திங்கள், 21 டிசம்பர், 2015

வாழ நினைத்தால் வாழலாம்.... வழியா இல்லை ஊரினில் – 2


பொதுவாக எல்லா விபத்துக்கும் காரணமாவது கவனக் குறைவு, அலட்சியம், தேவையில்லாத, தேவைக்கு அதிகமான தைரியம் காட்டும் மனப்பான்மை இப்படி ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். அப்படி ஒரு சிறிய கவனக் குறைவு எர்ணாகுளம் சர்ப்பக்காவைச் சேர்ந்த 25 வயதான விஜயகுமாரது வாழ்வில் ஏற்படுத்தியதோ பேரிழப்பு! ஒரு மருந்துக் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றிய அவர் எப்போதும் ரயிலில் பயணிப்பவர்.

கடந்த வருடம் ஒரு நாள் இரவு ரயில் பயணத்தின் போது கழிவறைக்குச் சென்ற அவர் இரண்டு கழிவறைகளிலும் ஆட்கள் இருந்ததால் படிக்கட்டின் கதவருகே நின்றிருக்கிறார். வண்டி கோழிக்கோடு ஃபரூக்கைத் தாண்டித் தெற்கே போய்க்கொண்டிருந்தது. பெரிய பெட்டி மற்றும் பைகளுடன் அவர்களது படுக்கும் இடத்தைத் தேடிப்போகும் ஒரு குடும்பத்திற்கு வழி கொடுக்க கொஞ்சம் பின்னால் தள்ளி நின்ற அவர், எப்படியோ ஒரு கை தன் பிடியை விட ரயிலில் இருந்து வெளியே விழுந்துவிட்டார்! 

இருப்பினும் ஒரு கை தன் பிடியை விடவில்லை.  மறு கையையும் சேர்த்து அக்கம்பியைப் பிடித்துத் தொங்கத் தொடங்கியிருக்கிறார்.  உதவிக்காகக் கத்தியும், கதறியும் எவரும் கேட்க வில்லை ரயிலின் சத்தத்தில்.  கடந்து சென்ற குடும்பமும் அவர் விழுந்ததைக் கவனிக்கவே இல்லை.  இடையே அவரது கால்கள் தட்டியும், மோதியும், உராய்ந்தும் அவருக்குத் தாங்கமுடியாத வலியும், மயக்கமும் வந்த போதும், தன் பெற்றோரையும், மனைவி மற்றும் குழந்தையையும் நினைத்து பிடித்த பிடியை விடவே இல்லை.

அப்படி ஒரு மணி நேரம் தொங்கிக் கொண்டுப் பயணித்திருக்கிறார். அதன் பின் முடியாமல் பிடி தளர ஓரிடத்தில் விழுந்தே விட்டார்.  சிறிது நேரத்திற்குப் பிறகு கைககளை ஊன்றி எழ முயன்றிருக்கிறார். ஒரு காலின் முழங்காலுக்குக் கீழ் ஒரு காலைக் காணவில்லை. மறுகாலில் எலும்புகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்திருக்கின்றன. உதவிக்காக அலறியிருக்கிறார்! பலனில்லை.  அவரை எதிர்ப்பார்த்து வீட்டில் காத்திருக்கும் நான்கு உயிர்களைப் பற்றி எண்ணிய போது அவருக்கு எங்கிருந்துத் தைரியமும், தெம்பும், சக்தியும் வந்தது என்று தெரியவில்லை.  கைகளை ஊன்றி, தரையில் தவழ்ந்தும், ஊர்ந்தும் தண்டவாளத்தின் இடது புறம் செல்லத் தொடங்கியிருக்கிறார். 

சிறிது தூரம் சென்றதும், தூரத்தில் ஒரு ஆட்டோ நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டார்.  அங்குவரைத் தவழ்ந்துச் செல்லும் முன் அந்த ஆட்டோ அங்கிருந்து போய்விட்டால்.....கையில் கிடைத்த ஒரு கல்லை எடுத்து எறிந்தார்.  அடுத்த கல்லை எறியும் முன் யாரோ ஒருவர் தன் அருகே வருவதைக் கண்டார்.....அப்படி அவரது மன உறுதி, அவரை இறுதியில் காக்கும் கரங்களில் ஒப்படைத்திருக்கிறது.  ஏறக்குறைய 5 லட்சம் ரூபாய் செலவானாலும், அவரது இரு கால்களையும் முழங்காலுக்குக் கீழே இழக்க நேர்ந்தாலும், உயிர் பிழைத்துவிட்டார் விஜய குமார். 

பல நல்ல இதயம் படைத்தவர்கள் அவருக்கு உதவுகிறார்கள். விபத்திலிருந்து அவரைக் காப்பாற்றிய அவரது மன உறுதி அவருக்கு இனியும் துணை நின்று அவரது உடல் ஊனத்தையும் மறந்து அவரை வாழ வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. வாழ நினைத்த அவர் வாழ்கிறார் இப்போதும்.  அவருக்கு ஆதரவாக அவரதுக் குடும்பமும் , குடும்பத்திற்கு ஆதரவாக அவரும் நலமாய் வாழ இறைவன் அருளட்டும்.

விஜயகுமார் உயிர் தப்ப ஆட்டோவில் கல்லெறிந்தது போல், ஒரு 34 வயது பெண் கோழிக்கோடு இறஞ்சிப்பாலத்திலுள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பிலிருந்த காமவெறியர்களிடமிருந்து உயிர் தப்பி, அருகிலிருந்தக் காவல்நிலையத்திற்கு ஓடி அடைக்கலம் புகுந்தார் சில மாதங்களுக்கு முன். பங்களாதேஷிலுள்ள ஜோஷ்வார் மாவட்டம் ஹானக்கோட்வாலி கிராமத்தைச் சேர்ந்த அவர் தனது 12 வது வயதில் ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு மனைவியாகி 14 ஆம் வயதில் தாயாகி அடுத்தடுத்து 3 குழந்தைகளைப் பெற்றவர்.

7 ஆம் தரம் வரைப் படித்த அவர் இதனிடையே, தனியார் வழி 10 ஆம் தரம் தேர்வெழுதித் தேர்ச்சியும் பெற்றவர்.  கணவனால் கைவிடப்பட்ட அவர், குழந்தைகளைக் காப்பாற்றத் தையல் தொழில் செய்தும், பொம்மைகள் செய்து விற்றும் தன் மூன்றுக் குழந்தைகளையும் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தவர்.  இதனிடையே பங்களாதேஷிலிருந்து வேலை தேடி இங்கு வந்த அவர், செய்த சிறிய தவறு அவரைக் கடலலை இழுத்துச் செல்வது போல் இழுத்துச் சென்று இறுதியில் கோழிக்கோடு கொண்டு வந்து சிலக் காமவெறியர்களுக்கு முன் தள்ளியிருக்கிறது.
Image result for SAYA, ARM OF JOY
Punarjani and Arm of Joy, a voluntary organisation, have sought to tell the world that Saya is not merely another sex racket victim. These organisations showcased her talent in writing poems and in painting. - Thanks to The Hindu for this information

ஆனால், அவரது 3 குழந்தைகளின் முகம் அவரை அங்கிருந்துத் தப்பித் தன் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தந்த தைரியத்தால் காவல்துறையினரை அணுகச் செய்தது. புனர்ஜனி பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கம் அவருக்கு ஆதரவாகவும் செயல்பட, அப்படிக் காவல் துறையினரால் அரசின் பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாகச் சேர்க்கப்பட்டார்.  அங்கு, அவர் தன் தலைவிதியை நினைத்துக் கண்ணீர் சிந்தாமல், கையில் கிடைத்த டைரியில் கவிதைகளும், கதைகளும் எழுதினார். எழுத முடியாதவைகளைச் சித்திரமாக வரையவும் செய்தார். 
copies of the collection of poems (Njan Enna Murivu), translated from Bangla to Malayalam, and the paintings raked in more than Rs.80,000. will be handed over to her, after going through the formalities required for funds transfer to a foreign national. Thanks  to The Hindu - News Paper for the information

காப்பகத்திற்கு உதவி புரியும் “ஆர்ம் ஆஃப் ஜாய்” (ARM OF JOY) எனும் இயக்கத்தின் மேனேஜிங்க் டரஸ்டியான அனூப் அதைக் காண நேர்ந்தது. பங்களாதேஷிலுள்ள அவரது நண்பரது உதவியால், பங்க்ளா மொழியில் இருந்த அவரது எழுத்துகளை எல்லாம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, அதன் பின் அதை மலையாளத்திலும் மொழியாக்கம் செய்து, கடந்த மாதம் ஸாயா எனும் புனைபெயர் சூடிய அப்பெண்ணின் “ஞான் எந்ந முறிவு” (நான் எனும் புண்) புத்தகத்தை அனூப் வெளியிட்டேவிட்டார்.

சில நாட்களுக்கு முன் 18 வயதுள்ள மூத்த மகளான ஹீராவுடன் ஸாயா பேசிய போது, தன் தாயின் அன்பையும், திறமையையும், தைரியத்தையும் அறிந்த அவள் “அம்மா முதலில் எனக்கு உங்க ஆட்டோகிராஃப் வேணும்” என்றதும், அத்தாயின் மனம் பூரித்துப் போய் ஆனந்தக் கண்ணீர் வடித்து, தன்னைத் தானாக்கிய நல்ல உள்ளம் படைத்த அனூப் போன்றவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் தத்தளித்தது.  வேதனை மிகுந்த நாட்களைத் தந்த அதே நாட்டில், உயர்ந்து வந்த உதவிக்கரங்களின் உதவியால் விரைவில் தன் நாடு சென்று தன் குழந்தைகளுடன், நடந்தது எல்லாம் ஒரு பேய் கனவாக நினைத்து வாழத் தயாராகிக் கொண்டிருக்கின்றார், ஸாயா எனும் புனைபெயர் கொண்ட அப்பெண்.  பங்களாதேஷ் தேசீய பெண்கள் வழக்குரைஞர்கள் சங்கம் அவரை வரவேற்று, பாதுகாப்பாக அவருக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கத் தயாராக உள்ளது என்பதைக் கேட்கவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஸாயாவுக்கும் அவரது குழந்தைகளுக்கும் நன்மை பயக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக.  இப்படி வாழ நினைப்பவர்கள் வாழத் தேவையான வழிகள், அவர்கள் முயன்றால் அவர்களுக்குக் கண்டிப்பா வழிகாட்டும். ஒவ்வொருவரும் அவர்களுக்காக மட்டும் வாழவில்லை.  அவர்களை நம்பி இருக்கும், அன்பு செலுத்த வேண்டிய அவர்கள் குடும்பத்தினருக்காகவும்தான் வாழ்கிறோம் என்று நினைத்தாலே போதும். வெயர் தேர் இஸ் அ வில் தேர் இஸ் அ வே என்பது போல் அத்திடம் கொண்ட மனதிற்குத் தேவையான மார்கங்கள் கண்ணில் தோன்றும்.  எத்தகைய விபத்து நேர்ந்தாலும் அதிலிருந்து எல்லாம் அவர்கள் தப்பி அவர்களது அன்பு உள்ளங்களின் அருகே விஜயகுமாரும், ஸாயாவும் சென்றடைந்தது போல் சென்று மகிழ்ந்து வாழமுடியும். வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்!

படங்கள் : இணையத்திலிருந்து

(இன்றிலிருந்து சனிக்கிழமை வரை நண்பர்கள்/சகோதரிகளின் தளத்திற்கு வருவதற்குச் சற்று சிரமமாக இருக்கலாம். முடிந்தால் வருகின்றோம். பயணம். கீதாவின் தெனாலி, குண்டூர் பயணக் குறிப்புப் பதிவுகள் வரும். இப்போது பதிவுகள் செட் செய்யப்பட்டு வெளிவரலாம். மீண்டும் ஞாயிறு சந்திப்போம்)



36 கருத்துகள்:

  1. //ஒவ்வொருவரும் அவர்களுக்காக மட்டும் வாழவில்லை. அவர்களை நம்பி இருக்கும், அன்பு செலுத்த வேண்டிய அவர்கள் குடும்பத்தினருக்காகவும்தான் வாழ்கிறோம் என்று நினைத்தாலே போதும். வெயர் தேர் இஸ் அ வில் தேர் இஸ் அ வே என்பது போல் அத்திடம் கொண்ட மனதிற்குத் தேவையான மார்கங்கள் கண்ணில் தோன்றும். //

    இரு நிகழ்வுகளும் படிக்கும்போதே கண்கலங்க வைத்தன. அவர்களின் மன உறுதி வியக்க வைக்கின்றன. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வைகோ சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  2. சாதனை மனிதர்கள், முயன்றால் முடியாததொன்றென்றுமில்லை என நிருபித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பாராட்டுகளும் பிரார்த்தனைகளும் தொடரட்டும். உங்களுக்கு எமது நன்றிகள் தொடர்கின்றது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நிஷா சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  3. வீழ்ந்துவிடாது உந்தி எழ முயன்று வெல்லும்
    இது போன்ற அபூர்வப் பிறவிகள் தான்
    நம் நம்பிக்கையின் ஊற்று.

    பகிர்ந்தது நிச்சயம் படிப்பவர்கள் அனைவருள்ளும்
    ஒரு ஒரு சிறு பொறியை விதைத்தே போகும்
    பகிர்வுக்கும் தொடரவும் பயணம் சிறக்கவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  4. விஜயகுமாரின் விபத்தைப் படிக்கும்போது இதயம் வெளியே வந்துவிட்டது... :( நல்ல வேலை உயிர் பிழைத்து இருக்கிறார்..குடும்பத்தாருடன் நலமுடன் வாழ வழி அமையட்டும் அவருக்கு.
    சாயாவின் கதையும் கலங்க வைக்கிறது. தன் நாட்டைவிட்டு அயல்நாட்டில் துன்பப் படுத்தபட்டும் தப்பிப்பதற்கான முயற்சியைக் செய்து தப்பித்த அவரை நினைத்து மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவருடைய திறமைகளை வெளிக்கொணர்ந்த அனுப் அவர்களுக்கும் நன்றி..சாயாவும் அவர் பெண்களும் நலமுடன் வாழ வாழ்த்துகள்.
    இவர்களைப் பற்றி பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க் நன்றி க்ரேஸ் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  5. 'வாழ்க்கை என்பது போராட்டம்' எனும் வார்த்தை இவர்களைப் பொருத்தவரை உண்மையாகி இருக்கிறது. வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாஸிட்டிவ் மனிதர்கள்.

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஆம் மிகவும் தன்னம்பிக்கை ஊட்டும் மனிதர்களே..

      நீக்கு
  6. பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையாரே தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  7. வாழ நினைத்தால் வாழலாம்! ...

    வாழத்தான் வேண்டும்..

    அவர்களுடைய மன உறுதியே அவர்களை வாழ வைக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செல்வராஜு ஐயா தங்களின் வருகைக்குக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  8. வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்!--உண்மைதான் போராடினால்..வாழலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் வருகைக்குக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  9. என் நண்பர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. இதற்கு மேலும் தாங்க முடியாது என்று மனது நினைப்பதை விட ஆறு மடங்கு தாங்கும் சக்தி உடலுக்கு இருக்கிற்து என்பார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் வருகைக்குக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  10. வணக்கம் இந்தப்பதிவு படிக்கும் பொழுது இன்றைய எனது பதிவு ‘’மரணத்தின் கொல்லைவாசல்’’ போன்றே இருக்கின்றது விஜயகுமாரின் நிலை போன்ற எனது அனுபவத்தை எழுதி இருக்கிறேன் எனது விபத்தில் நான் பிறருக்கு உதவினேன் இதுதான் வித்தியாசம்.

    சகோ சாயாவின் தன்னம்பிக்கையை பாராட்டுவோம் இனியெனும் அவரது வாழ்வில் சந்தோஷம் கிடைக்கட்டும் வாழ்க வளர்க...
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வருகைக்குக்கும் கருத்திற்கும். தங்கள் பதிவும் வாசித்தோம் மரணத்தின் விளிம்பைத் தொட்டுத்தான் வந்திருக்கின்றீர்கள்! மன உறுதியுடன்!

      நீக்கு
  11. நம்பிக்கை மனிதர்கள்! இருவருக்கும் வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் தங்களின் வருகைக்குக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  12. உள்ளத்தை உறையச் செய்யும் விபத்து! இதே போல் ஒரு விபத்தில் சிக்கிச் செயற்கைக் காலுடன் எவரெசுட்டைத் தொட்ட உலக சாதனைப் பெண் அருணிமாவைப் பற்றிப் படித்ததே நெஞ்சிலிருந்து இன்னும் நீங்கவில்லை. அதற்குள் இது. இந்தியத் தொடர்வண்டிகளில் ஏற்படும் விபத்துகள் மனிதர்களைச் சின்னபின்னமாக்கி விடுகின்றன. இதைத் தடுக்க ஏதேனும் வழி இருந்தால் அரசு உடனே அதைச் செய்யச் சொல்லிப் போராட வேண்டும்!

    12 வயதுச் சிறுமியாகத் தன்னை நம்பி வந்து, பதினான்கே வயதுக்குள் மூன்று குழந்தைகளைப் பெற்றளித்த ஒரு பெண்ணை நட்டாற்றில் விடுவது போல் விட்டுச் செல்ல வேண்டுமானால் எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சம் வேண்டும்! இப்படிப்பட்ட விலங்குகளை மனிதப் பட்டியலிலிருந்தே அகற்ற வேண்டும்! இவ்வளவையும் மீறி இன்று உயர்ந்திருக்கும் சாயாவின் கதை சாதனை!

    நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இபுஞா சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  13. மனதை ஆழமாக பாதித்த சம்பவங்கள். ஒவ்வொன்றும் வாழவைக்கும் தன்னம்பிக்கை சாத்தியங்கள். மிக அருமையான பதிவு.

    பயணம் முடிந்து பதிவோடு வாருங்கள். இனிமையான பயணத்துக்கு வாழ்த்துகள்!
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில் நண்பரே தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு

  14. வாழ்க்கைப் பயணம் என்பது
    சறுக்கி வீழ்த்தும் சேற்று வழி...
    வழுக்கி விழாமல் பயணித்தால்
    வாழ்க்கைப் பயணம் தொடரும்!

    எல்லாவற்றையும் கடந்து
    வாழ்பவரே வெற்றியாளர்

    இந்தப் பதிவின்
    வெற்றியாளரைப் பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  15. வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு சாதித்துக் காட்டும் சாதனையாளர்கள் ,தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு வழிகாட்டிகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  16. மன உறுதி உயிரைக் காத்தது.. ஆயினும்..
    இரண்டு சம்பவங்களுமே வருத்தத்தை கொடுத்த போதும் அவர்கள் மன உறுதி நமக்கு ஒரு பாடமாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  17. இப்போது தான் கில்லர்ஜியின் விபத்தைப் பற்றி படித்துவிட்டு வந்தேன். நீங்களும் ஒரு விபத்து பற்றிய பதிவை எழுதியிருக்கிறீர்கள்.
    பயணக்கட்டுரைகளை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சொக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      கீதா: பயணக் கட்டுரை அடுத்த வாரம் வரும் தொகுக்க வேண்டுமே..

      நீக்கு
  18. விஜயகுமார் நிச்சயம் தன்னம்ம்பிக்கை மனிதர்தான் .எவ்வளவு பயங்கர அனுபவம் பாவம் .
    நம்ம நாட்டில் இப்படி கதவு திறந்திருக்கும் ரெயில்களில் .இங்கே வெளிநாட்டில் ரயில் புறப்பட்டதும் கதவு தானா மூடிக்கும் .நம் நாட்டுக்கு தானா மூடும் கதவுகள் வந்தாலும் :( சில பல விஷயங்களை நினைச்சா வேண்டாம் கதவு திறந்திருப்பதே நல்லதின்னு தோணுது
    ஸாயா வரைந்த ஓவியமே சொல்கிறது அவரின் மன வலி களை :( இனி அவர் குடும்பத்துடன் சேர்ந்து நிம்மதியா இருக்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சலின் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். பல நாட்கள் ஆகிவிட்டனவே தங்களைக் கண்டு....

      நீக்கு