதோ.

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள்புது நூக் கருவிகளில் படிக்க/பதிவிறக்க:

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது epub

புது கிண்டில் கருவிகளில் படிக்க:


குனூ/லினக்ஸ்விண்டோஸ் கணிணிகளில் படிக்க:


பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க:


இணையத்தில் படிக்க:


இங்கு சுட்டி சொடுக்க முடியவில்லை என்றால் அவரது தளத்தின் சுட்டி மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு சென்றால் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.  மீண்டும் அவரது தளத்தின் சுட்டி இதோ http://venkatnagaraj.blogspot.com/2016/01/blog-ost_10.html 


(பின் குறிப்பு: எனது வட்லமுடி பயணக் கட்டுரை அடுத்த பதிவு நான் கண்டு மகிழ்ந்த அமராவதி தலைநகர் என்ற பெயரில் எப்படி அழிய இருக்கின்றது, அழிந்து வருகின்றது, குறிப்பாக விளை நிலங்கள் பற்றியும் வரும். - கீதா.
 அதற்கு முன் ரிலே தொடர் பயணங்கள் முடிவதில்லை. ரிலேயில் பங்கு பெறுபவர்கள் சிலர் பதிவுகள் எழுதியுள்ளனர்.  அதற்கு நாங்கள் பின்னர் வருகின்றோம் ரிலேயில் இருப்பதால்!!! அதுவரை மத்தியப் பிரதேசத்தை வெங்கட்ஜியுடன் சுற்றிவிட்டு வாருங்கள்.)







    



32 கருத்துகள்:

  1. மின்னூல் பற்றிய தங்களின் கருத்துரை மிகவும் அருமை. தங்களுக்கும் அவருக்கும் என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வைகோ சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும்!!!

      நீக்கு
  2. வாசிக்கத் தூண்டும் நூல் விமர்சனம்.
    மத்தியப்பிரதேசத்தில் தலை நகர் போபாலைத் தவிர்த்து எதுவும் தெரியாது.
    கட்டாயம் வாசிக்கவேண்டும்.

    வட்லமுடி பயண கட்டுரைக்காக வெயிட்டிங் மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேஷ் கருத்திற்கும் வருகைக்கும். வாசித்துப் பாருங்கள் அருமையாக இருக்கும்.

      கீதா: வரும் நிச்சயமாக இன்னும் ஒரு பதிவிற்குப் பிறகு

      நீக்கு
  3. தமிழ் மணம் 2 பிறகு வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க எப்ப வேணா வாங்க! எங்கள் அகம் திறந்தே இருக்கும்!!!

      நீக்கு
  4. அன்றே பதிவிறக்கம் செய்து விட்டேன்... இனிமேல் தான் வாசித்து வேண்டும்... இந்தப் பதிவு விரைந்து ரசிக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது...

    பதிலளிநீக்கு
  5. நல்ல விளக்கமான பதிவு வெங்கட் ஜி அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் இணைப்புகளுக்கு செல்கிறேன் நன்றி
    பொங்கல் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திறகும் வருகைக்கும்

      நீக்கு
  6. எனது இரண்டாவது மின்னூல் பற்றி மிகச் சிறப்பாக புத்தகத்தில் எழுதியது மட்டுமல்லாது உங்கள் தளத்திலும் வெளியிட்டு என்னைச் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்ஜி எங்களுக்குத்தான் சிறப்பு. மிக அழகாக பயணக்கட்டுரைகள் எழுதுவது என்பது மிகவும் கடினமான ஒன்று தாங்கள் அதை மிகவும் வெற்றிகரமாக ரசிக்கும்படியாக எழுதிவருவதால் தங்களைச் சிறப்பிப்பதில் எங்களுக்கு மிகவும் பெருமை, மகிழ்வு வெங்கட்ஜி! நாங்கள் உங்கள் ரசிகர்கள்!

      நீக்கு
  7. அடேடே.... ஒரு மின் நூலுக்கு முதல் முறையாக விமர்சனம் எழுதப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன். நானும் தரவிறக்கி விட்டேன். இனிதான் படிக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அப்படியா? ஆனால் இதுதான் நாங்கள் வெங்கட்ஜியின் புத்தகத்திற்கு எழுதிய கருத்துரை அதையே இங்கு தந்திருக்கின்றோம் இந்த தளத்திற்கு வருபவர்கள் அப்புத்தகத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாமே என்று...நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  8. வணக்கம்
    அண்ணா

    மின்நூல் பற்றி அற்புதமாக விமர்சனம் செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.j.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

      நீக்கு
  9. அருமையான விமர்சனம். வழக்கம்போல் பிரமாதம். நண்பர் வெங்கட்ஜியின் இந்த தொடரை நாங்கள் எங்களது பத்திரிகையின் கடைசி பக்கத்தில் சுற்றுலா.காம் என்ற பகுதியில் வெளியிட்டு வருகிறோம். அதற்கு அனுமதியளித்த வெங்கட்ஜிக்கு நன்றி. நூலினை பற்றி விரிவாக விமர்சித்த தங்களுக்கும் நன்றி நண்பர்களே!
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...ஓ வெங்கஜிக்கு மேலும் சிறப்பு! மிக்க நன்றி

      நீக்கு
  10. பயணம் போகின்றவர்களுக்கு நல்ல வழித்துணை ,வெங்கட் ஜியின் மின்னூல் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் பகவான் ஜி! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  11. ஆஹா! have the cake and eat it too.. என்பது போல் இருக்கிறதே..தரவிறக்கம் செய்யப்போகிறேன். உங்கள் விமர்சனம் அவ்வளவு அருமை! பாதியில் விட்டுவிட்டுச் சென்று நூலைப் படிக்கலாமா என்று! நன்றி கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி க்ரெஸ் சகோ தங்களின் க்ருத்திற்கும் வருகைக்க்ம்

      நீக்கு
  12. பதில்கள்
    1. பொங்கல் வாழ்த்துகள் செல்வா வாழ்த்துகளுக்கு நன்றியும்.

      நீக்கு
  13. அருமையான பயணக்கட்டுரைகள் எழுதும் வெங்கட் அவர்களுக்கு நான் ரசிகன்! பகிர்வுக்கு நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் க்ருத்திற்கும் வருகைக்கும். ஆம் வெங்கட்ஜி அவர்களின் கட்டுரைகளுக்கு நாங்களும் ரசிகர்களே..

      நீக்கு
  14. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் பொங்கல் வாழ்த்திற்கு

      நீக்கு
  15. சுற்றுவதற்கு உடல்நிலை ஒத்துழைக்க மறுப்பதால் நேரம் கிடைக்கும்போது அவருடன் சுற்றுகிறேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக வலிப்போக்கன். எப்போது முடிகின்றதோ அப்போது தங்கள் உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளவும். மிக்க நன்றி சகோ..தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  16. அருமையான விமரிசனம். வெங்கட் மேலும் பல மின்னூல்கள் வெளியிடவும், நீங்கள் அதற்கு விமரிசனம் செய்யவும் மனமார்ந்த வாழ்த்துகள். வெங்கட்டின் வலைத்தளத்தில் வரும்போதே அநேகமாய் எல்லாமும் படித்திருக்கிறேன். மொத்தமாய்ப் படிப்பதும் ஒரு சுவை தான். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதா சகோ..கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு