திங்கள், 5 ஜனவரி, 2015

கிழக்குக் கடற்கரையோரம் VS மேற்குக் கடற்கரையோரம்

கிழக்குக் கடற்கரையோரம்                #VS                மேற்குக் கடற்கரையோரம்
படங்கள்:நன்றி:இணையம்.

அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை ஓரம் இருக்கும் நம்ம நண்பர் விசு(awesome) ற்கு இருப்பு கொள்ளவில்லை. காரணம் என்ன? இருங்க...அவரு உடனே கிழக்குக் கடற்கரை ஓரம் இருக்கும் நம்ம நண்பர் மதுரைத் தமிழனுக்கு ஒரு ஃபோன் போட்டாரு
.
விசு : தமிழா!

மதுரைத்தமிழன்: ஹலோ! என்ன விசு அண்ணா இப்படி பேயறைஞ்சா மாதிரி கூப்பிடுறீங்க?!!  நீங்க பேயறைஞ்ச கதைய சொல்ல மாட்டீங்க...அது என்னனு எனக்குத் தெரியும் !!!!  ஹ்ஹாஹ்...

விசு: தமிழா உங்களுக்குத் தெரிஞ்சு போச்சா...இவ்வளவு நாள் நான் எல்லார்கிட்டயும் சொல்லறேன் சொல்லறேன்னு தப்பிச்சுக்கிட்டு இருந்தேன்...இப்ப நீங்க உடைச்சிருவீங்க போல இருக்கே...

மதுரைத்தமிழன்: சரி...எப்ப நான் உடைக்கறேங்கறத பத்தி அப்புறமா பார்க்கலாம்...இப்ப எதுக்கு கூப்டீங்க அதச் சொல்லுங்க...எங்கிட்ட சொல்லி ஆறுதல் கேக்கலாம்னுதானே...உண்மையச் சொல்லுங்க

விசு: இல்ல தமிழா....பொதுவா நீங்க தானே உங்க பூரிக்கட்டை அடியைச் சொல்லி எங்கள எல்லாம் கண்ணீர் விட வைப்பீங்க...(சிரிச்சுக்கிட்டேதான் அழுவோம்.....அத வெளில சொல்ல முடியாதே...ஏன்னா அந்த சிரிப்புல எங்களுக்கும் சந்தோஷம்...ஹப்பா நமக்கு கம்பெனி இருக்குது அப்டினுதான்..) ஆனா இப்ப அடி இல்லைனு சொல்லுங்க.....அங்க தங்கச்சி ஊர்ல இல்லையோ…...இல்.ல.....ஏதாவது டீல் போட்டுருக்கீங்களா.....டீல் போட்டுருக்கீங்கனா அது என்னனு தெரிஞ்சுக்கத்தான்...இப்படி ரகசியமா ஏன் தமிழா? எங்களுக்கும் சொல்லலாம்ல...அதான்

மதுரைத்தமிழன்: இதுல என்னண்ண ரகசியம்? எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானேங்க....டெய்லி வாங்கறத எல்லாம் சொல்லிக்கிட்டே இருந்தா, நானே புதுசா ஐடியா கொடுக்கறா மாதிரி ஆயிடும். அப்புறம் நான் சொல்லச் சொல்ல நம்ம சகோதரிகள், தோழிகள் எல்லாம் (அங்க அண்ணியும்தான்) புதுசு புதுசா கத்துக்கிட்டு ஆரம்பிச்சுருவாங்க. அதனாலதான் நான் கஷ்டப்பட்டாலும் உங்கள மாதிரி உள்ளவங்களுக்கு எல்லாம் நல்லது செய்யலாமேனுதான் கொஞ்ச நாள் சொல்லல.....

விசு: தமிழா உங்க நல்ல மனச என்னனு பாராட்ட!!! நான் நினைச்சேன் உங்க வீட்டுல பூரிக்கட்டை எல்லாம் முடிஞ்சு போச்சு போல...அதான் நீங்க புலம்பலைனு....

மதுரைத்தமிழன்: ஐயோ நீங்க வேற அத வெளில சொல்லிட்டீங்களா?!!  ..ஏற்கனவே நம்ம சகோதரிகள் எல்லாம் பூரிக்கட்டை வாங்கி அனுப்புவாங்க.. அவங்களுக்கு எப்படித்தான் தெரியுமோ...இப்ப வேற நீங்க சொல்லிட்டீங்களா....பாருங்க ஆளுக்கு ஒரு 100, 100 வாங்கி “எங்கள் அன்பு சகோதரனுக்கு, நண்பனுக்கு புத்தாண்டு பரிசுன்னு சொல்லி ஹாப்பி நியூ இயர்னு” வேற சொல்லி கிஃப்ட் பார்சல் அனுப்பிடுவாங்க....என் சோகக் கதைய யார்கிட்ட சொல்ல...

விசு:  ஓ! இப்படி வேற நடக்குதா!!! தமிழா மெய்யாலுமே உங்களுக்கு ரொம்பவே நிறைய விசிறிங்கப்பா......அதான் நியூ இயர் வந்துருச்சே....அப்ப இந்த வருஷம் நிறைய பூரிக்கட்டை வந்துருக்குனு சொல்லுங்க...

மதுரைத்தமிழன்: ஓ! அடி வாங்கறத ரசிக்கறதுக்கு விசிறிங்களா.....நல்லாருக்குப்பா நீங்க சொல்லுறது....அங்க மட்டும் என்னவாம்.....அண்ணே! நீங்களும் உங்க ஃப்ரெண்டு தண்டமும்.....பஜ்ஜிக்கு என்ன மிளகாய் வாங்கறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்து, வேற மிளகாய் வாங்கிட்டு போயி வீட்டுல வாங்கிக்கட்டி...bajji cancelled அப்படின்னு அந்த மிளகாய் எல்லாம் பாவமா உங்கள பாத்து முழிச்சுக்கிட்டு ஃபிரிட்ஜ்ல இருக்கற அந்தக் கதை எல்லாம் ஊருக்கே தெரியுமே...

விசு: நானே சொல்லி மாட்டிக்கிட்டேன்...நுழலும் தன் வாயால் கெடும்னு இதத்தான் சொல்லுவாங்க....அத விடுங்க....பூரிக்கட்டை எல்லாம் வந்துருச்சுல்ல....அடுத்த பூரிக்கட்டை எப்ப?!!!

மதுரைத்தமிழன்:  என்ன விசு அண்ணா உங்களுக்கும் என்னைப் போல கஷ்டம் இருக்கும் போது நீங்களுமா இப்படி.........நண்பர் சொக்கன் வேற நகைச் சுவைத் துணுக்கப் போட்டு கடைசி துணுக்கு பக்கத்துல “இதை வாசிக்கும் போது மதுரைத் தமிழன்தான் நினைவுக்கு வர்ராருனு” போட்டிருந்தாரு.....இதுக்கு ஜால்ரா தில்லைஅகத்துக்காரங்க வேற.....ம்ம்ம் எல்லாருக்கும் வீட்டுல பாத்திரம் தட்டு பறந்தா மட்டும் தான் இந்த மதுரைத் தமிழன் நினைவுக்கு வர்ரான்....நல்லாருங்கப்பு அப்படினு நானும் சொல்லிருந்தேன்....”  பாருங்க நான் காமெடி பீசாகிட்டேன்...என்னத்த சொல்ல..

விசு: தம்பி தமிழா! அது சரிதானே...எல்லார் வீட்டுலயும் பறக்கறதுனால உங்கள நிமிஷத்துக்கு நிமிஷம்... ஸாரி..... நொடிக்கு நொடி நினைச்சுக்குவாங்கல்ல...அத நினைச்சுப் பெருமைப் படுங்க தமிழா...நீங்கதான் மதுரைதமிழன் மதுரை வீரன் ஆச்சே!  அதை எல்லாம்  கேட்ச் பண்ணி சமாளிக்கத் தெரியாதா என்ன?  இல்ல உடம்புல கவசம் போட்டுக்குவீங்கதானே!? சரி அந்தத் துணுக்கு அப்படி என்னதான் சொல்லுது.?  சொல்லுங்க..

மதுரைத்தமிழன்: விசு அண்ணா உங்களுக்கும் நான் காமெடிப் பீசாகிப் போனேனா.....நீங்களாவது என்னப் புரிஞ்சுப்பீங்கன்னு பார்த்தா.....சரி சரி ..உங்களுக்கு இன்னும் பூரிக்கட்டை எல்லாம் பறக்கல போல....அது பறக்கும் போது புரியும்...
.
விசு: அந்தத் துணுக்கு.....உங்கள நினைச்சுக்க வைக்கற அளவு துணுக்குன்னா அதைத் தெரிஞ்சுக்கலாமேனுதான்...

மதுரைத்தமிழன்: விட மாட்டீங்க போல.. சரி சரி இவ்வளவு ஆகிப் போச்சு இப்ப அத சொல்றதுனானல என்ன..

“குரு: என்னங்க, உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக்கிட்டே இருக்குது?

கிரி:என் பொண்டாட்டி, என் மேல ஏதாவது பாத்திரத்தை தூக்கி வீசுவா, என் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன்.ஒரே தமாசு தான் போங்க.”  இதுதாங்க அது...

விசு: இது துணுக்கு மாதிரி தெரியலையே...ஏதோ உண்மைச் சம்பவம் மாதிரில்ல இருக்கு தமிழா....

மதுரைத்தமிழன்: ஓ! உங்களுக்கும் அந்த சந்தேகம் வந்துருச்சா...ஒரு ரகசியம் சொல்றேன் கேட்டுக்கங்க...சொக்கன் சார் வந்து துணுக்குனு தனக்கு நடக்கறதத்தான் இப்படி மறைமுகமா போட்டுட்டு என்னை நினைப்புவந்துச்சுனு சொல்லிருக்காரு...

விசு: அதேதாங்க நானும் சொல்றேன்.....இப்ப உங்க பூரிக்கட்டை உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகிடுச்சு போல....நல்ல பிசினஸ்னு வேற கேள்விப்பட்டேன்......

மதுரைத்தமிழன்: எப்படியோ என்னால பல பேரு சந்தோஷமா இருக்கறத நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷாமா இருக்கு அண்ணே......சரி..பாத்தீங்கல்ல நம்ம நண்பர் முரளிதரன் நிறைய ஹிட்ஸ் வாங்கி ஃபேமஸ் ஆகிட்டாரு....பார்த்தா அவரு என்ன முந்திக்குவாரு போல..

விசு: தம்பி தமிழா! உங்களுக்குப் போட்டியா...உங்க எழுத்து தானே பிரபலம்...

மதுரைத்தமிழன்:  அட நீங்க வேற...இது எழுத்த பத்தி இல்ல...இது “ணங்”குனு அவரு தலைல குட்டு வாங்கற ஹிட்ஸ்.....அவரு கம்ப்யூட்டர் முன்னாடி இருந்தாலே ஒரே ஹிட்ஸ் தானாம்.....அதான் சொன்னேன் என்னையும் முந்திக்குவாரு போலனு...

விசு: என்னாது...அவருக்குமா...நான் எனக்குத்தான்னு நினைச்சேன்...அத ஏன் கேக்கறீங்க தமிழா..நான் கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்தாலே வீட்டுல உள்ளருந்து குரல் வந்துரும்....ஏங்க நம்ம ராசாத்திக்கு சளி பிடிக்கும் போல இருக்கு... கொஞ்சம் தண்டம் வீட்டுக்குப் போயி துளசி இலை வாங்கிட்டு வாங்க...சாரதி வீட்டுக்குப் போய் கற்பூரவல்லி இலை வாங்கிட்டு வாங்க அப்படினு.” இப்படி அது இதுனு.....கம்ப்யூட்டர் முன்னாடி உக்காரவே முடிலப்பா....சரி உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் ..ஆனா எப்படி இப்படி பதிவு எல்லாம் போடறீங்க அதுவும் பூரிக்கட்டை பத்தி எல்லாம்..

மதுரைத்தமிழன்: உங்களுக்கு இன்னுமா புரியல விசு அண்ணா......நான் கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து அடி வாங்கிட்டே “லைவா” பதிவு போடறேன்.....

விசு: ஓ! அப்படினா, தமிழா முரளிதரன முந்த விடாதீங்க தமிழா...நீங்க நிறைய ஹிட்ஸ் வாங்கணும்....நீங்க ஜெயிக்கணும்.....

மதுரைத்தமிழன்: அடப்பாவி! அடி வாங்கறதுல கூட போட்டியா? ஜெயிக்கணுமாமே. நல்லாருங்கப்பா எல்லாரும்...சரி அப்படின்னா நீங்க மேற்க ஹிட்ஸ் வாங்கி முன்னணில இருங்க...நான் இங்க கிழக்க ஹிட்ஸ் வாங்கி முன்னணில இருக்கேன்....ஒலிம்பிக்ஸ்ல அடுத்த முறை இதையும் சேர்த்துரலாம்... பாக்சிங்க், வ்ரெஸ்லிங்க், கராத்தே மாதிரி இதையும் தனியா வெச்சுரலாம்....என்ன சொல்றீங்க....

விசு: தம்பி தமிழா உங்க குறும்புக்கு அளவே இல்ல....இருங்க உங்க கதைக்கு வர்ரேன்..தமிழா கில்லர்ஜி கூட ஏதோ பகவான் ஜி கிட்ட நீங்க ஏதோ ஒரு கிராமத்துல பொண்ணு பாத்ததா.....சொல்லி உங்களுக்குக் கட்டி வைச்சுட்டதா..அதுவும் ரெண்டாவதுனு.....நியூஸ் ஊரு முழுக்க பரவிடுச்சாமே...ஊரே பேசிக்குது...

மதுரைத்தமிழன்: நல்ல காலம் விசு அண்ணா.....அது வேற ஒண்ணும் இல்ல ரெண்டாவது எல்லாம் ஒண்ணும் இல்லைங்க...என்னக் கம்பத்துலக் கட்டிப் போட்டதத்தான் அப்படி நியூஸ் பரப்பிட்டாங்க....அங்க இந்தியாவுல தமிழ் நாட்டோட நிக்குது.  நல்ல காலம் இங்க இன்னும் வரல. வந்துருந்துச்சுன்ன்ன்........ஐயையோ நீங்க இங்கதானே இருக்கீங்க...உங்களுக்கே தெரிஞ்சு போச்சே...

விசு: பயப்படாதீங்க தம்பி! கட்டிப் போட்டு கட்டை அடி அவ்வளவுதானே? போனா போகுது வழக்கமா வாங்கறதுதானே.

மதுரைத்தமிழன்: அண்ணா! நான் வாங்கற அடி....பாருங்க எத்தனை பேருக்கு உதவுது.....பதிவு போட...ம்ம்ம்ம் இதக் கேளுங்க.......நம்ம வாத்தியார் இருக்காருல்ல, அதான் பதிவுலக வாத்தியார் பால கணேஷ்....அவரு மனைவி தனக்கு மூளைக்காய்ச்சலா இருக்குமோனு பயந்தப்போ “அதெல்லாம் உனக்கு வராதுமா.  இல்லாததுக்கெல்லாம் பயப்படாதே” அப்படினு சொல்லி முறைப்பை வாங்கிக் கட்டிக் கொண்டதாகச் சொல்லிருக்காரு.  அவருக்கு பரவாயில்லைங்க தப்பிச்சுட்டாரு.  இதே இது நம்ம வீட்டுல நடந்துருந்துச்சுனா நான் பூசியிருக்காப்புல அவரும் பூசியிருப்பாருல்ல?!! அதத்தான் நான் அவர்கிட்ட சொல்லிருந்தேன்....தப்பிச்சீங்கனு. 

விசு: ஐயோ அப்ப தமிழா நீங்க எப்பவுமே பூசினாப்பலதான் இருப்பீங்களா?!!!

மதுரைத்தமிழன்: அண்ணே! இந்தக் குறும்புதானே வேண்டான்றது...உங்க கதை.....போனவருஷம் தண்டபாணிகிட்ட, பாத்ரூம்ல போயி ரகசியமா பேசி, 4 மணி நேரம் ஃபுட்பால் மாட்ச் ப்ளான் பண்ணி பாத்துட்டு, வீட்டு அம்மணிய சரிக்கட்ட, அவரு கொடுத்த ஐடியாவுல அவங்கவங்க வீட்டுப் புடவையே ரெண்டுபேரும் எடுத்துட்டுப் போயி, பூவா தலையா போட்டுப் பார்த்து, புடவை மாற்று செய்து, உங்க வைஃப் முன்னாடி நின்னுட்டு, ஒரு வருஷத்துல அந்தப் புடவைக் கதையையே மறந்துட்டு......இப்ப பேயறைஞ்.........

(...என்னாங்க எப்பா பார்த்தாலும் கம்ப்யூட்டர், ப்ளாக், ஃபோன் இதே பொழப்பா போச்சு உங்களுக்கு. எங்க இருக்கீங்க?  பாத்ரூம் போய் என்ன இவ்வளவு நேரம்? அங்கருந்து என்ன சத்தம்?  யார் கூட பேசிக்கிட்டுருக்கீங்க?  நான் அப்பலருந்து பேயா காட்டுக் கத்து கத்திக்கிட்டுருக்கேன் வீட்டுல சமைக்க ஒண்ணுமே இல்ல கடைக்குப் போயி வாங்கிட்டு வந்து சமைங்கனு.......சமைக்கலனா என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்....அப்புறம்….அந்தப் புடவை பத்தி உங்க கிட்ட சிலது பேசணும்...நேத்து சுந்தரிய பார்த்தேன்.....கொஞ்சம் வெளில வரிங்களா....இப்படி...)

விசு: ஐயோ! தமிழா.....நீங்க இப்ப சொன்ன அந்தப் புடவைக்கதை வெளில புட்டுக்கிட்டு வந்துருச்சு...தமிழா தமிழா....

மதுரைத்தமிழன்: விசு! அண்ணா!  அண்ணா! என்னாச்சு? பின்னாடி ஏதோ சத்தம் கேக்குது?  உங்க சத்தத்தையே காணும்? ஓ! சமையல்...புடவைக்கதை எல்லாமுமா.....அண்ணி கிட்ட........ஹ்ஹ்ஹ் பேயறைன்சா மாதிரி நின்னுகிட்டு.. இதுதானே நீங்க அடிக்கடிச் சொல்லி....அப்புறமா சொல்லறேன்னு சொல்லித் தப்பிக்கறவிஷயம்......??!! (ஹப்பா நண்பர் விசுவோட பேயறைஞ்ச கதைய புட்டு வைச்சாச்சுப்பா)

இப்ப இங்க மன்னாரோட டர்ன்.... இந்த இரண்டு பேரும் பேசறத ஒட்டுக் கேட்டுக்கிட்டு, திண்ணைல உக்காந்துகிட்டு (எப்பவுமே எனக்குத் திண்ணைதாங்க) இப்படி அடாது அடி வாங்கினாலும் விடாது தைரியமா பதிவெழுதி சிரிக்க வைக்கும் இந்த ரெண்டு பேரையும் பார்த்து அதிசயப்பட்டு (இன்னும் நிறைய பேர் இருக்காங்க ஆனா அவங்க யாரும் இவங்க ரெண்டு பேரு மாதிரியும் வெளில சொல்ல மாட்டாங்க!! ஹ்ஹ்ஹ் பயம்...வெட்கம்னால வெளில சொல்றது இல்லைங்க....)  நானும் ஒண்ணு எழுதலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது “அட!  வாத்தியாரும் நம்ம கட்சிதானா” அப்படினு எனக்குச் சந்தோஷம் தாங்கலங்க. வாத்தியாரு ஃபேஸ்புக்குல ஒரு நிலைத்தகவல் கொடுத்திருந்தாரு..

“....................எத்தனையோ விதங்களில் மேலோங்கியிருக்கும் பெண்ணாதிக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க உலகில் எவருமில்லையா...?

வாட்சப்புல வாத்தியார் தனக்கு வந்தத என் மொபைலுக்கும் அனுப்பிருந்தாரு

“தினமும் கடவுளுக்கு “ஓம்” சொல்வதைக் காட்டிலும், மனைவிகிட்ட “ஆம்” சொல்லிப்பாருங்கள்.  வாழ்க்கையை அழகாக வாழலாம்.  “ஆம்...ஆம்....”ம்ம்ம்ம்ம்

அட! அதத்தான்ங்க நாங்க எல்லா ஆண்களும் செய்துகிட்டுருக்கோம்க....இல்லனா இந்த பூமில குடும்பம்னு ஒண்ணு இருந்துருக்கவே இருந்துருக்காதுங்க.....இதப் பத்தி ஜிஎம்பி னு அறிவார்ந்த மூத்தப் பதிவர் தன்னோட வலைல சூப்பரா எழுதிருக்காருனு எனக்கு நண்பர்கிட்டருந்து ஒரு மெயில்.
 
பெண்கள் குறித்து பதிவுகள் பல எழுதி இருந்தாலும், முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாத புதிராகத்தான் தெரிகிறார்கள். நிறைய எழுதியும் எனக்கே அவர்கள் மேல் ஒரு BIASED எண்ணம் வந்துவிடுகிறதோ என்று சந்தேகம் வருகிறது. இருந்தாலும் ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மனதில் படுவதை எழுத்தில் வடிக்கிறேன். உண்மை சுட்டால் நான் என்ன செய்வது.?”....... http://gmbat1649.blogspot.in/2014/12/blog-post.html

அதே நண்பர்கிட்டருந்து இன்னுரு மெயில்.  பெண்கள் = ஈவில் அப்படினு ஒரு கணக்கு கால்குலேஷன் போட்டு........ அத இங்க நான் கொடுத்தேன்னு வையுங்க, எல்லாப் பெண்களும் பூரிக்கட்டை, விளக்குமார், உருட்டுக்கட்டை எல்லாம் தூக்கிட்டு என்ன அடிக்க வந்துருவாங்க... (இல்லைங்க...பெண்கள் = வீ வில் அப்படின்றது தெரியாம ஈவில் அப்படினு ப்ரிண்ட் ஆகிடுச்சு..ஹிஹிஹி.....சமாளிப்பு??!!)  அதனால...

 “ஹலோ நண்பர்களே தமிழா, விசு.... மன்னாரு ஹியர்......என்னையும் உங்க “அடாது அடி வாங்கினாலும் விடாது நகைக்கும் கணவர்கள் சங்கத்துல” சேர்த்துக்கங்க”

மன்னாரு ஃபோன் போட்டு பேசிக்கிட்டு இருக்கும்  போதே “ஹிட்ஸ்” பளார்னு.  பேயறைஞ்சா மாதிரி ஆயிட்டாரு...... நண்பர் விசு! எங்கருக்கீங்க?!  ஹெல்ப் ப்ளீஸ் ... ...நண்பேண்டா!!!

இந்தத் தில்லைஅகத்தாருக்குக் கொழுப்பு கூடிவிட்டது! இப்படி மன்னார ஒட்டுக் கேக்க வைச்சு இப்படி அம்பலமாக்கலாமா சொல்லுங்க....

பின் குறிப்பு: இது சும்மா ஜாலிக்குத்தான்.  நண்பர்களே தவறாக நினைக்க வேண்டாம். சகோதரிகளே! தோழிகளே! உங்களுக்கும் தான். இது வெறும் ஜாலிக்குத்தான். இதை எழுதியதும் பெண்தான்!!

-கீதா
44 கருத்துகள்:

 1. ஆஹா நம்மளை வம்புல மாட்டி விட்டது போல இருக்கே.... நானே பொண்ணு கிடைக்காம அலையுறேன்.... இது வேறயா ? ய்யேன் ?
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ ப்ரதர்! உங்கள எங்கேங்க வம்புல மாட்டி விட்டோம்....நீங்க பொண்ணு தேடற விஷயமே இப்ப நீங்க சொல்லித்தானே தெரியுது.....உங்க வாயாலயே போட்டுக்கிட்டீங்களே ப்ரதர்...அஹஹஹஹ்

   நீக்கு
  2. ஹஹஹாஹ்ஹ் நல்லாவே உளறிப்புட்டீங்கோ! ஊருக்கே தெரிஞ்சு போச்சே!

   நீக்கு
 2. அகத்தொரே ...

  எங்கள் பாடு உங்களுக்கு பகடியோ? நீங்கள் எழுதி இருக்கும் அனைத்தும் நாங்கள் தினந்தோறும் படும் கஷ்டம் ! சரி பரவாயில்லை விடுங்கள். எங்கள் துன்பந்தில் நாலு பேராவது சந்தோசமாக சிரிகின்றீர்களே.. அது தான் ஆறுதல்.

  நன்கு நகைச்சுவையோடு எழுதிய pathivu. ரசித்து சிரித்தேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹ்ஹஹஹ்! நண்பரே! உங்களால் எல்லோரும் சிரித்துக் கொண்டு இருக்கின்றோம். எவ்வளவு பெரிய சேவை செய்கின்றீர்கள்!

   மிக்க நன்றி நண்பரே! ரசித்ததற்கு!

   நீக்கு
 3. ஹாஹா மனைவிகிட்ட எல்லாத்துக்கும் 'ஆம்' சொல்லக் கூடாதுன்னு நான் அங்கேயே சொல்லிட்டேன் :)
  பேசாம frozen சப்பாத்தி, பரோட்டானு மாறிடுங்க..பூரிக் கட்டையே வீட்டில் இருக்காது.. என்ன ஒரு imagination உங்களுக்கு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை! நல்ல ஐடியாவா இருக்கே! ஹஹஹஹ...ஒருவேளை மதுரைத் தமிழன் வீட்டுலயும் ஃப்ராஜன் சப்பாத்தி, பரோட்டா, பூரிதானோ...அவருதான் செய்யறாரு..அவரு இப்படி வாங்கி வைச்சுச் சாமாளிக்கறாரு போல அதான் பூரிக்கட்டை பதிவுகள காணும்......மற்ற சகோதரர்களும் நோட் திஸ்....தோழி கிரேசின் ஐடியாவ....

   ஆமா! நீங்க சொல்லியிருந்தத துளசி சொன்னாரு....

   மிக்க நன்றி தோழி! ரசித்ததற்கு!

   நீக்கு
 4. அட அட, அந்த ஒரு துணுக்கை வைத்து இம்புட்டு பெரிய பதிவா - கலக்கிட்டீங்க சகோ. வீட்டுல வேலையே செய்யாம யோசிச்சு யோசிச்சு, இப்படி எழுதியிருக்கீங்க போல. நான் எப்பவோ படிச்சதை எழுதினேன், அந்த விஷயமா உங்கள் வீட்டில் நடக்கிறதுன்னு இப்பத்தான் புரிஞ்சுக்கிட்டேன். அதை சொல்லாம "அடுத்த இலைக்கு பாயாசம்"ன்னு சொல்ற மாதிரி, என்னைய கோத்து விட்டுட்டீங்க பார்த்தீங்களா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹ்ஹஹ் ஐயோ சொக்கன் சகோதரரே! இங்கு மதுரை ஆட்சி கிடையாதுங்க. நான் டம்மி பீசுங்க. ஸோ எங்க வீட்டுல இந்த மாதிரி எல்லாம் எங்க வீட்டுல கிடையாதுங்க.....

   மிக்க நன்றி சகோதரரே!

   நீக்கு
 5. எப்பவும் மதுரைத் தமிழன் தான் நம்ம நண்பர்களை கலாய்ப்பார். இப்ப நீங்க அவரையே கலாய்சுட்டீங்க. சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹ இது சும்மாங்க! இதற்கு முன்னாடியும் அவரைக் கலாய்த்துள்ளோம். அவர் கலாய்ப்பது போல எல்லாம் இல்லைங்க. அவரு சூப்பரா கலாய்ப்பாரு! எனக்கு அந்த அளவுக்கு வராது!

   நீக்கு
 6. "//இந்தத் தில்லைஅகத்தாருக்குக் கொழுப்பு கூடிவிட்டது! இப்படி மன்னார ஒட்டுக் கேக்க வைச்சு இப்படி அம்பலமாக்கலாமா சொல்லுங்க....//"

  பதிவை நீங்க எழுதிட்டு, சிவனேன்னு இருக்கிற எங்க துளசி சாரை மாட்டிவிட்டுட்டீங்களே. இது நியாயமா சகோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ் அட! மன்னாரு பாத்திரம் துளசியா!!!?? ஹஹஹ் அதுஒரு கற்பனைப் பாத்திரமே!

   நீக்கு
 7. வயிறு வலிக்கச் சிரித்தேன்.

  ஏதோ ஒரே ஒருத்தர் தான் இப்படி அடிவாங்குகிறார் என்றால்.... ஹிட்ஸ்க்காக ஒருத்தர்... நட்புக்காக ஒருத்தர் என்று...... பாவம் ஒவ்வொருத்தரும்.

  வாத்தியாரின் முளையில்லா ஜோக் அருமை.

  கடைசியாக... கீதா மேடம்...... உங்கள் வீட்டுக்கும் ஒரு டஜன் பூரிக்கட்டை பார்சல் அனுப்பிவிடட்டுமா.....

  த.ம. 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோழி! அருணா இங்க மதுரை ஆட்சி இல்லைங்க.....வேணா நண்பர் துளசிய கேட்டுக்கங்க......ஐயையோ மதுரைத் தமிழன சொல்லலீங்க...அவரைப் போலத்தான் நானும் இங்க கதை உல்டாங்க.....நான் ஐயோ பாவம்...நானும் மதுரைத் தமிழன், விசு கட்சில சேரலாமானு யோசிச்சுகிட்டு இருக்கேன்......பெண்ணா இருந்தாலும் பரவாயில்லைனு....இவங்க எல்லாம் அடிவாங்காம தப்பிக்க வழி சொல்லலாம்ல அதுக்குத்தான்...

   மிக்க நன்றி தோழி! ரசித்ததற்கு!

   நீக்கு
 8. படித்தேன்
  ரசித்தேன்
  நன்றி சகோதரியாரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரரே! தாங்கள் ரசித்ததற்கு!

   நீக்கு
 9. தோழி கீதா அவர்களே!! செம சரவெடி:))) ஆனாலும் இந்த சேட்டைகார மதுரை தமிழனுக்கு இணையா எங்க குடும்ப பொறுப்பான அண்ணன் விசு அடிவாங்குவதை தான் என்னால் தாங்க முடியவில்ல:(((((( பாருங்க நான்விட்ட கண்ணீரில் கீ;போர்ட் மிதக்குது. சொக்கன் சகோ சொந்த காசுல(ப்லாக்) சூனியம் வெச்சுகிட்டாறு:))) முரளியன்னா ஹிட் இப்போ பதிவுலகம் full ஆ ஹிட்டோ ஹிட் ஆச்சே:))) பாலா அண்ணாவின் சரிதாயணம் படிச்சு பாருங்க தோழி! நான் ஸ்டாப் ரூமில் இருக்கையில் அதை படிச்சுட்டு சிரிச்ச சிரிப்பில் என் சக டீச்சர்கள் டரியல் ஆகிட்டாங்க பா:))) நம்ம சரிதா அண்ணிகிட்ட அடிவாங்கிய மோகினி பிசாசுஇருக்கே அதுகிட்ட கேளுங்க, பாலா அண்ணன் கதையை பத்தி பத்தியா சொல்லும்:)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ்! சேட்டைக்காரன் அண்ணன் மதுரைத் தமிழன்....குடும்ப பொறுப்பு விசு அண்ணாவா....இது நல்லாருக்கே...தமிழனும் பொறுப்பா இருப்பாருங்க...ஆமாம் அண்ணி வரும் போது அவங்க விரும்பறத சமைச்சு வைச்சு ரெடியா செர்வ் பண்ண....
   குடும்ப பொறுப்பான அண்ணா விசு ரௌசு விடறத நீங்க வாசிச்சுருப்பீங்களே!!! இப்ப கூட ஒண்ணு இருக்கு பாருங்க....

   சரிதாயணம் பற்றித் தெரியுமே! அது செம ஹிட்டுப்பா....பிசாசு....ஆஹா இப்ப என்னை அறிந்தால் ட்ர்யெலர் ல விவேக் சொல்றமாதிரி.....(அவரும் சரிதாயணம் படிச்சுருப்பாரோ) "என் சார் நீங்க கல்யாணம் பண்ணிக்கல?" "எனக்குப் பேயக் கண்டா பயம்" - விவேக்....ஹஹஹ

   மிக்க நன்றி தோழி! ரசித்ததற்கு!

   நீக்கு
 10. வணக்கம்
  இரண்டு பேரை வைத்து பின்னிய உரையாடால் மிக அருமையாக உள்ளது இரசித்துப்படித்தேன் அதில் ம. தமிழன் பூரிக்கட்டை அடி வேண்டும் சம்பவத்தை தாங்க முடியாது... பகிர்வுக்கு நன்றி த.ம4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தம்பி! தாங்கள் ரசித்துப் படித்ததற்கு!

   நீக்கு
 11. ஹா... ஹா... ரசித்து சிரித்தேன்...

  குறும்படம் எடுக்கலாமோ...? ஹிஹி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை ! இது கூட நல்ல ஐடியாவா இருக்கே! டிடி! நண்பரெ! மிக்க நன்றி!

   நீக்கு
 12. அடடடா என்ன இது வீட்டில தான் தொல்லை என்று பார்த்தா நீங்க வேற தொல்லை கொடுக்கிறீங்களா. விழுந்தவனை மாடேறி உழக்கியது போல.நண்பர்களா லட்சணமா கொஞ்சம் ஆறுதல் சொல்லுவீங்களா அதை விட்டிட்டு இப்படியா கலாய்பீங்க ஆளாளுக்கு இது கொஞ்சம் கூட சரியில்லைங்க சொல்லிட்டேன். மதரை தமிழரே நீங்க இதுக்கெல்லாம் அசராதீங்க அதெல்லாம் சும்மா பாவம் உங்களை சிரிக்க வைக்க த் தான் ok வா ...ம்..ம்..ம்.. கீதாவா இப்படி கிண்டல் பண்ணுவது ..ம்..ம்.... ரொம்பவே வாய் விட்டு சிரித்தேன்மா ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இனியா சகோதரி! ஹஹாஹ்ஹஹ் இப்ப நீங்க மதுரைத் தமிழனிடம் சொல்லியிருப்பதைப் பார்த்தால்.....இதுக்கெல்லாம் அசராதீங்க...இவங்க இப்படித்தான் கலாய்ப்பாங்க அதுக்காக அடிவாங்காம இருக்காதீங்கனு சொல்றமாதிரில இருக்கு ஹஹஹஹஹ்....அது சரி அப்ப கீதானா ரொம்ப நல்லவனு நினைச்சுட்டீங்களா.....ஹஹ என்னைய நல்லவனு சொல்லிட்டாங்களே...நு வடிவேலு ஸ்டைல்ல ஹஹஹஹ.

   நீக்கு
 13. பிறரைக் கலாய்ப்பதற்கும் ரூம் போட்டு யோசிப்பாய்ங்கபோல, .நான் இந்த ஆட்டத்தில் இல்லைபா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹ்ஹஹஹ் சார்! னீங்க இந்த ஆட்டதில இல்லைதான்....ஆனா நீங்க எழுதிய கட்டுரை மிகவும் நல்ல கட்டுரை சார். அது பல கருத்துக்களை யோசிக்க வைத்த கட்டுரை சார். எழுதிய நானும் பெண்தான் சார். அதில் நீங்க சொல்லியிருந்த கருத்துக்கள் எல்லாமே மிகவும் யதார்த்தத்தைச் சொல்லும் கருத்துக்கள்! அதனால்தான் அதை நான் இங்கு எடுத்துச் சொன்னது சார்! மிக்க நன்றி !

   நீக்கு
 14. haaahaaa :) /தினமும் கடவுளுக்கு “ஓம்” சொல்வதைக் காட்டிலும், மனைவிகிட்ட “ஆம்” சொல்லிப்பாருங்கள். வாழ்க்கையை அழகாக வாழலாம். “ஆம்...ஆம்....”ம்ம்ம்ம்ம்//

  அவசரப்பட்டு எல்லாத்துக்கும் //ஆம் //சொல்லாதீங்க ஜென்டில் மென் ..சில வில்லங்கம் பிடிச்ச மனைவிகள் கிராஸ் questions கேப்பாங்க...இப்படித்தான் ஒரு பொண்ணு கேள்வியை தலை கீழா மாற்றி கேட்டுச்சாம் ..
  டு யூ லைக் மீ என்று கேட்டுட்டு அடுத்த கேள்வி இடைவெளி இல்லாம உடனே வில் யூ ஹேட் மீ ..எல்லாத்துக்கும் ஆமாம் போட்டவர் இதுக்கும் தெரியாம ஆமாம் போட்டுருக்கார் :) ஹாஆ ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹாஹஹ் யெஸ் தோழி! மிகவும் சரியே! தங்களதும் தோழி க்ரேஸ் சொல்லியிருப்பதும் நான் ஆதரிப்பேன்! மிக்க நன்றி!

   மி

   நீக்கு
 15. மதுரைத்தமிழனும்- விசுவும் உங்க கிட்ட இன்னிக்கு சிக்கிட்டாங்களா? ஹாஹா! செம காமெடி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹாஹஹ்ஹ்.....சுரேஷ் சிக்கிக்கிட்டாங்களா?!! உங்களுக்கே தெரியும் அவங்க காமெடிக்கு நான் நிகர் இல்லைனு. அவங்க எழுதற வீச்சு தனி....இது சும்மா அவங்க ஒவ்வொரு இடத்துலயும் சொன்னத வைச்சுத்தான் எழுதினது....ரொம்ப கற்பனை என்று சொல்ல முடியாது....மிக்க நன்றி சுரேஷ் நண்பரெ!

   நீக்கு
 16. ரசனை!
  சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
  பிறக்கும் தில்லையின் சங்கீதமே!

  ஆஹா அய்யா!
  குழலின்னிசை பக்கமாய் வந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 17. குறும்கதையில் எனக்கும் கெஸ்ட்ரோலா ?கலக்கல் பதிவை ரசித்தேன் !
  த ம 9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி! ஹஹ்ஹஆமாம் நீங்க மதுரைத் தமிழன் பதிவிலும் வந்தீங்க்ளே அதைத்தான் இங்க....மிக்க நன்றி ஜி! ரசித்ததற்கு!

   நீக்கு
 18. சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 19. இப்படி எப்படி கற்பனை ஓடியது ...
  சிரித்துகொண்டே இருக்கிறேன்..
  த ம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹ எல்லாம் இந்த மதுரைத் தமிழன், விசு பண்ணும் அதகளம்தான்...மிக்க நன்றி தோழரே இந்த இடுகை உங்களைச் சிரிக்க வைத்ததற்கு...

   நீக்கு