திங்கள், 8 செப்டம்பர், 2014

“ஃபரா பேக்கர்! அன்று நான், இன்று நீ” – ஆன்ஃபிராங்க்

நாசி காம்ப்

                ஹிட்லரின் நாசி படையினர் கொன்று குவித்த லட்சக்கணக்கான யூதச் சகோதர, சகோதரிகளை நினைத்து வருந்தி எழுதப்படும் கட்டுரைகளையும், எடுக்கப்படும் படங்களையும் வாசிக்கவோ, காணவோ நேர்ந்தால் நம் எல்லோரது மனமும் இப்போதும் வருந்தத்தான் செய்கிறது.  அநீதிகள் எப்போதும் எதிர்க்கப்பட வேண்டியவையே.  அவ் எதிர்ப்புகள், அவ் அநீதியை ஒழிக்கும் அளவிற்கு திறனுடையதல்லாமற் போனாலும், அவை, அநீதி இழைப்பவர்கள் எதிர்க்கபடவேண்டியவர்கள் என்றும், அநீதி இழைக்கப்படுபவர்கள் காக்கப்பட வேண்டியவர்கள் என்றும் நம்மை உணரச் செய்பவை.  அப்படி அநீதி இழைக்கப்பட்டு எல்லோரது ஆதரவையும் பெற்றவர்களே அநீதி இழைக்கும் போது நாம் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போகிறோம்.  அது போலத்தான், காசாவில் நடந்து வரும் போராட்டமும், கொலைகளும்.  ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், அதில் பெரும்பான்மையானோர் பெண்களும், குழந்தைகளும், கொல்லப்படுவதைப் பார்க்கும் போது, ஹிட்லரின் நாசிப்படை யூதர்களுக்கு எதிராகச் செய்த அதே கொடுமையை, பாபத்தை இப்போது யூதர்களான இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனியர்களுக்கு எதிராகச் செய்கிறதே என்ற வருத்தம் வருகிறது.  இதைத்தான் “History repeats” என்று சொல்லுகின்றார்களோ?!

Annelies "Anne" Marie Frank  12 June 1929 – early March 1945) was a diarist and writer. She was one of the most discussed Jewishvictims of the Holocaust. Her wartime diary The Diary of a Young Girl has been the basis for several plays and films. 
The Diary of a Young Girl is a book of the writings from the Dutch language diary kept by Anne Frank while she was in hiding for two years with her family during the Nazi occupation of the Netherlands. 

      75 ஆண்டுகளுக்கு முன், ஜெர்மனியில் மரணத்திலிருந்துத் தப்ப முடியாமல் தவிக்கும் தன் இனத்தவரான யூத மக்களின் துயரைத் தன் டயரியில் எழுதி வைத்த ஆன்ஃபிராங்கின் டயரிக் குறிப்புகளை இவ்வுலகு அறிந்தது அச்சிறுமியின் மரணத்திற்குப் பிறகுதான். 

Farah Baker, A Gaza Teenager, Becomes Social Media Phenomenon By Tweeting About War
While Israel and Hamas take a step back from the weeks-long violence in Gaza, which has claimed more than a thousand lives, a Palestinian teenager has risen to prominence on Twitter for capturing the turmoil and fear around her Gaza neighborhood through her posts, which went viral last week.
“I am trying to tell the world about what I feel and what is happening where I live,” Baker told Reuters at her Gaza home. According to her, she has been “trying to make other people feel as if they are experiencing it, too.” In a recent interview with NBC News, Baker talked about her experience after she survived one of the heaviest nights of Israeli airstrikes.



ஆனால், இப்போது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள, குண்டுவீச்சைப் பற்றி எழுதுவது மட்டுமல்ல அவற்றையெல்லாம் படம் பிடித்து “ட்விட்டரில்”, அவற்றை, உலகிலுள்ள மக்கள் அனைவரும் கண்டு அதற்கு எதிராகக் குரல் கொடுக்க அவற்றிற்கான லிங்க் கொடுப்பதோ, ஃபரா பேக்கர் எனும் 16 வயதுச் சிறுமி.  அன்று ஆன்ஃப்ராங்க், இன்று ஃபரா பேக்கர்.  “இன்று இரவு நான் இறக்க நேரலாம்.  எனக்கு என் கண்ணீரை அடக்க முடியவில்லை” எனும் வரிகள் “ட்விட்டரில்”  வாசித்த மனிதாபிமானமுள்ள மனிதர்கள் தங்கள் கண்களிலிருந்து வழியும் நீரை அடக்க முடியாமல் வருந்தியிருப்பார்கள்.  


    காசா நகரில் அல்ஷிபா மருத்துவ மனைக்கு அருகில் தங்கியிருக்கும் ஃபரா பேக்கரின் தந்தை அம்மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிகிறார். வருடங்களுக்குப் பிறகு வெளியான அநீதியை அன்றும் அடக்க முடியவில்லை. தற்போது, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் உதவியால் உடனுக்குடன் அறிந்தாலும், அநீதியை இன்றும் அடக்க முடியவில்லை. அநீதியும், அக்கிரமமும் தலைவிரித்தாடிக் கொண்டுதான் இருக்கிறது.  இதற்கு ஒரு முடிவு வேண்டும்.  அது இலங்கையில், இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்தும், உலகெங்கிலுமுள்ள நாடுகளுக்கு அகதிகளாகப் போக வைத்தும், எஞ்சியோரை எப்படியெல்லாம் வருத்த முடியுமோ அப்படி வருந்தவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு சமாதான நடவைக்கை போல் அல்லாமல், ஒரு நல்ல சமாதான உடன்படிக்கையாக இருக்க வேண்டும்.  எல்லா உலக நாடுகளும் ஒன்றுகூடி, ஈடுபட்டு, அதற்குத் தீர்வு காணத் தயாராகவும் வேண்டும். அப்படி எடுக்கப்பட்டால் ஃபரா பேக்கர் போன்ற வருங்காலச் சிற்பிகாளான, எத்தனையோ இளம் வயதினரையும், குழந்தைகளையும் காப்பாற்றி ஒரு நல்ல நாடும், சமுதாயமும் உருவாக வழி வகுக்கப்படலாம்.  அப்படிப்பட்ட ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.    

படங்கள், காணொளி : இணையம், யூட்யூப்









27 கருத்துகள்:

  1. மனிதன் எதைநோக்கி பயணிக்கிறான் ? என்பது பலநேரங்களில் புரியவில்லை நண்பரே மரணத்தைப்பற்றி கவலையே இல்லை இவர்களுக்கு, இந்நிலை மாறுமா ? என்பது கேள்விக்குறியே... இதில் சில படங்களை தாங்கள் வெளியிட்டு இருக்க கூடாது என்பதே எமது கருத்து மனம் கணக்கிறது நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி கில்லர் ஜி நண்பரே! முதல் முதலா வந்து சுடச் சுட பின்னூட்டம் இட்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர் ஜி உங்கள் வேண்டுகோளுக்கிணங்க நாங்கள் அந்தச் சிறு குழந்தைகள் படங்களை எடுத்துவிட்டோம். ஆனால் பாருங்கள் கில்லர் ஜி...பாலஸ்தீன போர் பற்றி படங்கள் தேடினால் குழந்தைகள் தான் நிறைய படங்களில். தேடிப்பிட்த்து இப்போது மாற்றியுள்ளோம்.....மிக்க நன்றி ஜி!

      நீக்கு
    2. எனது கருத்துக்கு(ம்) மதிப்பு கொடுத்தமைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  3. படங்கள் மனதைக் கனக்கச் செய்கின்றன நண்பரே
    என்ன உலகம் இது
    மனிதன் அடுத்தவர்களின் கல்லறையின்மீது தன் சாதனைகளை எழுதப் போகிறானா,
    தம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கு! உலகம் மோசமாகி வரத்தான் செய்கின்றதோ?

      நீக்கு
  4. இந்தப் போராட்டங்கள் நாட்டுக்காகவா? உயிருக்காகவா...?

    என்னவோ போங்கள். படங்கள் நம் உயிரைக் குடிக்கிறது...
    த.ம. 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! படங்களைத் தேடிய போது பல படங்கள் மனதை என்னவோ செய்தது. நமது உலகின் பிறிதொரு பகுதியில் இது போன்ற போராட்டங்கள் நடக்கும் போது நாம் சொர்கத்தில் இருப்பது போலத்தான் உள்ளது.

      நீக்கு
  5. The diary of Anne Frank படித்த நினைவு. போரின் விளைவுகள் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அன்று யூதர்களுக்கு எதிராக. இன்று பழிக்குப் பழி . சொல்லாவிட்டாலும் அப்படித்தானே இருக்கிறது. அன்று முதல் இன்று வரை மனிதனை மனிதன் அடக்கி யாள்வதைக் குறைக்க முடியவில்லை. ஓரிடத்தில் போர் மூலம் அடக்கு முறைகள். இன்னோரிடத்தில் வேறு விதமாக. மனிதன் மாறவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழிக்கு பழிதான் அந்தக் காலத்திலிருந்தே ஏன் புராணக்கதைகளின் காலகட்டத்திலிருந்தே இன்று வரை தொடர்கின்றது! மனிதன் சுயநலவாதிதானே! மாறவில்லை! தங்கள் கருத்து மிகச் சரியே!

      நீக்கு
  6. மிகுந்த மனவேதனை தரும் பதிவு, எங்கு பார்த்தாலும் அவலங்களும் துயரச் செய்திகளும்
    தொடர்ந்த வண்ணமே முடிவின்றி ........ பிஞ்சுகளையுமா மகா பாதகர்கள். இதயம் வலுவிழந்து போகிறது ! நன்றி சகோ பதிவுக்கு ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரி! இந்த அவலங்களின் நடுவில் பின்ஞ்சுகள் இரையாவது மிகவும் கொடுமை!

      மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. இம்மாதிரி அவலங்களுக்கு ஒரு முடிவே வராதா?

    சில படங்களை பார்க்கும்போது மனது மிகவும் கனத்துப்போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிவு? யார் கையில்? உலகமே மனிதர்கள் எனும் சுயநலவாதிகள் நிறைந்திருகும் போது.....

      படங்கள் மிகவும் வேதனைபடுத்துகிறது!

      மிக்க நன்றி சொக்கன் சார்!

      நீக்கு
  9. உலகில் இந்த அவலங்கள் என்று தீரும் !:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களும் மிக அழகிய தமிழில் அவலங்கள் பற்றி கவிதைகள் எழுதி வருகின்றீர்கள் சகோதரி! ஆனால் விடைதான் நமக்குக் கிடைக்கவில்லை! அவலங்கள் தொடரத்தான் செய்கின்றன.

      நீக்கு
  10. என்று தீரும் இந்த அவலங்கள்.....

    மனிதனுக்கு ஆசை அதிகரித்து விட்டது, கூடவே மிருக குணமும்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். சுயநலவாதியாக இருக்கும் போது ஆசையும், மிருக குணமும் புகத்தானே செய்யும்! மிக்க நன்றி வெங்கட் ஜி!

      நீக்கு
  11. எப்ப தான் இந்த நிலை மாறுமோ?
    சிறந்த ஆய்வுப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலை மாறுவது என்பது மனிதன் கையில்தான்...அனால் அவன் சுயநலவாதியாக இருக்கும் போது?

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  12. மனிதம் பேசும் மாண்பான பதிவு
    வாழ்த்துக்கள் தோழர்

    பதிலளிநீக்கு
  13. எங்கோ யாருக்கோ என்றில்லாமல்,
    அழிக்கப்படுவது மனிதர்கள் அவர்களை அழிப்பதும் மனிதர்கள் என்ற பொதுமை நோக்கி உலகம் எப்போதுதான் போகுமோ?
    நெஞ்சம் நெகிழ்த்தியது உங்கள் பதிவு!
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மைச் சுற்றித்தான் இந்த அவலங்கள் உலகின் ஒரு பகுதியில் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் முடிவுதான் இல்லை...தொடர்கதையாகி உள்ளது...

      மிக்க நன்றி! ஐயா!

      நீக்கு
  14. காசா பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்று வெகுவாக எதிர்பார்த்தேன் சகாஸ். அதை எங்கோ குறிப்பிட்ட ஞாபகம்...........என் நம்பிக்கையை நீங்க ஈடு செய்துடீங்க . கண்ணீர் வரவழைக்கும் பதிவு. இதை இந்த கோணத்தில் எழுதியது சம்திங் கிரேட் சகாஸ்!!! இப்படிப்பட்ட வரலாறுகள் திரும்பாமலே இருக்கலாம்:((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாறு திரும்பிக் கொண்டேதான் இருக்கின்றது சகோதரி! பழிக்குப் பழி என்ற உணர்வு சுயநலவாதியான மனிதனின் உள்ளத்திலிருந்து நீங்காத வரை இந்த அவலங்கள் தொடரத்தான் செய்யும்!

      மிக்க நன்றி சகோதரி தங்கள் பாராட்டிற்கு!

      நீக்கு