செவ்வாய், 22 செப்டம்பர், 2015

தம்பு! தண்டோரா போட்டுரு!!

மன்னாரு திண்ணையில் வழக்கம் போல் அமர்ந்து தன் தளத்தையும் பார்த்து, விழாவிற்கான தளத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

“மன்னாரு அண்ணே என்ன அண்ணே ரொம்ப தீவிரமா கம்ப்யூட்டர்ல பாத்துக்கிட்டிருக்கீங்க?”

“டேய் தம்பு!  புதுகைல தமிழர் பதிவர் சந்திப்பு விழா அக்டோபர் 11, அப்படினு சொன்னத மறந்துட்டியா? அதுக்கான தகவல் வெளியாகிட்டே இருக்கும். அதத்தான் பார்த்துக்கிட்டுருக்கேன்”

“எப்படி அண்ணே மறப்பேன்.  நானும் தான் வலைத்தளம் ஆரம்பிக்கப் போறேனே?”

“டேய் எப்படா நீ கம்ப்யூட்டர் வாங்கின?  சொல்லவே இல்ல?”

“ஹ்ஹ்ஹ் நானா? அதான் நீங்க இருக்கீங்களே...அதான்?”

“அடப்பாவி! அதானே பாத்தேன்.  எச்சக்கையால காக்கா கூட விரட்ட மாட்டியே.”

“என்னண்ணே நீங்க தாராளப் பிரபுனு நான் பெருமையா நினைச்சா நீங்க இப்படிச் சொல்லுறீங்களே”

“சரி தம்பு!  நீ என்னடா எழுதுவ அதுல...?”

“என்னண்ணே நான் என்ன அந்த அளவு அறிவாளியா என்ன? பாட்டி வடை “சுட்ட” கதை மாதிரி கொஞ்சம்...பம்பரம் எப்படி விடணும், கிட்டிப்புல் எப்படி விளையாடணும், கோலிக்குண்டு விளையாட்டு, பாண்டி, கலர் கலர் வாட்கலர், நாலு சக்கரம், சொக்கட்டான், ஆடுபுலி, நான் ஆத்தங்கரைப் பக்கம் உக்காந்து வானத்தப்பாத்து என்ன எழுதறதுனு யோசிச்சது இப்படி எழுதலாம்ல”

“அட!  தம்பு நீ எங்கேயோ போய்ட்டடா!! இரு இரு..இதெல்லாம் எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே”

“அண்ணே !  என் தளத்துல நான் நீச்சல் கூட கத்துக் குடுப்பண்ணே!”

“என்னாது நீச்சலா!!! அது எப்படிறா ப்ளாக்ல கத்துக் கொடுக்க முடியும்”

“என்னண்ணே! வலைல சர்ஃபிங்க் பண்ண முடியும்னா நீச்சல் கத்துக் கொடுக்க முடியாதா என்ன...??!!”

“டேய் புல்லரிச்சு தலை சுத்துதுடா..உன் அறிவைப் பார்த்து!! ஏதோ வெவரமா பேசற மாதிரித் தெரியுதே!”

“எல்லாம் உங்க ஆசிர்வாதம் தாண்ணே!  உங்க கூடத்தானே பேசிக்கிட்டுருக்கேன். உங்க அறிவு எனக்கும் வராதாண்ணே?!”

“என்னவோ பொடி போட்டுப் பேசறா மாதிரி தெரியுதே!  சரி என்னவோ பண்ணித் தொலை.  என்ன பண்ணுற... நீ போற ஊருல எல்லாம் தண்டோரா போட்டுரு...விழா பத்தி. என்ட்ரி போட்டிங்களா, 

“தண்டோராவா அதத்தானே பண்ணிக்கிட்டுருக்கேன்”

“அப்படியே விழாவுக்கு நிதி கொடுக்கச் சொல்லி விவரம் எல்லாருக்கும் ஞாபகப்படுத்திரு.  ஆங்க் அதுல ஒரு விஷயத்தையும் சொல்லிடு. 5000 மும் அதுக்கு மேலயும் கொடுத்தவங்களை எல்லாம் “புரவலர்” பட்டியல்ல சேர்த்து பொன்னெழுத்துகள்ல பதாகையில எழுதி வைக்சுக் கௌரவப்படுத்தறாங்கனும் சொல்லிடு. நீங்களும் அந்த மாதிரி கொடுத்தீங்கனா உங்க பெயரும் புரவலர் பட்டியல்ல வரும் அப்படினு... என்ன சரியா?  உளறிக் கொட்டாம ஒழுங்கா வெவரமா சொல்லுவியா?”

“அண்ணே ஒண்ணு....”நான் உங்களைத் தொடர்கிறேன்” அப்படினுதானே வலைல எழுதுறீங்க அது மாதிரி என்னை நீங்க தொடருங்க...நான் தண்டோரா போடறேன்...இல்லைனா.....”உலகத் தமிழர் அனைவரும் இணையத்தால் இணைந்தோம்” அப்படினு சொல்றதுல்ல? அப்படியே இதையும் உங்க கம்ப்யூட்டர்ல தட்டிவிட்டுருங்க....எல்லாரும் கை கோர்த்துருவாங்கல்ல”

“டேய் நீ என்னவோன்னு நினைச்சேன்....ஆனா இப்படி என்னையே போட்டு வாங்கிட்ட...ஐயையோ உங்கிட்ட பேசினதுல டைம் ஆனதே தெரில.. எங்க வீட்டு அம்மணி வர டயம் ஆயிருச்சு நான் போய் சமைக்கணும்....சரி அப்ப நீயே போட்டுரு....”

(தம்புவின் மைன்ட் வாய்ஸ்....ஹ்ஹ் நமக்கும் அண்ணன் டைம் எல்லாம் தெரியும்ல இப்படிச் சந்தடிச் சாக்குல கம்ப்யூட்டர்ல கொஞ்சம் நீஞ்சிரலாம்ல...இதுதான் போட்டு வாங்குறது...)



40 கருத்துகள்:

  1. ஆஹா உங்களின் ஆதரவு எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது சார் மிக்கநன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி புதுகை கீதா! தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  2. அடடே வலைப்பூவின் மூலமா நீச்சல் கற்றுக்கொடுக்க முடியுமா ?
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட இது தெரியாதா கில்லர் ஜி!? கற்றுக் கொடுக்க முடியுமே....மிக்க நன்றி ஜி! தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  3. பதிவுகளால் அசத்தி ஆளைக் கவருதல் என்பது எல்லாருக்கும் வாய்பதில்லை..:)
    வலைப்பதிவர் சந்திப்பு ஏற்பாட்டு ஆரவாரப் பதிவு அசத்தல் சகோதரரே!

    வாழ்த்துக்கள்!
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி இளமதி! எங்களை விட இன்னும் பலரும் அருமையாக தொகுத்து அளிக்கின்றார்கள். எங்களுக்கும் அதை வாசிக்கும் போது அட என்ன அழகா எழுதியிருக்காங்க...நமக்கு அப்படி எழுதத் தெரியவில்லையே என்று தோன்றும்.

      நீக்கு
  4. சிரிக்கவும் சிந்திக்கவும் கூடிய பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. ம்ம்.... புரவலர்கள் வாழ்க!

    விழா சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. மிக்க நன்றி தோழர் கஸ்தூரி! நாம் எல்லோரும் ஒரே குடும்பத்துப் பதிவர்கள்....நன்றி எல்லாம் மிகை என்பது போல் தோன்றுகின்றது....

      நீக்கு
  7. ஆகா
    புதுகைக்கு வலை அன்பர்களை இப்படியும் வரவேற்கலாமோ
    அருமை நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ ஏதோ எங்களுக்குத் தெரிந்த வகையில் ஒரு பதிவு நண்பர் கரந்தையாரே! உங்கள் எல்லோரது தமிழ் மொழி ஆளுமையில் எழுத முடியாதுதான்....

      மிக்க நன்றி நண்பர் கரந்தையாரே!

      நீக்கு
  8. பதில்கள்
    1. மிக்க நன்றி தங்களின் ரசனைக்கு! நண்பர் நாகேந்திர பாரதி!

      நீக்கு
  9. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாயிற்று...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

    புதுக்கோட்டை விழாக்குழு சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  10. அட கலக்குறீங்க....இரண்டு பேர் சேர்ந்து ஒரு வலைத்தளம் நடத்தி தூள் கிளப்புறீங்க... இங்க நான் தனியா டீ ஆத்திகிட்டு இருக்குன்றேன், ஹும்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழா !!! உண்மையாவா??!!! என்னப்பா ரெண்டு பேர் சேர்ந்து நடத்தறது பெரிய விஷயமா என்ன?!!....நீங்க சிங்கிளா டீ ஆத்தி சிங்கிள் டீ இல்லாம மல்டிப்பிள் டீ ஆத்திக் கலக்குறீங்களே! அது இன்னும் கஷ்டம் இல்லையா தமிழா!!?...சரி மோதிஜி பாதையோ?!!!!! ஹஹாஹ்ஹஹ் அப்படி வந்தாலும் நாங்க மொத்த வலைப்பதிவர்களும் இருக்கோம்ல உங்களுக்கு ஆதரவா.....

      நீக்கு
    2. நகைச்சுவையில் கலக்கும் நீங்கள் எங்களுக்கு இப்படி ஒரு பின்னூட்டம் இட்டதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம் தமிழா...மிக்க நன்றி!

      நீக்கு
    3. //நாங்க மொத்த வலைப்பதிவர்களும் இருக்கோம்ல ///

      மொத்த பதிவர்களும் பூரிக்கட்டையை அல்லவா தூக்கிட்டு வருவீங்க....

      நீக்கு
    4. ஆமாம்! அதுதானே உங்க சின்னம்!!!!! ஏம்பா ஆம் ஆத்மி துடைப்பக்கட்டைய தூக்கினா நாம பூரிக் கட்டைய தூக்கலாம்ல....

      நீக்கு
  11. ஒரு வித்தியாசமான சிந்தனையில் புதுகை வலைப் பதிவர் விழா குறித்த பதிவு பகிர்வு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!

      நீக்கு
  12. அசத்திட்டிங்க எதையும் புது விதமா செய்வதில் நீங்கள் இருவரும் திறமைசாலிகள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்தியமாவா சகோ சசி? மிக்க நன்றி சகோதரி! தங்களின் வாழ்த்திற்கு...

      நீக்கு
  13. அருமையா சொல்லியிருக்கிறீர்கள்,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. சொல்லவேண்டிய தகவல்கள் அனைத்தையும்
    சுவாரஸ்யமாகச் சொல்லிப் போனவிதம் அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. தகவல்களை அழகாகச் ச்ல்லியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்
    அண்ணா.

    வரவேற்ற விதம் மிக அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள் அண்ணா.த.ம9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள அய்யா,

    ‘இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்......’ தண்டோரா போட்டு சொல்லவேண்டியத...தமிழர் பதிவர் சந்திப்பு விழாபற்றிய விவரங்களை விளக்கமாக விவரித்தது கண்டு மகிழ்ந்தோம்.

    நன்றி.
    த.ம.10

    பதிலளிநீக்கு
  18. #தமிழர் பதிவர் சந்திப்பு விழா அக்டோபர் 11, #
    வலை பதிவர்கள் சந்திப்பு திருவிழா தானே .அதென்ன புதிதாய் தமிழர்கள் ?

    பதிலளிநீக்கு
  19. “என்னண்ணே! வலைல சர்ஃபிங்க் பண்ண முடியும்னா நீச்சல் கத்துக் கொடுக்க முடியாதா என்ன...??!!”

    பதிலளிநீக்கு
  20. வலைப்பதிவர் திருவிழாவிற்கு ஆதரவு கொடுக்கும் நகைச்சுவைப் பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு