செவ்வாய், 6 அக்டோபர், 2015

புலியென புறப்பட்டு வா! சிங்கமென சீறி வா!

(இந்தப் பதிவின் தலைப்பு, விழாவிற்கான வலைத்தளத்தில், அழைப்பில் திரு முத்துநிலவன் ஐயா அவர்கள் குறிப்பிட்டுருந்ததிலிருந்து.  நன்றி ஐயா!)

தில்லி விலங்கியல் பூங்கா. அந்தப் புலியார் அவ்வப்பொது அமர்ந்தும் மீண்டும் நடையோ நடை நடந்தும் கொண்டிருந்தார். ஏதோ ஒரு மன உளைச்சல். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா புலியார்,

“விஜய்! எப்பவும் துள்ளிக்கிட்டுருப்ப. உனக்கு என்னாச்சு இன்னைக்கு? என்ன டென்ஷன்? இந்த நடை நடந்துக்கிட்டிருக்க?”

“ம்ம் ஒண்ணும் இல்லைம்மா...”

“இல்ல ஏதோ இருக்கு....ஒண்ணும் இல்லைனா அப்போ உன் உதட்டுல ஏதோ ரத்தக்கறை தெரியுதே...எனக்குத் தெரியாம உனக்கு என்ன ஸ்பெஷல் சாப்பாடு வைச்சாங்க??  இல்லை நீ ஏதாவது அடிச்சுட்டியா”

விஜய் புலியார் நாவினால் தன் வாயைத் தடவிக் கொண்டார். “ஓ அந்த மனுஷனோட ரத்தம் எப்படியோ ஒட்டியிருந்துருக்கு. அதான் அம்மாகிட்ட மாட்டிக்கிட்டோம்.

“ம்ம்ம் இன்னிக்கு வந்த விசிட்டர்ஸ்ல ஒரு மனுஷன் சுவர் தாண்டி உள்ள வந்துட்டாரு. நான் அவர் கிட்ட போய் சும்மாதான் நின்னுக்கிட்டிருந்தேன். இதுவரை மனுஷங்க யாரையும் இவ்வளவு கிட்ட பார்த்ததே இல்லையா...ஹை விளையாடலாம்னு நினைச்சென்.  மேல வேடிக்கைப் பார்த்துட்டுருந்த மனுஷங்க, என் மேல கல்லெல்லாம் விட்டெறிஞ்சாங்க. மூங்கில் கட்டைய எறிஞ்சாங்க.  கத்திக் கூச்சல் போட்டாங்க. நான் அதெல்லாம் அவர் மேல பட்டுறக் கூடாதுன்னு அவர் கழுத்தப் பிடிச்சு - அப்படித்தானே நாம எதையுமே தூக்குவோம் - அப்படித்தான் தூக்கிட்டு வந்து இங்க காட்டுல போட்டேன்.  எப்படியும் டாக்டர் வருவாங்க, அவங்க வந்து அவனக் கூட்டிட்டு போய்டுவாங்கனு. ஆனா, என் பல்லு பட்டு அவர் செத்துட்டார் போல.  நான் கொல்லணும்னு நினைக்கவே இல்லைம்மா.  அதான் ஒரே கவலையா இருக்கும்மா.”

“அதான் விஷயமா... டாக்டர் வந்தப்பவே........நான் நினைச்சேன் ஏதோ பிரச்சனைனு.........அந்த மனுஷன் உள்ள விழுந்ததுமே ஏன் அவங்க முன்னாடியே வந்து உனக்கு மயக்க ஊசி போட்டு அந்த மனுஷனக் காப்பாத்திருக்கலாமே...இப்ப பாரு உனக்கு ஏதாவது ஆயிருச்சுனா?”

“நீ சும்மா இருக்கியா. இவனுக்கு எதுக்கு மயக்க ஊசி போடணும்? மயக்க ஊசி போட்டாலும் ஒரு 15 நிமிஷமாவது ஆகும் இவன் மயங்க. அந்த மனுஷன் உள்ள இறங்காம பாத்துக்கிட்டுருக்கலாம்ல பாதுகாப்பு காவலாளி? நல்ல காலம் மயக்க ஊசி போடலை...விஜய் பாவம்.” - அப்பா புலியார்

“உங்க சித்தப்பன் ஒருத்தர் கேரளாவுல காட்டுல இருக்காரே அவர் கூட இப்படித்தான் சமீபத்துல ஒரு ஆள அடிச்சுட்டதா அங்க இருக்கற துளசினு ஒருத்தர் அதப்பத்தி எழுதினாருன்னும் சொல்லிக்கிட்டாங்க”

“யேய் என்ன ஓவரா உறுமல்? ஏன் உங்க அண்ணனும் அந்தக் காட்டுலதான் இருக்கார். அவரும்தான் ஒரு ஆளைக் கொன்னாரு....ம்ம் இதுக்குத்தான் காட்டுல இருக்கணுன்றது. விஜயாவது காட்டுல இருந்துருக்கலாம். நம்மள இப்படி இங்க அடைச்சு வைச்சு பழசாப் போன சாப்பாட்ட போடறாங்க.  காட்டுல இருந்தா ஃப்ரெஷ்ஷா சாப்பிடலாம். அதுல வேற இவங்களுக்குக் காட்சிப் பொருள் மாதிரி. என்ன வாழ்க்கையோ இது”

“ஏன் இங்க என்ன குறைச்சல். நல்லாத்தானே போயிட்டுருக்கு?  ஹும்!  விஜய்! அப்பா சொல்றத கேக்காத.  நீ சின்னப் புள்ள. உனக்குத் தெரியாது. காட்டுல இருந்தா நாம யாரையாவது அடிச்சுருவோம், அடிச்சா நம்மள சுட்டே கூட கொன்னுடுவாங்க. இப்படித்தான் பல மாசம் முன்னாடி என் மாமாவைச் சுட்டாங்க. அதுக்கு இங்க நாம பாதுகாப்பாதானே இருக்கோம்?! வேளா வேளைக்குச் சாப்பாடு.....அப்புறம் என்ன?”

“எனக்குக் காட்டுலதான் இருக்க பிடிக்குது.  சுதந்திரம் வேணும்.  மனுஷங்க மட்டும் சுதந்திரம் வேணும்னு சொல்றதில்லையா?  அது மாதிரிதான். விஜயாவது காட்டுல வளரணும்னு நினைச்சேன்” அப்பா புலியார்.

“இந்த துளசின்றவரு வேற உன் சித்தப்பன பத்தியும் என் அண்ணனப் பத்தியும் எழுதப் போக, இப்ப விஜய் பத்தியும் செய்தி போயாச்சு. நரியார் தானே நமக்கெல்லாம் பிஆர்ஓ! அவரு நியூஸ் கொடுத்துருக்காரு....இந்த மாதிரி கேரளக் காடு அப்புறம் தமிழ்நாட்டுக் காட்டுல புலியார்கள் காட்டை விட்டு வெளிய போய் கிராமங்கள்ல இருக்கறவங்களை எல்லாம் கொல்லுறாங்க, ஆட்டை அடிக்கறாங்க, மாட்டைக் கொல்லறாங்க அப்படினு... இப்ப என்னன்னா அங்க காட்டுல சிங்க ராஜா ஒரு மீட்டிங்க் போட்டுருக்காராம்...”

“சரி போட்டு என்ன ப்ரயோசனம். நாமதான் போக முடியாதே.  இதுக்குத்தான் நாம காட்டுக்குள்ள இருக்கணும்றது. அப்படி என்ன பேசப் போறாரு? அவருக்கே வயசாச்சு.  வேட்டைக்குப் போக முடியல. அதனால, “நீங்களும் காட்டை விட்டு வெளில போயி ஊருக்குள்ள அட்டகாசம் பண்ணி நம்ம பெயரைக் கெடுக்காதீங்கனு” அறிவுரை வழங்குவாரு.  ஹும்...நம்ம இடம் நம்ம கிட்ட இருந்தா நாம எதுக்கு ஊருக்குள்ள போகப் போறோம்? இங்க பாரு அதான் நம்மள இங்க பிடிச்சு அடைச்சுப் போட்டுட்டாங்க”

“எப்ப பாரு காடு காடுனு.  என்னவோ பெரிசா காடு இருக்கற மாதிரி.  அது எல்லாம் குறையறதுனாலதானே நம்ம சனங்க நாட்டுக்குள்ள போறாங்க. போனா மனுசங்க சும்மாவா இருக்காங்க கொன்னுடுறாங்களே. எனக்கு இங்கதான் பிடிச்சுருக்கு. இங்கதான் பாதுகாப்பு”

“நாறுது.......இதப் போயி பிடிச்சுருக்குன்னு......உவ்வே. விஜய்! உனக்குக் காடு பிடிச்சுருக்கா? இல்ல இந்த இடமா?”

“என்னப்பா?  காடா?  அப்படின்னா?”

“ஓ! இவன் இங்க பொறந்தவன் இல்ல...ம்ம்ம்ம் பாரு என் அருமை மனைவியாரே! நம்ம புள்ளைக்கு நம்ம பூர்வீகமே தெரியல. பூர்வீகத்தைக் காமிக்கவாவது வேண்டாமா சொல்லு. இங்க அவனுக்கு அப்பப்ப ஊசி போட்டு, அடிச்சு வேட்டையாட பயிற்சி வேற. மனுஷங்க எதுக்கு நமக்குப் பயிற்சி கொடுக்கணும் சொல்லு? காட்டுல இருந்துருந்தா காட்டுல மரம் ஏறுறது, தண்ணில நீஞ்சறது, தன் சாப்பாட்டைத் தானே அடிக்கறது இப்படி எல்லாம் அவனுக்கு நம்ம பரம்பரை குணம், செயல் எல்லாம் இயற்கையாவே வந்துருக்கும்ல. ம்ம் விஜய் பாவம்”

“அதெல்லாம் வேண்டாம்.  அவன் இங்கயே இருக்கட்டும்.  பாதுகாப்பா இருக்கான்.”

அப்போது அங்கு விலங்கியல் டாக்டர் வந்து விஜயை மயக்க நிலைக்குக் கொண்டு போய் கூண்டுக்குள் அடைத்துவிட......அப்பா புலியார் தொடர்கின்றார்

“இல்லை. இங்க வரவங்க  விஜய பாக்கறதுக்குன்னே நிறைய பேரு வராங்க.  ஆனா என்னென்னவோ பேசி கேலி பண்ணறாங்க. ஏதேதோ விட்டு எறியராங்க. நம்ம அமைதிய கெடுக்கறாங்க கூச்சல் போட்டு.  நிறைய சமயத்துல ரொம்பக் கோபமா வருது.  இப்ப பாரு விஜய தனியா கூண்டுக்குள்ள அடைச்சுப் போட்டுருக்காங்க.  டாக்டர் அவன் எப்படி இருக்கானு பாத்துக்கிட்டே இருக்காங்க. அவன்கிட்ட ஏதாவது மாத்தம் இருக்கா? நல்லாருக்கானானு...”

“நல்லதுதானே....”

“இல்ல.  இங்க நமக்கு எப்பவும் மாடு இறைச்சி, எருமை இறைச்சி இதெல்லாம் தான் தருவாங்க இல்லையா? மனுஷன் ரத்தம் நமக்குத் தெரியாது.  விஜய்க்கும் புதுசுதான். அவன் அந்த மனுஷன அடிக்கலை......சாப்பிடலைதான். ஆனா, அவன் வாயில, பல்லுல ரத்தம் பட்டுருக்குல்ல. அதான் எனக்குக் கவலையா இருக்கு.”

இப்படியாக ஒரு மூன்று நாட்கள் கடந்தது.  திடீரென்று அம்மா புலியார்,

“ஐயோ இங்கப் பாரேன்....இப்ப அந்தக் கூண்டுல நம்ம விஜய் இல்லையாம்.  அதுல இருக்கறது வேற ஒரு புலியார் ராணினு பேராம்.  ஐயோ..”

“ஐயையோ!  அப்போ நம்ம விஜய் என்னானான்?  போய்ட்டானோ?  இல்ல வேற பூங்காவுக்கு மாத்திட்டாங்களோ? என்னாயிருக்கும்னு தெரியலையே...யாராவது பேசிக்கறாங்களானு பாரு...எனக்கு செய்தி சொல்லு..”  நாட்கள் கடந்தன...

“கேக்கற செய்திய நம்பறதானு தெரில....அவன் இறந்துட்டான்னும் சொல்லிக்கறாங்க...”

“அடப்பாவி!”

தொடரும்...

(பின் குறிப்பு:  நாளை தலைப்பிற்கும், இந்தப் பதிவிற்கும் உள்ள தொடர்புப் பதிவு)

கீதா

41 கருத்துகள்:

 1. அந்த புலி பதிவர் விழாவிற்கு போகத்தான் தப்பிடுத்தோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ நாளைக்கு வாங்க தெரியும்....விஜய் பாவம் அது இறந்து விட்டதாகத்தான் சொனார்கள் தில்லிப் பூங்காவில் நாங்கள் சமீபத்தில் சென்றிருந்த போது. ஆனால் நம்ப முடியவில்லை...செய்தி இல்லாததால்

   நீக்கு
 2. //ஹும்...நம்ம இடம் நம்ம கிட்ட இருந்தா நாம எதுக்கு ஊருக்குள்ள போகப் போறோம் ///

  புலிக்கு வாயிருந்தா ஐ மீன் பேசும் சக்தி இருந்தா இப்படிதான் பேசியிருக்கும் ..
  புலி talks கீதாக்கா rocks :) ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! நன்றி ஏஞ்சல்!!! சத்தியமா பாவம்க நாலுகால் செல்லங்கள் எல்லாம்...அவங்க இடம் பறி போய்க்கிட்டே இருக்கே,,..

   நீக்கு
 3. <<<>>
  இது மாதிரி கூவி கூவித்தான் நம்மளை ஒழித்தார்கள். அது சரி புலி என் புறப்பட்டு வான்ன என்ன அர்த்தம் அய்யா! சரி! புலி எப்படி புறப்படும் என்று யாரும் பள்ளியில் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை...கூடவே கொஞ்சம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  புலியென புறப்பட்டு வா! சிங்கமென சீறி வா
  .
  பசு போல அசைந்து வா!
  பாம்பென படமெடுத்து வா!
  குரங்கு போல் சொரிந்து வா!
  குதிரை மாதிரி கனைத்து வா!
  யானை போல பிளிறிகிட்டு வா!
  கழுதை போல உதைத்து கொண்டு வா!
  பல்லி போல் ஒட்டிக்கிட்டு வா!
  பறவை போல பறந்து வா!
  நாய் போல ஒரு காலைத் தூக்கி வா!
  ஆனால்......என்ன ஆனால்?
  ஆனால், பதிவர் கூடத்திற்கு, எக்காரனத்தைக் கொண்டும்...
  மனிதன் மாதிரி வராதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பே தமிழ் ஐயா! உங்கள் கருத்து புரியவில்லை! எங்கள் பதிவு நீங்கள் சொல்லும் கருத்து ஒட்டியது இல்லை என்பது மட்டும் தெரிகின்றது.

   மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 4. பதில்கள்
  1. மிக்க நன்றி கரந்தையார் சகோ தாங்கள் ரசித்தமைக்கு..

   கீதா

   நீக்கு
 5. தில்லி உயிரியல் பூங்கா நிகழ்வு - பாவம் அந்த மனிதனும். அதை விடப் பாவம் கூண்டில் அடைபட்ட புலி.....

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் வெங்கட்ஜி! அந்த மனிதரும் பாவம். காவலாளிகள் அங்கு இருந்திருக்கலாம் இல்லை மக்கள் யாரேனும் அவரைத் தடுத்து இழுத்தாவது போட்டிருக்கலாமோ ..கூண்டுக்குள்ள அடைபட்ட விஜய் என்னானான் என்று தெரியவில்லை ஜி...

   நீக்கு
 6. உத்வேகமிக்க வரிகள்
  சில நேரங்களில் உபத்திரத்தை தரும் போல் உள்ளதே?
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! உபத்திரவம்? என்ன உபத்திரவம் ஐயா? புரியவில்லை....

   நீக்கு
 7. உண்மைதான் புலிக்குடும்பம் பேசியது...மனிதனால் இயற்கைக்கும் உயிரினகளுக்கும் எவ்வளவு கேடு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதா..... உண்மைதான்..மிக்க நன்றி கீதா..தங்கள் அயராத பணிகளுக்கிடையிலும் கருத்திட்டமைக்கு...

   கீதா

   நீக்கு
 8. இருக்கும் இடத்தில் எல்லாம் இருந்தால் எல்லாம் சௌக்கயமே... கண்ணதாசன் வரிகளை நினைவுபடுத்திச்சென்ற பகிர்வுக்கு நன்றிங்க. அருமையான எழுத்து நடை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சசி! சரிதான்....ஆனா பாருங்க அவங்க இடத்தை நாம பறிச்சுக்கிட்டோம்னா அவங்க என்ன பண்ணுவாங்க...அதான் விபரீதம்

   மிக்க நன்றி சசி!

   கீதா

   நீக்கு
 9. எதையோ சொல்ல தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! முயற்சிக்கின்றேன் சார்....நான் எதை எழுத நினைத்தாலும் பெரிதாகி விடுகின்றது...சுருக்க நினைத்தாலும் பல சமயங்களில் முடிவதில்லை....முயற்சிக்கின்றேன் சார்.

   மிக்க நன்றி

   நீக்கு
 10. புலிக்குடும்பக் கதை அருமை!
  தொடருங்கள்!..

  பதிலளிநீக்கு
 11. நடையால் ரசிக்க வைத்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா !!தங்களின் பாராட்டிற்கு..

   கீதா

   நீக்கு
 12. பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ அபயா அருணா....தங்களின் பாராட்டிற்கு...

   கீதா

   நீக்கு
 13. அருமை, வனம் வார விழாவா? பதிவர் வார வழாவா?
  ம்ம்,,,,
  வாழ்த்துக்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ் ரெண்டுமே இருக்குமோ....மிக்க நன்றி சகோ மஹேஸ்வரி...

   கீதா

   நீக்கு
 14. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 15. முத்து நிலவன் அவர்களின் ஒரு வரியைக் கொண்டே இவ்வளவு நீள பதிவா ?அருமை !
  தொடர்பை தெரிந்து கொள்ள ஆவலோடு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ் நமக்குச் சுருக்கத் தெரியலைங்கோ.....என்ன செய்ய ஜி!!!

   மிக்க நன்றி பகவான்ஜி!

   கீதா

   நீக்கு
 16. புலியின் வாழ்க்கை மட்டுமல்ல சிறைச்சாலையில் நாம் அடைத்து வைத்திருக்கும் அனைத்து 5 அறிவுகளுக்கும் இதே பிரட்சினை உள்ளது அவைகளின் இடத்தில் அவைகளும் நமது இடத்தில் நாமும் வாழ்ந்தால் எல்லாம் சௌக்கியமே...
  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறைச்சாலையில் 5 அறிவுகள்???!!!!! ஓ விலங்கியல் பூங்காவைத்தானே சொல்கின்றீர்கள் ஜி?!! உண்மைதான் புலிகள் மட்டுமல்ல அதான் அது சொல்லுதே...நம்ம மக்கள் அப்படினு...எல்லா நாலுகால்களும் அதில் அடக்கம்...அவற்றிற்கு அது சிறைச்சாலைதான் ஜி...நாளை பாருங்க...

   கீதா

   நீக்கு
 17. புலிக்கு ஏன் விஜய்னு பேர் வச்சீங்க!
  சுவாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
 18. வித்தியாசமாய் சுவாரஸ்யமாக இருக்கிறது! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
 19. ஹ்ம்ம் விலங்குகள் பேசினால் மனிதன் எப்படிப்பட்ட விலங்கு என்று தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்..
  அருமை அண்ணா..அடுத்தப் பகுதிக்குப் போகிறேன்

  பதிலளிநீக்கு
 20. //ஹும்...நம்ம இடம் நம்ம கிட்ட இருந்தா நாம எதுக்கு ஊருக்குள்ள போகப் போறோம்? இங்க பாரு அதான் நம்மள இங்க பிடிச்சு அடைச்சுப் போட்டுட்டாங்க”//

  உண்மைதானே, அவங்க இடத்திலே நாம போய் ஆக்கிரமிப்புச் செய்தா என்ன தான் செய்வாங்க! :( நிஜம்மாவே அந்தப் புலியார் இறந்துட்டாராமா? பாவமே!

  பதிலளிநீக்கு
 21. வணக்கம்
  அண்ணா.

  சொல்லிய விதமும் அழைத்த விதமும் சிறப்பு... வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு