புதன், 2 டிசம்பர், 2015

வரலாற்றுச் சான்றுகளாக மாறிய பேசும் (புகைப்) படங்கள் - 2

சென்ற இடுகையின் தொடர்ச்சி.....

புகைப்படங்களில் வேதனை தரும் ஒன்றும் கூடவே அவ்வேதனையைச் சிறிதளவு குறைக்கவைக்கும் வேறு ஒன்றும்தான் ஆஃப்கானிஸ்தான் அழகியான பீபி ஆயிஷாவினுடைய புகைப்படங்கள். 

 
ஆயிஷா

தாலிபானை தன் உயிரைப் போல் நேசிக்கும் கணவன் தன் மனைவி பீபி ஆயிஷாவை ஒரு மனித ஜென்மம் என்று கூட நினைக்காமல் தினமும் துன்புறுத்தி இருக்கிறார். அதைத் தாங்க முடியாததால் ஆயிஷா ஒருநாள் வீட்டை விட்டே ஓடிவிட்டார்.  கணவனும் அவர் நண்பர்களும் ஆயிஷாவைத் தேடிக் கண்டுபிடித்து தாலிபான் நீதிமன்றத்தில் நிறுத்த, கணவனுக்கும் அவரதுக் குடும்பத்திற்கும் அவமானம் ஏற்படுத்திய பீபி ஆயிஷாவின் மூக்கு மற்றும் காதுகளை அறுத்தெறிய வேண்டும் என்று தாலிபான் நீதிமன்றம் தீர்ப்பளித்தும்விட்டது. கதறி அழும் ஆயிஷாவை ஓரிரவு அடுத்திருந்த மலைமேல் இழுத்துச் சென்று மூக்கையும், காதுகளையும் அறுத்தெறிந்தே விட்டார்கள் அவரது கணவனும் அவரது நண்பர்களும். [புராணகாலத்தில்(!?) லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கையும் முலைகளையும் அரிந்தது நினைவுக்கு வருகின்றது.  அதற்குப் பழிவாங்கத்தான் இராவணன் சீதையைச் சிறையெடுத்து அதன் தொடர்ச்சியாக ராம ராவண யுத்தமே உண்டானது என்று சொல்லத் தைரியமுள்ள தமிழர்களின் எண்ணிக்கை என்னவோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டேதான் வருகின்றது.  பலருக்கும் பல நீதி நிலவும் நம் நாட்டில் (தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் என்றழைக்கப்படும் ராட்சசர்கள்!-இப்பொய்களை எல்லாம் திராவிடர்களான நாமும் எவ்வளவோ சொல்லியும் பொய்யாக்க முடியவில்லை!-) அசுரப் பெண்ணான சூர்ப்பனையின் மூக்கு அழியப்படவேண்டியதே என்று வாதிட்டு வட இந்திய ராம ஆராதகர்கள் வென்றே விட்டார்கள், அன்றும் இன்றும் மதமும் மத நூல்களும் பெண்களுக்கு எதிரான அநீதியை அனுமதித்தது என்று சொல்வதைவிட ஆண்களின் ஆளுமை மற்றும் சுகத்திற்காக ஆண்கள் அவற்றில் எழுதிச் சேர்த்த மத நிபந்தனைகள்தான் பெண்களுக்கு எதிரான இது போன்ற அநீதிகளையும் அக்ரமங்களையும் செய்யவைக்கின்றது என்பதுதான் உண்மை.] 

“ஆஃப்கானிஸ்தானை விட்டு தப்பிப் போகும் பெண்களுக்கு கிடைக்கும் தண்டனை” என்ற பெயரில் எழுதப்பட்ட செய்தியும், அவரது மூக்கில்லா புகைப்படமும் 2010 ஆம் வருடம் டைம்ஸ் இதழில் வெளிவந்ததைப் பார்க்க நேரிட்ட சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் ஆயிஷாவை அமெரிக்காவிற்குக் கொண்டு சென்று ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து அவர் இழந்த மூக்கையும், காதுகளையும் மீண்டும் பெறச் செய்ய உதவினார்கள்.  பெண்கள் தாலிபானில் படும் துயரைப் படம் பிடித்துக் காட்டிய புகைப்படம் இது.  இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக மலாலாவை தாலிபானின் துப்பாக்கிக்கு அஞ்சாமல், “காலியான வகுப்பறைகளும், பயந்து வாழும் குழந்தைப் பருவமும் இனியேனும் இல்லாதாகி, எல்லோரும் குறிப்பாகப் பெண்கள் கல்வி கற்கும் காலம் இனியேனும் வரட்டும்” என்று பேச வைத்திருக்கலாம்.

பீபி ஆயிஷாவுக்கும், கிங்க் ஃபுக்குக்கும் அவர்களைப் படம் பிடித்தவர்கள் செய்த உதவியாலும் அவர்களைப் பற்றி கேட்க நேர்ந்தவர்களும், கண்டவர்களும் செய்த உதவிகளால் அவர்கள் இருவரும் இப்போது சாதாரணப் பெண்களைப் போல் வாழ்கிறார்கள் என்ற நிம்மதி நமக்கு. 

Image result for kevin carter pictures
கெவின் கார்ட்டர். )இவரைப் பற்றிவலிப்போக்கன் அவர்களும் தன் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்

ஆனால் 1993 மார்ச் 23 ஆம் தேதி எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்திலுள்ள ஒரு பெண்ணுக்கு(?!) என்ன நேர்ந்தது என்று தெரியாமல் போய்விட்டது. கலவரத்தால் நேர்ந்த பட்டினியைப் போக்க தென்ஆப்பிரிக்காவிலிருந்து உணவுப் பொட்டலங்களுடன் சூடான் நாட்டை நோக்கி கிளம்பிய விமானத்தில் கெவின் கார்ட்டர் எனும் புகைப்பட நிபுணரும் உடன் ஏறினார்.  

அப்போது பல வித தொற்று நோய்கள் படர்ந்து கொண்டிருந்த அவ்விடத்தில் 30 நிமிடம் மட்டுமே விமானம் நிறுத்தப்படும் என்பதால் கெவிந் கார்ட்டர் அயோத்  எனும் அவ்விடத்தில் விமானத்திலிருந்து இறங்கி கொஞ்சதூரம் நடந்ததும் அவர் கண்ணில் பட்ட ஒரு காட்சியைக் கண்டு அதிர்ந்து போனார். 


உணவுப் பொட்டலங்களை வாங்க விமனத்தருகே ஓடும் பெண்கள்! ஓட முடியாத, எலும்பும் தோலுமான, நடக்கக் கூட முடியாத ஒரு பெண் (?!) குப்புறப்படுத்து தன் இயலாமையை எண்ணி கதறி அழக்கூடிய சக்தி கூட இல்லாமல் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்க, திடீரென அவளருகே பறந்து வந்து அமர்ந்தது ஒரு கழுகு! அவளைக் கொத்தித் தின்றே தன் பசியாற்றக் காத்திருக்கத் தொடங்கியது.  கெவின் கார்ட்டர் சிறகு விரித்து நிற்கும் அந்தக் கழுகையும் பெண்ணையும் சேர்த்து புகைப்படம் எடுக்க சிறிது நேரம் காத்திருந்தார்.  

20நிமிடங்கள் கடந்தன.  பெண் அசையாததால். கழுகும் அசையவில்லை. அதன் சிறகையும் விரிக்கவில்லை.  விமானம் புறப்படும் நேரம் நெருங்கியதால் கெவின் கார்ட்டர் கழுகையும் பெண்ணையும் சேர்த்துப் புகைப்படம் எடுத்து, அக்கழுகை அங்கிருந்து விரட்டிய பின் விமானம் ஏறி தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்துவிட்டார்.  1993 மார்ச் 26 ஆம் தேதி நியூயார்க் டைம்சில் வெளியிட்ட அப்படம் உலகை உலுக்கியது.  1994 ஆம் ஆண்டு அப்புகைப்பட்த்திற்குப் புலிட்சர் பரிசும் கிடைத்த்து.  

பலரும் கார்ட்டரைப் பாராட்டினார்.  ஆனால், சிலர் அப்படத்தில் ஒரு கழுகல்ல, வேறு ஒரு கழுகும் இருக்கிறது அதுதான் கெவின் கார்ட்டர் என்று சொல்ல அதைக் கேட்ட கார்ட்டர் மனம் உடைந்து தன்னால் அப்பெண்ணைக் காப்பாற்றி ஒரு பாதுகாப்பான இட்த்தில் சேர்க்க இயலாமல் போயிற்றே என்று வருந்தி 1994 ஜூலை 27 ஆம் தேதி தன் 34 ஆம் வயதில் விஷப் புகையைச் சுவாசித்து தற்கொலையே செய்து கொண்டார்.  அப்படி இந்தப் புகைப்படம் பசியின்றி வாழ்வோருக்கு பசியின் கொடுமையை விளக்கி அதைப் போக்க எல்லோரும் அவரவரால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் எனும் அவசியத்தை உணர்த்துவதோடு நில்லாமல் உயிரும் உணர்வும் இல்லாத கேமரா கண்களுக்கு அப்பாலிருந்துப் படம் பிடிப்பவர்கள் இவ்விரண்டும் மனிதர்கள் ஆதலால், மனிதாபிமானத்தை மறந்துவிடக் கூடாது எனும் உண்மையையும் உணர்த்துகின்றது.


அது போல் தமிழ் ஈழத்திற்காக வாதிட்டு, போரிட்டு உயிர் நீத்த ஈழத் தமிழர்களின் போராட்டம் இப்படி முடிவுற்றது எனச் சொல்லும் இப்படங்கள் மனதில் முள்ளாய் குத்துகிறது.  நம் கண்களில் கண்ணீரைக் க்சிய வைக்கும் 

இப்படங்கள் எதிரிகளைக் கொல்வதோடு நில்லாமல் அவர்களதுக் குழந்தைகளையும் கொன்று குவிக்கத் தூண்டிய இலங்கை அரசின், மனிதாபிமானம் இல்லாமையை எண்ணி நம்மைக் கொந்தளிக்க வைக்கிறது.  இவ் ஈனச் செயலைக் கண்டித்து எதிர்ப்புகள் தேவையான அளவு எங்கிருந்தும் எழவில்லையே என்ற ஏக்கம் மனதை வாட்டுகிறது.  உலகின் பல பாகங்களுக்குச் சிதறி ஓடிப் பிறந்த மண்ணில் வாழ முடியாத வேதனையுடன் அங்கெல்லாம் அந்நியர்களாய் வாழும் நம் தமிழ் உறவுகள் ஒற்றுமையாய் சாதியின்றி ஓரினமாம் தமிழினமாய் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று தமிழையும் தமிழ்பண்பாட்டையும் வளர்த்து அங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்குத் துணையாகட்டும் என்று வேண்டிக் கொள்ளவும் வைக்கிறது. 


இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் முடியும்.

படங்கள் இணையத்திலிருந்து...



43 கருத்துகள்:

  1. வணக்கம்
    அண்ணா
    ஒவ்வொரு தகவலையும் படிக்கும் போது மனதை கண்ணீரில் கரையவைத்தது... கழுகு மனிதனை சாப்பிடும் புகைப்படம் மற்றும் ஆயிஷா பற்றிய தகவல்.. ஈழத்தமிழர்கள் பற்றிய தகவல் எல்லாவற்றையும் படித்த போது மனம் கனத்தது.. த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -.த.ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்..

      நீக்கு

  2. அதிர்ச்சியை அளித்தது இந்த பதிவு..... மவுனமாக அழுவதை தவிர வேறு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோ.
    ஆயிஷாவின் புகைப்படம் அதிர்ச்சி அளித்தது.
    கெவின்கார்ட்டரையும் அவர் எடுத்த புகைப்பபடத்தையும் பற்றி அறிந்ததுதான்.
    ஈழப்போரின் கொடுமை புகைப்படங்களில் அடங்குவதன்று.
    பொதுவாகவே, மூக்கையும் மார்பையும் அறுத்தல் என்பது ஒருவரை இழிவு படுத்துவதற்காய்ப் பழங்காலத்தில் இருந்தே நிகழ்ந்து இன்று நம்மிடையே மறைந்த ஒரு இழிவழக்கு.

    மதுரை நாயக்கருக்கும், மைசூர் அரசருக்கும் இடையே நடந்த மூக்கறுப்புப் போர் இக்கொடுமைக்கான வரலாற்று ஆதாரம்.
    ஆக., இன்று காலை கண்விழிப்பு ஒரு திடுக்கிடலுடன் எனக்குத் தொடங்குகிறது.

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ தங்களின் வருகைக்கும், கருத்திற்கும்.

      மதுரை நாயக்கருக்கும் மைசூர் அரசருக்கும் இடையே நடந்த மூக்கறுப்புப் போர்....பற்றி எழுதலாமே தாங்கள்..

      இன்னும் ஒரு பகுதியே உள்ளது . நிறைய இருந்தாலும் 3 வது பகுதியுடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுவதால். எனவே சகோ தாங்கள் அடுத்த பகுதிக்கு மெதுவாகவே வாருங்கள்...!!! நன்றி சகோ!

      நீக்கு
  4. வேதனைகளின் சாட்சிகள் சில புகைப்படங்கள்.தொடருங்கள் அடுத்த பகிர்வை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  5. கரண்ட் இல்லை. மொபைலில் சார்ஜை சேமிக்க வேண்டிய கட்டாயம். பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் இங்கும் அதே பிரச்சனைதான் இணையம் அவ்வப்போது வரும் போகும். 3. !/2 நாட்கள் கரண்ட் இல்லை எல்லோருக்குமே இந்தக் கஷ்டம்தானே
      உங்களுக்கும் இருந்திருக்கும் ...

      நீக்கு
  6. பீபி ஆயிஷாவுக்கு நேர்ந்த கொடுமை அறியாதது..
    அடுத்துள்ள இரு சம்பவங்களும் நெஞ்சிலிருந்து நீங்காதவை..

    அதிலும் - செல்வன் பாலசந்திரன்!.. -
    இப்போதும் மனம் அதிர்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  7. வேதனை தரும் படங்கள்
    என்ன உலகம் இது
    அன்பை மட்டுமே போதிக்கும் மதங்கள் நிறைந்த உலகில் இப்படியா
    தம =1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையாரே தங்களின் கருத்திற்கு வருகைக்கும்

      நீக்கு
  8. எல்லோரது துயரத்திலும் நாங்கள் பங்கெடுத்தோம்! அழுதோம்! ஆனால் எங்களது துயரத்தில் யார் பங்கெடுத்தார்...சொல்லுங்கள்? இந்தியாவும் பாக்கிஸ்தானும் எதிரிகள்!
    சீனாவும் இந்தியாவும் பகைவர்கள்!
    ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆகாது! கியூபா என்றால் அமெரிக்காவுக்கு பிடிக்காது!
    பாலஸ்தீனமும் இஸ்ரேலும் நாயும் பூனையும்...! வியட்நாமுக்கு அமெரிக்கா மீதான கோபம்...சொல்லி மாளாது!
    ஆனால் அவர்கள் எல்லோரும் வரலாறில் ஓர் நாள் ஒன்றிணைந்தார்கள்.
    அது எப்போது? 2009 அப்போது!
    எதற்காக? "எம்மைக் கொல்வதற்காக"
    இந்தியாவால் பகத்சிங்கும், பாகிஸ்தானால் ஜின்னாவும், சீனாவால் மாவோவும், ரஷ்யாவால் லெனினும், கியூபாவால் சேய்யும், அமெரிக்காவால் லிங்கனும், பாலஸ்தீனத்தால் அரபாத்தும்,
    இஸ்ரேலால் யேசுவும், வியட்நாமால் கோசிமினும் ஈழத்தில் கொல்லப்பட்டார்கள். அப்போதும் நாங்கள்
    அவர்களைக் காப்பாற்ற போராடினோம்...!
    முடியவில்லை...! குண்டுகள் துளைத்த அவர்களின் உடல்களை எங்கள் நிலத்தில்
    புதைத்துவிட்டு அவர்களுக்காக நாம் அழுதோம்! முக்கிய குறிப்பு: ஈழத்தில் 147679 தமிழர்களோடு அவர்களும் கொலை செய்யப்பட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ ஜூட் அருளப்பு தங்களது வெளிப்பாடு மிக மிக நியாயமான ஆதங்கத்தின் வெளிப்பாடு. உண்மையே. மிக்க நன்றி தங்களின் பின்னூட்டத்திற்கு மிகுந்த வேதனையுடன். தாமதமான பதிலுக்கு மன்னிக்க வேண்டுகின்றோம்.

      நீக்கு
    2. //முக்கிய குறிப்பு: ஈழத்தில் 147679 தமிழர்களோடு அவர்களும் கொலை செய்யப்பட்டார்கள்// - உலக நாடுகள் சூடு சுரணை என ஒன்றிருந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளட்டும்!

      நீக்கு
  9. நெஞ்சை உலுக்க வைக்கும் படங்கள்...

    பல வாட்ஸ்அப் காணொளிகளை பார்க்கும் போது, பல கெவின் கார்ட்டர்கள் இன்றைக்கு உள்ளார்கள்...

    பதிலளிநீக்கு
  10. என்ன எழுதுவது என்றே தோன்றவில்லை மனிதநேயம் முழுவதும் செத்து விட்டது சில புகைப்படங்களை தாங்கள் வெளியிடாமல் இருந்திருக்கலாம் மனம் ரணக்கின்றது
    க+ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். இன்னும் மனித நேயம் இருக்கிறது ஜி. அதைக் காப்பாற்ற வேண்டும்...இனி புகைப்படங்கள் வெளியிடுவதைப் பார்த்து தவிர்க்கின்றோம்.

      நீக்கு
  11. அய்யா, சகோதரீ இப்படி ஒரு அதிர்ச்சி தருகிறீர்களே?
    உண்மையில் தந்தவர் நீங்களில்லை என்றாலும், செய்தியே அதிர வைக்கிறது.
    உலகப்போரின் போது, அமெரிக்கப் படைகளின் குண்டுமழையிலிருந்து தப்பித்து ஓடியவர்களில் அந்தச் சிறுமியின் நிர்வாண அலறல் படம் பார்த்துப் பலவருடம் ஆகியும் நெஞ்சுக்குள் குமைந்து கொண்டே இருக்கிறது. அடுத்த உலகப் போர் வராமல் செய்யும் காரணிகளில் அந்தப் படத்திற்குப் பெரும் பங்குண்டு என்பார்கள். ஆனாலும் இந்தப் படங்களின் கோரம் நெஞ்சைப் பிசைகிறது. அரக்கர்களின் உலகில்தான் நாம் வாழ்கிறோம்.
    படங்களை விரும்புகிறவர் மட்டும் க்ளிக் செய்து பார்ப்பதுபோல மாற்றிவிட முடியுமானால் செய்யுங்கள். வணக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா/அண்ணா. ஒருபுறம் அரக்கர்களின் உலகு...மற்றொருபுறம் இப்போது பாருங்கள் எத்தனை நல்ல உள்ளங்கள் சாதி மதம் பாராமல் உதவிக்கரங்களை நீட்டிக் கொண்டே இருக்கின்றார்கள். இதிலிருந்தே தெரியவில்லையா மக்களிடம் இல்லை குறை நம்மை வழிநடத்த நல்ல ஆளுமை உள்ள தலமை இல்லை என்பது. இலவசங்கள் என்ற பெயரில் தங்களின் சுயநலத்திற்காக மக்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கின்றார்கள். இதில் வேதனை என்னவென்றால் படித்தவர்களும் அடங்கியிருப்பதுதான். இன்னும் ஒரு அர்த்தமுள்ள, ஆழமான கருத்து சொல்ல முடியும் ஆனால் அதை இங்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலை. சரி அப்படியொரு தலைமை உள்ளதா? இருக்கலாம் ஆனால் அந்தத் தலைமை நம்மை ஆளும் அளவிற்கு வர முடியுமா? மக்கள் இனியேனும் திருந்தி நல்ல தலமையைத் தேர்ந்தெடுப்பார்களா?

      இனி தாங்கள் சொல்லுவது போல் படங்களை வெளியிடுகின்றோம் ஐயா/அண்ணா.

      மிக்க நன்றி..தங்கள் கருத்திற்கு



      நீக்கு
  12. மன உறுதி இல்லாதவர்கள் படங்களைப் பார்க்க வேண்டாம் எனும் எச்சரிக்கை இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். இனி அப்படியே செய்கின்றோம் சார்...

      நீக்கு
  13. எல்லா படங்களும் சோக வரலாறு ஐயா.. அதிலும் கடைசி படம் நெஞ்சை அறுக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜெயசீலன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். தாங்கள் நலமா? இப்போது எங்கிருக்கின்றீர்கள்? கல்லூரிப்படிப்பு முடிந்துவிட்டதா? திருநெல்வேலியிலும் இப்போது வெள்ளம் என்று செய்திகள் சொல்லுகின்றனவே...

      நீக்கு
  14. இக்கட்டுரை படித்து,
    சோகம்தான் நெஞ்சுக்குள்ளே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களுக்குத் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  15. வரலாற்றுச் சான்றுகளாக மாறிய பேசும் படங்கள் தொடரட்டும்.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
    2. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  16. #எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்குத் துணையாகட்டும்#
    கடந்த காலத்தில் அவர்களுக்கு துணையாகவில்லை என்பதுதானே உண்மை ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  17. ஜி, எம், பி ஐயா சொல்வது சரி தான், படம் பார்க்கவே முடியல, மனம் வெடிக்கும் போல் உள்ளது கடைசிபடம்,

    அருமையான பகிர்வு, பேசும் படங்கள் தான், நான் அதனிடம் பேசவில்லை, பார்த்தால் தானே,

    நன்றி நன்றி,
    மழை அதிகமாக இருக்கே, எப்படியிருக்கிறீர்கள், சுகம் தானே,‘நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேஸ்வரி சகோதரி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  18. மனதைப் பதற வைத்த புகைப்படங்கள்.

    த.ம. 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மணவையாரே தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  19. உள்ளத்தை உருகவைக்கும்
    உயிரோவியமான தனிப்பட அறிமுகமும்
    வரலாற்றுச் சுருக்கமும்
    சிறந்த பாடமாகப் படிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜீவலிங்கம் யாழ்பாவானன் காசிரலிங்கம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  20. இன்று தான் கொஞ்சம் தளங்களைப் பார்க்கலாம் என்று வந்தேன். பலநாட்கள் வராததற்கு மன்னிக்கவும் அண்ணா மற்றும் கீதா.

    படங்களைப் பார்த்து மனது நொந்துபோகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி க்ரேஸ் சகோ. எதற்கு மன்னிப்பு எல்லாம்...எப்போது நீங்கள் பார்க்க முடிகின்றதோ அப்போது வாருங்கள்...

      மிக்க நன்றி க்ரேஸ் கருத்திற்கும் வருகைக்கும்..

      நீக்கு
  21. //அதன் தொடர்ச்சியாக ராம ராவண யுத்தமே உண்டானது என்று சொல்லத் தைரியமுள்ள தமிழர்களின் எண்ணிக்கை என்னவோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டேதான் வருகின்றது// - போட்டீர்களே ஒரு போடு!

    ஈழக் கொடுமைகளின் படங்களையும் சேர்த்தமைக்கு நன்றி! மாற்றம் எனும் ஒன்றைத் தவிர மற்ற எல்லாமே ஒருநாள் மாறியே தீரும். ஆனானப்பட்ட சோழர்கள், கிரேக்கர்கள், ஆங்கிலேயர்கள் போன்றோரின் பல்லாண்டுக் கால ஆதிக்கங்களே முடிவுக்கு வந்து விட்டன. இந்த சிங்களர்களும் வட இந்தியர்களும் எந்த மூலைக்கு? வரலாறு என்பது மிகப் பெரியது. அதில் தமிழும் தமிழர்களும் கணிசமான இடத்தை வெற்றி கொண்டிருக்கிறோம். இவர்களெல்லாம் அதில் ஒரு புள்ளிக்குக் காண மாட்டார்கள்!

    பதிலளிநீக்கு