வெள்ளி, 30 அக்டோபர், 2015

70 ஆம் வயதில் முதன் முதலாய் ஓட்டுப்போடப் போகும் கவியூர் பொன் “அம்மா”


     மலையாளத் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக ஏறக்குறைய 400 திரைப்படங்களில் அன்பில், பாசத்தில் மொத்த உருவமான அம்மாவாக மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம், ஸ்ரீனிவாசன், முகேஷ், திலீப் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த, பல திரைப்பட விருதுகள் பெற்ற கவியூர் பொன்னம்மா அண்மையில் தனது 70 வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.


1960களில் கதாநாயகியாக நடித்த அவர், 1980களிலிருந்து அம்மாவாக நடிக்கத் தொடங்கித் தனக்கே உரித்தான சிறந்த நடிப்பாற்றலாலும், பாசம் ததும்பும் குரலாலும், சிரிப்பாலும் அம்மா என்றால் அது கவியூர் பொன்”அம்மா” தான் என்று எல்லோரும் சொல்லும்படி செய்துவிட்டவர்.

இதை எழுதும் போது என் மனதில், அவர் மம்முட்டியுடன் நடித்து 25 வருடங்களுக்கு முன் வெளிவந்த “தனியாவர்த்தனம்” எனும் மலையாளத் திரைப்படம் பளிச்சிடுகிறது.  மம்மூட்டி எனும் ஒரு மகா நடிகரின் நடிப்பைக் கண்டு நான் வியந்த படம் அது. இதோ காணொளி.  நீங்களும் பார்த்து ரசிப்பீர்கள் என்று பகிர்ந்துள்ளேன். 

க்ளைமாக்ஸ் காட்சி - தனியாவர்த்தனம்-மிக அருமையான காட்சி

இறுதிக் காட்சியில் சமூகத்தால் மனநோயாளியாக முத்திரைக் குத்தப்பட்டு வீட்டுக்குள் சங்கிலியால் கட்டப்பட்டுக் கிடக்கும் மகனுக்குத் தாய் விஷம் கலந்த சோற்றைக் கொடுத்துத் தானும் உண்ணும் அந்தக் காட்சியில் தாயாக நடித்த கவியூர் பொன்னம்மாவின் நடிப்பு மம்மூட்டியின் நடிப்பிற்கு இணையாக அமைந்து, அப்படமும் அக்காட்சியும் என் நினைவிலிருந்து ஒரு போதும் நீங்காத இடத்தைப் பெற்ற ஒன்று.

40 வயதுள்ள அம்மாக்கள் உலா வரும் இக்காலத்திலும் மம்மூட்டி, மோகன்லால் போன்றோருக்கு கவியூர் பொன்னம்மா அம்மாவாக வரும் போது, ரசிகர்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.

      ஆனால் அப்படிப்பட்ட அந்த 70 வயதாகும் அம்மா இதுவரை நடந்த ஒரு தேர்தலிலும் ஓட்டே போட்டதில்லையாம்!  தேர்தல் நேரத்தில் வழக்கம் போல் கேட்கும் வித்தியாசமான சம்பவங்களில் எல்லோருக்கும் வியப்பளித்த செய்தி அது.

கேரளத்தைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் எல்லோருமே பெரும்பாலும் வாழ்வது சென்னையில்தான். அதனால், படப்பிடிப்பு யாத்திரை என்று அலையும் அவர்கள், வாக்காளர் பட்டியல் தயாராகும் போது அவர்களது பெயர்கள் அதில் சேர்க்கப்படாமல் போவது இயல்பு. 

ஆனால், அரசியல் ஈடுபாடுள்ள நடிகர் நடிகைகள் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தங்களது வாக்கை தேர்தலின் போது, அவர்கள் ஆதரவளிக்கும்  கட்சியின் வேட்பாளர்களுக்கு அளிக்க மறக்கவே மாட்டார்கள். நடிகர் நடிகைகள் பலரும் வேட்பாளரும் ஆகியிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அமைச்சர்களும் ஆகியிருக்கிறார்கள்.

      வட இந்தியாவில் சுனில்தத், ராஜேஷ் கன்னா, சத்ருகன் சின்ஹா, வைஜெயந்திமாலா, ஹேமாமாலினி போன்றோர், இருந்தாலும் தென்னிந்தியாவில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மற்றும் என்டிஆருக்குக் கிடைத்த முதல்வராகும் வாய்ப்பு வட இந்தியர்களுக்குக் கிடைக்கவில்லைதான்.

ஏன் அவர்களுக்குப் பின் தென்னிந்தியாவிலும் அவர்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கை விஜய்காந்த், சிரஞ்சீவி பெற முடியவில்லைதானே. இருந்தாலும் திரைபடக் கலைஞர்களுக்கு அரசியலில் நுழைவது எளிதுதான்.  அதுதான் சினிமா நடிகர் நடிகைகளுக்கும், அரசியலுக்கும் உள்ள உறவு. 

அப்படிப்பட்ட ஆழமான, அழுத்தமான உறவு திரைப்படக் கலைஞர்களுக்கும் அரசியலுக்கும் உள்ள நம் நாட்டில்தான் பாவம் தனது 70 ஆம் வயதில் முதன் முதலாகத் தனது வாக்கை வேட்பாளர்களுக்கு வழங்க மலையாளத் திரையுலகின் அம்மாவான கவியூர் பொன்னம்மா அவர்கள் செல்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்க நேரிட்டதும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்பதால் பகிர்ந்து கொள்கின்றேன். 


கடந்த 12 வருடங்களாக கருமாளூரில்,  தான் கட்டிய வீட்டில் வசித்துவரும் அவரது பெயர் தேர்தல் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவருக்குத் தேர்தல் அடையாள அட்டையும் கடந்த மாதம் தான் கிடைத்திருக்கிறது. கவியூர் பொன்னம்மா அவர்கள் அன்புமிகு அம்மாவாக நடிப்பதுடன், ஒரு இந்தியக் குடிமகனா(ளா)கத் தனது ஓட்டளிக்கும் உரிமையைக் காப்பாற்றிக் கொண்டு பொறுப்புடன் இனி வரவிருக்கும் தேர்தல்களில் பொன்னம்மா தன் பொன்னான வாக்குகளை அளிப்பாராக!

படங்கள், காணொளிகள் - இணையத்திலிருந்து

நேற்று இதை இங்கு பதிய கூகுளார் ஏனோ மறுத்துவிட்டார். ரொம்பவே அடம் பிடித்தார் அதனால் விடுபட்டது. இன்று முயற்சி. நண்பர் குடந்தை ஆர் வி சரவணன் அவர்களின் குறும்படம் அகம் புறம் இதோ.அதன் காணொளியின் சுட்டி.  பார்த்துவிட்டுத் தங்கள் மேலான நிறை குறை கருத்துகளை யூட்யூபிலும் பதியலாம். 

https://www.youtube.com/watch?v=4OFO4SwfNn0





38 கருத்துகள்:

  1. எல்லாருக்கும் முன்ன்ன
    நாங்க முதல் ஓட்டு (உங்க தளத்தில்) போட்டுடுவோம்ல..
    அவங்க சில தமிழ் படத்துல கூட
    நடிச்சிருக்காங்கன்னு நெனைக்கிறேன்.

    இனி அரசியல் வாதிகள் அவரைத்தேடி வந்து 7ம் அறிவு சூர்யாபோல் இப்படி பாடுவாங்களோ?

    யம்மா யம்மா 'கவியூர்' பொன்னம்மா! உங்க வோட்ட
    எங்களுக்கே போடுங்கம்மா!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹ் ....நல்ல ஐடியா !!

      அது சரி எப்ப நீங்க கில்லர்ஜிக்குப் போட்டியானீங்க? அவருதான் இப்படிச் சொல்லிக் கொண்டு ஓட்டுப் போட்டுவிட்டுப் போவார்.

      கில்லர்ஜி நோட் த பாயின்ட்...

      நன்றி சக்தி!

      நீக்கு
    2. ஹஹஹ் அதே அதே! உங்கள் வைச்சுக் கொஞ்சம் காமெடி பண்ணினாத்தான் எங்க பொழப்பு நல்லா ஓடும்...

      நீக்கு
  2. வாக்காளர் பட்டியலில் தனது பெயரே இல்லை என்று கமலஹாசன் ஒருமுறை கூறினார்!

    70 வயதில் வாக்களிக்கப் போகும் பொன்னம்மா அம்மாவுக்கு நாம் அனைவரும் வாழ்த்துகள் சொல்ல வேண்டும்!


    மகனுக்கு விஷம் கொடுக்கும் காட்சி பாலாவின் தமிழ் நந்தாவில் டீ செய்யப் பட்டிருந்தது!!!! அதுதாங்க... காபி செய்யப் பட்டிருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், கமலின் பெயர் விடுபட்ட செய்தி வந்தது...அவருக்கு எல்லாமே பிரச்சனையாகித்தான் வருமோ..

      ஆமாம் பொன்னம்மாவிற்கு வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டும் இப்போதாவது தனது குடி யுரிமையை நிலைநாட்டுகின்றாரே...

      நாங்களும் நந்தா படம் பார்த்தது உண்டே இது உரைக்கவில்லையே...அட ஆமாம் ல காப்பிதான்...பாலாவுமா...!!

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. இது தான் நம் அரசு இயந்திரங்களின் லட்சணம்:( வேறென்ன சொல்ல! இன்று இந்த அம்மையார் பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகாஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதச் சொல்லுங்க சகோ! மைதிலி. சாதாரண மக்கள் ரேஷன் கார்டு எல்லாம் வைத்திருப்பவர்கள் பெயரே லிஸ்ட்ல இருக்கறது இல்ல. அது மட்டும் இல்ல அப்படியே இருந்தாலும் பல சமயத்துல அவங்க ஓட்டுப் போடாமலேயே போட்டுட்டாங்கனு வருது...அப்போ பொன்னம்மாவின் பெயரில் எத்தனை ஓட்டு விழுந்ததோ இதுவரை...

      மிக்க நன்றி சகோ

      நீக்கு
  4. அன்புள்ள அய்யா,

    70 ஆம் வயதில் முதன் முதலாய் ஓட்டுப்போடப் போகும் கவியூர் பொன் “அம்மா” இந்த வயதிலாவது தனது சனநாயகக் கடமை உணர்ந்தாரே! நல்ல நடிகையாக இருந்த அவர் நல்ல குடிமகளாக ஆவதை எண்ணி மகிழ்ச்சி! ‘அம்பதிலும் ஆசை வரும்... இவருக்கு எழுபதில் ஓட்டுப்போடும் ஆசை வந்திருக்கிறது.

    தமிழ் மணத்தில் ஓட்டுப் போட்டு விட்டேன்.

    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நண்பரே மணவையார்!! சரிதான்...மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும், வருகைக்கும்.

      நீக்கு
  5. 70 ஆம் வயதில் முதல் வோட்டு...! கவியூர் பொன்”அம்மா” பற்றி இன்று தான் அறிந்தேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி! தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  6. அம்மாவின் வாக்கில் வெல்வோருக்கு வாழத்துக்கள்.நேரம் கிடைத்தால் அம்மா படம் படம் பற்றி நானும் தனிப்பதிவு எழுதுவேன் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! எழுதுங்கள் நேசன்! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்..

      நீக்கு
  7. அவரது உணர்வுகளைத் தங்களது எழுத்துக்களின் வாயிலாகப் படித்தபோது அதிகமே மனம் கனத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  8. இந்த அம்மாவை படங்களில் பார்த்திருக்கிறேன். இன்றுதான் முழுமையாக தெரிந்து கொண்டேன். பதிவுக்கு நன்றி!
    தமிழ் மண சட்டசபைக்குள் நுழைய எனது ஏழாவது ஓட்டைப் போட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் ஓ சட்டசபை!! மிக்க நன்றி அப்படியேனும் சட்டசபைக்குள் உங்கள் ஓட்டினால் நுழைத்தீர்களே! ஓட்டினை விட உங்கள் வரிகளை மிகவும் ரசித்தோம்...மிக்க நன்றி செந்தில்...நண்பரே!

      நீக்கு
  9. இவங்கள நான் பல படங்களில் பார்த்திருக்கிறேன். பாவப்பட்ட அம்மாவா வருவார் .. 70ஆனாலும் ஓட்டுப் போட கிளம்பிட்டாரே பாராட்டுவோம்

    ஸ்ரீராம் சொன்ன படி இதைப் படிச்சவுடன் எனக்கு நந்தா படம்தான் ஞாபகம் வந்தது துளசி சகோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! சகோ! நல்ல அம்மா கதாபாத்திரத்தில் பெரும்பாலும் சோகமான அம்மாவாகத்தான்...

      ஸ்ரீராம் சொன்னதும் தான் உரைத்தது ஆமாம்ல காப்பி என்று....மிக்க நன்றி சகோ..தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  10. தனியாவர்த்தனம் படம் நான் மிகவும் ரசித்துப்பார்த்த படங்களில் ஒன்று கவியூர் பொன்னம்மா தமிழில் மனோரமா போன்றவர் நல்லதொரு பகிர்வு
    யாரு வந்து என்ன மாற்றம் வந்து விப்போகிறது என்று நினைத்து ஓட்டுரிமை வாங்குவதில் அசமந்தமாய் இருந்து விட்டாரோ என்னவோ ? உண்மையிலேயே... ஓட்டு போடாததால் சொல்கிறேன் பொன் அம்மாதான்
    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி! அந்தப்படம் அப்படியே மனதைப் பிழிந்து விடும். நல்லதொரு படம்..இயக்குநர் லோகிதாஸின் திரைக்கதையில், சிபிமலையில் இயக்கத்தில்..சிபிமலயில் அருமையான இயக்குநர்....

      ஆமாம் னண்பரே ஓட்டுரிமை பெறாமல் - ஓ நீங்கள் கூட இல்லையா...வெளிநாட்டில் வாழும் நம் மக்கள அனைவருமே அப்படித்தானே..இல்லையோ...

      மிக்க நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  11. பொன்னம்மாவின் பொன்னான வாக்கை முதலில் பெறப் போகும் அதிர்ஷ்டசாலி யாரோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..பார்ப்போம்

      நீக்கு
  12. தனியாவர்த்தனம் இன்னும் மனதிற்குள் நிற்கின்றது..
    தனித்துவமானது - கவியூர் பொன் அம்மா அவர்களின் நடிப்பு...

    பதிவில் அவர்களைப் பற்றிய தகவல் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்!

      நீக்கு
  13. இவரைப்பற்றி இன்றே தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றிகஹ்கோ சசி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்!

      நீக்கு
  14. நானும் தென்றல் சசிகலா சொன்னதயே சொல்கிறேன்.
    இன்று உங்கள் மூலமே இவரைப் பற்றி அறிந்துகொண்டேன்!

    தகவலுக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றிசகோ இளமதி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்!

      நீக்கு
  15. 70 ஆம் வயதில் முதல் வோட்டு...!
    இனியாவது தொடர்ந்து ஓட்டுப் போட்ட்டும்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் கரந்தையாரே தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்!

      நீக்கு
  16. நல்ல அம்மே சினிமாவில், படச்சே .. நாட்டுக்கு நல்லது செய்யலையே இத்தனை வருடங்களாக, இனியாவது செய்வார்கள், செய்துதான் ஆக வேண்டும், படபிடிப்பு குறைத்ததால்; இப்படித்தான், பலருக்கும் பணம் சம்பாத்தித்து ஓய்ந்தபிறகு நாட்டுபற்று உததயமாகுது.

    பகிர்வுக்கு நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹ்ஹ்ஹ் ஆம் நண்பர் கோ. இப்போதுதான் அவர்களுக்கு உரைத்திருக்கின்றது போலும். இதுதான் நமது நாட்டில் பெரும்பான்மையான பலருக்கும் நடக்கின்றது. ஊர் ஊராக, பணி நிமித்தம் செல்லும் பலருக்கும் பட்டியலில் விடுபட்டு விடுகின்றது.

      நல்ல கருத்து மிக்க நன்றி நண்பரே..

      நீக்கு
  17. சும்மாவே சினிமா பத்தின அறிவு ரொம்பக் குறைவு! :) இதிலே மலையாளப்படங்கள் பத்தி எங்கே தெரிஞ்சுக்கறது! முற்றிலும் புதிய செய்தி! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. ஆச்சர்யமாக இருக்கிறது! இப்போதாவது இந்திய குடிமகளாக தம் கடமையை செய்ய உள்ளார் என்பதில் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  19. தனியார்த்தனம்... காணொளி பார்க்கும் போதே மனதில் ஒரு கலக்கம்.... இதே காட்சி நந்தாவிலும்.... :(

    முதல் முறை ஓட்டுப் போடப் போகும் அவருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. 70 வயதில் முதல் வாக்கு!
    வாழ்த்த வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு