ஞாயிறு, 4 அக்டோபர், 2015

சபாஷ்! சரியான போட்டி! வாசகர்க்கான விமரிசனப் போட்டி!

2015 ற்கான நமது வலைப் பதிவர் விழா - விழாக்குழுவினர் அறிவித்த போட்டிகள் முடிவுக்கு வந்த நிலையில், விழாக் குழுவினரால் அடுத்து ஒரு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது! 

http://bloggersmeet2015.blogspot.com/2015/10/10000.html

ஸ்பா இப்பதான் எல்லாரும் தலையைப் பிச்சுக்கிட்டு, இரவு எல்லாம் தூக்கம் தோலைத்து போட்டிகளுக்காகக் கை வலிக்க...கணினியில் தட்டி விட்டுக் கணினியை இன்னும் மூடக் கூட இல்லை அதற்குள் அடுத்து ஒரு போட்டியா!!!! என்று ஆர்வத்துடன் எல்லோரும் எட்டிப்பார்க்கின்றீர்கள் தானே?!!! உங்களுக்காகத்தான்...இந்தப் போட்டியில் பங்கெடுக்க, நீங்கள் வலைப்பதிவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  யார் வேண்டுமானாலும் பங்கெடுத்துக் கொள்ளலாம்.  நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...

Image result for writing competition


இந்தச் சுட்டிக்கு போய் சொடுக்குங்க.  போட்டியில் பங்கெடுத்த படைப்புகள் அனைத்தும் வகை வாரியாக உங்கள் கண்ணில் படும்.  வாசியுங்கள்...வாசித்து விட்டு  உடனேயே “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள்" என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15 பேரைத் தேர்வு செய்ய வேண்டும். முதல் பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் போதும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bloggersmeet2015@gmail.com

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ?  ம்ம்ம் ஹூம் ....அதுதான் .இல்ல...


 நம்ம வலைப்பதிவர்கள் என்ன சும்மாவா...என்ன? 

எல்லாரும் எவ்வளவு கஷ்டப்பட்டு ஆராய்ஞ்சு எழுதியிருக்காங்க...

எல்லோரும் அருமையாக எழுதக் கூடியவர்கள் ஆயிற்றே!....தங்கள் திறமையெல்லாம் வெளிவரும் அளவு, ஒரு சிலர் இரண்டு, மூன்று என்று படைப்புகள் படைத்து, அனைத்தும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனவாம்..........இருப்பதால்......

Related image
இப்படித்தான்...

."யாருக்குக் கொடுப்பது" என்று, நடுவர்கள் இப்போது தங்கள் தராசை அப்படியும் இப்படியும் ஆட்டிக் கொண்டு, தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும் நடுவர்கள் ஆராய்ந்து  வெளியிடும் முடிவுகளுடன், உங்கள் முடிவுகள் ஒத்துப் போனால்...பிடியுங்க உங்க பரிசை!  பரிசு கிடைக்கணும்னா எடுங்க பேனாவை...இல்லை கணினியை திறந்துக்கோங்க வாசியுங்கள் படைப்புகளை!

விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்! (எல்லாப் படைப்புகளையும் பற்றி முழுமையாக விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப்பின் விதிமுறை அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம் பின்னால் உதவும்.)  என்ன நீங்களும் இப்ப இப்படி ஆகிட்டீங்களோ!!!

Image result for writing competition

இப்படி எல்லாம் படைப்புகள் அருமையா இருந்தா யாரைங்க கணிப்பது..ஹஹஹஹ் நல்லா மாட்டிக்கிட்டீங்களா...

நமது தேர்தல்களின் போது, பத்திரிகைகள் நடத்தும் கருத்துக் கணிப்புப் போலவே வைத்துக்கொள்ளலாம். சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை எடுத்து கருத்துச் சொன்னவர்க்கே முதல்பரிசு ரூ.5,000, அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர் முறையே இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என மொத்தப் பரிசுத் தொகை ரூ.10,000 விழாவில் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும். 
போட்டிக்கான விதிமுறைகள் :

(01) யார் வேண்டுமானாலும் இந்த “விமரிசனக் கருத்துப் போட்டி“யில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் (E.Mail), மண்ணஞ்சல் (Postal Address) இரண்டு முகவரிகள் மட்டும் தந்தால் போதும். அதை வெளியிட மாட்டோம். உங்கள் முடிவுகளையும் வெளியிட மாட்டோம். கலந்துகொள்பவர் பெயர்ப் பட்டியல் மட்டும் இதே தளத்தில் தனிப் பெட்டியில் வரிசைப்படுத்தி வெளியிடப்படும். முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொள்வோர் விருப்பப்படி இரண்டில் ஒரு முகவரி மட்டும் வெளியிடப்படும். அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

(02) ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். (ஐந்து போட்டிகளிலும் மூனறு பரிசுக்குரியவர் என்று முடிவுசெய்யப்பட்ட (1) போட்டி வகை, (2) வரிசை எண், (3) பெயர் (4) படைப்புத் தலைப்புகளை இதே வரிசையில் தெரிவித்து பதினைந்து பரிசுக்கும் (5x3=15) தமது முடிவை மின்னஞ்சல் செய்தால் போதுமானது. இதற்கான விளக்கம் விசாரணை எதுவும் தேவையில்லை. 

(03) ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது. 

(04) வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59வரை அனுப்பலாம்.

(05) மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம்.

(06) இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.

(07) விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.

(08) வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம்உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும்.மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல் முகவரி இரண்டும் இல்லாத அனாமதேயப் பங்கேற்பை ஏற்பதற்கில்லை.

(09) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது. 

(10) போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.

பூதக் கண்ணாடி எல்லாம் தேவை இல்லைங்க..நல்லா தெளிவா, அழகா எழுதியிருக்காங்க நம்ம நண்பர்கள் தங்கள் படைப்புகளை...

என்ன !?  இந்த பெங்குவின் சொல்றா மாதிரி...ரகுவரன் பாணில சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா?!!!!  உங்கள் முடிவ? அப்படினா உங்களுக்குத்தாங்க கண்டிப்பா பரிசு.....

தம்பு இங்க வாப்பா....எல்லா நண்பர்களுக்கும் சொல்லிடுப்பா...யார் வேணா பங்கெடுக்கலாம்.......நீயும் கலந்துக்க.....ஆனா...இங்க பாரு... இங்கி பிங்கி பாங்கி எல்லாம் போட்டு முடிவு  எழுதக் கூடாது....புரிஞ்சுச்சா...

எல்லோருக்கும் எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள் வெற்றி பெற....Image result for writing competitionஇன் அட்வான்ஸ்

படங்கள் இணையத்திலிருந்து...
37 கருத்துகள்:

 1. போட்டிக்கு போட்டி புதியவிடயம்.வெல்லும் வாசகருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. மிக்க நன்றி ஸ்ரீராம்!! ஆமாம் பொங்கல் தீபாவளி போல இருக்கோ...!!! பரிசோ பரிசு....எல்லோரும் இப்ப நான் இல்ல நான் இல்ல...அரசே குற்றம் இருப்பின்,பிழை இருப்பின் அதற்கான மதிப்பெண்ணைக் குறைத்தாலும் பரிசுச் தொகையிலும் சற்றுக் குறைத்துக் கொண்டு தாருங்கள் !! என்று குரல்கள் கேட்குது உங்களுக்குக் கேக்குதா....

   நீக்கு
 3. பதில்கள்
  1. கீதா சகோதரி, ம்ம்ம் பரிச அள்ள குரல் கேக்குது பாருங்க...அதான் நண்பர் ஸ்ரீராமுக்குச் சொன்ன அதே குரல்தான்....கேக்குதா உங்களுக்கு...புதுக்கோட்டைக்காரர் உங்கள் அனைவருக்கும் தான் நன்றாகக் கேட்கும் என்று நினைக்கின்றோம்...குறிப்பாக நிலவன் ஐயா அவர்களுக்கு !!! ஹஹஹஹ்

   நீக்கு
 4. அருமையாக தங்களின் படைப்புத்திறனுடன் இணைந்து வெளியிட்ட போட்டிப் பற்றிய அறிவிப்பு அற்புதம். முதல் பரிசு உங்களுக்கே கிடைக்க பாலக்காட்டு மாதவனை வேண்டுகிறேன்!
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ் பாலக்காட்டு மாதவன்!!!! நண்பர் செந்தில்....நாங்கள் கலந்து கொள்ளவில்லை. வெற்றி பெறுபவர்களைப் பார்த்து மகிழ்வுடன் வாழ்த்துவோம்....

   மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 5. நாலெழுத்துப் பெயருடனே
  வானத்திலே வலம் வரும்
  வட்டமிகு ஒளி உடையாள்
  காற்றாகி வீசுமிவள்
  ஆற்றல் எல்லாம் அறிந்ததொன்றே !!

  வெல்ல இவர் போட்டியினில் நா
  வல்லி யுமே துணை நிற்பார்.
  சொல்லிடுக பெயர் என்றால்,
  செய்வேன் என்?

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாத்தா அசத்திட்டீங்க போங்க!!! உங்கள் வாழ்த்துகள் இருக்க கலந்து கொள்பவர்கள் தைரியமாகக் கலந்து கொண்டுவிடுவார்கள்...மிக்க நன்றி தாத்தா...

   நீக்கு
 6. நீங்க சரியா விமர்சனம் செய்விங்க எழுதுங்க.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை சகோதரி! கலந்து கொள்ளவில்லை....நிறைய பேர் இருக்கின்றார்களே இதில் கலந்து கொள்ள மட்டுமல்ல வலைப்பக்கத்தில் இல்லாதவர்களுக்கும் வலைப் பக்கம் வருவதற்கு ஒரு ஊக்கமாக இருக்கும் இல்லையா...அதான்...

   நீக்கு
 7. எப்படியெல்லாம் யோசித்துச் செய்கிறார்கள்
  ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்
  விழாவில் சந்திப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரமணி சார்! ஆமாம் மிகவும் யோசித்துச் செய்கின்றார்கள் எல்லாமே...குழு அமைத்து...நல்ல திட்டமிடல் எனலாம்...

   விழாவில் சந்திப்போம் !

   நீக்கு
 8. வலைப் பதிவர் அல்லாதவர்களைக் குறி வைத்தே இப்போட்டி போல் இருக்கிறது. ஆனால் வலைப் பதிவர் அல்லாதார் இந்தப் பதிவுகளை வாசிக்கும் வாய்ப்புதான் என்ன.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கேள்வி! வலைப்பக்கம் எல்லோரும் வருகை தந்தால் நல்லது என்றும், முன்பு வலையில் இருந்தவர்கள் இப்போது காணாமல் போனவர்களும் உண்டு அல்லவா அவர்களுக்கும் ஒரு ஊக்கம் அளிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்...சார்..

   மிக்க நன்றி சார்

   நீக்கு
 9. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
  காண்க : இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி டிடி! உடனுக்குடன் சேவை செய்து உழைக்கும் உங்கள் பணி மிகவும் சீரியது! போற்றுதற்குரியது டிடி!! வாழ்த்துகள்!

   நீக்கு
 10. பதில்கள்
  1. மிக்க நன்றி ஜோஜிஜி! வெற்றி பெறுபவர்களுக்கு வாழ்த்துகள்!

   நீக்கு
 11. சிறக்கட்டும் பதிவர்விழா!
  அனைத்து முயற்சிகளும் பிரமிக்க வைக்கின்றன!

  வாழ்த்துக்கள்!

  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி இளமதி! தங்களின் வாழ்த்திற்கு!

   நீக்கு
 12. போட்டி மேல் போட்டி - அடுத்தது
  வாசகருக்கான விமரிசனப் போட்டி!
  வெற்றியாளரைத் தெரிவு செய்ய
  வாசகர் படையணி புறப்படட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன் அவர்களே !

   நீக்கு
 13. புதுகை பதிவர்களின் சுறுசுறுப்போடு போட்டிப்போட முடியவே இல்லை! தினம் தினம் அசத்துகின்றனர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சுரேஷ் ஆமாம் ரொம்பவே அசத்துகின்றனர்! சொல்லி மாளாதுதான்!

   நீக்கு
 14. நானும் கலந்துக்கலாமா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ்! சகோ! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் போதுமா கில்லர்ஜி!?

   நீக்கு
 15. போட்டிக்கு போட்டி
  புதுகை வலைப் பதிவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே! கரந்தையாரே! உண்மைதான்...மிக்க நன்றி

   நீக்கு
 16. //இங்கி பிங்கி பாங்கி எல்லாம் போட்டு முடிவு எழுதக் கூடாது....புரிஞ்சுச்சா...//
  சேச்சே!அந்த மாதிரி சின்னப் பிள்ளைத்தனம் பண்ண மாட்டோம்!
  பெரிய மனுஷங்களா லட்சணமா சீட்டுக் குலுக்கிப் பாத்துடுவோம்! :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிரிச்சு.. சிரிச்சு.. வயிறு வலிச்சு..!

   நீக்கு
  2. ஹஹஹஹஹ் செம செபி சார்!!!! சிரிச்சு மாளலை!!! ரொமப்வே ரசித்தோம்...

   நீக்கு
 17. சபாஷ்! சரியான போட்டி! வாசகர்க்கான விமரிசனப் போட்டி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் போட்டோ போட்டிகள் பரிசுகள் புதுகையார்கள் அசத்துகிறார்கள்! மிக்க நன்றி வலிப்போக்கன்...

   நீக்கு
 18. வணக்கம்
  பரிசு மழையில் நனைகிறார்கள் நம் பதிவர்கள்.. மகிழ்ச்சி.. மகிழ்ச்சி...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு