வெள்ளி, 12 டிசம்பர், 2014

கற்க கசடற.... கற்பிக்கவும் கசடற...

  
Picture courtesy - google

மாணவருக்கு உண்மையானப் பாடப்புத்தகம் ஆசிரியரே.

ஆசிரியர் தாம் படித்துத் தெரிந்து கொண்டவைகளையெல்லாம் தன்னுடைய சொந்த நடையில் மாணவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சொல்லும் விஷயத்தைச் சுவையாகச் சொல்ல வேண்டும். சாதாரண வாய்மொழியாகச் சொல்பவற்றை வெகு எளிதாக மாணவரால் திரும்பச் சொல்ல முடியும்.

கோழையாக இருக்கும் ஓர் ஆசிரியர் தம்மிடம் படிக்கும் மாணவர்களை வீரர்களாக்கிவிட முடியாது.

மாணவர்களை அடிப்பது போன்ற தண்டனையே கூடாது.

வெளிக்காற்றே  படக்கூடாது என்று குழந்தைகளைப் பத்திரமாக மூடிவைத்து வளர்த்து விடுவதால் அவர்களைத் தீமைகள் பற்றாமல் விடுவதில்லை.

சிறுவர், சிறுமிகளைச் சேர்த்து வைத்துப்  போதிக்கும்போது பெற்றோரும் ஆசிரியரும் கடுமையான  சோதனைகளுக்கு  ஆளாகிறார்கள்.

உண்மையான ஆசிரியராகவும் பாதுகாப்பாளாரகவும் இருக்க வேண்டுமாயின் மாணவர்களுடைய உள்ளங்களைத் தொடவேண்டும்.

--காந்தியடிகள்

கற்றல் என்பது நமது அறிவை வளர்த்தல், விரிவாக்கல், பழக்கங்களச் செம்மைப்படுத்தல், கற்றவற்றை நடைமுறைப்படுத்தல், நமது செயல் திறனை விரிவாக்கி மெருகூட்டி வலுவாக்கல், புதிதாகப் பெற்றுக் கொளல் என்பதாகும்.

இங்கு நம் ஔவைப்பாட்டி சொல்லுவதைப் பாருங்கள்.

எழுதரிது முன்னம் எழுதிய பின்னர்
பழுதறவா சிப்பரிது  பண்பாய்  முழுதுமதை
கற்பதரிது நற்பயனை காண்பதரிது கண்டக்கால்
நிற்பதரிது தானந் நிலை

எழுதுவது என்பது அரிதான செயல். எழுதியாகிவிட்டது. அதைத் தவறின்றி வாசித்தல் அரிது. சரி வாசித்தும் ஆயிற்று. அதை முழுவதும் கற்றல் அரிது. கற்றாலும் அதன் நற்பயனைக் காணல்/உணர்தல் அரிது. கண்டாலும்/உணர்ந்தாலும் அதன்படி நிற்றல், மனவலிமையுடன் செயல்படுத்தல் அரிது!  என்ன அருமையான ஒரு அர்த்தமுள்ள பாடல்!

கல்வி என்பது கற்றல். கற்றல் என்பதன் அர்த்தத்தை நமது கல்வியாளர்கள் மறந்துவிட்டார்களோ என்ற ஐயம் அடிக்கடி எழுகின்றது. READING-வாசித்தல், STUDYING-படித்தல், LEARNING-கற்றல். வாசித்தல் என்பதன் அர்த்தம் நாம் எல்லோரும் அறிந்ததே. நமக்கு மிகவும் பிடித்தமான விசயங்களையும், செய்திகளையும், கதைகளையும் வாசிக்கின்றோம். வாசித்தலில் எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை. கோட்பாடுகள் இல்லை. எல்லைகளும் இல்லை. வாசித்துவிட்டு நாம் பல சமயங்களில் மறந்தும் விடுகின்றோம். வாசித்தல் அவ்வளவே. படித்தல் என்பது விரும்பியும், விரும்பாமலும் ஒரு சிலத் தேவைகளுக்காக, நிர்பந்தங்களுக்காக, தேர்வுகளுக்காக, நம்மை, நம் நினைவுத் திறனை நிரூபிப்பதற்காக நாம் செய்வது. கற்றல் என்பது மேற்சொன்ன இரண்டிற்கும் முக்கியமானது என்றாலும், நம் மரணம் வரை தொடர்ந்து வர வேண்டிய ஒன்று.  கற்றல் என்பது ஒரு ப்ராசஸ். ஒரு செயல்முறை. அறிவையும், மனப் பக்குவத்தையும், புரிதலையும், செயல்முறைப்படுத்தலையும், கேள்விகள் எழுப்பப்பட்டு விடை தேடுதலையும், சிந்தனைகளை வளர்ப்பதும், ஆராய்ச்சிகள் மேற்கொள்வதுமாகும்.  இப்படிப்பட்டக் கற்றல் என்பது காலத்திற்கேற்ப மாறிக் கொண்டும் இருக்கும். ஆம்!  மாற்றம் என்பதுதான் மாறாத் தன்மை உடையது!

Learning is not compulsory; it is contextual. It does not happen all at once, but builds upon and is shaped by what we already know. To that end, learning may be viewed as a process, rather than a collection of factual and procedural knowledge. Learning produces changes in the organism and the changes produced are relatively permanent

ஆயின், நம் கல்வி முறையோ மதிப்பெண்களின் அடிப்படையிலானக் கல்வி முறை. குழந்தைகளை ரோபோக்களகாவும், மனனம் செய்து அதை அப்படியே பரீட்சைத் தாளில் வாந்தி எடுக்க வைப்பதாகவும் இருக்கின்றது. பல வருடங்கள் ஆனாலும் உரிய, தேவையான மாற்றங்களுக்கு உட்படாமல் தேங்கிக் கிடக்கின்றது. சுயமாகச் சிந்திக்கும் திறன், லேட்டரல் திங்கிங்க், கற்றவற்றை சமயோசித புத்தியை உபயோகித்து நடைமுறைப் படுத்துதல், குழந்தைகளின் தனித்திறமையை வளர்க்க உதவுதல் போன்றவற்றைச் செயல்படுத்துவதாக இன்னும் மாறவில்லை. கேள்விகள் எழுப்பப்படுவது வரவேற்கப்பட்டு அதைப் பற்றிய கருத்துரையாடல், விடை தேடுதல் போன்றவை ஊக்கப்படுத்தப்பட்டால்தான் மேற் சொன்ன திறன்கள் வளரும்.

அறிவுப் பூர்வமானக் கேள்விகள் கேட்பது என்பது நமது அறிவுத் திறனை வளர்க்கவும்,  விரிவடையச் செய்வதற்கும் வழிவகுக்கும். எந்த ஒரு விசயத்தையுமே ஆராய்ந்து பாராது, கேள்விகள் எழுந்தால் அதற்கானத் தீர்வைக் காண விழையாது அப்படியே கண்மூடித்தனமாக நம்புவது என்பதுதான் நமது சமூகத்திலும், குடும்பங்களிலும், கல்விக் கூடங்களிலும் இருந்து வருகின்றது. பள்ளிகளில் கேள்வி கேட்டால் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டு வெளியில் அனுப்பப்படுவதும், தவறென்று சொல்லப்படுவதும் வழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றது.  (சென்ற இடுகையில் இது போன்று நடந்தவற்றை சில பின்னூட்டங்கள் தெரிவித்தன). கேள்விகள் எழுப்பப்பட்டாலும், அதற்கான அறிவியல் பூர்வமான விடைகளோ, தர்க ரீதியிலான விடைகளோ, நடைமுறை சார்ந்த விடைகளோ சொல்லப்படுவதில்லை. கற்றல் என்பது வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கும் அப்பாற்பட்டது.


பெற்றோரிடம், குழந்தை ஒரு கேள்வி எழுப்பினால், “எதிர்த்து என்ன கேள்வி கேட்கின்றாய், நாங்கள் எல்லோரும் எங்கள் பெரியவர்கள் சொன்னதைத்தான் பின்பற்றுகின்றோம். கேள்விகள் கேட்டதில்லை” என்ற பதில் வரும். “இதெல்லாம் கேட்கக் கூடாது, உன் வயதுக்கேற்றதல்ல, பின்னர் தெரிந்து கொள்ளலாம்” போன்ற பதில்கள் வருமே அல்லாது அந்தக் கேள்விக்கான விடைகள் தெரிந்திருந்தாலும் அதைப் பற்றி விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்ற பொறுமையோ, தெரியவில்லை என்றால் அவற்றைத் தெரிந்து கொண்டு பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை. பள்ளிகளிலும் இப்படித்தான். இந்தக் கேள்விக்கான விடையை அடுத்த வருடம் படிப்பீர்கள், மேல் வகுப்பில் தெரிந்து கொள்வீர்கள் என்ற பதில்தான் வரும் பெரும்பாலான ஆசிரியர்களிடமிருந்து. விதிவிலக்கான ஆசிரியர்களும் இருக்கின்றார்கள் என்பதை இங்கு சொல்லியே ஆகவேண்டும்.  ஏன் நம் வலைத்தளத்தில் எழுதும் ஆசிரியப் பெருமக்கள் அதற்கு சான்று!

நம் குழந்தைகளைச் சுயமாகச் சிந்திக்க விடுவதில்லை. சுயமாக ஒரு முடிவும் எடுக்க அனுமதிப்பதில்லை.  அதனால், அவர்களால் தங்கள் எதிர்காலத்தைக் குறித்த முடிவு எடுப்பதில், அது தொழில் சம்பந்தமாக இருந்தாலும் சரி, திருமணம் சம்பந்தமாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கை குறித்தானாலும் சரி, ஒரு சமநிலையான, தீர்க்கமான முடிவு எடுக்கத் தெரியாமல் குழம்பிப் போய்த் தவிக்கின்றனர். பெற்றோர்களாகிய நாம் அவர்களிடம் நமது எண்ணங்களையும், குறிக்கோளையும் திணிப்பதால். நாம் குரங்காட்டி வித்தைக்காரர்களாகிப் போனதால். இந்த இடத்தில், தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும், வாழ்க்கையைக் குறித்தும் கூர்ந்து நோக்கி, ஆராய்ந்து கற்றல் என்பது அடி வாங்கிப் போகின்றது. கேள்விகள் கேட்டு விடை காணுதல், கலந்துரையாடல், கருத்துப் பறிமாற்றங்கள், நல்லவிதமான விவாதங்கள் நிகழும் போது, பெற்றோர்கள் குழந்தைகளின் இடையேயும், ஆசிரியர்கள் மாணவர்கள் இடையேயும் தோழமை உணர்வும், நல்ல உறவும் உருவாகும். பக்குவமான மனதும், புரிதலும் வளரும். ஆனால், இது இல்லாததால்தான் இந்த உறவு முறைகளில் பல சிக்கல்களும், விரிசல்களும், இடைவெளியும் ஏற்படுகின்றது.

வளர்ச்சி அடைந்த மேலை நாடுகளில், பள்ளி வகுப்பில், குழந்தைகள் கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பினால், ஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்தால் உடனெ அதைப் பூர்த்தி செய்கின்றனர். இல்லையேல் இணையத்தை உபயோகப்படுத்தி விடை பகர்ந்து தெளிவுபடுத்துகின்றனர்.  அதுவும் இயலவில்லை என்றால் அதைப் படித்துவிட்டு வந்து அடுத்த நாள் சொல்லித் தருவதாகச் சொல்லி, மறுநாள் வகுப்பிற்கு வந்து அந்தப் பதிலைத் தெளிவுபடுத்தி விட்டுத்தான் அன்றைய பாடத்திற்குச் செல்வதாகப் பலர் சொல்லிக் கேட்டிருக்கின்றோம். கல்லூரியிலும் அப்படித்தான். கேள்வி கேட்பவர்கள் பாராட்டப்படுகின்றார்கள். இது எனது மகனின் அனுபவம். அங்கும் விதிவிலக்குகள் இருக்கலாம்.

இப்படிக் கேள்விகள் கேட்டு விடை காண முயல்வதும், சிந்திப்பதும், நாம் காண்பதிலிருந்தும், கேட்பதிலிருந்தும், வாசிப்பதிலிருந்தும் நமது அனுபவங்களிலிருந்தும் கிடைக்கும் பாடங்களை நுண்ணறிவு கொண்டு நோக்கும் போதுதான் கற்றல் என்பது வளர்கின்றது.  இது இறுதிவரை தொடரும் ஒன்றாகும். இந்தக் கற்றல்தான் நமக்கு மனப்பக்குவத்தையும், வாழ்க்கையை எதிர்கொள்ளும் நேர்மறை எண்ணங்களையும், சக்தியையும் கொடுக்கின்றது. நமது கல்வி இந்தக் கற்றலை வளர்க்காமல், ஏட்டுச்சுரைக்காய் போல் அமைந்ததுனாலும், மதிப்பெண் என்ற ஒரு இலக்கை நிர்ணயித்ததாலும், சமுதாயத்தில் தொழில் சார்ந்த அந்தஸ்து என்ற ஒன்று அதாவது எந்தத் துறை எளிதில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும், பணம் ஈட்ட உதவும் என்ற ஒரு மனப்பான்மை மக்களிடையே புழங்கி வருவதாலும், வாழ்க்கையில் பணம் ஈட்டுவது ஒன்றே குறி என்ற இலக்கை நோக்கிப் பயணிப்பதாலும், பெற்றோரும், கல்வியும் ஒரு மாணவனுக்குத் தேவையான அடிப்படைக் கல்வியையும், வாழ்க்கையைத் திடங்கொண்டு போராடும் மனவலிமையையும், வாழ்க்கை என்றால் என்ன என்ற புரிதலையும் கற்றுக் கொடுக்காததாலும், அதற்கான நல்லொழுக்கமும் போதிக்கப்படாததாலும், சமுதாயச் சீர்கேடுகளும், அவலங்களும், மேற்சொன்ன உறவு முறை விரிசல்களும் ஏற்படுகின்றன.

குழந்தைகளுக்கு கற்றல் என்பது விளையாட்டிலிருந்து, சுற்றி நடக்கும் நிகழ்வுகள் வரை எல்லாமே போதிக்கின்றது. ஒரு சிறு உதாரணம்.  நானும் எனது மகனும், அவனது சிறு வயதில், ஏணியும், பாம்பும் என்று சொல்லப்படும் விளையாட்டை விளையாடும் போது, “ஏணியில் ஏறி விட்டு திடீரென்று பாம்பின் வாயில் நுழைந்து பூஜ்ஜியதிற்கு வருவது போன்றுதான் வாழ்க்கை.  மேலே பறக்கவும் தெரிய வேண்டும், தரையில் படுக்கவும் தெரிய வேண்டும். அந்த அனுபவம், நாம் மேலே செல்வதற்கான விடா முயற்சியையும், உழைப்பையும் கற்றுக் கொடுக்கும். நாம் எத்தனை உயரங்கள் தொட்டாலும், இந்தத் தரைதான் நிரந்தரம் என்பதை மனதில் கொண்டு இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும், நம் அனுபவப் பாடங்கள் கொடுக்கும் கற்றலை உள்வாங்கி, சுயமான சிந்தனைகளுடனும், தீர்க்கமான முடிவு எடுக்கும் திறனுடனும், மரணம் வரை பயணிக்க வேண்டும்” என்று அவனுக்குச் சொல்வதுண்டு.  இப்படி, நாம் நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் பல பாடங்களைக் கற்றுக் கொண்டு நமது வாழ்க்கையை மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்கும் இந்தக் கற்றலைப் புரிய வைத்து, வாழ்க்கையை இன்பமாக நுகரச் செய்வோம்.  நாமும் கற்றலை வளர்த்துக் கொள்வோம்.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு


கற்க, கற்க எல்லா நாடும் தன் நாடே, எல்லா ஊரும் தன் ஊரே என்ற பேருணர்வு உண்டாகிறது; அப்படியிருக்க, ஒருவன் சாகும் வரை கற்காதிருப்பது எதனால்?  விடை தேட வேண்டும்!

65 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஓடி வந்து ஓட்டு போட்டதற்கு நன்றி! அபுதாபிலருந்து ஓடி வந்து வாக்கு!!!

      நீக்கு
  2. நாம் நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் பல பாடங்களைக் கற்றுக் கொண்டு நமது வாழ்க்கையை மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்கும் இந்தக் கற்றலைப் புரிய வைத்து, வாழ்க்கையை இன்பமாக நுகரச் செய்வோம். நாமும் கற்றலை வளர்த்துக் கொள்வோம்.

    மிகவும் அருமையான பகிர்வு..

    த. ம : 2

    பதிலளிநீக்கு
  3. அனைவராலும் போற்றப்படும் ஆசானே!
    வணக்கம்!
    தங்களது இந்த "கற்க கசடற.... கற்பிக்கவும் கசடற"
    பதிவினை படித்து விட்டு உண்மையிலேயே உறக்கமின்றி தவித்துதான் போனேன்.
    என்ன ஒரு எதார்த்தமான பதிவு! ஏராளமான உள்ளார்ந்த விடயங்கள் ஏகோபித்து காணப்படுகிறது. மொத்தத்தில் அனைவரும் விரும்பி ஏற்கக் கூடிய அற்புதமான
    தகவல் சேமிப்பு!
    எறும்பாய் வடிவெடுத்து சுறுசுறுப்பாய் உழைத்து உன்னதமான கருத்துக்களை களம் இறக்கி உள்ளீர்கள் மொத்தத்தில் கல்வியின் கருவூலகம் இந்த படைப்பு என்பதில் சிறிதும் மிகையில்லை.
    கல்வியை போதிக்கும் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் ? என்பது குறித்து
    « உண்மையான ஆசிரியராகவும் பாதுகாப்பாளாரகவும் இருக்க வேண்டுமாயின் மாணவர்களுடைய உள்ளங்களைத் தொடவேண்டும். »
    -காந்தியடிகள்
    எண்ணங்களை எடுத்து சொன்னவிதம் , கற்றல் படைப்பின் சிகரம் எனலாம்.

    ஆத்திச் சூடியை தந்த ஔவைபிராட்டியின் கல்வியின் சிறப்பை உணர்த்தும் பாடல் ஆஹா! வரிசை பாடல்:
    "எழுதரிது முன்னம் எழுதிய பின்னர்
    பழுதறவா சிப்பரிது பண்பாய் முழுதுமதை
    கற்பதரிது நற்பயனை காண்பதரிது கண்டக்கால்
    நிற்பதரிது தானந் நிலை!"

    ஆஹா! என்ன அருமையான ஒரு அர்த்தமுள்ள பாடல்!
    வளர்ச்சி அடைந்த மேலை நாடுகளில்,கல்வியின் செயல்முறைகளை அனுபவ ரீதியாக
    அலசி ஆராய்ந்து சொல்லி இருப்பது,
    இங்கு (பிரான்ஸ்) வாழும் நாங்களும் சில வேறுபாடுகளை தவிர்த்து விட்டு அதை உண்மை என்று உறுதி படுத்தும் நிலையில்தான் உள்ளோம்.
    ஒருவன் சாகும் வரை கற்காதிருப்பது எதனால்? நல்ல கேள்வியினை தொடுத்தீர்கள் அய்யா!
    ஆம்!
    கல்வியில் முழுமையான தன்னிறைவு பெற்ற நாடாக நம் நாடு மாறும்வரை இதுபோன்ற வினாக்கள் வீதி உலா வரவே செய்யும்.
    பதிவுக்கு நன்றி பராட்டும்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்களது நல்ல கருத்திற்கு! ஆம் தாங்கள் இறுதியில் சொல்லியிருக்கும் கருத்தி மிகவும் சரியே!

      நீக்கு
  4. மாற்றம் என்பதுதான் மாறாத் தன்மை உடையது!

    கற்றல் பற்றி சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    அண்ணா.
    எல்லா ஆசிரியர்களும் இப்படியான சிந்தனை உணர்வுடன் சிறப்பாக நடந்தால் மாணவர்கள் தேர்சியடைவது இலகுவாக இருக்கும் சில ஆசிரியர்களின் மனப்பாங்கு வித்தியாசமாக இருக்கும் சிறப்பாக சொல்லியமைக்கு வாழ்த்துக்கள் த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. நல்ல கருத்துக்கள்--இந்திய ஆசிரியர்கள் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்வார்களா? மிக மிக நல்ல கட்டுரை--எல்லா ஆசரியர்களும் இதை படிக்கவேண்டும்.
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நம்பள்கி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்! பல ஆசிரியர்கள் ஒத்துக் கொள்கின்றார்கள் ஆனால் அவர்களால் செயல்படுத்தத்தான் முடியவில்லை.

      நீக்கு
  7. நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுக்கும் ஒவ்வொருவரும் நமக்கு ஆசான்தான். எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் கணினியை Turn Off செய்வதற்கு alt F4 அமுக்கி U அமுக்கி செய்ய ஒரு முதல் வகுப்பு மாணவ உறவிடமிருந்து கற்றுக் கொண்டேன்!

    கேள்வி கேட்காமல் கற்றுக் கொள்ள முயலுவதைவிட கேள்வி கேட்டுத் தெளிதல் நல்லது என்று சொல்வார்கள்.

    திருக்குறளில் என்றொருவன் இல்லை, என்னொருவன் என்று நினைக்கிறேன்.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியே! நாங்களும் இதை அடிக்கடிச் சொல்லுவதுண்டு. தெருவில் போகும் ஒரு மூன்றாவது மனிதர், சிறு குழந்தைகள், யாசிப்பவர், ஏன் விலங்குகள் கூட நமக்கு ஆசான் தான் பல விடயங்களைக் கற்றுத் தருவதால். தங்கள் கருத்து மிக உயர்வான கருத்து ஏனென்றால் கற்பதற்கு ஈகோ இருக்கக் கூடாதே...

      திருத்தி விட்டோம். அடிக்கும் போது பிழையாகி அதை எடிட் செய்யாமல் போட்டுவிட்டோம்....மிக்க நன்றி சுட்டியதற்கு.



      நீக்கு
  8. அருமை நண்பரே
    இன்றைய கல்வி முறை, ஆங்கிலேயர்களுக்கு
    கணக்கு பிள்ளை வேலை பார்ப்பதற்காக
    உருவாக்கப்பட்ட கல்வி முறை. நாம் அம்முறையில் மாற்றம்
    செய்யாமல் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.
    ஆங்கிலேயன் கூட கண்டுபிடிக்காத, தேர்ச்சி சதவீத கணக்கின் அடிப்படையில்
    பள்ளிகளின், தரத்தினை நிர்ணயிக்கிறோம். கல்வி வணிகமயமாகிவிட்டதால் வந்த வினை இது.
    இன்றும் கூடஉறவினர்கள் வீட்டிற்குச் செல்லும் போது, த்ங்கள் பையன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டால்,
    படித்து முடித்து விட்டு, வேலை தேடிக் கொண்டிருக்கிறார்
    எனச் சொல்வதைக் கேட்கலாம்,
    நம்மைப் பொறுத்தவரை கல்லூரி படிப்பு முடிந்தாலே,
    படிப்பு முடிந்துவிட்டதாகத்தான் பெரும்பாலும் நினைக்கிறார்கள்.
    இந்நிலை மாற வேண்டும்
    /மாணவருக்கு உண்மையான பாட புத்தகம் ஆசிரியரே/
    எவ்வளவு உண்மையான வார்த்தைகள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றும் கூடஉறவினர்கள் வீட்டிற்குச் செல்லும் போது, த்ங்கள் பையன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டால்,
      படித்து முடித்து விட்டு, வேலை தேடிக் கொண்டிருக்கிறார்
      எனச் சொல்வதைக் கேட்கலாம்,
      நம்மைப் பொறுத்தவரை கல்லூரி படிப்பு முடிந்தாலே,
      படிப்பு முடிந்துவிட்டதாகத்தான் பெரும்பாலும் நினைக்கிறார்கள்.
      இந்நிலை மாற வேண்டும்//

      மிகவும் சரியே நண்பரே! இந்தக் கற்றல் ஆர்வம் இல்லாததும் ஒரு காரணம்தான் நம் கல்வியின் நிலை பின் தங்கி இருப்பதற்கு. நல்ல கருத்து

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  9. வாத்தியாரின் வார்த்தை சரியாகத்தான் இருக்கிறது.உலகம் பயனுற தங்களின் பங்களிப்பு அவசியம்

    பதிலளிநீக்கு
  10. மிகச் சரியான கண்ணோட்டம் சகோதரே,ஒழுக்கத்தை கற்பிக்கும் ஆசிரியர் ஒழுக்கமாக இருத்தல் வேண்டும்.நாம் தான் நம் மாணவர்களுக்கு முன்னுதாரனம்.ஆசிரியராய் மாறிய போதும் மாணவனாய் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.உங்களை போன்று மாணவர்களின் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்களை பாராட்டாமல் இருக்க முடியுமா?வாழ்த்துக்கள்.உங்கள் கல்விப் பணி தொடராட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் கருத்திற்கு! தாங்களும் நல்ல ஆசிரியர்கள் குழுவில்தான் என்பது தெரியும் சகோதரி! மிக்க நன்றி!

      நீக்கு
  11. சிறப்பான கட்டுரை...

    பெற்றோர்கள் உட்பட அனைவரும் வாசிக்க வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி! ஆம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கற்றல் என்பது பாடப்புத்தகத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை!

      நீக்கு
  12. கற்றலிற் (கேள்வி) கேட்டல் நன்று!.. என சொல்லி வைத்ததும் நம் முன்னோர்கள்தானே!..
    அருமையான கட்டுரை!.. பாராட்டுகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! ஆம் கேள்வி கேட்காமல் கண்மூடித்தனமாக நம்புவது நமது அறிவின்மையைக் குறிக்கும்.

      நீக்கு
  13. #எத்தனை உயரங்கள் தொட்டாலும், இந்தத் தரைதான் நிரந்தரம் என்பதை மனதில் கொண்டு இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும், #
    இதுதான் உண்மையான கற்றல் !
    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஜி! இதை நாம் எல்லோருமே உணர்ந்துவிட்டால் உலகில் இந்த பதவி வெறிகளும், வன்முறைகளும் இல்லாமல் இருக்குமே! ஒருவேளை இது ஒரு ஐடியலஸ்டிக் திங்கிங்க் ஆக இருப்பதாலோ?

      நீக்கு
  14. வணக்கம் சமூக நலன் வேண்டிஇட்ட தங்களது பதிவுக்கு ஒரு ‘’சல்யூட்’’ நண்பரே,,, மாணவன் என்ற ‘’கல்’’லை சிற்பி என்ற ஆசிரியர் செதுக்கும்போதுதான் அவன் வைரமாக ஜொலிக்கிறான் நண்பரே தங்களுக்கு தெரியும் வேலைப்பளு தவறாக நினைக்க வேண்டாம் விரிவாக எழுத முடியவில்லை. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! உங்கள் இந்தக் கருத்தே பல விடயங்களைச் சொல்லுகின்றதே! தெரியும் தங்கள் வேலைப் பளு வலைச்சரப் பணி. தவறாக நினைக்கவே மாட்டோம் ஜி! மற்றபடியும் தவறாக நினைக்க மாட்டோம் நண்பரே1

      நீக்கு
  15. ஆழமான அலசல்
    மிக அவசியமானதும் கூட
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் வேலைப் பளு அறிந்தோம். எல்லாம் முடித்துவிட்டு வாருங்கள் சகோதரி! எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்!

      நீக்கு
  17. மேலே பறக்கவும் தெரிய வேண்டும், தரையில் படுக்கவும் தெரிய வேண்டும். அந்த அனுபவம், நாம் மேலே செல்வதற்கான விடா முயற்சியையும், உழைப்பையும் கற்றுக் கொடுக்கும். நாம் எத்தனை உயரங்கள் தொட்டாலும், இந்தத் தரைதான் நிரந்தரம் என்பதை மனதில் கொண்டு இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் //

    அருமை

    அக்காலத்தில் விளையாட்டாய்...விளையாட்டில்... சொல்லி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

    அனைவரும் படிக்க வேண்டியது அவசியம். தம் + 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! சகோதரி. நமது பல விளையாட்டுக்கள் பல நல்ல வாழ்வியல் தத்துவங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. மட்டுமல்ல அதில் நமது பார்வையும், உணர்தலும் மிக அவசியம். மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  18. கல்வி கற்றலைப் பற்றி விரிவான ஆழமான ஒரு அலசல். முதலில் அதற்கு பாராட்டுக்கள் சகோஸ்.
    வெளிநாடுகளில் இருக்கும் முறையைப் பற்றி சொல்லியது உண்மை தான். அங்கு கேள்வி கேட்பதற்கு ஊக்குவிக்குகிறார்கள். சிறிய வயதிலேயே ஒன்றை பற்றி மாணவர்கள் விளக்கி விட்டு, ஏதாவது கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்று கேட்பதற்கும் பழக்கப்படுத்துகிறார்கள்.
    அந்த ஔவைப்பாட்டியின் பாடலை இந்த பதிவில் எடுத்துக்காட்டியது சூப்பர்.இன்றைக்கு சத்தம் போட்டு வாசிக்கும் பழக்கம் எல்லாம் போய்விட்டது.

    மிக அருமையான ஒரு பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் பாராட்டிற்கு.

      ஆம்! சத்தமிட்டு வாசிக்கும் பழக்கம் எல்லாம் மறைந்தே விட்டது. அது மிகவும் வேதனைக்குறியது. எங்கள் வகுப்பில் எல்லாம் அது அப்போது உண்டு. அதனால்தான் இப்போதுள்ள குழந்தைகள் வாசிப்பதற்கும் தடுமாறுகின்றார்கள். உச்சரிப்பும்..

      நீக்கு
  19. அன்புள்ள அய்யா,

    ‘கற்க கசடற.... கற்பிக்கவும் கசடற...’ -
    மாணவருக்கு உண்மையானப் பாடப்புத்தகம் ஆசிரியர்கள் என்கிற உண்மையை சொல்லி, மாணவர்களை அடிப்பது போன்ற தண்டனையே கூடாது
    - என்று அன்பாலே வழிகாட்டி அவர்களின் வாழ்வில் ஒளிவிளக்காகத் திகழ வேண்டுமென கூறியது அருமை.
    கற்றல் என்பது காலத்திற்கேற்ப மாறிக் கொண்டும் இருக்கும்...(நாம் வலைத்தளத்தில் கற்பதைப் போல) கற்றல் என்பது வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கும் அப்பாற்பட்டது என்பது எத்துணை உண்மையானது.
    வளர்ச்சி அடைந்த மேலை நாடுகளில், கேள்வி கேட்பவர்கள் பாராட்டப்படுகின்றார்கள். வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிற நம் நாட்டில் கேள்வி கேட்பவர்கள் வசை பாடப்படுகிறார்கள்... ‘இப்படி அதிங்கப்பிரசிங்கத்தனமாக கேள்வி கேட்கக்கூடாது’ என்று அமர்த்தப்படுகின்றனர். மாணவர்கள் கேள்விகள் கேட்டு விடை காண முயல்கின்ற போதுதான் கல்வியறிவு வளரும் என்பதுதான் நிதர்சனம்.

    மாணவனுக்குத் தேவையான அடிப்படைக் கல்வியையும், வாழ்க்கையைத் திடங்கொண்டு போராடும் மனவலிமையையும், வாழ்க்கை என்றால் என்ன என்ற புரிதலையும் கற்றுக் கொடுக்காததாலும், அதற்கான நல்லொழுக்கமும் போதிக்கப்படாததாலும், சமுதாயச் சீர்கேடுகளும், அவலங்களுக்கும் ஆட்பட்டு அல்லல் படுகிறார்கள் .... நல்ல கருத்துள்ள கல்வியியல் சிந்தனைகளை.... ஆசிரியருக்கும்... மாணவருக்கும் பகிர்ந்தது மிகவும் பயனுள்ளது என்பதில் அய்யமில்லை அய்யா....!
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்களது புரிதலுக்கும், உயர்வான கருத்திற்கும். ஆசிரியர்கள் நினைத்தாலும் செய்ய முடியாத அளவிற்கு நம் கல்வித்துறை ஊழல் பெருகிவிட்டதே என்பதுதான் மிகவும் வேதனையான விடயம்!

      நீக்கு
  20. கல்வி முறையில் மாற்றங்கள் தேவை! சிறப்பான கருத்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  21. பதில்கள்
    1. மிக்க நன்றி தோழரே! னீங்கள் எல்லாம் எத்தனையோ நல்ல விசயங்கள் செய்துவருகின்றீர்கள்! எனவே உங்களால் இதைப் புரிந்து கொள்ள முடியும். மிக்க நன்றி!

      நீக்கு
  22. கற்பது என்பது பள்ளிக் கூடத்தில் கற்பது மட்டுமல்ல. வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை கற்றுக் கொள்ள வேண்டி இருப்பது ஏராளம். கல்வியை குறை சொல்லும் முன் கற்கும் மனநிலைக்கு நம் குழந்தைகளைத் தயார் செய்கிறோமாஎன்பதே தலையாய கேள்வி. நாளும் புதிதாய்ப் பிறக்கிறொம் என்பது போல நாளும் புதிதாக கற்கும் மனநிலையில் நாம் இருக்கிறோமா சிந்திக்க வேண்டும்.புதிதாய் கற்க நம் சிந்தை தெளிவாய் இருக்கவேண்டும். நான் என் பதிவு ஒன்றில் எழுதியது இங்கே மீண்டும் சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்
    /. When trying to create new ideas ,and thoughts we always get into the trap of what we have learnt and known. To chart new territories and new ideas the most important thing is to unlearn what we have known.Otherwise we will never be able to chart new path. Staying focused and being conscious of unlearning things is essential Realising and working hard on that--very difficult though./கற்கும் மனம் துடைத்துவிட்ட சிலேட்டுப் போல் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் நாம்தான் நிறையவே எண்ணங்களால் திணிக்கப்பட்டு சுய சிந்தனையை இழந்திருக்கிறோமேஎழுதி இருப்பதைப் படிக்கும் போது ஓடிய எண்ணங்களைப் பகிராமல் இருக்க முடியவில்லை. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்வியை குறை சொல்லும் முன் கற்கும் மனநிலைக்கு நம் குழந்தைகளைத் தயார் செய்கிறோமாஎன்பதே தலையாய கேள்வி. நாளும் புதிதாய்ப் பிறக்கிறொம் என்பது போல நாளும் புதிதாக கற்கும் மனநிலையில் நாம் இருக்கிறோமா சிந்திக்க வேண்டும்.புதிதாய் கற்க நம் சிந்தை தெளிவாய் இருக்கவேண்டும். //

      மிக மிக உன்னதமான கருத்து சார்! இது சரிதானே சார். சொல்லுவதில் தவறே இல்லை. இது போன்ற கருத்துக்கள்தான் வேண்டும் சார். எதையும் ஓபன் மைன்டுடன் ஏற்பதற்கு தயாராக இருக்க வேண்டும். சரியே நாம் பல ப்ரீடிட்டெர்மின்ட் எண்ணங்களால் ஆட்கொள்ளப்பட்டு கற்றலை இழக்கின்றோம். மிக மிக நல்ல கருத்தை முன் வைத்தமைக்கும் மிக்க னன்றி சார்!

      நீக்கு
  23. சிந்தனையை தூண்டி முடிந்திருகிறது பதிவு! இன்று கில்லர்ஜி அண்ணாவின் வலைச்சர அறிமுகம் பார்த்தீர்களா? அப்படிதான் இன்றும் இருக்கிறது வகுப்பறையில் சந்தேகம் கேட்கும் மாணவனின் நிலை:(( தேடல் தான் அறிவின் வளர்ச்சி ! தேடுவோம் சகாஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைச்சரம் பார்த்தோம் சகோதரி! மிகவும் வருத்தமிக்க ஒன்று அவரது அனுபவம். அதே போன்று இங்கு பிஜு ஆசானின் அனுபவத்தைப் பாருங்கள்! மனது தாங்கவில்லை சகோதரி. எவ்வளவு கீழ்தரமான செயல்கள் ஆசிரியர் தரப்பில் மனது வேதனையாகிவிட்டது சகோதரி. மிக்க நன்றி...தேடலைப் புரிந்துகொண்டதற்கு...

      நீக்கு
  24. ஆசானே,
    உங்களின் பதிவுகளின் பலவரிகள் எனது பள்ளிப்பருவத்தின் கசப்பான பல தருணங்களைக் கண்முன் கொண்டுவந்து விட்டது.
    பிரம்படிகள் .......... மணலில் முழங்கால் இட்டு வெயிலியில் துகள்குழிகள் பதிந்த முழங்கால்கள்.................................. , இரு விரல்களுக்கிடையே பென்சிலை வைத்து விரலிரண்டையும் நசுக்கிய தருணங்கள்....!
    ஆனால்,
    பெருங்குற்றம் ஒன்றும் நான் செய்துவிடவில்லை.
    மிகப்பலநேரங்களில்,
    தண்டனைகள் எனது கேள்விகளுக்கானவை!
    சில நேரங்களில் நான் எதுவும் கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும்..!
    அதை எனது திமிரென்றும்,
    தங்கள் அறியாமையை தமக்குள்ள அதிகாரமென்றும்
    நினைத்துக் கொண்ட ஆசிரியர்களே மிகப்பலரும்!
    ஒரு வகையில் அவர்கள்தான் எனக்கு புத்தகத்தின் வாசலைத் திறந்தவர்கள்!
    ஒரு கேள்விக்கான விடையை இன்னொரு புத்தகத்தில் தேடியபடிதான் என் வாசிப்பு நீண்டது.
    வெகுவிரைவில், பெருமதிப்பிற்குரியோரால் அதற்கும் தடை வந்தது,
    பல்லாயிரம் நூல்களைக் கொண்ட என் பள்ளி நூலக அறிவிப்புப் பலகையில் எனது பெயரும் வகுப்பும் வரிசை எண்ணும் எழுதப்பட்டு,
    // இம்மாணவருக்குப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது - உத்தரவுப்படி- // எனும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
    நெஞ்சம் தீப்பிடித்தெரிய, கேலிக்கும் கிண்டலும் எனை ஆளாக்கிய, சக மாணவர்களும், ஆசிரியர்களும், அதேநேரம் போராடி என் மீது விதிக்கப்பட்ட தடையை உடைத்தெறிந்து என்னை உச்சிமுகர்ந்த ஆசிரியர்களும் ஒரு சேர இருந்தார்கள்.
    எல்லா இடத்தும் இப்படியே இருக்கவும் செய்வார்கள்.
    மாணவரிடம் இருந்து நான் அறிந்து கொள்ள பல விடயங்கள் இருக்கின்றன என்று ஒரு ஆசிரியன் புரிந்து கொள்ளாதவரை, எனக்கு எல்லாம் தெரியும் என்ற அவனது அகந்தையைத் தொலைக்கும் வரை அந்த வகுப்பறை, தெய்வங்களுக்கு வகுப்பெடுக்கும் சாத்தான்களின் வகுப்பறையாகச் சபிக்கப்பட்டிருக்கும்.
    வாசித்தல - கற்றல் - மனதிருத்தல் - மீளக் கொணர்தல் இவை குறித்து நானும் எழுத வேண்டும் எனப் பலமுறை நினைத்ததுண்டு.
    அதற்கான தகுதி குறித்த அய்யப்பாட்டுடன் , என் தளத்தில் அதற்கு எவ்வாறு இடமளிப்பது என்ற தயக்கத்துடன் இன்னும் தொடங்கவில்லை.
    சாதியத்தை நீக்கிப்பார்த்தால் இன்றைய மாணவரின் கல்விக்குப் பெரிதும் உதவக் கூடிய பழைய மரபுகள் நம்மிடம் இருக்கின்றன ஆசானே!
    பழையதாய் இருக்கின்றது என்பதற்காக அதை நாம் பயன்படுத்தத் தயங்குகிறோம் அல்லது மறந்து விட்டோம் என்றே தோன்றுகிறது.
    வழக்கம் போலவே அருமையான கருத்தடங்கிய பதிவு அழகான நடையில்,
    நானும் வழக்கம் போலவே தாமதமாய்...!
    நன்றி ஆசானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனது மிகவும் வேதனையாகிவிட்டது. ஆசானே! தங்களுடைய அறிவு இப்படிக் கேவலமாக நடத்தப்பட்டதை நினைத்து. சே என்று நினைக்கத் தோன்றியது. உங்கள் விவரணம் மனக்கண் முன் காட்சிகளாய் விரிந்ததை மறுக்க முடியாது உங்கள் முகம் தெரியவில்லை என்றாலும் நிகழ்வுகள் நிழலாடியது.

      நீங்களும் இதைக் குறித்து எழுதுங்கள் ஆசானே! என்னத் தயக்கம். உங்களுக்கில்லாத தகுதியா?! நீங்கள் கற்றலுக்கு முன் உதாரணமாக இருக்கும் போது எழுதலாமே. த்யக்கம் வேண்டாம் ஆசானே! எழுதுங்கள்.

      இன்றைய மாணவரின் கல்விக்கும் பெரிதும் உதவக் கூடிய பழைய மரபுகள் நம்மிடம் இருக்கின்றன/// அதைக் குறித்தும் எழுதுங்களேன். உபயோகமாக இருக்குமே..

      தாமதமாக வந்தாலும் என்ன ஆசானே. என்ன விளக்கமான கருத்து. உங்களின் இது குறித்த பதிவை எதிர்ப்பார்க்கின்றோம்.

      மிக்க நன்றி ஆசானே!

      நீக்கு
  25. தங்களது முகவரியும் தொடர்பு எண்ணும் தரலாமா,காக்காச்சோறு புத்தகம் அனுப்ப,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தருகின்றோம் நண்பரே! ஆனால் நாங்கள் பணம் அனுப்பித்தான் பெறுவோம் நண்பரே! எப்படித் தரவேண்டும் என்பதைச் சொல்லுங்கள் னண்பரே! தங்கள் தளத்தில் வந்து தருகின்றோம். மிக்க நன்றி!

      நீக்கு
  26. நம்மள்கி சொன்னது சரியான விமர்சனம். உங்கள் பதிவைப் படித்ததும் நான் அடுத்து என்ன எழுத வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளது. நன்றி,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! உங்கள் பதிவைப் படித்ததும் நான் அடுத்து என்ன எழுத வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளது. // மிக்க நன்றி நண்பரே! எங்கள் பதிவும் உதவுகின்றதே என்பதற்கு...

      நீக்கு
  27. பல நல்ல கருத்துக்களை முன்வைத்து இருக்கிறீர்கள். அதற்கு முதலில் பாராட்டுக்கள். ஆசிரியர் தொழில் என்பதை விரும்பிச் செய்பவர்கள் வெகு சிலரே. சிலர் அந்தத் தொழிலில் தள்ளப்பட்டு விடுகிறார்கள். அவர்களினால் மாணவர்களுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை. நமது வகுப்புகளில் மாணவர்கள் அதிகம். ஒரு ஆசிரியர் எப்படிப் போதும்? அதுவுமில்லாமல் பள்ளிக்குப் போவது பாடங்களைப் படிப்பது, பரீட்சை எழுதுவது பாஸ் செய்வது எல்லாமே இயந்திரத் தனமாக நடைபெற்று வருகிறது. அடிப்படையே மாற வேண்டும். யார் மாற்றப்போகிறார்கள்?
    நம்மால் இளைய சமுதாயத்தை மாற்ற முடியும்; இந்த சமூகத்திற்கு கல்வி என்னும் செல்வத்தை கொடுக்கும் கருவி நாம் என்பதை முதலில் ஆசிரியர்கள் மனதில் ஊன்ற வேண்டும். அவர்களின் வாழ்க்கையை வளமாக்கவேண்டும். சமூகத்தில் அவர்களுக்கு நல்ல நிலையை உருவாக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால் நிச்சயம் அவர்களும் கசடற கற்பிப்பார்கள் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்களது கருத்து மிகவும் சரியே ஆழாமான நல்ல கருத்தை முன்வைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  28. " உலகின் மிக சிறந்த பணி ஆசிரிய பணி. அவர்கள் கற்ப்பிப்பது மாணவர்களுக்கு அல்ல பல தலைமுறைகளுக்கு "

    என பல பின்னூட்டங்களில் குறிப்பிட்டுள்ளேன் !

    " இப்படிப்பட்டக் கற்றல் என்பது காலத்திற்கேற்ப மாறிக் கொண்டும் இருக்கும். ஆம்! மாற்றம் என்பதுதான் மாறாத் தன்மை உடையது! "

    உண்மை ! " மூடர்கள் மட்டுமே மாற மறுப்பார்கள் " என ஒரு பிரென்சு வாக்கியம் உண்டு.

    நமது கல்வி முறை பற்றிய கருத்துக்கு சகோதரி மைதிலி கஸ்த்தூரி ரெங்கனின் பதிவு ஒன்றில் இட்ட பின்னூட்டத்தையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...

    " பிறர் தரும் வேலையைப் பிசிரில்லாமல் செய்து முடிக்கிற திறமைசாலிகளை தான் உருவாக்குகிறது. "

    மிக உண்மை சகோதரி. இதற்கு வரலாற்று காரணம் கூட உண்டு !... ஆங்கிலேயர்கள் தங்களுக்கான குமாஸ்த்தாக்களை தயார் செய்வதற்க்காக உருவாக்கியது அல்லவா இந்திய கல்விமுறை ?!!!

    இன்னும் சொல்லப்போனால் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை குறைப்பதுதான் இந்திய காலனியாதிக்க ஆங்கிலேய கல்வி முறையின் நோக்கமே !

    ஐரோப்பிய தேசம் ஒன்றில் வாழ்பவன் என்ற முறையில் சொல்கிறேன்...

    ஐரோப்பிய குழந்தை வளர்ப்பு பற்ரியும், கல்வி முறை பற்றியுமன உங்கள் கருத்து முற்றிலும் உண்மை !

    ஒரே உதாரணம்...

    பள்ளி காலத்தில், ஒரு ஆசிரியர் பாடம் நடத்தாமல் அமர்ந்திருந்த வேலையில் சக மாணவர்கள் பேசிக்கொண்டிருக்க, நான் வரைந்துக்கொண்டிருந்தேன்...

    ஏன் வரைகிறாய் என கேட்டார்.

    சும்மா இருப்பதற்கு வரைந்து பழகுகிறேன் என்றேன்...

    " அப்ப எங்களையெல்லாம் வேலைவெட்டி இல்லாதவன்னு சொல்றியா ? " கோபக்கூச்சலுடன் வகுப்பிலிருந்து என்னை வெளியேற்றினார் அவர்.

    இங்கு பிரான்சில் சில மாதங்களுக்கு முன்னர் எனது ஆறு வயது மகளின் பள்ளி ஆசிரியை என்னிடம் ஒரு ஓவியத்தை கொடுத்தார்...

    " உங்கள் மகள் பாடம் நடத்தாத வேலையில் வரைந்தது... மிக நன்றாக வரைகிறாள்... தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள் ! "

    காந்தியின் சத்திய சோதனையை மட்டும் சிலாகித்துக்கொண்டிருக்காமல் நாம் நம்மை நிறைய சுயபரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும் !

    நன்றி
    சாமானியன்








    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக அருமையான கருத்தையும், அனுபவத்தையும் சொன்னதற்கு மிக்க நன்றி நண்பரே! சுய சிந்தனையை வளர்வதற்கு நம் கல்வி முறை இன்னும் நிறைய மாற வேண்டும் நண்பரே! மிக்க நன்றி

      நீக்கு
  29. அன்பிற்கினிய நண்பரே,

    முதலில் தங்களின் இந்த சீரிய எழுத்து பணிக்காய் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
    அடுத்து உங்களின் உன்னதமான ஆசிரியர் சேவைக்காய் என் உள்ளத்தின் உண்மையான வாழ்த்துக்கள்.

    ஒரு தகப்பன் தன் மூன்றாவது மகன் அந்த காலத்தில் பி யூ சி எனும் படிப்பில் மூன்றுமுறை தவறிவிட்டதை அறிந்து , அந்த மகனிடம் அந்த தகப்பன் சொன்னாராம் , " இது தான் உனக்கு கடைசி வாய்ப்பு இந்த நான்காம் தடவையும் நீ தேறாவிட்டால் உன்னை டீச்சர் ட்ரைனிங்-ல் சேர்த்துவிடுவேன்" என்றாராம்.

    நல்லவேளை அந்த மகன் எப்படியோ கஷ்ட்டப்பட்டு நான்காம் தடவை எல்லா பேப்பர்களையும் கிளீயர் செய்து ஆசிரியர் பணிக்கு ஒரு நன்மையை செய்து புண்ணியம் சேர்த்துக்கொண்டார்.

    இது போன்று ஆசிரியர் பணிக்கு தள்ளப்பட்டு ஏனோ தானோ என கடமைக்காக ஆசிரியராக இருந்துகொண்டு,"ஆட மேச்சோமா கோலபோட்டோமா" என்று பேருக்கு ஆசிரியர்களாக பலர் இருக்கும் இந்த உலகில், தங்களைபோன்று, ஆசிரியர் பணியினை நேசித்து அதனையே சர்வ சதா காலமும் யோசித்து - சுவாசித்து நற்பணி புரியும் தங்களை என்ன சொல்லி வாழ்த்துவேன் - அதனால் உங்களை வணங்குகின்றேன் ஒரு ஆசிரிய பெற்றோரின் மகனாக, ஆசிரிய சகோதரிகளின் தம்பியாக- அண்ணனாக, ஆசிரிய பெரியப்பாக்களின் மகனாக - கொஞ்சம் காலம் ஆசிரியனாக பணிபுரிந்தவனாகவும்.

    இத்தனை நேரம் செலவழித்து மாணவர்களின் நலனில் அக்கறையும் சமூக கற்றலின் பால் கொண்டுள்ள ஆதங்கத்தையும் நேர்த்தியாக அலசி ஆராய்ந்து, துணைக்கு எங்களின் கொள்ளு பாட்டியின் பாடலையும் தேடிபிடித்து மேற்கோள் காட்டி நீங்கள் படைத்துள்ள இந்த படைப்பு ஒரு சாதாரண பதிவு அல்ல ஒவ்வொரு மாணவர் -ஆசிரியர்- பெற்றோர்- சமூக- கல்வி ஆர்வலர்களின் மனதிலும் பதியன் போடப்படவேண்டிய ஓர் கல்வி நோய்தீர்க்கும் மூலிகையின் வேரன்றி வேறில்லை.

    இந்த படைப்பை தயவு செய்து அரசு கல்வித்துறையினரின் பார்வைக்கு கண்டிப்பாக அனுப்பிவையுங்கள், அவர்களின் கல்வி கொள்கையின் பார்வை பழுதுபார்க்கபடட்டும்.

    நல்லாசிரியர் விருது என்னை பொறுத்தவரை உங்களுக்கு கிடைத்தால் அந்த விருதுக்கு வேண்டுமானால் ஒரு விருது கிடைத்தத்தாகுமே தவிர உங்களுக்கு அது உரிய - உயரிய அந்தஸ்தானதாக இருக்குமோ என்ற ஐயம் எனக்கு உள்ளது.

    உங்களை என் உள்ளம் என்றென்றும் வணங்கும் உங்கள் தன்னலமற்ற - ஈடுபாடுடன்- அற்பணிப்புடன் கூடிய ஆசிரியர் சேவைக்காய்.

    தொடரட்டும் உங்கள் நற்பணி தொடர்ந்து படரட்டும் உங்கள்பால் இந்த உலகினி.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் மிகவும் அழகான, கருத்துள்ள பின்னூட்டத்திற்கு. இத்தனை ஆழமாக வாசித்து எம்மைப்பாராட்டியதற்கு, அதுவும் கல்வித்துறைக்குப் பரிந்த்துரை செய்யவும் சொல்லியிருப்பதற்கு மிக்க நன்றி நண்பரே!

      நல்லாசிரியர் விருது என்னை பொறுத்தவரை உங்களுக்கு கிடைத்தால் அந்த விருதுக்கு வேண்டுமானால் ஒரு விருது கிடைத்தத்தாகுமே தவிர உங்களுக்கு அது உரிய - உயரிய அந்தஸ்தானதாக இருக்குமோ என்ற ஐயம் எனக்கு உள்ளது.//

      மிகைப்படுத்தல் நண்பரே! அந்த அளவு உயர்வானவர் அல்லர் நாங்கள் நண்பரே!

      த்தனை நேரம் செலவழித்து மாணவர்களின் நலனில் அக்கறையும் சமூக கற்றலின் பால் கொண்டுள்ள ஆதங்கத்தையும் நேர்த்தியாக அலசி ஆராய்ந்து, துணைக்கு எங்களின் கொள்ளு பாட்டியின் பாடலையும் தேடிபிடித்து மேற்கோள் காட்டி// ஹஹஹ கொள்ளுப்பாட்டி??!! கொள்ளுத்தாத்தாவிற்கு கொள்ளுத்தாத்த்தா எனலாமோ?!!!

      மிக்க நன்றி நண்பரே! எங்கள் பதிவை இத்தனைப் பாராட்டியதர்கும் ஆழமான வாசித்தலுக்கும்...

      நீக்கு
  30. பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும்: தயவு செய்து பருவ வயதில் குழந்தைகளை அந்நியராக்காதீர்கள்!//

    மிக மிக அருமை சகோ .சரியா சொன்னீங்க

    //சொல்லும் விஷயத்தைச் சுவையாகச் சொல்ல வேண்டும். சாதாரண வாய்மொழியாகச் சொல்பவற்றை வெகு எளிதாக மாணவரால் திரும்பச் சொல்ல முடியும்//many vets earn money just sitting under nut plants....முதல் எழுத்துக்கள் Mercury Venus Earth Mars Jupiter Saturn Uranus Neptune Pluto...

    மகளுக்கு MOCK டெஸ்ட் நடக்குது மற்றும் quilling கிளாஸ் எனக்கு .விரிவாக பின்னூடம் இட.. நேர பற்றாக்குறை // அருமையான பதிவு ..வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி!

      /சொல்லும் விஷயத்தைச் சுவையாகச் சொல்ல வேண்டும். சாதாரண வாய்மொழியாகச் சொல்பவற்றை வெகு எளிதாக மாணவரால் திரும்பச் சொல்ல முடியும்//many vets earn money just sitting under nut plants....முதல் எழுத்துக்கள் Mercury Venus Earth Mars Jupiter Saturn Uranus Neptune Pluto...// அருமை அருமை சகோதரி!!

      பரவாயில்லை சகோதரி! தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாருங்கள். ஹை க்வில்லிங்க் க்ளாஸ்.??!! சூப்பர் வாழ்த்துக்கள்.

      மகளுடைய டெஸ்ட் நன்றாகச் செய்திருக்கின்றாரா? அவருக்கு எங்களது வாழ்த்துக்கள்! மிக்க நன்று தங்கள் பாராட்டிற்கு!

      நீக்கு