செவ்வாய், 24 ஜூன், 2014

நாட்டையும், மக்களையும் காக்கும் ராணுவ வீரர்கள் எங்கிருந்தாலும் பிறர் உயிர் காப்பார்கள்தான்!!





நாட்டை எதிரிகளிடமிருந்துக் காப்பாற்றும் வீரர்களின் மனது எப்பொதும், காப்பாற்றப்பட வேண்டியவர்களுக்குக் கை கொடுத்து, அவர்களைக் காப்பாற்றத் தவறாது என்பதை நினைவூட்டும் ஒரு சம்பவம், கடந்த வாரம், கேரளா, திருச்சூர் அருகே வடக்கான்சேரி புகைவண்டி நிலையத்தில் நடந்தது.


      சென்னையிலுள்ள, CRPF ன், DIG அலுவலகத்தில் கான்ஸ்டபிளான, பாஞ்ஞாலைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (32) நோய்வாய்பட்டிருக்கும் தன் தந்தையைப் பார்த்துவிட்டு அவருடன் 10 நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் சென்னைக்குத் திரும்ப, ஆலப்புழா-சென்னை புகைவண்டிக்காக வடக்கான்சேரி புகைவண்டி நிலையத்தில் காத்திருந்திருக்கிறார். பங்களூரு SBI மண்டல அலுவலகத்தில் மேலதிகாரியாகவும், முதன்மை ஆய்வாளருமான, மும்பையைச் சேர்ந்த பிரமோத் பிரவாஸ்கர் (56), ஷொர்ணூரில் இறங்கி வேறு புகைவண்டியில் ஏறி மும்பை செல்ல, ஆலப்புழா-கண்ணூர் எக்சிக்யூட்டிவ் எக்ஸ்பிரஸ்ஸில் அதே நடை மேடையிலிருந்து தன் பிரயாணப் பெட்டிகளை ஏற்றியபின் அவர் ஏறும் முன் வண்டி நகரத் தொடங்க, ஓடிச் சென்று படிக்கட்டில் ஏற முயல, கால் தவறி புகைவண்டிக்கும், நடைமேடைக்கும் இடையே விழுந்து விட்டார்.  இதைப் பார்த்த சந்தோஷ் குமார், ஓடிச் சென்று நடைமேடையில் படுத்து, தன் ஒரு கையை நடைமேடைக்கும், புகைவண்டிக்கும் இடையில் கீழே நீட்டி பிரமோத்தை நடைமேடையோடுச் சேர்த்து இழுத்துப் பிடித்து அவரைக் காப்பாற்றிவிட்டார்.  இப்படிச் செய்கையில் சந்தோஷின் கைகள் ஒடும் புகைவண்டியின் படிகளில் தட்டி அவரும் உள்ளே இழுக்கப்படவும், அவரது உயிருக்கு ஆபத்து நேரவும் வாய்ப்புண்டு என்பதை அறியாதவர் அல்ல.  எனினும், சந்தோஷ் குமார் ஓருயிரைக் காக்க இராணுவம் மற்றும் காவல் துறையினர் செய்யத் துணியும் துணிச்சலான செயலைச் செய்து, தான் ஒரு உண்மையான ராணுவ வீரன் என்பதை நிரூபித்துவிட்டார்! 

      உயிர் தப்பிய பிரமோத் தன் பிரயாணப் பெட்டிகளை அந்த புகைவண்டியிலிருந்து மீட்க ஒரு ஆட்டோ பிடித்து ஷொர்ணூர் சென்று, அங்கு, செய்தியறிந்து அவரது பெட்டிகளைப் பாதுகாப்பாக எடுத்து வைத்திருந்த மேலதிகாரிகளிடமிருந்துப் பெற்று மும்பைக்கு ரயிலேறியிருக்கின்றார்!  இதற்கு முந்தைய வாரம்தான், இதே வடக்கான்சேரி புகைவண்டி நிலையத்தில் ஒரு பெண்மணி இப்படி ஏறும் போது விழுந்து உயிரிழந்திருக்கிறார்.  இப்படிப்பட்ட மரணங்கள் இந்தியாவிலுள்ள பல புகைவண்டி நிலையங்களில் நடப்பதாகத் தெரிகின்றது. இதைத் தவிர்க்க ரயில்வே, ஏன் புகைவண்டியிலோ, நடைமேடையிலோ பயணிகள் ஆபத்தில்லாமல், இது போன்று புகைவண்டிக்கும், நடைமேடைக்கும் இடையில் விழாமல் புகைவண்டியில் ஏறுவதற்கு ஆவன செய்யக் கூடாது? ரயில் பெட்டிகளிலோ, நடைமேடையிலோ ஏதேனும் மாற்றங்கள் செய்து, புகைவண்டியிலிருந்து தவறி விழுபவர்கள் புகைவண்டிக்கு அடியில் விழாமல் செய்யக் கூடாது? (நடைமேடையின் விளிம்பைக் கொஞ்சம் நீட்டிக் கட்டுதல் போன்ற மாற்றம்).

மனித உயிருக்கு மதிப்பு நம் நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லையே!  ரயில் கட்டணத்தை மட்டும் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலிலும் உயர்த்துபவர்கள், இது போன்ற ஆபத்துகள் நிகழாமல் இருக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சிந்தித்து மேற்கொள்வார்களா?  நம்புவோம்! 

படங்கள் - இணையதளம்


30 கருத்துகள்:

  1. இங்கு (அமெரிக்காவில்) நீங்கள் எதிர்பார்த்தபடியே, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைவெளியில்லாதவகையில் ரயிலின் உடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. பஸ்களும் அவ்வாறே. இதன் முக்கியநோக்கம், உடல் ஊனமுற்றோர் தங்கள் சக்கரவண்டியில் இருந்தபடியே பஸ்சிலும் ரயிலிலும் நுழைவதற்கான வசதிவேண்டும் என்பதே. இந்தியாவில் இதை அமல்படுத்துவது இயலாத காரியம். ஆனால், புதிதாகவரும் மெட்ரோ ரயிலில் இதைச் செய்யமுடியும். பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்! அதையும் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம் எங்கள் இடுகையில்...பின்னர் நாங்கள் இணையத்தில் ஆராய்ந்த போது ஒரு சில தேசங்களில் இது போன்று நடப்பதையும் அறிந்தோம். அதனால் அதை விரிவாக்கினால் இடுகை நீளுமே என்று நீக்கி விட்டோம்! ஆனால் என்ன இது போன்று அங்கெல்லாம் நடந்த்தாலும் உடனே அதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்துவிடும். இங்கு அதற்கும் வழி இல்லை.....

      இப்போது மோடி அரசு ரயில்வே பட்ஜெட் தாக்கலில், ரயில்வேயில் அயல்நாட்டு முதலீடு செய்யப்போவதாகவும் அதனால் அங்கு போன்று ரயில்வே திட்டங்கள் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்றும் சொல்லபட்டிருக்கிறது....பார்ப்போம்! என்ன செய்யப் போகின்றார்கள் என்று! டெல்லியில் மெட்ரோ ரயில் நடை மேடை நாம் குறிப்பிட்டது போலதான் உள்ளது! பார்ப்போம்!

      மிக்க நன்றி சார்....தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்!

      நீக்கு
  2. சந்தோஷ் குமார் அவர்களுக்கு இதை விட ஒரு சந்தோசம் இருக்க முடியாது...

    பதிலளிநீக்கு
  3. //மனித உயிருக்கு மதிப்பு நம் நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லையே!//

    அதே தான். பாராட்டுக்குரிய செயல் புரிந்த அந்த வீரர் வாழ்க. எத்தனையோ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றாலும் செய்யாமல் தான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் பிரயாணம் செய்ய வேண்டும் போல! ஒரு வேளை இப்படி இருக்குமோ....நம் நாட்டில் மக்கள் தொகை பிதுங்கி வழிவதால் கொஞ்சம் பேரு இப்படி மரணம் அடைவதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்று நினைத்து கருத்தில்லாத எண்ணம்?

      இல்லையென்றால் உடனுக்குடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய மாட்டார்களா? மேலை நாடுகளைப் போல?!

      நன்றி சாரி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  4. பகிர்வுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மதுரைத் தமிழா தங்கள் பாராட்டிற்கு!

      நீக்கு
  5. இயல்பாகவே
    ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு
    தைரியமும் சேவைமனப்பான்மையும்
    நிறைய உண்டு
    ராணுவத்தில் சேருவது கூட
    அந்த மனப்பான்மைகள் அதிகம்
    இருப்பதனால்தானே ?
    அரிய நிகழ்வை பதிவாக்கி
    அனைவரும் அறியத் தந்தமைக்கு
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார்! தங்கள் வருகைக்கும், அழகான கருத்திற்கும்!

      நீக்கு
  6. சந்தோஷ் குமார்அவர்களைப் பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவர்! நன்றி கரந்தையாரே!

      நீக்கு
  7. சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தேன் ,நடை மேடை உயரமும் மெட்ரோ தளமும் சமமாக இருந்தது ,இடைவெளி ஆள் நுழையும் அளவிற்கு இல்லையென்றாலும் கால் நுழையும் அளவிற்கு இருக்கிறது ,ரிஸ்க் குறைவு !
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஜி! டெல்லி ரயில் ரிஸ்க் குறைவுதான்! அது போல எல்லா ரயில் நிலையங்களும் அமைந்துவிட்டால் மிகவும் நல்லதுதான்!

      நன்றி ஜி! தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  8. துணிந்து செய்த உதவியால் உயிர் காப்பாற்றப் பட்டது . ராணுவ வீரருக்கு என் சல்யூட். பகிர்வுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முரளிதரன்! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்! துணிந்து செய்யப்பட்ட, யாரும் செய்யத் தயங்கும் உதவியே!

      நீக்கு
  9. வணக்கம்
    ஒரு இரானுவ வீரன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சில வினாடியில் நிருபித்து விட்டார்கள்.... என்னசெய்து விலைஏற்றம்என்றால் மக்கள் போராட்டந்தான் ஒரு வழி பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்கள் கருத்திற்கும், வருகைக்கும்! மக்கல் போராடினாலும், வழி பிறப்பதில்லையே!

      நீக்கு
  10. சந்தோஸ்குமார் போன்றவர்களுக்குதான் சினிமா நடிகனுக்கு கொடுக்ககூடிய பட்டங்களை கொடுக்கவேண்டும் இது அறியாப்பயல்கள் பாமரப்பயல்களுக்கு தெரிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நல்ல கருத்து கில்லர் ஜி! மிகச் சரியான கருத்தும் கூட! டூப் போட்டு திரையில் மின்னும் நாயகர்களுக்குத்தான் மவுசே! சாமானியர்கள் எந்த நல்ல விஷயம் செய்தாலும் பேசப்படுவதில்லை...அதனால் நம்மைப் போன்றவர்கள்தான் நம்மால் இயன்ற வரை அவர்களை எல்லாம் நமக்குத் தெரிய வந்தால் வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும்!

      மிக்க நன்றி கில்லர் ஜி!

      நீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. நம் நாட்டில் மனிதருக்கு மனிதர் உதவிக்கொண்டால் தான் உண்டு சகோ!
    உயிரை கொடுத்து பணி செய்யும் எவரும் இதை பற்றி சிந்திக்க கூடாது என கட்டமைக்க பட்டிருக்கிறோம்! பயனுள்ள பதிவு சகோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தாமதமான பதில் தான்! மன்னிக்கவும்!

      நீக்கு
  13. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/06/teachers-in-web-world.html?showComment=1403974193240#c6401072316413391899

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தம்பி ரூபன் தாங்கள் சொல்லியமைக்கு! தாமதமாக வந்து நன்றி சொல்லுவதற்கும் மன்னிக்கவும் தம்பி! மிக்க நன்றி! பார்த்தோம்!

      நீக்கு
  14. ராணுவ வீரர்தான் என்பதை நிரூபித்துவிட்டார். பகிர்ந்தமைக்கு நன்றி.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு
  15. மிக்க நன்றி சார்! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்! தொடர்கின்றோம் தங்கள் எழுத்துக்களை!

    நன்றி!

    பதிலளிநீக்கு