வெள்ளி, 6 மார்ச், 2015

ஆவியுடன் நாங்கள் – “காதல் போயின் காதல்” அனுபவம்

     

ஆவியும் காமேரா அஸ்வினும்


    நண்பர் ஆவியுடனான எங்கள் பந்தம் பதிவர் குடந்தை ஆர்.வி சரவணன் அவர்களின் புத்தகம் “இளமை எழுதும் கவிதை நீ” வெளியீட்டின் போது ஓரிரு வார்த்தைகளில் ஆரம்பித்தது. பின்னர் ஆவி அவர்களின் “ஆவிப்பா” புத்தக வெளியீட்டின் போது அது சற்று விரிவடைந்து, வலைத்தளத்தில் இடும் கருத்துக்கள் மூலம் இன்னும் விரிவடைந்து, பின்னர் துளசியின் பரோட்டா கார்த்திக்கில் அவரைப் பங்கெடுக்கச் செய்ய எங்கள் நட்பு விரிவடைந்தது. அப்போது சரவணன் அவர்கள் எங்களுக்கு நெருங்கிய நண்பராக இருந்ததால், அவரது முதல் குறும்படமான “சில நொடி சினேகம்” படத்தில் ஆவி கதாநாயகனாக அறிமுகம் ஆன போது, அதில் துளசியும், கீதாவும் பங்கெடுக்க, துளசியும், ஆவியும் கோயம்புத்தூரிலிருந்து ஒரே ரயிலில் பயணிக்க, அன்று ஆவியும், துளசியும் இரவு தூக்கத்தைத் தியாகம் செய்து, சினிமா பற்றி நெடு நேரம் பேசிக்கொண்டுவர, அப்போது ஆவி, ஆவியுடனான நட்பு இன்னும் நெருக்கமானது எனலாம்.  ஆவி, கீதாவை, கீதா சேச்சி என்று அழைக்கும் அளவு!

        அதன் பின்னர் ஆவி தனது முதல் குறும்படத்திற்காக, இரு கதைகளை அனுப்ப, அதில்  “காதல் போயின் காதல்” கதையை எங்கள் குழு பரிந்துரைக்க, காதல் போயின் காதல் முடிவானது.  கதையைக் குறித்து எங்களுடன் கருத்து பகிர்ந்துக் கொண்டு, அதனது கதையை எங்களை வாசிக்கச் சொல்லி, திரைக்கதை அனுப்ப, அதைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களின் வழியாக எங்கள் நட்பு வளர்ந்து நெருங்கியது.  ஆவி முதலில் எழுதிய திரைக்கதையில் அதன் நாயகி எதிர்மறை கோணத்தில் காட்டப்பட்டுள்ளது என்றும், அதன் முடிவு அவ்வளவு சரியாக இல்லை என்றும் துளசி நினைக்க, பின்னர் பலரும் அதே கருத்தைத் தெரிவிக்க, ஆவி சற்றே கதையை மாற்றி நாயகி ஒரு நல்ல நேர்மறை கதாபாத்திரமாக வடிவமைத்தார்.  கீதாவிற்கு அதில் உடன்பாடில்லை என்றாலும், பெரும்பான்மையோர் அளிக்கும் ஓட்டுதானே செல்லுபடியாகும்!


நண்பர் ஆவியும், துளசியும் பாலக்காட்டில்

        திரைக்கதையை எழுதி முடித்து எங்கள் குழுவினருக்கு அதை அனுப்பி எங்கள் கருத்துக்களைக் கேட்ட சமயம், கீதா கோயம்புத்தூருக்குப் பயணம் மேற்கொள்ள, ஆவியும், கீதாவும் துளசியைப் பாலக்காட்டில் சந்தித்துக் கதையை விவாதம் செய்ய, துளசி கதையை ஷாட் பை ஷாட் வாசித்து அதற்கான காமெரா கோணம், எப்படி எடுக்க வேண்டும், எப்படி எடுத்தால் நன்றாக இருக்கும் என்றும், கதாபாத்திரங்களைப் பற்றியும், விபத்துக் காட்சி எப்படிப் படமாக்கப்பட வேண்டும் என்றும் பல விஷயங்களைப் பகிர்ந்தார்.  அந்த அனுபவம் மிகவும் இனிமையான ஒரு அனுபவம்.

        அடுத்து அந்தத் திரைக்கதையின் முதல் கதைக் களம் மாற்ற வேண்டியதாகிப் போனது, அங்கு படம் பிடிக்க மிகவும் அதிகமான ரேட் கேட்கப்பட்டதால்.  பின்னர் ஒரு பூங்கா என்று முடிவு செய்யப்பட்டது.  திரைக்கதையும் மெருகேற்றப்பட்டுக் கொண்டே இருந்தது.  ஆவி, அதற்காக மிகவும் உழைத்தார் எனலாம்.  திரைக்கதை எழுதும் ஃபார்மாட் முதல் கூகுளில் தேடி எடுத்து அதில்தான் அவர் எழுதினார்.  இப்படியாகக் கதை மெருகேற்றப்பட்டு, கதாநாயகன், நம் ஷைனிங்க் ஸ்டார் சீனு, கதையில் வரும் குட்டிப்பையன், பதிவர் கார்த்திக் சரவணன் அவர்களின் மகன் ரக்ஷித், நாயகனுக்கும், நாயகிக்கும் நல்ல பரிச்சயமான ஒரு காஃபி விற்கும் மனிதராகத் துளசி, கார் டிரைவராக குடந்தை ஆர் வி சரவணன், நாயகனின் நண்பர்கள், இப்படி எல்லோரும் முடிவாக்கப்பட்ட நிலையில் கதைக்கு மிகவும் தேவையான நாயகி கிடைப்பதில் மிகவும் சிரமம் இருந்தது.  அதுவும் ஒரு சிறு பையனின் தாயாக நடிக்க வேண்டும் என்றதும் மிகவும் யோசித்தார்கள், பின்வாங்கினார்கள். நாயகி இல்லாமல், நிழலை வைத்தே படம் எடுத்துவிடலாம், அல்லது காமெரா, நாயகியைக் காண்பிக்காமல் கூடப் படம் எடுத்தால் என்ன என்றெல்லாம் ஆவியும், கீதாவும் விவாதித்தாலும், கதாநாயகி கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் தோன்றியது. இறுதியில் மதுவந்தி முடிவானார்.  அதே போன்றுதான் காமெரா விற்கும் முதலில் சரியாக அமையாமல், பின்னர் மதுவந்தியின் நண்பர் அஸ்வின் எங்கள் குழுவிற்குப் பிடித்து விட அவர் முடிவானார்.

        படப்பிடிப்புத் தேதியை ஆவி முன்னரே முடிவு செய்துவிட்டார். எங்களை மிகவும் கவர்ந்த விஷயங்கள். எல்லாமே அவர் மிகவும் அழகாகத் திட்டமிட்டே செய்தார் என்றால் அது மிகையாகாது.  கதாநாயகி கிடைக்காத போது கூட, ஆவி, டென்ஷனை வெளியில் காட்டாமல், மிகவும் அமைதியாக அதை எப்படி சமாளிக்கலாம் என்று வித்தியாசமாக யோசித்தார். தொடர்பு கொள்வதிலும், ஒருங்கிணைப்பிலும் அவரது திறமை பளிச். பலரது கருத்துக்களைக் கேட்டாலும், தேவைப்பட்ட கருத்துக்களையும், யோசனைகளையும், திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு அணுகியும், அதே சமயம் சில இடங்களில் தனது முடிவில் உறுதியாக இருந்ததும் எங்களை மிகவும் கவர்ந்தது.
 
        படப்பிடிப்புத் தொடங்கும் முன், இரு முறை ஒத்திகைப் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதையும் நடத்தினார்.  ஒத்திகை அனுபவம் மிக மிக ஒரு ரசனையான அனுபவம். பதிவர் அரசனும் எங்களுடன் இருந்து ஒத்திகை பார்க்கும் போது அவர் பல நகைச்சுவைத் துணுக்குகளை அள்ளி வீசி அந்த இடத்தையே மிகவும் கலகலப்பாக வைத்திருந்தார். படப்பிடிப்பு நாள் நெருங்கிட, துளசியும் அவரது மனைவியும் முதல் நாளே கீதாவின் வீட்டிற்கு வந்து தங்கினர்.  படம் முடிந்த உடன், துளசியாலும், மதுவந்தியினாலும் மீண்டும் டப்பிங்கிற்கு வர முடியாத காரணத்தினால், கீதாவின் வீடு டப்பிங்க் தியேட்டர் ஆனது.



        எடிட்டிங்கிற்கும் ஆவியின் நண்பர் திரு முல்லை வேந்தன் என்பவர் முடிவாக, கீதாவுக்கு அந்த அனுபவமும் கிடைத்தது, ஆவியால்.  ஆவியின் இந்தப் படத்தின் மூலம் கீதா நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது என்பதால் ஆவிக்கு கீதாவின் இதயம் கனிந்த நன்றிகள் பல!  அதற்கு முடிவில்லை.  இறுதியில் ஆவிக்கு இதில் பாடலும் வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்ற, திரு முல்லை வேந்தன் அவர்களின் நண்பர் திரு ரவி என்பவர் முடிவானார்.  அவரும் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்.  கீதாவுக்கு அவருடைய அறிமுகமும் கிடைத்தது என்றால் அதற்கும் ஆவிதான் காரணம்.
    
 ‘
        ஆவி மிகவும் தேர்ந்த பாடலாசிரியர் என்றும் சொல்லலாம்.  அருமையான வரிகள். அதற்கு அந்தப் பல்லவிக்கு மெட்டு அமைத்தவரும் ஆவியே.  அதை ஆவி பாடிக்காட்ட, அதை கீதா உள்வாங்கிப் பாட, இசையமைப்பாளர் திரு ரவி அவர்கள் அதற்கு மெருகேற்றி இசை அமைக்க...ஆவி கீதாவைப் படத்தில் பாட வைக்க, கீதாவுக்கு மிகவும் சந்தோஷம்.  அதற்கு சில நாட்களுக்கு முன் தான் துளசி தனது படத்திற்கு வேண்டி லிங்காஷ்டகம் கேட்க அதை, கீதாவும், ஆவியும் பாடி பதிவு செய்தனர். அதுவே கீதாவுக்கு முதல் அனுபவம்.  இரண்டாவதாக ஒரு படத்தில் பின்னணி இசை பாடுவது போல, ஆவியின் படத்தில் பாடியது கீதாவுக்குப் புது அனுபவம்தான்.  ஆவி, கீதாவிற்கு இத்தகைய ஒரு நல்ல அனுபவத்தையும், வாய்ப்பையும் அளித்த ஆவிக்குக் கீதாவின் கோடானு கோடி நன்றிகள்.  எத்தனை நன்றிகள் உரைத்தாலும், எத்தனை முறை அதைச் சொன்னாலும் அதற்கு முடிவில்லை. தீராது!

        ஆவியுடனான அவரது படத்தில் ஏற்பட்ட எங்கள் அனுபவம் மிக மிக இனிமையானது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்போதும், ஆவி பாடல் எழுதி, மெட்டும் அமைக்க அதை சற்று மெருகேற்றி கீதா பாட, இப்படியாக ஒரு சுகராக அனுபவம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆவி, மிக அருமையானப் பாடல் வரிகள் எழுதி, முறையாகப் பாட்டு கற்றுக் கொள்ளாமலேயே அதற்கு மெட்டு அமைப்பது மிக ஆச்சரியமான ஒரு விஷயம்.  ஆவியை,  டி ஆர் போன்று ஆவி, என்றுதான் நாங்கள் சொல்லுவோம்.

        இப்படியான ஒரு நட்பும், அனுபவம் எங்களுக்கு அவருடன் ஏற்பட்டு பல விஷயங்கள் நாங்கள் கற்றுக் கொள்ள இந்த அனுபவங்கள் உதவியது என்றால் அது மிகையாகாது.




        ஆவி, உங்கள் முதல் குறும்படமே, சிறப்பாக வந்தமைக்கு (சில குறைபாடுகள் நாம் அறிந்தவையே என்றாலும், தவிர்க்க முடியாத  காரணங்களால் அவற்றைக் களைய முடியாமல் அமைந்தாலும், )  எங்கள் இதயம் கனிந்த, மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!  தாங்கள் மேலும் மேலும் சிறந்த படங்கள் அளிக்க எங்கள் வாழ்த்துக்கள்! உங்களுடன் எங்களுக்கு ஏற்பட்ட இனிமையான அனுபவத்திற்கும், நட்பிற்கும், புதிய நல்ல அறிமுகங்களுக்கும், நீங்கள் எங்களுக்கு அளித்த வாய்ப்பிற்கும், மனமார்ந்த நன்றிகள் பல எங்கள் இதயத்திலிருந்து! மிக்க மிக்க நன்றி ஆவி! 



40 கருத்துகள்:

  1. தங்களது அனுபவத்தை அழாக விவரித்தது ஸ்பாட்டில் இருந்தது போன்ற உணர்வை தந்தது தொடரட்டும் தங்களது கூட்டு முயற்ச்சி வாழ்த்துகள்
    சதமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. சென்ற பதிவின் பின்னூட்டத்திலேயே எழுத நினைத்து மறந்துவிட்டேன். காமிரா கூச்சம் சிறிதுமில்லாமல் இயல்பாய் நடித்திருந்தீர்கள் என்பதுதான் அது. குட்டிப் பையனுமே கவர்ந்துவிட்டான்.

    தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும்!

      நீக்கு
  3. படத்தையும் பார்த்தேன், இந்த பதிவையும் படித்தேன். எதோ நானும் இந்த படத்தின் குழுவில் இருப்பது போல் ஒரு உணர்வு .
    துளசி அவர்கள் அந்த டீ கடையாளராக வந்த வேடத்தில் இருந்து வருங்காலத்தில் முதல்வர் அல்ல பிரதமராக ஆசை படுகின்றார் என்ற என் எண்ணத்தில் சந்தேகமே இல்லை.
    மற்றும் அடுத்த படத்தில் எனக்கு ஒரு வில்லன் ரோல் கொடுக்குமாறு தாழ்மையோடு கேட்டு கொண்டு ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! ஐயையோ ஏனப்பா உங்களுக்கு இப்படியொரு விபரீத ஆசை!? ஹஹஹஹ் என்னை இப்படி எல்லாம் வம்புல மாட்டி விடறீங்களே! உங்கள் கனவு மெய்ப்பட வேண்டும் என்று எப்போதும் வாழ்த்துவோம் ஆனால் இந்தக் கனவு மட்டும் வேண்டவே வேண்டாம்...

      நிச்சயமாகக் கொடுக்கின்றோம்..நீங்கள் வாருங்கள் நண்பரே!

      நீக்கு
  4. தொடர்ந்து படங்கள் திரையில் காண
    படர்ந்து வருவேன் துணைக்கு.

    பதிலளிநீக்கு
  5. ஆவி குறும்படம் சிறப்பான வரவேற்பினை பெறுவதற்கு நல்வாழ்த்துகள்.
    கீதா அவர்கள் பாடிய பாடல் ஹிட் அடைய வாழ்த்துகள்.

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும்!

      நீக்கு
  6. குறும்பட அனுபவமே...ஒரு கதை போல் சுவாரஸ்யமாக இருக்கிறது. எத்தனை விதமான அனுபவங்கள்... அழகாய் தொகுத்து தந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. சுவையாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனந்தின் பாடல் புனையும் திறன், இசை அமைக்கும் திறன், அதைப் பாடும் திறன் உண்மையிலேயே ஆச்சர்யப்படுத்தும் திறமை. பாராட்டப் பட வேண்டிய ஒன்று. திறமையான இளைஞர்.

    இதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் ஷைனிங் ஸ்டார் உள்ளிட்ட கலைஞர்களுடன் ஏற்பட்ட சுவையான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நண்பரே! அவர் மிகவும் திறமை மிக்கவர். அவர் இசை கற்றுக் கொண்டால் இன்னும் நிறைய செய்யலாம் என்று கீதா சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். அவருக்குத்தான் நேரம் கிடைக்க வேண்டும்.....நிச்சயமாகக் கற்றுக் கொள்வார்.

      கலைஞர்களைப்பற்றிச் சொல்ல நினைத்தோம் இதுவே பெரிதாகி விட்டதால் அப்படியே நிறுத்திக் கொண்டோம்.
      உங்கள் வேண்டு கோள் ஏற்கப்பட்டது. கண்டிப்பாகத் தொடர்கின்றோம். ஆனால் இரண்டு மூன்று பதிவுகளுக்குப் பிறகு ஓகேயா....

      நீக்கு
  8. நம்ம ஆவி - கூல் ஆவி...!

    ஷைனிங் ஸ்டார் சீனு பற்றி அதிகம் சொல்லாததால், நான் கோபித்துக் கொள்கிறேன்... ஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹ ஷைனிங்க் ஸ்டார் பற்றித்தான் முகநூலே பேசிக் கொண்டிருக்கின்றதே! ஹஹாஹ் நாங்களும் சொல்லுகின்றோம் விரைவில்....(ஷைனிங்க் ஸ்டார் யோசிக்கின்றார்.....நம்மள வெச்சுக் காமெடி கீமடி எதுவும் இவிங்க செய்ய மாட்டாங்கல்லா....)

      நீக்கு
  9. ஆவி அவர்கள் பாராட்டிற்கு உரியவர்
    இக் குறும்படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!

      நீக்கு
  10. குறும்படம் அனுபவங்கள் அருமை.
    அனைவரும் இயல்பாய் நடித்தது குறும்படத்தின் வெற்றி.
    சிறுவன் ரக்ஷித் நன்றாக நடித்து இருந்தார்.
    பாடல் அருமை.
    படம்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    ஆவி மேலும் சிறந்த படங்கள் தர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும். சிறுவன் ரஷித்தைப் பாராட்டியதற்கும்!

      நீக்கு
  11. குறும்பட அனுபவங்கள் பகிர்வு நன்றாக இருக்கிறதுநட்புகள் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அனுபவங்கள் அருமை. வாழ்த்துக்கள்.
    தம7

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள அய்யா,

    “காதல் போயின் காதல்” அனுபவம் புகைப்படங்களுடன் தாங்கள் படிக்கத் தந்தது மிகவும் சுவையாக இருந்தது.
    ஆவியும் காமேரா அஸ்வினும் - அதிலிருந்து ஆரம்பித்து - குழுவினருடன் எவ்வாறு நட்பு தொடங்கியது... தொடர்ந்தது என்பதை இரசிக்கும் படி தந்ததீர்கள். கோவை ஆவி அவர்கள் திரைக்கதையை எழுதி முடித்து தங்கள் குழுவினருக்கு அதை அனுப்பி வைத்து அதற்கு இறுதி வடிவம் கொடுக்க எவ்வாறு அனைவரும் உழைத்தீர்கள் என்பதை விவரித்திருந்தை எண்ணி வியந்து போனேன்.

    கதாநாயகி கிடைக்காமல்... பிறகு கிடைத்த நாயகி மதுவந்தி மிக அருமையாக தனது பாத்திரத்தை நேர்த்தியாகச் செய்துள்ளதைப் பாராட்டியே ஆக வேண்டும். அஸ்வின் அவர்களும் கேமாரவில் அசத்தியிருக்கிறார்.
    கோவை ஆவி நடிப்பில் மட்டுமல்ல நல்ல மெலோடி மெட்டமைத்து பாட்டெழுதி...இயக்கி இருப்பதற்கு வாழ்த்துகள்....பாராட்டுகள்!
    கீதா நன்றாகப் பாடியிருப்பது மேலும் குறும்படத்திற்கு மெருகூட்டி அழகுக்கு அழகு சேர்த்தது என்று சொன்னால் அது மிகையில்லை!

    ஒரு சுகராக அனுபவம் ... இனிமை...அருமை...பெருமை...
    குறும்படத்தின் வலிமை சொல்லும் திறமை... வளமை...!
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! எல்லோரையும் முக்கியமாகக் கலைஞர்களைப் பாராட்டியதற்கு! கீதாவின் நன்றிகளும்.

      அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  14. குறும்படம் என்றாலும் கடும் உழைப்பும் முயற்சியும் தேவை. ஆவி அதில் வெற்றி பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரெ! மிகச் சரியே! மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!

      நீக்கு
  15. விரிவான விளக்கமான பதிவால் அனைத்தையும் உணர்ந்தேன் குறும் படம் எடுக்கவே இவ்வளவு பாடா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! ஆம் ஐயா குறும்படம் எடுப்பதற்கும் மிகச் சரியான திட்டமிடுதலும், உழைப்பும் மிக மிக அவசியம்! மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  16. குறும்படம் எடுக்கும்போது கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    படத்தில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட் ஜி! தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!

      நீக்கு
  17. படம் முழுதாகப் பார்த்தேன் ... குறைகள் சொல்வது எளிது... எனவே.. ஹாட்ஸ் ஆப் டு டீம். நல்ல பதிவு தோழர்
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! ஆம் குறைகள் எங்கள் குழுவிற்குமே கண்ணில் பட்டதே! உண்மைதான்....

      நீக்கு
  18. உங்களின் குறும்பட அனுபவம் சூப்பர். ஒரு குறும்படத்தில் இவ்வளவு அனுபவங்களா!!!!!
    கூட்டு முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    விரைவில் சகோ கீதா வெள்ளித்திரை பாடகராக ஆவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ்ஹஹ்! நண்பரே! வெள்ளித்திரை பாடகரா.....ம்ம்ம்ம் உங்கள் வாக்கு பலித்தால் கசக்கவா போகின்றது!!! மிக்க நன்றி!

      நீக்கு
  19. நான் இந்தப் படத்தை நம் சகா மைதிலி அவர்களின் 'மகிழ்நிறை' அவர்களின் தளத்தில் பார்த்தேன். அங்கு நான் தெரிவித்த அதே கருத்தையே இங்கும் தங்களிடம் நேரிடையாகக் கூற விரும்புகிறேன்.

    உண்மையிலேயே மிகவும் நல்ல கதை! திரைக்கதையும் நன்றாகவே இருக்கிறது. பாடலும் நன்று. ஆனால், நடிப்பிலும் இயக்கத்திலும் முதிர்ச்சியின்மை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. அடுத்த முறை அதைச் சரி செய்து கொண்டால், இன்னும் இன்னும் அருமையான படைப்புகளைக் குழு வழங்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக நண்பரே! இதுதானே ஆவிக்கு முதல் படம்! சரி செய்து கொள்வார். அடுத்த முறை சரியாக்குதலில் முயற்சிகள் தொடர்கின்றன.....மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும், நல்ல ஆலோசனைக்கும்!

      நீக்கு
  20. //நாயகி எதிர்மறை கோணத்தில் காட்டப்பட்டுள்ளது என்றும், அதன் முடிவு அவ்வளவு சரியாக இல்லை என்றும் துளசி நினைக்க, பின்னர் பலரும் அதே கருத்தைத் தெரிவிக்க, ஆவி சற்றே கதையை மாற்றி நாயகி ஒரு நல்ல நேர்மறை கதாபாத்திரமாக வடிவமைத்தார்// - அப்படியா!! பார்ப்பதற்கு அப்படித் தெரியவே இல்லை! படத்தின் தலைப்பும் அந்த முடிவும் சேர்ந்து, பார்ப்பதற்கு அதுதான் உண்மையான முடிவு என்பது போலத்தான் தோற்றமளித்தது. நாயகி எதிர்மறையானவராக இருந்திருந்தால் இந்தப் படத்தில் பாராட்டுவதற்கென ஒன்றுமே... ஒன்றுமே... இருந்திருக்காது. இன்றைய காலக்கட்டத்தில், பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் பாடல்களில் கூறப்படும் பெண்கள் பற்றிய கருத்தே அதுதானே? அதைப் போய் ஒரு குறும்படமாக எடுத்திருந்தால், உட்கார்ந்து பார்க்க அதில் புதிதாக என்ன இருக்கிறது? அப்படி இல்லாமல், கடைசியில் அந்தப் பெண்ணைத் தியாகியாகக் காட்டியதுதான், அந்த முடிவுதான் படத்தை எங்கேயோ கொண்டு போய்விட்டது. ஆக, இதை ஒரு படம் என ஏற்றுக் கொள்வதற்குண்டான தகுதியை ஏற்படுத்தியதே துளசி ஐயா, கீதா அம்மணி ஆகியோரின் அந்த முடிவு பற்றிய கேள்வியெழுப்பல்தான்; அதை மாற்ற வைத்த அவர்களின் முயற்சிதான். அதன் பின், அதை மிகக் கச்சிதமாக, கதையின் உண்மையான முடிவே அதுதான் எனத் தோன்றக்கூடிய அளவுக்கு எழுதிய ஆவி அவர்கள் பாராட்டுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! அது எதிர்மறை என்றால் நாம் சாதாரணமாக நினைப்பது போன்ற எதிர்மறை அல்ல. இந்தக் காலத்துப் பெண்களின், யுவதிகளின் மன எண்ணத்தில் அமைந்த யதார்த்தமான முடிவு. இப்போதைய காலகட்டத்திற்கு அது தவறல்ல யதார்த்தம் என்ற ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், பலராலும் அது நிராகரிக்கப்பட்டதால்.....ஆம் இந்த முடிவு, மாற்றி அமைக்கப்பட்ட முடிவு மிகவும் உன்னதாமான முடிவுதான். ஆவி நிஜமாகவே பாராட்டப்பட வேண்டியவர். மற்றவர்களின் கருத்திற்கும் மனதைத் திறந்து வைத்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்.

      துளசி மட்டுமல்ல பலரும் (கீதாவைத் தவிர. ஏனென்றால் ஒரு மாறுபட்டக் கருத்தை, முடிவை இந்த சமுதாயம் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது என்பதால்....உண்மைய இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளத் தயங்குவதால்) அந்தக் கேள்வி எழுப்பியதாலும் முதல் முடிவு விருப்பப்படாததாலும், (அதில் கதாநாயகன் தான் காதலை நினைத்து அதிலேயே தன் வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது போல்) அது உண்மையான நிகழ்வாக இருந்தாலும், உண்மையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாலும், உண்மையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதே!! அதனால் இப்படியானது. எப்படியோ, படம் ஓரளவு நன்றாக வந்திருந்ததால்....சென்றடைந்தது.

      குறைகள் இருக்கின்றன என்பது எங்கள் குழுவினருக்கும் தெரிகின்றது. தவறுகளில் இருந்துதானே கற்றுக் கொள்கின்றோம். எனவே அதைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்கின்றோம்.

      மிக்க மிக்க நன்றி நண்பரே! தங்களின் விரிவான கருத்திற்கு! இங்கு சற்றுத் தாமதமாகிவிட்டது. உங்களுக்குப் பதில் சொல்ல....

      நீக்கு
  21. விளக்கத்துக்கு நன்றி ஐயா, அம்மணி!

    //எதிர்மறை என்றால் நாம் சாதாரணமாக நினைப்பது போன்ற எதிர்மறை அல்ல. இந்தக் காலத்துப் பெண்களின், யுவதிகளின் மன எண்ணத்தில் அமைந்த யதார்த்தமான முடிவு... ... // - ஓ! அப்படியா! நான் பெண்களைத் தவறாகக் காட்டும் விதமான முடிவு என்று நினைத்தேன். நடைமுறை உண்மை நிலையை எடுத்துக்காட்டும்படியான முடிவு என்றால், அப்படி அமைக்கத் தயங்காதீர்கள் இனி என்பது ரசிகன் எனும் முறையில் என் பணிவன்பான வேண்டுகோள்! காரணம், வெள்ளித்திரை, சின்னத்திரை போன்ற வணிகச்சூழல்சார் துறைகளுக்குத்தாம் வெற்றி, தோல்வி ஆகியவை உண்டு. ஆகவே, அவற்றுக்குப் பொருளியல்சார்க் கட்டுப்பாடுகளும் உண்டு. குறும்படத்துறைக்கு அவை இல்லை. எனவே, புதிய முயற்சிகளையும் துணிச்சலான கதைசொல்லும் முயற்சிகளையும் அவர்கள்தாம் மேற்கொள்ள வேண்டும். அவர்களும் தயங்கினால் எப்படி? :-)

    பதிலளிநீக்கு