செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

பரோட்டா கார்த்திக் குறும்படத்தின் முன்னோட்ட விழா அழைப்பிதழ்


படம்: இணையம்

தில்லை அகத்து க்ரியேஷன்ஸ்

வழங்கும்

பரோட்டா கார்த்திக் குறும்படத்தின்

முன்னோட்ட விழா அழைப்பிதழ்நாள் :                                                 07-08-2014 – வியாழக் கிழமை

நேரம்:                                               மாலை 6.30

இடம் :   டிஸ்கவரி புக் பாலஸ், 6 - முனுசாமி சாலை, கே.கே. நகர்,  
                சென்னை.
                தொலை பேசி எண் +(91)-44-66078736
                 பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸின் அருகில்       

அறிமுகம்-வரவேற்புரை : தில்லை அகத்து க்ரோனிக்கள்ஸ் வலைத்தளப்
                                                   பதிவர் திரு துளசிதரனின் சார்பில் அவருடன் எழுதும்
                                                   கீதா    

 குறுந்தகடை வெளியிடுபவர் :    “சேட்டைக்காரன்” வலைத்தள
                                                                 
                                            பதிவர் திரு வேணுகோபாலன் அவர்கள்

குறுந்தகடைப் பெறுபவர்   :  ‘வாத்தியார்’ என்று அன்புடன் அழைக்கப்படும், 
                                                          “மின்னல்வரிகள்” வலைத்தள
                                                           
                                பதிவர் திரு பாலகணேஷ் அவர்கள்

குறும்படங்கள் திரையிடல்  :   பரோட்டாக் கார்த்திக் மற்றும்
                                                              பரோல்
                                                              கார்பன்டர் த க்ரேட்
                                                              மஹாமுடி த க்ரேட்


அனுபவப் பகிர்தல்:                     இக் குறும்படத்தில் பங்கு பெற்ற நம்        
                                                             நண்பர்கள், பதிவர்கள்   
                      
“இமயத் தலைவன்”, “செல்லப்பா தமிழ் டயரி” என்று இரு வலைத்தளங்களின் பதிவர் திரு. ராயச்செல்லப்பா அவர்கள்

"குடந்தையூர்"  வலைத்தளப் பதிவர் குடந்தையூர் திரு. ஆர்.வி. சரவணன் அவர்கள்

"திண்டுக்கல் தனபாலன்" வலைத்தளப் பதிவர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

"கோவைஆவி" வலைத்தளப் பதிவர் திரு.  ஆனந்த விஜயராகவன் – 
 ஆவி    அவர்கள் 


இப் புகைப்படத்தில் நடுவில் இருப்பவர் திரு ராயச்செல்லப்பா, அவருக்கு இடப்பக்கம் அமர்ந்திருப்பவர் திரு ஆனந்த விஜயராகவன் செல்லமாக ஆவி, அவருக்கு அடுத்து அமர்ந்திருப்பவர் பள்ளி ஆசிரியர் திரு கோபாலகிருஷ்ணன், அவருக்கு அடுத்து நம் வலை சித்தர் திண்டுக்கல் திரு தனபாலன்,  எல்லோருக்கும் செல்லமாக DD


 நன்றி உரை:                               திரு ஆனந்த விஜயராகவன் – ஆவி                 
                                                         அவர்கள்

விழாவைத் தொகுத்து வழங்குபவர் : "திடங்கொண்டு போராடு" வலைத்தள
                                                                              பதிவர் சீனு அவர்கள்


இவ்விழாவிற்கு எல்லோரும் வருகை தந்து சிறப்பித்து, எங்களை வாழ்த்த அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்!

துளசிதரன் குழுவினர் – தில்லை அகத்து க்ரியேஷன்ஸ் 
கீதா

தொடர்பு கொள்ள : துளசிதரன் : 09447535880

கீதா : 9940094630


 படப்பிடிப்புத் தளத்தில் படப்பிடிப்பு நடக்கும் போது 
எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்

                                

படத்தின் ஹீரோ கார்த்திக்

                                          இந்தப் புகைப்படத்தில் நடுவில் கண்ணாடி அணிந்திருக்கும் அழகான யுவன் நம் கோவை ஆவியின் தம்பி விக்னேஷ் ராம்
புகைப்படத்தில் இடதுபக்கம் இரண்டாவதாக அமர்ந்திருக்கும் அழகு யுவன் துளசியின் மூத்த மகன் அருண் தில்லைஅகத்து.  மற்றவர்கள் துளசியின் மாணவர்கள்44 கருத்துகள்:

 1. வணக்கம்
  அண்ணா.
  நிகழ்வு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்
  முடிந்தால் முகவரி தருகிறேன் குறுந்தகடு ஒன்றை அனுப்பிவையுங்கள்... அதற்கான பணத்தை அனுப்புகிறேன்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. மிக்க நன்றி! மதுரைத் தமிழா! தங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும்!

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஆமாம் சீனு! நீங்கள் தானே தொகுத்து அளிக்கப் போகின்றீர்கள்! பின்னித்தான் ஆக வேண்டும்!

   நீக்கு
 4. நாங்களும் வந்து கலந்துக்கொள்கிறோம். ஒரே ஒரு ஃப்ளைட் டிக்கெட் மட்டும் எடுத்து அனுப்பிவிடுங்கள்.

  தங்களுக்கும், தங்களது குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
  இந்த குறும்படத்தை எடுக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களை பதிவுகளாக எழுதுங்கள்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி! சொக்கன் சார் தங்கள் வாழ்த்திற்கு! இந்தக் குறும்படத்தை எடுக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கலை நமது நண்பர் பதிவர் குடந்தையூர் வலைத்தள பதிவர் குடந்தையூர் ஆர்.வி சரவணன் அவர்கள் அவரது தளத்தில் கொடுத்திருக்கின்றார்.

   நீக்கு
  2. டிக்கெட்டைப் பற்றி ஒண்ணும் சொல்லவே காணோம்!!!!

   நீக்கு
  3. சொக்கன் சார் அதற்குத்தானே அந்தச் சிரிப்பு!!!!! ம்ம்ம்ம்ம் என்ன செய்ய....மனம் இருக்கின்றது...நிறைய...ஆனால் வழி இல்லையே தற்போது......தாங்கள் இந்தியா வரும்போது சொல்லுங்கள் சார்......நாம் சந்தித்துக் கலக்கிடுவோம் சார்! இந்த டீல் ஓகேயா?!!!!!!!

   நீக்கு
  4. நான் சும்மா கலாய்ச்சேன். மனம் தான் சார் எப்பவுமே பெருசு.
   இந்த டீல் டபுள் ஓகே!!! கண்டிப்பாக சந்திப்போம் சார்.

   நீக்கு
 5. எதையும் சிறப்பாகச் செய்யும் உங்கள் இந்த முயற்சியும் சிறப்பாக வாழ்த்துகிறேன். பெங்களூரில் இந்தக்குறும்பட வெளியீட்டைப் பற்றி சிந்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார்! தங்கள் வாழ்த்துக்களுக்கும், முயற்சிக்கும்!

   நீக்கு
 6. அய்யா,
  வணக்கம். எத்தனை துறையில் தான் கலக்குவீர்கள்!
  வியக்கிறேன்.
  விழாவும், தங்களின் ஆக்கங்களும் சிறக்க வாழ்த்துகிறேன்.
  நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா! அதெல்லாம் ஒன்றும் இல்லை ஐயா! தாங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆழமாகக் கலக்குகின்றீர்கள்...கலக்கினாலும் தெளிவாக!

   எங்கள் பக்கம் அத்தனை ஆழம் கிடையாது..ஐயா! ஏதோ எங்களுக்குத் தெரிந்ததைச் செய்கின்றோம்.

   மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கு!

   நீக்கு
 7. எல்லோருக்கும் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி தங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும்!

   நீக்கு

 8. வணக்கம்!

  நகைச்சுவை யோடு நவின்ற பதிவு!
  தொகைச்சுவை சூடும் சுடா்ந்து!

  பதிலளிநீக்கு
 9. சுவையான அனுபவங்கள் எங்களுக்கு கிட்டும் என நினைக்கிறேன் தங்களின் பதிவின் வாயிலாக. அனுபவங்கள் அழகல்லவா. வாழ்த்துக்கள்.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவையான அனுபவங்களை திரு குடந்தையூர் சரவணன் அவர்கள் தனது வலைத்தளத்தில் ஏற்கனவே எழுதியுள்ளார்!

   நாங்களும் எழுத முயற்சிக்கின்றோம்!

   மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கு!

   நீக்கு
 10. விழா சிறப்புடன் நிகழ எமது வாழ்த்துக்களும் ஞாஸ்ரீபூவு அவர்களின் ஆசிகளும் கிடைக்க வேண்டுகிறேன்.
  அடுத்த படத்தில் நமக்கு வில்லன் கேரட் அல்லது காய்கறி வண்டி தள்ளுபவன், நகைக்கடை அதிபர் இப்படி ஏதாவது வேசமிருந்தால் ? எமக்கு கொடுப்பீர்கள் எனஎதிர்பார்க்கிறேன் மோசம் போய்விட மாட்டீர்கள் என்பதற்க்கு நண்பர் சொக்கன் சுப்பிரமணியன் அவர்கள் கியாரண்டி தருவார்கள் என்பது திரு.துளசிதரன் ஐயா அவர்களின் அறிவிப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா கண்டிப்பாக கில்லர் ஜி! நடத்தி விட்டால் போச்சு.....ஞாஸ்ரீபூவு அவர்களின் ஆசி இருக்கும் போது என்ன கவலை.....அவரு டிஃப்ரண்டான மேக்கப்போ? ஹாஹாஹா....

   நீக்கு
 11. என்னையும் அழைத்ததற்கு நன்றி!

  விழா சிற(ப்புற நட)க்க நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 12. அழைப்பிற்கு நன்றி நண்பரே
  விழா சிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. தங்கள் படைப்புகள் வெற்றி பெறவும்
  விழா இனிதே இடம்பெறவும்
  எனது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 14. சென்னையில் ஆரம்பமாகும் விழா தமிழகம் எங்கும் தொடர வாழ்த்துக்கள் !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜி! இது குறும்படம் ஜி......பெரிய படம் இல்ல ஜி! நன்றி1

   நீக்கு
 15. வாழ்த்துக்கள் சகா! ஒவ்வொரு போட்டோவுக்கு கீழயும் அவர்களது பேரையும் போட்டிருந்தா என்னை போன்ற தத்திகளுக்கு யூஸா இருந்திருக்கும்:)) விழாவில் கலக்கபோறது எல்லாம் நம்ம சகோஸ் ஆச்சே! கலக்குங்க:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரி! மிக்க நன்றி! ஒவ்வொரு ஃபோட்டோவுக்கும் கீழே நீங்கள் கேட்டுக் கொண்டபடி பெயர்கள் போட்டிருக்கின்றோம். பாருங்கள் முடிந்தால்.....

   நீக்கு
  2. பாருங்க நம்ம பிள்ளைங்க இருகிறதே இப்போதான் தெரியுது:))
   ரொம்ப நன்றி அண்ணா!

   நீக்கு
 16. குறும்படம் தொடக்க விழா சிறப்பாக நடந்து பாரிய வெற்றி கிட்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ! பங்கு பற்றும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 17. Parotta Karthik came out good..! Especially impressed with your directing skills!
  super sir.. And hats off to Geetha ma'am excellent work by her! All the best for Team Parotta Karthik..

  பதிலளிநீக்கு