வியாழன், 11 டிசம்பர், 2014

ஆல்ஃப்ரெட் நோபலின் நினைவு தினத்தில் ஆஸ்லோவில் விருது பெரும் கைலாஷ் சத்தியார்த்திக்கும், மலாலா யூசுஃப்சாயிக்கும் வாழ்த்துக்கள்!

    Nobel Peace Prize laureates Kailash Satyarthi (right) and Malala Yousafzai  at the the Nobel Peace Prize award ceremony at the City Hall in Oslo, 10 December 2014
    
     வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் தெய்வத்துள் வைக்கப்படுவர் என்பது எவ்வளவு உண்மையான வாக்கியம்! இன்று ஆஸ்லோவில் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தியையும், மலாலா வையும் பார்க்கும் போது அது நம் எல்லோருக்கும் புலப்பட்ட உண்மைதானே! மனித நன்மைக்குத் தேவையானச் சேவை செய்பவர்களை உலகளவில் கௌரவிக்கவும், அது போன்ற சேவை செய்து கொண்டிருப்பவர்களை ஊக்குவிக்கவும் ஆல்ஃப்ரெட் நோபல் தன் சொந்தப் பணத்தைச் செலவிட்டு பரிசுத் தொகை வழங்கும் இப் பொன்னாள் அவ் உயர்ந்த மனிதனின் நினைவு நாளும் கூட.


 அவ் உயர்ந்த மனிதனை இன் நன்னாளில் நினைவு கூர்வோம்.  தீமைக்கும், தீயவர்களுக்கும் தான் மரணம்.  நன்மைக்கும், நல்லவர்களுக்கும் மரணம் இல்லை என்ற உண்மையை இது போன்ற சம்பவங்கள் இடையிடையே பறைசாற்றத்தான் செய்கின்றது.

 

     மத்தியப் ப்ரதேசத்தில் 1954 ஆம் ஆண்டு விதிசாவில் பிறந்த கைலாஷின் சத்தியார்த்தி தான் பள்ளிக்குச் செல்லும் போது அவரது வயதுள்ள ஒரு சிறுவன் தெருவில் சுத்தம் செய்யும் வேலையைச் செய்வதைக் கண்டதும்.அதிர்ந்தே போனார். அதற்கான காரணம் வறுமை என அறிந்து மனம் நொந்தார்.  
Image result for abraham lincoln

ஆப்ரஹாம் லிங்கன் தன் சிறு வயதில் ஆடு மாடுகளைப் போல் சந்தைகளில் விற்கப்படும் கறுப்பு இன அடிமைகளைக் கண்டு நொந்தது போல்தான் அதுவும். அன்று லிங்கன், “எனக்கு அரசாள அதிகாரம் கிடைக்கும் போது, நான் இவ்வடிமை சம்பிரதாயத்தை நிறுத்துவேன்” என உறுதி எடுத்து, பின்பு, அவர் அமெரிக்காவின் ஜானதிபதி ஆனதும் அடிமைத் தனத்தை நிறுத்தியது போல், சத்தியார்த்தியும் அன்றே, படிக்க வேண்டிய சிறுவர்கள் வேலை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்க வேண்டும். இளம் வயதில் தந்தையை இழந்த சத்தியார்த்தியை அவரது தாய் மிகவும் சிரமப்பட்டுப் படிக்க வைத்து ஒரு பொறியாளராக ஆக்கியது மட்டுமல்ல, பொறியியற் கல்லூரியில் ஆசிரியராகவும் ஆக்கிவிட்டார்.  தனது 26 ஆம் வயதில் சத்தியார்த்தி தன் வேலையை உதறி குழந்தைகளின் உரிமையைப் பாதுகாக்கப் செல்வதாகக் கூறியதும், அத்தாய் பதறிப் போய் இருப்பார். எப்படியோ சத்தியார்த்தி தன் தாயின் அனுமதியைப் பெற்று அவரது ஆசியுடன் குழந்தைகளைக் காக்க கிளம்பிவிட்டார். 


      1987ல் லாகூரில் செங்கல் சூளையில் வேலை செய்த குழந்தைகளைக் காப்பாற்ற முயன்றபோது தாக்குதலுக்கு ஆளான அவர் படுகாயம் அடைந்தும் அம் முயற்சியிலிருந்து பின்வாங்கவில்லை.  1983ல் பச்சன், பச்சாவோ ஆந்தோளன் (பிபிஏ) எனும் இயக்கத்தைத் தொடங்கி குழந்தைகளின் உரிமைகள் ஒவ்வொன்றாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து, குழந்தைகள் காணாமல் போனால் காவல் நிலையங்களில் உடனே எஃப் ஐ ஆர் தயாராக்க வேண்டும் என்ற சட்டத்தையும், நாடெங்கிலும் உள்ளக் குழந்தைகள் காப்பகத்தை அரசும், குழந்தைகள் நல இலாக்காவும் எப்போதும் கண்காணிக்க வேண்டும் என்ற சட்டத்தையும் அமலுக்குக் கொண்டுவரச் செய்தார். ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய ஒரு இலட்சம் குழந்தைகள் காணாமல் போகும் நம் நாட்டில், இது வரை அப்படிக் காணாமல் போன குழந்தைகளில் ஏறத்தாழ 80,000 குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களுக்கு கல்வி அறிவூட்ட அவர் தோற்றுவித்த இயக்கத்தால் சாதிக்க முடிந்திருக்கின்றது என்பதை எண்ணும் போது வியப்பாக இருக்கின்றது. அதுமட்டுமல்ல, 2001 ல் அவர் தோற்றுவித்த பால் மித்ர கிராமம் (BMG) எனும் இயக்கம் இன்று 11 மாநிலங்களில் உள்ள 356 கிராமங்களில் பள்ளிகளைத் துவக்கி, ஏழைக் குழந்தைகளுக்கு, 14 வயது வரை இலவசக்கல்வி புகட்டி வருகிறது. அவரது போற்றுதற்குரிய இத் தொண்டிற்கு கிடைத்த  பரிசுதான் இந்த நோபல் பரிசு. மதர் தெரசாவிற்குப் பின் சமாதானத்திற்காக ஒரு இந்தியர் வாங்கும் பரிசு.  ஏழு இந்தியர்களுக்குப் பின் 8 வதாக ஒரு இந்தியர் வாங்கும் பரிசு.



      கைலாஷ் சத்தியார்த்தியுடன் சமாதானத்திற்காக நோபல் பரிசைப் பங்கிடும் 17 வயதான மலாலா யூசுஃப்சாயி பெண் குழந்தைகளின் கல்வி கற்கும் உரிமைக்காகப் போராடுபவர்.  பெண்கள் கல்விக்காகக் குரல் கொடுத்த அவரை 2012 ல் தாலிபான் தீவிரவாதிகள் கொல்ல முயன்றனர். மரணத்தின் பிடியிலிருந்து இறையருளால் உயிர் தப்பிய அவர் இப்போது இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாமில் தன் குடும்பத்துடன் வாழ்கிறார். ஒவ்வொரு மதத்திற்கும் அதன் அழிவுக்கும், இழிவுக்கும் காரணமாகும் ஒன்று காலப் போக்கில் உண்டாகத்தான் செய்யும். இந்து மதத்திற்கு அது சாதிப் பிரச்னை என்றால், இஸ்லாமிற்கு அது தீவிரவாதம்.  மதங்கள் இறைவனின் பெயரால் உயிர் பெற்றவை. எனவே, அவைகள் அழிந்தாலும் இறை நம்பிக்கை ஒருபோதும் அழியாது.  இறைவனின் பெயரால் புதுப் புது மதங்கள் 1000 கணக்கான ஆண்டுகள் கடக்கும் போது உண்டாகலாம். இவற்றிற்கெல்லாம் இடையில் எல்லாக் காலகட்டங்களிலும் மனித நன்மைக்கும் மனித உரிமைகளுக்காகவும் போராடும் சத்தியார்த்தி மலாலா போன்றவர்கள் தோன்றி நன்மையின் பால் எல்லோரையும் ஈர்க்கத்தான் செய்வார்கள்.  இந் நன்னாளில் இருவரையும் வாழ்த்துவோம்!  போற்றுவோம்! அவர்களது நன்மைக்காக இறைவனை வேண்டுவோம்! 

படங்கள்: இணையம் 

53 கருத்துகள்:

  1. இன்றைய தலைப்புச் செய்தி குறித்த
    படங்களுடன் கூடிய விரிவான
    அற்புதமான பதிவு மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இணைத்து வாக்களித்து விட்டேன்
    த.ம 1

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இருவருக்கும் . கைலாஷ் அவர்களின் சேவை போற்றுதலுக்குரியது .சைல்ட் லேபர் நான வெருக்கும் ஒன்று .fair trade பொருட்களை ஆதரிப்பதன் மூலம் ஓட்டுமொத்தமாக இல்லாமல் செய்யலாம் சைல்ட் லேபர் .

    அருமையானபதிவு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் சைல்ட் லேபர் குறித்த அருமையான க்ருத்திற்கு!

      நீக்கு
  4. 1:1 என்ற கணக்கில் இந்தியாவுக்கு ஒன்று, பாகிஸ்த்தானுக்கு ஒன்று என கொடுத்ததில் உலக அரசியல் விளையாட்டு உண்டு என்றாலும் இருவருமே பரிசுக்கு தகுதியானவர்கள்தான். காரணங்கள் எதுவாக இருப்பினும் இவர்கள் கெளரவிக்கப்பட்டதுதான் முக்கியம்.

    ஒரு வேளை உண்ணாவிரதத்துக்கு கூட ஏர் கூலருடன் வருபவர்களுக்கு மத்தியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இவர்கள் மனிதம் வளர்ப்பது வணங்கவேண்டிய செயல். வாழ்த்தி வணங்குவோம்.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    அண்ணா

    தேசத்தின் மகுடங்களை நினைபடுத்திய விதம் மட்டும் மல்ல சொல்லிச்சென்ற விதமும் சிறப்பாக உள்ளது..பகிர்வுக்கு நன்றி த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. நோபல் பரிசு பேரும் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    அவர்கள் இருவரை பற்றிய செய்திகளை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள அய்யா,

    ஆஸ்லோவில் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தியையும், மலாலா யூசுஃப்சாயி இருவரைப் பற்றியும் .... இவர்களுக்கு நோபல் பரிசை ஆல்ஃப்ரெட் நோபல் தன் சொந்தப் பணத்தைச் செலவிட்டு பரிசுத் தொகையை அவரது நினைவில் வழங்கி வருகின்ற செய்திகளுடன் பல நல்ல தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மனித நேயம் எப்போதும் மனிதனை வாழவைக்கும் .மதங்கள் மட்டுமே மனிதனை சாகடிக்கும்.இவர்கள் இருவருமே மனிதம் போற்றியதால் உலகில் எல்லோராலும் போற்றப்படுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  9. இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்
    போற்றுவோம்
    பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
  10. இருவரும் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்... வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  11. #எல்லாக் காலகட்டங்களிலும் மனித நன்மைக்கும் மனித உரிமைகளுக்காகவும் போராடும் சத்தியார்த்தி மலாலா போன்றவர்கள் தோன்றி நன்மையின் பால் எல்லோரையும் ஈர்க்கத்தான் செய்வார்கள்.#
    உண்மையான வரிகள் !
    த ம 11

    பதிலளிநீக்கு
  12. கைலாஷ் சத்யார்த்தி! மலாலா இருவருக்கும் வாழ்த்துக்கள்! சிறப்பான தகவல்பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலா யூசுஃப்ஸாய் -
    இவர்களைப் பாராட்டுவதும் வாழ்த்துவதும் ஒவ்வொருவரின் கடமை!..

    இருவரை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  14. நோபல் பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்!
    தங்கள் பதிவை என் டாஷ் போர்டில் காண்பிக்காதமையால்
    வந்து பார்த்துக் கருத்திடத் தாமதமாகியது சகோதரரே!..

    அருமையான தகவல்கள்! வந்து பார்த்தமையால் தெரிந்து கொண்டேன்!
    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி , இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. விரிவான செய்தி தந்த தங்களுக்கும் நோபல் பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. நோபல் பரிசு பேரும் இருவருக்கும் எமது வாழ்த்துக்கள். மனிதம் இன்னும் உயிப்புடன்தான் இருக்கின்றது இவர்களைப் போன்றவர்களைப் பார்க்கும்போது.. தரமான பதிவுகளை இடும் இரு தில்லை அகத்தாரும் அவர்களுக்கு இணையாணவர்களாக வளர வாழ்த்துகிறேன்.

    என்னோடு சண்டை போட்டாலும் நல்லவ விசயங்களை பாராட்டுவது கில்லர்ஜியின் இயல்பு இதற்காகவே தமிழ் மணம் 10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹாஹஹ் என்ன நண்பா! உங்களுடன் சண்டையா....
      மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  18. சத்யார்த்தியைப் பற்றி இவ்வளவு விளக்கமாக இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. இருவரும் பரிசுக்குத் தகுதி ஆனவர்களே.

    பதிலளிநீக்கு
  20. நண்பர் துளசிதரன் அவர்களுக்கு,

    அருமையான செய்தியை அனைவரும் அறியும் வண்ணம் உங்கள் கூர்மையான உளியில் செதுக்கிதந்த சிறப்பான பதிவு.

    நோபெல் பரிசுபெற்ற இருவருக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    உங்களுக்கென் சிறப்பு வாழ்த்துக்கள்.

    நட்புடன்

    கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு! உங்கள் உளியை விடவா!?

      நீக்கு
  21. இந்த பதிவை உங்ககிட்ட இருந்து எதிர்பார்த்தேன். வழக்கம் போல அருமை சகாஸ்!! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  22. அருமையான தொகுப்பு தோழர் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. அருமையான பதிவு சகோதரரே.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இருவருக்கும் எனது வாழ்த்துகள்......

    த.ம. +1

    பதிலளிநீக்கு