சனி, 5 செப்டம்பர், 2015

மறக்க முடியாத ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5, 2015

எல்லா ஆசிரியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்!!!

இன்று ஆசிரியர் தினம் 05-09-2015. எல்லோரது மனதிலும் பசுமை மாறாதிருக்கும் மாணவப்பருவமும், அப்பருவத்தில் மிக முக்கியமான ஒரு சில  மாற்றங்களுக்குக் காரணமான சில ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.  ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லும் போது நான்கு விதமான ஆசிரியர்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது

'The mediocre teacher tells. The good teacher explains. The superior teacher demonstrates. The great teacher inspires.'

இதில் ஊக்கமளித்து எழுச்சியூட்டும் ஆசிரியர்கள்தான் மாணவ, மாணவியர்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து, அவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்பவர்கள்.  ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு, அவர்களுடன் அன்பாய் பேசிப்பழகும் ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் சொல்லும் வாக்கு வேத வாக்கேதான்.

உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு, அவர்களுக்குப் பிடித்த விதத்திலும், எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய விதத்திலும் பாடங்களை எடுத்து வகுப்புகளை நடத்திச் செல்லும், இடையிடையே அவர்களை ஊக்குவித்து பாராட்டி, தேவைப்படும் போது இடித்துரைத்து, அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கும் ஆசிரிய, ஆசிரியைகளை மிகவும் பிடிக்கும்.

உயர் மேல்நிலைப்பள்ளிகளிலும் அப்படித்தான் என்றாலும் அம் மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரைகளை விட ஊக்குவித்தலும், பாராட்டுதலும்தான் அதிகம் பிடிக்கும். அப்படிச் செய்யும் ஆசிரிய, ஆசிரியைகளைத்தான் விரும்புவார்கள்.

கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமல் இருப்பது போல் இருந்து, தனியே எப்போதாவது அவர்களைச் சந்திக்கும் போது, அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குவது மிகவும் பிடிக்கும்.  பிறர் கேட்க அவர்களைப் பாராட்டுவது மிகவும் பிடிக்கும்.  பாராட்டுவது கூட, மாணவர்களுக்கு, மாணவிகள் கேட்கும் படியும், மாணவிகளுக்கு, மாணவர்கள் கேட்கும்படியாகவும் இருந்தால், அப்படிப் பாராட்டும் ஆசிரிய, ஆசிரியைகள் அவர்களது வாழ்வில் மறக்க முடியாதவர்கள் ஆகியே விடுவார்கள்.

ஆனால், இப்படிப் பாராட்டப்படுவதற்கும், ஊக்குவிக்கப்படுவதற்கும், தகுதியுள்ள மாணவ, மாணவிகளைக் கண்டுபிடிப்பது என்பது எல்லா ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் இயலாத காரியம்.  மேலோங்கிய கடமை உணர்ச்சியும், பொறுமையும், அர்ப்பணிப்பு மனப்பன்மையும் அதற்கு மிக மிக அவசியம்.  எந்த ஒரு ஆசிரியை அல்லது ஆசிரியர் தான் ஒரு ஆசிரியர் அல்லது பேராசிரியர் மட்டுமல்ல, தான் தன் மாணவ மாணவியர்களுக்கு ஒரு Friend, Philosopher, Guide, Felicitator, Mentor ம் கூடத்தான் என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக் கொண்டு, தன் மாணவர்களையும் மாற்ற முற்படுகின்றாரோ, அவருக்கு மேற்கூறிய, பாராட்டுதலுக்கும், ஊக்குவித்தலுக்கும் தகுதியுள்ள மாணவர்களைக் கண்டுபிடிப்பது எளிது. 

அப்படிப்பட்ட ஆசிரிய ஆசிரியைகள், தாம் கற்பிக்கும் பிரதான பாடத்தில் சிறந்த மாணவ, மாணவியர்களை மட்டுமல்ல, பிற பிரதான பாடங்களில் திறமையுள்ளவர்களையும், கலைத்திறமை உள்ளவர்களையும், விளயாட்டுத் துறையில் திறமையுள்ளவர்களையும், பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்களையும் மட்டுமல்ல, அவர்களிடம் உள்ள எல்லா திறமைகளையும், நல்ல குணங்களையும் கண்டுபிடித்து அவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பார்கள். அப்படிப்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் எல்லா மாணவர்களிடமும் ஏதேனும் பாராட்டத்தக்க ஒரு தனித் தன்மையை கண்டுபிடித்தே விடுவார்கள். அப்படிப்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் தாங்கள் கற்பிக்கும் எல்லா மாணவ, மாணவியர்களின் மனதிலும்ஒரு உயர்ந்த இடத்தைப் பெறுவார்கள். அப்படி அல்லாத ஆசிரிய ஆசிரியைகள், கற்பிப்பதில் எவ்வளவு திறமை மிக்கவர்கள் ஆனாலும், மாணவ மாணவியர்களின் மனதில் ஒரு இன்ஸ்பையரிங்க் டீச்சர் ஆகவே முடியாது. 
திரு ஜோஸ் மேத்யூ

நான் கற்பிக்கும் பாலக்காடு, மாத்தூர், CFDVHSS (CFD Vocational Higher Secondary School) அப்படிப்பட்ட மூன்று ஆசிரியர்கள் இருக்கிறார்கள். (சிரிக்க வேண்டாம்!!! அவர்களில் ஒருவராகும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.  கிடைப்பது சிரமம்!), அவர்களில் ஒருவரும், பள்ளி முதல்வருமான திரு. ஜோஸ் மாத்யூவுக்கு 2015 ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் சிறந்த ஆசிரியருக்கான விருது கிடைத்திருக்கிறது. (ப்ரோட்டா கார்த்திக் குறும்படத்தில்– மளையாளத்தில் பள்ளி முதல்வராகவே இவர் நடித்திருக்கிறார். பரோட்டா கார்த்திக் தமிழில்  இமயத்தலைவன் திரு. ராயச் செல்லப்பா அவர்கள் முதல்வர் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். இவரும் ஆசிரியராக இருந்தவர்தான்).
 

கேரள மாநிலத்தில் 44 சிறந்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இவ்விருது இவ்வருடம் கிடைத்திருக்கிறது.  கேரளாவிலுள்ள 14 மாவட்டங்களிலிருந்து, 14 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரிய ஆசிரியைகளுக்கும், 14 உயர்நிலைப் பள்ளி ஆசிரிய ஆசிரியைகளுக்கும், 9 மேல்நிலைப்பள்ளி மண்டலத்திலிருந்து 9 உயர் மேல்நிலைப்பள்ளி ஆசிரிய ஆசிரியைகளுக்கும், 7 வொக்கேஷனல் மேல்நிலைப்பள்ளி மண்டலத்திலிருந்து 7 வொக்கேஷனல் மேல்நிலைப்பள்ளி ஆசிரிய ஆசிரியைகளுக்கும் இவ்விருது கிடைக்கப் பெற்றிருக்கிறது. அப்படி அந்த 7 வொக்கேஷனல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களில் ஒருவர்தான் நம் ஜோஸ்மாத்யூ சார்.  சிறந்தவர்களுக்கு விருது கிடைக்கும் போது நமக்குத் தோன்றுமே, “அப்ப எப்பவாவது இதுமாதிரி நடு நிலைமையான தீர்ப்பு வரும் இல்லையா?” என்று! அது போலத்தான் அவருக்குக் விருது கிடைத்த போது எங்களில் பலருக்கும் தோன்றியது.  வொக்கேஷனல் மேல்நிலைப்பள்ளி துணை இயக்குநர்/மேலாளர், அவரை நேரில் அழைத்து விண்ணப்பத்தைக் கொடுத்து, எழுதி வாங்கி தலைமையகத்திற்கு அனுப்பி இருந்தார்.

ஜோஸ்மாத்யு சார் ஆசிரியர் பயிற்சி முகாமில் பயிற்சியாளராக இருந்திருக்கிறார்.
நேற்று மதியம் 12 மணிக்கு திரு ஜோஸ் மாத்யூவுடன், அவரது இரு நெருங்கிய நண்பர்கள், நாங்கள் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள், ஒரு நான் டீச்சிங்க் ஸ்டாஃப், என்று 7 பேர் புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு பாலக்காடு ஜங்க்ஷனுக்கு வரும் எழும்பூர்-மங்களூர் விரைவு வண்டியில் ஏறி, பரிசு வழங்கப்படும் காசரகோடு அருகே உள்ள காஞ்சங்காடு எனும் இடத்திற்குச் செல்ல ரயில் நிலையத்தை அடைந்தோம்.  மங்களூர் விரைவு வண்டி சென்னையிலிருந்து 200 கிமீ தொலைவில், விருத்தாச்சலம் அருகே, புவனூர் எனுமிடத்தில், ரயிலின் கடைசி 6 பெட்டிகள் தடம் புரண்டு, 38 பேர் காயமடைந்ததாகவும், அதனால், 4 மணி நேரம் தாமதமாகி வருவதாகவும் செய்தி அறிந்ததும், வேறு வழி இன்றி காத்திருந்தோம். 5 மணிக்கு பாலக்காடு சந்திப்பிற்கு வந்து  சேர்ந்தது.
 
இரவு 11.30 மணிக்கு காஞ்சங்காடு ரயில் நிலையத்தை அடைந்தோம்.  ஹோட்டல் க்ரீன்லாண்டில் 2 அறைகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.  கொசுக்கடியை சட்டை செய்யாமல், வேறு வழியின்றி, களைப்பில் தூங்கியே போனோம்.  காலை எழுந்து, தயாராகி, கேரளாவில் எந்த ஒரு இடத்திலும் ஓரளவு பயமில்லாமல் (பர்சிற்கும், வயிற்றிற்கும்) சாப்பிடமுடிகின்ற இந்தியன் காஃபீ ஹவுசில் வடை மற்றும் மசால் தோசையை சாப்பிட்டு, விழா நடக்கும் காஞ்சங்காடு துர்கா மேல்நிலைப்பள்ளியை அடைந்தோம்.

1950ல், ஹோஸ்துர்க் எஜுகேஷனல் சொசைட்டியால் துவக்கப்பட்ட அந்தப் பள்ளியில், கேரள மாநிலத்தின் பல பாகங்களிலிருந்து வந்திருந்த விருது பெறும் ஆசிரிய ஆசிரியைகளைக் கண்ட போது மனதிற்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் வார்த்தைகளால் விவரிப்பது கடினம். 11 மணிக்குத் துவங்க வேண்டிய விழா 12 மணிகுத்தான் ஆரம்பித்தது. 

கல்வி அமைச்சர் திரு அப்துல் ரஃப் பங்கெடுத்த அந்த விழாவில் இறைவணக்கம் பாடி முடித்து, காசரகோடு மாவட்டக் கல்வி அதிகாரி வரவேற்புரை வழங்கியபோது, திடீரென பார்வையாளர்களாக அமர்ந்திருந்த ஆசிரிய, ஆசிரியைகளில் பெரும்பான்மையோர் எழுந்து “அப்துல் ரஃப் கோ பேக்” என்று கூச்சலிடத் தொடங்கிவிட்டார்கள்.

கல்வி அமைச்சர் அப்துல் ரஃப், இவ்வருடம் மாற்றப்பட்ட பாடப்புத்தகங்கள், மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு முன் அச்சடித்துக் கொடுக்க முடியாமல், அத்தேர்வையே தள்ளி வைத்தது உள்ளிட்ட பல காரணங்கள் அப்போராட்ட்த்திற்குப் பின் இருந்தது என்றாலும், வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலும் இவற்றிற்கெல்லாம் ஒரு முக்கிய காரணம்தான்.  பின்  நம் கல்வி அமைச்சரும் வீண் விவாதங்கள் ஏற்படுத்துவதில் வித்தகர். தான் பங்கெடுக்கும் விழாக்களில் விளக்கேற்றி விழாவைத் தொடங்கும் பழக்கம், தன் மத நம்பிக்கைக்கு எதிரானது என்று சொல்லி விளக்கேற்றாமல் நிற்பது போன்ற செயல்களைச் செய்து, பிரச்சனைகளை விலைக்கு வாங்குபவர்தான்.


எப்படியோ போலீசார் சமயோஜிதமாக ஈடுபட்டு ஆட்பாட்டக்காரர்களான ஆசிரியர்களை விழா மண்டபத்திலிருந்து வெளியே தள்ளி ஒரு வழியாக விழாவை நடக்கச் செய்தார்கள்.  12.30 குக்கு எல்லா விருது பெற்ற ஆசிரிய ஆசிரியைகளுக்கும் விருதும், சான்றிதழும், பரிசுத் தொகையாக 10 ஆயிரமும் வழங்கப்பட்டது. அப்படி ஒருவழியாய் 12.45க்கு, தடம் புரண்ட ரயில் பயணத்தில் தொடங்கி, எதிர்பாராத ஆசிரியர் ஆர்பாட்டத்தினால் என்னாகுமோ என்று அச்சுறுத்திய விழா ஓரளவு பிரச்சனை இல்லாமல் முடிவடைய, நாங்கள் வித்தியாசமான, மறக்க முடியாத ஒரு ஆசிரிய தின நிகழ்வுகளை மனதில் சுமந்து கொண்டு, சபரிமலை செல்லும் பக்தர்கள் ஐயப்ப தரிசனம் முடிந்த பின் வேகமாக மலை இறங்குவது போல் அப்பள்ளியை விட்டு வெளியேறினோம்.  இனி 8 மணி நேரப் பயணம்.  அதன் பின் தான் வீடு.  அதுதான் இப்போது மனதில்!                

44 கருத்துகள்:

  1. சாகசமான பயணம்தான்:) அவரது செயல்களும் விருதும் பாராட்டப்பட வேண்டியவை தான்:) ஆனால் விருது பெற்றவர்கள் மட்டுமே நல்லாசிரியர்கள் என்பதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை. பரம்வீர் சக்கரா விருது பெற்றவர்களை தவிர வேறு எந்த ராணுவ வீரரின் பணியும் தாழ்ந்ததா என்ன:) எப்படி எல்லா தாயும் சிறந்தவர்களோ, அதுபோல எல்லா ஆசிரியர்களும்:) ஏதேனும் தவறாக சொல்லியதாக நினைத்தால் இந்த தங்கையை மன்னியுங்கள் அண்ணா! ஆசிரியர்தின வாழ்த்துக்கள் அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்களின் முதல் பின்னூட்டத்திற்கு சகோதரி மைதிலி! ஆம் நானும் உங்கள் கருத்தைக் கொண்டவன் தான். விருது பெற்றவர்கள் மட்டுமே நல்லாசிரியர்கள் என்று சொல்வதற்கில்லைதான். எத்தனையோ நல்லாசிரியர்கள் கண்டு கொள்ளப்படாமல், வெளியில் தெரியாமலே இருக்கின்றார்கள். இதில் என்ன தவறு சகோதரி? நீங்கள் சரியாகத்தானே சொல்லி இருக்கின்றீர்கள்! ஆசிரியர் தின வாழ்த்துகள்!

      நீக்கு
    2. மைத்து இது கீதா...துளசி இந்த இடுகையை நேற்று பாதி, அதுவும் ரயில் நிலையத்திலிருந்து, மீதியை விழா நடக்கும் முன்னும் பின்னர் நடந்து முடிந்த பின்னரும் வாசித்து, வேறொரு ஆசிரியர் மொபைல் வழி புகைப்படங்கள் அனுப்ப நான் அப்படியே பதிவேற்றம் செய்தேன். அப்போது அவர் ஒரு இடத்தில் அடைப்புக் குறிக்குள் ஒரு வாக்கியம் சேர்த்தார். (எனக்குக் கிடைக்கும் பாக்கியம் இல்லை என்ற....எனக்கு அதில் உடன்பாடில்லை. ..ஏனென்றால் அவரது மாணவ மாணவிகள் பலரையும் நான் சந்தித்துள்ளேன் நேரடியாகவும், வேறு விதத்திலும். அவர்கள் எல்லோரும் மிக மிக துளசியைப் புகழ்வார்கள். துளசி தங்களுக்கு மிகவும் தூண்டுகோலாக, வழிகாட்டியாக இருந்தார் என்பதையும் சொல்லிக் கேட்டிருக்கின்றேன். ஆனால் துளசி லோ ஃப்ரொஃபைல் தான் சொல்லுவார்...

      ஆசிரியர் தின வாழ்த்துகள் மைத்து தங்களுக்கும், கஸ்தூரிக்கும்!

      கீதா

      நீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    ‘மறக்க முடியாத ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5, 2015’ உண்மையிலேயே தங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தந்திருக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை.
    திரு ஜோஸ் மேத்யூ அய்யா அவர்களுக்குடன் தாங்களும் இன்னும் ஆறு பேறும் புறப்பட்டு
    மங்களூர் விரைவு வண்டிக்காக காத்திருக்கையில்...புவனூர் எனுமிடத்தில், ரயிலின் கடைசி 6 பெட்டிகள் தடம் புரண்டு, 38 பேர் காயமடைந்ததாகவும், அதனால், 4 மணி நேரம் தாமதமாகி வருவதாகவும் செய்தி அறிந்ததும், சற்று கலக்கம் அடைந்திருப்பீர்கள்!

    பிறகு ஹோஸ்துர்க் எஜுகேஷனல் சொசைட்டியால் துவக்கப்பட்ட அந்தப் பள்ளியில் விழா துவங்குவதற்கு முன்னால் கூச்சலிடத் தொடங்கிய ஆசிரியர் போலிஸார் கட்டுப்படுத்த எப்படியோ... நல்ல படியாக விருதை வாங்கி அவருடன் திரும்பி விட்டீர்கள். நல்ல அனுபவம்.

    நான்கு விதமான ஆசிரியர்கள் உள்ளதை நயம்படச் சொல்லி... தொடக்கப்பள்ளி துவங்கி,
    உயர்நிலைப்பள்ளிகளில், உயர் மேல்நிலைப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஓர் இன்ஸ்பையரிங்க் டீச்சராக இருக்க வேண்டும்.

    ஆசிரியர் தினத்தில்... நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி.

    நன்றி.
    த.ம.1.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு மிக்க நன்றி! பதிவை மிக நுணுக்கமாக வாசித்து ஒவ்வொன்றையும் சொல்லிக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!

      ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

      நீக்கு
  3. ஆசிரியர் என்றால் யார்? அவர் எவ்வாறு இருக்க வேண்டும்? மாணவர்களுடன் எப்படி பழக வேண்டும்? எந்த முறையில் தன் முனைப்புடன் மாணவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்க முடியும் போன்றவற்றை கல்லூரியில் தான் பார்த்தேன். அதனால் கல்லூரியில் தான் உண்மையிலேயே படிக்க முடிந்தது. சாதனைகளும் செய்ய முடிந்தது. மற்றபடி மேல்நிலைப்பள்ளி வரைக்கும் அவர்கள் வெறுமனே மனிதர்களாகத் தான் எனக்குத் தெரிந்தார்கள். இன்று வரையிலும் இந்த எண்ணம் மாறவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொரு விதத்தில்...சிலருக்கு பள்ளி, கல்லூரி என்று உத்வேகத்தை அளிப்பவர்கள்..சிலருக்கு பள்ளியில், சிலருக்குத் தங்களைப் போன்று கல்லூரியில் என்று ...தங்கள் அனுபவத்தை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பர் ஜோதிஜி.....

      நீக்கு
  4. வெற்றிலை பாக்கு சாரி தமிழ் மணம் 4 மீண்டும் வருவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர் ஜி தங்களின் வாக்கிற்கு வாருங்கள்....

      நீக்கு
  5. முதலில் உங்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். பொதுவாக நம் மாணவப் பருவத்து நம்மைக் கவர்ந்த ஆசிரியர்களை மகிழ்வுடன் நினைப்போம் ஒரு மாறுதலுக்கு ஒரு ஆசிரியை கூறியதைக் கேட்போமா. அந்த ஆசிரியை யூகேஜி எல்கேஜி முதல் வகுப்புகளுக்குப் பாடம் எடுப்பவர். ஒரு நாள் ஒரு சிறுவன் அவளிடம் வந்து Madam ,you are beautiful. Are you married? என்று கேட்டிருக்கிறான் , அவள் ஆம் என்றபோது அந்தப் பையன் Doesn't matter. Will you marry me/? என்றானாம் இது எப்படி இருக்கு ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது குழந்தைகள் பிஞ்சிலே பழுத்தது என்பது போல்..ஊடகங்கள், வளர்ப்புச் சூழல் ஆகியன விதைகள்...

      மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்

      நீக்கு
  6. வணக்கம் சகோ,
    ஆசிரியர் தின வாழ்த்துக்கள்,
    தாங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகச் சரியானவை, எத்துனையோ நல்ஆசிரியர் இன்றும் கண்டக்கொள்ளப்படாமலே,,
    விருது மட்டும் தகுதியல்ல, பாருங்களேன் இப்பவெல்லாம் விருது சரியாகக் கொடுக்கப்படுகிறதா? என்றே ஐயம் உண்டா? இல்லையா?
    மாணவர்கள் மனதில் இருப்பவர் எவரோ,,,,, அவர்கள் எல்லாம் சிறந்த ஆசிரியர்கள் தான்.
    தங்கள் பகிர்வின் வழி தங்கள் தலைமையாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி மகேஷ்வரி தங்களின் வாழ்த்திற்கும் கருத்திற்கும். நிச்சயமாக அந்த ஐயம் உண்டு....ஆம் மாணவர்கள் மனதில் இருப்பவர்கள் சிறந்த ஆசிரியர்கள்தான்...மிக்க நன்றி..

      நீக்கு
  7. அரசியல் செய்ய ஆசிரியர் தினமும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்து விட்டார்கள் :)

    பதிலளிநீக்கு
  8. துளசி ஐயா! கீதா அம்மணி! முதலில் உங்கள் இருவருக்கும் ஆசிரியர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி, கல்லூரி என ஒவ்வொன்றிலும் ஆசிரியர் எப்படி மாணவர்களைக் கவரும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இவ்வளவு நுட்பமாக நீங்கள் விவரிப்பதிலிருந்தே உங்கள் துறை சார்ந்த பட்டறிவு புலனாகிறது ஐயா! ஆக, நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, உங்களுக்கு விருது கிடைப்பது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை என்றே நினைக்கிறேன். :-) வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இபுஞா நண்பரே! விருதா நண்பரே அதொன்றும் வேண்டாம் நான் குறிப்பிட்டது சும்மாதான்....மிக்க நன்றி தங்கள் வாழ்த்திற்கு!

      நீக்கு
  9. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
    ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் 80தை மிவும் அழகாக விளக்கியுள்ளீர்கள் அருமை.
    எத்தனையோ திறமைசாலிகள் எல்லாத்துறையிலும் வெளியுலகம் தெரியாமல் தங்களது திறமையை கடமை என்ற கருத்தில் எதிர் கொண்டு வாழ்கின்றார்கள்.
    பதிவு மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க ந்னறி கில்லர்ஜி! உண்மைதான் பெரும்பான்மையானோர் வெளியில் தெரியாமல் தான் வாழ்கின்றார்கள்....

      நீக்கு
  10. aasiriyarthina vaztukkal sir.

    pathivin thuvakaththil irunthu kadasaivarai nikazvukalai chudach chuda udane thanthu ungal kadamai unarchiyai paarattamal irukka mudiyala.
    phone le ninga sonnathai thattachittu eluthiya madam avarkalukkum vazthukkal.

    nichayam markka mudiyaathoru aasiriyarthinamthaan.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேஷ் உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்..

      நீக்கு
  11. இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!

    தங்களின் அனுபவம் மெய்சிலிக்க வைத்தது சகோதரரே!

    திறமையான மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அமைந்தால் எப்படி மகிழ்வோ
    அப்படியே மாணவர்களுக்கும் அத்தனை சிறப்பான ஆசிரியர்கள் கிடைப்பது
    பெரிய அதிர்ஷ்டம்தான்!

    நல்லதொரு தினத்தில் பொருத்தமான பகிர்வு!
    வாழ்த்துக்கள் சகோதரரே!

    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க ந்னறி சகோதரி இளமதி தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!

      நீக்கு
  12. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
    எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் எல்லோரும் தங்கங்கள்.
    ஒன்று இரண்டு பேர் சரியாக சொல்லிக்கொடுக்கமாட்டர்கள் வைத்துக்கொண்டு வஞ்சனை செய்யவில்லை--அவர்களுக்கு தெரிந்து அவ்வளவு தான். அதையும் பெரிதாக எடுதுக்கொள்ளமாடோம்.

    பள்ளிக்கு செல்வது என்றாலே எங்கள் எல்லோருக்கும் இனிக்கும்!

    மேலும், ஒரு போது விழாவில், பங்கேற்றவர்கலில் பலர் பல நம்பிக்கை கொண்டு இருப்பார்கள், விளக்கு ஏற்றுவதை தடுக்கவேண்டும். மெழுகு வர்த்தி ஏற்றினால் இந்துக்கள் விருபுவார்களா?

    மத, ஜாதி சம்பந்தம் எதுவும் பள்ளிகள், அலுவலங்களில் இருக்கக்கூடாது எனபது என் அபிப்ப்ராயம். எல்லாவற்றியும் வீட்டில் விட்டு வரவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நம்பள்கி தங்களின் வாழ்த்திற்கு. ஆம் நீங்கள் சொல்லும் கருத்து மிக மிகச் சரியே! மிக்க நன்றி நம்பள்கி தங்களின் கருத்திற்கு..

      நீக்கு
  13. அருமையான ஆசிரியர் வகைப்பட்டியல். பரிசு வாங்கப்போய் பட்ட அனுபவம் என்றும் மறவாது இனி))) அதை தொடராக எழுதியிருக்கலாம் மலையேறிய பின் ஓடிவருவோர் எல்லாம் மீண்டும் இயல்பு வாழ்வில். இணைந்துவிட்டார் என்பார் என் குரு))) ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் தனிமரம் நேசன் தங்களின் கருத்திற்கும்! ஓ தங்கள் குருவும் அதைச் சொல்லுவாரா...ம்ம் மிக்க நன்றி!

      நீக்கு
  14. ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்பாவாணன் தங்களின் வாழ்த்திற்கு..

      நீக்கு
  15. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
    சம்யோகிதமாய் பயணித்து விழாவில் கலந்து வந்திருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் பரிவை குமார் தங்களின் வாழ்த்திற்கும் கருத்திற்கும்!

      நீக்கு
  16. வணக்கம்

    இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள். த.ம 9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  17. என் உளம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள் இருவருக்கும். ஆசிரியத் தொழிலும் ஒரு கலை தான் அதுவும் எல்லோருக்கும் வரும் என்று சொல்ல முடியாது தான் இல்லையா? மற்றபடி தாரமும் குருவும் தலைவிதிப்படி தான் அமையும் எனபதில் எனக்கு நம்பிக்கை உண்டு. தங்களைப் போன்ற நல்ல ஆசிரியர்கள் அமைந்தால். அமோகமாக வர ஏதுவாக அமையும். நன்றி வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இனியா தங்களின் வாழ்த்திற்கும், ஆம் ஆசிரியத் தொழில் கலையே! மாணவர்களைக் கையாண்டு நெறிப்படுத்துதல் என்பது...மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  18. உண்மையிலேயே மறக்கமுடியாத அனுபவமாகத்தான் இருக்கும்.... ஆசிரியர் தின வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்....மிக்க நன்றி தங்களுக்கும் எங்கள் ஆசிரியர் தின வாழ்த்துகள்! வணக்கங்கள்!

      நீக்கு
  19. திரு.ஜோஸ் மாத்யூ அவர்களுக்கு வாழ்த்துகள்!
    அண்ணா, நீங்களும் சிறந்த ஆசிரியர்தான்.

    விறுவிறுப்பான விழா நிகழ்வாக இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! விறு விறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது!! மிக்க நன்றி க்ரேஸ் சகோதரி தங்களின் வாழ்த்திற்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  20. ஆசிரியர் தின வாழ்த்துகள். ஜோசப் மேத்யூ அவர்களுக்கு வாழ்த்துகள். துளசிஜி, மைதிலி, மது, கரந்தையார், கீதா உள்ளிட்ட அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் ஸ்ரீராம் தங்கள் வாழ்த்திற்கு!

      கீதா : ஸ்ரீராம்....என்னப்பா என்னையும் இந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங்க.....அவங்க எல்லாரும் எனக்குமே ஆசிரியர்கள்!!!! .நான் ஆசிரியர் அல்ல......சும்மா துளசியின் உபயத்தில் ஏதோ எழுதிக்கிட்டுருக்கேன் ....ஹஹஹ

      நீக்கு
  21. பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் வாழ்த்திற்கு! தங்களுக்கும் எங்கள் ஆசிரியர் தின வாழ்த்துகள்!

      நீக்கு
  22. உங்கள் அனுபவம் பதிவில் மிக மிக அருமையாக வெளிப்பட்டுள்ளது! நன்றி தரன்!

    பதிலளிநீக்கு