புதன், 22 ஜூலை, 2015

யாதும் ஊர்தான், யாவரும் கேளிர்தான், புலம் பெயர்ந்த தீபனுக்கு

"யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிரான்போட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்கா
வந்துவிட்ட ஒட்டகம் போல்
ஒஸ்லோவில் "
--ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் 

Image result for DHEEPAN FILM
ஆண்டனிதாசன் ஏசுதாசன் எனும் சோபா சக்தி.

“தனுஷ், பசுபதி, விஜய் சேதுபதி போன்றவர்களைத் தவிர்த்து இப்படத்தில் நடிக்க ஏன் இயக்குநரான ஜாக்ஸ் ஆடியார்ட் (Jacques Audiard) என்னைத் தேர்ந்தெடுத்தார் என்று எனக்குப் புரியவில்லை.”
இப்படிச் சொன்னவர் “தீபன்” படத்தில் நாயகனாக நடித்த ஆண்டனிதாசன் ஏசுதாசன் எனும் சோபா சக்தி.
ஜாக்ஸ் ஆடியார்ட்.
“இறைவன்தான் ஆண்டனியை எனக்குக் காட்டினார்.” இதைச் சொன்னதோ கேன்ஸ் திரைப்பட விழாவில் (Festival De Cannes) ஃபார்ம் டி ஓர் (Palme d’ Or) விருது பெற்ற “தீபனின்” இயக்குநரான ஜாக்ஸ் ஆடியார்ட்.


இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து எப்படியோ ஃப்ரான்ஸ் சென்றடைந்த அனாதைகளான மூவர், கணவன், மனைவி மற்றும் மகளாக மாறி, கள்ளப் பாஸ்போர்ட் எடுத்து, அந்நாட்டில் வாழ்வதுதான் தீபனின் கதை.
உலகெங்கும் அகதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களைப் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் இதற்கு முன் வெளியாகி இருக்கின்றன.  அதில் பரிசு பெற்றவைகளும் இருக்கத்தான் செய்கின்றன.  எனினும், கேன்ஸ் திரப்பட விழாவில் விருது பெற்ற இப்படம் எல்லாவிதத்திலும் அவற்றிற்கெல்லாம் மேலே ஒரு படி போய் தனக்கென்று ஓரிடத்தை தக்க வைத்து விட்டது. 
காளீஸ்வரி ஸ்ரீநிவாசன்---க்ளாடின் வினசிதம்பே
இப்படத்தில் போலி மனைவியாக நடித்தவர் சென்னையிலுள்ள ப்ரபல நாடக நடிகையான காளீஸ்வரி ஸ்ரீநிவாசன். போலி மகளாக நடித்தவர் பாரீசில் பிறந்து வளர்ந்த, இலங்கையைச் சேர்ந்த 10 வயதுள்ள க்ளாடின் வினசிதம்பே. தீபனாக நடித்தவரோ ஆண்டனி தாசன் ஏசுதாசன் எனும் சோபா சக்தி. “கொரில்லா”, “தேசத்ரோகி”, “ம்” எனும் நாவல்கள் எழுதி இலங்கையில் தான் கண்ட, கேட்ட, அறிந்தவற்றை உலகிற்கு அறிவித்தவர். 
இலங்கையில் சமாதானம் நிலவச் செய்யச் சென்ற இந்திய ராணுவம் எனும் வேலி பயிரை மேய்ந்த கதையைச் சொல்லி எல்லோரையும் கண்கலங்கச் செய்தவர். எல்டிடியின் சிறுவர் பட்டாளத்தில் இருந்தவர்.  பின்பு எப்போதோ புலிகள் தலைவர் பிரபாகரனுடன் முரண்பாடு ஏற்பட எல்டிடியிலிருந்து விலகி வெளியேறியவர். உடனே கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டவர்.
தனது 29 வது வயதில் எப்படியோ இலங்கையிலிருந்து தாய்லாந்து வந்து சேர்ந்தவர்.  4 ஆண்டுகள் அங்கு அகதியாய் வாழ்ந்தவர்.  அதன் பின் அங்கிருந்து கள்ள பாஸ்போர்டில் ஃப்ரான்ஸை அடைந்தவர்.  பாரீஸ் உணவகங்களிலும், பிற இடங்களிலும் எல்லா வித வேலைகளையும் செய்து வாழ்ந்தவர். 
கடந்த இரண்டு வருடங்களாக “தீபன்” திரைப்படத்தில் நடித்ததால் கிடைத்த பணத்தில் வேலைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லாமல் வாழ்ந்தாலும், மீண்டும் முன் போல் பாரீசில் உழைத்து வாழத் தயாராக இருப்பவர்.  அப்படி தீபனாக அப்படத்தில் நடிக்கச் சென்றவர் அல்ல ஆண்டனி;  எல்லா விதத்திலும் தீபனாக அப்படத்தில் வாழச் சென்றவர். அதனால்தான் ஒரு வேளை இயக்குநரான ஜாக்ஸ் ஆடியார்ட்  இறைவன் தான் ஆருக்கு ஆண்டனியைக் காட்டினார் என்று சொன்னாரோ என்னவோ?
எப்படியிருப்பினும், உலகெங்கும் சிதறிக் கிடக்கும் நம் தமிழ் குடும்பத்தினரின் கதையைச் சொன்ன ஜாக்குவத் ஒடியார்ட் போற்றுதற்குரியவரே.  அவரது “தீபனுக்குக்” கிடைத்த இந்தப் பரிசு, உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல. உலகத் தமிழ் இனத்திற்கே கிடைத்த பரிசுதான்.
Image result for DHEEPAN FILM
ஜாக்ஸ் ஆடியார்ட்  கங்கிராட்ஸ்! தாங்க்ஸ் எ லாட்!

29 கருத்துகள்:

  1. படம் பார்க்க தூண்டும் பதிவு.
    ஜாக்ஸ் ஆடியார்ட் அவர்களுக்கு வாழ்த்துகள்
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அண்ணா.
    உண்மைதான் மறைந்து கிடந்த தகவலை திறைப்படமாக வந்துள்ளது.. இந்த படம் பற்றி BBC செய்தியில் கேட்டேன்... விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் பல படங்கள் உருவாகட்டும் த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  3. இந்தப் பரிசு, உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல. உலகத் தமிழ் இனத்திற்கே கிடைத்த பரிசுதான்.
    உண்மை உண்மை
    தம +1

    பதிலளிநீக்கு
  4. படம் இணையத்தில் கிடைக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்தில் டெய்லி மோஷனில் இருக்கிறதாகத் தெரிகின்றது ஆனால் இங்கு பேஜ் வரவில்லை. http://www.solarmovie2k.me/dheepan-2015-full-movie-watch-online-free/ இந்தத் தளத்தில் பல சுட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளது. முயற்சி செய்து பார்க்கலாம். படத்தைப் பற்றிய செய்தி குறித்துதான் பதிவு. இன்னும் பார்க்கவில்லையாதலால் விமர்சிக்க முடியவில்லை. ஆனால் செய்திகள் சொல்லுவது படம் ஈழத் தமிழர்களின் வலிகளைச் சொல்லி இருப்பதாக...ஒரு சில காட்சிகள் இணையத்தில் இருக்கின்றன...

      நீக்கு
  5. அனைவரும் போற்றப்பட வேண்டிய பரிசு...

    பதிலளிநீக்கு
  6. நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையை கலைக் கண்ணோடு அணுகியிருக்கும் ஜாக்ஸ் ஆடியார்ட் அவர்களுக்கு தமிழினத்தின் சார்பில் நன்றி !

    பதிலளிநீக்கு
  8. சிதறிக் கிடக்கும் குடும்பம்... இது ஈழத் தமிழர்களின் வலிகள்

    பதிலளிநீக்கு
  9. கீழை நாட்டவரின் ஏழ்மை பற்றியோ அவர்களது துயர சம்பவங்கள் பற்றியோ படம் எடுத்தால் பரிசு கிடைக்கும் போலிருக்கிறது./இலங்கையில் சமாதானம் நிலவச் செய்யச் சென்ற இந்திய ராணுவம் எனும் வேலி பயிரை மேய்ந்த கதையைச் சொல்லி எல்லோரையும் கண்கலங்கச் செய்தவர். / இம்மாதிரிச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றே தோன்றுகிறது. அந்தப் படையில் பொறுப்பான பதவியில் இருந்த ஒரு அதிகாரியின் நோக்கு வேறாக இருந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிசு வாங்க எடுக்கப்பட்டப் படமானாலும் புலம் பெயர்ந்து துயரப்பட்டு உலகெங்கும் சிதறி வாழும் லட்சக்கணக்கான சகோதர சகோதரிகளைப் பற்றி சிந்திக்க வைத்த படமல்லவா? பாராட்டியே தீர வேண்டும் அம்முயற்ச்சிக்கு. பின் “வேலி பயிரை மேய்ந்த கதையில்”, வேலியில் ஒரு வேலிக்கம்பான அந்த உயர் அதிகாரி சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பிவிட முடியாது. அது போல் மேயப்பட்ட பயிர்களின் இடையே உயிர் தப்பிய பயிர்கள் சொல்லுவதெல்லாம் பொய் என்று தள்ளிவிடவும் முடியாது தானே சார்.

      நீக்கு
  10. நல்லதொரு விமர்சனம்! படத்தை பார்க்க தூண்டுகிறது! யூ டியுபில் கிடைக்கிறதா?

    பதிலளிநீக்கு
  11. படத்திற்கு மதிப்புக் கிடைத்ததை போல நம் ஈழ சகோதர, சகோதரிக்கும் மதிப்புக் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் சகாஸ்! அட்டாகாசமாய் வந்திருக்கிறது பதிவு! வாழ்த்துக்கள் சகாஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கஹ்கோதரி!! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  12. கண்டிப்பாக படம் பார்க்க வேண்டும் சார்...
    நல்ல பகிர்வு. அவரை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  13. பாராட்டத்தக்கவேண்டிய முயற்சி. தங்களின் விமர்சனம் நிகழ்வினை முன்கொண்டு வந்துவைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  14. திரைப்படங்களுக்கு அவ்வளவாகச் செல்வதில்லை. ஆனால் பார்க்க நினைத்திருக்கும் பட்டியலில் இப்பெயரையும் குறித்துக் கொண்டேன்.

    நன்றி ஆசானே.

    பதிலளிநீக்கு

  15. ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்
    அவர்களின்
    உண்மை நிலைகளை சுட்டும் வரிகளோடு
    ஏதிலியாகச் சென்றவர் கதை சுட்டும்
    திரைப்படம் பற்றிய பதிவு - என்
    உள்ளத்தில் தமிழர் பட்ட
    துயர வாழ்வை நினைவூட்ட வைத்ததே!

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    பதிலளிநீக்கு