வெள்ளி, 17 ஜூலை, 2015

டாஸ்மாக் தமிழ்நாட்டின்/தமிழர்களின் அடையாளமா?!!

டாஸ்மாக்கில் எலைட் வேறு -  ரொம்ப நல்லாருக்குப்பா - நல்ல வளர்ச்சி!!!!
Image result for Tasmac

      தமிழ்நாடு என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகின்றதோ இல்லையோ எங்களுக்கு டாஸ்மாக் தான் நினைவுக்கு வருகின்றது இப்போதெல்லாம். பின்ன என்னங்க, இந்த டாஸ்மாக்கும், மதுபானக் கடைகளும் பண்ணுற அலங்கோலங்களை எவ்வளவு நாள்தான் பார்த்துக் கொண்டிருப்பது? சமீபத்திய நிகழ்வுகள் பல தளங்களிலும், ஊடகங்களிலும் பேசப்பட்டு எல்லோரும் அறிந்ததே.

எழுத்து ஒரு கூரிய வாள்! எழுத்தின் சக்தி பெரிது அப்படினு எல்லாம் கூக்குரல் போடத்தான் செய்கின்றார்கள். இதற்கொன்றும் குறைச்சல் இல்லை. நாட்டின் தூண் இந்த ஊடகம் என்றெல்லாம் மார்தட்டிப் பேசுவதுண்டு.  ஆனால் நடைமுறையில் ஊடகங்கள் எந்தப் புரட்சியையும் கொண்டுவருவதாகத் தெரியவில்லை.

ஏன் தமிழ் நாடு அரசு டாஸ்மாக்கை மூடாமல் வைத்திருக்கிறது?  என்று எங்கள் சிறிய அறிவு நச்சரித்துக் கொண்டிருந்த சமயம், நம் பண்டைய தமிழர் வாழ்வு பற்றி வாசிக்க நேர்ந்தது.  என்னாயிற்று? அதற்கும் உங்கள் தலைப்பிற்கும் என்ன தொடர்பு? எல்லோரும் டாஸ்மாக்கிற்கு எதிராகக் கொடி பிடித்து எழுதும் வேளையில் டாஸ்மாக்கையும் பண்டைய தமிழர்களையும் முடிச்சுப் போடுகின்றீர்களே என்ற வியப்பு உங்களுக்கு மேலிடுகின்றது இல்லையா? என்ன இது புதுக்கதை என்று தோன்றுகின்றதா?

இருங்கள் இதோ விஷயத்திற்கு வருகின்றோம். வேறு ஒன்றும் இல்லை, நாங்கள் சமீபத்தில் பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் – திரு. சாமி சிதம்பரனார் எழுதிய புத்தகம் வாசிக்க நேர்ந்தது. பண்டைய தமிழர்கள் மதுவை வெறுத்தவர்கள் அல்லர். (மது, புலால் என்று குறிப்பிடப்படுகிறது.  இங்கு தலைப்பிற்கு வேண்டி கள்ளை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.) சங்க நூல்களில் கட் குடிப்பு கண்டிக்கப்படவில்லை. அவர்கள் கள்ளை மிகவும் மகிழ்ந்து குடித்ததையும், பாராட்டியதையும் புறநானூறில் காணலாம். பத்துப்பாட்டில் இதை அருந்தாதவர்களும் சங்க காலத்தில் இருந்தார்கள் என்றும் ஆனால் அவர்கள் சிறுபான்மையினர் என்றும், பெரும்பாலான தமிழர்கள்/பழந்தமிழர்கள் மது அருந்தி மகிழ்ந்தார்கள் என்பதைச் சொல்லுகின்றது. எட்டுத்தொகையிலும் வருகின்றது. சிறந்த வள்ளல்கள், பெரிய புலவர்கள் எல்லோரும் விருந்தினர்க்கு மது அளித்து விருந்தோம்ப செய்ததாகச் சொல்லப்படுகின்றது. இவற்றை விலக்கவில்லை.

வடக்கிலிருந்து சமணமும், பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கிய போதுதான், மது, புலால் (உயிர் வதை கூடாது என்று) போன்றவை கண்டிக்கப்பட்டு, போதிக்கப்பட்டதாக இந்த வரலாறு சொல்லிச் செல்கிறது. அந்தக் காலட்டத்தில்தான் பழந்தமிழர், இச் சமயங்களினால் நாகரீக வளர்ச்சி அடையத் தொடங்கியதாகவும் சொல்லப்படுகின்றது. அப்படிப் பார்க்கும் போது, அற்குப் பிறகுதான், அதாவது கடைச்சங்க காலத்திற்குப் பிறகுதான் நம் வள்ளுவரும், எழுதி இருக்க வேண்டும். மது, புலால் மட்டுமல்ல, பல சங்ககாலக் கொள்கைகளைப் புறக்கணித்து கூடா ஒழுக்கம் என்று எழுதியுள்ளார். சைவ, வைணவ மதங்களும், சமண, பௌத்த சமயங்கள் சொன்ன மது, புலால் மறுப்பையும் புலன் அடக்கத்தையும் ஏற்றுக் கொண்டு பின்பற்றத் தொடங்கின.  ஆனால், பிற தத்துவ வேறுபாடுகள் பல இருந்தன. (விஜு அவர்கள் தனது ஊமைக்கனவுகள் தளத்தில் சமணம் பற்றி பேசுவதில் நாம் இன்னும் நிறைய அறிந்து கொள்ளலாம். )

சரி இப்ப அதுக்கென்ன? என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று கேட்கின்றீர்கள்தானே.  இதோ. 

யவனர், நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்குஇனிது ஒழுகுமதி ஓங்குவாள் மாற
(புறநானூறு)

(தேறல் = மது; ஒண்தொடி = ஒளி பொருந்திய வளையல்; மடுப்ப = ஊற்றித் தர)

அதாவது, யவனர்கள் என்பவர்கள் ரோமாபுரியிலிருந்து வந்த வணிகர்கள், நல்ல மரக்கலங்களில் கொண்டு வந்த குளிர்ச்சி பொருந்திய நறுமணமிக்க மதுவை, ஒளி பொருந்திய வளையல்கள் அணிந்த இளம்பெண்டிர், பொன்னால் செய்யப்பட்ட கிண்ணங்களில் ஊற்றித் தர, அவ்வினிய மதுவை நாள்தோறும் பருகி மாறன் என்னும் பாண்டிய அரசன் களிப்புடனும், அமைதியுடனும் வாழ்ந்தான். (இந்தப் பாடலின் அர்த்தம் நம் தமிழ் படங்களில் வரும் வில்லன், அல்லக்கைகளையும் நினைவுபடுத்துகின்றது அல்லவா.  அப்போ நம் தமிழ் திரைப்படங்களும் தமிழ் மரபைத்தான் பின் பற்றி எடுக்கின்றனரோ?  பின்னர் ஏன் நாம் மேலை நாட்டுக் கலாச்சாரம் தொற்றிக் கொண்டுவிட்டது என்று குரல் எழுப்புகின்றோம்??!!!!!)

இவ்வாறு இலவந்திகை தூஞ்சிய நன்மாறன் - 82ஆவது பாண்டியன் மன்னனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (நம்ம நெற்றிக்கண் நக்கீரர் தான்) வாழ்த்திப் பாடியதாக வருகின்றது. அடுத்து

இழை அணி வனப்பின் இன் நகை மகளிர்
போக்கு இல் பொலங் கலம் நிறைய, பல் கால்,
வாக்குபு தரத்தர, வருத்தம் வீட,
ஆர உண்டு, பேர் அஞர் போக்கி,
செருக்கொடு நின்ற காலை,

-பொருநராற்றுப்படை- பாடியவர் முடத்தாமக் கண்ணியார், பாடப்பட்ட அரசன் சோழன் கரிகால் பெருவளத்தான்

இதன் பொருள்,  போக்கு இல் என்பது களைப்பு, வருத்தமும் தீரத் தரப்படும் பானம் என்று சொல்லப்பட்டாலும் அது மதுவைத்தான் குறிக்கின்றது என்று தெரியவருகின்றது. அந்தப் “போக்கு இல்” ஐ, முகம் முழுவதும் இனிய அழகிய புன்னகையுடனும், அழகிய அணிகலன்கள் அணிந்தும், பெண்கள் பொற்கலம் நிறைய, பானம் தீர தீரத் தந்து, அதை அருந்தி, வருத்தம் தீர்ந்து செருக்கோடு நின்ற….

அடுத்து கபிலரும், ஔவையாரும்.  செல்வக் கடுங்கோ வாழியாதன் (கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பொறையர் குடிச் சேர மன்னர்களில் ஒருவர்) மன்னனை கபிலர் சந்திக்கின்றார். மன்னர் கபிலரின் கைகள் மென்மையாக இருப்பதாகச் சொல்லவும், கபிலர் சொல்வது, மன்னன் போர் புரிவதால் கைகள் காய்ச்சி உள்ளதாகவும், அரசன் வழங்குவதை மட்டுமே பெற்று உண்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாததால் தனது கைகள் மென்மையாக இருப்பதை இப்படிச் சொல்லுவதாக வருகின்றது.

 ‘மட்டு வாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பதும்’
 அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்...

--புறநானூறு

மன்னனின் கள் வைத்திருக்கும் பாத்திரம் எப்போதும் வாய் திறந்தே இருக்கும் என்பதை “மட்டு வாய் திறப்பவும்”  என்று சொல்லுகின்றார்.

அடுத்து, புறநானுறில் ஒளவையாரின் பாடல்.

ஒளவையை ஆதரித்த மன்னன் அதியமான் நெடுமானஞ்சி என்பவர். அவரது அரண்மனையில் ஒளவைக்குப் பெரும் மதிப்பு. அந்த மன்னன் இறந்தபோது துயர் தாங்காத விறலியாகிய (ஆடல் பெண்) ஒளவை புலம்புகின்றாள்.

"சிறியகட் பெறினே எமக்கு ஈயும் மன்னே
பெரியகட் பெறினே யாம் பாட தான் மகிழ்ந்துண்ணும் மன்னே....."

அதில், சிறிதாகக் கள் பெற்றால் அக்கள்ளை எனக்குத்தருவாய். பெரிய அளவில் கள் பெற்றால் எம்மைப் பாட வைத்து நீயும் அருந்துவாய் என்ற பொருளில் பாடியுள்ளார்.

மதுவைச் சுவைத்து அவற்றை வாழ்வின் இயல்பாக்கியவள் ஒளவை. அதனைப் பாட்டில் வெளிப்படையாகச் சொல்லி இருப்பதும் அவரது நேர்மையையும், தைரியத்தையும் சொல்லுகின்றதாகத்தான் சொல்லப்படுகின்றது.

இதை எல்லாம் வாசித்த போதுதான்...இப்போது மது அருந்தும் பெண்கள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு விடுவார்களோ என்றும் தோன்றியது.  

அதனாலதான், நம்ம தலைவர்களுக்கும், மக்களுக்கும், நாம் தமிழர்கள்! நாம் டாஸ்மாக்கை மூடிவிட்டால், குடிக்கவில்லை என்றால் நாம் தமிழர்களே அல்ல. பண்டையத் தமிழ் கலாச்சாரம், மரபு எல்லாம் அழிந்து வரும் வேளையில், நாம் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள ஓர் அடையாளமாவது இருக்க வேண்டாமா? அப்படின்ற எண்ணமா இருக்குமோ? ஒரு வேளை அதை எல்லாம் இவங்க தப்பா புரிஞ்சுகிட்டுருப்பாங்களோ? அப்புறம் ஏனப்பா மேலை நாட்டுக் கலாச்சாரத்தினால் தமிழகம் கெட்டுவிட்டது என்று கூப்பாடு போடுகின்றோம்?

Image result for Tasmac

நாங்க குடிக்கறதுனாலத்தானே கஜானா நிறையுது நாடு வளருது!!!

சரி அப்புறம் ஏன் திருக்குறளை பேருந்துகளிலும், பல பொது இடங்களிலும் எழுதி வைச்சுருக்காங்க? மது அருந்துதல் வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு அப்படினு எழுதி வைச்சுருக்காங்க? என்னமோ போங்க. நல்லா குடிங்கப்பா குடிங்க! உங்க குடியை நல்லா வளருங்கப்பா, வளருங்க! ஒண்ணும் புரியலை.  ஆனா, ஒண்ணும் மட்டும் நல்லா புரியுது. இது டாஸ்மாக்கிற்கு மட்டுமில்லை, மேல்தட்டு “குடி”ல்களுக்கும் சேர்த்துதான் போகிற போக்கைப் பார்த்தால், தமிழகம் “தண்ணீரில்” மிதப்பதைப் பார்த்தால், குடும்பத் தலைவிகள் பலரின் கண்ணீரில் தமிழகம் தத்தளிப்பதைப் பார்த்தால் டாஸ்மாக் தமிழர்களின் அடையாளமாகிப் போனதோ என்று தோன்றுகின்றது.

(பின் குறிப்பு: டாஸ்மாக்கை மூடாத தமிழகத்திற்குச் சிலகேள்விகள். குடித்துவிட்டுத் தலைக்கவசம் போட்டு ஓட்டலாமா? குடித்திருக்கின்றார்களா என்று ஏன் காவல்துறையினர் பரிசோதனை செய்கின்றார்கள்?  பாண்டிச்சேரியிலிருந்து வரும் போது ஏன் வண்டிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன? முரண்பாடுகள்! ஒன்றுமே புரியலைப்பா...மது, புலால் பற்றி பண்டைய தமிழர்கள், பின்னர் ஏன் மறுத்தல் என்பது பற்றி வேறு ஒரு இடுகை...)

தலைப்பு வைப்பதில் கில்லாடிகள் மதுரைத்தமிழன், சென்னைப்பித்தன் சார், நண்பர் ஸ்ரீராம், சகோதரி துளசி கோபால், சகோதரர் விஜு (சமீபகாலமாக), பழனி கந்தசாமி ஐயா, ந்ண்பர் விசு, நண்பர் கோ இன்னும் சிலர்......மதுரைத் தமிழன் ஏற்கனவே எங்களுக்கும் சொல்லி இருந்தார்...அதனால் இப்படி ஒரு முயற்சி ...ஹிஹிஹி... 

சகோதரர் விஜு அவர்களுக்கு.  இந்தக் கட்டுரையில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டத் தயங்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்,  நாங்களும் கற்றுக் கொள்வோம். பொருட்பிழையாக இருந்தாலும் சரி, சொற்பிழையாக இருந்தாலும் சரி...)

-----கீதா

படங்கள் - இணையம் 

பின் குறிப்பிற்கு ஒரு பின் குறிப்பு :  இதோ இந்த இடுகைக்கு நம் சகோ/நண்பர் விஜு அவர்கள் கொடுத்த பின்னூட்டத்தையும் இத்துடன் கொடுக்கின்றோம்.  எல்லோருக்கும் உதவலாம் அவரது விளக்கமான, பல தகவல்கள் என்ற ஆர்வத்தில்....

ஊமைக்கனவுகள்.20 ஜூலை, 2015 ’அன்று’ 7:17 பிற்பகல்
அன்பு ஆசானே!
சங்க காலம் என்று நாம் இன்று சொல்லத் துணை செய்யும் இலக்கியங்கள், இனக்குழு சமுதாயங்கள் மெல்ல அழிந்தும் முடியுடை அரசுகளின் கீழ் கொணரப்பட்டும் நாகரிக பண்பாட்டு ரீதியாலான ஒரு பெருவேகப்பாய்ச்சலை நிகழ்த்தத் தொடங்கிய காலமாக அறியப்படுகின்றன.
ஆடு மாடுகளுக்காக நிகழந்த போர் ,நாடு பிடிக்கவும் காக்கவுமாக நீண்ட பரிணாம வளர்ச்சி நடைபெற்ற காலம் இது.
வீர மரணம் விருப்புடையது எனவும் களம்படுதல் கொண்டாற்குரியது எனவும் கருதப்பட்ட காலம்.
மலைவேடர்களும் முல்லை ஆயரும் வேளாண்குடிகளும் கடல்பரதவரும் தத்தம் குடி எல்லையில் இருந்து விலகி மற்ற நில மக்களோடு ஊடாட்டம் நிகழ்ந்த காலம்.
வேட்டையாடியும் கிடைத்ததை உண்டும் வாழ்ந்த தொல்குடிகளின் வாழ்வு வித்தியும் உழுதும் உற்பத்தி செய்யக் கற்ற காலம்.
இக்காலத்தில் தமிழ்ப்பெரு நிலப்பரப்பின் இன்னொருபுறம் காணப்படு நிலங்களை வளைத்தும் குடிகளைத் தன்கீழ்ப்படுத்தியும் முடியுடை மூவேந்தர்கள் நாட்டை, அதன் வளங்களை மக்களைக் கூறிடுகிறார்கள்.
சமூகம் தன்னிற் கலக்கத் தொடங்கிய போது, தன் பசிக்குத் தேடிக்கொண்ட இரை பி்னபு உணவாகி , அதன் உற்பத்தியில் அது வணிகப்பொருளாக மாற்றம் அடைகிறது.
மதுவின் வரலாறு இதனோடு தொடர்புடையது.
மீன் தடிந்து, விடக்கு அறுத்து,
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்,
மணல் குவைஇ, மலர் சிதறி,
பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு நொடைக் கொடியோடு “ (176-180. பட்டினப்பாலை.)
சங்க இலக்கியங்களுள் ஒன்றான பட்டினப்பாலையில் வரும் இவ்வரிகள் இன்றைய மதுபானக்கடைகளோடு ஒத்த காட்சியைக் காட்டுவன.
பூம்புகாரின் அங்காடித் தெருக்களின் வணிகக் கடைகளில் தங்கள் வணிகம் செய்யும் பொருள் குறித்த அடையாளக்கொடிகளைப் பறக்கவிட்டுள்ளன.
மதுபானக் கடையின் கொடியும் பட்டொளி வீசிப்பறக்கிறது.
அக்கடையின் முன் மணல் பரப்பப்பட்டுள்ளது.
பூக்கள் சிதறிக்கிடக்கின்றன.
கூட்டம் நிரம்பி வழிகிறது.
கடைக்கு முன் அரிந்த மீன்களைப் பொறித்தும், இறைச்சியை வறுத்தும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் இன்றைய மதுபானக்கடையின் சிற்றுணடிச்சாலையோடு இதனை ஒப்பிட்டுப் பாருங்கள்.
தொல்குடிகள் பண்பாட்டு நிலைகளில் மேம்பட மேம்பட அவர்களின் உணவு முறை மாற்றத்தையும், அது வணிகப்பொருளாக மாறியதையும் நாம் இதுபோன்ற பல சான்றுகளின் வழிக் காணலாம்.
இதனால், அறிவுப்பகிர்ச்சியும், தேடலும் கலைகளும் மேம்படத்தொடங்கின என்பதும் உண்மைதான்.
இக்கலப்பின் விளைவாகக் கள்ளின் பலவகைகளை நாம் சங்க இலக்கியத்தில் காணமுடியும்.
அங்குப் பரத்தமை அனுமதிக்கப்பட்டிருந்தது.
உயிரைப் பொருட்படுத்தா போர்கள், வீரமரணம் விண்ணேற்றம் தரும் கருத்தேற்றம் நிலவியது.
அவை உச்சம்பெற்ற ஒரு கட்டத்தில்தான் சமணம் பௌத்தம் போன்ற சமயங்கள் தமிழ்நாட்டிற்கு வருகின்றன.
மக்களிடையே காணப்படும் சிலவழக்கங்கள் தீங்கானவை என்று உணர்த்துகின்றன.
மெல்ல மெல்ல கள்ளுண்ணுதல் இழிவென்றும், பொருட்பெண்டிர் வழக்கு தகாதென்றும் சமூகத்திற்கு, தனிமனிதனுக்குத் தீங்கு செய்பவை இவையிவை என்று வகைப்படுத்தி அவற்றைத் தவிரக்கச் சொல்லும் கோட்பாடுகள் உருப்பெற்று வலிமை அடைகின்றன.
குடிக்கும் ஒவ்வொருவரும் அப்பழக்கத்தின் தொடக்கத்திலோ தொடர்ச்சியிலோ ஒருகணமேனும் இது தவறென்னும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டிருந்தால் அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளாய்க் கற்பிக்கப்பட்ட இக்கருத்தேற்றம்தான் காரணம்.
இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயரால் நம் நாட்டில் நேர்ந்த சமூக மாற்றங்களோடு இதனை ஒப்பிடலாம்.
சங்க காலத்தில் கள் இருந்தது எல்லாரும் கள்குடியர்களாக இருந்தார் என்று ஒருவர் சொல்வது, தமிழகத்தில் தீண்டாமை இருந்தது, குழந்தை மணம் இருந்தது இப்போது இருந்தால் என்ன என்று கேட்பதைப் போன்றது.
அரசு இதை ஊக்குகிறது என்பதுதான் பேரவலம்.
வரலாறு நிகழ்ந்ததன் தொகுப்பு.
பின்னால் சென்று அதனை விருப்பம்போல மாற்ற இயலும் காலயந்திரம் நம்மிடையே இல்லை.
ஆனால் வரலாற்றில் இது இருந்திருக்கலாம், இது தவிர்த்திருக்கலாம் என்று அறிவதை நம்காலத்தில் ஏற்படாமல் தடுக்க நம்மால் முடியும்.
பொழுது விடிவதும் முடிவதும் குடிக்க மட்டுமே என்று எண்ணும் மக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
உடலுறுப்புகள் சேதமாகிக் கொண்டிருக்கின்றன.
குடும்பங்கள் அதிலுள்ள நாளைய தலைமுறைகள் நசிந்து கொண்டிருக்கின்றன.

மெல்லக் கொல்லும் நஞ்சினை அரசு ஊட்டிக் கொண்டிருக்கிறது.
சமுதாயத்தில் நிகழும், கொலை, கொள்ளை, பாலியல்வன்முறை, விபத்து போன்றவற்றிற்கான அசாத்தியத் துணிச்சலை மது ஏற்படுத்துகிறது.
யாராயிருந்தாலும் இன்றைய தமிழக மதுக்கடைகளைக் காண்பவரால் ஒருபோதும் அதனை நியாயப்படுத்த முடியாது.
உங்கள் பதிவின் முதல் வாசிப்பிலேயே உங்கள் பதிவில் மேற்கோளாகவேனும் நீங்கள் காட்ட வேண்டும் என நான் நினைந்தது,
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
எனும் இவ்விரு குறள்களைத்தான்.
உங்கள் பதிவில் நான் கண்ட குறை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்எனக் குறிப்பிட்ட உங்களின் அந்தத் தாழ்மைதான்.
என்னிடத்து ஒருபோதும் அது தேவையில்லை.

நன்றி ஆசானே.

மிக்க நன்றி சகோ தங்களது மிக மிக அருமையான, விளக்கமான தகவல்களுக்கு...

62 கருத்துகள்:

  1. பல இடங்களிலும் தாய்மார்கள் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டு தான் இருக்கிறது... இது எங்கு சென்று முடியுமோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டிடி! ஏதாவது செய்தால் நலம் தான்...மிக்க நன்றி..

      நீக்கு
  2. அசர வைக்கும் ஆய்வு. கள்ளுண்ணாமையும் சங்க காலத்துக்கு முன்பிருந்தே போற்றப்பட்டதை போதிக்கப்பட்டதை இலக்கியம் வழி அறியலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆய்வு எல்லாம் இல்லை சார். நாங்கள் வாசித்த தமிழர் வளர்ச்சி, வாழ்வியல் பற்றிய புத்தகத்தில் இதைக் குறித்து வாசித்த போது இப்படி எழுதினால் என்ன என்ரு தோன்றியதுதான்...மிக்க நன்றி சார்

      நீக்கு
  3. தமிழக இனிப்புக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என்று குரல் கொடுங்களேன்? சர்க்கரை நோய் பரவாயில்லையா? குழந்த்தைகளையும் அல்லவா அடிமைப் படுத்துகிறது?
    டாஸ்மாக் எலீட் இப்போது தான் கவனிக்கிறேன்..
    இன்னொன்று: இலவசக் கலாசாரம் பரப்பக் காசுக்கு அரசாங்கம் எங்கே போகும்? சாராயத்தையும் இலவசமாகத் தராத வரையில் சந்தோசப்படலாம். யார் கண்டார்கள்? அடுத்த தேர்தல் வரும் போது தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்...எனக்கும் அந்த ஐடியா உண்டுதான்...ஏனென்றால் நாங்களும் ரொம்ப இனிமையானவங்க...ஹிஹிஹி...பின்னே மூலைக்கு மூலை இனிப்பு கடைகள் ரொமப்வே டெம்ப்ட் பண்ணுதுங்க....ஹும்...இதுல ஐஸ்க்ரீம் கடைகள் வேற...ஆமாம் குழந்தைகளையும் தான்...இப்பல்லாம் சின்ன வயசுலேயே சர்க்கரை நோய் வந்துருதே...
      எலிட் ஆரம்பித்து ஆய்டுச்சே போன வருஷமே....

      ஐயையோ சார் இந்த இலவசல் கலாச்சாரம்...இந்தப் பாக்கெட்டா கிளப்பி விட்டுட்டீங்கனு சொல்லுங்க அஹஹ்ஹாஹ்...(சூப்பர் ஐடியானு அவங்களுக்குக் கேட்டுருக்கபோகுது சார்....!!!)

      நீக்கு
  4. மருந்து லாபி, புகையிலை லாபி, ஆல்கஹால் லாபி,ஆயுத லாபி இந்த நான்கும் தான் இந்த உலகை, நாட்டை, மாநிலத்தை இயக்கிக் கொண்டு இருக்கின்றது. நாம் பேசுவதெல்லாம் தனி மனிதர் வாழ்க்கையின் வீழ்ச்சி. ஆனால் தற்போது அவையெல்லாம் தாண்டி எங்கேயோ போய்விட்டது. 26 000 கோடி முதல் 30 000 கோடி வரை தமிழ்நாட்டு அரசுக்கு வரக்கூடிய ஒரு ஆண்டு வருமானம் என்பது வெறுமனே வரிகள் மட்டும். ஆனால் இதற்குப் பின்னால் புழங்கக்கூடிய தொகை என்பதும், கிடைக்கும் ஆதாயம், பெறக்கூடிய நபர்கள், சென்று சேரும் நபர்கள் என்பது அதன் தொகைகளை கால்குலேட்டரில் போட்டாலும் எண்கள் அடங்காது. முக்கிய பார் களில் கிடைக்கும் ஒரு நாள் வருமானம் என்பது சராசரி சம்பாரிக்கும் ஐந்து மாத சம்பளம் என்றால் யூகித்துக் கொள்ளுங்களேன். அதைப் போல ஒவ்வொரு கடைகளிலும் விற்கும் சரக்குகளின் மேல் அதிகப்படியாக ஏற்றி வைத்து விற்கும் விலையை கணக்கிட்டு மாத வருமானத்தை எண்ணிப் பார்த்தால் மயக்கமே வந்து விடும்.

    இன்னும் பல உள்ளது. ஆராய்ந்து பார்த்து ஆச்சரியப்பட்டது தான் மிச்சம். தவறு அரசின் மேல் மட்டுமல்ல. இரண்டு பக்கமும் உள்ளது. இந்த விசயத்தில் கேரளா அதிக குடிகாரர்கள் இருந்தாலும் அங்குள்ள நடைமுறைகள் எவ்வளவோ பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! நீங்கள் சொல்லி இருக்கும் நான்குமே இயக்கிக் கொண்டிருப்பது 100% ...மருந்துத் துறையில் எனது உறவினர் இருக்கின்றார்...அவர் சொல்லியத் தகவல்கள் பல ஆச்சரியத்தைத்தான் விளைவித்தது. இப்படியெல்லாமா என்றும் கேள்வி எழுந்தது. அதைப் பற்றி எழுதுவதாக இருக்கின்றோம் நணப்ரே!

      உங்கள் தகவல் அறிந்து கொண்டோம்....ஆம் இன்னும் பல உள்லது...எழுத வேண்டும் என்றால் பெரும் தொடராக எழுத வேண்டிவரும்.

      அதென்னவோ சரிதான்...கேரளா கலாச்சாரம் என்ற பெயரில் அவர்கள் நிறையவே குடித்தாலும் இங்கு விட நடை முறைகள் பரவாயில்லைதான் என்றாலும் சாக்கடையில் எந்த சாக்கடை நல்ல சாக்கடை என்பது போலாகி விடுகின்றதோ?

      மிக்க நன்றி நண்பரே நல்ல தொரு விளக்கமான பின்னூட்டத்திற்கு...

      நீக்கு
  5. நல்ல ஆய்வு கீதா. இலக்கியங்களில் பல இடங்களில் கள் அருந்திய சம்பவங்கள் பாடப்பட்டுள்ளது. தப்பில்லை இராஜராஜன் கூட குடித்தான் என்று ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.. :( அன்றைக்குப் போருக்குச் செல்வதற்கு முன் குடித்திருக்கலாம், வாழ்வு முறையே அப்படி இருந்ததா தெரியவில்லை..

    மது வியாபாரத்தினால்தான் தமிழகத்தின் பெரும்பான்மை வருமானம் வருகிறதாம்..அப்புறம் எப்படி மூடுவார்கள்?
    நம்ம குடும்பம், நம்ம பணம், நம்ம உடல்நலம் என்று ஒவ்வொருவரும் உணராத வரை ஒன்றும் செய்ய இயலாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி க்ரேஸ்! உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் ஆய்வு எதுவும் செய்யவில்லை. பண்டைய தமிழர் வாழ்க்கை முறை பற்றி அறிய நூலகத்தில் தேடப் போக இங்கு சொல்லப்பட்டதை வாசித்ததும் இதை அப்படியே இப்போதைய நிகழ்வுகளுக்குப் பொருத்தி எழுதிடலாமோ என்ற ஒரு எண்ணம் வந்ததன் விளைவே இது. உங்களைப் போலெல்லாம் எனக்கு அந்த அளவிற்குத் தெரியாது. விஜு அவர்களின் பதிவுகளையும், உங்கள் பதிவுகளையும்,வாசித்தப் பிறகு உறங்கிக் கிடந்த தமிழ் உணர்வு வெளிவந்து கொஞ்சம் நூலகம் பக்கம் எட்டிப் பார்த்ததனால்...முன்பெல்லாம் நிறைய அதாவது பள்ளி, கல்லூரிப் பருவத்தில் வாசிப்பு உண்டு...இப்போது குறைந்துவிட்டது...

      நீக்கு
  6. மிக அருமையான கட்டுரை...
    அருமை மேடம்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல கட்டுரை....

    டாஸ்மாக் எலீட் வேறு இருக்கிறதா..... நல்ல முன்னேற்றம். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட் ஜி! கருத்திற்கு! ஐயஓ அதை ஏன் கேக்கறீங்க...ரொம்பவே முன்னேற்றம்...

      நீக்கு
  8. பண்டைத் தமிழன் குடித்தான் என்பதற்காக இன்றைய தமிழனும் குடிப்பதை நியாயப் படுத்த முடியாது ,,அப்புறம் நாகரீக வளர்ச்சி எதை சொல்வது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக ஜி! நாகரீக வளர்ச்சியில் குடி மறுக்கப்பட்டது. அப்படிப் பார்த்தால் நாகரீகம் அடைந்தோம் என்றா இல்லை என்றா? அடையவில்லை என்றுதானே ஆகின்றது? அதைத்தான் இங்கு சொல்லிருக்கோம் ஜி....மிக்க நன்றி ஜி...

      நீக்கு
  9. இவ்வளவு ஆராய்ச்சிகளா !!

    டாஸ்மாக்கை மூடினால் கள்ளாச் சாராயம் தலை தூக்கும். நாட்டில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும், நாம்தான் நமக்கானதைத் தெரிவு செய்ய வேண்டும். விழிப்புணர்வு வேண்டும். பெரியவர்களைப் பார்த்து சின்னப் பிள்ளைகளும் சீரழிவது வேதனை. இவர்களால் வேதனையடையும் பெண்கள் ஒருபுறம் ! என்ன சொல்வது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி, டாஸ்மாக்கை மூடணும் என்றால் கள்ளச் சாராயமும் கூடாது என்ற அர்த்தம்தானே...நாம்தான் நல்லதைத் தேர்ந்தெடுக்கணும் என்பதெல்லாம் நடக்காது இங்கு ஏனென்றால் அந்த விழிப்புணர்வு இருந்தால் மேலை நாடுகள் செல்லும் போது பின்பற்றுவதை ஏன் இங்கு பின்பற்றுவதில்லை? இங்கு எல்லாமே சட்டம் என்ற ஒன்று வந்தால்தான் செய்வோம் என்பதாகி உள்ளதால்...அரசு பொறுப்பாக இருந்தால் மக்களும் அவ்வழி...

      நீக்கு
  10. தமிழைக் காட்டி போதை ஏற்றி விட்டீர்கள். டாஸ்மாக்கில் மது வாங்குபவர்கள் ஆளுக்கொரு சங்ககாலத் தமிழ்ப் பாடல் ஒன்றைச் சொன்னால்தான் மது வழங்கப் படும் என்று கண்டிஷன் போடலாம். தினமும் வெவ்வேறு சொல்ல வேண்டும்! டாஸ்ம்மாக்கில் 'குடி உடல் நலத்தைக் கெடுக்கும்' என்றும், சிகரெட்டின் மீது 'புகைப் பிடித்தல் உடல் நலத்துக்குத் தீங்கானது' என்றும் எழுதி இருப்பதைப் பார்க்கும் கொலைகாரர்கள் இனி கொலையைச் செய்துவிட்டு 'கொலை செய்தல் தண்டனைக்குரியது; பாவம்' என்று எழுதி வைத்து விட்டுக் கொலை செய்வார்களோ! டவுட்டு!

    தலைப்பு வைக்கும் திறமையாளர்கள் லிஸ்ட்டில் உங்கள் தயவால் எனக்கும் ஒரு இடம்! ஹா...ஹா...ஹா... எனிஹவ் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாஸ்ம்மாக்கில் 'குடி உடல் நலத்தைக் கெடுக்கும்' என்றும், சிகரெட்டின் மீது 'புகைப் பிடித்தல் உடல் நலத்துக்குத் தீங்கானது' என்றும் எழுதி இருப்பதைப் பார்க்கும் கொலைகாரர்கள் இனி கொலையைச் செய்துவிட்டு 'கொலை செய்தல் தண்டனைக்குரியது; பாவம்' என்று எழுதி வைத்து விட்டுக் கொலை செய்வார்களோ! டவுட்டு!// அட ஆமாம் ல.....சரியான கேள்வி...எதுக்குத்தான் வார்னிங்க் அப்படினு இல்லாம போய்விட்டது...ம்ம்ம் என்ன செய்ய...
      உண்மையத்தானே சொல்லிருக்கோம்...உங்கள் இடம் பற்றி...ஹ்ஹ

      மிக்க நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  11. சிந்திக்கத் தூண்டும் அற்புதமான பதிவு
    பகிர்ந்தமைக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. நல்ல கட்டுரை.
    //நம்ம குடும்பம், நம்ம பணம், நம்ம உடல்நலம் என்று ஒவ்வொருவரும் உணராத வரை ஒன்றும் செய்ய இயலாது//
    கிரேஸ் சொல்வது போல் அவர்களே உணர்ந்து திருந்தினால் நல்லது.

    பதிலளிநீக்கு
  13. "எழுத்து ஒரு கூரிய வாள்! எழுத்தின் சக்தி பெரிது அப்படினு எல்லாம் கூக்குரல் போடத்தான் செய்கின்றார்கள்.
    இதற்கொன்றும் குறைச்சல் இல்லை.
    நாட்டின் தூண் இந்த ஊடகம் என்றெல்லாம் மார்தட்டிப் பேசுவதுண்டு. ஆனால் நடைமுறையில் ஊடகங்கள் எந்தப் புரட்சியையும் கொண்டுவருவதாகத் தெரியவில்லை." என்ற உண்மையை வெளிப்படுத்தியமைக்கு முதலில் எனது பாராட்டுகள்.

    புகைத்தல் பொருள் விற்கும் பெட்டியில்
    "புகைத்தல் உடல் நலத்திற்கு கேடாகலாம்" என்று தான் போட்டிருப்பர். ஆயினும்,
    "புகைத்தல் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும்" என்று ஏன் போட்டிருக்கவில்லை.
    அதேபோல
    குடித்தல் குவளைகளில் (போத்தல்களில்)
    "அற்ககோல் உங்கள் உயிரைக் குடிக்கும்" என்றெழுதாமல்
    "அதிக அற்ககோல் உடலுக்குக் கேடாகலாம்" என்று தானே எழுதுறாங்க

    ஊடகங்களிலோ விளம்பரங்களிலோ உறைப்பாக எழுதாமை தான்
    புகைப்போரும் குடிப்போரும் அஞ்சாமல்
    புகைக்கிறாங்க... குடிக்கிறாங்க...

    புகைத்தலைக் குடித்தலைக் கட்டுப்படுத்த பொதுப்பணி அமைப்புகள் பொதுவேலைத்திட்டத்தில் இறங்க வேண்டும். அவ்வாறாயின் பல குடும்பங்கள் மகிழ்வான வாழ்வைச் சுவைக்கும் என நம்பலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊடகங்களிலோ விளம்பரங்களிலோ உறைப்பாக எழுதாமை தான்
      புகைப்போரும் குடிப்போரும் அஞ்சாமல்
      புகைக்கிறாங்க... குடிக்கிறாங்க...

      புகைத்தலைக் குடித்தலைக் கட்டுப்படுத்த பொதுப்பணி அமைப்புகள் பொதுவேலைத்திட்டத்தில் இறங்க வேண்டும். அவ்வாறாயின் பல குடும்பங்கள் மகிழ்வான வாழ்வைச் சுவைக்கும் என நம்பலாம்.// நல்ல கருத்து நண்பரே! மிக்க நன்றி!

      நீக்கு
  14. அம்மா உணவகம் அம்மா சிமெண்ட் அம்மா குடிநீர் வரிசையில் அம்மா டாஸ்மாக் என்று பெயர் மாற்றிவிட்டால் போகிறது.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹ ஐயையோ இப்படி எல்லாம் ஐடியா கொடுத்தா.....ம்ம்ம்

      மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு

      நீக்கு
  15. இன்னும் சற்று ஆழமாக யோசித்திருக்கலாம், நீங்கள் சங்க இலக்கியத்திற்கு சென்று சொன்ன மேற்கோள்கள் அனைத்தும் எதற்காக என்று தெளிவில்லாத உணர்வு!

    தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் மதுவின் கோரம் தலைவிரித்து ஆடுகிறது, இங்கு என்னவெனில் மக்கள் அதிகம் அதிலையே விழுந்து கிடக்கின்றனர்!
    கள்ளுக்கும், தற்போதைய சரக்கு களுக்கும் வித்தியாசம் நூறு இருக்கிறது. அது உடலுக்கு ஒருவித மருந்தாகவும் இருந்தது? டாஸ்மாக் மதுக்கள் அனைத்துமே உடலைக் கொள்ளும் விசங்கள் மட்டுமே!

    அரசு எந்திரங்கள் அதலபாதாளத்தில் கிடைக்கயில், மனிதனாய் பாத்து திருந்தாவிட்டால் திருட்டை மட்டுமல்ல குடியையும் ஒழிக்க முடியாது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அரசன்!அதைச் சொன்னதற்கு காரணமே இடையில் மறைமுகமாகவும் வருகின்றது....தலைப்பும் அதுதானே...நீங்கள் சொல்லும் வித்தியாசம் புரிகின்றது..நாங்கள் ஒரு பத்தியை அப்படியே எடுத்துவிட்டோம்...ஆனாலும் அர்த்தம் மாறியதாகத் தெரியவில்லை...கொஞ்சம் நையாண்டிதானே தவிர ....நீங்கள் இங்கு சகோ விஜு அவர்களின் கருத்தையும் பாருங்கள்..முடிந்தால்..

      நீக்கு
  16. விரிவான ஆராய்ச்சியே நடத்தி விட்டீர்கள். அப்படி என்னதான் இருக்கிறது அதில். இப்படி அடிமைப் படுத்தி வைத்திருக்கிறதே . இதனை கட்டுப் படுத்த பெண்கள் தீவிர முயற்சி மேற்கொண்டால் முடியும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆராய்ச்சி எல்லாம் இல்லை நண்பரே! புத்தகம் வாசிக்கும் போது அறிய வந்ததை இன்றைய நிலைமையுடன் கொஞ்சமே கொஞ்சம் பொருத்திப் பார்த்ததன் விளைவு...,,உங்கள் கருத்தும் சரியாகத்தான் தோன்றுகின்றது..பெண்கள் புரட்சி செய்தால் நடக்கலாம் இல்லையா? ஆள்பவரும் பெண்தானே...!!!

      நீக்கு
  17. ஒரு வாரமாக வலைப்பக்கம் வரவில்லை. இப்போது வந்து பார்த்தால் சூடான பதிவாக தங்களின் பதிவு இருந்தது. ஆய்வோடு அறியத்தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே! கண்டு பல நாள் ஆகிவிட்டது. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு.

      நீக்கு
  18. இப்படி விஜூ அண்ணா போல இப்படி ஆளாளுக்கு மேற்கோள் காட்ட தொடங்கினால் என் பிழைப்பு என்னாவது:))) இன்றைய சூழலுக்கு அவசியமான, வருந்தத்தக்க பதிவு சகாஸ்:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னகஹ்கோதரி.... சகோ விஜு அவர்களுடன் எல்லாம் ஒப்பிட்டுக் கொண்டு...சகோ விஜு அவர்கள் எல்லாம் தனி...இது சும்மா வாசித்த போது கொஞ்சம் நையாண்டியுடன் எழுதலாமே என்று தோன்றியதன் விளைவு....மிக்க நன்றி ...

      நீக்கு
  19. பழந்தமிழ் நாட்டில் மது எவ்வாறு புழங்கிக்கொண்டிருந்தது என்பதை நீங்கள் எழுதியிருக்கும் விதத்தில் பார்க்கும்போது ஓர் உண்மை புலனாகிறது: பெண்கள் ஊற்றிக்கொடுத்தால்தான் மது குடிக்கப்பட்டது! தாங்களாகவே ஆண்கள் மதுவைத் தொடவில்லை என்று தெரிகிறது! அதாவது, ஆண்கள் அளவுக்கு மீறி குடித்துவிடாமல், இந்தப் பெண்கள், பக்கத்தில் இருந்து கண்காணித்து வந்திருக்கிறார்கள் என்று புலனாகிறது. இன்றைய நிலையில், இதே வழக்கத்தை டாஸ்மாக்கிலும் கடைபிடித்தால் என்ன? அதாவது, 'கண்காணிப்பு பெண்கள்' என்ற பெயரில் ஓர் புதிய துறையை ஏற்படுத்தி, அதன்மூலம் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலை கொடுக்கலாம். குடிப்பவர்களையும் நெறிப்படுத்தலாம். டாஸ்மாக்கை மூடாமலேயே இதைச் செய்யலாம். (இது எப்டி இருக்கு?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ்...அப்படியும் சொல்ல முடியாது சார்! அவர்கள் ஊற்றிக் கொடுத்ததாகத்தான் சொல்லப்படுகின்றது...ஹஹஹ என்ன சார் ஒழிக்கணும்னு பேசும் போது நீங்க என்னடானா வேலை வாய்ப்பு னு..அஹஹஹ் நல்லாருக்கு ஐடியா...ஜெஜெகிட்ட பேசினீங்களா சார் இதப் பத்தி?!!!

      நன்றி சார்

      நீக்கு
  20. டாஸ்மாக்கில் ஆரம்பித்து சங்க இலக்கியம். இருந்தாலும் டாஸ்மாக் பற்றிய ஆதங்கம் அனைவருக்கும் உள்ளதே. இதற்கு ஒரு முடிவு தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  21. வழக்கம் போலவே வலைஆசானின் அசத்தல் பதிவு !

    புதுவை யூனியனை சேர்ந்த காரைக்கால் என் பூர்வீகம். என் தந்தை பிறந்த ஊர் காரைக்காலிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் நாகூர். நாகூர் தமிழ் நாட்டை சேர்ந்தது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் யூனியனிலோ இன்றைய டாஸ்மார்க் போல தெருவுக்கு பல கடைகள் இருந்த காலம் !

    காரைக்கால்வாசிகளை " குடிமக்கள் " வந்திருக்கிறார்கள் என கிண்டல் செய்வார்கள். ஆனால் இன்று நிலமை அப்படியே தலைகீழ் !

    அரசியல்வாதிகள் நாட்டை சீர்திருத்துவார்கள் என்ற " நம்பிக்கைக்கு " ஈடானது பிரபல ஊடகங்களின் சமூக அக்கறை ! " சர்க்குலேஷன் " ஒன்றே அவர்களின் குறிக்கோள். கவணித்து பார்த்தால் மக்களுக்கு எதில் ஆர்வமோ அதையே புத்திசாலித்தனமாக எழுதி ஈர்ப்பது புரியும் !

    இவர்களின் சாதனையெல்லாம் நாபிச்சுழி நடிகைகளின் அட்டைப்படங்கள்தான் !!! யாருக்கும் தெரியாத " பவர் ஸ்டார்களுக்கு " பக்கம் ஒதுக்கி அவர்களையும் வருங்கால் முதல்வர் வேட்பாளர்களாக தயார்படுத்திவிடுவதுதான் இவர்களின் புரட்சி !

    மது அருந்துதலுக்கும் மதுவுக்கு அடிமையாவதற்குமான வேறுபாடு நம் சமூகத்துக்கு தெரியாமல் போனதும், ஆளும் வர்க்கமே மக்களை மதுவுக்கு பழக்குவதும்தான் இந்த சமூகத்தைன் வேதனை !

    இன்னும் நிறைய எழுத வேண்டும்.... நீண்டுவிடும் !!

    மிக வசியமான பதிவுக்கு நன்றி

    சாமானியன்

    எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! மது அருந்துதலுக்கும், மதுவுக்கு அடிமையாவதற்குமான வேறுபாடு தெரியாது என்பது அறிந்தாலும், பெரும்பான்மையோர் அடிமையாகிவிடுகின்றார்கள் அரசே அதை ஆதரிப்பதுதான் இங்கு வேதனை..

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  22. கள்ளைப் பற்றித்தான் அவர்கள் எல்லோரும் பேசியிருக்கிறார்கள்..டாஸ்மாக்கில் கள் கிடைப்பதில்லை போலிருக்கிறதே!
    jokes apart,அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ ரசித்தோம் தங்களின் கருத்தை....மிக்க நன்றி சார்..

      நீக்கு
  23. அன்பு ஆசானே!

    சங்க காலம் என்று நாம் இன்று சொல்லத் துணை செய்யும் இலக்கியங்கள், இனக்குழு சமுதாயங்கள் மெல்ல அழிந்தும் முடியுடை அரசுகளின் கீழ் கொணரப்பட்டும் நாகரிக பண்பாட்டு ரீதியாலான ஒரு பெருவேகப்பாய்ச்சலை நிகழ்த்தத் தொடங்கிய காலமாக அறியப்படுகின்றன.

    ஆடு மாடுகளுக்காக நிகழந்த போர் ,நாடு பிடிக்கவும் காக்கவுமாக நீண்ட பரிணாம வளர்ச்சி நடைபெற்ற காலம் இது.

    வீர மரணம் விருப்புடையது எனவும் களம்படுதல் கொண்டாற்குரியது எனவும் கருதப்பட்ட காலம்.

    மலைவேடர்களும் முல்லை ஆயரும் வேளாண்குடிகளும் கடல்பரதவரும் தத்தம் குடி எல்லையில் இருந்து விலகி மற்ற நில மக்களோடு ஊடாட்டம் நிகழ்ந்த காலம்.

    வேட்டையாடியும் கிடைத்ததை உண்டும் வாழ்ந்த தொல்குடிகளின் வாழ்வு வித்தியும் உழுதும் உற்பத்தி செய்யக் கற்ற காலம்.

    இக்காலத்தில் தமிழ்ப்பெரு நிலப்பரப்பின் இன்னொருபுறம் காணப்படு நிலங்களை வளைத்தும் குடிகளைத் தன்கீழ்ப்படுத்தியும் முடியுடை மூவேந்தர்கள் நாட்டை, அதன் வளங்களை மக்களைக் கூறிடுகிறார்கள்.

    சமூகம் தன்னிற் கலக்கத் தொடங்கிய போது, தன் பசிக்குத் தேடிக்கொண்ட இரை பி்னபு உணவாகி , அதன் உற்பத்தியில் அது வணிகப்பொருளாக மாற்றம் அடைகிறது.

    மதுவின் வரலாறு இதனோடு தொடர்புடையது.

    “மீன் தடிந்து, விடக்கு அறுத்து,
    ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்,
    மணல் குவைஇ, மலர் சிதறி,
    பலர் புகு மனைப் பலிப் புதவின்
    நறவு நொடைக் கொடியோடு “ (176-180. பட்டினப்பாலை.)

    சங்க இலக்கியங்களுள் ஒன்றான பட்டினப்பாலையில் வரும் இவ்வரிகள் இன்றைய மதுபானக்கடைகளோடு ஒத்த காட்சியைக் காட்டுவன.

    பூம்புகாரின் அங்காடித் தெருக்களின் வணிகக் கடைகளில் தங்கள் வணிகம் செய்யும் பொருள் குறித்த அடையாளக்கொடிகளைப் பறக்கவிட்டுள்ளன.
    மதுபானக் கடையின் கொடியும் பட்டொளி வீசிப்பறக்கிறது.
    அக்கடையின் முன் மணல் பரப்பப்பட்டுள்ளது.
    பூக்கள் சிதறிக்கிடக்கின்றன.
    கூட்டம் நிரம்பி வழிகிறது.
    கடைக்கு முன் அரிந்த மீன்களைப் பொறித்தும், இறைச்சியை வறுத்தும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    கொஞ்சம் இன்றைய மதுபானக்கடையின் சிற்றுணடிச்சாலையோடு இதனை ஒப்பிட்டுப் பாருங்கள்.

    .................................................................................................தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே சகோ! ப்ரதிபலிக்கின்றது இல்லையா? இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தது சகோ! இப்படி பல மேற்கோள்கள் கிடைக்குமே தங்களிடம் இருந்து என்று...

      மிக்க நன்றி சகோ! குறித்து வைத்துக் கொண்டோம்....மிக்க நன்றி!

      நீக்கு
  24. தொல்குடிகள் பண்பாட்டு நிலைகளில் மேம்பட மேம்பட அவர்களின் உணவு முறை மாற்றத்தையும், அது வணிகப்பொருளாக மாறியதையும் நாம் இதுபோன்ற பல சான்றுகளின் வழிக் காணலாம்.

    இதனால், அறிவுப்பகிர்ச்சியும், தேடலும் கலைகளும் மேம்படத்தொடங்கின என்பதும் உண்மைதான்.

    இக்கலப்பின் விளைவாகக் கள்ளின் பலவகைகளை நாம் சங்க இலக்கியத்தில் காணமுடியும்.

    அங்குப் பரத்தமை அனுமதிக்கப்பட்டிருந்தது.

    உயிரைப் பொருட்படுத்தா போர்கள், வீரமரணம் விண்ணேற்றம் தரும் கருத்தேற்றம் நிலவியது.

    அவை உச்சம்பெற்ற ஒரு கட்டத்தில்தான் சமணம் பௌத்தம் போன்ற சமயங்கள் தமிழ்நாட்டிற்கு வருகின்றன.

    மக்களிடையே காணப்படும் சிலவழக்கங்கள் தீங்கானவை என்று உணர்த்துகின்றன.
    மெல்ல மெல்ல கள்ளுண்ணுதல் இழிவென்றும், பொருட்பெண்டிர் வழக்கு தகாதென்றும் சமூகத்திற்கு, தனிமனிதனுக்குத் தீங்கு செய்பவை இவையிவை என்று வகைப்படுத்தி அவற்றைத் தவிரக்கச் சொல்லும் கோட்பாடுகள் உருப்பெற்று வலிமை அடைகின்றன.
    குடிக்கும் ஒவ்வொருவரும் அப்பழக்கத்தின் தொடக்கத்திலோ தொடர்ச்சியிலோ ஒருகணமேனும் இது தவறென்னும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டிருந்தால் அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளாய்க் கற்பிக்கப்பட்ட இக்கருத்தேற்றம்தான் காரணம்.

    இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயரால் நம் நாட்டில் நேர்ந்த சமூக மாற்றங்களோடு இதனை ஒப்பிடலாம்.

    சங்க காலத்தில் கள் இருந்தது எல்லாரும் கள்குடியர்களாக இருந்தார் என்று ஒருவர் சொல்வது, தமிழகத்தில் தீண்டாமை இருந்தது, குழந்தை மணம் இருந்தது இப்போது இருந்தால் என்ன என்று கேட்பதைப் போன்றது.

    அரசு இதை ஊக்குகிறது என்பதுதான் பேரவலம்.

    வரலாறு நிகழ்ந்ததன் தொகுப்பு.

    பின்னால் சென்று அதனை விருப்பம்போல மாற்ற இயலும் காலயந்திரம் நம்மிடையே இல்லை.

    ஆனால் வரலாற்றில் இது இருந்திருக்கலாம், இது தவிர்த்திருக்கலாம் என்று அறிவதை நம்காலத்தில் ஏற்படாமல் தடுக்க நம்மால் முடியும்.

    பொழுது விடிவதும் முடிவதும் குடிக்க மட்டுமே என்று எண்ணும் மக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.

    உடலுறுப்புகள் சேதமாகிக் கொண்டிருக்கின்றன.

    குடும்பங்கள் அதிலுள்ள நாளைய தலைமுறைகள் நசிந்து கொண்டிருக்கின்றன.

    மெல்லக் கொல்லும் நஞ்சினை அரசு ஊட்டிக் கொண்டிருக்கிறது.

    சமுதாயத்தில் நிகழும், கொலை, கொள்ளை, பாலியல்வன்முறை, விபத்து போன்றவற்றிற்கான அசாத்தியத் துணிச்சலை மது ஏற்படுத்துகிறது.

    யாராயிருந்தாலும் இன்றைய தமிழக மதுக்கடைகளைக் காண்பவரால் ஒருபோதும் அதனை நியாயப்படுத்த முடியாது.

    உங்கள் பதிவின் முதல் வாசிப்பிலேயே உங்கள் பதிவில் மேற்கோளாகவேனும் நீங்கள் காட்ட வேண்டும் என நான் நினைந்தது,

    “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
    நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.“

    “தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும்.“

    எனும் இவ்விரு குறள்களைத்தான்.

    உங்கள் பதிவில் நான் கண்ட குறை ‘தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிட்ட உங்களின் அந்தத் தாழ்மைதான்.

    என்னிடத்து ஒருபோதும் அது தேவையில்லை.

    நன்றி ஆசானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் இங்கு சொல்லி இருக்கும் கருத்துகள் அனைத்திற்கும் மிக்க நன்றி சகோ! இதனை அந்தப் புத்தகத்தில் இருந்து தெரிந்து கொண்டாலும் நீங்கள் இன்னும் அதை விளக்கமாகச் சொல்லி இருப்பதிலிருந்து நிறைய தெரிந்து கொண்டுள்ளோம்.

      //ஒருகணமேனும் இது தவறென்னும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டிருந்தால் அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளாய்க் கற்பிக்கப்பட்ட இக்கருத்தேற்றம்தான் காரணம்.// ஆம்! சரிதான்....

      திருக்குறள் எடுத்து வைத்திருந்தோம். ஆனால் இந்த இடுகை கொஞ்சம் கேலி பேசி, அதாவது அரசு அன்றைய காலகட்டத்தை மனதில் கொண்டு தமிழன் என்ற அடையாளம் சொல்ல என்று நையாண்டியில் எழுதத் தோன்றியதால் அதில் இந்தக் குறள்களைச் சொல்லாமல் விட்டோம். மதுவைப் பற்றி விழிப்புணர்வு என்றால் இதைச் சொல்லலாமே என்று விட்டுவிட்டோம். நீங்கள் சொல்லிய பிறகுதான் அதையும் இறுதியில் சேர்த்து இருக்கலாமோ அரசிற்குச் சொல்லுவது போல் என்று தோன்றியது. மிக்க நன்றி அருமையான பின்னூட்டத்திற்கு..

      இனி நீங்கள் சொல்லிய குறை வராது சரியா சகோ! மீண்டும் மிக்க நன்றி! சகோ..

      நீக்கு
  25. மதுவை நாம் தமிழ்நாட்ல இருந்து ஒழிக்கணும் என்று மது ஒழிப்பு பிரச்சாரம் செய்தால் நம் தமிழ்நாட்டுமக்கள் அதை தப்பா புரிஞ்சுகிட்டு ********சரக்கு அடிப்போம் மதுவை ஒழிப்போம்********** என்று நினைத்துவிட்டார்கள் அதனால்தான் குடிகாரார்கள் அதிகரிக்கிறார்கள் போல இருக்கிறது

    பதிலளிநீக்கு
  26. துளசி & கீதா மது அருந்துதல் வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு அப்படின்னு நீங்க பதிவு ஆரம்பிக்கும் போது எச்சரிக்கை வார்னிங்க் கொடுக்கலை அதனால உங்க மேல ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை இன்னும் ஒரு வாரத்திற்குள் சமர்பிக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஹஹஹஹஹ்...தமிழா, நம்ம அரசு வார்னிங்க் கொடுத்துட்டு, திருக்குறளையும் எழுதி வைச்சுட்டு அதுக்குக் கீழயே டாஸ்மாக் நு கடை வைச்சு விக்கிறாங்க....நாங்க விக்கலையே....பதிவு எழுதினாலும் போடணுமா...வலைத்தளத்திற்கு லைசன்ஸ் உண்டா?!!!! சரி இனி போட்டுடறோம்...சரி வேற என்ன விளக்கம் கொடுக்கறது விளங்கலை...மடில பாட்டில் இல்லைப்பா...ஹஹஹ் ரொம்ப ரசிச்சோம் உங்க கமென்ட் இதை...

      நீக்கு

  27. அரசாங்கம் வருமானத்திற்காக்தான் டாஸ்மாக் நடத்துகிறது என்பதைவிட தனிநபர்களின் வருமானத்திற்காகத்தான் நடத்துகிறது. வருமானத்திற்கு என்றால் வருமான வரி சேல்ஸ் வரி அவைகளை ஒழுங்காக வசூலித்தாலே போது அரசாங்கத்தின் கஜானா நிரம்பிவிடுமே. இங்கு வந்து படிப்பவர்களில் எத்தனை சதவிகதமக்கள் தான் உண்மையாக சம்பாதிக்கும் வருமானத்திற்கு ஏற்ப வருமான வரி கட்டுகிறார்கள் என்று கேளுங்கள் அப்ப தெரியும் அவர்களின் சுயரூபம் இவர்கள் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள் அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது அவ்வளவுதாங்க இதற்கு இடையில் ஏழைதான மாட்டி தவிக்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனி நபர் வருமானத்திற்காகத்தான் சரிதான் ஆனால் புள்ளிவிவரங்கள் கஜானவைத்தான்/ கஜானாவையும் கை காட்டுகின்றதே. வருமான வரி..ம்ம்ம் சரிதான்..தமிழா அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி...தெரியாதாஎன்ன உங்களுக்கு...முதலில் அரசாங்கம் ஊழலில்லாமல், சட்டத்திலும் ஊழலில்லாமல் இருந்தால் மக்களும் பொறுப்புடன் இருப்பார்கள்...அரசு இப்படி இருந்தால் மக்களும் மெத்தனமாகத்தான் இருப்பார்கள். இதோ இங்கே சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை செல்லும் நேரத்திற்குள், சென்னைக்கு அருகே இருக்கும் சிங்கப்பூரைத் தொடும் மக்கள் அங்கு குப்பை போட்டால் 500 டாலர் கட்டணும் என்று போடாதவர்கள் இங்கு வந்தவுடன் விமான நிலையத்தைவிட்டு வெளியில் தலை நீட்டியதும் கை நீட்டி அப்படியே குப்பையை எறிகின்றார்கள்...எறிந்ததோடு மட்டுமல்லாமல் அழைக்க வந்த உறவினரிடம் சொல்லுவது என்ன தெரியுமா, "ஹ சிங்கப்பூர் என்ன சுத்தம் தெரியுமா? ஒரு குப்பைகூட பார்க்க முடியாது..என்று சொல்லுவதைப் பார்த்திருக்கின்றோம். .ட்ராஃபிக் ஒழுங்கு எவனும் ரூல் மீற மாட்டான், என்ன ஊரு. ஹும் இங்க பாருங்க என்று சொல்லிக் கொண்டெ சிவப்பு சிக்னலைக் க்ராஸ் செய்பவன்/ள்.... கேட்டால் எல்லோரும் செய்யும் போது நாமளும் அப்படித்தான் போகணும் என்ற ஜஸ்டிஃபிகேஷன் வேறு....இப்படி இருப்பதற்குக் காரணம்? சிங்கப்பூர் அரசிற்கும், இந்திய அரசிற்கும் உள்ள வித்தியாசம்தானே..??

      வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும்
      நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்..ஹ்ஹஹஹ சரிதான் ஔவை சொன்னது...."குடி" உயர கோன் உயரும்...

      நீக்கு
  28. அட அட அருமையான தலைப்பும் அதற்கேற்ற பதிவும் கலக்கல் தான். பெரிய பதிவு ஆகையால் வந்து வந்து போகவேண்டியுள்ளது அப்படா இப்பதான் ஒரு மதிரி௮ வாசித்து முடித்தேன். நீங்களும் viju அவர்களும் தந்த நிறய தகவல்கள் தந்துள்ளீர்கள்.அந்தக் காலத்திலேயே இருந்தாலும் எந்தக் காலத்திலும் தீங்கு விளைவிக்கக் கூடிய இம் மது எப்படியாவது ஒழித்துக் கட்டவேண்டும். viju அவர்கள் சொன்னது போல பெண்களின் அவல வாழ்வும், விபத்தும், பாலியல் வன்முறையும் ஒழிய வேண்டுமென்றால். மக்கள் சுய உணர்வோடு இருத்தல் அவசியம் அல்லவா. நன்றாக ஆராய்ந்து இட்ட பதிவு செம சகோ . தோழி கீதா விற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..! தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரி! இது ஒழிந்தால்தான் மிக்க நன்று...சகோதரி பொறுத்துக் கொள்ளவும் எங்கள் பதிவுகள் நீள்மாகிவிடுகின்றனதான்...சுருக்கிச் சொல்லத் தெரியவில்லை. எவ்வளவோ முயன்றும்...ம்ம்ம்ம் என்ன செய்ய பொருளாதாரம் படித்ததன் விளைவோ என்னவோ...பரீட்சையில் பதில் சிக்கனமாகக் கொடுத்தால் மதிப்பெண் கிடைக்காது ஆனால் பாடம் சொல்லித்தருவது சிக்கனாமாக இருக்க வேண்டும் என்று...ஹஹஹ் முரண் இல்லையா...

      முயற்சி செய்கின்றோம்....ஆம் சகோ விஜு அவர்கள் அருமையான தகவல்கள் கொடுத்திருக்கின்றார்...

      மிக்க நன்றி சகோதரி தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு..

      நீக்கு
  29. நல்ல கட்டுரை சகோ. ஆச்சரியமாக இருக்கிறது
    நன்றி

    பதிலளிநீக்கு
  30. சங்க காலமோ எந்த காலமோ அந்த காலத்தில் குடித்துவிட்டு இப்படியான இழிவான செயல்களை செய்யவில்லையே. நடுரோட்டில் சண்டையிடுவதும் விழுந்துகிடப்பதும் பெண்களை கைபிடித்து இழுப்பதும ;தரக்குறைவாக பேசுவதும் இன்னும்.........
    தங்களுடைய விரிவான அலசலும். தொடர்ந்த பின்னூட்டங்களும் படித்தேன். பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு