செவ்வாய், 17 மார்ச், 2015

ஆணுக்குப் பெண் இளைப்பில்லைக் காண் என்றுக் கும்மியடி...?!?

Image result for men and women equal
மார்ச் 8 பெண்கள் தினம். ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவதைப் போன்று இவ்வருடமும், எல்லோரும் வாழ்த்துக்கள் தெரிவித்து, ஊடகங்களாகிய, இதழ்களில் முக்கியமாகப் பெண்கள் இதழ்களில் கட்டுரைகள் எழுதப்பட்டு, தொலைக்காட்சிகளில் விவாதங்கள், பேச்சுக்கள், பெண்கள் தினம் என்பதற்குச் சம்பந்தமே இல்லாமல், ஆனால் பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்று திரைப்படங்களும் ஒளிபரப்பப்பட்டு, வலைகளில் பதிவுகள் பல இடப்பட்டு, விழிப்புணர்வு என்று பேசப்பட்டு, ஒரு வழியாக முடிவடைந்தது. 

நானும் ஒரு பெண்தான் என்றாலும் ஏனோ பெண்கள் தினம் என்றுத் தனியாக ஒரு தினம் அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுவதில் ஒப்புதல் இல்லை. ஏனென்றால் அதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதே எனது தாழ்மையானக் கருத்து. ஏன்? இந்தப் பெண்கள் தினமும், நம் சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் பிற தினங்கள் போன்றுக் கொண்டாடப்பட்டு, சாதாரணமாகக் கடந்து போகின்றது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினம் என்றால், தினமுமே அந்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஏனென்றால், எல்லா தினமுமே பெண்கள் தினம் தான் ஒரு பெண்ணிற்குள், ஆண்மையும், ஆணிற்குள் பெண்மையும் கலந்து தான் இருக்கும். அதை விளக்குவதுதான் அர்த்தநாரீஸ்வரத் தத்துவம். இது மட்டுமல்ல, இந்த உலகில் தினமுமே ஏதோ ஒரு இடத்தில், மூலையில் பெண்கள் மிதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்! இதோ விஷயத்திற்கு வருகின்றேன்.

பெண்கள் தினத்தன்று காலையில் வாசலில் போடப்பட்டிருந்த பால் பாக்கெட்டை எடுக்கச் சென்ற போது, ஒரு முனகல் சத்தம்.  பூனையின் சத்தம் போல இருந்ததால் பூனை என்று திரும்ப யத்தனித்த போது மீண்டும் அந்த சப்தம் என்னை ஏனோ எங்கிருந்து வருகின்றது என்று தேடவைத்தது.  உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு தொடர்ந்த போது, வீட்டின் எதிரில் இருந்தக் குப்பைத் தொட்டிக்கு அருகில் இருந்து வந்தது. சரி ஏதோ பூனை அடிப்பட்டுக் கிடக்கின்றது போலும், எடுத்து வந்துக் காப்பாற்றலாம் என்று நினைத்து உற்றுப் பார்த்தால் அதிர்ச்சி. அது ஒரு பெண் குழந்தை! தொப்புள் கொடி போலும் உதிராத நிலையில். பிறந்து ஓரிரு நாட்களோ, இல்லை சில மணி நேரங்களோதான் ஆகியிருக்க வேண்டும். அருகில் நாய் ஒன்று அதை முகர்ந்து பார்த்து நக்கத் தொடங்கியது.  அதைப் பெற்றவளும் ஒரு பெண் தானே! அந்தப் பெண் வறுமையினால் எறிந்தாளா? மன நிலை சரியில்லாதவளா? இல்லைத் தவறுதலாக, அப்பன் யாரென்று தெரியாமல் பிறந்தக் குழந்தையாக?  இல்லை அப்பன் ஏற்றுக் கொள்ளாமல், இந்தக் கேடு கெட்டச் சமூகத்தை எதிர் கொள்ள சக்தியில்லாமல் அந்தப் பெண் எறிந்திருப்பாளா? இல்லை பெண் குழந்தை என்பதாலா?

விடை கிடைக்காமல் அந்தக் குழந்தையை வீட்டிற்குள் எடுத்து வந்து, எங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண் மருத்துவரைத் தொடர்பு கொண்டு அந்தக் குழந்தைக்கு முதலில் தேவையான முதலுதவியைச் செய்துவிட்டுப் பின்னர், அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்குச் செல்லும் முன், வக்கீலாக இருக்கும் எங்கள் குடும்ப நண்பரைத் தொடர்பு கொண்டேன். என்னைப் பொறுத்தவரை, அந்தக் குழந்தை, சமூகக் கிருமிகளின் கையில் சிக்கி விடக் கூடாது.  அதில் நான் உறுதியாக இருந்தேன்.

இப்படி அனாதையாகக் கிடக்கும் குழந்தைகள் யார் கண்ணிலும் படவில்லை என்றால், சமூகக் கிருமிகள் குழந்தைகளைப் பிச்சை எடுப்பவர்களாக ஆக்கிவிடுவார்கள், அதுவும், கண்ணையோ, கையையோ, காலையோ சிதைத்து, இல்லை என்றால் வளர்த்து, சிவப்பு விளக்கிற்குத் தாரை வார்த்து விடுவார்கள். இல்லையேல் தாங்களே பலாத்காரம். எனவே, நான் அந்தக் குழந்தையை பாதுகாப்பான சிறார் இல்லத்திலோ, இல்லை, கிறித்தவக் காப்பகத்திலோ ஒப்படைத்து, அவர்கள் பின்னர் சட்ட ரீதியான முறைகளைக் கையாளட்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். (ஏன் நீயே எடுத்து வளர்க்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். தற்போதைய நிலைமை, சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லாததால்) வக்கீல் நண்பரும் எனது ஆதங்கத்தைப் புரிந்து கொண்டதால், தான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொல்லிக் குழந்தையை எடுத்துச் சென்றார். குழந்தை இப்போது நல்ல உள்ளங்களின் கையில். மருத்துவப் பராமரிப்பிலும் இருக்கின்றது. சட்ட ரீதியிலான சிக்கல்கள் தீர்ந்ததும் அந்தக் குழந்தை அயல்நாடு சென்றுவிடும். ஒரு சில காரணங்களால், முழுத் தகவல்களையும் இங்கு என்னால் தர இயலவில்லை.

இப்படி, எத்தனை அனாதைக் குழந்தைகளோ? அன்று பிறந்த பெண் குழந்தைகளை வரவேற்க முடியவில்லை.  அவர்களது எதிர்காலம் குறித்த கவலை வரத்தான் செய்கின்றது. பெண்கள் தினம் என்று சொல்லப்படும் தினத்தில் கூட, எத்தனைப் பெண் குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டார்களோ? எத்தனை குழந்தைகள், பெண்கள், மூதாட்டிகள் ஆதரவற்றவர்கள் ஆனார்களோ? இது பெண்களுக்கு மட்டும்தான் என்று நினைக்க வேண்டாம்.  ஆண்களுக்கும் தான்.  ஆனால், அது அவ்வளவாகப் பேசப்படுவதில்லை.

என்ன காரணம்? ஆணும், பெண்ணும் சமம் என்று நமது சமூகத்திலும், வீடுகளிலும் வளர்க்கப்படுவதில்லை.  பார்க்கப்படுவதில்லை.  மதுரைத் தமிழன் சொல்லியிருந்தது போல், பெண்கள் எப்போதுமே நளினம் மிக்கவர்கள், பூப் போன்றவர்கள், மென்மையானவர்கள் என்று சொல்லிச் சொல்லி வீக்கர் செக்ஸ் என்று பதியப்பட்டு வளர்க்கப்படுகின்றார்கள். (இதைப் பற்றி ஒரு நல்ல பதிவு அவர்கள் உண்மைகள்

ஆண் என்றால் விலகி இருக்க வேண்டும், அதிர்ந்து நடக்கக் கூடாது, தலை குனிந்து அடக்க ஒடுக்கமாக நடக்க வேண்டும், பெண்கள் நடனம் தான் கற்றுக் கொள்ள வேண்டும், விளையாட்டுகளில் பங்குபெறக் கூடாது, ஏனென்றால் அவர்களது உடற்கூறு அப்படிப்பட்டது, பொம்பளைப் பிள்ளையா லட்சணமா இருக்கணும், என்று சொல்லப்பட்டே வளர்க்கப்படுகின்றார்கள். பெண் குழந்தைகள் என்றாலே, என்னதான் தற்போது கல்வி கற்று தன் காலில் நிற்கத் தொடங்கியிருந்தாலும், வெகு சீக்கிரமே, சிறு வயதிலேயே கூடக் கல்யாணம் செய்து அனுப்பி விட வேண்டும் என்றும் இன்னும் பல சமூகங்களில், பால்யத் திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

 பெரும்பாலான குடும்பங்களிலும், சமூகத்திலும், ஆண் குழந்தைகள் “நீ ஆம்பளைச் சிங்கம்டா”, ஆண்கள் வீறு கொண்டவர்கள், பல சாலிகள், வெளியில் எந்த நேரத்திலும் செல்லலாம், எங்கும் செல்லலாம் என்ற மனப்பாங்குடன் வளர்க்கப்படுகின்றார்கள்.  (சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று அபத்தமான ஒரு வசனம் வேறு. இந்தச் சிங்கங்கள் என்னவோ கூட்டமாக வந்துதான் பெண்களைச் சின்னா பின்னமாக்குகின்றார்கள்!)  பாவம்!  ஆனால், இயற்கையில் பெண்சிங்கம் தான் வேட்டையாடச் செல்லும். ஆண் சிங்கம் குட்டிகளைப் பார்த்துக் கொள்ளும், பெண் சிங்கம் வரும் வரை. பெண் சிங்கங்கள்தான் ஆண் சிங்கங்களை விட வலிமை வாய்ந்தவை என்று சமூகத்திற்குத் தெரியவில்லை! இரு சிங்கங்களும் சமமாகத்தான் இருக்கின்றன. விலங்குகளில் கூட ஆண் பெண் பேதம் இல்லை. மனித இனத்தில்தான்.

 ஆண் குழந்தைகள் தவறு செய்தால் கண்டிக்காமல், ஆம்பளனா அப்படித்தான் என்றும், பெண் பிள்ளைகள் தவறு செய்யும் போது அவர்களை அளவிற்கு மீறித் தண்டித்தல் இல்லை என்றால் கண்டிக்காமல் இருத்தல், ஆண் குழந்தைக்கும், பெண்குழந்தைக்கும் இடையில் சண்டைகள் வரும் போது, “பொம்பளைப் பிள்ளைல நீ விட்டுக் கொடுக்கணும்” என்றும் சொல்லப்பட்டுச், சொல்லப்பட்டு, ஆண்மை அளவிற்கு மீறி உசுப்பேத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றார்கள். இதில் வளர்க்கப்படும் எந்த அணுகு முறையுமே சரியில்லை. இதற்கு, இப்போது பரபரப்பாகப் பேசப்படும் “இந்தியாவின் மகள்” காணொளியில் பேசிய அந்தக் குற்றவாளியே சாட்சி. பொதுவாக, நம் சமுதாயத்தில் எப்படி ஆண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றார்கள் என்பதற்கு. அவன் கூறியதுதான் சரி என்று சில வக்கீல்களும் சொல்லுவதைக் கேட்கும் போது சிரிப்புதான் வருகின்றது. சரி அப்படியே இருக்கட்டும். அப்படி என்றால் வயதான பெண் அதுவும் கன்னியாஸ்த்ரீ 8 கயவர்களால் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். (சகோதரி தென்றல் கீதா அவர்களும் இதைச் சொல்லியிருக்கின்றார்கள்)இதற்கு என்ன பதில்?  இப்படிப் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் அதே சமயம் நாம் பெண்ணின் மறுபக்கத்தையும் சிறிது ஆராய வேண்டும். அனாதையான அந்தப், பிறந்த பெண் குழந்தை எந்த அபாயச் சூழலிலும் சிக்கிவிடக் கூடாது என்று நினைக்கும் அதே சமயம் பெண்களைப் பற்றிய வேறு சில எண்ணங்களும் பெண்ணாகிய என் மனதில் தோன்றத்தான் செய்கின்றது. மதிக்கத்தகுந்த பெண்களும் இருக்கின்றார்கள்! மதிக்க முடியாத அளவிலும் பெண்கள் இருக்கின்றார்கள்! 

பெண் என்றால் பேயும் இறங்கும் என்ற வசனம் மிகவும் சரிதானோ என்று எண்ண வைக்கின்றது. பெண்கள் இழிவுபடுத்தப்படுவது ஒரு புறம் இருந்தாலும், பெண்கள் என்றால் ஒரு சில விசயங்கள் கண்டும் காணாமலும் கடத்தப்படுகின்றது என்பதையும், சலுகைகள் அத்து மீறியும் வழங்கப்படுகின்றது என்பதையும் இங்குச் சொல்லியே ஆக வேண்டும். சாலையில் ஆண்களும், பெண்களும் சரிசமமாக வண்டிகள் ஓட்டுகின்றனர்தான்.  ஆனால், பெரும்பாலும் ஆண்களைத்தான் காவல் துறையினர் பிடிக்கின்றனர், தலைக் கவசம் போடவில்லை என்றாலும், உரிமம் மற்றும் வண்டியின் ஆவணங்களைச் சரிபார்க்கவும். பெண்கள் பெரும்பாலும் பிடிக்கப்படுவதில்லை. இதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு எத்தனைப் பெண்கள் உரிமம் இல்லாமல் வண்டி ஒட்டுகின்றார்கள் தெரியுமா? இது சாலையில் மட்டுமல்ல. உரிமம் வழங்கப்படும் இடத்திலும் கூட சலுகைகள் உண்டு! இது போன்று பல பொது இடங்களில் வரிசையில் நிற்கும் போதும் சலுகைகள். இந்தச் சலுகைகள் பெண்களைத் தங்களுக்குச் சாதகமாக அந்தச் சூழலை மாற்றவும், பெண் என்றால் எல்லோரும் கனிவு காட்ட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகளும் உருவாகின்றது. இது பொது இடங்களில் பல சமயங்களில் ஆண்களிடையே ஒரு சிறிய சலசலப்பை ஏற்படுத்துகின்றது. பெண்களைத் தரக் குறைவாகக் குறிப்பிடும் அளவிற்கு.  இதற்குக் காரணம் பெண்கள் தங்களுக்கு வழங்கப்படும் மரியாதையைச் சரியான விதத்தில் எடுத்துக் கொண்டு அதைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாததால்.

பெண்களே பெண்களுக்கு எதிரியாவதும் நடக்கின்றதே! பாட்டியாக, தாயாக, மகளாக, மருமகளாக, மனைவியாக, தோழியாக, சகோதரியாக, நாத்தனாராக இப்படிப் பல பொறுப்புகளில் இருக்கும் போது, தாயாக இருக்கும் அதே பெண் மாமியார் எனும் பொறுப்பைப் பெறும் போது அவளது மனம் மாறுகின்றதே!  மகள் என்பவள், மனைவி, மருமகள் என ஆகும் போது அவளது புதிய குடும்பத்தைப் பற்றியக் கண்ணோட்டம், அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்களைப் பற்றிய பார்வை மாறுகின்றதே. சகோதரியாக இருப்பவள் தன் சகோதரனின் மனைவி என்று வரும் பெண்ணின் மீதான பார்வை வேறாகின்றதே! அன்னையும் பெண்தான்.  அதே அன்னை தனது பெண்ணைப் பல சமயங்களில் இழிவு படுத்துகின்றளே! மனைவி தன் கணவனின் தாயோடும், சகோதரியோடும் நல்ல உறவைப் பலப்படுத்திக் கொள்ளாமல், கணவனைப் பிரிக்கும் போதும், கணவனின் பெற்றோரை அனாதை இல்லத்திற்கு அனுப்பும் போதும் அந்த ஆணிற்கு மனைவி என்ற பெண்ணின் மீது எப்படி மரியாதையும், அன்பும் வரும்? தனது அன்னையே, தனது மனைவியைக் கொடுமைப் படுத்தும் போது அந்த ஆணிற்குத் தன் அன்னையின் மீதிருக்கும் அன்பு வற்றிவிடுமே!

சமுதாயத்தை எடுத்துக் கொண்டால், பல ஆண்களின் காமப் பசிக்குப் பலியாக்குவதும், தன் குழந்தைகளை விற்பதும் அன்னை என்ற பெண்தானே!  பல பெண்களை, ஆண்களுக்குக் கூட்டிக் கொடுப்பவர், பெண்களைச் சிவப்பு விளக்கிற்கு விற்பவர் பெண்ணாகவும் இருக்கிறாரே! பெண் சிசுக்களைக் கொல்பவர்களும் பெண்களாக இருக்கின்றார்களே. பெண் குழந்தைகளைக் குப்பைத் தொட்டியிலோ, வீதியிலோ விடுபவர்களும் பெண்களே! 

பெண்ணியம் பேசுவதில் தவறில்லை.  ஆனால், பெண்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும் அதேசமயம், தங்கள் குடும்ப, சமூகப் பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து மனதில் கொள்ள வேண்டும். பெண்களுக்குப் பெண்களே எதிரியாக மாறுவதையும், இருப்பதையும்  நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பெண்களே சற்று யோசியுங்கள்.  மதர் தெரசா, டாக்டர் முத்துலட்சுமி, வேலு நாச்சியார் (சகோதரர் கரந்தையாருக்கு மிக்க நன்றி!) போன்ற, இன்னும் பல ஆளுமை மிக்கப் பெண்களும், தற்போதைய காலத்திலும் கூட பெண்கள் தினம் பற்றி ஒன்றும் தெரியாத, இராஜஸ்தானில் இருக்கும் பேர் கூடக் கேட்டிராத ஒரு சிறிய கிராமத்தில் உள்ள மக்கள் (ஆண்களும் அடக்கம்) “கடந்த எட்டு வருடங்களாக சிசுக்கொலைத் தடுப்பிற்கும், பெண்களின் வளர்ச்சிக்கும், கூடவே இயற்கையைக் காப்பதற்கும் சத்தமில்லாது ஒரு சாதனை செய்து வருகின்ற, கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் 111 மரக்கன்றுகளை நட்டு அதை வளர்க்கின்ற,  குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு மரங்களையும் சேர்த்து வளர்க்கின்ற” மக்களும் வாழ்கின்ற நாட்டில்தான் மேலே சொன்ன பெண்களும் வாழ்கின்றார்கள். (இந்தக் கிராமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இவரது பக்கம் செல்லுங்கள். வெங்கட்நாகராஜ்  (நன்றி வெங்கட் ஜி!) பெண்கள் தினம் என்பதைப் பற்றித் தெரியாமல் இப்படி ஒரு அருமையான மாற்றம், நம் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் சத்தமில்லாமல் நடக்கும் போது இதையே நாம் ஒரு முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளலாமே!


பெற்றோர்களே! உங்கள் பெண் குழந்தைகளை, இந்தச் சமுதாயத்தைத் தைரியமாக எதிர் கொள்ளவும், அநீதிகளுக்கு எதிராகப் போராடும், மன, உடல் வலிமை மிக்கவர்களாகவும், பிறர் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடத், தன் சுயமரியாதயைக் காப்பாற்றிக் கொள்ளக் கற்றுக் கொடுங்கள். ஆண், பெண் பேதம் பார்க்காமல் எல்லோரையும் நீங்களும் மதியுங்கள், குழந்தைகளுக்கும் எல்லோரையும் மதிக்கக் கற்றுக் கொடுங்கள். பெண்கள் இல்லையேல் இந்த உலகமே இல்லையே. அதே போன்று ஆண்கள் இல்லையேலும் இந்த உலகமே இல்லைதானே. இருவரும் சமம்தானே! நல்லவர்கள் ஆண்களிலும் இருக்கின்றார்கள்! கெட்டவர்கள் பெண்களிலும் இருக்கின்றார்கள்! இரு பாலோரையும் சமமாக மதிக்கக் கற்றுக் கொடுத்து, திடங் கொண்ட மனதுடன், அன்புடன் தோழமையுடன் வாழக் கற்று கொடுங்கள்! மலர்தரு அதுவே போதுமானது! ஒரு தினம் என்று கொண்டாடி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம் என்று சொல்லிவிட்டு பின் மறப்பதை விட, தினமுமே எல்லோரையும் மதிக்கும் நல்ல செயலை விதைத்து வேரூன்றி வளரச் செய்திடுவோமே!! 

-கீதா

படங்கல் - நன்றி கூகுள்

49 கருத்துகள்:


  1. நானும் ஒரு பெண்தான் என்றாலும் ஏனோ பெண்கள் தினம் என்றுத் தனியாக ஒரு தினம் அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுவதில் ஒப்புதல் இல்லை. ஏனென்றால் அதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதே எனது தாழ்மையானக் கருத்து.//

    எனக்கும் அந்த எண்ணமே தான் சகோதரி

    தம 1

    பதிலளிநீக்கு
  2. குப்பை தொட்டியில் குழந்தை...பகீர் என்கிறது. நல்ல வேலை அது தங்கள் மூலம் பிழைத்துக் கொண்டது.

    வேறு கண்களில் பட்டிருந்தால்...தாங்கள் எழுதியது முற்றிலும் உண்மைதான் நினைக்கவே பயமாக இருக்கிறது.

    சில ஆண்கள் சில பெண்கள்....இப்படி கொடுறமாக நடந்து கொள்கிறார்கள் தான்.

    111 மரக்கன்றுகள்...நானும் படித்தேன்...அருமையான கிராமத்தினர்...நிறைய இடங்களில் இதை பின் தொடர்ந்தால் நல்லது...

    நல்லவர்கள் ஆண்களிலும் இருக்கின்றார்கள்! கெட்டவர்கள் பெண்களிலும் இருக்கின்றார்கள்! இரு பாலோரையும் சமமாக மதிக்கக் கற்றுக் கொடுத்து, திடங் கொண்ட மனதுடன், அன்புடன் தோழமையுடன் வாழக் கற்று கொடுங்கள்! மலர்தரு அதுவே போதுமானது! //

    நல்ல அருமையான பதிவுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! கிராமத்தாரின் செயல் எவ்வளவு நல்லதொரு செயல் இல்லையா? தங்களின் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  3. //ஏனோ பெண்கள் தினம் என்றுத் தனியாக ஒரு தினம் அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுவதில் ஒப்புதல் இல்லை.// அதேதான் சகோதரி எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை ..

    குப்பைத்தொட்டியில் பச்சை சிசு :( என்ன சொல்ல ...வெட்கக்கேடு ...அக்குழந்தை என்ன பாவம் செய்தது ..

    நல்ல வேளை இறைவன் உங்க மூலம் காப்பாற்றியிருக்கார் ..111 மரங்கள் இந்த புண்ணிய காரியத்தை துவக்கி வைத்தவர் ஷியாம் சுந்தர் பலிவால் ..அவரது மகளின் இறப்புக்கு பின்னர் இப்படிமரம் நடுவதை ஆரம்பித்திருக்கிறார்..

    அருமையான பகிர்வு சகோதரி ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி!

      ஆம் அந்தப் புண்ணிய காரியத்தைத் துவக்கி வைத்த திரு ஷ்யாம் சுந்தர் பலிவாலைப் பற்றி அறிந்து கொண்டோம். ஏதொ ஒரு இழப்பு ஒரு நல்ல செயலுக்கு விதை ஊன்றுகின்றதுதான். நல்ல ஆத்மா....மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  4. வணக்கம்
    கீதா அக்கா
    உண்மைதான் அவலத்திலும் அவலம்...
    தாங்கள் சொல்லும் கருத்தை படித்போது இந்ததினம் என்னத்துக்கு என்ற ஆதங்கம் மனதில் உதிக்கிறது.... மிக விரிவான திறனாய்வு.. பகிர்வுக்கு நன்றி... த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி
      தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  5. "பெற்றோர்களே! உங்கள் பெண் குழந்தைகளை, இந்தச் சமுதாயத்தைத் தைரியமாக எதிர் கொள்ளவும், அநீதிகளுக்கு எதிராகப் போராடும், மன, உடல் வலிமை மிக்கவர்களாகவும், பிறர் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடத், தன் சுயமரியாதயைக் காப்பாற்றிக் கொள்ளக் கற்றுக் கொடுங்கள். ஆண், பெண் பேதம் பார்க்காமல் எல்லோரையும் நீங்களும் மதியுங்கள், குழந்தைகளுக்கும்" என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன்.

    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மிக்க நன்றி சகோதரரே! தாங்களும் உளவியல் வல்லுனராயிற்றே!

      நீக்கு
  6. எனக்கும் இந்த மேலை நாட்டு கலாச்சாரமான "பெண்கள் தினம்","அன்னையர் தினம்", "தந்தையார் தினம்" போன்றவற்றில் எல்லாம் பெரிதாக ஈடுபாடு கிடையாது. காரணம் நம்முடைய கலாச்சாரம். எப்பவுமே குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது தான். ஆனால் இன்று நம் நாட்டிலும் குடும்ப உறவுகளுக்கான முக்கியத்துவம் குறைந்து, வருடத்தில் ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படும் இந்த தினங்களின் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதைக் கண்டு மிகவும் வேதனையாக இருக்கிறது.

    உங்களின் இந்த பதிவை படித்தவுடன், எனக்கு அந்த பாலியல் குற்றவாளி மற்றும் அவர்களது வக்கீல்களின் வாக்குமூலங்கள் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே! இந்த நாட்களில் எங்களுக்கும் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. இது ஒன்றும் இல்லாத பழைய நாட்களில் எல்லோரும் நன்றாகவே இருந்ததாகத் தெரிகின்றது. நீங்கள் சொல்லுவது மிகவும் சரியே! மிக்க நன்றி !!

      நீக்கு
  7. பெண்கள் தினத்தில் ஒரு பெண் குழந்தை குப்பைத்தொட்டியில் எறியப் பட்ட அவலத்தைச் சொல்வதா, அல்லது அது உங்கள் கண்ணில் பட்டு நல்ல நிலையை அடைவதற்கான நிலையை எட்டியதைச் சொல்வதா? இரண்டுமே விதிதான். நல்ல காரியம் செய்தீர்கள்.

    பெண்களே பெண்களுக்கு எதிரியாவதைப் பற்றி நீங்கள் சொல்லி இருப்பதும் உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! சரிதான் நீங்களும் சொல்வது....

      நீக்கு
  8. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தினசரிகளில்தான் படித்திருக்கிறேன். நல்லவேளை, குழந்தை தப்பித்தது. தங்கள் மூலமாக குழந்தை நல்ல நிலையில் இருப்பதை நினைத்து சந்தோஷம். பதிவு வெகுவாக பாதித்துவிட்டது.

    என்னைக் கேட்டால் 'கொண்டாட வேண்டும்' என்றுதான் சொல்லுவேன். இதுவரை கேள்விப்படாதவர்களின் காதுகளில் விழட்டுமே. துளி விழிப்புணர்வாவது வந்தால் நல்லதே. இப்போதுதானே கொஞ்சம்கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. உடனே இல்லையென்றாலும் ஒருநாள் திருந்துவார்கள் என்று நம்புவோமே !

    கிடைக்கும் உரிமையை இருவருமே மனசாட்சியுடன் ஏற்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி!.

      உங்கள் கருத்தையும் ஏற்றுக் கொள்கின்றோம் என்றாலும், அந்த நாளில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பின்னர் இல்லாது ஆவதை விட, தினமுமே பெண்கள் தினம் தானே சகோதரி! பெண்களை மானபங்கப்படுத்துவது இன்னும் அதிகமாகின்றதுதானே! இந்த தின்ங்களை அறியாதவ்ர்கள் சத்தமில்லாமல் பல நல்ல செயல்களை ஆற்றி வருகின்றனர். அதைத் தான் இங்கு முன்னிருத்த விழைந்தோம்....மிக்க மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  9. ஒரு நாள் இல்லை... என்றுமே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...

    உங்களின் செயலுக்கு வணக்கங்கள்...

    அங்கங்கே இருக்கும் இணைப்புகளை கொடுக்கும் போது, வண்ணம் கொடுங்கள்... (Font Color or Background Color ) புதியவர்களுக்கு பயன்தரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி!

      ஃபான்ட் கலர் மாற்றி விட்டோம்.....பார்த்திருப்பீர்க்ள்! டெக்னிகல் ஆசான் நீங்கள் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை சொல்லுங்கள்! மிக்க மிக்க நன்றி !!!

      நீக்கு
  10. நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள் சகோதரியாரே
    பாராட்டுக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  11. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  12. குழந்தையைக் காப்பாற்றியமைக்கு மிக்க நன்றி..
    இந்தச் செய்தி என்றும் மனதில் நிலைத்திருக்கும்!..

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள் .அருமையான அலசலுக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. தங்களின் அரும்பணி கண்டு
      எதுவும் சொல்ல தோன்றவில்லை அன்று
      கடவுளர் உண்டா இல்லையா என்ற சந்தேகம்
      இனி தேவை இல்லை.
      அவர் (அக்குழந்தைக்கு மட்டுமல்ல எனக்கும்தான்)
      உங்களை ஒத்த தோற்றத்தில்தான் இருப்பர்.

      நீக்கு
    2. மிக்க நன்றி நண்பரே! நாங்க லேட்டுப்பா ....

      நீக்கு
  15. பெண்கள் தினத்தன்று தாங்கள் செய்த பணி பெண்குலத்திற்கே பெருமை சேர்க்கும்!

    பதிலளிநீக்கு
  16. பிறப்பொக்கும் என்று உரத்த குரலில் எடுத்துரைத்தாலும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்திருப்பது கண்கூடாகத் தெரிவதால் தாழ்த்தப் பட்டவருக்கு ஒதுக்கீடு எனும் பெயரில் சில முன்னுரிமைகள் வழங்கப் படுகின்றன. அதேபோல் ஆண்பெண் சமம் என்று அறிவுக்குத் தெரிந்தாலும் வழக்கத்தில் பெண் வீக்கர் செக்ஸ் என்று சில சலுகைகள் வழங்கப் படுகின்றன. பெண்களும் அதை அங்கீகரிக்கின்றனர்.தராசுமுனைபோல் இருபக்க எண்ணங்களையும் வெளியிட்ட உங்களுக்குப் பாராட்டுக்கள்.உங்களால் கண்டெடுக்கப் பட்ட குழந்தை அயல் நாட்டுக்குச் செல்லும் என்றால் இங்கு யாரும் தத்தெடுக்க மாட்டார்களா?அயல் நாட்டுக்குத் தத்து கொடுப்பதில் அந்த குழந்தை காப்பகத்துக்கு லாபமா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்!

      இல்லை சார்! அதில் எந்த பண விளையாட்டும் இல்லை. நேரடியாகவே நடந்தது. எந்தக் காப்பகமும் இதில் சம்பந்தபடவில்லை சார்! மிக மிக நல்ல உள்ளங்களும் இந்த சமுதாயத்தில் ஆங்காங்கே இருக்கின்றார்கள் ஆனால் திரை மறைவில். அவர்கள் வெளிச்சத்திற்கு வருவதை விரும்பாத காரணத்தினால் இங்கு சொல்ல வில்லை. இதைக் கூட நான் வெளிச்சம் போட்டுச் சொல்லி, நான் பாராட்டிறாகாக எழுதிவிட்டேனோ என்று தோன்றியது. ஆனால் நான் அந்த எண்ணத்தில் எழுதவில்லை. அதாவது இந்தத் தினத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.....அந்த தினத்திற்கான முக்கியத்துவம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே என்ற ஆதங்கத்தில் எழுதினேன்....சார். மிக்க நன்றி சார் தங்களின் பாராட்டிற்கும், ஊக்கத்திற்கும்.

      நீக்கு
  17. பெண்களுக்கு நிஜத்தில் எந்த ஒரு மதிப்பையும் தராமல் வெட்டியாக பெண்கள் தினம் கொண்டாடுவது வேஸ்ட்தான்! குடும்பத்தில் ஒரு சக மனுசியாக பெண்களை நடத்த பழக வேண்டும். குப்பையில் கிடந்த குழந்தை நல்ல வேளை உங்கள் கண்களில் பட்டது. இந்த நூற்றாண்டிலும் இது போன்ற கொடுமைகள் அரங்கேறுவது வேதனைதான்! சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! சுரேஷ்! தங்களின் கருத்து சரியே! மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  18. நல்ல பதிவு! பெண்கள் திருநாளன்று பெண் குழந்தை ஒன்றைக் காப்பாற்றிவிட்டுப் பதிவிடும் பேறு தங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதற்காகச் சிறியேனின் பணிவன்பான வாழ்த்துக்கள்!

    //சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று அபத்தமான ஒரு வசனம் வேறு. இந்தச் சிங்கங்கள் என்னவோ கூட்டமாக வந்துதான் பெண்களைச் சின்னா பின்னமாக்குகின்றார்கள்!// - செம்மையான செருப்படி!

    பெண்கள் தங்களுக்கு வழங்கப்படும் உரிமையைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி நீங்கள் எடுத்துக்காட்டியிருந்த நிகழ்வுகள் இதுவரை நான் அறியாதவை. அதற்காக நன்றி! அப்படியும் இருக்கலாம். ஆனால், தட்டிக் கேட்க, கவனிக்க யாரும் இல்லாவிட்டால் தவறு செய்யலாம் என்கிற இன்றைய சமூகத்தின் பாதிப்பாகத்தான் நாம் அதைப் பார்க்க முடியுமே தவிர, பெண்கள் என்கிற ஒரு பாலினர் செய்யும் தவறாக அதைப் பார்க்க முடியாதென்பதே என் பணிவன்பான கருத்து. ஆனாலும், நீங்கள் அதைக் கூறுவது பெண்களின் நன்மைக்காகத்தான் என்பது புரிகிறது. அடுத்தவர்களுக்காக இல்லாமல் நமக்காக நாம் ஒழுக்கம்மாக இருக்க வேண்டும், நெறிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்கிற பண்பு தோன்றும்படி பிள்ளைகளை வளர்த்தால் ஆண்-பெண்-திருநங்கை-திருநம்பி என எல்லோருமே ஒழுங்காக இருப்பார்கள்; அதுவே இதற்கான ஒரே தீர்வு!

    மற்றபடி, பெண்களே பெண்களுக்கெதிராக நடந்து கொள்வது, பாலியல் தொழிலில் பெண்களைத் தள்ளுபவர்கள் கூடப் பெண்களாக இருப்பது போன்றவையெல்லாம்... எல்லாம்... ஆணாதிக்க சமுதாயத்தின் விளைவுகளே அல்லாமல், கண்டிப்பாப் பெண்களை இதில் நீங்கள் குற்றம் கூறவே முடியாது.

    பெண் ஒருத்தி எதற்காக மாமியாரை வெறுக்கிறாள்? மூன்று காரணங்கள் பார்க்கலாம்! ஒன்று, சிறு வயதிலிருந்தே பெண் என்கிற காரணத்தால் அடக்கியே வளர்க்கப்பட்டவளுக்குத் தன் கையில் அதிகாரம் வந்தவுடன் அதைத் தவறாகப் பயன்படுத்தும் மனப்பான்மை எழுதல். அல்லது, தன்னை அடக்கி வைத்திருக்கும் கணவனைப் பழிவாங்க ஒரு வழியாக இதைத் தேர்ந்தெடுத்தல். அல்லது, சுதந்திரமாக வளர்க்கப்படும் முதல் தலைமுறைப் பெண் என்பதால் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவரை சகித்துக் கொண்டு வாழும் பொறுமையின்மை. ஆக மொத்தம், பெண் என்கிற காரணத்தால் குறிப்பிட்ட விதத்ததில் அவள் வளர்க்கப்பட்டதுதான் சக பெண் மீது அவள் வெறுப்புக் கொள்ளக் காரணமாக இருக்கிறது. அவளும் ஆண் போலச் சரிசமமாக வளர்க்கப்பட்டிருந்தால் இந்தச் சிக்கலே எழாது.

    இதே போல் நாத்தனார், அண்ணி போன்ற பிற பெண்கள் மீது பெண்கள் காழ்ப்புணர்ச்சி கொள்ளக் காரணம் பொருளாதாரத் தற்சார்பின்மை. வேலைக்குப் போகாத பெண்கள் தங்கள் கணவன் அவன் குடும்பத்துக்கு - குறிப்பாக, பெண்களுக்கு - செலவு செய்யும்பொழுது அதைக் கணக்குப் பார்க்கிறார்கள். அந்தப் பணம் இருந்தால் தனக்கு, தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு உதவுமே என நினைக்கிறார்கள். குடும்பச் சிகல்கள் அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பது இதுவே. இந்தச் சமூகம் பெண்ணைத் தன் சொந்தக் காலில் நிற்கப் பழக்கியிருந்தால், கணவன் எப்படிச் செலவு செய்தால் என்ன, நம் பணம் நம் கையில் இருக்கிறது; அவர் பணத்தை அவர் எப்படியாவது அவர் விருப்பப்படி செலவு செய்துவிட்டுப் போகட்டும் என நினைக்கும் பெருந்தன்மை பெண்களுக்கு இருந்திருக்கும்.

    அடுத்து, பாலியல் தொழில் என ஒன்று இருப்பதே பெண்ணின் உடல் மீதான இனக்கவர்ச்சியால்தான். (ஆண்களிலும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள் என்றாலும், பெண்கள்தான் இந்தத் தொழிலில் மிகுதியாக இருக்கிறார்கள், அல்லது அவ்வாறு நம்பப்படுகிறது). பெண் உடலையும் ஆண் உடலைப் போல வெளிப்படைத்தன்மை கொண்டதாக, மூடி மறைக்க வேண்டிய தேவை இல்லாததாகக் கருதும் போக்கு இந்தச் சமூகத்துக்கு இருந்திருந்தால் பாலியல் தொழில் என்கிற ஒன்று தோன்றியே இருக்காது. (இங்கே 'சமூகம்' என்கிற சொல் உலகச் சமூகம் மொத்தத்தையும் குறிக்கிறது).

    ஆக, எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒரு வகையில் ஆண்தான் காரணமாக இருக்கிறான். காரணம், இது ஆணாதிக்க சமூகம்! இந்தப் பழியிலிருந்து ஆண் ஒருபொழுதும் தப்பவே முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! முதலில் தங்களின் பாராட்டிற்கு!

      நண்பரே! நானும் பெண்தானே! என் முன்னால் நடப்பதைத்தான் எழுதி இருக்கிறேன். ஏன் எனக்கே கூட பல சலுகைகள் கிடைத்திருக்கின்றன...நியாயமற்ற முறைகளில். எனக்கு அதில் உடன் பாடு சுத்தமாகக் கிடையாது! ஆனால், பொது இடங்களில், அதை நான் பேச நினைத்தால், என்னைப் பைத்தியக்காரி என்பது போலும், நான் பிற பெண்களின் சலுகைகளை முறிப்பது போலும் பேச்சு எழுவதால், கூட்டத்தோடு கோவிந்தா போட வேண்டியதாக உள்ளது....வெட்கத்துடன். நான் பெண் என்பதில் பெருமை இருந்தாலும், ஆண்களுக்கு நானும் சமமே என்பதில் ஆணித்தர்மான கருத்து உடையவள். அதனால் இது போன்ற சுயமரியாதை இழக்கும் இடங்களில் மனம் வெட்கம் அடையும்.

      //இதே போல் நாத்தனார், அண்ணி போன்ற பிற பெண்கள் மீது பெண்கள் காழ்ப்புணர்ச்சி கொள்ளக் காரணம் பொருளாதாரத் தற்சார்பின்மை.// இல்லை நண்பரே! படித்த, பொருளாதாரம் நன்றாக உள்ளக் குடும்பங்களிலும் கூட மாமியார், நாத்தனார், மதினி ஏன் மகள் உறவுகள் கூட புரிதல் இல்லாமல் பிரிவுகள் ஏற்படுகின்றது. இங்கு அருகில் இருந்தாலும் சரி, அயல் நாடுகளிலும், இங்குமாக இருந்தாலும் சரி.....தூர இருந்தால் சேர உறவு என்பதும் பொய்த்துப் போகின்றது. நண்பரே! நான் உளவியல் (பட்டம் வாங்காமல் கற்றவள்...ஹ்ஹாஹஹ்ஹ பல உளவியல் புத்தகங்கள் மட்டுமல்ல அனுபவத்திலும் கற்றவள். என் நட்பு வட்டத்திற்குள்ளும், உளவியல் அடிப்படையிலான ஆலோசனைகள் வழங்கி வருபவள். அந்த அனுபவத்தில் தான்.......மட்டுமல்ல இது பணம் மட்டும் சார்ந்தது அல்ல. உணர்வுகள், கலாச்சாரம், உணவு, குடும்ப பழக்க வழக்கங்கள், சாதி, இன்னும் பிற காரணங்களினால் ஏற்படுவது. பெண்களுக்குள் புரிதல் வந்துவிட்டால் இந்தப் பிரச்சினைகளுக்கு, குறிப்பாகக் குடும்பங்கள் பிரியாமல் இருக்கும் என்பதில் எனக்கு மிகவும் ஆழ்ந்த நம்பிக்கை. குடும்ப அரசியல் சமையலைறையில் தான் தொடங்குகின்றது நண்பரே! ஹஹஹ்...

      பாலியல் ...ம்ம்ம்ம் இது பற்றி விரிவாக அலச வேண்டும் என்பதால் பின்னர்....

      நண்பரே! இது ஆணாதிக்க சமூகம் என்பது சரிதான் ஆனால் அதே சமூகத்தில் தான் அரசியலில் இருக்கும் பெண்களைக் கண்டு பயப்படும் ஆண்களும் இருக்கின்றார்கள்....ஒரு காலத்தில் இந்தியா எப்படி இருந்தது என்பது உங்களுக்கே தெரியும் ஏன் சில மாதங்களுக்கு முன்னும்....கோலோச்சும் ???!!! பெண்களும் ...ஹஹஹஹ உங்களுக்குத் தெரியாதா என்ன....

      மிக்க மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  19. தமிழ் மணம் 11 பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. அன்புள்ள சகோதரி,

    ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லைக் காண் என்றுக் கும்மியடி’ நல்ல பதிவு.
    ஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்பட வேண்டுமென அருமையான கருத்துகள் சொல்லியது மிகவும் பாராட்டுக்குரியது.

    ஒரு பெண் குழந்தை! தொப்புள் கொடி போலும் உதிராத நிலையில். பிறந்து ஓரிரு நாட்களோ, இல்லை சில மணி நேரங்களோதான் ஆகியிருக்க வேண்டும். அருகில் நாய் ஒன்று அதை முகர்ந்து பார்த்து நக்கத் தொடங்கியது. அதைப் பெற்றவளும் ஒரு பெண் தானே! அந்தக் குழந்தைக்கு கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்... தங்களின் பார்வையில் சிக்கியிருக்கிறது... நல்ல வழி காட்டியிருக்கிறீர்கள்...!

    இப்படி, எத்தனை அனாதைக் குழந்தைகளோ?

    -நன்றி.
    த.ம. 12.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் மேலான கருத்திற்கு!

      நீக்கு
  21. ஒருநாள் கூத்து என்பார்களே,அதைப் போலத்தான் ஆகிவிட்டது பெண்கள் தினம் என்பதும் !
    உங்கள் பார்வைக் கோணம் முற்றிலும் எனக்கும் உடன் பாடானதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜி! ஆதேதான் ஜி! பார்வைக் கோணம் தங்களுக்கும் உடன் பாடானதிற்கு மிக்க நன்றி! ஜி!

      நீக்கு
  22. பதிவை படித்து முடித்தவுடன் மனதில் எதோ ஒரு சோகம்... ரெண்டு ராசாதிக்களின் தகப்பன் அல்லவா.. நேராக இளையவளின் அறைக்கு சென்றேன். ஒருவித கவலையும் இல்லாமல் ஒரு தூக்கம் போட்டு கொண்டு இருகின்றாள். ஓர் பெண் குழந்தையை தெருவில் .... அய்யய்யோ.... மனதே பதறுகின்றது.. எதோ விட்ட குறை தொட்ட குறை... உங்கள் கண்ணில் அந்த விதை கிடைத்தது...உயிர் பிழைத்து விட்டது. ரெண்டு பெண் குழந்தைகளின் தகப்பன் என்கிற முறையில் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து .... கோடி நன்றி.. உமக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு! ஆம்! மனம் பதறத்தான் செய்தது. இப்போது அந்தக் குழந்தை நல்ல முறையில் இருப்பதை அறிந்து மனம் மிகவும் மகிழ்ச்சி!

      நீக்கு
  23. என் இனிய வில்லங்கத்தாருக்கு வணக்கம்..
    தாமதமான பின்னூட்டத்திற்க்கு மன்னிப்பு கோரமாட்டேன் காரணம் இதை இரண்டு தினங்களாக ஊன்றிப்படித்தேன் அத்தனையும் 100/100 உண்மையான வெட்கப்பட வேண்டிய விடயங்களே...

    //நானும் ஒரு பெண்தான் என்றாலும் ஏனோ பெண்கள் தினம் என்றுத் தனியாக ஒரு தினம் அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுவதில் ஒப்புதல் இல்லை. ஏனென்றால் அதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதே எனது தாழ்மையானக் கருத்து//
    ஆம் இதில் சமூகத்திற்க்கு பிரயோசனம் என்ன ? அன்றைய தினம் மட்டும் மதித்தால் போதுமா ? எமது கேள்வியும் இதுவே... பெண்களைப்பற்றி உயர்வாய் மேடையில் வாய் கிழிய பேசுபவர்கள் வீட்டில் மனைவியை எப்படி ? மதிக்கின்றார்கள் 80தை, மனசாட்சி உள்ள 6 அறிவு என்று சொல்லிக்கொள்பவர்கள் சிந்திக்கவும்.

    //இந்த உலகில் தினமுமே ஏதோ ஒரு இடத்தில், மூலையில் பெண்கள் மிதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்//
    இதற்கு எமது பாகத்திலிருந்து மறுப்பு இல்லை.

    //ஒரு பெண் குழந்தை தொப்புள் கொடி போலும் உதிராத நிலையில். பிறந்து ஓரிரு நாட்களோ, இல்லை சில மணி நேரங்களோதான் ஆகியிருக்க வேண்டும். அருகில் நாய் ஒன்று அதை முகர்ந்து பார்த்து நக்கத் தொடங்கியது//
    கண்கள் கசிந்து விட்டன... இதைவிடக்கொடுமை வேண்டுமா ? இந்நிலையை உருவாக்கிய ‘’அந்த’’ கேடுகெட்ட ஆண்-பெண் இருவரும் ஒருகணம் நினைத்துப் பார்த்தார்களா ? நமது தாய் அன்று நம்மை இப்படி போட்டிருந்தால் நமது நிலை இந்தப்பாழும் சமூகத்தில் எப்படி வாழ்ந்திருப்போமென ?

    //இப்படி அனாதையாகக் கிடக்கும் குழந்தைகள் யார் கண்ணிலும் படவில்லை என்றால், சமூகக் கிருமிகள் குழந்தைகளைப் பிச்சை எடுப்பவர்களாக ஆக்கிவிடுவார்கள், அதுவும், கண்ணையோ, கையையோ, காலையோ சிதைத்து, இல்லை என்றால் வளர்த்து, சிவப்பு விளக்கிற்குத் தாரை வார்த்து விடுவார்கள். இல்லையேல் தாங்களே பலாத்காரம்//
    தெருவோரம் இதைத்தானே பார்த்துக்கொண்டு கேட்கத்திராணியில்லாது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் எனது தளத்தில் நான் சொல்லியிருக்கும் ‘’விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக்காண’’ இதை நான் சொன்னதில் காரணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது...

    //இயற்கையில் பெண் சிங்கம் தான் வேட்டையாடச் செல்லும். ஆண் சிங்கம் குட்டிகளைப் பார்த்துக் கொள்ளும், பெண் சிங்கம் வரும் வரை. பெண் சிங்கங்கள்தான் ஆண் சிங்கங்களை விட வலிமை வாய்ந்தவை என்று சமூகத்திற்குத் தெரியவில்லை இரு சிங்கங்களும் சமமாகத்தான் இருக்கின்றன. விலங்குகளில் கூட ஆண் பெண் பேதம் இல்லை. மனித இனத்தில்தான்//
    இது இந்த சினிமாக்காரங்களுக்கு தெரியாதுபோல... அவங்களைச்சொல்லி குற்றமில்லை விட்டில் பூச்சிகளின் கை தட்டலே காரணவாதிகள்.

    // தாயாக இருக்கும் அதே பெண் மாமியார் எனும் பொறுப்பைப் பெறும் போது அவளது மனம் மாறுகின்றதே - சகோதரியாக இருப்பவள் தன் சகோதரனின் மனைவி என்று வரும் பெண்ணின் மீதான பார்வை வேறாகின்றதே//
    இதற்க்கு பெண்கள் சமூகமே பதில் சொல்லவேண்டும்.

    இந்த பெண் குழந்தைகளைப்பற்றிய பதிவு ஒன்று எழுதியிருக்கின்றேன் ஆனால் இம்மாதம் 30ம் தேதி வெளியிடவதற்காக ஒருபதிவு இருக்கிறது அதன் பிறகே இதை வெளியிடமுடியும் காரணம் இரண்டுக்கும் தொடர்பு உண்டு..

    சமூக பொருப்புள்ள இந்தப்பதிவுக்கு எமது ராயல் சல்யூட்.
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ அதென்ன வில்லங்கதார்...பரவாயில்லை இனிய வில்லங்கத்தார் ஆஹா!

      மிக்க நன்றி நண்பரே! தங்களின் விரிவான, மேலான கருத்திற்கும். பெண்கள் சமூகம் என்ன...நானே ஒரு பெண் தானே ஜி! இபு அவர்களுக்குக் கொடுத்துள்ள பின்னூட்டம் தான் இதற்கும்...

      உங்கள் பதிவு 30 ஆம் தேதி பதிற்கு வெயிட்டிங்க்....தங்களின் சல்யூட்டை ஏற்றுக் கொண்டோம்.....மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  24. மிக்க நன்றி டிடி! தாமதம் தான்......னன்றி தெரிவிப்பதற்கு...தாமதமாகிவிட்டது...

    பதிலளிநீக்கு