திங்கள், 1 டிசம்பர், 2014

பாடல்கள் பலவிதம்.......!! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!


 “என்னடா இது ஒரே மாதிரியான, கனமான பதிவுகளாகப் போகின்றதே என்று எண்ணி, இன்னும் ஒரு பதிவு கல்வி பற்றியும், உளவியல் சார்ந்த ஒரு பதிவும், கொஞ்சம் கனமான, தீவிரமான பதிவுகளாகக் காத்திருக்க, ஒரு சிறிய விளம்பர இடைவெளி கொடுப்பது போல், அந்த இரு கனமான பதிவுகள் கொடுப்பதற்கு முன்,  அதுவும் இதுவரை கொடுக்காத ஒரு தலைப்பில் கொடுக்கலாமே என்றுதான் இந்தப் பதிவு. மட்டுமல்ல, நண்பர் ஸ்ரீராம், தொடர்ச்சியாகக் கல்வி பற்றிய பதிவுகளாக இருக்கின்றதே என்று பின்னூட்டத்தில்  சொல்லவும், பற்றிக் கொண்டுவிட்டது கனல். இதோ, கொஞ்சம் ரசியுங்களேன் நீங்களும் எங்களுடன்.

மறந்து போன பாடல்கள். அவ்வளவாக இப்போதும் பேசப்படாத பழைய பாடல்கள்.  ஆனால், இந்த இரு பாடல்களையும், ஜாம்பவான் எம் எஸ் வி அவர்களின் (அது சரி எதனால் ஜாம்பவான் என்று சொல்கின்றோம். யாராவது விளக்கம் ப்ளீஸ்) அருமையான பாடல்கள் பட்டியலில் கோர்க்கலாம்.  ஒரு சிலருக்கு இதில் கருத்து வேறுபாடு இருக்கலாம்.  ஆனால், எங்களைப் பொருத்தவரை மேலே சொல்லப்பட்ட இரண்டாவது வரி. 

இந்தப் பாடல்.  எம் எஸ் வி அவர்களுக்கு என்ன ஒரு மேற்கத்திய சங்கீத ஞானம்! என்று  வியக்க வைத்தது. அந்தக் காலத்திலேயே! ஆங்கில வரிகளை எழுதியவர் ராண்டார் கை.  தமிழ் வரிகளை எழுதியவர் கண்ணதாசன்.  படம் தவபுதல்வன்.  அருமையான பாடல். பெண் குரல்  எல் ஆர் ஈஸ்வரி. ஆண் குரல் பாடகர் அபிஜித் சிங்கா,  என்று சரியாகத் தெரியவில்லை.


இந்தப் பாடல் “அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ” பாடியவரையும் பலருக்குத் தெரியாது. தெரிந்திருந்தாலும் மறந்திருப்பார்கள். ஏனென்றால் அவர் அவ்வளவாகப் பிரபலமில்லை. ஆனால், மிகவும் அருமையான பாடகர்.  ஒரு சின்ன க்ளூ தருகின்றோம். இந்தப் பாடகர் மிகவும் பிரபலமாக இருந்த நகைச்சுவை நடிகர் பாலையா அவர்களின் மகன்.  இவர் எம் எஸ் வி அவர்களின் இசைக் குழுவில் கிட்டார் வாசித்தவர்.  நன்றாக மிமிக்ரியும் செய்வார். என்ன அருமையாகப் பாடியுள்ளார். அதற்கு நாகேஷின் அருமையான நகைச்சுவையான நடிப்பும் இந்தப் பாடலுக்கு அழகு சேர்த்து நல்ல ஒரு காட்சியாக விரிகின்றது.  இந்தப் பாடல் இடம்பெற்ற படம் “வீட்டுக்கு வீடு”. பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். 1970



மிதுனம்.  மலையாளப் படம் அல்ல.  இது 2012ல் வெளிவந்தத் தெலுங்குப் படம். மிதுனம் என்றால் ஜோடி என்று தெலுங்கில் அர்த்தமாம். ஸ்ரீ ரமணா என்பவர் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமாம். அருமையான படம். குழந்தைகள் எல்லோரும் அயல் நாட்டில் இருக்க, வயதான காலத்தில் பாதுகாப்பற்றத் தனிமையை நினைத்து நொந்து கொள்ளாமல், வாழ்க்கையை ரசித்து, நுகர்ந்து, ஒவ்வொரு நொடியையும் அனுபவித்துக் காதலுடன் வாழ்க்கையை வாழும் ஒரு வயதான ஜோடியைப் பற்றிய படம். அதிலிருந்து இந்தப் பாடலைப் பாருங்கள்.  நாங்கள் மிகவும் ரசித்தப் பாடல், காட்சி. ப்ருந்தாவனமும் நந்தக் குமாரனும் என்ற பாடலின் மெட்டில் அப்படியே அமைந்துள்ள பாடல். நீங்களும் இதைப் பார்த்து ரசிப்பீர்கள் என்று நினைக்கின்றோம். இந்தப் பாடலைப் பார்த்த போது, நண்பர் ஸ்ரீராம் நினைவுக்கு வந்ததை மறுக்க முடியாது. திங்கட் கிழமை தோறும் சமையல் குறிப்பு ஒன்றை அனுபவித்து எழுதுகின்றார்., சிறுவயதில் அம்மாவிற்கு சமையலில் உதவி பல புரிந்து, தானும் செய்து களித்திருக்கின்றார். தோசைப் புராணம் தொடர் பதிவு எழுதியதை மறுக்க முடியுமா?! எனவே நண்பர் ஸ்ரீராம் இந்தப் பாடலைக் கண்டிப்பாக ரசிப்பார் என்ற நம்பிக்கையில் இந்தப் பாடலை அவருக்காகத் தருகின்றோம். உங்களுக்காகவும்தான்.  ரசியுங்களேன்.  அந்த வயதான தம்பதிகளின் காதல் கெமிஸ்ட்ரியையும்!


இந்தப் பதிவில் இந்த மூன்று பாடல்களுடன் நிறுத்திக் கொள்கின்றோம். மீண்டும் இது போன்ற பதிவுகளுடன் வருகின்றோம் அவ்வப்போது, விளம்பர இடைவேளை போன்று.

பாடல்கள் : யூட்யூப்

47 கருத்துகள்:

  1. கடைசி இரண்டு காணொளிகள் தான் காணக் கிடைத்தது. இரண்டுமே அருமை.

    முதலாவது காணொளி இணைத்ததில் ஏதோ பிரச்சனை போல.

    எஸ்.பி.பி நடிப்பிலும் அசத்தி இருக்கிறார்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட் ஜி. பாடல்களை ரசித்ததற்கு. முதல் பாடல் எங்கள் வலைத்தளத்தில் வந்ததே. அதனால்தான் பதிவை வெளியிட்டு செக் செய்தோம். மற்றவர்களுக்கும் கிடைத்ததாகத்தான் தெரிகின்றது. எப்படி அப்படி ஆனது என்று தெரியவில்லையே!

      ஆம் மிதுனம் ரொம்ப அருமையான படம். எஸ்பிபி சிறந்த நடிப்பு!

      நீக்கு
  2. முதல் இரண்டு பாடல்களும் எனக்கும்
    பிடித்த பாடல்களே
    மூன்றாவது பாடலை இன்றுதான் பார்க்கிறேன்
    கேட்கிறேன்
    கேட்ட ராகத்தில் இருந்தாலும் நீங்கள்
    குறிப்பிட்டிருப்பதைப் போல
    காட்சி அமைப்பு அருமை
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார். ரசித்ததற்கு. மூன்றாவது பாடல் நாங்களும் சமீபத்தில்தான் பார்த்தோம். மிகௌம் பிடித்தது. அத்னால்தான் பகிர்தல். மிக்க நன்றி

      நீக்கு
  3. அருமையான மூன்று காணொளிகளைக் கண்டு மகிழ்ச்சி..
    மனமார்ந்த பாராட்டுகள்!..
    வாழ்க நலமுடன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தாங்கள் காணொளிகளை ரசித்ததற்கு! மிக்க நன்றி!

      நீக்கு
  4. முதல் காணொளியில் வரும் வசனமான..
    \\எனக்குத் தெரிஞ்சு ஆர்ட்டிஸ்ட்ட கல்யாணம் செய்தவங்க யாரும் நிம்மதியாக இல்லை\\
    என்ற வசனத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ஏன் ? தானைத்தலைவன், தங்கத்தமிழன் சுந்தர். C இல்லையா ? 80தே எமது கேள்வி.

    கடைசி பாடலான...
    \\ஆவக்காய மன அந்தரிதி கோங் கூவ பச்சடி மனதேலே எந்துகு பிட்சா லிந்தகு பர்கர்\\
    மிக மிக மிக ரசித்தேன் தேன் தேன்......
    நன்றி

    அதுசரி என்ன ? இப்படி இறங்கிட்டீங்க........ இருந்தாலும் நல்லாத்தான் இருக்குது....

    பதிவர்கள் பலவிதம் அதில் தில்லை அகத்தார் ஒரு விதம்.

    த,ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! உங்க கண்டிப்பை அந்த வசனகர்த்தா, இயக்குனர்களிடம் தெரிவிக்க வேண்டும்...ஹஹ்ஹஹஹ்...நாங்க என்னப்பா சென்ஞ்சோம்....ஆமாம் சுந்தர் சி மட்டுமா இன்னும் பலர் உள்ளனர்.

      ஆவக்காய் ...அருமையான பாடல், அந்தப் படமும் மிகவும் அருமையான படம் முடிந்தால் பாருங்கள்! இனியுமிது போன்ற ஒரு பதிவு அவ்வப்போது தொடர எண்ணம் உள்ளது. பார்ப்போம்...

      "ஒரு விதம்" நாங்க?!! அச்சச்சோ.....ஹஹஹ
      .மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  5. 2nd பாடல் பாடியவர் ஜூனியர் பாலைய்யா ?
    மூன்றும் அருமை ..எஸ்பிபி லக்ஷ்மி அம்மா அவர்களின் பாட்டு செம கலக்கல் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! சகோதரி! பெயர் சாய்பாபா. அவர்தான் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஜூனியர் பாலையாவா என்று தெரியவில்லை. சகோதரர் என்றுதான் நினைக்கின்றோம். ..ஆம் அந்தப் பாடல் மிகுவ்ம் அருமை. மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  6. அந்த பக்கம் வாழ்ந்தவள் ரோமியோ பாடலை பாடியவர் பெயர் சாய்ராம் தானே ?
    த ம 4

    பதிலளிநீக்கு
  7. காணொளிகள்

    அருமை. அருமை. அருமை.

    பதிலளிநீக்கு
  8. பாடல்கள் பலவிதம்.......!! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!

    இதோ, கொஞ்சம் ரசியுங்களேன் நீங்களும் எங்களுடன் என்று தான் நீங்களும் சொன்னீர்கள்!
    நெஞ்சம் நிறைய நிறைய... குறைவில்லாமல் ரசித்தோம்! மனம் மகிழ்ந்தோம்!
    கருத்தும் காணொளியும் அற்புதம்! அருமை! படைத்தவருக்கு பெருமை சேர்க்கும்.
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நன்றி நண்பரே! தங்கள் ரசனைக்கும் கருத்திற்கும்!!!!!

      நீக்கு
  9. வித்தியாசமான ஒரு பதிவாக இருக்கிறதே. சூப்பர்.
    எனக்கும் கண்ணதாசன்,எம்.எஸ்.வி இருவரும் இணைந்து கொடுத்த பாடல்கள் மிகவும் பிடிக்கும். பாடல் வரிகளும் அர்த்தமுள்ள வரிகளாகவும், இசையும் அதிக இரைச்சல் இல்லாமல் மென்மையாகவும், பாடலையும் இசையையும் சேர்ந்து ரசிக்கும்படியாக இருக்கும்.
    அவ்வப்போது இதுமாதிரியான பதிவுகளை எழுதுங்கள் சகோஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க ந்னறி சொக்கன் நண்பர்! எம் எஸ் வி, கண்ணதாசன் ஆம் மிகவும் அருமையான காம்பினேஷன். மிக்க நன்றி இனியும் தொடர எண்ணம்தான் அவ்வப்போது.

      நீக்கு
    2. மிக்க ந்னறி சொக்கன் நண்பர்! எம் எஸ் வி, கண்ணதாசன் ஆம் மிகவும் அருமையான காம்பினேஷன். மிக்க நன்றி இனியும் தொடர எண்ணம்தான் அவ்வப்போது.

      நீக்கு
  10. நான் அதிகம் கேட்டிராத பாடல்கள். இரண்டாம் காணொளியில் watch this video on you tube.Playback on other websites blocked என்று வருகிறது. ஒருமாறுதலான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார். தங்கள் கருத்திற்கு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காணொளி பிரச்சினையாகி இருக்கின்றது போலும். வெங்கட் ஜிக்கு முதல் காணொளி. தங்களுக்கு இரண்டாவது. எங்களுக்கு மூன்றுமே வந்தது. மற்றவர்கள் யாரும் அதைப் பற்றிச் சொல்லவும் இல்லை. எங்கு தவறுகின்றது எப்படித் தவறுகின்றது என்று புரியாத புதிராகவே இருக்கின்றது.

      நீக்கு
  11. பகிர்வுக்கு நன்றி! இணையம் மெதுவாக இருப்பதால் பிறிதொரு சமயம் பாடல்களை ரசிக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! எப்போது தங்களுக்கு நேரமும், இணையமும் கிடைக்கின்றதோ பாருங்கள்.

      நீக்கு
  12. 3வது பாடலை கண்டும், கேட்டும் ரசித்தேன். முதல் இரண்டும் ஏனோ வரவில்லை.
    மிதுனம் படம் சூப்பர் சார். அதை பார்த்து ரசித்து இருக்கிறோம். மீண்டும் இப்போது பார்த்து ரசித்தேன். தேன் மழை அவ்வப்போது பெய்யும் என்று இருக்கிறீர்கள். பொழியட்டும். நனைய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தாங்கள் ரசித்ததற்கு. ஏனென்று தெரியவில்லை ஒரு சிலருக்கு முதல் காணொளி வரவில்லை, சிலருக்கு இரண்டாவது வரவில்லை....

      மீண்டும் வருவோம் தேன் மழையுடன்....

      நீக்கு
  13. அன்புள்ள அய்யா,

    பாடல்கள் பலவிதம்.......!! ஒவ்வொன்றும் ஒருவிதம்!! எம் எஸ் வி அவர்களின் மேற்கத்திய பாடலைப் பார்த்து இன்புற்றேன். படக் காட்சிகளைக் கண்டு களித்தேன்.... பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. தாமதத்திற்கு வருந்துகிறேன் ஆசானே!
    பாடல்கள் உண்மையில் நம்மை பழைய உலகத்திற்கு அதன் வாசனைக்கு இழுத்துச் சென்று விடுகிறதுதான்!
    பதிவு காணொளிக் காட்சிகளுடன் அருமை!
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஆசானே! தாங்கள் ரசித்தமைக்கு! இன்னும் ப்ல பழைய வாசனைகள் இருக்கின்றன. வருகின்றோம்...

      நீக்கு
  15. அன்பிற்கினிய நண்பர்களே,

    பதிவினை படித்தேன் பார்த்தேன், ரசித்தேன். நடிகர் பாலைய்யாவின் மகன் பற்றிய செய்தி புதியது.

    முதல் இரண்டுபாடல்களை கேட்டிருக்கின்றேன், மூன்றாவது பாட்டை உங்கள் பதிவின்மூலமே அறிந்துகொண்டேன்.

    பாடல் காட்சிகளை பார்க்கும்போது வாயில் எச்சை ஊறியது, இச்சு கொட்டவைத்த பதிவு.

    வாழ்த்துக்கள்.

    இருவரும் சௌக்கியமா?

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே! பயணத்தில் இருந்ததால் தங்களைத் தொடர்பு கொள்ள முடியய்வில்லை. தாங்கள் பாடல்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி! இருவரும் சௌக்கியமே! தாங்களும் சௌக்கியம்தானே!?

      நீக்கு
    2. அன்பிற்கினிய நண்பர்களே,

      ஆம் சுகமே.
      தங்களின் பார்வையும் பதிவுகளும் அதற்கான ஆய்வுகளும் எம்மை அதிர வைக்கின்றன,
      பயணங்கள் தொடரட்டும் நல்ல பதிவுகளும் தொடரட்டும், தொடர்பும் தொடரட்டும்.
      வாழ்த்துக்கள்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  16. நல்ல முயற்சி... அவ்வப்போது இப்படி சிரமபரிகாரம் செய்வதும் மனதுக்கும் புத்திக்கும் தேவைதான் !

    முத்தான மூன்று பாடல்களை " காணொளியுடன் " கொடுத்து கவர்ந்து விட்டீர்கள் !

    " பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை ! " என பாட தோன்றுகிறது !

    ( எனது வலைப்பூவில் எனது நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்ததற்கு நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் ஈடாகாது. முடிந்தால் என் வலைப்பூவின் பக்கம் வாருங்களேன்... )

    நன்றியுடன்
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ரசித்தமைக்கு! ஆம் புதியபாடல்களில் ஒரு சில தான் நன்றாக அமைந்துள்ளன.

      தங்கள் வலைப் பூவிற்கு வருகின்றோம். பயணத்தில் இருந்ததால் வர இயலவில்லை. இனி தொடர்கின்றோம்,

      நீக்கு
  17. 1. கோபமா... எனக்கா....

    அதெல்லாம் ஒன்றுமில்லை. சாதாரணமாக கூகிள் ப்ளஸ்ஸில் உங்கள் பதிவின் பகிர்வு கண்டு உடனே வருவேன். சமீபத்தில் பார்த்த நினைவு இல்லை. ஈமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் தந்திருந்தேன். ஏனோ அதிலும் வரவில்லை. மேலும் தந்தை உடல் நலமின்மை காரணமாக மதுரை சென்று வந்தேன்.

    2. ஜாம்பவான் ராமாயணக் காலத்திலும் மகாபாரதக் காலத்திலும் வாழ்ந்தவர். அனுமானுக்கே கடலைத் தாண்ட நம்பிக்கை அளித்தவர். கிருஷ்ணனுடன் போரிட்டவர்.

    3. தவப்புதல்வன் பாடலைப் பாடிய பாடகர் அஜித்சிங். பாடலின் நடுவே அவரே சொல்வார்.

    4. 'அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ' பாடல் நாகேஷுக்காகவே எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் பாடலைப் பாடியவர் சாய்பாபா. இவர் திக்குத் தெரியாத காட்டில் படத்தில் கூட ஒரு பாடலில் குரல் கொடுத்திருந்தார். சாய்பாபா பாலையா மகன் என்று தெரியும். இது சம்பந்தமாக பேஸ்புக்கில் நானும் பால கணேஷும் நீண்ட உரையாடல் நிகழ்த்தி இருக்கிறோம்!

    5. மிதுனம் படப்பாடலை நீங்கள் பகிர்ந்திருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். யதேச்சையாக எனக்கு இரண்டு நாட்களுக்குமுன் வாட்சப்பில் வந்தது இந்தப் பாடல். ரசித்து பேஸ்புக்கில் நேற்றுதான் பகிர்ந்திருந்தேன். பிருந்தாவனமும் நந்தகுமாரனும் மெட்டில், கல்யாண சமையல் சாதம் காட்சியமைப்பில் பாடல். மிகவும் ரசித்தேன்.

    என்னைக் குறிப்பிட்டு வெளிவந்திருக்கும் இந்தப் பதிவை நான் மிஸ் செய்திருக்கிறேன். என்னைக் குறிப்பிட்டதற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு, வராமல் இருந்ததற்கு என் கவனமின்மைதான் காரணம். மறுபடி ஈமெயில் சப்ஸ்க்ரிப்ஷனைப் புதுப்பிக்கிறேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. ஜூனியர் பாலையாவும் சாய்பாபாவும் சகோதரர்கள். பாலையாவின் மகள் கூட ஹீரோயினாக ஏதோ ஒரு படத்தில் நடித்திருக்கிறார். பெயர் நினைவில்லை.

    பதிலளிநீக்கு
  19. நண்பர் ஸ்ரீ ராம்!

    ஹப்பா! சமாதானம். எப்படி +ல் வராஅமல் போனது? ஈமெயில் ஸ்ப்ஸ்க்ரிப்ஷன் ஆக்டிவேட் ஆகி உள்ளதா என்ன?

    ஜாம்பவான் விளக்கத்திற்கு நன்றி!

    அஜிச் சிங்க் ஆம் பாடலில் தெய்ந்தது..பின்னர்....நன்றி!

    நாகேஷ் அருமையாகச் செய்திருக்கிறார்...அவருக்காகத்தான்....முகனூலில் பார்க்காமல் விடுபட்டுவிட்டது....

    மிக்க நன்றி மிக்க நன்றி! பரவாயில்லை...லேட்டாக வந்து லேட்டஸ்டாக கமென்ட்!

    ஆம் ஜூனியர் பாலையாவும் சாய்பாபாவும் சகோதரர்கள் என்பதையும் அறிந்தோம்....மகள்...ஹீரோயின் புது தகவல்.....மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு