திங்கள், 22 செப்டம்பர், 2014

உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பொது உடைமை நிறுவனங்கள்


Image result for china president


      கடந்த புதனன்று, 17.09.2014, தூர்தர்ஷனில் செய்திகள் வாசித்தவர் சீனக் குடியரசுத் தலைவரான க்சி ஜின்பிங்கின் (Xi Jinping) பெயரைத் தவறுதலாக உச்சரித்து, விவாதத்திற்கு உள்ளானது எல்லோரும் அறிந்ததே.  தற்காலிகச் செய்தி வாசிப்பவரான அவரது வேலையும் இதனால் பறிபோனது.  க்சி என்று உச்சரிக்க வேண்டியச் சொல்லான xi  ஐ அவர் தவறுதலாக   XI ரோமன் எண் பதினொன்று என்று நினைத்து லெவன் ஜின்பிங்க் என உச்சரித்தது தான் பிரச்சினையாகிவிட்டது. செய்தி வாசித்தவர், இந்தியா வரவிருக்கும் சீனக் குடியரசுத் தலைவரைப் பற்றியும், அவரது பெயரைப் பற்றியும் அறியாது இருந்தது குற்றம்தான்.  அதனால்தான் அவர் பெயரை இப்படி “லெவன்” சின்பிங்க் என்று வாசிக்க வேண்டியதானது. 


இதுபோன்ற பொறுப்பான பதவி வகிப்பவர் இத்தகைய தவறிழைத்தது மன்னிக்க முடியாதக் குற்றம்தான். இதில் தண்டனை பெற்ற அவரை மட்டும் குற்றம் சொன்னால் போதுமா?  நன்றாகச், சுத்தமாகத் தெளிவாகச் செய்தி வாசிப்பவர்கள், தூர்தர்ஷனுக்கு எளிதாகக் கிடைப்பதில்லையாம்.  எனவே தற்காலிகமாகக் கிடைத்தவர்களை எடுக்க வேண்டிய சூழலாம்.  துர்தர்ஷனுக்கு செய்தி வாசிக்க நிரந்தரமான ஆட்கள் இல்லையாம்.  நூற்றுக்கணக்கானத் தனியார் சானல்கள் வந்ததும், அவர்களுடன் போட்டியிட முடியாமல் தூர்தர்ஷன் திணறுவது தெரிகிறது.


இதே போன்று முன்பு, ஹெச் எம் டி கைக்கடிகாரங்கள், ஒவ்வொரு இந்தியரின் கைகளிலும் அவர்களுக்கு நேரத்தைக் காட்டி பெருமை சேர்த்த காலமும் உண்டு.  டைட்டான் போன்ற கைக்கடிகாரக் கம்பெனிகள் வந்ததும் ஹெச் எம் டி கைக்கடிகாரங்கள் லிமிட்டெட் போன்ற பொதுவுடைமை நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. தனியார் கூரியர் சர்வீஸ் தொடங்கப்பட்டதும் இந்தியத் தபால் துறை சற்று ஆட்டம் கண்டது.  பொதுவுடைமை நிறுவனங்களான இவற்றை எல்லாம் நிலை நிறுத்த.  அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஏன் ஆவன செய்வதில்லை?  இது போல், வரும் நாட்களில் பொதுவுடைமையிலுள்ள நிறுவனங்கள் எவையெல்லாம் உயிரழக்கப் போகிறதோ தெரியவில்லை!  இறைவனுக்குத்தான் வெளிச்சம்!

படங்கள் : கூகுள்

43 கருத்துகள்:

  1. இதைப்போயி பெரிசா சொல்றீங்களே.... அரபிக்காரன் தமிழ்பேரை அதுவும் ஹிந்து பேரை வாசிப்பதை கேட்டீங்கன்னா ? நாள் முழுவதும் சிரிப்பீங்க...சாம்பில் சொல்றேன்
    வடிவேலு - வாடிவீலோ
    வரதராஜன் - வாராதா ராஜான்
    சரவணன் - சாராவாணான்
    இப்படித்தான் படிப்பான்....

    பதிலளிநீக்கு
  2. கில்லர் ஜி வாங்க! அது தெரிஞ்ச விஷயம்தானேங்க! அவங்க ஒருத்தருக்கும் நம்ம பேர் வாய்ல நுழஈயாது. ஆனா நாம் அப்படியில்லை! எப்படி ட்விஸ்ட் ஆர பேரைக்கூட வாசிச்சுருவோம்! அத விடுங்க...நம்மூர்ல நார்த் ல உள்ளவங்க சௌத் பேர ஒழுங்கா வாசிக்க மாட்டாங்க....இங்க டூர்தர்ஷன்ல பிரச்சினை ஆகுமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரபிக்காரன் வாசிக்கும் தமிழ்ப்பெயர்கள் நான் தமாஷுக்காக எழுதவில்லை 100%100 உண்மை.
      துளசிதரன் - துளாசி தாரான்
      சொக்கன் சுப்பிரமணியன் - சொக்கான் சுப்ராமாணிஅன்
      கரந்தை ஜெயக்குமார் - காரான்டை ஜியாகுமார்
      மது - மாத்து
      துரை செல்வராஜூ - துரை சில்வாராஜூ
      கில்லர்ஜி - கில்லேர்ஜீ
      பாலசுப்பிரணணியன் - பாலாசுப்ராமாணிஅன்
      கணபதி - ஜானாபாதி
      தனபாலன் - தானாபாலான்
      கருப்பையா - காருப்பாயா
      ஸ்ரீராம் - இஸ் ரீராம்
      ஜெயசீலன் - ஜியாசீலான்
      முஹம்மத் - முஹம்மத் - ( مـحمد)
      நிறைய இருக்கிறது வேண்டாம் ஹனுமார் வால், ஆங்கில A க்குாாாாாா இப்படி உச்சரிப்பார்கள்.
      கடைசியாக சரியாக சொல்லும் ஒருபெயர் இதோ..
      ராமா - ராமா (காரணம்) RAMA.

      நீக்கு
    2. ஹாஹாஹாஹ் கில்லர் ஜி! சூப்பர் போங்க! துளாசி தாரான் சரி!! அப்போ கீதா? ரொம்ப எளிதோ உச்சரிக்க! கீட்டா என்பார்கள் சரியா?!!!

      நீக்கு
    3. கீதா - ஜீடா
      நண்பரே ஆங்கில G யை ஜீம் என உச்சரிப்பார்கள் அதாவது J போல

      அதேபோல் 'வ' வை F போல உச்சரிப்பார்கள் அதாவது ஃபா நண்பர் துரை செல்வராஜூ அவர்கள் சொல்வது உண்மையே சில்ஃபா ராஜூ

      நீக்கு
    4. அடப்பாவிங்களா! கீதா பேரை ஜீம் பூம்பா ஆக்கிடுவாங்க போல....ஹாஹா...ஜீடா....

      நீக்கு
    5. Rama = ராமா என்றால் 'ரமா'வை எப்படி அழைப்பார்கள்?! சரி விடுங்கள், பாவம்!

      நீக்கு
    6. ஹாஹாஹாஹ்ஹா இது நாங்களும் யோசித்தது உண்டு! நண்பரே! கேரளத்தைப் பொருத்தவரை இதில் கஷ்டமில்லை...ராமா - Rama.....ரமா - rema....

      நீக்கு
  3. அட அநியாயமே... கில்லர்ஜி சொல்லியிருப்பதை நானும் வழிமொழிகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்! அது சரிதான் சார். பார்க்கப் போனா நாம்தான் சார் இந்த உலகத்துலேயே மத்த நாட்டு மக்களின் பெயரைக் கூடக் கஷ்டப்பட்டாவது கத்துக்கிட்டு உச்சரிக்கிறோம் சார். இங்க நடந்துருக்கறது கொஞ்சம் பாரபட்சம் தான்சார்!

      நீக்கு
    2. சரிதான் கொஞ்சம் என்று சொல்லியிருக்கக் கூடாதுதான்....

      நீக்கு
  4. தோழர் எந்தப் பொதுவுடைமை நிறுவனமும் காணமல் போக வேண்டிய அவசியமில்லை ..
    காரணம் அவற்றின் ஊழல் பெருசாளிகளானா உயர் அதிகாரிகள் தான்
    இவர்கள் தேச துரோகிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக உண்மையே ஆனா அந்த ஊழல் பெருச்சாளிகளான உயர் அதிகாரிகள் னிறுவனங்களையே தள்ளாட வைச்சுடறாங்களே தோழரே! அரசாங்கமும் கண்டுக்க மாட்டேங்குதே! 2 ஜி ஊழல் என்னாச்சு கடைசில?? ம்ம் என்னத்த சொல்ல...

      நீக்கு
  5. எனக்கென்னவோ இதில் செய்தியாளருக்கு அளிக்கப்பட்ட தண்டனை அதிகமாகத் தான் தெரிகிறது. ஏனெனில் நீங்களும் நானும் கூட முதன் முதலில் அந்த பெயரை அப்படித்தான் வாசித்திருப்போம்.இன்னொன்று இதற்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால், நம் பிரதமர் பூடான் நாடாளுமன்றத்தில் நேபாளம் என்று சொன்னாரே அதற்கு...??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக ஜெயசீலன்! புதுகை சீலன்! தாங்கள் மாணவர்தானா இன்னும்? இல்லை முடித்து விட்டீர்களா? இவ்வளவு சின்னப் புள்ளையா இருந்துகிட்டு என்னமா எழுதுறீங்கப்பா...சூப்பர் தம்பி! நாங்க உங்கள முதல பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆளுனு நினைச்சுட்டோம்! தங்கள் எழுத்துக்கள் வளரட்டும்! வாழ்த்துக்கள்! தம்பி!

      உங்க வலைத்தளத்த வலைச்சரத்துல கொடுத்துருக்கோம் இன்றைக்கு பார்த்தீர்களா?

      மிக்க நன்றி தம்பி! புதுக்கோட்டைன்னா நம்ம புதுக்கோட்டை ஆளுங்கள்ளாம் உங்க ஃப்ரெண்டுனு சொல்லுங்க.....

      நீக்கு
    2. மிக்க நன்றி ஐயா,நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன் , எனவே என்னை நீங்கள் ஜெயசீலன் என்றே தாராளமாக அழைக்கலாம். உங்கள் போன்றவர்களின் ஊக்கம் தான் ஐயா என்னையும் என் எழுத்தையும் மேலும் பட்டை தீட்டுகின்றன,

      வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா !! அங்கே பார்த்து பின்னூட்டமும் இட்டுவிட்டேன் ஐயா,

      நீக்கு
  6. செய்தி வாசிப்பாளருக்கு வழங்கப்பட்டது - ஒருதலைப் பட்சமான தண்டனை!..

    இந்தியா வரவிருக்கும் சீனக் குடியரசுத் தலைவரது பெயரை உச்சரிப்பது பற்றித் தெரிந்து கொண்டு வாசிப்பவர்களுக்கு பயிற்சி அளித்திருக்க வேண்டாமோ!?..

    மேலும் ஒன்று..

    திரு. கில்லர்ஜி அவர்கள் கூறியிருப்பது போல - நானும் இங்கே (குவைத்தில்)
    ஷில்பா ராஜ்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சரியே ஐயா! நிச்சயமாக பயிற்சி அளித்திருக்க வேண்டும்! ஒருவேளை இது போன்றெல்லாம் இல்லாததால் தான் தூர்தர்ஷன் ஆட்டம் காண்கின்றதோ என்னவோ?!

      ஹாஹஹஹஹ் தாங்கள் பெண் ஆகி விட்டீர்களா ஐயா!!!!! அர்த்த நாரீஸ்வரர்! ம்ம் அதுவும் பெரும் பாக்கியமே!!!! என்ன சொல்கின்றீர்கள் ஐயா!

      நீக்கு
    2. என்னத்தைச் சொல்றது!?.. எல்லாம் காலத்தின் கோலம்!..

      நீக்கு
  7. பொதுத் துறை நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு கடமையை விட உரிமையே அதிகம். மனசாட்சி சிறிதும் இல்லாமல் எட்டு மணிநேரத்தில் இரண்டு மூன்று மணிநேரம் கூட வேலை ஒழுங்காக நடக்காது. ஆனால் பணி நேரம் முடிந்தபின்பு ஓவர்டைம் செய்வார்கள். செய்யும் பணி நிரந்தர மானது அல்ல , என்றும் கத்தி கழுத்தின் மேல் தொங்கிக் கொண்டிருந்தால்மட்டுமே வேலை செய்யும் நம் மக்களின் கலாச்சாரம் பொதுத்துறை நிறுவனங்களின் சாபக் கேடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிகச் சரியே சார்! தங்கள் கருத்து 100% உண்மைதான் சார்! அதனால் தான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பொதுவுடைமை நிறுவனங்கள் காணாமல் போய்விடுகின்றன...நம் மக்களின் அட்டிட்யூடும் மாற வேண்டும் தான் சார்

      மிக்க நன்றி சார்! தங்கள் சீரிய கருத்திற்கு!

      நீக்கு
  8. உண்மை தான் துளசி சார். தனியார் துறை வந்த பிறகு, நிறைய பொதுவுடைமையிலுள்ள நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகத்தான் போயிற்று. அதற்கு மிக பெரிய சான்று தான் இந்திய தபால் துறை, "தந்தி" சேவையை நிறுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாலு போச்சு கத்தி வந்ததுனு சொல்ற மாதிரிதான் இது! பொதுவுடைமை போய் தனியார் வந்து கத்தியின் அடியில் தான் மக்கள் இருக்கின்றார்கள். மிகச் சரியே தந்தி நின்றே விட்டது...இப்போதுதான் மொபைல் வந்து விட்டதே உடனுக்குடன் செய்தி அனுப்ப.....

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  9. உங்கள் ஆதங்கம் சரி!பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டாமா! இல்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி புலவரே! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

      நீக்கு
  10. சிறந்த திறனாய்வுப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  11. வருத்தமான விஷயம்.
    மனிதன் தவறு செய்வது இயல்பு தானே...

    பெரிய தவறுகள் மறைக்கப்படும்...சிறிய தவறுகள் பெரிதாக்கப்படும்... !!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உண்மையே சகோதரி! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  12. உண்மைதான். அரசு நிறுவனங்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போவதும் இந்த கூரியர்காரர்கள் நினைத்த தொகையை வசூலிப்பதும் நடக்குது.மத்தியதர வர்க்க மனிதன் வாழ்வு சிக்கலாகிக்கொண்டே போகிறது. எங்கேயும் கை நிறையக் காசு இருந்தால்தான் வாழலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! சகோதரி! மிகவும் சரியே! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  13. பல நிறுவனங்களை மூடிக் கொண்டே இருக்கிறார்கள். தனியார் மயமாக்கல் ஒன்று தான் இந்தியாவிற்கு/தங்களுக்கு நல்லது என்று அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்! :(

    தூர்தர்ஷன் - சோகம்...... இன்னமும் 80-90 களில் இருந்த மாதிரியே இருக்கிறார்கள் - முன்னேற எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியார்மயமாக்கல்.....அரசியல்வாதிகளின் சுயநலம்தான் ! நீங்கள் சொல்லுவது சரியே! வெங்கட்ஜி!

      மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  14. ஆம் நண்பரே! பொது மக்களுக்கு நன்மை பயக்கும் பொது உடைமை நிறுவனங்கள் சரிவது மிகவும் சோகமானது...தனியார்மயமாக்கல் தாங்கள் சொல்லியிருப்பது போல சுயநலம் கருதியே.....தூர்தர்ஷன்...இன்னும் டொய்ய்ய்ய்ய்ங்க் என்றுதன் எப்படி முன்னேரும்? மக்கள்தான் பலி ஆடுகள்...

    மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  15. //பொதுவுடைமை நிறுவனங்களான இவற்றை எல்லாம் நிலை நிறுத்த அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஏன் ஆவன செய்வதில்லை?// - அட! இவற்றை ஆட்டம் காண வைக்கும்படிதான் அரசு ஊழியர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். தெரியாதா உங்களுக்கு?! அரசுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளையும், சேவைகளையும் வேண்டுமெனவே தரம் குறைத்து, சுவை குறைத்து, வேகம் குறைத்து அவற்றின் மீது மக்களுக்கு வெறுப்பு வரும்படி நடந்து கொள்ளத் திட்டமிட்டே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம், தனியார் நிறுவனங்கள் கொழுப்பதற்காக. இதற்கேற்பத்தான் சட்டங்களும், சலுகைகளும், ஆரசு ஆணைகளும் கூடப் பிறப்பிக்கப்படுகின்றன. நீங்கள் என்னவென்றால் இப்படிக் கேட்கிறீர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் என் கேள்வி சரியல்லதான் நண்பரே! மிக மிக உண்மையே நண்பரே! தனியார்மயமாக்கல் தானே அவர்களுக்கு நல்லது! சுயநலம்தானே விஞ்சி நிற்கின்றது!

      தங்கள் கருத்து மிக மிகச் சரி! நாமும் அவர்கலைத்தான் தேர்ந்தெடுக்கின்றோம்!

      மிக்க நன்றி தங்கள் ஆழமான கருத்திற்கு!!

      நீக்கு
  16. என் வலைப்பூவுக்கு நீங்கள் இங்கு இணைப்புக் கொடுத்திருப்பதை நான் இன்றுதான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி! மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு