சனி, 5 டிசம்பர், 2015

லெப்டோஸ்பைரோசிஸ்-ராட் ஃபீவர்/எலிக்காய்ச்சல் - அரசிற்கும், மக்களுக்கும்....


ஒவ்வொரு மழையின் போதும்/பருவமழையின் போதும் பரவும்  லெப்டோஸ்பைரோசிஸ் அதாவது எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படுவதுண்டு. ஆனால், ஏனோ அதிகம் இதுபற்றிப் பேசப்படுவதில்லை.  இப்போது பருவ மழையின் வெள்ளத்தில் சென்னை மிதப்பதால், தண்ணீரில் பலரும் சிக்க நேர்ந்துள்ளதால் இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இதற்கான பரிசோதனைகள் ஒரு சில தனியார் பரிசோதனைக் கூடங்களில் மட்டுமே செய்யப்படுகின்றது. சமீபத்தில் டெங்குக் காய்ச்சலைக் கண்டறியும் எலிசா சோதனை கூட சரியாகச் செய்யப்படவில்லை என்றும், செய்வதில்லை என்றும் கூட சொல்லப்பட்டது.

எது எப்படியோ, இப்போது டெங்குவிற்கும் மற்றும் அதிகமாகப் பேசப்படாத எலிக்காய்ச்சலுக்கும் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் தயவாய் தயாராய் இருங்கள். மக்களும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும்.

லெப்டோஸ்பைரோசிஸ்: இது மனிதர்களையும், விலங்குகளையும் தொற்றும் நோய். Zoonotic infection.  இந்தத் தொற்று, விலங்குகளிடமிருந்து, குறிப்பாக எலிகள், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள், தெரு நாய்கள் இவற்றின் சிறுநீரினாலும், இவற்றின் சிறுநீரும், கழிவுநீரும்/சாக்கடைத் தண்ணீரும் கலந்து வரும் நீரினாலும் மக்களுக்குத் தொற்ற வாய்ப்புள்ளது. 

மனிதர்களுக்கு வெட்டுக்காயங்கள், புண்கள், கண்கள் வழி இந்தத் தொற்று பரவ வாய்ப்புள்ளது. மனிதனிடமிருந்து மனிதனுக்கு இந்தத் தொற்று பரவுவது அரிது என்று சொல்லப்பட்டாலும் தொற்று ஏற்பட்ட மனிதர்களின் சிறுநீரினுடன் தொற்று/தொடர்பு (மிதித்தல் போன்றவை குறிப்பாக கழிவறையில்) ஏற்பட்டால் தொற்று ஏற்பட/பரவ வாய்ப்புண்டு.

அதுவும் இப்போது பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், கழிவுகள் கலந்த நீர் தேக்கத்தினாலும், சில இடங்களில் முதல் மழையில் பெய்த நீரே முழுவதும்  வடியாத நிலையில், இப்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தின் நீர்த்தேக்கமும் சேர்ந்து வடிவதில் தாமதம் ஏற்படுவதாலும், இந்தத் தொற்று ஏற்பட/பரவ வாய்ப்புள்ளது.

    அறிகுறிகள் : இதன் அறிகுறிகள் பல தொற்றுகளின் அறிகுறிகளை ஒத்து இருக்கும். காய்ச்சல், அதிகமான தலைவலி, சோர்வு, உடல் வலி, குளிர், கேஸ்ட்ரோ இன்டெஸ்டைனல் பாதிப்பு, பசியின்மையுடன் மேலும் சில அறிகுறிகள்..தொடரும் அதிகமான ஜுரம், மூட்டுவலி, வாந்திவருவது போன்ற உணர்வு, தண்ணீர் அதிகமாக குடிப்பது, உடல் இயக்க சோர்வு..

இந்தத் தொற்று இரத்தத்திலும், லிம்ப் நோட்களிலும்/நிணநீர்க்கணு, சிறுநீரகத்திலும், கணையத்திலும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலசமயம் இதற்கான அறிகுறிகள் இருப்பதில்லை அல்லது தாமதமாகத் தோன்றலாம். இது சரிவரக் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றால் பாதிப்பு ஏற்படலாம்.

 இந்தக் காய்ச்சலைப் பொதுவாக மருத்துவர்கள் கண்டறிவதில்லை என்று சொல்லப்படுகின்றது. ஏனென்றால், இந்தக் காய்ச்சல் டெங்கு, மலேரியா, டைஃபாய்ட், வைரல் ஜுரம் போன்று ஒத்த அறிகுறிகளை உடையதால், மருத்துவர்கள் இவற்றிற்கான சோதனைகளைத்தான் முதலில் மேற்கொள்ள பரிந்துரைக்கின்றார்கள். (1 ½ வருடங்களுக்கு முன் எனது மகனுக்கு மழைக்காலத்தில் நேர்ந்த அனுபவமும் அதே. மகன் கால்நடைமருத்துவனாக இருப்பதால் தனக்கு ஏற்பட்ட அறிகுறிகளையும், சிறுநீர் பரிசோதனையின் முடிவுகளை வைத்தும் அறிந்து கொண்டு லெப்டோஸ்பைரோசிஸ்/எலிக்காய்ச்சலுக்கான சோதனை செய்து கொண்டான். முடிவுகளும் அதை உறுதிப்படுத்தியது. பின்னர் அதற்கான ஆண்டிபயாட்டிக் எடுத்துக் கொண்டாலும் ஒரு மாதமாகியது முழுவதும் குணமாவதற்கு.)

     எனவே, அரசும் மக்களும் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு வேளை ஜுரம் குறையவில்லை என்றால், மருத்துவர், மலேரியா, டெங்கு, டைஃபாய்ட் போன்றவற்றிற்கான சோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைத்தால், மேற்சொன்ன சோதனைகளுடன் எலிக்காய்ச்சலுக்கான சோதனையையும் மேற்கொள்வது நல்லது. முதலிலேயே அறிந்து கொகொண்டுவிட்டால், அதற்கான ஆண்டிபயாட்டிக்ஸ் எடுத்துக் கொண்டு எளிதில், விரைவில் குணமடையலாம். இது பயமுறுத்துவதற்கு அல்ல. ஒரு விழிப்புணர்வுடன் இருப்பதற்காக நல்ல நோக்கத்துடன் சொல்லப்படுவதே.

---கீதா---

22 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல்கள்.. விழிப்புணர்வுடன் மக்கள் தம்மைக் காத்துக் கொள்ளவேண்டிய தருணம் இது..

    பதிலளிநீக்கு
  2. அறிந்திராத நோயைப் பற்றிப் பகிர்ந்ததோடு, விழிப்புணர்வினையும் ஏற்படுத்தியமைக்கு நன்றி.
    சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
    பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html

    பதிலளிநீக்கு
  3. பலரும் அறிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பதிவு... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. தேவையான நேரத்தில் தான் சொல்லியுள்ளீர்கள் ,தங்களின் சேவை தொடரட்டும் !

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள தகவல்கள் கீதா. இத் தருணத்தில் நிச்சயம் விழிப்புணர்வு அவசியமே. நன்றி !

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள விளிப்புணர்வு பதிவு நன்று வரும் முன் காப்போம்
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  7. விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய பதிவு. சகோதரிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு அம்மா....உங்கள் எண்ணங்களின் பரிவு தெரிகிறது

    பதிலளிநீக்கு
  9. அருமையான, அவசியமான பகிர்வு...
    வாழ்த்துக்கள் கீதா மேடம்...

    பதிலளிநீக்கு
  10. விழிப்புணர்வு தகவல். பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. விழிப்புணர்வுடன் இருப்பதற்காக
    நல்ல நோக்கத்துடன் சொல்லப்பட்ட சிறப்பான பகிர்வுகள்...

    பதிலளிநீக்கு
  12. விழிப்புணர்வு தகவல், பகிர்வுக்கு நன்றி. நலம் தானே,

    பதிலளிநீக்கு
  13. சோதனைக் காலங்கள். சீக்கிரம் கடக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. இன்றைய தேவை
    இப்படியான உளநல வழிகாட்டல்களே!

    தொண்டர்களை
    கடவுளின் பிள்ளைகளாக
    வணங்குகின்றேன்

    வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

    பதிலளிநீக்கு
  15. பயனுள்ள பதிவு கீதா..முகநூலில் பார்த்துப் பகிர்ந்தும் இருக்கிறேன் , நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ரேஸ் ஆம் துளசி இதன் கன்டென்ட் அங்கு போட்டதாகச் சொன்னார் நீங்கள் பகிர்ந்து கொண்டதையும் சொன்னார் மிக்க நன்றி க்ரேஸ்

      நீக்கு
  16. சரியான நேரத்தில் சரியான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி. நான் நலம். நானும் இன்றுதான் ஸ்ரீராமுடன் பேச முடிந்தது. சென்னை மக்கள் எல்லோரும் நலம். நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி...

      நீக்கு
  17. துரைசெல்வராஜு ஐயா

    முனைவர் ஜம்புலிங்கம் ஐயா

    டிடி

    திருப்பதி மகேஷ்

    பகவான் ஜி

    இனியா சகோதரி

    கில்லர்ஜி

    தமிழ் இளங்கோ ஐயா

    செல்வா

    சே குமார்,

    மகேஸ்வரி சகோதரி

    ஸ்ரீராம்

    வலிப்போக்கன்

    யாழ்பாவாணன்

    அனைவரது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....சற்று வேலைப்பளுவால் மட்டுமல்ல இணையப் பிரச்சனை இருந்ததால் தனித்தனியாகப் பதில் உரைக்க முடியவில்லை. அதனால் இப்படி. தயவாய் மன்னிக்கவும். இனி வரும் பதிவுகளுக்கு வழக்கம் போல் தனித்தனியாகப் பதில் உரைக்கின்றோம்.

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம்
    அண்ணா

    யாவரும் அறிய வேண்டிய பகிர்வு நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு