வியாழன், 7 ஆகஸ்ட், 2014

மாணவன் நினைத்தால் எதையும் நடத்திக் காட்டுவான்!....அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு!.. அவன் நேர்மையின் மறுபிறப்பு...!          ராஜீவ் எனும் ஆதிவாசி மாணவன் தனது, முதுவான் குடியிருப்பில் நடந்த பல அநீதிகளுக்கு எதிராகப் போராட,   அந்தக் குடியிருப்பிற்கு அநீதிகள் இழைத்த பெரும் புள்ளிகள் அவனைக் கொன்று விட்டு, கொலையைத் தற்கொலையாக மாற்றிய உண்மைச் சம்பவத்தைப் பற்றி "வாழத் தெரியாத ராஜீவ்" என்று எங்கள் வலைத்தளத்தில் பதிவு இட்டிருந்தோம்.

அந்தச் சம்பவத்தைப் பற்றி அறிய இதோ இந்தச் சுட்டியைச் சொடுக்கவும்

http://thillaiakathuchronicles.blogspot.com/2013/07/STORYOFATRIBALBOY.html             அதை அடிப்படையாகக் கொண்டு "மாணவர்கள் நினைத்தால் எதையும் நடத்திக் காட்டலாம்......கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல.  ஒரு மாணவனை முழுமையான மனிதனாக உருவாக்குவது.  Education is a powerful weapon.  Education is for the development of the overall personality என்ற உட்கருத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம் தான் பரோட்டா கார்த்திக்!  

               ராஜீவின் கொலையாளிகள்  பிடிபட்டார்களா? (உடனே த்ரில்லர் அப்படினு நினைச்சுடாதீங்க......!)
                  
     திரையில்-குறும்படத்தில் காணலாம்! இன்று (07.08.2014) மாலை, 6.30 மணிக்கு "டிஸ்கவரி புக் பாலஸில், (6, முனுசாமி சாலை, கே.கே. நகர், சென்னை ) நடக்கவிருக்கும் பரோட்டா கார்த்திக் குறும்படத்தின் ப்ரிவ்யூ ஷோவுக்கு  வருகை தரவும்!

          விழாவில் எம் எல் ஏ ஊத்துக்குளி திரு பரமசிவம் அவர்கள் கலந்து கொண்டுச் சிறப்பிக்க இசைந்துள்ளார்!.(இவர் எப்படி அரசியலில் குதித்தார் என்பதை அறிய வேண்டுமா?     இதோ இந்தச் சுட்டியைச் சொடுக்கவும்.  http://www.kovaiaavee.com/
  
 அனைவரும் வருகை தந்து நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டுகின்றோம்!
             எம் எல் ஏ கலந்துக்கற விழானா சும்மாவா...?!!!
20 கருத்துகள்:

 1. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட குறும்படமா!!!!

  குறும்படத்தை வெளியிட்டபின், அதன் விமர்சனதத்தை எழுதினால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே! உண்மைச் சம்பவம்தான்....அதை நாங்கள் பதிவாகக் கொடுத்திருக்கின்றோம். விமர்சனம் கொஞ்சம் தந்து விட்டோமே இதற்கு அடுத்தாற் போல் அந்த பதிவில்....

   மிக்க நன்றி!

   நீக்கு
 2. பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! தாமதமான அப்திலுக்கு மன்னிக்கவும்!

   நீக்கு
 3. அனைவருக்கும் வாழ்த்துகள் ஸார்! மென்மேலும் வெற்றியடைய எங்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. விழா சிறக்க வாழ்த்துக்கள் சார்

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  அண்ணா
  நிகழ்வு சிறப்பாகஅமைய எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. சிறந்த ஆய்வுக் கருத்துகள்
  தொடருங்கள்

  பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
  http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! பா புனைய ஆற்றலா? அது இல்லையே நண்பரே! இருந்திருந்தால் வலைத்தளத்திலும் எழுத முயற்சித்திருப்போமே!

   மிக்க நன்றி !

   நீக்கு
 7. வாழ்த்துக்கள்! சில காரணங்களால் இன்றைய விழாவுக்கு வர முடியவில்லை! வருந்துகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரவாயில்லை சுரேஷ் நண்பரே! எப்படியும் இந்த வாரத்தில் பதிவேற்றம் செய்கின்றோம்!

   நீக்கு