வியாழன், 15 அக்டோபர், 2015

குடந்தை ஆர் வி சரவணனின் “அகம் புறம்” குறும்படத்தின் புறம்

படத்தின் முதன்மையான கதாபாத்திரம் - ஹும் என்னை யாருமே கண்டுக்கிடலை...ஓல்ட் இஸ் கோல்டு??!!!

     நம் பதிவர் நண்பர் குடந்தை ஆர் வி சரவணன் அவர்களது கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பில் வெளிவர இருக்கும் இரண்டாவது குறும்படம் தான் அகம் புறம். 

Displaying vlcsnap-2015-10-08-21h11m07s514.png
ஸ்ரீதர் (டைரக்டரின் தம்பி), ஆரூர்மூனா - யப்பா இன்னா இஸ்டைலு, பில்டப்பு!

     இப்படத்தின் கதையை நண்பர் எழுதி பல மாதங்களுக்கு முன் அனுப்ப அதில் உள்ள லாஜிக் எல்லாம் பேசப்பட்டு மெருகேற்றப்பட்டு, கதைக் களமான வீடு, அதுவும் வீடு என்றால், அது பல சாதாரணக் குடும்பங்கள் குடியிருக்கும் ஒரு குடியிருப்பு போன்ற அமைப்பு தேவைப்பட்டதால், தேடல் படலம் ஆரம்பித்து, நண்பர் சரவணன் அவர்களின் நண்பரின் வீடு அதற்கு ஏற்ப அமையும் என்று இயக்குநர் நினைத்ததால் இயக்குநருடன், ஆவி, அரசன், கீதா சென்று பார்த்தனர். வீடு ஓகே.  (நண்பர் வீட்டில் விருந்தோம்பல் வித் பொங்கல், சாம்பார், சட்னி, டீ, காஃபி என்று அதகளம்.) நண்பருக்கும் எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்!

Displaying vlcsnap-2015-10-08-21h09m45s024.png
கார்த்திக் (ஆவியின் தம்பி), துளசி, கார்த்திக் சரவணன் - 3 பேரும் ஏதோ திட்டம் தீட்டுறாங்களோ!?

எங்கு கோணங்கள் வைக்க வேண்டும் எப்படி வைக்க வேண்டும் என்று ஆலோசனை செய்து முடிவு செய்யப்பட்டது.  ஏனென்றால் அது ஒரு தனி வீடு ஆனால் அதில் அமைந்த 3 தளங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. ஒவ்வொரு தளத்திலும் உள்ள வீட்டிற்கு படிகள் எறித்தான் செல்ல வேண்டும். மட்டுமல்ல மிகவும் பழைய வீடு, படிக்கட்டுகள் எல்லாமே மிகவும் குறுகியவை. ஏறுவதற்கு மட்டுமே இடம். நிற்பதற்கு இடம் மிக மிகக் குறைவு. ஒருவர் நின்றாலே கோணம் வைப்பது கடினம்.  அப்படி இருக்க இரண்டு, மூன்று கதா பாத்திரங்கள் ஒரு ஃப்ரேமுக்குள் வர வேண்டுமே, அதை எப்படி அமைப்பது என்று கலந்துரையாடி முடிவு செய்யபட்டு, எங்கள் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் அஸ்வினையும் அழைத்து வீட்டைக் காட்டி, கதையைச் சொல்லி, கோணம் எல்லாம் சரி வருமா என்று கலந்துரையாடி முடிவு செய்தார் இயக்குநர்.
Displaying vlcsnap-2015-10-08-21h07m05s428.png
துளசி அப்படி என்ன சொல்லுறாரு கார்த்திக் சரவணன்கிட்ட? கார்த்திக் ஏன் இப்படிப் பாக்குறாரு..
வீடு மிகவும் நெருக்கமாக இருப்பதால், வெளிச்சம் பத்தாது என்பதால் விளக்குகள் வாடகைக்கு எடுக்க வேண்டி வரும் என்று அஸ்வின் சொல்ல, அதுவும் முடிவு செய்யப்பட்டது. அவருடனும் கலந்துரையாடி, அதற்கான ஏற்பாடுகள் தொடங்க நினைத்த போது சிறிய தடங்கல் ஏற்பட்டுத் தள்ளி வைக்கப்பட்டது.  மாதங்கள் உருண்டோடின.

     பின்னர், சில மாதங்களுக்கு முன் அதை இயக்கலாம் என்று முடிவு செய்த நண்பர் சரவணன் அதில் பங்கு பெற்ற எல்லோரது வசதியையும் கேட்டுப் படப்பிடிப்பிற்கான தேதி முடிவு செய்ய தொடர்பு கொண்டார். குறிப்பாக வெளியூரிலிருந்து வர வேண்டிய துளசி அவரது மனைவி இவர்களின் தேதி (கால்ஷீட்!!!!!!) வசதியாக இருக்க வேண்டுமே! இருவரும் ஆசிரியர்கள். சுதந்திரதின நாள் வசதியாக சனிக் கிழமை என்று ஆனதால், ஆகஸ்ட் 15, 16 என்று முடிவு செய்யப்பட்டது.

Displaying vlcsnap-2015-10-08-21h12m13s137.png
அரசன் எதுக்குப்பா கத்திய வைச்சுருக்காரு....படம் பார்த்தா தெரிஞ்சுட்டுப் போகுது!!

     அதன் பின் எங்கள் ஒளிப்பதிவாளர் அஸ்வினைத் தொடர்பு கொண்டால், தான் ஒரு வேலையில் சேரப் போவதாகவும், அந்த வேலையைப் பொறுத்து, உறுதிப்படுத்த அவகாசம் தேவை எனவும் இயக்குநரும் நாங்களும் என்ன செய்ய என்று தெரியாமல், அஸ்வினையும் விட மனதில்லாமல் காத்திருந்தோம். இறுதியில் அவர் உறுதி அளித்துவிட்டார்.

Displaying vlcsnap-2015-10-08-21h14m51s131.png
கோகுல், இயக்குநரின் மகன் ஹர்ஷா (வளர்ந்து வரும் மிகத் திறமையான படத்தொகுப்பாளர்)

     திரைக்கதையை, இயக்குநர், “திரைக்கதை எழுதுவது எப்படி” என்று தொடர் பதிவு இடும் நம் பதிவர் நண்பர் செங்கோவி அவர்களுக்கு அனுப்பி அவருடன் கலந்துரையாடினார். எங்கள் குழுவின் சார்பில் அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்! அதனைப் பற்றிய முழுவிவரமும் இயக்குநர் தனது அனுபவப் பதிவில் பகிர்ந்து கொள்வார்.

Displaying vlcsnap-2015-09-03-14h25m53s447.png
வாத்தியார் பாலகணேஷ்...
குடந்தை ஆர் வி சரவணன் - இயக்குநரின் இயக்கம்

     வீடு மிகவும் குறுகிய தளத்துடன் இருந்தமையால், எல்லோரும் குழுமினால் ஃப்ரேம் வைப்பதுக் கடினம் என்பதால், நடிக்கும் கதாபாத்திரங்களை அந்தந்த ஷாட்கள் வரும் நேரத்திற்கு சற்று முன் வந்தால் போதும் என்று தீர்மானித்து, ஒவ்வொரு சீனுக்கான நேரமும் திட்டமிடப்பட்டது.  திட்டமிட்டபடி நடத்த இயலவில்லை என்பது வேறு விஷயம். துளசி, கார்த்திக் சரவணன், அரசன் இவர்கள் மூவரும் படம் முழுவதும் வரும் கதாபாத்திரங்கள்.

     எல்லாம் முடிவாகி, சுபதினமும் வந்தது. துளசியும் அவரது மனைவியும் கீதாவின் வீட்டில் தங்கினார்கள். மற்றவர்கள் எல்லோரும் சென்னைதானே! “ஆவி”?ஆவி கோயம்புத்தூரிலும் இருப்பார் சென்னையிலும் இருப்பார். கவலை இல்லை. அப்படியாக முதல் நாள் படப்பிடிப்பு சுதந்திர தினத்தன்று காலை 9 மணிக்கு முன் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு முடிந்தது.  

      அன்று சிறுவர்கள் வரும் காட்சிகளும், துளசி, அவரது மனைவி வரும் காட்சிகளும், கார்த்திக் சரவணன், ஆவியின் தம்பி கார்த்திக், ஆரூர்மூனா அவர்களும், குடந்தை சரவணனின் தம்பி ஸ்ரீதர் இவர்களுடன் துளசியுடனான காட்சிகளும் படமாக்கப்பட்டன. மறு நாள் காலை, ஞாயிற்றுக் கிழமை, வாத்தியார், அரசன், ஆவி, இவர்களுடன் துளசியுடனான காட்சிகளும், சிறுவர்களின் காட்சிகளும் என்று படப்பிடிப்பு மாலை 3 மணிக்கு முடிவடைந்தது.  

Displaying vlcsnap-2015-10-08-21h05m55s878.png
கார்த்திக் என்னாச்சுப்பா?  இப்படிப் பேயறைஞ்சாப்புல பாக்குறீங்க?!!

    பின்னர் டப்பிங்க் சென்னையில் நடைபெற்றது.  இயக்குநர் சரவணனும், கீதாவும் பாலக்காட்டிற்குப் பயணப்பட்டு துளசியின் வசனங்களைப் பதிந்து வந்தனர். தற்போது படத் தொகுப்பின் இறுதிக் கட்ட வேலைகள் ஒரு புறமும், படத்திற்கான இசை மறு புறமும் நடந்து கொண்டிருக்க, எல்லாம் முடிந்து முன்னோட்டக் காட்சி விரைவில் சென்னையில் நடை பெற உள்ளது. டீசர் வரும் வெள்ளி அன்று வெளியிடப்படும்.

     சரி இவ்வளவு சொல்றீங்களே கதை என்ன? ஒரு வரியேனும் சொல்லக் கூடாதனு நீங்கள் கேட்பது இங்கு வரை கேட்கின்றது.  மூச்! ஒரு வரிய சொல்லிட்டா அப்புறம் கதையே தெரிஞ்சா மாதிரி...என்னங்க அவசரம்? அதான் அது யுட்யூப்ல வரப் போகுதே விரைவில்! ட்ரெய்லர் நாளை 16.10.2015 முகநூலில் பகிரப்படும். 

     இக்குறும்படம் நல்ல அனுபவம்.  ஏனென்றால் குறுகிய படப்பிடிப்புத் தளத்தில் எப்படி எடுக்க வேண்டும் என்று சவாலாக அமைந்து பாடத்தைப் புகட்டிய படம் எனலாம். 

             படம் வெளியானதும் பார்த்து உங்களது அகத்தில் எழும் நேர்மையான விமர்சனங்களைப் புறத்தில் தெரிவிக்கவும் என்று கேட்டுக் கொள்கின்றோம். உங்கள் எல்லோரது ஆதரவிற்கும் மிக்க மிக்க நன்றி!!

23 கருத்துகள்:

 1. வணக்கம் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி படம் வெற்றி பெற எமது வாழ்த்துகள்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர்ஜி வருகைக்கும் வாழ்த்திற்கும்.

   நீக்கு
 2. ஆஹா..! தங்களின் பதிவு கண்டதுமே எப்போ படம் றிலீஸ் ஆகும்
  காண வேண்டுமே என ஆவல் பெருகிவிட்டது..

  கண்டிப்பாகப் பார்த்துக் கருத்திடுவேன் சகோதரரே!
  இத்தனை பேரின் உழைப்பு நிச்சயம் வெற்றியைத் தேடித்தரும்!
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ இளமதி! வருகைக்கும் வாழ்த்திற்கும்.

   நீக்கு
 3. காத்திருக்கிறோம். படங்களுடன் எழுதியிருக்கும் அனுபவம் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்க வைத்திருக்கிறது. அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஸ்ரீராம் வருகைக்கும் வாழ்த்திற்கும்

   நீக்கு
 4. நவராத்திரி சரஸ்வதி பூஜை அன்னிக்குள்ள்
  படம் ரிலீஸ் பண்ணி,
  எங்க காலனிலே போடுங்க.

  கை தட்டு மட்டுமல்ல,
  கை நிறைய சக்கரை பொங்கலும் சுண்டலும் கிடைக்கும்.

  இன்னும் ஒரு படம் எடுக்க எதுனாச்சும்
  இன்ஸ்பிரேஷன் கிடைக்கும்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா!! தாத்தா உங்க மெனு சூப்பராத்தான் இருக்கு ஆனால் ரிலீஸ் இன்னும் கொஞ்சம் நாள் பொறுத்துக்கணுமே..

   இன்ஸ்பிரேஷன் கிடைக்கும்.ம்ம் தாத்தா ஆனா நம்ம இயக்குநர் என்ன சொல்லுறாரோ...

   மிக்க நன்றி தாத்தா தங்கள் நல்ல ஆலோசனைக்கு...

   நீக்கு
 5. குறும்படம் எடுத்ததைப் பற்றீய அனுபவ விவரணம் பதிவு அருமை மேடம்.
  அகம் புறம் பட குழு அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மகேஷ் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்

   நீக்கு
 6. வணக்கம்

  வாழ்த்துக்கள் அண்ணா. த.ம 6
  தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி கலந்து கொள்ளுங்கள்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:  

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. ட்ரெய்லரை எனக்கு விழாவில் செல்லில் பார்க்க அழைத்தாராம் நண்பர் குடந்தையூரார் நான் தான் அவசரத்தில் வந்துவிட்டேன். அதனால் என்ன இங்கு பார்ப்போம். தாங்கள் அளித்த புறத்தோற்றம் அகத்தோற்றத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் கணேஷ் மற்றும் சரவணன் படம் தவிர வேறெதுவும் திறக்கவில்லை

  பதிலளிநீக்கு
 9. அனுபவங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. ஆஹா... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
  நாளையை நோக்கி ஆவலாய்...
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. இரு இயக்குநர்கள் இணைந்திருக்கும்
  குறும்படம் அல்லவா
  ஆவல் எகிருகிறது
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 12. குறும்படக் குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். டீசருக்கான எதிர்பார்ப்புடன் நானும் காத்திருக்கிறேன்.

  பதிவில் இருக்கும் படங்கள் திறக்கவில்லை. மீண்டும் ஒரு முறை முயற்சிக்கிறேன்....

  பதிலளிநீக்கு
 13. //நீங்கள் கணேஷ் மற்றும் சரவணன் படம் தவிர வேறெதுவும் திறக்கவில்லை//

  எனக்கும்தான்...

  நண்பர் சரவணன் அவர்களின் அகம் புறம் வெற்றியடைய நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 14. மிகுந்த உழைப்பைக் கொடுத்திருப்பது புரிகிறது.வெற்றி நிச்சயம்

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நண்பருக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 16. படங்கள் ஏனோ திறக்க மறுக்கின்றன. தொழில்நுட்பக் காரணங்கள் ?

  பதிலளிநீக்கு
 17. படங்கள் ஏதும் திறக்கவே இல்லை! குறும்படம் வெற்றி பெற வாழ்த்துகள். அதற்கான சுட்டியும் கொடுத்திருக்கீங்க போல! பார்க்கணும். :)

  பதிலளிநீக்கு