வெள்ளி, 26 செப்டம்பர், 2014

வாழ்த்துக்கள் கீது,....ஆஸ்கார் வெற்றிவாகைச் சூட வாழ்த்துக்கள்

Liar's Dice is a 2013 Hindi, road drama film, written and directed by Geetu Mohandas. The film stars Geetanjali Thapa and Nawazuddin Siddiqui in lead roles.


      கீது மோகன்தாஸின் “லையர்ஸ் டைஸ்” (Liar’s Dice), “மேரி கோம் உள்ளிட்ட 29 இந்தியத் திரைப்படங்களைப் பின் தள்ளி, இம்முறை இந்தியாவிலிருந்து, பிறநாடுகளுக்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருது பெற போட்டியிடும் திரைப் படங்களுடன் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.  கீது மோகன் தாஸ் இதற்கு முன் இயக்கிய குறும்படங்கள் அவரது திறமையை திரை உலகிற்கு அடையாளம் காட்டியிருக்கிறது. என்றாலும் இது அவர் இயக்கிய முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம், இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றதும், அதில் ஒன்று, சிறந்த நடிகைக்கான விருது பெற்ற இப்படத்தின் கதா நாயகியான கீதாஞ்சலி தாப்பாவுக்கும், மற்றொன்று சிறந்த ஒளிப்பதிவாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீதுவின் கணவரான ராஜீவ் ரவிக்கும் கிடைக்கப் பெற்றது இப்படத்தின் மற்றொரு சிறப்பு.



      இந்திய திபெத் எல்லைப் பகுதியில் வாழும் பழங்குடிப் பெண், தன் மகளுடன் தன் கணவனைத் தேடிச் செல்வதுதான் கதை.  இடையே அப்பெண் சந்திக்கும் ஒரு ராணுவ வீரனும் இப்படத்தின் ஒரு முக்கியக் கதாபாத்திரமே.  அவர்களது பயணத்தினிடையே நிகழும் சம்பவங்கள் தான் இப்படத்திற்கு மெருகேற்றுகிறது. பிறந்த மண்ணை விட்டு, வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் மனிதர்களையும், அவர்களுக்கு இரையாகும் பெண்களையும் பற்றிய மனதைத் தொடும் கதையை, சிறுவயதிலேயே திரை உலகிற்கு குழந்தை நட்சத்திரமாய் வந்து, பின் கதா நாயகியாய் வளர்ந்து, அதன் பின் இயக்குநராகவும் மாறிய கீது மோகன் தாஸ் நல்ல ஒரு திரைப்படமாக்கி எல்லோரது பாராட்டையும் பெற்றிருக்கிறார்.  இதற்கு முன் மூன்று முறை “லகான்”, மதர் இண்டியா”, “சலாம் பாம்பே” எனும் படங்கள் வெளிநாட்டுட் திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருது பெற போட்டியின் இறுதிக் கட்டம் வரைதான் சென்றிருக்கின்றன.  இதுவரை இந்தியத் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது ஒரு எட்டாக் கனிதான்.  ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட கீது மோஹன் தாசின் “லயர்ஸ் டைஸ்” இம்முறை இறுதிக் கட்டத்தையும் தாண்டி விருது பெற நாம் எல்லோரும் வாழ்த்துவோம்.  

38 கருத்துகள்:

  1. கீது மோகன்தாசின் படம் ஆஸ்கார் வெல்ல நிறைய சான்ஸ் கீதுப்பா ,வாழ்த்துகள்!
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்புவோம்! கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்குதான்! பார்ப்போம்! மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  2. கண்டிப்பாக வாழ்த்தவேண்டும் நண்பர்களே... (அப்பாடா இப்பத்தான் தப்பிச்சேன் இனிமே என்னை கில்லர் அறையில போடச்சொல்ல முடியாதுல எப்பூடி?)வாழ்த்துவோம் ஞானி ஸ்ரீபூவு ஆசியோடு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா! இல்லை இல்லை கில்லர் அறை இன்னும் திறந்து தான் இருக்கு!!! வலைச்சரம் பக்கம் வரலையே இன்னும்! ஹேய் சும்மாப்பா...வாங்க உங்களுக்கு எப்ப நேரம் இருக்கோ அப்ப வாங்க! நன்றி ஸ்ரீ பூவின் ஆசிகளுக்கு....கீதுவுக்கு அனுப்பிவிட்டால் போச்சு! மிக்க நன்றி கில்லர் ஜி!

      நீக்கு
  3. இதுவரை இந்தியத் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது ஒரு எட்டாக் கனிதான். ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட கீது மோஹன் தாசின் “லயர்ஸ் டைஸ்” இம்முறை இறுதிக் கட்டத்தையும் தாண்டி விருது பெற இந்தியன் என்ற முறையில் துளசி அய்யாவின் கருத்தோடு கலந்து நானும் வாழ்த்துகிறேன். கீது மோகன்தாஸின் “லையர்ஸ் டைஸ்” ஆஸ்கார் விருதினை அள்ளி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
    புதுவை வேலு (குழலின்னிசை.BLOGSPOT.COM)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! நம் வாழ்த்துகள் எல்லாம் சேர்ந்து அவருக்குக் கிடைக்கச் செய்யட்டும்!

      மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  4. வணக்கம் !

    எங்கள் வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் சகோதரா ¨!

    பதிலளிநீக்கு
  5. விருது கிடைக்க வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஒரு திரைப்படத்திற்கு விருதும் அங்கீகாரமும் உலக அளவில் கிடைப்பது பெருமை தானே! வாழ்த்துவோம்!

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு

  6. என்னைப் பொறுத்தவரை தேசிய விருது தான் இந்தியாவின் ஆஸ்கார் விருது,ஆனால் ஆஸ்கார் குறித்து ஒரு எதிர்ப்பார்ப்பு தேவையில்லாத ஒன்று, ஏதாவது ஒரு படத்திற்கு கொடுக்கப் போகு ஒரு பிரிவுக்காக நம்முடைய எத்தனையோ சிறந்த படங்களை நிராகரித்திருக்கிறார்கள்... ஆஸ்கார் கனவை விடுத்து தேசிய விருது கனவுடன் திரைப்படம் எடுத்தாலே போதுமானது என்பது என் எண்ணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்து சரிதான்! தம்பி! என்றாலும் உலக அரங்கில் ஒரு இந்திய சினிமா எனும் போது அது நல்ல விடயம் தானே! பரவாயில்லை இந்த சின்ன வயசிலும் இப்படி ஒரு தனித்தன்மையோடு சிந்திக்கும் திறமை உள்ள நீங்கள் கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள் தம்பி! எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களை பாராட்டுகின்றோம்!

      நீக்கு
    2. மிக்க நன்றி ஐயா...உங்கள் வாழ்த்துகளால்..

      நீக்கு
  7. எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாகத் தங்கள் வாழ்த்துக்களையும் இணைத்துக் கொண்டாகிவிட்டது!

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  8. கீது மோகன் தாஸின் படைப்பு ஆஸ்கர் வெல்ல எனது வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ்! நாம் எல்லோரும் வாழ்த்துவோம்!

      நீக்கு
  9. கீது 'என் பொம்மைக்குட்டி அம்மாவுக்கு " படத்தில் நடிச்ச குட்டி பாப்பா தானே!! அதற்கு பிறகு கமல் இயக்கி மாதவனோடு நளதமயந்தி என்றொரு படத்தில் நடித்தார் இல்லையா? நம்ம பொண்ணுக்கு ஆஸ்கார் கிடைச்சா சந்தோசம் தான்:)) ஆமா வலைச்சரம் பார்த்துக்கிட்டு இங்கயும் கலக்குற உங்களுக்கு என்ன award தரலாம்????!!!!!!

    பதிலளிநீக்கு
  10. அதே! அதே! பொம்முக்குட்டி அம்மாவில் அழகாக செய்திருப்பார்! நளதமயந்தியிலும் நன்றாக நடித்திருப்பார்....மிக நல்ல நடிகை! கேரள நன்னாட்டினர் எல்லோருமே நன்றாக நடிப்பவர்களோ?!!!

    சகோதரி அவார்டா!!?? அதெல்லாம் வேண்டாம் சகோதரி! ரெண்டு பேர் இருக்கறதுநாலதான் முடியுது!

    அதுலயும் ஒண்ணு சும்மா வெட்டிதானே! அதனாலதான் (இது கீதா சொன்னது...இப்படிச் சொன்னா நண்பருக்குப் பிடிக்காது).....

    எங்களுக்கு அவார்டை விட நம் அன்பர்களின் அன்பு போதும்! இப்போது கிடைத்திறுக்கும் அங்கீகாரமே பெரிய விஷயம்தான் சகோதரி!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ..
    விசில் ப்ளோயர் படத்தின் பாதிப்பாக இருக்கலாமோ என்கிற சந்தேகம்...
    அப்புறம் அந்தப் போஸ்டரில் ஒளி விளயாண்டிருக்கும் அழகு ஆக ஆகா ஆகாகா...
    அற்புதம் தோழர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஊகம் சரியாக இருக்கலாம்! அந்த போஸ்டர் ஆம்! அதனால் தான் கீதுவின் கணவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருது கிடைத்ததோ!!!! ஒளிப்பதிவிற்கு!! அருமையான சினிமேட்டோக்ராஃபி!

      இந்த அளவுக்கு ஆழமாக திரைப்படங்களை உலக அளவில் அலசும் உங்களை நினைக்கையில் மிகவும் பெருமையாக இருக்கின்றது நண்பரே!

      நீக்கு
  12. நிச்சயமாக நண்பரே! இன்றுதானே பணி முடிகின்றது! வாசிக்கின்றோம்!

    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  13. நானும் வாழ்த்துகளை இங்கே எழுதி வைக்கின்றேன். நன்றி

    பதிலளிநீக்கு
  14. நம் திரைப்படங்கள் நம்முடையது என்பதற்காக ஒதுக்கப்படாமலும்,
    தரத்தின் அடிப்டையில் பரிசீலிக்கப் படுவதாகவும் அமையட்டும்.
    பகிர்விறகு நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் !

    மகிழ்நிறை மங்கையிவள் மாவெற்றி காண
    நெகிழ்ந்துருகி வாழ்த்துமென் நெஞ்சு !

    என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்
    வாழட்டும் தலைமுறை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சீராளன் வாழ்த்துக்களையும் அழகிய கவிதை வடிவில் சொல்லியதற்கு!

      நீக்கு
  16. அது தானே பார்த்தேன் என்னோட வாழ்த்து மிஸ் இல்ல /இப்போ என்னோட வாழ்த்தையும்
    சேர்த்துக்குங்க லிஸ்டில ok வா கீது மோகன் ஆஸ்கார் விருது கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக தங்கள் வாழ்த்துக்களும் சேர்க்கப்படும்! மிக்க நன்றி இனிய சகோதரி!

      நீக்கு
  17. கீதுவை நானும் வாழ்த்துகிறேன். அவரைச் சிறப்பித்துப் பதிவு எழுதிய உங்களுக்கு என் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும்!

      நீக்கு
  18. தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும். இங்கு எங்கள் தமிழ் பள்ளியில் முழு ஆண்டு பரீட்சை முடிவடைந்து, அதற்கான மதிப்பீடுகளை வெவ்வேறு தளவமைப்புகளில் (Trophy,certificate,magazine) ஒருங்கிணைக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதால், சற்று வலைப்பக்கம் வர இயலவில்லை.

    ஒரு தென்னிந்திய பெண்மணிக்கு இந்த விருது கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவருக்கு விருது கிடைக்கும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால என்ன சொக்கன் நண்பரே! அடேயப்பா மிகச் சிறப்பான பணி நண்பரே!

      நம்புவோம்! வாழ்த்துவோம்! மிக்க நன்றி !

      நீக்கு
  19. நல்ல படங்கள் நன்கு ஓடி லாபம் ஈட்டித்தந்தால் அதுவும் பெரிய வெற்றிதானே OSKAR விருது குறித்து கருத்த்சொல்லும் தகுதி இல்லை எனக்கு. கமல ஹாசனிடம் கேட்கவேண்டும்......!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாபம் ஈட்டுவதும் வெற்றி! அதுவும் சரிதான் சார்! ஹாஹாஹா கமல் பதில் சொல்லுவாரா?!!

      நீக்கு