சனி, 25 ஏப்ரல், 2015

விசுAwesomeமின் சகவாசம் - புத்தக வெளியீடு

 Displaying 4.jpg
கார்ட்டூன் - திரு. செந்தமிழ்செல்வன்

நண்பர், பதிவர் திரு விசு http://www.visuawesome.com/  அவர்கள் தனது நகைச்சுவைப் பதிவுகளால் பதிவர்கள் பலரையும் கவர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே! தண்டமா போன தண்டபாணி என்று சொன்னாலும் தண்டபாணி என் நண்பேண்டா என்று சொல்லுவது முதல், எவ அவ சமந்தா? என்ன சமைக்க வேண்டும் என்று கேட்பேன் ஆனால் செய்ய மாட்டேன்.....அடக்கப் போவது யாரு என்று சவால் விடும் அவரது மனைவியின் சிம்மக் குரலுக்கு, நல்ல எலியாக, ஹை புடவை அழகா இருக்கே என்றும், உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் என்றும், துப்பறியும் வீம்பு பெண்களிடம் எனக்குப் பிடித்தது, சுந்தரன் நீயும் சுந்தரன் ஞானும் என்பது வரை பதிலுரைத்து, நகைச்சுவைத் தோரணங்களால் தனது தளத்தை அலங்கரிப்பது மட்டுமன்றி தனது வாசகர்களையும் தொடர்ந்து கட்டிப் போட்டு வரும் திரு விசு அவர்கள், தனது பதிவுகளின் முதல் தொகுப்பாக "விசுAwesomeமின் சகவாசம்" எனும் புத்தகத்தை 06-06-2015 அன்று, தான் படித்த வேலூர் வூரீஸ் ( Voorhees College)  கல்லூரி வளாகத்தில், அதன் முதல்வர் திரு.  டாக்டர் அருளப்பன் அவர்களின் தலைமையில் வெளியிடுகின்றார்.  

நம் பதிவர் நண்பர்கள் அனைவரையும், திரு விசு அவர்களின் சார்பில் புத்தக விழாவில் கலந்து கொள்ள மிக்க மகிழ்வுடன் நாங்கள் அழைக்கின்றோம்.  

புத்தக வெளியீடு காலை 11 மணிக்குத் தொடங்க இருக்கின்றது.  அதன் பிறகு மதிய உணவு.  மதிய உணவிற்கு பின் நம் பதிவர்களின் சந்திப்பு தொடரும்.

     ஒரு சிறிய பதிவர் சந்திப்பாகவும் அதை நிகழ்த்த திரு விசு விரும்புவதால், நிகழ்வுக்கு வரும் பதிவர்கள் தங்கள் வருகை குறித்து எங்கள் தளத்திலோ, முகநூலிலோ, மின் அஞ்சல் வழியாகவோ, நம் நண்பர், பதிவர்  டிடி அவர்களின் தளத்திலோ dindiguldhanabalan.blogspot.com/, டிடி அவர்களின் முகநூலிலோ, மின் அஞ்சல் வழியாகவோ தெரிவிக்க அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். திரு டிடி அவர்கள் தனது தளத்திலும் இதைப் பற்றி வெளியிடுவார்.

     நிகழ்ச்சி பற்றிய விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

பின் குறிப்பு: விசு அவர்களின் புத்தகத்தில் அவரது இடுகைக்கு வந்திருந்த பதிவர நண்பர்களின் சில பின்னூட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தங்களது பின்னூட்டங்கள் அதில் வேண்டாம் என்று  தங்களுக்கு அதில் ஆட்சேபனை ஏதேனும் உண்டென்றால் தயவு செய்து விரைவில் தெரிவிக்கவும்.  நன்றி.

33 கருத்துகள்:

 1. புத்தக வெளியீட்டு விழா சிறக்கட்டும்!..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும்!

   நீக்கு
 2. நன்றி.. நன்றி... நன்றி....வாருங்கள் சந்திப்போம் ....

  பதிலளிநீக்கு
 3. மகிழ்ச்சியான செய்தி. விழா இனிதே நடந்திட வாழ்த்துக்கள்.
  த.ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும்!

   நீக்கு
 4. விசு அவர்களுக்கு எமது வாழ்த்துகள் விழா சிறக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜி!! தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும்!

   நீக்கு
 5. மகிழ்ச்சியான செய்தி. விழா இனிதே நடந்திட வாழ்த்துக்கள்.

  இன்று ‘சும்மா’ தளத்தில் தங்களின் சிறப்புப்பேட்டியினை படிக்க நேர்ந்தது. சும்மா ரொம்ப ஜோரா வெளுத்து வாங்கி பேட்டியளித்துள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார்! தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும்!

   மிக்க நன்றி சார்! தங்களது பாராட்டிற்கு! கொஞ்சம் நேரம் குறைவு, கீதாவிற்கு காது வலி இன்னும் குணமாகவில்லை அதனால் தான் தொடர்ந்து தங்களது பதிவுகளைப் படித்துக் கருத்திடுவதில் தாமதம். நன்றி சார்!

   நீக்கு
 6. புத்தக வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள்.
  த ம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும்!

   நீக்கு
 7. மகிழ்ச்சி ஆசானே.
  நண்பர் விசு அவர்களின் தளத்தைத் தொடர்ந்தே வருகிறேன்.

  விழா சிறக்கவும் பதிவர் சந்திப்பு இனிமையாக அமையவும் வாழ்த்துகிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஆசானே! தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும்!

   நீக்கு
 8. இப்பதிவு பார்த்தவுடன் விசுவாசமின் தளம் சென்று அவர் பதிவினைப் படித்தேன் வைரமுத்து பற்றிய ஒரு சடைர் மாதிரி இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது அவர் சமீபத்தில் எழுதியது. அவர் சில அரசியல் இடுகைகளும் எழுதுவதுண்டு. ஆனால் பொதுவாக நிறைய நகைச்சுவை பதிவுகள் தான்....ப்ழைய இடுகைகள் சென்றால் தெரியும் சார்....அவரது புத்தகத்தில் சட்டைர் நகைச்சுவை போன்றவை கிடையாது.....

   நீக்கு
 9. விசு சாரின் புத்தக வெளியீடு சிறப்புற நடைபெற வாழ்த்துகள். :) பகிர்வுக்கு நன்றி துளசி சகோ :)

  பதிலளிநீக்கு
 10. ஹாலிவுட் புகழ் விசு அவர்களின் புத்தக வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ மிக்க நன்றி தமிழா வருகைக்கும் வாழ்த்திற்கும்.!

   நீக்கு
 11. புத்தக் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துக்கள். பதிவர் சந்திப்பு சிறக்கட்டும். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்!

   நீக்கு
 12. நண்பர் விசு அவர்களின் நூல் வெளியீட்டு விழா சிறக்க நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்!

   நீக்கு
 13. நண்பரின் புத்தக வெளியீடு சிறக்க நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 14. வாவ் மகிழ்ச்சி சகோ..நண்பர் விசு அவர்களுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 15. விசு ...! அவர்களது புத்தக வெளியீடு சிறப்புற வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 16. புத்தக வெளியீட்டுவிழா சிறக்க வாழ்த்துக்கள்! வர முயற்சிக்கிறேன்!

  பதிலளிநீக்கு

 17. அன்புள்ள அய்யா,

  விசுAwesomeமின் சகவாசம் - புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நன்றி.
  த.ம.7.

  பதிலளிநீக்கு
 18. விழா நாயகருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வெளியீடு பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. விசு ஜீக்கு மனம்கனிந்த வாழ்த்துகள்:)

  பதிலளிநீக்கு
 20. விசு அற்புதமான நகைச்சுவை எழுத்தாளர் .இயல்பாக நடப்பவற்றை நகைச்சுவையுடன் சொல்லும் திறமை அவருக்கு கைவந்த கலை. அவரது நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு